Tuesday, June 20, 2017

கேட்டு வாங்கிப் போடும் கதை : தவிக்கிறாள் தான்ய மாலினி 3 நிறைவுப்பகுதி - இராய செல்லப்பா - சீதை 10தவிக்கிறாள் தான்ய மாலினி - 3

- இராய செல்லப்பா அசோகவனத்தில், சிம்சுபா மரத்தடியில், ஒற்றை ஆடையுடன், அலங்காரங்கள் இன்றி, சோகமே உருவாயிருந்த சீதை தனக்குள் எண்ணியெண்ணிக் குமைந்துபோகிறாள்:

‘என் ஆருயிர்க் கணவர் ஏன் இப்படித் தாமதம் செய்கிறார்?

இவர்கள் சொல்வதுபோல் என் மீது அவர் நாட்டமற்றுப் போய்விட்டாரோ? இல்லையென்றால் இந்தப் பத்து மாதங்களில் அவராவது, இளையவராவது என்னைத் தேடி வந்திருக்க மாட்டார்களா? வழியெல்லாம் என் நகைகளைத் தூவிக்கொண்டே வந்தேனே, அதைப் பின்பற்றியாவது வந்திருக்க முடியாதா? ஒரு ராட்சஸப் பறவை என்னைப் பின்தொடர்ந்து அவனோடு போரிட்டதே, அதனாலும் எனக்கு உதவ முடியவில்லையா? என் மூலம் வாரிசு தோன்றவில்லையே என்று அவர் வருந்தினாரோ?

மண்ணிலிருந்து பிறந்த என்னால் அவர் வாழ்வே மண்ணாகிவிட்டதாக எண்ணிவிட்டாரோ?’

‘குபேரன் வாழும் கைலாசகிரியில் பரமசிவன் காப்பாற்றுவார்  என்று நினைத்து ஒளிந்துகொண்டாலும், வருணனுடைய சபையில் ஒளிந்துகொண்டாலும், ராமபாணங்கள் உன்னை விடாது வந்து துன்புறுத்தும் - என்று அன்றொருநாள் இராவணனிடம் சூளுரைத்தேனே, அந்த இராமபிரான் இன்னும் ஏன் என்னிடம் வராமல் இருக்கிறார்?’

தானும் இராமனும் தண்டகாரண்யத்தில் இருந்த நாட்களை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்த்தாள் சீதை. மாயமான் வந்து தன் வாழ்வில் குறுக்கிடும் முன்னால் எவ்வளவு இனிமையாக இருந்த பொன்னாட்கள் அவை!

‘இந்திரன் மகன் ஜெயந்தன் காகமாக உருவெடுத்துவந்து, காமம் மிகுந்தவனாக என் மார்பைக் கொத்திக் குருதி வழிந்தபோது, வெறும் தர்ப்பைப் புல்லையே பிரம்மாஸ்திரமாக்கி அவனை ஓட ஓட விரட்டி, அவனை ஒரு கண் இழக்க வைத்தீர்களே, இராமா, அந்த வேகம் எங்கே போயிற்று?  என்னைப் பிரிந்தவுடன் எல்லா ஆற்றலையும் இழந்துவிட்டீர்களா?’

‘அரச வாழ்வைத் துறந்து கானகம் வந்தாலும் உங்கள் அருகாமையில் ஆனந்தமாகத்தான் இருந்தேன், இராமா!

இல்லாததை எண்ணி என்றாவது வருந்தியிருக்கிறேனா?

அன்றொருநாள் உங்கள் அணைப்பில் நான் மெய்ம்மறந்து ஏகாந்தமாய் இருக்கையில், என் நெற்றிக் குங்குமம் வியர்வையில் அழிந்தது கண்டு, மனச்சிலை என்ற மலையை உரைத்து அதன் சிவந்த குழம்பை என் நெற்றியில் திலகமாக இட்டீர்களே இராமா,

இன்று வியர்வை மட்டுமின்றி, இந்த அரக்கியர்கள் தரும் சோதனைகளால் மனம் வெதும்பிப் பெருமூச்சு விடுவதால் என் எழிலனைத்தும் குலைந்துபோய், நடைப்பிணமாய்க் கிடக்கிறேனே, எப்போது வரப்போகிறீர்கள் இராமா? அல்லது,

இந்த சிம்சுபா மரத்தின் அடியிலேயே நான் உயிர்துறக்கவேண்டுமென்று விரும்புகிறீர்களா?’

‘ஆனால் நான் அப்படி உயிர் துறக்கவும் சாத்திரங்கள் அனுமதிக்க மாட்டாவே! பத்தினியின் உடல் அவளுடைய பர்த்தாவுக்கே சொந்தம் என்றல்லவா கூறுகின்றன. உங்களுக்கு உரியதை உங்கள் அனுமதியின்றி நான் அழிக்க முடியுமா? இக்கட்டான நிலையில் என்னை இருத்திவிட்டீர்களே, இராமா!’

‘ஆனால் நீதியற்ற முறையில் இன்னொருவன் மனைவியைத் தூக்கிவந்து சிறை வைத்திருக்கும் அந்தத் துன்மார்க்கன் இராவணன் கைகளில் எனது உடல் கிடைக்க அனுமதியேன்.

அதைவிட உயிரை விட்டுவிடுவதே மேலானது.’

இப்படித் தனக்குள் முடிவின்றிப் புலம்பி அழுதுகொண்டிருந்த சீதையை ஆதரவுடன் நோக்கினாள் திரிசடை.  இராவணனின் தம்பியான விபீஷணின் புதல்வி. அவளும் நெடுநேரம் தூங்கும் இயல்பினளே. ஆனால் சீதையின் அழுகுரல் அவளை எழுப்பிற்று.  

‘ஏய், அரக்கிகளே, இவளை விட்டு விலகுங்கள்’ என்று விரட்டினாள். அரசகுமாரியின் கட்டளையல்லவா, அவர்கள் வெருண்டு ஓடினார்கள்.

சீதையின் அருகில் வந்தா
ள் திரிசடை.

‘அம்மா சீதா! நீ கற்புக்கரசி. உன்னைத் தெய்வங்கள் காக்கும் என்பது உறுதி.  இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன்.  ஒரு மாபெரும் பறவை,  இந்த சிம்சுபா மரத்தை வலமாகச் சுற்றி வந்து மேலே விருட்டென்று கிளம்பி, மெல்ல மெல்ல இறங்கிவந்து மரத்தின்மேல் இளைப்பாறக் கண்டேன். இதன் அர்த்தம் என்ன தெரியுமா? உனது நாயகன் புறப்பட்டுவிட்டார், வெகு விரைவில் வந்து உன்னை மீட்டுக்கொண்டு போவார் என்பதே! எனவே நீ விரைவில் அயோத்தியை அடைவது திண்ணம். நம்பிக்கையோடிரு’  என்றாள்.

‘நான் இருக்கும் வரை உனக்கு என் பெரியப்பாவால் எந்தத் தீங்கும் நேராதபடி பார்த்துக்கொள்கிறேன். கலங்காதே’ என்று மீண்டும் சொல்லிவிட்டுத் தன் இருப்பிடத்திற்குப் போனாள் திரிசடை.

நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருப்பவனுக்குச் சிறு துரும்பு கிடைத்ததுபோல் இருந்தது சீதைக்கு.  அதே சமயம் சிங்கத்தின் வாயில் அகப்பட்ட பெண் யானை போலவன்றோ தன் நிலைமை என்று மறுபடியும் பதறினாள்.  மீண்டும் அரக்கிகள் வந்து தன்னிடம் இராவணனின் பெருமையைப் பாடம் படிக்க ஆரம்பிப்பதற்குள்

உயிரை நீத்துவிடுவதே மேல் என்று தோன்றியது.  ‘என்னிடம் ஆயுதங்கள் இல்லை. அருந்துவதற்கு நஞ்சும் இல்லை.  ஆனால் என் நீண்ட கூந்தல் இருக்கிறதே! இந்த சிம்சுபா மரத்தின் கிளைகளில் என் கூந்தலால் சுருக்கிட்டு உயிரை நீப்பேன்.  இதுவே இறுதி முடிவு. என் துன்பங்கள் இன்றோடு முடிந்துவிடும்.  நிரந்தரமான அமைதியைத்தரும் யமதர்மனின் உலகம் எனக்காகக் காத்திருக்கிறது’ என்று திடமாக எண்ணிக்கொண்டாள்.

ஆனால் இதென்ன, திடீரென்று எங்கிருந்தோ மின்னல்போல் ஒளிவெள்ளம் ஒருகணம் தோன்றி மறைகிறதே! சிம்சுபா மரத்தின் உச்சிக் கிளையில் இருந்து முழுதும் மலர்ந்த மலரொன்று தன் தலையில் விழுந்து அமர்கின்றதே! பஞ்சவர்ணக் கிளியொன்று தன்னைச் சுற்றிவந்து கிக்கீ என்று மகிழ்ச்சியோடு குரலெழுப்பிவிட்டுப் போகின்றதே! எங்கிருந்தோ ஓர் மழைத்துளி தன் முகத்தில் குளிர்ச்சியைத் தந்துவிட்டு மறைகிறதே!

“ஓ, திரிசடை சொன்னதுபோல் எனக்கும் நல்ல காலம் வரப்போகிறதா? என் இராமன் என்னைத் தேடி வரப்போகிறாரா?”  என்று அவள் வாயிலிருந்து கிளம்பிய குரல், யாருக்குக் கேட்டதோ இல்லையோ, இலங்காபுரி முழுதும் விடாமல் தேடியும் காணாமல், களைப்புற்றவனாக அப்போதுதான் சிம்சுபா மரத்தில் வந்தமர்ந்த அனுமனின் செவிகளில் தேனாய் விழுந்தது. அவ்வளவே, ‘கண்டேன் சீதையை’ என்று மெய் சிலிர்த்தான்.

‘எந்த ஒரு குரலைக் கேட்பதற்காக இராமபிரான் கணந்தோறும் கணந்தோறும் காத்துக்கிடக்கிறாரோ, அந்தக் குரலை நான் கேட்டுவிட்டேன். இனி, இப்பொழுதே கீழே குதிப்பேன்.

விஸ்வரூபம் எடுத்து எனது தோள்களில் இந்த மகா உத்தமியை ஏந்திக்கொண்டு பறப்பேன். கடலும் மலையும் தாண்டுவேன்.  இதோ கொண்டுவந்து விட்டேன் உங்கள் உயிரின் பாதியை, அயோத்தியின் மகாலட்சுமியை, என் தாயை  - என்று இராமனின் திருவடிகளில் பணிவேன். சுக்ரீவன் எனக்கிட்ட கட்டளையை 
நிறைவேற்றுவேன்’ என்று பரபரத்தான் அனுமன்.  ஆனால் அதற்குள் அரக்கியர்கள் கூட்டமாக வர ஆரம்பித்துவிட்டதால், அனுமன் யோசிக்க நேரமின்றி, தனது உருவை இன்னும் சிறிதாக்கிக்கொண்டு, மரத்தின் கிளைநடுவே மறைந்துகொண்டு, நடக்கப்போவதைக் காணலுற்றான்.

வழக்கம்போல அவர்கள் தசமுகனாம் இராவணனின் பெருமைகளைப் பறைசாற்றினார்கள். இனியும் தாமதித்தால் அவளைத் தின்றுவிடுவோம் என்று எச்சரித்தார்கள்.  நர மாமிசம் அவர்களுக்கு மிகவும் பிடித்த ஒன்று. சீதையும் வழக்கம்போல் அவர்களைப் பொருட்படுத்தாமல் தன் முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.  ‘இன்னும் சில காலம்தான்.   பொறுங்கள்.   என்ன நடக்கப்போகிறதென்று பாருங்கள்’  என்று ஆக்ரோஷமாக எழுந்தாள்.  அவள் கைகள் வானை நோக்கி உயர்ந்தன.

இவ்வளவு வேகமாக அவள் இதுவரை பேசியதில்லை.  வியப்போடு அரக்கியரும் வானை நோக்கினார்கள்.   தலைக்கு மேல் குடை விரித்திருக்கும் சிம்சுபா மரத்தின் உச்சிக்கிளையில் ஏதோ ஒரு விலங்கு - இலங்காபுரியில் அதுவரை இல்லாத ஒரு விலங்கு - சிறிய உருவத்தில் அமர்ந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி யடைந்தவர்களாய், சக்ரவர்த்தியிடம் தகவல் கூறுவதற்கு ஓடிப்போனார்கள்.

அவ்வளவுதான்,  கீழே குதித்தான் அனுமன்.  குதிக்கும்போழுதே இராமகாதையை பாடிக்கொண்டே குதித்தான்.  பொன்மானை அனுப்பி வஞ்சனையால் இந்தப் பெண்மானைக் கவர்ந்து வந்தவன் இராவணன் என்றான்.  நீங்கள் வழியெல்லாம் வீசியெறிந்த நகைகளை ஜடாயு கொண்டுவந்து காட்டியதில் இராமபிரான் நடந்ததைத் தெரிந்து கொண்டார்.   உங்களை மீட்டுவர என்னை அனுப்பினார்’ என்றான் அனுமன்.  ‘இப்போதே கிளம்புங்கள்’ என்று விஸ்வரூபம் காட்டினான்.

சீதை சிரித்தாள்.  ‘அனுமா! நீ சொன்ன அடையாளங்களால் நீ இராமதூதனே என்று உணர்கிறேன். உனக்கு நல்வரவு கூறுகிறேன். ஆனால் நான் வரமாட்டேன். எந்த ஒரு மானிடக் கணவனும் தன் மனைவியை இவ்வாறு மறந்துபோய் விடுவானா?  இவ்வளவு நாள் பொறுப்பானா? என்ன குறை கண்டார் இராமன் என்னிடத்தில்? இராவணன் என்னும் பாழும் நெருப்பின் நடுவே இன்னும் சாம்பலாகாமல் இருக்கிறேன் என்றால் என் கற்பின் திறமே என்னைக் காப்பதாகப் பொருள். என் மீது அன்பில்லாத கணவனிடம் நான் ஏன் வரவேண்டும்? மாட்டேன் என்று கூறு.

என்னைக் கைவிட்டுவிட்ட அவர்பால் எனக்கு அனுதாபமேற்பட வழியில்லை.  அவரை நான் மன்னிக்க மாட்டேன்.  போய்விடு இங்கிருந்து’ என்றாள் சீதை. அவள் குரலில் உறுதி இருந்தது.

சாட்சாத் இராமனே வந்து நேரில் நின்றிருந்தாலும் அவள் அப்படித்தான் பேசியிருப்பாள் என்று தோன்றியது.

அனுமன் திகைத்தான். அவனுக்குப் பெண்மனம் எப்படியிருக்கும்  என்று தெரியாதே! திக்கற்றவளாய், கடல்கடந்த தீவில் சிறைவைக்கப்பட்ட மனைவி, தன் கணவன்மீது பெருங்கோபம் கொண்டிருப்பது நியாயமே என்று தோன்றியது. சிறிது நேரம் மெளனமாக இருந்தான்.

பிறகு, சீதையைப் பிரிந்தபின் இராமனின் வாழ்வில நடந்ததை எல்லாம் ஒவ்வொன்றாக எடுத்துரைத்தான். சுக்ரீவனோடு சிநேகம் கொண்டு, வாலி வதம் செய்ததைக் கூறினான். ‘ஆயிரக்கணக்கான வானர வீரர்களைத் திசையெங்கும் அனுப்பிச் சீதையைத் தேடும் பணியில் ஈடுபடுத்தினார் இராமன். தீர்க்கதரிசனம் தெரிந்த சம்பாதி என்ற கழுகின் வார்த்தையால், சீதை இலங்கைத்தீவில் இருப்பது தெரிந்து, என்னை அனுப்பினார். நூறு யோசனை தூரமுள்ள கடலைத்தாண்டி நான் வந்திருக்கிறேன். இராமபிரான் மீது தாங்கள் இனியும் கோபம் கொள்வது சரியில்லை தாயே’ என்றான் அனுமன்.

பிறகு தான் கொண்டுவந்த விலை மதிக்கமுடியாத கணையாழியைச்  சீதையிடம் பணிவோடு கொடுத்தான்.  அவ்வளவுதான்.  சீதை பதற்றத்தோடு கணையாழியைப் பெற்றாள்.  கண்கள் பொலபொலவென்று கண்ணீர் உகுத்தன.

எந்த ஒருவனுக்காகப் பத்து மாதங்களாகத் தவம் கிடந்தாளோ அவனே நேரில் வந்து நின்றதுபோல் உணர்ந்தாள். சித்திரத்தின் அலர்ந்த செந்தாமரைபோன்ற முகத்தழகனை, தோள்கண்டார் தோளே கண்டார் என்று போற்றிய தோளழகனை, கைவண்ணம் ஓரிடமும் கால்வண்ணம் வேறிடமும் காட்டிய காலழகனை, மரவுரி தரித்துக் கானகத்துக் கனியும் கீரையும் அருந்தும் வாயழகனை, கணையாழி வடிவில் தரிசித்து நின்றாள் சீதை. இவரன்றோ என் உயிர்! இவரையா நான் கோபித்தேன்! இல்லவே இல்லை.  இதோ வந்திருக்கும் இராமதூதனைப் பார்த்தாலே தெரிகிறது, இன்னும் சில நாட்களில் எனக்கு விடுதலை கிடைத்துவிடும். ‘இராமா, 
உங்கள் மீது எனக்குக் கோபமில்லை.  இன்றோடு உங்களை  மன்னித்துவிட்டேன்.   இனியும் தாமதம் வேண்டாம். உடனே வாருங்கள். உங்கள் தோள்வலிமையைக் காட்டி இராவணனை வதம்செய்து என்னை மீட்டுச் செல்வதே உங்களுக்குப் பெருமை.  எனவே அனுமனின் தோளில் அமர்ந்து கள்ளத்தனமாக இலங்கையைவிட்டு வெளியேறமாட்டேன். அது உங்களுக்குக் களங்கமன்றோ!’

சீதையின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டான் அனுமன்.  ‘தாயே, நீங்கள் சொல்வதே ராஜநீதி.  அயோத்தி அரசன்,  இலங்கை அரசனைப் போரில் வென்று உங்களை மீட்பதே சரியாகும்.  உடனே சென்று அதற்கு ஆவன செய்வேன். தாயே, உங்களை நான் கண்டதை இராமபிரான் நம்பவேண்டுமல்லவா?  அவர் கணையாழி கொடுத்தார். நீங்கள் என்ன தருவீர்கள்?’ என்று வினயமாகக் கேட்டான் அனுமன்.

‘என்னிடம் என்ன உள்ளது அனுமா! எல்லா நகைகளையும் வீசியெறிந்துவிட்டேனே!  இதோ இந்த
ச் சூடாமணி ஒன்றுதான் மீதம் இருக்கிறது. இதைக் கொண்டுபோ.  அரச மரபுப்படி இதை எனது தந்தை ஜனகர் கொடுக்க, என் மாமனாரான தசரதச் சக்ரவர்த்தி என் தலயில் சூட்டியதை இராமபிரான் அறிவார்.  எனவே இதைக் காட்டு. எல்லாம் நலமாக முடியும். சென்றுவா’  என்று ஆசீர்வத்தித்து அனுப்பினாள் சீதை.

பத்து மாதங்களில் இன்றுதான் அவள் நிம்மதியாக உறங்கப்போகிறாள்.

இராம லட்சுமணர்களையும், ஜானகிதேவியையும், ருத்ரன், யமன், இந்திரன், வாயு, சந்திரன், சூரியன், மருத்துக்கள் முதலான தேவதைகளையும் மானசீகமாக வணங்கி அங்கிருந்து புறப்பட்டான் அனுமன்.

“நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய,

தேவ்யை (ஸ்)ச தஸ்யை ஜனகாத்மஜாயை.

நமோஸ்து ருத்ரேந்திர யமா நிலேப்யோ,

நமோஸ்து சந்த்ரார்க்க மருத் கணேப்ய:”(நிறைந்தது)
தமிழ்மணம் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

66 comments:

துரை செல்வராஜூ said...

ஆகா.. அருமை என்று ஒற்றைச் சொல்லும் போதுமோ!...

கண்டேன் கற்பினுக்கு அணியை!..

நெல்லைத் தமிழன் said...

தான்யமாலி- மூன்று பாகங்களையும் சேர்த்துப் படிக்கவேண்டும். ஆனால் "சீதை ராமனை மன்னித்தாள்," என்று முடியவில்லை. அதுதான் குறை. த ம +1

அப்பாதுரை said...

தொடக்கத்துக்கும் முடிவுக்கும் தொடர்பே இல்லையே?

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
தம +1

KILLERGEE Devakottai said...

நடையை ரசித்து படித்தேன் நண்பரே

கோமதி அரசு said...

நல்ல படியாக நிறைவு பெற்றது.
"சீதை ராமனை மன்னித்தாள்" என்று இல்லாமல்
"இன்றோடு உங்களை மன்னித்துவிட்டேன்". என்று சொல்லி இருப்பதை நெல்லைத் தழிழன் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.

kg gouthaman said...

மூன்றாம் பகுதியில் தலைப்பில் மட்டும் இருக்கின்ற தான்யமாலினி கீழே இறங்கி வரவில்லை!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

தங்களின் வருணனையும், நிகழ்வினை அமைத்துச் செல்லும் பாங்கும் மிகவும் அருமை. நன்றி.

ராஜி said...

சரளமான எழுத்து நடை

நெல்லைத் தமிழன் said...

படித்தேன் சார். சுந்தரகாண்டத்தை நிறைவு செய்திருக்கிறீர்கள். உங்கள் பாணியில் எழுதியிருக்கிறீர்கள். நன்றாக இருந்தன. பாராட்டுகள்.

ஆனால், 'சீதை ராமனை மன்னித்தாள்' என்பது கடைசி வரியாக இருக்கவேண்டும் என்பதுதான். அதில் கதை நிறைவடையவில்லை.

சீதை நினைப்பதாகச் சொல்லியிருப்பதெல்லாம் (நெற்றிக்குங்குமம், காக வடிவில் வந்த அரக்கன், மாயமான்), அனுமன் தான் ராம தூதன் என்பதை நிரூபிப்பதற்காகச் சொன்னதாக அல்லவோ நான் படித்திருக்கிறேன்.

எப்போதும்போல் த ம +1

Thulasidharan V Thillaiakathu said...

துளசி: நடை அற்புதம் சார்! சரளமான அழகிய தமிழ் நடை. முடிவும் அப்படியே!!

கீதா: துளசியின் கருத்துடன்....ஆனால்... தான்யமாலினியை இறுதியில் காணவில்லையே சார்! என்ன ஆனாள்??!! அவளது தந்திரங்கள் பலிக்கவில்லை என்பதை இடையிலேனும் சொல்லியிருக்கலாமோ? தனது தந்திரங்கள் பலிக்கவில்லையே! மன்னன் ராவணனுக்கு என்ன பதில் சொல்லுவது? தன்னால் இயலும் என்ற நம்பிக்கையோடு தன்னிடம் தரப்பட்டதைச் செய்ய முடியவில்லையே என்பதை அறிந்து ஐயோ மன்னன் என்ன செய்வான் என்று தான்யமாலினி தவித்ததாகச் சொல்லியிருக்கலாமோ??!!! சார்...அல்லது நீளம் கருத்தி வெட்டி விட்டீர்களோ...ஏனென்றால் நான் இது போல நீளம் கருத்தி சில சமயம் முக்கியமான பகுதியை வெட்டியிருக்கிறேன்....அதனால்தான் இந்தக் கேள்வி...தவறாக எடுத்துக் கொள்ளாதீங்க சார்..

G.M Balasubramaniam said...

எப்பவுமே ஒரு contrived finish ஆக இருந்தால் இப்படித்தான் சொல்ல முடியும் நான் ராமாயண சம்பவங்களையே தொகுத்து சீதை ராமனை மன்னித்து விட்டாள் என்று எழுதி இருந்தேன் ஆனால் அதுகதைபோல் இல்லாமல் கட்டுரையாக இருந்ததுஎன்று குறை தெரிவிக்கப்பட்டது உங்கள் எழுத்தும் நடையும் நன்றாக இருந்தது குற்றம் காணவே சிலர் இருப்பார்கள் அது ஒருபொருட்டல்ல சார்

Thulasidharan V Thillaiakathu said...

சார் நீங்கள் மிக அருமையாக எழுதக் கூடியவர் என்பதால் இந்தக் கருத்து. முடிவில் அந்த ஸ்லோகமும் இல்லாதிருந்திருந்தால் ஒரு உபன்யாச வாசனை தோன்றாமல் இருந்திருக்குமோ சார்..? அது போல...இப்படியான பெண்ணிற்குக் கணவன் இன்னும்வ் வரவில்லையே ஒரு வேளை சேடிப் பெண்கள் சொன்னது போலத்தானோ என்று கலங்குவது யதார்த்த மானுட பெண்ணின் குணம் அதாவது ஒரு இன் செக்யூர்ட் ஃபீலிங்க் வரும் என்பது பொருத்தமாக அமைந்திருந்தது..என்றாலும்...எந்தத் தந்திரங்கள் சீதையைன் மனதைக் கலைத்தாலும், திரிசடையின் பேச்சு மற்றும் அனுமனின் வரவு அவளை மேலும் சிந்தக்க வைத்து எப்படியோ மனது சமாதானமடைந்து சீதை ராமனை மன்னித்தாள் என்று முடித்திருந்திருக்கலாமோ சார்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நான் பெரிய எழுத்தாளர் எல்லாம் இல்லை. ஒரு சாதாரண வாசகர். நீங்கள் மிகச் சிறந்த எழுத்தாளர். கதையை வாசித்த போது தோன்றியதைத்தான் இங்கு சொல்லியுள்ளேன் சார் தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.சார்..

கீதா

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

சாதாரணமான மொழியில் கதை நன்றாக அமைந்துள்ளது... கதையாசிரியருக்கு எனது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

வித்தியாசமான கோணத்தில் தொடங்கி நல்லதொரு தமிழ் நடையில் மிக அழகாக எழுதியமைக்குப் பாராட்டுகள் சார்! வாழ்த்துகளும்.

கீதா

asha bhosle athira said...

///நெல்லைத் தமிழன் said...
. ஆனால் "சீதை ராமனை மன்னித்தாள்," என்று முடியவில்லை. அதுதான் குறை///

அதேதான்ன்.. அதேதான்ன்ன்ன்.. விட்டிடாதீங்கோ நெல்லைத்தமிழன்:).. உங்கள் இந்தக் கிளவி பார்த்து.. சே..சே... காலையிலேயே டங்கு ஸ்லிப் ஆகுதே.. இது நல்லதுக்கில்ல.. இருப்பினும் அதிராவோ கொக்கோ கேய்வி கேட்பேன்ன்:)..

உங்கள் இந்தக் கேய்வி பார்த்து ஸ்ரீராம் ஓடிப்போய் மற்ற மேசைக்குக் கீழ ஒளிச்சிட்டார்ர்:).. ஏனெனில் ஏற்கனவே ஒரு மேசைக்குக் கீழ கெள அண்ணன் இருக்கிறார் எல்லோ:)..

அது ... சீதை ராமனை மன்னிச்சுட்டாஆஅ:) என நீல எழுத்தில முடிச்சுப்போட்டும்.. கதாசிரியருக்கு ஆர்வக்கோளாறில கொஞ்சம் இன்னும் அதிகம் சொல்லிட்டார்ர்.. முடிச்ச வரியுடனேயெ கதையை நிறுத்தியிருக்கலாம்...

இருப்பினும் கதை படிக்கும் சுவாரஷ்யம் முடிவு வரியை மறக்கப்பண்ணி.. மெய் மறக்க வச்சுடுத்தூஊஊ.. வாழ்த்துக்கள் கதாசிரியருக்கு.

asha bhosle athira said...

////kg gouthaman said...
மூன்றாம் பகுதியில் தலைப்பில் மட்டும் இருக்கின்ற தான்யமாலினி கீழே இறங்கி வரவில்லை!///

ஹா ஹா ஹா.. இங்கின எங்கயுமே எதுக்குமே பின்னூட்டம் போடாத கெள அண்ணன்.. இங்கு தான்யமாலினிக்கு என்னாச்சோ என ஆசையில் ஓடோடி வந்த அவரை:).. இப்பூடி ஏமாத்திப்போட்டீங்களே பழைய நியூஜெர்ஸி ஐயா?:).. இது நிஜாயமா?:).. ஏனெனில் இங்கு நீங்க கதை சொன்ன விதம் பார்த்து சீதையை விட்டுப்போட்டுப் பலபேர் டக்குப்பக்கென ”தான்யா”[செல்லமாச் சொன்னேன்].. ஃபான்ஸ் ஆகிட்டினம்ம்ம்ம்:). ஹா ஹா ஹா.

asha bhosle athira said...

///கோமதி அரசு said...
நல்ல படியாக நிறைவு பெற்றது.
"சீதை ராமனை மன்னித்தாள்" என்று இல்லாமல்
"இன்றோடு உங்களை மன்னித்துவிட்டேன்". என்று சொல்லி இருப்பதை நெல்லைத் தழிழன் சொல்கிறார் என்று நினைக்கிறேன்.//

ஹையோ கோமதி அக்கா.. உங்களுக்கு விசயமே புரியவில்லை...:) எல்லோரும் தான்யா:) ஃபான் ஆகிட்டினம் இங்கின.. ஆனா கதாசிரியர் தான்யா பற்றிச் சொல்லாமல் இம்முறை ஏமாத்திப்போட்டாரெல்லோ..:) அந்தக் கோபத்தில அப்பூடி இப்பூடி சொல்லி.. மறைமுகமா அதனை வெளிப்படுத்தீனம்:)..

இன்னும் யாருக்காவது ஏதும் டவுட்ஸ் இருப்பின் என்னைக் கேயுங்கோ:) மீ கிளியர் பண்ணுவன்.. உங்கட டவுட்ஸ் ஐ:).

விஜய் said...

அருமையான பகிர்வு.
தமிழ் செய்திகள்

Asokan Kuppusamy said...

சரித்திர பதிவினை சரியான நடையில் தந்தமைக்கு பாராட்டுகள்

Rajeevan Ramalingam said...

டியர் செல்லப்பா ஐயா... இது நியாயமா? எங்கள் தங்கத் தலைவி மாலினி எங்கே..? அவவுக்கு என்ன ஆச்சு? ஏன் ஒரு வார்த்தைகூட அவவைப் பற்றி எழுதவில்லை. அவ அழகென்ன? இடையென்ன? நடையென்ன? என்றெல்லாம் வர்ணித்து ஆசை காட்டிவிட்டு, கடைசியில் இப்படி அம்போ என்று விட்டுவிட்டீர்களே செல்லப்பா ஐயா? :) :)

'தவிக்கிறாள் தான்யமாலினி'

ஊஹூம்ம்ம் தவிக்கிறது அவ இல்ல - நாங்கள் :)

Thulasidharan V Thillaiakathu said...

ஹையோ கோமதி அக்கா.. உங்களுக்கு விசயமே புரியவில்லை...:) எல்லோரும் தான்யா:) ஃபான் ஆகிட்டினம் இங்கின.. ஆனா கதாசிரியர் தான்யா பற்றிச் சொல்லாமல் இம்முறை ஏமாத்திப்போட்டாரெல்லோ..:) அந்தக் கோபத்தில அப்பூடி இப்பூடி சொல்லி.. மறைமுகமா அதனை வெளிப்படுத்தீனம்:)..// ஹஹஹஹ் அதிரா தான்யா அறிவுடன் அழகாக இருப்பாள் போலும்...செல்லப்பா சார் அவளைப் பற்றிச் சொல்லியதும் எனக்கு பொன்னியின் செல்வன் நாவலுக்கு கோவி வரைந்திருந்த நந்தினியின் முகம் நினைவுக்கு வந்தது!!! ஓ நீங்கள் தான்யமாலினி ஃபேனா...பார்த்து ஃபேன் க்ளப் எதுவும் தொடங்கிடவில்லைதானே!!ஹிஹிஹி

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அச்சச்சோ இங்க பாருங்க அதிரா....ராஜீவன் தான்யமாலினிக்கு என்ன உருக்கம் உருகியிருக்கார்னு....அப்போ அவர் முந்திக் கொண்டார் ஃபேன் க்ளப் தொடங்கிட்டார் போல....ஹஹஹ பொன்னியின் செல்வனின் நந்தினி போல இங்கு தான்யமாலினி இடம் பிடித்துவிட்டாள் போலும்!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ராஜீவ் உங்கள் உருக்கத்தை செல்லப்பா சார் பார்ப்பார் என்று நினைக்கிறேன்..வந்து தான்யாவின் ஃபேன்ஸ் க்ளபிற்காக இன்னும் கொஞ்சம் வர்ணிக்கலாம் இல்லை என்றால் தான்யமாலினி பற்றி அடுத்து நாவலே எழுதிவிடுவார் என்று நினைக்கிறேன்!!! ஹஹஹ

கீதா

Angelin said...

எனக்கு எங்க மங்கயற்கரசி டீச்சர் தமிழ் வகுப்பில் மீண்டும் சென்று அமர்ந்தது போன்ற உணர்வு !! அவர் தமிழ் வகுப்பில் இப்படித்தான் ஏற்ற இறக்கத்தோடு மகாபாரத இராமாயண கதைகளை வாசித்துக்காட்டுவார் ..

மிகவும் ரசித்தேன் சார்

Angelin said...

@ Ashaa bosle athiraav //இன்னும் யாருக்காவது ஏதும் டவுட்ஸ் இருப்பின் என்னைக் கேயுங்கோ:) மீ கிளியர் பண்ணுவன்.. உங்கட டவுட்ஸ் ஐ:)./

சீதை வழியெல்லாம் வீசி வந்த நகைகள் எடை எவ்வளவு சுமார் எத்தனை நகைகள் இருக்கும் அதன் அளவுகள் என்ன அனைத்தும் முழுத்தங்கமா அதில் நவரத்தினங்கள் வைர மணிகள் பொறிக்கப்பட்டிருந்ததா ???

கேள்விகள் தொடரும்

Angelin said...

//ஆனால் என் நீண்ட கூந்தல் இருக்கிறதே! இந்த சிம்சுபா மரத்தின் கிளைகளில் என் கூந்தலால் சுருக்கிட்டு உயிரை நீப்பேன்/

சிம்சுபா மரம் என்றால் எப்படி இருக்கும் ?

Thulasidharan V Thillaiakathu said...

ஏஞ்சலின் அஹ்ஹஹஹஹ் உங்கள் கேள்விக்கு அதிரா டாண்ணு வந்து சொல்லிடுவாங்க....சைக்கிள் கேப்ல தன்னோட வைர நெக்லசையும் செக்ரட்டரி பத்தியும் சொல்லுவாங்க பாருங்க..ஹஹஹ

கீதா.

Angelin said...

இன்னும் நிறையகேள்விகள் இருக்கு ஆனால் ஒரு அருமையான கதையின் தடத்தை மாற்றிவிடக்கூடாது என்ற நல்லெண்ணத்தில் தனியே பூஸாரிடம் கேட்டுக்கொள்கிறேன் :)))

Thulasidharan V Thillaiakathu said...

இன்னும் யாருக்காவது ஏதும் டவுட்ஸ் இருப்பின் என்னைக் கேயுங்கோ:) மீ கிளியர் பண்ணுவன்.. உங்கட டவுட்ஸ் ஐ:).//
ஹை அப்ப அதிரா தான்யமாலினி ஃபேன்ஸ் க்ளப் ஆரம்பிச்சு எழுத்தாளர் செல்லப்பா சாருக்கு செக்ரட்டரி ஆகிட்டீங்களா...ஹிஹிஹி...ஏஞ்சல் நோட் திஸ்!!!

Angelin said...

@Geethaa இது இராயப்பா சாரின் பதிவு என்பதால் பூனை தப்பிச்சி :) இல்லனா ஓடஓட விரட்டிருப்பேன்

காமாட்சி said...

என்ன ஒரு அழகான நடையில் வர்ணிப்புகள். மிகவும் எதிர்பார்த்த ஒரு கதை. தான்ய மாலினி இந்த பேரழகிியின் முன்னால் தன் தலைவனை இழந்து புலம்பவே போகிறோம் என்பதை உணர்ந்து, தானும் மரியப் போகிறோம் என்ற யோசனையிலேே உன்மத்தமாகிப் போயிருப்பாள்.
ஒரு முடிவு எடுத்த பிறகுதானே மன்னிக்க முடியும். அந்த முடிவை ஹனுமனைப் பார்த்த பிறகே கணையாழியைக் கண்ட பிறகேஅதைச் செய்ய முடிந்தது பிராட்டிக்கு. இப்படி என் மனம் உங்கள் இதுஹாஸத்தை அர்த்தம் செய்து கொள்கிறது. உண்மையான கதை. வர்ணனைகள் அப்பப்பா.. உயர்ந்த கதை. உணர்ந்து ரஸிக்க ஒரு இதிஹாஸக் கதை. ரஸித்தேன். அன்புடன்

Geetha Sambasivam said...

கதை நல்ல ரசனையுடன் எழுதப் பட்டிருந்தாலும் சீதையின் மனதை மாற்றப் புறப்பட்ட தான்யமாலினி என்னவானாள்? அவள் ஏன் சீதையைச் சந்திக்கவே இல்லை? என்ன காரணம்? அவள் தோழியை அனுப்பி இருந்தாள் அல்லவா? அந்தத் தோழி கூட சீதையைச் சந்திக்கவில்லையா? ம்ஹ்ஹும்! கதையில் தான்யமாலினியின் செயல்களைப் பற்றிய சின்னக் குறிப்புக் கூட இல்லாமல் முடித்துவிட்டது சரியாய்த் தெரியலை. இந்தப் பகுதியை மட்டும் போட்டிருந்தாலே போதுமே! தான்யமாலினி பற்றிச் சொல்லி இருக்க வேண்டாமோ? :(

asha bhosle athira said...

அச்சச்சோ அச்சச்சோஒ.. இப்போதானே புரியுது.. எங்கட நாட்டில ஏன் சூசைட்டுக்கள் எல்லாம் அதிகமாகுது என:).. எல்லாத்துக்கும் காரணம்.. இப்பூடிக் கதாசிரியர்கள்தேன்ன்ன்.. தான்யமாலினி எனும் கரெக்ட்டரை உள்ளே கொண்டுவந்து... விளக்கோ விளக்கெண்டு.. அவரை வர்ணிச்சு.. இங்குள்ள.. 12 வயது:) வாலிபர்களை எல்லாம் ஃபான்ஸ் ஆக்கிப்போட்டு:) அம்போ என கை விட்டால்ல்ல் சூசைட் நடக்காமல் என்ன நடக்கும்....:)

ஆவ்வ்வ்வ்வ் விடமாட்டேன்ன் எங்கள் புளொக்கில் பல சூசைட்டுக்கள் நடந்து.. சகோ ஸ்ரீராம் கேப்பங் களி சாப்பிட விடவே மாட்டேன்ன்.. இதோ பொயிங்கிட்டேன்ன்ன்.. ஏதோ காத்து வாக்கில கேட்டுதே.. இங்கின ஆரோ போலீஸ் ல இருக்காங்களாமே....

ஆஆஆஆஆஆஅ ஞாபகம் வந்திடுச்சூஊஊஊஊஊஊஊ... கில்லர் ஜீ.. (ஹையோ ஒரு அந்தர அவசரத்துக்குக் கூட அவரின் பெயரை டப்பா எழுதிட முடியேல்லை:) கோபம் வந்திடுதே..:)) ஆங்ங்ங் கில்லர்ஜி... அருவா மீசையைக் கழட்டி வச்சிட்டு கொடுவாப்பாரையை எடுத்துண்டு ஓடியாங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்.. இங்கின நடக்க இருக்கும் சூஊஊஊஊஉ சைட்டைத் தடுத்து நிறுத்தி.. ஸ்ரீராமைக் காப்பாத்துங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்:)..

asha bhosle athira said...

கீதா...///வாங்க எங்க ஊர் கீதா ரங்கன் (அப்படின்னு சொல்லலாம்னு பார்த்தா, இலங்கைங்கிறீங்க, பாலக்காடு/கேரளாங்கிறீங்க). ///

ஹா ஹா ஹா இது நான் சொல்லல்லே.. விழுவதை எல்லாம் பொறுக்குவதுதானே என் வேலை:) பொறுக்கிட்டு வந்துட்டேன்ன்ன்...:)

கீதா.. கதை எழுத எழுத்தாளருக்கு எவ்ளோ சுகந்திரம் இருக்கோ.. அதேபோல பின்னூட்டம் போடும் சுகந்திரமும்.. நம்மைப் போன்றோருக்கு உண்டு[ இல்லைன்னாலும்.. இருக்கு என தேம்ஸ்ல அடிச்சு சத்தியம் பண்ணி வாதாடோணும்].. அப்போ எழுதுறதையும் எழுதிப்போட்டு எதுக்குப் பயப்புடுறீங்க... வாங்க என் கையை புடிங்க:).. ஆஆஅ.. இங்கின கொஞ்சூண்டு இடமிருக்கு.. மேசைக்கு கீழ அந்தப் பக்கம்.. உட்காருங்கோ.. இங்கின இருந்தே புறுணம்:) பார்ப்போம்ம்:)...

சத்து இருங்கோ வாறென்ன்.. நம்மட அஞ்சுக்கு வராத டவுட்டெல்லாம் வருதேஏஏஏஏஏ:)..

asha bhosle athira said...

///Angelin said...
@ Ashaa bosle athiraav //

சீதை வழியெல்லாம் வீசி வந்த நகைகள் எடை எவ்வளவு சுமார் எத்தனை நகைகள் இருக்கும் அதன் அளவுகள் என்ன அனைத்தும் முழுத்தங்கமா அதில் நவரத்தினங்கள் வைர மணிகள் பொறிக்கப்பட்டிருந்ததா ???/////


அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் தான்யாவை பற்றிய டவுட்டு தானே வரும் என நினைச்சேனே:).. இப்பூடி ஒரு டவுட்டை என் வாழ்க்கையில் மீ எதிர்பார்க்கவே இல்லயே:).. எப்பவும் என் லொக்கரிலயே கண்:).. ஏதோ சீதை விழுத்திய வைர நெக்லெஸ் ஐத்தான் நான் போலீஸ் பண்ணி[ஹையோ இது வேற போலீஸ்].. லொக்கரில் வச்சிருக்கிறேனோ என ஒரு டவுட்டு இந்த ஃபிஸ்க்கு கர்ர்ர்ர்ர்:))...

இப்போதான் மீக்கு சுவீட் 16.. இதில போய் எங்கின நகையின் எடையை கர்:))....

இருப்பினும் கொஞ்சம் பொறுங்கோ.. இந்த ஃபிஸ்ட வாயை அடக்கிடுறேன்ன்ன்.. பூஸோ கொக்கோ:)..

அஞ்சூஊஊஊஊஊஊஉ இந்த தான்யமாலினி ஆரூஊஊஊஊஊஊ?:)) ஹா ஹா ஹா:)... அலர்ஜி நித்திரையாகிட்டேன் எனச் சொல்லி இனி நாளை இண்டைக்குத்தான் இப்பக்கம் வருவா பாருங்கோ:)..

Bhanumathy Venkateswaran said...

//இந்தப் பகுதியை மட்டும் போட்டிருந்தாலே போதுமே! தான்யமாலினி பற்றிச் சொல்லி இருக்க வேண்டாமோ// எனக்கும் கூட இப்படித்தான் தோன்றியது. ஆவலை தூண்டி விட்டு அவசரமாக முடித்து விட்டது போல இருக்கிறது. இன்னும் நிறைய பேர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள் என்று ஶ்ரீராம் விரட்டி விட்டாரா? தான்யமாலினியின் தவிப்பை தனி பதிவாக எழுதுங்கள்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய,
தேவ்யை (ஸ்)ச தஸ்யை ஜனகாத்மஜாயை.
நமோஸ்து ருத்ரேந்திர யமா நிலேப்யோ,
நமோஸ்து சந்த்ரார்க்க மருத் கணேப்ய:”//

நிறைவானதோர் ஸ்லோகத்துடன் நிறைவுப்பகுதி வெகு அருமை.

வழக்கம்போல எழுத்து நடை மிகவும் ஜோர் ஜோர்.

தலைப்பின் நாயாகியான ’தானிய மாலினி’யை இந்தப்பகுதியில் எங்கள் கண்களில் துளியும் காட்டாதது மிகப்பெரிய கொடுமையாகும். எனக்கு ஏற்பட்ட மிகப்பெரிய ஏமாற்றமுமாகும்.

எனினும் மனம் நிறைந்த பாராட்டுகள். அன்பான இனிய நல்வாழ்த்துகள்.

கோமதி அரசு said...

//ஹையோ கோமதி அக்கா.. உங்களுக்கு விசயமே புரியவில்லை...:) எல்லோரும் தான்யா:) ஃபான் ஆகிட்டினம் இங்கின.. ஆனா கதாசிரியர் தான்யா பற்றிச் சொல்லாமல் இம்முறை ஏமாத்திப்போட்டாரெல்லோ..:) அந்தக் கோபத்தில அப்பூடி இப்பூடி சொல்லி . மறைமுகமா அதனை வெளிப்படுத்தீனம்:)..

அதிரா , தான்யமாலினி அந்தளவு எல்லோர் மனதிலும் கதை தலைப்பிலும் இடம் பெற்று விட்டாரே!

தான்யமாலினியை யாரும் மறக்க முடியாதபடி அவரைப்பற்றி குறிப்பிட்ட ஆசிரியர் என்ன காரணம் என்று தெரியவில்லை அவரை கடைசியில்
குறிப்பிடவில்லை. கதை தொடர்ந்தால் தான்யமாலினி வாருவார் போலும்.
சீதை ராமனை மன்னித்து விட்டதால் முடிந்து விட்டது கதை.

ஸ்ரீராம். said...


//இன்னும் நிறைய பேர்கள் வரிசையில் காத்திருக்கிறார்கள் என்று ஶ்ரீராம் விரட்டி விட்டாரா? //

இந்தக் குற்றச்சாட்டை நான் அன்போடு மறுக்கிறேன்.

ஸ்ரீராம். said...

தான்யமாலினி ரசிகர் மன்றத்தின் தலைவர் யார்? கொ ப செ யார்? அந்தப் பெயர்தான் எல்லோரையும் கவர்ந்திருக்கிறது.

Angelin said...

@miyaav garr //அஞ்சூஊஊஊஊஊஊஉ இந்த தான்யமாலினி ஆரூஊஊஊஊஊஊ?:)) ஹா ஹா ஹா:)... அலர்ஜி நித்திரையாகிட்டேன் எனச் சொல்லி இனி நாளை இண்டைக்குத்தான் இப்பக்கம் வருவா பாருங்கோ:)..//

Grrrrrrr :)ஹாலிடேஸ் துவங்கும் வரைக்கும் நோ நித்திரை :)

Angelin said...

மாலினினு முடியும் பெயர்கள் எல்லாம் கவர்ந்திழுப்பவை தானே :)) ஹாஹா ..அப்புறம் கொ ப செ :)) வேற யார் === தான்

Rajeevan Ramalingam said...

@Thulasidharan V Thillaiakathu...

ராஜீவன் தான்யமாலினிக்கு என்ன உருக்கம் உருகியிருக்கார்னு....அப்போ அவர் முந்திக் கொண்டார் ஃபேன் க்ளப் தொடங்கிட்டார் போல.... //

ஹாஹா ‘அகில உலக தான்யமாலினி க்ளப் - பிரான்ஸ் கிளை’ தொடங்கி பலமணி நேரமாச்சு :) :) அடுத்ததா சிலை வைக்கலாம்னு ப்ளான்....

எல்லோரும் உரத்துச் சொல்லுங்கள்.. ‘தங்கத் தலைவி தான்யமாலினி வாழ்க...’’

Rajeevan Ramalingam said...

ராஜீவ் உங்கள் உருக்கத்தை செல்லப்பா சார் பார்ப்பார் என்று நினைக்கிறேன்..வந்து தான்யாவின் ஃபேன்ஸ் க்ளபிற்காக இன்னும் கொஞ்சம் வர்ணிக்கலாம் இல்லை என்றால் தான்யமாலினி பற்றி அடுத்து நாவலே எழுதிவிடுவார் ///

எழுதணும்... எழுதணும்... கண்டிப்பா தனி நாவலே எழுதணும்..! இல்லைன்னா சாகும்வரை உண்ணாவிரதம் இருப்போம்..! யார் வந்து, எவ்வளவுதான் சுவையான சமையல் குறிப்பு போட்டாலும் மனசு மாறமாட்டோம். உண்ணாவிரதம் Confirmed...!!

Thulasidharan V Thillaiakathu said...

அட! கொய்யாலே! ராஜீவன் உங்க ஊர் ஃப்ரான்ஸ்ல தமிழ்நாடு மாதிரி சிலை எல்லாம் வைக்கலாமா?!!!! அப்பப்பா என்ன ஒரு வேகம்!!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சரி ராஜீவன் சிலை திறப்பு விழாவுக்கு மறக்காம செல்லப்பா சாரை கூப்பிட்டு திறக்க வைக்கலாம் இப்படி ஒரு கேரக்டரை இப்பத்தானே தெரிஞ்சுகிட்டோம் இல்லையா?!!! இது எப்புடி?...அப்ப எங்க எல்லாருக்கும் நீங்க டிக்கெட் போட்டுருவீங்க தானே??!!!! ஹிஹிஹி

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் பாருங்க தலைவர் ராஜீவன் அவர்தான் கிளை எல்லாம் ஆரம்பிச்சு சிலை கூட வைக்கப் போறாராம்....ஸோ கொ ப சே ஏஞ்சல் தான் தானு சொல்லியாச்சு...இப்ப பாருங்க பூஸாருக்குப் புகை வந்து தேம்ஸ்ல குதிக்க ரெடியாகிட்டிருப்பாங்க!!! ஏஞ்சல்! அவங்களுக்கு ஒரு போஸ்ட் போட்டுருங்கப்பா...ஏதாவது ஒரு பொசிஷன் கொடுத்துருவோம்...பூஸார் இல்லாத கிளையா!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எல்லோரும் உரத்துச் சொல்லுங்கள்.. ‘தங்கத் தலைவி தான்யமாலினி வாழ்க...’’// ஹஹஹஹ

ராஜீவன் சொல்ல்லிப் போற போக்கப் பார்த்தா தமிழ்நாட்டுக்கு அடுத்த முதல்வர் தான்யமாலினிதான் போல! ஆமாமாம் பாவம் இலங்கையின் பட்டத்து ராணி போஸ்ட் அப்ப கிடைக்கலைல இப்ப தமிழ்நாட்டு முதல்வர் ஸீட்டாவது கொடுத்துருவோம்...இல்லையா ராஜீவன்??!!!

கீதா

Thenammai Lakshmanan said...

arumaiyana kathai Chellappa sir. saralama irunthathu. nan matra irandu pakuthiyum padikala. thanks Sriram :)nan eluthanum . itha ellam padicha koncham thigaipa irukku. epidi elutha porennu :)

Thulasidharan V Thillaiakathu said...

கீதா...///வாங்க எங்க ஊர் கீதா ரங்கன் (அப்படின்னு சொல்லலாம்னு பார்த்தா, இலங்கைங்கிறீங்க, பாலக்காடு/கேரளாங்கிறீங்க). /// அதிரா!! திருநெல்வேலி, நாகர்கோவில், கோயம்புத்தூர் சென்னை எல்லாத்தையும் விட்டுப்புட்டீங்களே!!! அஹ்ஹ யாதும் ஊரே யாவரும் கேளிர்!!! ஹிஹிஹி...

கீதா

Rajeevan Ramalingam said...

ராஜீவன் உங்க ஊர் ஃப்ரான்ஸ்ல தமிழ்நாடு மாதிரி சிலை எல்லாம் வைக்கலாமா?!!!! //

வைக்கலாமே? இங்கு சிலைகள் இல்லாத இடமே இல்லை. காந்தி, அன்னை தெரேசா, ஷாருக்கான் என எல்லோருக்குமே இங்கு சிலைகள் உண்டு.

எங்கள் தலைவி மாலினிக்கும் வைச்சாப் போய்ச்சு :) :)

**

ராஜீவன் சொல்ல்லிப் போற போக்கப் பார்த்தா தமிழ்நாட்டுக்கு அடுத்த முதல்வர் தான்யமாலினிதான் போல! ///

ஆக்கிடுவோம்..! அம்மா, சின்னம்மா மாதிரி, இவங்களையும் ஏதாவது பட்டப் பெயர் சொல்லணும். வேணும்னா - ‘சின்னச் சின்னம்மா’ என்று அழைப்போமா..?? :) :)

**

அவங்களுக்கு ஒரு போஸ்ட் போட்டுருங்கப்பா...ஏதாவது ஒரு பொசிஷன் கொடுத்துருவோம்...பூஸார் இல்லாத கிளையா!!! //

- பொருளாளர் பதவி காலியாத்தான் இருக்கு கீதா மேடம். யார் முந்துறாங்களோ பதவி அவங்களுக்குத்தான் -

மிக்க நன்றி கீதா மேடம் :) :)

நெல்லைத் தமிழன் said...

அட ராமா... கதையை விட்டுவிட்டு எல்லோரும் தான்யமாலினிக்குப் போயிட்டீங்களே. இப்போதான் நாடி ஜோசிய நண்பர் சொன்னார்... அந்த தான்யமாலினிதான் பல பிறவிகள் எடுத்து இப்போ தமன்னாவாகப் பிறந்திருக்கிறார் என்று. சந்தேகம் இருந்தா தமன்னா கிட்ட போய் கேளுங்க.

asha bhosle athira said...

Haa haa haa karrrrrrrrrr:)

Angelin said...

@நெல்லைத்தமிழன் :)ஹாஹாஆ


Thulasidharan V Thillaiakathu said...

ஹ்ahஅஹஹ் நெல்லை நான் தான்யா புதுப்பிறவி எடுத்து இங்கு வந்திருப்பதாக ராஜீவனுக்குத் தகவல் சொல்ல இருந்தேன் இலியானா என்று சொல்ல இருந்தேன் நீங்க தமனா என்று சொல்லிவிட்டீர்கள் சரி பரவாயில்லை...தமனா இன்னும் பொருத்தமாகவே இருப்பார் ஹ்ஹஹஹ்

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ராஜீவன்! பொருளாளர் பதவி எல்லாம் எனக்கு வேண்டாம் நான் பூஸாருக்கு விட்டுக் கொடுக்கிறேன்..ஆனால் பூஸாரை நானும் ஏஞ்சலும் தான் மேனேஜ் செய்வோம்.....இந்த டீல் ஓகேவா...ஹிஹிஹி

கீதா

நெல்லைத் தமிழன் said...
This comment has been removed by the author.
Angelin said...

Garrrrr.

ராமலக்ஷ்மி said...

முதலிரண்டு பாகங்களையும் வாசித்து விட்டு வருகிறேன். அருமையான நடை. பாராட்டுகள். கதைப்போக்கில் ஓரிரு வரிகளின் தான்யமாலினியை இந்தப் பாகத்திற்கும் அழைத்து வந்திருக்கலாம்.

Bagawanjee KA said...

எல்லோரும் சொல்வதைப் பார்த்தால் எனக்கும் தான்யமாலினியை பார்க்கணும் போலிருக்கு ,படம் இருந்தால் போடுங்க :)

asha bhosle athira said...

///Bagawanjee KAJune 21, 2017 at 9:51 PM
எல்லோரும் சொல்வதைப் பார்த்தால் எனக்கும் தான்யமாலினியை பார்க்கணும் போலிருக்கு ,படம் இருந்தால் போடுங்க :)///

பகவான் ஜீ உங்கள் ஆசையை இதோ நிறைவேத்துறேன்ன்ன்ன்... பார்த்துப் பரவசமாகி ஓடிப்போய்க் கங்கையில் குதிச்சிடாதீங்கோ பீஸ்ஸ்ஸ்

http://tamil.filmibeat.com/img/2013/06/16-1371382361-gopurangal-saivathillai4-600.jpg

Chellappa Yagyaswamy said...

அன்பார்ந்த வாசகப் பெருமக்களே! உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றி! 'துன்பம் வரும்போது சுந்தரகாண்டம் படியுங்கள்' என்று பெரியவர்கள் சொன்னதை ஒருநாள் கவனத்தில் எடுத்துக்கொண்டு, கிரி டிரேடிங் வேலிடிட்ட குட்டிப் புத்தகம் ஒன்றைப் படிக்கையில், 'தான்யமாலினி' என்ற பெயர் நெஞ்சில் செருகிக்கொண்டுவிட்டது. (அவள் தான் இன்றைய தமன்னாவா என்று தெரியாது.) ஸ்ரீராம் கதை கேட்டவுடன் , அந்த தான்யமாலினியை முக்கியப்படுத்தி எழுதலாம் என்று ஆரம்பித்தேன். ஆனால் அதே சமயம் 'அஞ்சிலே ஒன்று பெற்றான்' அனுமன் வந்து அசோகவனத்தில் அமர்ந்துகொண்டு கதையையே மாற்றிவிட்டான். அவனக் கண்டு தான்யமாலினி அஞ்சினாளா என்று இராமாயணத்தில் தகவல்இல்லை. அசநி என்ற சேடிப்பெண்ணும் கற்பனைப் பாத்திரமே! கணவன் பெயரை உச்சரிப்பதையே அபச்சாரமாகக் கருதிய காலத்தில் நடந்த கதையல்லவா, கணவனை மன்னித்துவிட்டேன்-என்று கூறுவது எவ்வளவு பெரிய அபச்சாரமாக அவள் கருதியிருக்கவேண்டும்! அதற்குப் பரிகாரமாகத்தான் கடைசியில் அந்த சுலோகம்! என்ந சொல்லி என்ன பயன்! கடைசியில் அவள் அக்னியில் குளிக்கவேண்டிவந்ததை யாராலும் தடுக்கமுடியவில்லையே!

(2) (தமன்ன என்கிற) தான்யமாலினியைப் பற்றி ஒரு நாவலே எழுதலாம். கற்பநிதானே! ஆனால் அதில் இராவணன் அல்லவா கதாநாயகனாக வருவான்? பரவாயில்லையா?

(3) அமெரிக்காவில் இருந்து சென்னை வந்து இன்றோடு ஒரு மாதம் ஆகிறது. வீடு பெருக்குதல், ஒட்டடை அடித்தல், தலையணை உறைகளை மாற்றுதல், துவைத்தல், மற்றும் எழுத்தில் விளக்கமுடியாத இன்ன பிற இல்லற சேவைகள் காரணமாக ஒரு மாதம் எழுத்தில் இருந்து ஒய்வு எடுத்துக்கொண்டேன். அதனால் தான்எ ன்னுடைய வலைப்பதிவுகள் வரவில்லை. இன்றுமுதல் ஆரம்பிக்கிறேன். மறக்காமல் அங்கே வந்துவிடுங்கள். ஸ்ரீராமுக்கு நன்றிகள்! - இராய செல்லப்பா சென்னையில் இருந்து.

Geetha Sambasivam said...

சீதை தானாகத் தீக்குளித்ததால் யாரையும் குற்றம் சொல்ல முடியாது! :)))) யார் எடுத்துச் சொன்னாலும் சீதை தான் நினைச்சதைச் சாதித்திருப்பாள்!

நெல்லைத் தமிழன் said...

செல்லப்பா சார்... அடுத்த (வர்) பெண்ணை, தனக்கு உரிமையில்லாதவளை நினைக்கும் எல்லோரும் இராவணன்கள் தானே... அந்த நாவலை உடனே தொடங்கிவிடுங்கள்.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!