சனி, 17 ஜூன், 2017

பகலில் பஸ் கண்டக்டர்... இரவில்?


1)  சினிமாவினால் தீமைதான் உண்டாகும் என்பது பெரும்பான்மைக் கருத்து.  இதுபோன்ற நற்செயல்களும் நடப்பதுண்டு.  மம்மூட்டி படம் பார்த்து 'இன்ஸ்பைர்' ஆகி காசு எதுவும் வாங்காமல் கிட்னி தானம் செய்த லேகா நம்பூதிரி.


 
2)  எம் எல் ஏவின் நேர்மை அவரை வெளிப்படையாகப் பேசவைக்கிறது..  அதே நேர்மை எதிர்க்கட்சி எம் எல் ஏவை பாராட்டவும் வைக்கிறது.  நேர்மறை, ஆரோக்கிய அரசியல்வாதிகள்.


3)  யோகநாதன்.  பகலில்தான் பஸ் கண்டக்டர்.  இரவில்...?


4)  சிவாஜி லாசரஸ் - பிரேமா தம்பதியினரும், 23 குழந்தைகளும்... 

 
5)  அரசுப்பள்ளின்னா மட்டமா நினைச்சுட்டீங்க இல்லே?  அழுக்கா இருக்கும்..  சுகாதாரம் இருக்காது...  சரியாச் சொல்லிக்கொடுக்க மாட்டாங்க...   இப்படி எல்லாம் நினைச்சீங்க இல்லே...  எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்!  சேலம் மாவட்டம், கந்தம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உங்கள் எண்ணத்தை மாற்றுகிறது.


தமிழ்மணத்தில் வாக்களிக்கவேண்டுமா?  இங்கே க்ளிக் செய்யுங்க......!

21 கருத்துகள்:

 1. சம்பளத்தில் நாற்பது சதத்தை மர வளர்ப்புக்கு செலவிடும் நடத்துனர் யோகராஜன் செய்கை ஆச்சரியம் தருகிறது :)

  பதிலளிநீக்கு
 2. பாராட்டிற்கு உரிய செய்திகள். கடைசி மூன்று செய்திகள் இன்னும் உத்சாகம் அளிப்பவை. த ம +1

  பதிலளிநீக்கு
 3. வியப்புக்குறிய அரசியல்வாதிகள்

  பதிலளிநீக்கு
 4. 28 ஆண்டுகளாக, தனி ஒருவனாக, ஒரு இலட்சம் மரங்களை நாட்டியிருக்கும் நடத்துனர் யோகநாதனை முதலில் வாழ்த்துகிறேன்.

  பதிலளிநீக்கு
 5. அந்த அரசுப் பள்ளி அடுத்த ஆச்சரியம். Touch screen இல் கற்பிக்கிறார்களா? வாவ்வ்வ்

  பதிலளிநீக்கு
 6. வழக்கம்போல அரியவர்கள், அரிய பணிகள். பதிவுக்கு பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 7. அருமை,இந்த தகவலை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி
  தமிழ் செய்திகள்

  பதிலளிநீக்கு
 8. அனைத்து செய்திகளும் மிக அருமை.
  யோகராஜன் அவர்களைப்பற்றி முன்பே படித்து இருக்கிறேன் உங்கள் பதிவில் என்று நினைக்கிறேன்.
  மயிலாடுதுறையை சேர்ந்தவர் என்பதால் படித்தது போல் தெரிகிறதா என்று தெரியவில்லை.
  அவரை பாராட்ட வேண்டும்.

  18ம் தேதி 2, 00, 000 விதை பந்துகள் தமிழகம் முழுவதும் வீச உள்ளார்களாம்
  வரும் நாயிறு.ஒன்று படுவோம், வென்று காட்டுவோம், காடு வளர்ப்போம். சென்னை, மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு போன்ற ஊர்களில்.

  நல்லது நடந்தால் எல்லோருக்கும் நன்மை , இந்த பணியில் ஈடுபடும் அனைவருக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  கந்தம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி போல் எல்லா ஊர்களிலும் நடை பேற்றால் மகிழ்ச்சி .
  கந்தம்பட்டியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர், மற்றும் ஆசிரியர்களை வாழ்த்துவோம்.
  நல்ல செய்திகளுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 9. பாசிடிவ் + செய்திகள் வழக்கம் போல் அருமை!

  பதிலளிநீக்கு
 10. அனைவருக்கும் பாராட்டுகளுடன் வாழ்த்துதலும்

  பதிலளிநீக்கு
 11. அரசியல்வாதிகள் அனைவரும் இப்படி மாறினால்? இது நனவாக மாறும் நாள் கிட்டத்தில் இருக்கிறது. யோகநாதன், லேகா நம்பூதிரி செய்திருக்கும் சேவைகள் அருமை. அரசுப் பள்ளி பற்றி ஏற்கெனவே பார்த்த நினைவு. லாசரஸும்.

  பதிலளிநீக்கு
 12. அரசபள்ளியின் முகம்மாறிவிட்டது .பாராட்டுவோம்.

  பதிலளிநீக்கு
 13. அனைத்துமே அருமையான செய்தி பகிர்வுக்கு நன்றி எங்கள் ப்ளாக்

  பதிலளிநீக்கு
 14. அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

  பதிலளிநீக்கு
 15. பாராட்டப் படவேண்டியவர்கள் ! இது போன்ற பாஸிட்டிவ் செய்திகளைத் தொகுத்து வழங்கும் தங்கள் பணியும் பாராட்டுக்குரியது !

  பதிலளிநீக்கு
 16. அருமையான பதிவு. வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 17. எல்லா செய்திகளும் அருமை. 23 குழந்தைகளின் பெற்றோர்களாகி வளர்க்கும் சிவாஜி பிரேமா தம்பதிகள். என்ன ஒரு குணம். வருமா யாருக்காகிலும்?ஆச்சரியம். அன்புடன்

  பதிலளிநீக்கு
 18. லேகா நம்பூதிரி பற்றி அறிந்திருந்தாலும் இங்கும் பகிர்ந்தமைக்கு நன்றி...(கீதா..எனக்குப் புதிய செய்தி...அவருக்கு வாழ்த்துகள்!)
  அரசியல் வாதிகள் ஆஹா! போட வைக்கிறார்கள். இப்படியே எல்லோரும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்...என்று எண்ண வைக்கிறது. பாராட்டுகள் பழனிவேல் தியாகராஜனுக்கும், பாண்டிராஜனுக்கும்...

  கண்டக்டர் அசத்துகிறார்! அது போல சிவாஜி லாசரஸ் பிரேமா செய்யும் செர்வீஸ். அரிது!!! அரிது!!! யாருக்கும் இது போன்ற எண்ணம் வருவது சிரமம்ம்தான் ....வணக்கங்கள் அத்தம்பதியினர்க்கு!

  ஆம்! அரசுப் பள்ளி இப்படியும் அரசுப்பள்ளிகள் இருக்கலாம் என்பதை உரைக்கி
  றது....அருமை அனைத்தும்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!