ஞாயிறு, 25 ஜூன், 2017

ஞாயிறு 170625 : துணி காயப்போட வேறு இடமா கிடைக்கவில்லை?





காங்டாக் செல்லும் வழியில் தொடங்கும் பாலம்!  இப்படிக் காயப்போட்டிருக்கும் துணிகளை எப்படி எடுப்பார்கள்?  முதலில் எப்படிக் காயப்போடுவார்கள்?!!




 இந்தியாவிலேயே தூய்மையான மாநிலம் என்று விருது வாங்கிய மாநிலம்...!





 மழைக்கு கடையில் ஒதுங்கியிருக்கும் தமிழ்க்(?) குடும்பம்.





 டிபிகல் கிராமத்துக் கடை!





 டியஸ்டா ஆறு - ஒரு அவசரப் பார்வையில்!





 அதே ஆறு - இன்னொரு கோணத்தில்...





 'மெல்லி'க்குச் செல்லும் வழியில் பாலம் -  எதற்குத் துணி கட்டித் தொங்க விட்டிருக்கிறார்களோ!





 அந்தப் பக்கம் சிக்கிம்!  போக்குவரத்து நெரிசலில் வண்டி நின்ற நேரத்தில்.....





 ....அங்கு கண்ணில் பட்ட காட்டு பங்களாவை இரண்டு கோணத்தில் படம்...









இங்கு க்ளிக் செய்யுங்க...  தமிழ்மணத்தில் வாக்களியுங்க...!

42 கருத்துகள்:

  1. எல்லாப் படங்களும் அருமை. எனக்கும் போகணும்னு ஆசையாத் தான் இருக்கு! :) இம்மாதிரி யாருமே போகாத ஊர்களாகப் போகணும்னு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. தலைப்பைத் திருத்துங்க ஶ்ரீராம்/கௌதமன் சார்! எழுதணும்னு நினைச்சுட்டு மறந்திருக்கேன்! :)

    பதிலளிநீக்கு
  3. படங்களை ரசித்தேன். இவை தொடர்புடைய, சுவாரஸ்யமான பயணக் கட்டுரையை எதிர் பார்க்கிறேன்.

    பதிலளிநீக்கு
  4. படங்கள் பார்த்தாச்சு. த ம +1. ஒரு சமயம் ப்ளாக்கர் குழுவாவே சேர்ந்து இந்த இடங்களுக்குப் போய்வரலாம் (திரும்பு வந்தப்பறம் எத்தனைபேர் மற்ற பதிவுகளுக்கு தொடர்ந்து வருவாங்கன்னு தெரியாது, ஒரே பிரயாணத்தைப் பத்தி, இப்போதைய பதிவர் சந்திப்பு மாதிரி, எல்லோரும் எழுதிடுவாங்க)

    பதிலளிநீக்கு
  5. சிக்கிம் போய் அனுபவிக்கவேண்டிய ப்ரதேசம். எப்போது வாய்க்குமோ தெரியவில்லை.
    சிக்கிமின் அழகிற்கு இன்னும் படங்களைச் சேர்த்திருக்கலாம்

    பதிலளிநீக்கு
  6. படங்கள் எல்லாம் அழகு.
    எங்கும் பசுமை, கண்ணுக்கு விருந்து.

    பதிலளிநீக்கு
  7. கயிற்றில் துணியை கட்டிவிட்டு மறுபுறம் இழுத்துக்கொள்வதுபோல் ரொடேட் செய்வார்களோ...

    பதிலளிநீக்கு
  8. இன்னொரு முறை வாய்ப்பு கிடைத்தால் காங்டாக் செல்ல வேண்டுமென்ற ஆவலைத் தூண்டுகிறது :)

    பதிலளிநீக்கு
  9. //துணி காயப்போட வேறு இடமா கிடைக்கவில்லை?...இப்படிக் காயப்போட்டிருக்கும் துணிகளை எப்படி எடுப்பார்கள்? முதலில் எப்படிக் காயப்போடுவார்கள்?!!///

    ஓ இந்த ஆராச்சிக்குத்தான் இவ்ளோ பணம் செலவளிச்சு ஸ்ரீராம் போனாரோ?:)கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..

    ////மழைக்கு கடையில் ஒதுங்கியிருக்கும் தமிழ்க்(?) குடும்பம்.//
    ஹா ஹா ஹா இதுபோல எங்கட ஸ்ரீராம் குடும்பப்போட்டோவும் இப்போ எந்த ஹிந்தி புளொக்ல வெளிவந்திருக்கோ?:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)

    பதிலளிநீக்கு
  10. படங்கள் அருமை..! டெல்லி செல்லும் வழி எங்கும் காடுகளும் மலைகளும் அருவிகளும்... அட்டா..!!

    பதிலளிநீக்கு
  11. //டிபிகல் கிராமத்துக் கடை!// கடைக்காரருக்கு என்ன கஸ்டம்?:) ஹா ஹா ஹா [difficult]
    அது “ரிபிகல்” எனத்தான் வரோணும்:) ஹையோ நெ.த வரமுந்தி ஓடிடோணும் நான்:).

    ///எதற்குத் துணி கட்டித் தொங்க விட்டிருக்கிறார்களோ!// கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அது காயப்போட்டிருக்கினம்:)

    //அங்கு கண்ணில் பட்ட காட்டு பங்களாவை இரண்டு கோணத்தில் படம்.///
    அப்பாடாஆஆஆஆ தப்பிச்சோம்ம்.. ரெண்டு கோணத்தோடு நிறுத்திட்டார்ர்ர்:).. இல்லாவிட்டால் நம் கதி?:)

    பதிலளிநீக்கு
  12. பாலத்தில் துணி கட்டியிருந்தால் அந்தந்த நிறத்திற்கேற்ப அடுத்தவர்களுக்கு எச்சரிக்கை செய்வதற்காக. ஒரு தகவலாக படித்தது. அடுத்தவரின் பொதுநலன் கருதி இப்படி செய்வார்கள். நல்ல மனிதாபிமானமுள்ள மக்கள்

    பதிலளிநீக்கு
  13. நன்றி கீதாக்கா... கருத்துக்கும், திருத்தியதற்கும்!

    பதிலளிநீக்கு
  14. நன்றி தமிழ் இளங்கோ ஸார். போடங்களுடன் கட்டுரை எழுதும் எண்ணம் இருந்தது. ஆனால் சரியாக நிறைவேற்ற முடியவில்லை. ஓரளவு - ஓரளவு மட்டும் படங்களுடன் விவரம் சொல்லி வந்திருக்கிறோம். அடுத்த படத்தொடரையாவது இன்னும் கொஞ்சம் அதிக விவரங்களுடன் தர எண்ணம். பார்ப்போம்.

    பதிலளிநீக்கு
  15. நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.

    பதிலளிநீக்கு
  16. வாங்க நெல்லை. நல்ல ஐடியா. அப்படியும் ஒரு பயணம் போயிட்டுதான் வாங்களேன்! ஹிஹிஹிஹி

    பதிலளிநீக்கு
  17. வாங்க ஏகாந்தன் ஸார். சிக்கிம் படங்கள் இனி வரும்.

    பதிலளிநீக்கு
  18. வாங்க கில்லர்ஜி.. நானும் அப்படிக் கற்பனை செய்து பார்த்தேன்! :))

    பதிலளிநீக்கு
  19. வாங்க பகவான் ஜி. வாய்ப்பு கிடைத்தால் போயிட்டு வாங்க. எனக்கும் ஒருமுறையாவது போக ஆசை!

    பதிலளிநீக்கு
  20. நன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...

    பதிலளிநீக்கு
  21. வாங்க அதிரா.. இன்னும் ஆஷா போஸ்லே பெயரை விடவில்லை நீங்கள்! இணைத்ததற்கான காரணம் நிறைவேறியதா?

    //இவ்ளோ பணம் செலவளிச்சு ஸ்ரீராம் போனாரோ?:)கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)..//

    போனது நானில்லையே.... ம்ம்..ஹூம்!

    பதிலளிநீக்கு
  22. வாங்க ராரா... ரசனைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  23. வாங்க நண்பர் அசோகன் குப்புசாமி.. இது நல்ல தகவலாக இருக்கிறதே... அப்படியும் இருக்கலாம்.

    பதிலளிநீக்கு
  24. வாங்க நண்பர் ஸ்ரீ.வரதராஜன். நன்றி.

    பதிலளிநீக்கு
  25. நானெல்லாம் படங்களை ரசிப்பதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும் ஊர் சுற்ற ஆசைப்படமுடியாது

    பதிலளிநீக்கு
  26. //போடங்களுடன் கட்டுரை எழுதும்// படங்களா? போடங்களா? க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்!

    பதிலளிநீக்கு
  27. ஐயோ.... மறுபடி மறுபடி தப்பா... நான் என்ன செய்ய...!

    படங்கள் படங்கள் படங்கள் படங்கள் படங்கள் படங்கள் படங்கள் படங்கள் படங்கள் படங்கள் படங்கள் படங்கள் படங்கள் படங்கள் படங்கள் படங்கள் படங்கள் படங்கள்.... ஓகேயா?

    :)))


    பதிலளிநீக்கு
  28. படங்களில் சற்றே கலையுணர்ச்சி குறைந்து காணப்படுகிறது என்றால் கோபித்துக்கொள்வீர்களா என்று தெரியவில்லையே!

    பதிலளிநீக்கு
  29. பசுமையான காட்சிகள் ..துணி அநேகமா எச்சரிக்கை செய்ய இரவில் நடப்பவர்களை .கண்ணாடி ஜன்னலில் கருப்பு ஸ்டிக்கர் பறவைகளுக்கு ஓட்டுவாங்க வந்து மோதாம இருக்க அது மாதிரின்னு நினைக்கிறேன்

    பதிலளிநீக்கு
  30. இன்னிக்கு ஒண்ணும் "திங்க" இல்லையா?

    பதிலளிநீக்கு
  31. வெளியில் செல்லும் போது கவனமாக இருக்க வேண்டும். யார் எப்படியெல்லம நம்மை புகைப்படம் எடுபபர்கள் என்பதே தெரியாதாம்.. நிஜமாக அந்த துணிகளை காயப்போட்டிருக்கின்ரார்களா. அல்லது ஏதேனும் அடையாளத்துக்கு அங்கே விட்டிருக்கின்றார்களா?

    பயணத்திலும் பதிவு போடும் சிந்தனையோடே பயணிப்பீர்களா? கிரேட்.

    பதிலளிநீக்கு
  32. படங்கள் எலலம் அழகா கீது!!!

    துணி எப்படிக் காயப்போட்டுருப்பாங்க? கௌ அண்ணா (அதிரா உங்க விளித்தால் கௌ நல்லாருக்கு அதான் உங்ககிட்ட கேக்காம ராயல்டி கொடுக்காம எடுத்துட்டேன்...அடிக்கவரமாட்டீங்கனு தெகிரியம்தான்....நீங்க தான் தேம்ஸ்ல இல்லையே ஹஹஹஹ் தப்பிச்சேன்) கம்பாலதான் போட்டுருப்பாங்க...அது துணி மாதிரி தெரியலையே!!

    கீதா

    பதிலளிநீக்கு
  33. இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
    தமிழ் செய்திகள்

    பதிலளிநீக்கு
  34. படங்கள் அழகு. இந்தியாவில் பார்க்காத மாநிலங்களில் இம்மாநிலத்திற்கும் இடம் உண்டு! போகும் திட்டம் உண்டு! பார்க்கலாம் எப்போது அமைகிறது என்று!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!