திங்கள், 19 ஜூன், 2017

'திங்க'க்கிழமை 170619 : வாழைப்பூ, பொடி கலந்த சாதம் - ஏஞ்சல் ரெஸிப்பி
வாழைப்பூ ,பொடி கலந்த சாதம்  

================================ வாழைப்பூவில் ரசம்  உசிலி பொரியல் சூப் என செய்தாச்சு அடுத்த எக்ஸ்பெரிமென்ட் fried ரைஸ் போல செய்து பார்த்தேன்.  மிகவும் அருமையாக வந்தது.  ருசி கொஞ்சம் மஷ்ரூம் ரைஸ் போல இருந்தது.  இதில் வெங்காயம் பூண்டு எதுவும் சேர்க்கவில்லை   பொதுவாகவே நான் வெஜிடபிள் கலந்த சாதம் செய்யும்போதும் பூண்டு மட்டுமே சேர்ப்பேன்.  இதில் அதையும் தவிர்த்து விட்டேன் .


எனது  செய்முறையில் ஒரு பங்கு அரிசி சாதத்துக்கு முக்கால் பங்கு காய்கறிகள் இருக்கும் .  அந்த அளவையே  வாழைப்பூ பொடி   சாதத்துக்கும் சேர்த்துள்ளேன்.தேவையான பொருட்கள் 
=========================
சிறிய அளவு வாழைப்பூ --- கள்ளன் நீக்கி  சுத்தம் செய்து சிறியதாக நறுக்கியது 
தாளிக்க                                ---- தேங்காய் எண்ணெய் ...ஒரு ஸ்பூன் 


வறுத்து பொடி செய்ய 
-------------------------------------------

தனியா விதைகள் -------- 2 தேக்கரண்டி 
ஆளிவிதை               -------- 3 தேக்கரண்டி 
தேங்காய்                 --------- 4/5 துண்டுகள் 
வற்றல் மிளகாய்    --------- 3
சின்ன சீரகம்           --------  1 தேக்கரண்டி 
கறிவேப்பிலை        ---------- ஒரு ஆர்க் 
வறுக்க -------------------------------தேங்காயெண்ணை 


சமைத்த அரிசி ,பொன்னி அல்லது சீராக சம்பா ---------3 கோப்பை 


ஆளி விதை உடலுக்கு மிகவும் நல்லது.  அதன் சுவை விரும்பாதோர் அதற்குப்பதில் கடலை பருப்பு அல்லது துவரம் பருப்பு சேர்க்கலாம்.  சாதம் தாளிக்கும்போதும் வேர்க்கடலை உளுந்து கடலைப்பருப்பு அலங்காரமாக தாளித்து சேர்க்கலாம்.  பேலியோவில் பருப்புகள் தவிர்ப்பதால் நான் மேற்கூறியவற்றை  சேர்க்கவில்லை.

 ஆளிவிதையின் பயன்களை அறிந்தால் நிச்சயம் தவிர்க்க மாட்டீர்கள்.

பிற தாவர உணவுகளை விட 75 முதல் 800 மடங்குகள் அதிக அளவிலான lignans ஆளி விதையில் உள்ளன.  ஆளி விதையில் எளிதில்  கரையக் கூடிய மற்றும் திடமான நார்ச்சத்துக்களும் நிரம்பியுள்ளன .


ஆளி விதையில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பல்வேறு குணங்கள் உள்ளன.  அவற்றில் முக்கியமானவை ஒமேகா-3 என்ற நல்ல கொழுப்பு அமிலங்கள்.   இவை இதயத்திற்கு உகந்தவை.  உடலில் தேவையற்ற கொழுப்பை கரைத்து /குறைத்து எடையை சீராக வைக்க உதவுகின்றன. ஒரு தேக்கரண்டி ஆளி விதையில் 1.8 கிராம் அளவிற்கு ஒமேகா-3 உள்ளது.  Anti inflammatory குணம் என்பது நாளங்களில் கட்டிகள் வாதம் அழற்சி உருவாகாமல் தடுப்பது.


மார்பக புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய் மற்றும் பெருங்குடல் புற்றுநோய் ஆகியவற்றை எதிர்த்து செயல்படும் திறன்கள் இந்த ஆளி விதைக்கு உள்ளன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன .


செய்முறை 
----------------------
அடுப்பை பற்றவைத்து அடி  கனமான  வாணலியில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் தனியா ,மிளகாய் ,சீரகம் ,தேங்காய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தீயாமல்  வறுத்து அடுப்பை அணைத்தபின் அந்த சூட்டிலேயே ஆளிவிதைகளை சேர்த்து,  ஓரிரு நிமிடங்கள் வைத்து,  பிறகு மிக்சியில் பொடித்துக்கொள்ளவும் .


அடுத்தது வாணலியில் ஒரு கரண்டி எண்ணெய் விட்டு அதில் சுத்தம் செய்த வாழைப்பூவை சேர்த்து பிரட்டவும்.   அதிலிருந்து நீர் வெளி வந்து வற்றியதும்,  உப்பு சேர்க்கவும்.   பிறகு அரைத்து வைத்த  பொடியையும் சேர்த்து அடிப்பிடிக்காமல் கிளற,  5-6 நிமிடங்களில் வாழைப்பூ  நிறம் மாறி வெந்து வந்ததும் 

 


கறிவேப்பிலை இலைகளை சேர்க்கவும்.


அதிலேயே சமைத்த பொன்னி அல்லது சீரக சம்பா அரிசியை கலந்து உடையாமல் பிரட்டவும்  .சுவையான வாழைப்பூ ஆளி விதை  பொடி  சாதம் தயார்.

 
  


இதனுடன் தயிர் பச்சடி ,உருளை பொரியல்  மிகவும் சுவையாக இருக்கும் .
[ புதுசாக இருக்கிறது.  சுவாரஸ்யமாகவும் இருக்கிறது.  ஒருமுறை முயற்சி செய்து பார்க்க வேண்டும்.  நன்றி - ஸ்ரீராம் ]

தமிழ்மண வாக்களிக்க இங்கு க்ளிக்கவும்!
 

95 கருத்துகள்:

 1. .வணக்கம்
  ஐயா
  செய்முறை விளக்கத்துடன் அசத்தியுள்ளீர்கள் பகிர்வுக்கு நன்றி த.ம2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 2. வாழைப்பூ சாதம் முதல் முதலாகக் கேள்விப் படுகிறேன். வாழைப்பூக் கிடைத்தால் செய்து பார்க்கணும். ஒரு பூ எங்களுக்கு 2,3 நாட்களுக்கு வருதே! என்ன செய்யறதுனு ம.பி. :))

  பதிலளிநீக்கு
 3. வாழைப் பூவில் இது மாதிரி ,,, முதன்முறையாக ஆச்சர்யம்... ஊருக்குப் போனதும் உடனடியாக வாழைப்பூ சாதம் தான்... வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
 4. வீட்டில் செய்யச்சொல்லணும்.

  பதிலளிநீக்கு
 5. சாப்பிட்டுப் பார்க்க மனம்விரும்புகிறது நண்பரே
  தம +1

  பதிலளிநீக்கு
 6. வாழைப்பூ இருக்கிறது , ஆளிவிதை இல்லை, துவரம் பருப்பு சேர்த்து செய்கிறேன்.
  படங்கள் அருமையாக இருக்கிறது.
  நன்றி ஏஞ்சலின்.

  பதிலளிநீக்கு
 7. தக்காளி, வெங்காயம் இல்லாமல் எளிமையான சாதம். அருமையாக இருக்கிறது ஏஞ்சலின்! செய்து பார்க்க வேன்டும்.

  பதிலளிநீக்கு
 8. வாழைப்பூ சாதம் நிச்சயம் சுவையாத்தான் இருக்கும். கள்ளனை யார் உட்கார்ந்து ஆயறது? ஊர்லபோய் சாப்பிட்டுக்க வேண்டியதுதான்.

  எங்க மொத்த வாழைப்பூவையும் மடலோடு சேர்த்து கட் பண்ணச் சொல்வீங்களோன்னு பார்த்தேன்.

  த ம +1

  பதிலளிநீக்கு
 9. wow..! சூப்பரான புது ரெசிப்பியா இருக்கு வாழைப்பூ பொடி கலந்தசாதம். வாழைப்பூவில் பொரியல், வடை செய்வது மட்டுமே. இது வித்தியாசமாக நல்லாயிருக்கு. செய்து பார்க்கிறேன் அஞ்சு. ஆளிவிதை தகவலுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 10. ஆஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ் என்னாதூஊஊஊ வாழைப்பூ வில் சாதமா? அதுக்குள் கடல்விதையா???? எல்லாமே புதுசா இருக்கே இருங்கோ விடியட்டும் வாறேன்ன்ன் இப்போ தலை சுத்துதூஊஊ:).

  பதிலளிநீக்கு
 11. அட! இது புதுசா இருக்கே.
  கண்ணுக்கு விருந்தாக இருக்கிறது.
  நாவிற்கு ............. செஞ்சு பார்த்துட வேண்டியதுதான்.

  பதிலளிநீக்கு
 12. ஸ்ஸ்ஸ்ஸ் நான் இண்டைக்கு சீரியசாகப் பேசப்போறேன், ஏனெண்டால் எனக்கு நேற்றிலிருந்து ஒரே தலை இடிச்சுக்கொண்டு நிக்குது. எனக்கு வாழைப்பூவில் என்ன செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.. அவ்ளோ பிரியம் வாழைப்பூவில்.. அதனால அஞ்சுவுக்கு மீ லாப் எலியாக இருப்பதில்கூட இன்று பெருமைப்படுகிறேன்.

  பதிலளிநீக்கு
 13. அருமையான ரெஸிப்பி...பகிர்வுக்கு நன்றி
  தமிழ் செய்திகள்

  பதிலளிநீக்கு
 14. ஆளி விதை என்பது லின் சீற்ஸ் தானே அஞ்சு? அதுதானே நான் ஆசையில் வாங்கி வந்து தண்ணி விட்டேன் ஊற.. அது அப்படியே கொழகொழா ஆகி.. அத்தோடு அதைத் தொடுவதில்லை, இனி உங்கள் முறையில் பவுடராக்கி கறிகளுக்கு சேர்க்க முயற்சிக்கிறேன்.

  சாதம் மிக அருமையாக வந்திருக்கு. ஆனா எங்க வீட்டில் நான் மட்டும்தேன் இதற்கு அடிமை:(.. ஏனையோருக்கு ஆயிரம் கதை சொல்லி கெஞ்சிக் கூத்தாடியே.. மிரட்டீயே சாப்பிட வைக்க வேண்டி இருக்கும் என்பதால், ஹொலிடே முடியட்டும் செய்திடுறேன் எனக்கு மட்டும்:).

  பதிலளிநீக்கு
 15. @Sriram நானும் வந்திட்டேன் :) எப்பவும் அதிகாலை பதிவைஅரைக்கண்ணாலே பார்த்திட்டு தூங்குவேன் ..எங்கவூர் வெயிலும் pollen கவுண்ட்டும் அடித்து போட்டுடுச்சி என்னை ..

  மிக்க நன்றி ஸ்ரீராம் நிச்சயம் செய்து பாருங்க
  இதில் ஒன்றுக்குள் இரண்டு போலத்தான் பருப்புப்பொடியும் சேர்த்தேன் வெறும்சாதத்தில் அந்த பொடியை சேர்த்து சாப்பிடவும் சுவை நல்லா இருக்கும்


  பதிலளிநீக்கு
 16. எனக்கு இன்னொரு டவுட்.. தேங்காய்ப்பூவுடன் ஆளி விதை சேர்த்து வறுத்து அரக்கும்போது களி ஆகிடாதா?

  நான் எள்ளோடு தேங்காய்ப்பூச் சேர்த்து வறுத்து அரைத்தேன்.. அப்படியே சட்னிபோல திரண்டு வந்துதே கர்ர்:).. பவுடராக வருமென நினைச்சேன்ன்:)..

  பதிலளிநீக்கு
 17. வாங்க ரூபன் :)இந்த ரெசிப்பி செய்தது சகோதரி நானேதான் ..
  எங்க வீட்டு ஐயாவுக்கு அசிஸ்டன்ட் வேலை அதாவது கள்ளனை கிளீன்செய்து தர மட்டுமே தெரியும் :)#வருகைக்கும் முதல் பின்னூட்ட்டத்திற்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி :)

  பதிலளிநீக்கு
 18. @கீதா சாம்பசிவம் ..வாங்க கீதா அக்கா ..நான் வாழைப்பூவில் பிரியாணி புலாவ் சாதம் சிலர் செய்ததை பார்த்தேன் எனக்கென்னமோ தக்காளி வெங்காயலாம் சேர்த்தா வாழைப்பூவின் சுவை மாறுபடும்னு தோணிச்சி அதனாலேயே அதெல்லாம் இல்லாம இதை ரெண்டு முறை செய்து பார்த்து இங்கே ஸ்ரீராமுக்கு அனுப்பினேன் ..
  இங்கே நம்ம ஊரில் கிடைப்பது போல பெரிய அளவில் பூ வராதுக்கா இலங்கைத்தமிழர் கடையில் சின்ன அளவுதான் கிடைக்கும் அதிலும்அ சிலது கறுப்பாகிடும்த அதனால்னா கழிவெல்லாம் போக மிஞ்சினத்தில் ரெண்டு ரெசிப்பி ஒரே நாளில் செய்யலாம் ..

  வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி அக்கா

  பதிலளிநீக்கு
 19. @துரை செல்வராஜூ ஐயா ..வாங்க வாங்க ..ஊருக்கு போனதும் செய்து தர சொல்லுங்க ..மிகவும் ருசியா இருந்தது இந்த கலந்த சாதம்

  பதிலளிநீக்கு
 20. நண்பர்களே !!! எல்லாரும் அப்படியே கீழிருக்கும் லிங்க் நம்ம ஏரியாவுக்கு சென்று பின்னூட்டப்புயல் நெல்லைத்தமிழன் எழுதிய கதையை வாசிக்கவும்

  https://engalcreations.blogspot.co.uk/2017/06/blog-post_19.html

  பதிலளிநீக்கு
 21. @கில்லர்ஜீ ..வாங்க ..செய்து தர சொல்லுங்க வீட்டில் ..நம்மூரில் எப்பவுமே கிடைக்குமே வாழைப்பூ ..வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 22. @கரந்தை ஜெயக்குமார் ,,அண்ணா வாங்க நிச்சயம் செய்து சுவைத்து பாருங்க ..நன்றாக சுவையுடன் இருந்தது ..மிக்க நன்றி வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் தமிழ்மண வாக்கிற்கும்

  பதிலளிநீக்கு
 23. ///Angelin said...
  நண்பர்களே !!! எல்லாரும் அப்படியே கீழிருக்கும் லிங்க் நம்ம ஏரியாவுக்கு சென்று பின்னூட்டப்புயல் நெல்லைத்தமிழன் எழுதிய கதையை வாசிக்கவும் ///

  ஆவ்வ்வ்வ் நல்லவேளை சொன்னீங்க.. மீ காணவே இல்லை:).. தோஓஓஓஓஒ புறப்பட்டு விட்டேன்:).

  பதிலளிநீக்கு
 24. "ஆளி விதை என்பது லின் சீற்ஸ் தானே அஞ்சு?" இது FLAX SEEDSனு நினைக்கிறேன். இதை ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூனாவது சாப்பிடணும், டைஜஷன் மற்றும் உடம்பு இளைக்க நல்லது என்று எனக்கு prescribe செய்திருக்கிறார்கள். இதுக்குன்னு மெனக்கிடாம, ஏதேனும் சாப்பிடுவோமா என்று தோன்றும் சமயங்களில் ஒரு ஸ்பூன் வாயில் போட்டுக்கொள்கிறேன்.

  பதிலளிநீக்கு
 25. @கோமதி அரசு ...அக்கா வாங்க ..ஓ தரலாமா துவரம்பருப்பு கடலை பருப்பு சேர்த்தும் தனியாகவோ பொடியாகவும் சேர்க்கலாம் ..ஆளிவிதை உடலுக்கு மிகவும் நல்லது எங்க வீட்டில எப்பவும் இருக்கும் நானா அதை புளிசாதம் காரக்குழம்புக்கு கொஞ்சூடுண்டு சேர்ப்பேன்

  செய்து பாருங்கக்கா வருகைக்கும் பின்னூட்ட்டத்திற்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றிக்கா

  பதிலளிநீக்கு
 26. @மனோ அக்கா :) வாங்க அக்கா ..ஆமன்க்கா எனக்கு வாழைப்பூவில் இந்த சாதம் புதுமையாக வித்யாசமான சுவையுடன் இருந்தது தக்காளி சேர்த்திருந்தா அது வேறுமாதிரி சுவையை தந்திருக்கும் இது சற்று மஷ்ரூம் சாதம் போலவே இருந்தது அக்கா வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிக்கா

  பதிலளிநீக்கு
 27. ஹா ஹா ஹா டமில் மனத்தில்... ஸ்ரீராம், கில்லர்ஜி, பகவான் ஜீ.. மூவரும் 12 வோட்டுகள் அடிப்படையில் ஒரே கியூவில் நிக்கினம்:).. இதில ஆர் அதிக ஓட்ட ப்பந்த வீரர்..?:)

  பதிலளிநீக்கு
 28. @நெல்லைத்தமிழன் ..வாங்க வாங்க மொத்தமடலோட கட்டிங் :) அதெல்லாம் மேதகு ஸ்காட்லான்த் புகழ் பூஸார் செய்ரது :)

  எங்க வீட்ல கள்ளனை க்ளீனிங் செய்ய ரெண்டு அஜிஸ்டண்ட்ஸ் இருக்காங்க :) பேசிக்கிட்டே அப்பாவும் மகளும் செய்வாங்க

  அதனால் எனக்கு வேலை சுலபம் மிக்க நன்றி தமிழ்மண வாக்கிற்கும் வருகைக்கும் ..இன்னும் கொஞ்சம் நேரத்தில் நம்ம ஏரியா வரேன் வரோம் :)

  பதிலளிநீக்கு
 29. @ப்ரியசகி அம்மு

  ஆவ் வாங்க ப்ரியா நானும் முதல்முறையா ஒரு வலைப்பூவில் வாழைப்பூ பிரியாணி செய்முறை பார்த்தேன் அதில் தக்காளி வெங்காயமெல்லாம் இருந்தது சரி உங்க ப்ரண்டு சயின்டிஸ்ட்தானே :) அதை இப்படி மாத்தி யோசிச்சி பொடிசாதம்போல செய்தெம் சுவை மிகவும் அருமையாக வந்தது ..நிச்சயம் செய்து பாருங்க ..கையை காட்டுங்க எங்க தலைவி மியாவ் எல்லார் விரலையும் செக் செய்றாங்க :)

  பதிலளிநீக்கு
 30. ப்ரியா ஆளிவிதை மீனுக்கு பதில் சைவர்கள் தினமும் சிறிது சாப்பிடணும் தோலுக்கு மிகவும் நல்லது

  பதிலளிநீக்கு
 31. @மியாவ் முதல்ல அந்த கூலிங் கிளாஸை கழட்டுங்க தலை சுற்றுதாம் அதெல்லாம் வெயிலுக்கு மட்டுமே போடணும் நீங்க தூங்கும்போது போட்டா தலை வால்எல்லாம் சுத்தும் :)

  பதிலளிநீக்கு
 32. @மிடில்க்ளாஸ் மாதவி ..கணக்குப்புலி வாங்க வாங்க :)

  என் மகளுக்கு பூண்டு வெங்காயம் சமையலில் இருந்தால் சாப்பிட மாட்டா ..திர்ஹத்தில் சாப்பாடு போட்டதும் கேட்கிற முதல் கேள்வியே அனியான் இருக்கா இதில் என்பதுதான் ..அதுக்கே நானா வெங்காயம் சேர்க்காமல் செய்வேன் இந்த கலந்த சாதத்தை

  மிகவும் டேஸ்டி ..பொடியும் சேர்ப்பதால் சுவை நன்றாக இருக்கு செய்து பாருங்க மி.கி. மா

  பதிலளிநீக்கு

 33. @ஜெ .மாமி ..வாங்க வாங்க :)

  செய்து பாருங்க ரொம்ப சுவையா இருந்தது பருப்புத்தேங்காய் பொடியுடன் கலக்கும்போது ட்ரை ஆகாமல் எண்ணைத்தன்மையா இருந்தது வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 34. @அதிராத மியாவ் :)
  எனக்கும் தலை வலி போலன் கவுண்ட்டும் அதிகம் இங்கே நேற்றெல்லாம் ரொம்ப தும்மலும் அலர்ஜியுமாவே இருந்தது சுடுதணியால் கண்ணை கழுவிட்டே இருந்தேன் ..
  ஹாஹா எனக்கும் வாழைப்பூ ரொம்ப பிடிக்கும் அடிக்கடி ரசம் சூப் பொரியல் செய்வேன் சும்மாவே கூட்டை மட்டும் சாப்பிடுவேன் இது போல செய்து பாருங்க மியாவ் :) எல்லார் கையையும் செக் பண்ணுங்க :)

  பதிலளிநீக்கு
 35. @விஜய் .வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் மிக்க நன்றிங்க

  பதிலளிநீக்கு
 36. https://www.flaxfarm.co.uk/linseed-or-flax-whats-the-difference/

  @நெல்லை தமிழன்
  @அதிராமியாவ்
  @ஜெ மாமி

  லின்சீட் பிளாக்ஸ்ஸீட் ரெண்டும் ஒன்றுதான் ..இங்கிலாந்தில் ஒரு பேர் மற்ற ஐரோப்பிய நாட்டில் வேறுபேர் சொல்றாங்க
  நானா சும்மா நாலஞ்சி விதைகளை தூவிவிட அழகான லைலாக் கலர் பூக்கள் வந்தது இந்த செடியில்

  இந்த சுட்டியில் பாருங்க அதன் ஹெல்த் பெனிபிட்ஸ் நிறைய இருக்கு

  பதிலளிநீக்கு
 37. @நெல்லைத்தமிழன் ஆளி விதையை நானா புளிசாதம் வற்றல்குழம்பிலும் சேர்ப்பேன் இங்குள்ள பிரெட்டில் அதை சேர்க்கிறாங்க

  நீங்க சப்பாத்தி செய்யும்போதும் வறுக்காமல்மிக்சியில் அரைத்து சப்பாத்தி மாவுடன் சேர்ந்து பிசையலாம் .

  அப்புறம் தண்ணி சேர்த்துதான் குடிக்கணும் இல்லைனா அத்தொண்டையில் அடைக்கும்

  பதிலளிநீக்கு
 38. இங்கே கோல்டன் லின்சீட் கூட கிடைக்குது சென்னையிலும் இருக்கு முழுசா சாப்பிடக்கூடாது அரைத்து பொடியாகத்தான் சாப்பிடணும்
  @அதிரா லின்சீடை ஊறவைத்த ஒரு குட்டி ஸ்பூன் தான் ஊறவைக்கணும் தோசைக்கு அதன் அளவு ஒரு ஸ்பூன் மட்டும் சேர்க்கணும் ..இதுவே தோசை வார்க்கும்போது கொழகொழத்து திக்காகும் ..
  நானா சொன்ன மாதிரி செய்யுங்க பொடியை ..எல்லாவற்றையும்ல வாணலியில் வருது அடுப்பை அணைத்தபின் லின்சீட் இறுதியில் தான் சேர்க்கணும் நல்லா வரும் இப்படி செஞ்சா

  பதிலளிநீக்கு
 39. @அசோகன் குப்புசாமி ..வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றிங்க

  பதிலளிநீக்கு
 40. எங்கே சுட்டி இணைக்கவே இல்லயே அஞ்சு?:)..

  நெல்லைத்தமிழனைப் பார்த்துப் “புயல்” எனச் சொன்னமைக்கு என் வன்மையான கண்டனங்கள் அஞ்சு:)

  பதிலளிநீக்கு
 41. வாவ்!! வித்தியாசமா இருக்கே ஏஞ்சலின் வாழைப்பூ சாதம்.. செய்து தருகிறேன் மகளுக்கு.. நானும் மகளும் ஆளி விதையை நீண்ட நாட்களாக உபயோகிக்கிறோம்.. தோசை மிளகாய் பொடி அரைக்கும் போது ஒரு கை வறுத்து சேர்த்து அரைப்பேன்..:)

  பதிலளிநீக்கு
 42. வாவ்!! வித்தியாசமா இருக்கே ஏஞ்சலின் வாழைப்பூ சாதம்.. செய்து தருகிறேன் மகளுக்கு.. நானும் மகளும் ஆளி விதையை நீண்ட நாட்களாக உபயோகிக்கிறோம்.. தோசை மிளகாய் பொடி அரைக்கும் போது ஒரு கை வறுத்து சேர்த்து அரைப்பேன்..:)

  பதிலளிநீக்கு
 43. //நான் எள்ளோடு தேங்காய்ப்பூச் சேர்த்து வறுத்து அரைத்தேன்.. அப்படியே சட்னிபோல திரண்டு வந்துதே கர்ர்:).. பவுடராக வருமென நினைச்சேன்ன்:).. //

  என்னும் அதிராவின் கேள்விக்கு பதிலைக் காணோமே ஏஞ்சலின்? எனக்குக் கவலையாக இருக்கிறது. மிக்சிக்குப் பக்கத்திலேயே எவ்வளவு நேரம்தான் காத்திருப்பார் அதிரா மியாவ்!

  பதிலளிநீக்கு
 44. ஆரோக்கிய சமையல் ஹேமா இன்றைய அஞ்சுவின் பதிவைப் படித்து விட்டு வாட்ஸாப்பில் "சூப்பர்.... வித்தியாசம் என்று கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் இணைத்துப் படம் அனுப்பி இருக்கிறார். சிறு வித்தியாசத்துடன் உடனே முயற்சித்தும் விட்டார். ஹேமாவும் ஆளிவிதை ரசிகை என்று உங்களுக்குத் தெரியும்தானே?

  பதிலளிநீக்கு
 45. அதிரா, எள்ளை வறுத்துட்டு எப்போவுமே தனியாத் தான் மிக்சி ஜாரில் போட்டுச் சுத்தணும்! அதுவும் ஒரே சுத்து! அரை செகண்ட் (அப்படின்னா அரை செகண்ட் மட்டுமே) போடணும்! அதுக்கப்புறமாத் தேங்காயை அதில் சேர்த்து நன்கு கிளறிக்கலாம். சேர்த்துப் போடக் கூடாது!

  பதிலளிநீக்கு
 46. ஆளிவிதை ..? தெரியலையே flax seed அதுவும் தெரியலையே

  பதிலளிநீக்கு
 47. வாழைப்பூவில் வித்தியாசமான ரெசிபி. வாழைப்பூவை தனியாக சுன்\டல் போல் செய்து சாதம் சேர்த்து சாப்பிடலாம் தானே? வாழைப்பூவுடன் தேங்காய்ய்ப்பூ சேரும் போதே அதன் சுவை அசத்தும், நான் பெரும்பாலும் வீட்டுக்கு சமைக்கும் போது சின்ன வெங்காயம் பொடியாக நறுக்கிச்சேர்ப்பேன். எங்கள் வீட்டுக்குட்டீஸுக்கு கலவை சாதங்களை விட சாதம் தனியேவும் கறிகள் தனியேவுமாக இருந்தால் தான் எல்லாமே சாப்பிடுவார்கள். கல்ந்து விட்டால் கண்டு கொள்ள மாட்டார்கள். பிரைட் ரைஸ்.வெஜ் ரைஸ் உட்பட எதுவுமே மிக்ஸ் செய்யாமல் தனி சாதமாக இருக்க வேண்டும். அடுத்த தடவை தமிழ்க்கடைகளுக்கு செல்லும் போது வாழைப்பூ வாங்கி வந்து விடலாம் ஏஞ்சல்.

  பதிலளிநீக்கு
 48. வாழைப்பூ, பொடி கலந்த சாதம் ..... புதுமை ..... அருமை ..... படங்களெல்லாம் அழகு.

  பகிர்வுக்குப் பாராட்டுகள் + நன்றிகள்.

  பதிலளிநீக்கு
 49. @athirrrrrravvv
  நண்பர்களே !!! எல்லாரும் அப்படியே கீழிருக்கும் லிங்க் நம்ம ஏரியாவுக்கு சென்று பின்னூட்டப்புயல் நெல்லைத்தமிழன் எழுதிய கதையை வாசிக்கவும்

  https://engalcreations.blogspot.co.uk/2017/06/blog-post_19.html

  garrr

  பதிலளிநீக்கு
 50. கர்ர்ர் மியாவ் முதல்ல அந்த கூலிங் கிளாஸை கழட்டிட்டு பவர் கிளாஸை போடுங்க :) லின்சீட் லின்க்கும் இருக்கு நம்ம ஏரியா லிங்கும் இருக்கு #

  ஆமா தப்புத்தான் :) சகலகலாவல்லவர் அஷ்டாவதானி ஆல்ரவுண்டர் ஓக்கேவா :)

  பதிலளிநீக்கு
 51. @@கோபு அண்ணா வாங்க :) வருகைக்கும் பாராட்டுக்களும் மிக்க நன்றி

  பதிலளிநீக்கு
 52. நன்றி ஏஞ்சலின். 8 பழங்களை பிளேட்டில் கட்பண்ணி வைத்துக்கொண்டு, ஒரே வேளையில் சாப்பிடறவங்களுக்கெல்லாம் இப்போ அஷ்டாவதானின்னு பேர் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்களா? அப்ப சரிதான். இந்த வாரத்தில்தான் 4 மாம்பழம், 4 திராட்சை ஒரு பிளேட்ல வச்சு சாப்பிட்டேன். எப்படி உங்களுக்குத் தெரிந்தது?

  பதிலளிநீக்கு
 53. @நிஷா ..ஆவ் வாங்க ..நலம்தானேப்பா ..வாழைப்பூவை சும்மா பொரியலா செய்தும் கலக்கலாம் ஆனால் பொடி இப்படி தேங்காயுடன் அரைத்து சேர்க்கும்போது ருசியும் அதிகமா இருக்கு ..உங்க பிள்ளைங்க க்ரேட்ப்பா ..என் வீட்டு குட்டி எலி இப்படி கலந்த fried ரைஸ் கேட்ப்பாள் அதிலும் வெங்காயம் பூண்டு கண்ணில் படவே கூடாது அவளுக்கு

  பதிலளிநீக்கு
 54. @ நெல்லைத்தமிழன் :) ஹாஹா இன்னும் அங்கே வந்து பின்னூட்டம் கொடுக்கணும் ..காலைலேருந்து ஒரே ஓட்டம் ..இன்னும் இருக்கு அங்கே வந்து சொல்றேன் :)

  பதிலளிநீக்கு
 55. @gmb ஸார் ..ஆளிவிதை கொஞ்சம் கொள்ளு போல இருக்கும் ஆனா வெரி ரிச் இந்த ஒமேகா 3 .
  மீன் சாப்பிட முடியாதவர்களுக்கு கிடைத்த ஸ்பெஷல் உணவு இது ..இங்குள்ள பேக்கரிகளில் ப்ரெட் மேலே இதை முழுதா தூவி செய்வாங்க

  சென்னையில் கிடைக்கும் ..அதிகம் சாப்பிடக்கூடாதது ஒரு நாளைக்கு ஒரு ஸ்பூன் மட்டும் அரைத்து நீரில் கரைத்து சாப்பிடலாம்
  நான் எள்ளு உருண்டை செய்யும்போதும் இதை பவுடராக்கி சேர்ப்பேன்

  பதிலளிநீக்கு
 56. @GMB Sir

  High-Fiber Super Foods. Omega-3 essential fatty acids, "good" fats that have been shown to have heart-healthy effects. Each tablespoon of ground flaxseed contains about 1.8 grams of plant omega-3s.

  https://draxe.com/10-flax-seed-benefits-nutrition-facts/

  லிங்க் கொடுத்திருக்கேன் ஆனால் எந்த புது உணவையும் உண்ணுமுன் மருத்துவ ஆலோசனை பெற்றே சாப்பிடணும் ..
  அவரவர் உடலுக்கு இந்த உணவுகளின் ஏற்புத்தன்மை மாறும் ..

  பதிலளிநீக்கு
 57. @கீதா அக்கா வாங்க ..எள் பொடி டிப்ஸுக்கு நன்றி ..
  சரியா சொன்னிங்க :) அரை செகண்ட் ..இந்த மியாவ் எப்பவும் நாம் சொல்றதை ரெண்டாக்கித்தான் செய்வாங்க
  தோசைக்கு அரைக்க ஒரு ஸ்பூன் ஆளிவிதைக்கு மேடம் சரிபாதி உளுந்து அரிசிக்கு அளவு ஆளிவிதைசேர்த்தா கொழகொழத்துதானே போகும் :) அப்படிதான் தேங்காய் நிறைய சேர்த்திருப்பாங்க அதான் பேஸ்ட் ஆகியிருக்கு

  பதிலளிநீக்கு
 58. @//ஸ்ரீராம். said...
  ஆரோக்கிய சமையல் ஹேமா இன்றைய அஞ்சுவின் பதிவைப் படித்து விட்டு வாட்ஸாப்பில் "சூப்பர்.... வித்தியாசம் என்று கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் இணைத்துப் படம் அனுப்பி இருக்கிறார். சிறு வித்தியாசத்துடன் உடனே முயற்சித்தும் விட்டார். ஹேமாவும் ஆளிவிதை ரசிகை என்று உங்களுக்குத் //


  யெஸ் யெஸ் :) தெரியும் நீங்க பின்னூட்டங்களில் அடிக்கடி சொல்லியிருக்கீங்க ..

  அவங்க செய்தும் பார்த்துட்டாங்களா !! வாவ் ..ரொம்ப தாங்க்ஸ்னு சொல்லிடுங்க .

  பதிலளிநீக்கு
 59. @sriram :))

  ////நான் எள்ளோடு தேங்காய்ப்பூச் சேர்த்து வறுத்து அரைத்தேன்.. அப்படியே சட்னிபோல திரண்டு வந்துதே கர்ர்:).. பவுடராக வருமென நினைச்சேன்ன்:).. //

  என்னும் அதிராவின் கேள்விக்கு பதிலைக் காணோமே ஏஞ்சலின்? எனக்குக் கவலையாக இருக்கிறது. மிக்சிக்குப் பக்கத்திலேயே எவ்வளவு நேரம்தான் காத்திருப்பார் அதிரா மியாவ்!//


  இன்னிக்கு நிறைய வேலை அதான் உடனே வரவும் முடியலை :) அதுக்குள்ளே கீதாக்கா பின்னூட்டம் தருவாங்கன்னு கான்பிடண்ட்டா நம்ம கம்யூனிட்டி சர்வீஸ் செய்ய போயிட்டேன் :) canal பக்கம் அன்னங்களுடன் உரையாட

  பதிலளிநீக்கு
 60. @ஆதி வெங்கட் ..வாங்கப்பா நலம்தானே ..அங்கே முகப்புத்தகத்தில்நான் இல்லாததால் இங்கே தான் உங்களை சந்திக்கணும் :)
  ஆமாம் நினைவிருக்கு முந்தி நான் ஆளிவிதை மலரின் போட்டப்போ சொன்னிங்க ..நான் இதை பருப்பு பொடியில் துவரம்பருப்புக்கு பதில் அப்புறம் புளிசாதத்தில் கடைசியில் வறுக்காம அரைத்தும் நீங்க சொன்னாற்போல் இட்லி தோசை பொடி போலவும் சமையலில் சேர்ப்பதுண்டு உடம்புக்கு ரொம்ப நல்லது

  பதிலளிநீக்கு
 61. //Angelin said...
  @sriram :))

  ////நான் எள்ளோடு தேங்காய்ப்பூச் சேர்த்து வறுத்து அரைத்தேன்.. அப்படியே சட்னிபோல திரண்டு வந்துதே கர்ர்:).. பவுடராக வருமென நினைச்சேன்ன்:).. //

  என்னும் அதிராவின் கேள்விக்கு பதிலைக் காணோமே ஏஞ்சலின்? எனக்குக் கவலையாக இருக்கிறது. மிக்சிக்குப் பக்கத்திலேயே எவ்வளவு நேரம்தான் காத்திருப்பார் அதிரா மியாவ்!//


  ///

  ஆஆஆஆங்ங் எனக்காகக் கேள்வி கேய்க்கவும் ஆட்கள் இருக்காங்க தெரிஞ்சுக்கோங்க:).. அஞ்சுவுக்கு தெரிஞ்சா உடனே சொல்லியிருக்க மாட்டாவா என்ன:).. இதில ஜமாளிப்புக்கேசன் வேற கர்ர்:)

  நன்றி கீதாக்காஅ.. இனிமேல் அப்படியே செய்கிறேன்.

  ஏனெனில் நாம்.. இந்த கச்சான், பொட்டுக்கடலை, எள்ளு, கசகசா.. இப்படி எதுவும் சேர்ப்பதில்லை பவுடராக்கி... அதனால இப்போதான் கொஞ்சம் கொஞ்சம் பழகி வாறேன்ன்:).

  பதிலளிநீக்கு
 62. ஏஞ்சலின் அங்கே முகப்புத்தகத்தில் தேடிக் கொண்டிருந்தேன்.. ஆச்சி தான் விவரம் சொன்னார்கள்.. நீங்கள் இங்கே ரெசிபி ராணியாக மாறிவிட்டீர்களே...:)

  பதிலளிநீக்கு
 63. ஏஞ்சலின் அங்கே முகப்புத்தகத்தில் தேடிக் கொண்டிருந்தேன்.. ஆச்சி தான் விவரம் சொன்னார்கள்.. நீங்கள் இங்கே ரெசிபி ராணியாக மாறிவிட்டீர்களே...:)

  பதிலளிநீக்கு
 64. //ஆஆஆஆங்ங் எனக்காகக் கேள்வி கேய்க்கவும் ஆட்கள் இருக்காங்க தெரிஞ்சுக்கோங்க:).. அஞ்சுவுக்கு தெரிஞ்சா உடனே சொல்லியிருக்க மாட்டாவா என்ன:).. இதில ஜமாளிப்புக்கேசன் வேற கர்ர்:)//

  கர்ர்ர்ர் :) அதுதான் எல்லாரையும் ஈ கொசு தேள் இப்படி சொல்லியே பயங்காட்டி வச்சிருக்கீங்களே :) அதுக்கு பயந்தே எல்லாரும் கேக்கறாங்க :)


  பதிலளிநீக்கு
 65. @ஆதி வெங்கட் :)//ADHI VENKAT said...
  ஏஞ்சலின் அங்கே முகப்புத்தகத்தில் தேடிக் கொண்டிருந்தேன்.. ஆச்சி தான் விவரம் சொன்னார்கள்.. நீங்கள் இங்கே ரெசிபி ராணியாக மாறிவிட்டீர்களே...:)///  ஹாஹா :) தாங்க்யூ என்னை தேடியதற்கு  ரெசிப்பி ராணியா !!! எல்லாப்புகழும் எங்கள் பிளாக்குக்கும் ஸ்ரீராமுக்கும் தான் :)

  நன்றி ஆதி

  பதிலளிநீக்கு
 66. ஆதி வெங்கட்..

  புதுப்புது ரெசிபிக்களை நீங்களும் அனுப்பலாம். புகைப்படங்கள் சேர்த்து என் மெயில் ஐடிக்கு அனுப்புங்கள்.

  பதிலளிநீக்கு
 67. இதுவரை யாரும் எழுதாத ரெஸிப்பி. துளி மஞ்சள் பொடிகூட போட்டிருக்கலாமோ என்று நினைத்தேன். ஸாதாரணமாக வாழைப்பூ என்றால் புளி முன்வந்து நிற்கும். அது இல்லாமல் பொடிகளின் ருசியுடன் சாதம்.
  நன்றாக இருக்கிறது. வாழைப்பூவை புளிப்பு சுவை கூட்டாமல் செய்ததால் மஷ்ரூம் கலர். ரெஸிப்பி காலையிலேே பார்த்தேன். புதுகண்டு பிடிப்பு. அன்புடன்

  பதிலளிநீக்கு
 68. @ காமாட்சியம்மா :) மிக்க நன்றி ..மஞ்சள் தூள் சேர்த்தா என் பொண்ணுக்கு விருப்பமில்லை எதோ pilau ரைஸ் அதனால் வேணாம்னு சொல்லிடுவா :)
  ஆமாம் மஸ்ரூம் சுவைபோலதான் இருந்தது அடிஷ்னலா பொடிகள் மற்றும் தேங்காய் சுவை சேர்த்ததால் ருசி நல்லா இருந்தது
  வருகைக்கும் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தியதற்கும் மிக நன்றிம்மா

  பதிலளிநீக்கு
 69. ஏஞ்சல்!! வாவ்!! நான் செய்ததுண்டு....ஆனால் ஆளி விதை சேர்த்ததில்லை. கடலைப்பருப்பு சேர்த்து நானும் வெங்காயம் பூண்டு இதற்கும் மற்றும் வாழைக்காயையும் இதே போல் பொடி செய்து கலந்த சாதம் செய்வதிலும் சேர்ப்பதில்லை. வாழைக்காயை தோலுடனே ஸ்டீம் செய்து துருவி இதே போல் பொடி செய்து கலந்து செய்யலாம். செய்திருப்பீர்கள் நீங்கள். ஆளி விதை சேர்த்துச் செய்து பார்க்கிறேன் சூப்பர் ஏஞ்சல்!!! சமையல் க்வீன்!!! இப்போதெல்லாம் இட்லி அரைக்கும் போது வெந்தயத்துடன் ஆளி விதையும் ஊற வைத்து சேர்த்து அரைக்கிறேன்....ஆளிவிதையை எதிலெல்லாம்சேர்க்க முடியுமோ அதிலெல்லாம் சேர்க்கிறேன். பொடியை சப்ஜிக்களிலும், சப்பாத்தி மாவு கலக்கும் போதும் கலந்து செய்கிறேன்...வித்தியாசமான ரெசிப்பிக்களைத் தருகிறீர்கள். சூப்பர்!!! எங்கள் ப்ளாகிற்கும் நன்றிகள் பல சொல்லலாம். இப்படிப் பல ரெசிப்பிக்களை புதியதாகவும், அதுவும் முன்பு செய்து இப்போது சில காலம் செய்யாமல் இருக்கும் பல ரெசிப்பிக்களை நினைவு படுத்துவது போல் தருவதற்கு பல நன்றிகள்!!

  கீதா

  பதிலளிநீக்கு
 70. @ Geethaa
  வாங்க வாங்க :) அம்மன் வாழைக்காயை ஸ்டிம் செய்து புட்டு போல செய்வேன் சாதத்துடன் கலந்ததில்லை ..
  ஆளிவிதை சேர்த்துதான் இப்போல்லாம் நானும் சமைக்கிறேன் அப்புறம் எல்லா சமையலும் மண் சட்டியில்தான்

  //சமையல் க்வீன்!!! //

  ஆவ்வ் தாங்க்யூ தாங்க்யூ :)எனக்கு தண்ணியில் எதோ ஹெவியா தொபுக்கடீர்னு விழும் சத்தம் கேட்டுது :)உங்களுக்கு கேட்டுதா :) ஹா ஹா எதுக்கும் ஆழம் எவ்ளோன்னு செக் பண்ணிட்டு வரேன்


  பதிலளிநீக்கு
 71. வாவ்! சூப்பர் ப்ரெசண்டேஷன்!!! அழகு! ரொம்ப அழகா சென்ஞ்சு காட்டியிருக்கீங்க ஏஞ்சல்! ரெசிப்பி போடும் அனைவருக்கும் ஹேட்ஸ் ஆஃப்!!!

  பொடியுடன் கறிவேப்பிலையும் சில சேர்த்து அரைபப்துண்டு நான். தாளிப்பிலும் சேர்ப்பேன் என்றாலும்...பலரும் கறிவேப்பிலையைப் பொறுக்கி எடுத்து வைத்துவிடுவதால் பொடி செய்து சேர்த்து விடுவதும் உண்டு. சூப்பர் ஏஞ்சல்!!!

  நானும் உங்களைப் போலவே பல புதிய ரெசிப்பிக்கள் செய்து பார்ப்பதுண்டு. மகன் இருந்த வரை அதுவும் ப்ளாக் தொடங்கும் வரை 28 வருடங்கள் கிச்சன், வீடு என்று இருந்ததால்...

  ஆளி விதை என்னிடம் நிறையவே இருக்கிறது ஏஞ்சல். கொத்தமல்லி விரை போடும் போது அதையும் தூவினேன். இன்னும் முளைக்கவில்லை. பார்க்க வேண்டும்...ஆளிவிதை செடி பார்த்ததில்லை. பார்க்க வேண்டும் என்றே போட்டேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
 72. ஏஞ்சல் உருளைக் கிழங்கு, சேனைக்கிழங்கு இதிலும் இது போன்று செய்யலாம். அப்புறம் சேப்பங்கிழங்கை சிறியதாகக் கட் செய்து கொண்டு கொஞ்சம் வறுத்து பொடி சேர்த்து இப்படிச் செய்யலாம். கத்தரிக்காய் பிடிக்கும் என்றால் அதிலும் செய்யலாம். தனியா பொடி என்பதை நான் வீட்டில் நிறைய செய்து வைத்துக் கொண்டு குளிர்சாதனப்பெட்டியில் (மணம் போகாமல் இருக்க) வைத்து விடுவதுண்டு. உடனடியாகச் செய்ய வேண்டியிருக்கும். மகனுக்கு லஞ்ச் பாக்ஸ் கட்டிக் கொடுக்க கணவருக்கும் கட்டிக் கொடுக்க. மகன் இங்கு பணி செய்யும் வரை 6 மணிக்குள் எல்லாம் தயராக இருக்க வேண்டும். எப்போது வேண்டுமென்றாலும் கிளினிக்கிலிருந்து கால் வரும் என்பதால். எனவே பொடிகள் பல ரெடியாக இருக்கும். இப்பொது எல்லாம் அவ்வப்போதுதான். இதில் சில சமயம் எள்ளும் சேர்த்துச் செய்வதுண்டு ஏஞ்சல் அதன் சுவையும் நன்றாக இருக்கும். தேங்காய்க்குப் பதில் கொப்பரையும் சேர்ப்பதுண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
 73. மீள் வருகைக்கு நன்றி கீதா ..இதுவரை கிழங்குகளில் கலந்த சாதம் செய்ததில்லை இனிமே செய்து பார்க்கறேன் ஆனால் கத்திரிக்காய் கோவைக்காயில் அடிக்கடி செய்வேன் ..ஆளிவிதைப்பூ அழகா இருக்கும் நான் முன்பு முகப்புத்தகத்தில் போட்டேன் இப்போ கைவசம் இல்லை ,..சும்மா தொட்டியில் போட்டாலே வளரும் ..திடீர்னு முளைக்கும் வெயிட் பண்ணுங்க ..

  கொப்பரைதான் ரொம்பசுவை கலந்த பொடி சாதத்துக்கு கிடைக்கலேன்னா தேங்காய்த்துண்டங்களை ட்ரை ரோஸ்ட்டாக்கியும் அரைக்கலாம்  பதிலளிநீக்கு
 74. ///Angelin said...
  @//ஸ்ரீராம். said...
  ஆரோக்கிய சமையல் ஹேமா இன்றைய அஞ்சுவின் பதிவைப் படித்து விட்டு வாட்ஸாப்பில் "சூப்பர்.... வித்தியாசம் என்று கட்டை விரலையும் ஆள்காட்டி விரலையும் இணைத்துப் படம் அனுப்பி இருக்கிறார். சிறு வித்தியாசத்துடன் உடனே முயற்சித்தும் விட்டார். ஹேமாவும் ஆளிவிதை ரசிகை என்று உங்களுக்குத் //


  ///

  அவங்க செய்தும் பார்த்துட்டாங்களா !! வாவ் ..ரொம்ப தாங்க்ஸ்னு சொல்லிடுங்க .///

  ஹையோ ஸ்ரீராம் பிளீஸ்ஸ்ஸ் ஹேமா அவங்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி செக் பண்ணிப் பாருங்கோ.. ஆள் ஓகேயா என:)..

  பதிலளிநீக்கு
 75. ///Angelin said...
  //ஆஆஆஆங்ங் எனக்காகக் கேள்வி கேய்க்கவும் ஆட்கள் இருக்காங்க தெரிஞ்சுக்கோங்க:).. அஞ்சுவுக்கு தெரிஞ்சா உடனே சொல்லியிருக்க மாட்டாவா என்ன:).. இதில ஜமாளிப்புக்கேசன் வேற கர்ர்:)//

  கர்ர்ர்ர் :) அதுதான் எல்லாரையும் ஈ கொசு தேள் இப்படி சொல்லியே பயங்காட்டி வச்சிருக்கீங்களே :) அதுக்கு பயந்தே எல்லாரும் கேக்கறாங்க :)////

  ஹா ஹா ஹா கர்ர்ர்ர்:) அப்பூடியில்லை.. ஒரு அயகான:) அறிவான:) சுவீட் 16 தேம்ஸ்ல குதிச்சு:) பொசுக்கெனப் போவதை ஆரும் விரும்பல்லயாக்கும்:).

  பதிலளிநீக்கு
 76. //ADHI VENKAT said...
  ஏஞ்சலின் அங்கே முகப்புத்தகத்தில் தேடிக் கொண்டிருந்தேன்.. ஆச்சி தான் விவரம் சொன்னார்கள்.. நீங்கள் இங்கே ரெசிபி ராணியாக மாறிவிட்டீர்களே...:)..///

  ஹையோ வயலூர் முருகா விசயம் தெரியாம ஆதி புகழ்ந்திட்டாவே.. இனி நாங்க இங்கின இருந்தபாடில்லையே ஆண்டவா:)

  பதிலளிநீக்கு
 77. @சாரங்கராஜன் ராஜகோபால் ..

  மிக்க நன்றிங்க

  பதிலளிநீக்கு
 78. //அதிரா வாழைப்பூ சாதம் ரெடி. சாப்பிட வாங்க //

  Link Please..

  பதிலளிநீக்கு
 79. Anjelin. வாழைப்பூ சாதம் இன்று செய்து சாப்பிட்டாச்சு. வித்தியாசமான ரெசிபிக்கு வாழ்த்துக்கள் நன்றியுடன்

  பதிலளிநீக்கு
 80. தாங்க்ஸ் ஜே அக்க்கா இதோ வரேன்

  பதிலளிநீக்கு
 81. மிக்க நன்றி ஜெ அக்கா ..ரெசிபியை உடனே செய்துப்பார்த்து இங்கே சொன்னதற்க்கும்

  பதிலளிநீக்கு
 82. ஸ்ரீராமா, லிங்கா. காத்துக் காத்து யாரும் வராததால சாப்பிட்டாச்சு. மீண்டும் அடுத்த முறை செய்யும் போது என் வலைத் தளத்தில் பதிந்து இங்கும் லிங்க் கொடுக்கிறேன். ஏவ் ஏவ் ஏவ் ஏவ்

  பதிலளிநீக்கு
 83. மொபைல்ல இந்த பதிவை நேத்தே பார்த்துட்டேன். நேத்து எங்க வீட்டுல வாழைப்பூ கூட்டு. வாழைப்பூல சாதம் புதுசா இருக்கு. ட்ரை செஞ்சு பார்க்குறேன். பகிர்வுக்கு நன்றி சகோ

  பதிலளிநீக்கு
 84. புதுமையான ரெசிப்பி. எங்கள் வீட்டில் எல்லோருக்குமே வாழைப்பூ பிடிக்கும். வாரத்தில் ஒரு நாள் கலந்த சாதம் உண்டு இந்த வாரம் இதை முயற்சிக்கிறேன். நன்றி. Btw.flax seeds இல் கொழுப்பு அதிகம் என்று யாரோ தவறாக சொன்னதை கேட்டு மகள் வாங்கி வைத்ததை சாப்பிடாமல் தவிர்த்தேனே.🤔

  பதிலளிநீக்கு
 85. வாங்க ராஜி ..நீங்களும் செய்து பாருங்க வருகைக்கு ந்ன்றி ராஜி

  பதிலளிநீக்கு
 86. வாங்க பானுமதி அக்கா ..flax ஸீட் மிகவும் நல்லது நான்கலவை எள்ளு உருண்டை தோசை பொடி சாதங்களுக்கு சேர்ப்பேன் ..மிகவும் ருசியா இருக்கும் ..ஒருமுறை ட்ரை பண்ணுங்க ..காரக்குழம்புக்கு கூட அரைத்து கடைசியில் குழம்பு இறக்கும்போது சேர்க்கலாம் அவ்ளோ ருசியா இருக்கும் .வாழைப்பூ சாதம் செய்து பார்த்து சொல்லுங்க

  பதிலளிநீக்கு
 87. நன்றி ஸ்ரீராம் சார்.. பரிசோதனை எலி இல்லாததால், இப்போதெல்லாம் புதுசாய் எதுவும் முயற்சி செய்வதேயில்லை..:) முடியும் போது அனுப்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 88. நன்றி ஸ்ரீராம் சார்.. பரிசோதனை எலி இல்லாததால், இப்போதெல்லாம் புதுசாய் எதுவும் முயற்சி செய்வதேயில்லை..:) முடியும் போது அனுப்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 89. #வாழைப்பூவில் ரசம் உசிலி பொரியல் சூப் என செய்தாச்சு அடுத்த எக்ஸ்பெரிமென்ட் fried ரைஸ் போல செய்து பார்த்தேன்.#
  சமையல் விஞ்ஞானிதான் நீங்க :)

  பதிலளிநீக்கு
 90. வாங்க பகவான்ஜி :)எல்லாம் எங்க தானைத்தலைவி சொர்ணாக்கா பூஸார் கிட்ட எடுத்து ட்ரெயினிங் தான் ..தமிழ்மண வாக்கிற்கும் நன்றிங்க

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!