திங்கள், 5 ஜூன், 2017

திங்கக்கிழமை 170605 : ஸ்வீட் இடியாப்பம் /Lavariya - ஏஞ்சல் ரெஸிப்பி

ஸ்வீட் இடியாப்பம் /Lavariya 
==========================

இது இனிப்பு பிரியர்களுக்கான :)  ஸ்பெஷல்..


இதில் பூரணமாக பாசிப்பருப்பு இனிப்பு பூரணம் அல்லது  தேங்காய் வெல்லப்பூரணம்  இரண்டையுமே வைத்து செய்யலாம் ..
பல வருடங்கள் முன்பு கணவரின் நண்பர் மனைவி  எனக்கு செய்து தந்தார்கள் .அவர்கள் கொழும்பு பகுதி இலங்கையர்கள் ..
இதன் பெயர் லவரியா ..   சமையல் குறிப்பை கேட்டு வைத்து கொண்டதோடு செய்து பார்க்கவில்லை ..
பல வருடங்களுக்குப்பின் அதுவும் இரண்டு நாட்களுக்கு முன் புது இடியாப்ப அச்சு வாங்கினதும் செய்தேன் ..முதல் முறையே மிகவும் அழகாக இடியாப்பம் வந்தது :)


 எப்பவுமே  அரி பத்திரி செய்யப்போனா புட்டாகும் இல்லைனா புட்டுக்கு பிசைந்தா  அது ஓவரா குழைந்து இடியாப்பமாகவும் மாறும் இம்முறை அந்த கஷ்டம் ஏதும் கொடுக்கவில்லை நிரப்பரா கேரளா இடியாப்ப மாவு :)
மாவை பிசைந்து இடியாப்ப அச்சில் இட்டு பிழிந்து அதில் பூரணத்தை இட்டு அரை மூன் வடிவில் மூடி  ஆவியில் 5-7 நிமிடங்கள் வேகவைத்து எடுத்தால் லவரியா தயார் :)
பூரணத்துக்கான அளவுகள்  வெல்லத்தின் தன்மையை பொறுத்து மாறுபடலாம் ..நான்  பயன்படுத்தியது Natco பிராண்ட் jaggery gur ..இது இயல்பிலேயே நீர்த்தன்மையா  இருக்கும் ..அதனால் தண்ணீர் சிறிதளவு போதும் தேங்காயும் வெல்லமும்  சேர்ந்து சூடாகும்போது சீக்கிரம் இளகி விடும் . 

முதலில் பூரணத்துக்கு தேவையான பொருட்கள் 
---------------------------------------------------------------------------------------------

துருவிய தேங்காய் ---- 1 கப்
துருவிய வெல்லம்   ---- 1/2 கப்
ஏலக்காய் தோல் நீக்கி  இடித்து வைத்தது சிறிதளவு
தண்ணீர்                   ------ 1 ஸ்பூன் .


இடியாப்பம் செய்ய மாவு ,தண்ணீர் ,  உப்பு  சிறிதளவு ,இடியாப்ப அச்சு ,இடியாப்பத்தட்டுக்கள்
மற்றும் பிளாஸ்டிக் பிரீஸர் பைகள் ..வாழை இலை கிடைத்தால் அதிலும் இட்டு மடிக்கலாம் .அடிகனமான வாணலியை அடுப்பில் வைத்து அதில் ஒரு சிறு கரண்டி தண்ணீர் ஊற்றி கொதிக்கும்போது 


அதில் துருவிய வெல்லத்தை சேர்க்கவும் அதில் பொடித்த ஏலக்காய் சேர்க்கவும் , வெல்லம் சூட்டுக்கு இளகி  

கரைந்து வரும்போது துருவிய தேங்காயை சேர்த்து கிளறவும் ,கைய எடுக்காமல் கிளறவும் அடிபிடிக்காமல் இருக்கணும் .

.ஐந்து நிமிடத்தில் படத்தில் உள்ளதுபோல உருட்டும்  பதத்துக்கு வந்ததும் அடுப்பு ஸ்விட்சை  அணைத்து  :)  பூரணத்தை சிறு கிண்ணம் ஒன்றில் எடுத்து வைக்கவும் .இப்போ பூரணம் தயார் ..அடுத்து இடியாப்பத்துக்கு நீர் உப்பு சேர்த்து  மாவு பிசைந்து இடியாப்ப அச்சிலிட்டு சற்று பெரிய  இடியாப்பமாக பிளாஸ்டிக் கவரில்  பிழிந்து ,நடுவில் ஒரு தேக்கரண்டி அளவு பூரணத்தை இட்டு அப்படியே அந்த பிளாஸ்டிக் கவரின் ஒரு முனையை  மடித்து  ஒரு பக்கம் மூடவும் .ஒரு செகண்ட் கழித்து பிளாஸ்டிக் கவரை பழையபடி திறந்தால் இடியாப்பம்  சோமாஸ் வடிவத்துக்கு வந்திருக்கும் ..இப்போ இடியாப்பத்தை இடியாப்ப தட்டுகளில் வைத்து அடுக்கி ஆவியில் 5-7 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும் ..ருசியான இனிப்பு பூரண இடியாப்பம் தயார். இங்கே  எங்களுக்கு சின்ன குட்டி Freezer bags இங்கு கிடைக்கும் அதை பயன்படுத்தி சோமாஸ் வடிவம் வர வைச்சேன் .

இதே போல காரத்திலும் செய்து பார்க்கணும் ..என்ன பூரணம் நல்லா இருக்கும்  கார இடியாப்பத்துக்கு என்று சொல்லுங்க அதையும் செஞ்சுடலாம் .
தமிழ்மணத்தில் வாக்களிக்க க்ளிக் செய்யவேண்டிய இடம்... 
[ புதுசு புதுசா செய்யறீங்கப்பா..  உள்ளூரில் இருந்தாலும் சாம்பிள் அனுப்புங்கன்னு கேட்கலாம்!  ஹூம்....!  எனக்கு ந்தப் படத்தை எங்கே இணைப்பது ன்று கூடத் தெரியவில்லை!  புதன் புதிர் மாதிரி படம் பார்த்துக் கொள்ளுங்கள் மக்களே...!  சரியாகத்தான் இணைச்சிருக்கேன்னு நம்பறேன்.   


லவேரியா என்று படித்ததும் எனக்கு "ராஜு பன்கயா ஜென்டில்மேன்" படப்பாடல் நினைவுக்கு வருகிறது! - ஸ்ரீராம். ]
 

84 கருத்துகள்:

 1. செய்து பார்த்து விட்டு வருகிறேன்

  பதிலளிநீக்கு
 2. ஹை ஏஞ்சல் லவரியா!!! இலங்கையில் இருந்ததால் அப்பாவின் அம்மா, என் அம்மா செய்வார்கள். இப்படிப் பூரணமாக வைத்தும் செய்ததுண்டு.ஆனால் மடிக்க மாட்டார்கள். ஏனென்றால் ப்ளாஸ்டிக் பேப்பர் எதுவும் பயன்படுத்த மாட்டார்கள். இடியாப்பட் தட்டிலேயே ஒரு சுற்று பிழிந்து பூரணத்தை ஆங்காங்கே வைத்துவிட்டு அடுத்து சுற்று அதன் மேலே பிழிவார்கள். அப்படியே நானும் செய்து பழகிவிட்டேன். தேங்காயும் வெல்லமும் கலந்து வைத்துக் கொண்டு பூரணம் செய்யாமல், இடியாப்பத் தட்டிலேயே ஒரு சுற்று நல்ல திக்காகப் பிழிந்து அதில் இதனைத் தூவி மேலும் அதன் மேலே ஒரு சுற்று பிழிந்து வேக வைப்பதுண்டு. தேங்காயும் சீனியும் கலந்து வைத்துக் கொண்டு இப்படியே செய்வதுண்டு. பாட்டி சில சமயம் அதில் ஏலக்காயும் கலப்பார்கள். நான் ஏலக்காயிற்குப் பதிலாக முந்திரிப்பருப்பு, பாதாம் இருந்தால் அதையும் ஜஸ்ட் லைட்டாகப் பொடி செய்து கலந்து தூவி செய்ததுண்டு. இப்போது மகன் இங்கு இல்லாததால் செய்வது அரிதாகிவிட்டது. யாரேனும் வந்தால் தான் செய்கிறேன். மடித்துச் செய்ததில்லை. பாசிப்பருப்பு பூரணமும் செய்ததில்லை. நீங்கள் மடித்து செய்தது போல் செய்து பார்க்கிறேன்..அழகாக மடித்து இருக்கிறீர்களே...பிய்ந்துவிடாமல்....சுப்பர்!!!

  கீதா

  பதிலளிநீக்கு
 3. பத்திரி செய்வீர்களா? கேரளத்து பத்திரி கிட்டத்தட்ட கர்நாடகா அக்கி ரொட்டி போலத்தான். நான் வீட்டில் அரிசி மாவு செய்து வைத்துக் கொள்ள முடியாமல் போனால் நானும் நிரப்பாரா மாவுகள் தான் பயன்படுத்துகிறேன். ரொம்ப நன்றாக உள்ளது...

  கீதா

  கீதா

  பதிலளிநீக்கு
 4. என்னிடம் இருக்கும் இடியாப்ப அச்சு பாட்டி இலங்கையில் இருந்த போது வாங்கியது. சிறியது...ஒரு
  கொஞ்சம் பெரிய எலுமிச்சை சைஸ் உருண்டைதான் வைத்துப் பிழிய முடியும். மரத்தினால் ஆனது. ஆனால் நேர்த்தியாக இருக்கும். மிக மிக மெலிதாகப் பிழியும். ஓட்டை மிகவும் சிறியது. மெல்லிய நூலிழைகளாக வரும். எனவே கொஞ்சம் சூடு ஆறினாலும் பிழிவது கடினமாக இருக்கும். இருந்தாலும் நான் அதனைத்தான் பயன்படுத்தி வருகிறேன். பாட்டி பயன்படுத்தி, அம்மா பயன்படுத்தி என்னிடம் உள்ளது. மரம் மழு மழு என்றிருக்கும். அதன் வயதிற்கும் சற்று கூடியதாக இருக்கும்...52 +...

  கீதா

  பதிலளிநீக்கு
 5. இடியாப்பம் வேக வைக்கும் மூங்கில் தட்டு உங்களிடம் இருக்கிறதா? மூங்கில் தட்டு உண்டு. பாட்டி வைத்திருந்தார்கள். ஆனால் அது பிய்ந்துவிட்டது. அம்மா இட்லித் தட்டில் தான் பிழிவார்கள். நான் அடுக்கடுக்காக இருக்கும் இடியாப்பத்தட்டில் செய்கிறேன். மூங்கில் தட்டு தேடி வருகிறேன். புட்டுக் குழல் கூட மூங்கிலில் உண்டு.

  கீதா

  பதிலளிநீக்கு
 6. தம 5.......இதுவரை கேள்விபடாதது........

  பதிலளிநீக்கு
 7. இடியாப்பம் என்றால் எனக்கு வாழைப்பழம் துருவிய தேங்காய் ஒரு ஸ்பூன் நெய் மற்றும் சுகர் சேர்த்து சாப்பிட பிடிக்கும் அல்லது குருமா ஊற்றி சாப்பிட பிடிக்கும்

  பதிலளிநீக்கு
 8. அழகான செய்முறை படங்கள்.
  புதுமையாக செய்து இருக்கிறீர்கள் ஏஞ்சலின்.

  பதிலளிநீக்கு
 9. ஏழாவது ஓட்டு போட்டு விட்டேன்.

  பதிலளிநீக்கு
 10. இனிப்புப் பூரணக் கொழுக்கட்டை இது போல செய்வோம். ஆம், இடியாப்பத்தில் செய்வது புதுமை.
  சுவைக்க மட்டுமின்றி பார்க்கவும் அழகாக உள்ளது.

  பதிலளிநீக்கு
 11. பார்க்க நல்லாருக்கு. நான் சேவையின் ரசிகன். த ம போட்டாச்சு. பாராட்டுகள். சில நாட்களில் எழுதறேன்.

  பதிலளிநீக்கு
 12. ஆவ்வ்வ்வ்வ்வ் வந்திட்டுதாஆஆ வந்திட்டுதா.... தேம்ஸ்கரையில இடியப்ப வாசம் வதபோதும், அஞ்சு மயங்கி மயங்கி விழுந்தபோதும் நினைச்சேன்ன்ன்.. இது எங்கள் புளொக்கில் தான் போய் முடியப்போகுதென:).. இடியப்பம் அவிச்சு மயங்கிட்டாவாமே:) இருங்க படிச்சிட்டு வாறேன்ன்.. வாவ்வ்வ்வ்வ் மின்னலாக 8 வோட்ஸ் விழுந்துவிட்டதூஊஊஉ.. மகுடம் இன்று அஞ்சுவுக்கே...

  பதிலளிநீக்கு
 13. //இது இனிப்பு பிரியர்களுக்கான :) ஸ்பெஷல்..///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் அப்போ இது என்போன்ற.. அன்பான பண்பான, அடக்கொடுக்கமான, பணிவான, ரொம்ப அமையான மனிசர்களுக்கானது இல்லையாஆஆஆஆஆஆ:).. ஆரைப் பார்த்தாலும் இனிப்பாகவே போடுகினமே :(

  பதிலளிநீக்கு
 14. ///பல வருடங்களுக்குப்பின் அதுவும் இரண்டு நாட்களுக்கு முன் புது இடியாப்ப அச்சு வாங்கினதும் செய்தேன் ..முதல் முறையே மிகவும் அழகாக இடியாப்பம் வந்தது :)//

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாடா நல்லவேளை என் எலாம் அடிக்கவில்லை அதனால இம்முறை லாப் எலி கில்லர்ஜீ:) ஹா ஹா ஹா சந்தோசம் பொயிங்குதே... சந்தோசம் பொயிங்குதே..:).. ஹையோ 5 மணி நேரமாக கில்லர்ஜீ யை எங்கும் காணவில்லை.. மயங்கிட்டாரோஓஓஓஓஓ:)..

  பதிலளிநீக்கு
 15. //எப்பவுமே அரி பத்திரி செய்யப்போனா புட்டாகும் இல்லைனா புட்டுக்கு பிசைந்தா அது ஓவரா குழைந்து இடியாப்பமாகவும் மாறும் இம்முறை அந்த கஷ்டம் ஏதும் கொடுக்கவில்லை நிரப்பரா கேரளா இடியாப்ப மாவு :)//

  நான் ரொம்ப நல்ல பொண்ணு அஞ்சு:) உள்ளதை உள்ளபடியே சொல்லுவேன்:).. முதல் தடவையிலேயே இடியப்பம் சூப்பரா வந்திருக்கு.

  நான் ஆரம்பத்தில் இடியப்பம் குழைத்து விட்டு, ஒரு பக்கம் நானும் ஒரு பக்கம் கணவரையும் பிடிக்கச்சொல்லிப் பிழிஞ்சு.. முடிவில வேர்த்து விறுவிறுத்து.. கணவர் சொன்னார்ர்.. அதிரா எனக்கு இடியப்பம் விருப்பம் எனச் சும்மாதான் சொன்னேன், எனக்குப் பிடிக்காது நீங்க ரொட்டி அல்லது புட்டே அவிச்சால் போதும் என ஹா ஹா ஹா.. அந்த நினைவுகள் வந்துவிட்டது:).

  பதிலளிநீக்கு
 16. //,நடுவில் ஒரு தேக்கரண்டி அளவு பூரணத்தை இட்டு அப்படியே அந்த பிளாஸ்டிக் கவரின் ஒரு முனையை மடித்து ஒரு பக்கம் மூடவும் .ஒரு செகண்ட் கழித்து பிளாஸ்டிக் கவரை பழையபடி திறந்தால் இடியாப்பம் சோமாஸ் வடிவத்துக்கு வந்திருக்கும் //

  ஆஹா இது நல்ல ஐடியாவாக இருக்கே.. ஒரு விதத்தில் மோதகம் தான் இது.

  பதிலளிநீக்கு
 17. /// அதன் வயதிற்கும் சற்று கூடியதாக இருக்கும்...52 +...///

  ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் கீதா பபூளிக்கில உப்பூடியெல்லாம் எங்கட ........... ...அவரின் வயதைச் சொல்லப்பிடாது கர்ர்ர்:)

  பதிலளிநீக்கு
 18. ///இதே போல காரத்திலும் செய்து பார்க்கணும் ..என்ன பூரணம் நல்லா இருக்கும் கார இடியாப்பத்துக்கு என்று சொல்லுங்க அதையும் செஞ்சுடலாம் .//

  ஹையோ வழிவிடுங்கோ வழிவிடுங்கோ.... கடவுளே நான் நீண்ட காலம் உயிர் வாழ ஆசைப்படுறேன்ன்ன்ன் .. அது ஒரு டப்போ?:)

  https://i.ytimg.com/vi/XVO9CS8D4hQ/hqdefault.jpg

  பதிலளிநீக்கு
 19. //Avargal Unmaigal said...
  தம 5.......இதுவரை கேள்விபடாதது........//

  இதுவரை கேள்விப்பட்டதைப் போடுவதற்கு நாங்க என்ன அரைச்ச மாவைவே அரைக்கும்.. ஆட்கள் என நினைச்சீங்களோ?:)).. நாங்கள் புதுமைக் பெண்களாக்கும்:).. புடுசு புடுசாப் போட்டுக்கலக்குவோம்ம்:) ஹா ஹா ஹா:)

  பதிலளிநீக்கு
 20. ///நெல்லைத் தமிழன் said...
  பார்க்க நல்லாருக்கு. நான் சேவையின் ரசிகன். த ம போட்டாச்சு. பாராட்டுகள். சில நாட்களில் எழுதறேன்.///


  ஆவ்வ்வ்வ் நெல்லைத்தமிழனைக்காணல்லியே.. அஞ்சுவுக்கு ஒரு வோட்டுக் குறைஞ்சிடப்போகுதே எனக் கவலைப்பட்டேன்ன்ன்.. இருக்கிறார்ர்ர்...:) நெல்லைத்தமிழன் ஏன் நீங்க இதுவரை என் ரோஜாவைப் பார்த்து 4 வார்த்தையில் புகழவில்லை?:)... ஒரு வேளை என் ரோஜா பார்த்து , அதன் அழகில் மயங்கி..வாயடைச்சுப் போயிட்டாரோ என்னமோ:).

  பதிலளிநீக்கு
 21. அருமையான ரெஸிப்பி...பகிர்வுக்கு நன்றி
  தமிழ் செய்திகள்

  பதிலளிநீக்கு
 22. ///.! எனக்கு எந்தப் படத்தை எங்கே இணைப்பது ன்று கூடத் தெரியவில்லை! புதன் புதிர் மாதிரி படம் பார்த்துக் கொள்ளுங்கள் மக்களே...//

  ஹா ஹா ஹா ஸ்ரீராம் கர்ர்ர்ர்ர்ர்:), அஞ்சு நம்பர் போட்டு அனுப்பேல்லையோ?:).. அதுதான் ஒரு இடத்தில படமும் எழுத்தும் மாறி இருப்பதுபோல ஒரு ஃபீலிங் வந்துது அஜீஸ் பண்ணிட்டேன்ன்ன்:).

  பதிலளிநீக்கு
 23. ஹா ஹா ஹா இப்போது மூன்று இடங்களிலும்... சரிசமனாக 9 வோட்டுக்கள் போடப்பட்டிருக்கின்றன:).. பகவான் ஜீ, கிலர்ஜி, எங்கள் புளொக்:)...
  ஹா ஹா ஹா...:)

  பதிலளிநீக்கு
 24. நான் வந்திட்டேன் :)
  மிக்க நன்றி ஸ்ரீராம் ..நான் படங்களை அப்படியே ஜிமெயில் இல் அனுப்பியதில் முதல் படம் கீழே வந்திருக்கு ஒரு இடத்தில மட்டுமே ஆர்டர் மாறி இருக்கு .கொல்லாஜில் போடலன்னா நிறைய படங்களா வரும்னு நினைச்சி இப்படி செஞ்சேன்

  கீழிருந்து இரண்டாவது கொலாஜ் மற்றும் மூன்றாவது கொலாஜ் தான் இடம் மாறி இருக்கு
  மாவு பிசைந்து பிளாஸ்டிக் பேப்பரில் ஷேப் செய்து பிறகு மூங்கில் தட்டு ஸ்டிமர் படம் வரணும் ஆனால் பார்க்கிறவங்களுக்கு செய்முறையே விளங்கும் :)

  இனிமே ரெசிப்பிகளுக்கு நம்பர் போடறேன் :)

  பதிலளிநீக்கு
 25. வாங்க கில்லெர்ஜீ :) பதிவின் முதல் விசிட்டருக்கு நம்ம பாரம்பரிய உணவு இந்தாங்க எடுத்துக்கோங்க :)
  இதை சாப்பிட்டுக்கிட்டே செய்து பாருங்க :)


  http://4.bp.blogspot.com/-lvDF5BSKv18/UB2V342g5OI/AAAAAAAACFk/Vups6ccsLr8/s1600/IMG_1278.JPG

  பதிலளிநீக்கு
 26. வாங்க அண்ணா கரந்தை ஜெயக்குமார் ...மிக்க நன்றி வாக்களித்தமைக்கும்

  பதிலளிநீக்கு
 27. வாங்க சகோ டிடி வருகைக்கும் தமிழ் மண வாக்கிற்கும் மிக்க நன்றி .ரெண்டு ஜூஸ் இருக்கு உங்களுக்கு பிடிச்சதை எடுத்துக்கோங்க

  https://3.bp.blogspot.com/-DDT1uc48kwM/WQZDbYMmklI/AAAAAAAANY0/i5RcpRFhtREABoZ1D0fqWWOPSBcQYHyygCLcB/s1600/geno%252B038.jpg

  பதிலளிநீக்கு
 28. ///http://4.bp.blogspot.com/-lvDF5BSKv18/UB2V342g5OI/AAAAAAAACFk/Vups6ccsLr8/s1600/IMG_1278.JPG///

  அச்சச்சோஓஒ அச்சச்சோஓஒ நான் ஆசையா அவிச்சு வச்ச பனங்கிழங்கைக் காணல்லியேஏஏஏ.. வரவர என் பக்கத்துக்கு ஒரு பாதுகாப்பே இல்லாமல் போகுதே ஜாமீஈஈஈஈஈஈ:)).. கில்லர்ஜி வெயிட் வெயிட்.. அது யாரோடதெனக் கேட்டிட்டுச் சாப்பிடுங்கோ:)..

  பதிலளிநீக்கு
 29. வாங்க கீதா :) எனது ஆன்ட்டி மிக சிறந்த சமையல்கலை நிபுணராம் .கணவரின் அம்மா வை சொல்றேன் அவர் இப்படித்தான் செய்வார்னு இவர் சொன்னார் ..இது கொழும்பு மக்களின் ஸ்பெஷாலிட்டி கேரளா திருவனந்தபுரம் மக்களும் செய்யவார்கள் .
  நண்பர் வீட்டில் இதை விட மெலிதாக பிழிந்திருந்தாங்க ..நான் புலி வச்சா நமது நண்பர்கள் கோலம் போடுமளவு க்ளெவர் அதனால் செய்முறை சொன்னேன் இனி அவரவர் செய்முறையில் கலக்கலாம் :)

  பதிலளிநீக்கு

 30. ஹையோ கீதா :) அதை என் கேக்கறீங்க எப்ப பத்திரி செஞ்சாலும் தட்ட வராதெனக்கு அது புட்டாக மாத்திடுவேன் சில நேரம் அம்மிணி கொழுக்கட்டையாகிடும் :))

  இந்தாங்க கீதா உங்களுக்கு சின்ன கிப்ட் purple ரோஸ்
  http://3.bp.blogspot.com/-SdcjJVXnucc/Tmj-a08QsyI/AAAAAAAABQQ/e1NWRhCY8nE/s1600/Image0651.jpg

  பதிலளிநீக்கு
 31. @ கீதா என்கிட்டே முதலில் இருந்தது சூரஜ் பிராண்ட் அச்ச்சு அது முறுக்கு ஓமப்பொடி மட்டும் செய்வேன் இடியப்பம் போட்டா ஸ்ப்ரிங் உடைஞ்சி கையெல்லாம் வெட்டிச்சு அதான் சுத்துற வெரைட்டி வாங்கினேன் ..அதே கடையில் இந்த மூங்கில் தட்டும் கிடைச்சதே :)

  பதிலளிநீக்கு
 32. வாங்க @) அவர்கள் ட்ரூத் எனக்கும் வெஜ் குருமாவுடன் சாப்பிட மட்டுமே பிடிக்கும் இது கணவருக்கு நாலு லவரியா செய்தென் இங்கே நிறைய இனிப்பு ரசிகர்கள் இருக்கங்களேன்னு அவங்களுக்கும் ரெசிப்பி பகிர்ந்தாச்சி
  மிக்க நன்றி தமிழ் மண வாக்கிற்கும் ..இந்தாங்க உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் கிப்ட்

  http://2.bp.blogspot.com/-VyegkO8PxdM/UJbhWi1UEMI/AAAAAAAACiA/NKXbVB43Ki8/s1600/DSC01218.JPG

  பதிலளிநீக்கு

 33. வாங்க கோமதி அக்கா :) வருகைக்கும் தமிழ் மண வாக்கிற்கும் மிக நன்றிக்கா :)
  என் கணவருக்கு மிகவும் பிடித்ததாம் இது :)
  அக்கா இந்தாங்க இந்த மலர் உங்களுக்கு :)
  https://4.bp.blogspot.com/-QSRpR-JubD0/WQ4-S9KiS5I/AAAAAAAANcQ/LJNQmtF_y7w0P2y_ud8NKJfZxUyMZ2J9QCLcB/s400/v.jpg

  பதிலளிநீக்கு
 34. வாங்க ராமலெக்ஷ்மி அக்கா :) வருகைக்கும் வாக்கிற்கும் மிக்க நன்றி . இது இலங்கை பேக்கரிஸ்ல அப்புறம் ரெஸ்டாரண்ட்ல முக்கியமா கொலம்போ கண்டி பக்கம் பிரபல உணவாம் சிங்கள மற்றும் கொழும்பு தமிழர் மத்தியில் அவங்க உணவு நம்ம நாகர்கோயில் கேரளா மாதிரிதான் கொஞ்சம் மிக்க நன்றி .
  இந்தாங்க உங்களுக்கு ஒரு குட்டி கிப்ட்

  http://4.bp.blogspot.com/-3APArIn7SbQ/UKU1OGrwxBI/AAAAAAAACn8/Le7bhK1mJEE/s1600/DSC01093.JPG

  பதிலளிநீக்கு
 35. @நெல்லை தமிழன் வாங்க ..உங்களை காணோம்னு யோசிச்சேன் ..அப்புறம் வேலை பிஸின்னு எங்கியோ பார்த்தேன் வந்து வாக்களித்ததற்கும் மிக்க நன்றி ..சேவை எனக்கும் பிடித்தது
  இதை பொடித்து இடியாப்ப வெஜ் நூடில்ஸ் போலவும் செய்வேன் நான் ....எனக்கு புளி சேவை ரெசிப்பி வேண்டும் உங்ககிட்டருந்து

  பதிலளிநீக்கு
 36. வாங்க :) @அதிரா மியாவ் :)

  கர்ர்ர்ர் கில்லர்ஜி பனங்கிழங்கு சாப்பிட்டிருக்கார் டோன்ட் டிஸ்டர்ப் :)

  உங்க ப்லாகில் பூட்டு போட்டிருக்கீங்களா :)

  பதிலளிநீக்கு
 37. @ஆஷா போஸ்லே :) இடியாப்பம் வெடியாப்பமா மாறின காலம் இருக்கு நிறைய
  புட்டு மட்டும் எப்பவாது செய்வேன் இது அதிசயமான ஆச்சர்யமான விஷயம் ஒரே ட்ரையலில் சரியா வந்ததே எனக்கு ..

  பதிலளிநீக்கு
 38. இந்த மாதிரி இடியாப்பத்தில் செய்யலாம் எனக் கேள்விப் பட்டதில்லை. பார்க்கவே நன்றாக இருக்கிறது. தைரியமாச் சாப்பிடலாம்னு நினைக்கிறேன். ஹிஹிஹி! சும்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மா! ஒரு ஜாலிக்கு! :)

  உண்மையிலேயே இது மாதிரித் தெரியாது! அது என்ன பத்திரி? அதையும் சொல்லிடுங்க! தெரிஞ்சுக்கலாம்.

  பதிலளிநீக்கு
 39. @விஜய் வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க

  பதிலளிநீக்கு
 40. @கீதா சாம்பசிவம் அக்கா வாங்க ..இது அப்படியே கொழுக்கட்டை மாதிரிதான் இடியாப்பத்தை பிழிந்து பூரணம் வைக்கிறோம் ..கொழும்பு ஸ்பெஷல் ....ந்த இடியாப்பத்தை வாழை இல்லை இல்லன்னா பிளாஸ்டிக் கவரில் பிழிந்து FILLING வைத்து பேப்பரை ஒரு பக்கம் மடிச்சா சோமாஸ் ஷேப் வரும் அதை லேசா அழுத்தினா போதும் பிறகு ஸ்டிம் செஞ்சா இந்த லவரியா :)
  அந்த பத்திரி அரிசி மாவு ரொட்டி எனக்கு எட்டாக்கனி :) அநேகமா நெல்லைத்தமிழனுக்கு தெரிஞ்சிருக்கும்னு நினைக்கிறன்
  பெங்களூர் அக்கி ரொட்டி போல தான் பத்திரி

  பதிலளிநீக்கு
 41. http://3.bp.blogspot.com/-7QHs-ynyPFQ/TyQiirJ984I/AAAAAAAABOw/uYZlHZXTYAk/s1600/Pathiri.jpg

  This is ari pathiri akkaa

  பதிலளிநீக்கு
 42. ///
  AngelinJune 5, 2017 at 12:50 PM
  ..நான் புலி வச்சா நமது நண்பர்கள் கோலம் போடுமளவு க்ளெவர் ////
  என்னாதூஊஊஊஉ புலியாஆஆஆஆ...

  பதிலளிநீக்கு
 43. நன்றாக இருக்கின்றதே லவரியா!.. இடியாப்பம் பிழிவதெல்லாம் பெருங்கனவு..

  பக்கத்தில் உள்ள உணவகத்தில் இடியாப்பம் கிடைக்கும்.. தேங்காய் சர்க்கரை - கைவசம்..

  அப்புறம் என்ன?.. பூரணம் தயார்!.. பூரண இடியாப்பமும் தயார்!..

  ஏதோ நம்மால் ஆன கைங்கர்யம்!..

  பதிலளிநீக்கு
 44. எனது பூவையின் எண்ணங்களில் புட்டு செய்முறை பற்றிப் பகிர்ந்திருக்கிறேன் சுட்டி
  http://kamalabalu294.blogspot.in/2013/09/blog-post.html இடியாப்பம் அதன் சகோதரிதானே இடியாப்பம் செய்முறை குறித்து விதவிதமான கருத்துகள் வந்திருந்தன. என் பாட்டியு அம்மாவும் அவித்துவேக வ்வைத்த மாவைப் பிழிவார்கள் அது சிரமமானது அவிக்கும் முன்பே ஷேப்புக்குக் கொண்டு வந்து பிறகு அவிப்பது சுலபமான வழி. இனிப்பை எப்படி வேண்டுமானாலும் சேர்க்கலாம் ஏஸ்தெடிக் லுக்குக்காக சிரம் அவசியமா லவரியா பெயர் கேட்டதில்லை இந்த கேரள சேவையும் இடியாப்பமும் ஒன்று போல் இருக்கிறதே

  பதிலளிநீக்கு
 45. புதுசா இருக்கு... ஆனா எனக்கு இடியாப்பமே பிடிக்காதே

  பதிலளிநீக்கு
 46. லவரியா பேர் புதுசா இருக்கு. படித்தேன்.அட இது சேவைதான். பூரணத்தின் மேலே சேவை. இதுநாள் வரை கேள்விப்படவே இல்லாத பேரும்,சுலபமாக ரெடிமேடான மாவின் பெயரும். பழைய முறையில் செய்தால் பிழிவதற்கு போராட வேண்டும். ரொம்ப ஸுலபம் என்று தோன்றும்படியான குறிப்பு. கொழுக்கட்டையில் எவ்வளவு விதம்விதமாகப் பூரணம் வைக்கிறோமோ அப்படி இதையும் மாற்றலாம் என்று ஒருவரி எழுத மறந்து விட்டதா? பேஷாக இருக்கு எல்லாம். அன்புடன்

  பதிலளிநீக்கு
 47. ஹையோ ஹையோ ஹையோ.. இதைத்தட்டிக்கேட்க இங்கின ஆருமே இல்லையாஆஆஆ?:).. உலகத்தில நடப்பவற்றை எல்லாம் அதிரா தட்டித் தட்டிக் கேய்க்கிறேஏஏஏஏனேஏஏ... அதிராவின் பக்கத்தில் பூவாப்.. பழமா... ரொட்டியா.. ரோசாவாக் களவு போகுதேஎ.. இதைத்தட்டிக் கேய்க்க இங்கின ஆருமே இல்லையாஆஆஆஆஆஆ:)

  கீதாஆஆஆஆஆ அது என் பேப்பிள் ரோஜாஆஆஆஆஆ:).. ட்றுத் பீஸ்ஸ்ஸ்ஸ் டோண்ட் டச் த ரொட்டீஈஈஈஈஈஈ.. அது என் சிக்கின் கறி ரொட்டீஈஈஈஈஈஈஈஈ.. ஹையோ பெருமானே இப்போ மீ என்ன பண்ணுவேன்ன்ன்ன்ன்:)..

  பதிலளிநீக்கு
 48. இனிப்பு எனக்கு உதவாது!

  பதிலளிநீக்கு
 49. நல்ல ரெசிபி ஏஜ்ஜலின். எங்க வீட்ல எல்லோருக்கும் பிடிக்கும்.கொழுக்கட்டை பூரணம் வைத்து இடியாப்ப மாவில் அழகான விளக்கம்.உளூந்து பூரணம் காரமாக செய்து நடுவில் வைத்து மடித்து விட்டால் காரமாக இருக்கும்.இந்த முறையில் செய்து பார்கிறேன்.

  பதிலளிநீக்கு
 50. @
  @மீரா பாலாஜி :)

  வாங்க மீரா மிக நன்றிப்பா வருகைக்கும் பின்னூட்டத்துக்கும் கார பூரண ஐடியாவிற்கும் .
  இந்தாங்க உங்களுக்கு ஒரு ஸ்பெஷல் கிப்ட் பிங்க் கலரில் :) எவ்ளோ வேணுமோ எடுத்துக்கோங்க :)


  http://1.bp.blogspot.com/_lopbnFVBqWk/TBqcNciPuWI/AAAAAAAAAt8/YA5EMrUgO58/s1600/010610+003.JPG


  பதிலளிநீக்கு
 51. @மீரா..பூவை பறிக்கும்போது ஒரு குண்டு பூனை ஓடும் பயப்படாதீங்க :)

  பதிலளிநீக்கு
 52. @புலவர் இராமாநுசம் ஐயா வாங்க வாங்க :) எனக்கும் இனிப்புக்கும் பல காத தூரம் தான் ..எப்பவாவது கணவருக்கு செய்து தருவேன் வீட்டில் இப்படி ..நீங்க மீரா பாலாஜி சொன்ன மாதிரி உளுந்து பூரணம் வைத்து செய்து சாப்பிடலாம் .
  வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி ஐயா

  பதிலளிநீக்கு

 53. @ஆஷா போஸ்லே அதிரா ..ஷ்ஹ்ஹ் ஷ் என்ன இங்கே மியோ கியோனு சத்தம்

  http://www.top13.net/wp-content/uploads/2015/10/perfectly-timed-funny-cat-pictures-5.jpg

  பதிலளிநீக்கு
 54. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 55. @காமாட்சி அம்மா வாங்க வாங்க ..ஆமாம் அம்மா சேவை பிழிந்து எல்லா வகை பூரணத்தையும் உள்ளே வைத்து செய்யலாம் என்பக்கம் சேவை என்ற பெயர் முதலில் நினைவுக்கு வரலை ..நானும் எப்பவாவதுதான் இந்த இடியாப்பம் செய்வது .
  இங்கே விதவிதமா டபிள் ஹார்ஸ் ,பெரியார் நிரப்பரா அப்புறம் மேளம் பிராண்டில் அரிபத்திரி அப்பம் புட்டு அரிசி மாவுகள் ரெடிமேடில் கிடைக்குது அதனால் ரொம்ப வசதி எனக்கு வருகைக்கும் பின்னூட்ட்டத்திற்கும் நன்றிம்மா .லவரியா சிங்கள பெயர் ..

  பதிலளிநீக்கு
 56. @ராஜி ..வாங்க இடியாப்பம் பிடிக்காதா உங்களுக்கு பிடிக்கலைன்னா வீட்டில் இருக்கறவங்களுக்கு செய்து கொடுங்க :)

  பதிலளிநீக்கு
 57. @gmb சார் வாங்க :)
  அதேதான் இடியாப்பம் புட்டின் தங்கையே ..நீங்க சொல்ற அந்த தண்ணி ஊற்றி பிசைந்து இட்டிலி தட்டில் பந்துகளாக அவித்து பிறகு அச்சில் பிழிய ஓரிருமுறை ட்ரை செஞ்சிருக்கேன் அது ரொம்ப மென்மையா வரும் ஆனா பிழிவதற்குள் மூச்சு திணறும் அவ்ளோ கடினம் ..நான் சின்ன பிள்ளையா இருக்கும்போது எங்க தெருவில் ஒரு அரவை மில் இருக்கும் எல்லாரும் அதில் அரிசி ஊறவைச்சி களைந்து அரைக்க கொடுப்பாங்க புட்டுக்கு தனியா சேமியா புட்டுக்கு வேறா அப்புறம் அப்பம் ,இடியாப்பத்துக்கு வேறா பதமா அரைப்பாங்க அதை அடுத்த நாளே சமைப்பாங்க ..ஒரு வேளைக்கு மட்டும் செய்வது அது ..
  ஆமாம் சந்தகை சேவை இடியாப்பம் எல்லாம் ஒன்றேதான் ..இந்த இனிப்பை கொழும்பு மக்கள் சிங்களத்தில் லவரியா என்கிறார்கள்

  பதிலளிநீக்கு
 58. @துரை செல்வராஜூ ஐயா ..:)) வாங்க வாங்க இதுவும் நல்ல ஐடியாதான் ..ரெடிமேடா வாங்கி பூரணத்தை வச்சி மடிப்பது மிக சுலபம் ..எப்படியும் கடையில் சுடசுட இருக்காது அதை லேசா பூரணம் வச்சி re steam செய்தா சுவையும் நல்லா இருக்கும் ..மிக்க நன்றி ஐயா :)

  பதிலளிநீக்கு
 59. வகை வகையா செய்து சாப்பிட தூண்டி விடுகின்றீர்கள்

  பதிலளிநீக்கு
 60. @ஆஷா போஸ்லே :)) /////
  AngelinJune 5, 2017 at 12:50 PM
  ..நான் புலி வச்சா நமது நண்பர்கள் கோலம் போடுமளவு க்ளெவர் ////
  என்னாதூஊஊஊஉ புலியாஆஆஆஆ...//

  அது கொஞ்சம் உடம்பு சரியில்லை hay fever allergic rhinitis அதான் புள்ளி புலி ஆகிடுச்சு :)
  போயும் போயும் இந்த மிஸ்டேக் தமிழ் மூதாட்டி கண்ணிலயா படணும் :))

  பதிலளிநீக்கு
 61. @அசோகன் குப்புசாமி ..வாங்க வாங்க :) மிக்க நன்றிங்க செய்து பாருங்க ரொம்ப நல்லா இருக்கும்

  பதிலளிநீக்கு
 62. சுவையான உணவு
  அருமையான வழிகாட்டல்

  பதிலளிநீக்கு
 63. லவேரியா ,பெயரே வித்தியாசம் ,அயிட்டமும் வித்தியாசம் :)

  பதிலளிநீக்கு
 64. மேலிருந்து கீழ் இரண்டாவது வரிசையில் உள்ள இரண்டாம் படத்தில் காட்டியுள்ள வெல்லம்+தேங்காய்த்துருவல்+ஏலப்பொடி கலந்துள்ள வெந்த தித்திப்புப் பூர்ணத்தை மட்டும் நான் பூர்ணமாக எடுத்துக்கொண்டு விட்டேன். மற்றபடி இனிப்பு இடியாப்ப மாவெல்லாம் எதுவும் எனக்கு வேண்டாம். பதிவும் படங்களும் ஜோராக்கீதூஊஊஊஊ. TM-11

  பதிலளிநீக்கு
 65. வாங்க வாங்க கோபு அண்ணா இந்தாங்க பிரிட்ஜை திறந்து வச்சிருக்கேன் உங்களுக்கு பிடிச்ச எதுனாலும் எடுக்கலாம் வேணும்னா அந்த ப்ரிட்ஜையே கூட எடுத்துக்கலாம் :)) வருகைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி அண்ணா

  https://2.bp.blogspot.com/-Sh7N1XFkWqM/WJzUEUE1KWI/AAAAAAAAM2U/ZbEUZ9Yrz2EacjP-201I6x8-B-ucT7nzwCLcB/s640/16652622_1825956771007878_1578269391_n.jpg

  பதிலளிநீக்கு
 66. வாங்க பகவான்ஜி இது கொழும்பில் இந்த பெயரைத்தான் சொல்றாங்க இந்த இனியாப்பத்துக்கு :) வருகைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி

  https://4.bp.blogspot.com/-rhhKuDOZG94/VsdWH7l_Y9I/AAAAAAAAMkk/J83nPBbzgYg/s640/12399219_512325025602714_1654776918_n.jpg

  பதிலளிநீக்கு

 67. வாங்க வாங்க @ஜீவலிங்கம் சகோ ..வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி இந்தாங்க உங்களுக்கு ஸ்பெஷல் பரிசு இந்தாங்க
  http://1.bp.blogspot.com/-yvg-scyNHZ0/VHtzY7q2JJI/AAAAAAAAMMI/xvSunslfY_0/s1600/20130818_180953.jpg

  பதிலளிநீக்கு
 68. @நெல்லைத்தமிழன் உங்களுக்கு காலைல பரிசு கொடுக்கலை இந்தாங்க :)

  திஸ் இஸ் FOR யூ :)

  http://1.bp.blogspot.com/-oAQHTNK2mm0/UbiiJlKGb8I/AAAAAAAAFSs/q9DI1qxKeDw/s400/20130611_113914.jpg

  பதிலளிநீக்கு

 69. கரந்தை ஜெயக்குமார் அண்ணா முதல் வாக்களித்த உங்களுக்கு இது
  https://3.bp.blogspot.com/-porzQfP3r2s/UiIW5-2ip_I/AAAAAAAAFiM/TnM2AAcN4Y8/s400/20130820_123840.jpg

  பதிலளிநீக்கு
 70. @ஸ்ரீராம் இந்தாங்க உங்களுக்கு தினை கொழுக்கட்டை

  http://2.bp.blogspot.com/-wOjp0r4X9PQ/UJaOvknsBpI/AAAAAAAACgU/g7-nu41bCHI/s400/DSC01181.JPG

  பதிலளிநீக்கு
 71. @ராமலக்ஷ்மி அக்கா இந்தாங்க இதெல்லாம் உங்களுக்கே :)

  http://1.bp.blogspot.com/-LW0MFApaBWw/UYVYLc11ZUI/AAAAAAAAFA8/JwLKWyeFcNM/s1600/DSC00810.JPG

  பதிலளிநீக்கு

 72. @காமாட்சியம்மாக்கு பிடிச்ச கீரை தோட்டம் ஸ்பெஷலா எடுத்து வந்தேன்
  https://4.bp.blogspot.com/-I7B9k7w36MM/WHfm2rtv4KI/AAAAAAAAMug/X39-AEUaMikOiCIAQsZA_N3nA3U3sXcdwCLcB/s640/collage1.jpg

  பதிலளிநீக்கு
 73. வருகை தந்து பின்னூட்டமிட்ட வாக்களித்த அனைவருக்கும் பரிசு தந்தாச்சு யாரையாச்சும் மறந்தேனா தெரில .நோ ப்ராப்லம் அட்ரஸ் தரேன் அங்கே நிறைய இருக்கு எவ்ளோ வேணும்னாலும் எடுக்கலாம் :)

  பதிலளிநீக்கு
 74. @ஸ்ரீராம் .. எனக்குஆரம்ப கால ஷாருக் படங்களில் ஷில்பா கஜோல் காம்பினேஷன் மிஸ் பண்ணதில்லை ஆனா இந்த பாட்டு நீங்க சொன்னதும்நினைவில் இருக்கு :) ஹாஹா

  பதிலளிநீக்கு
 75. நான் தான் லேட்.பரவாயில்லை எங்க வீட்டுக்காரர் பேவரிட் உணவு. நானும் செய்வதுதான். கொஞ்சநாள் செய்யவில்லை. சூப்பர் அஞ்சு.
  நானும் செய்யவேணும் நன்றி

  பதிலளிநீக்கு
 76. ஆவ்வ்வ்வ் வாங்க ப்ரியா .தேடி நென் உங்களை. உங்கள் வீட்லயும் பிடிச்ச உணவா மிக்க சந்தோஷம் .உங்க பரிசு அங்கே இருக்கு எது வேணும் டேக் ஹா ஹா.

  பதிலளிநீக்கு
 77. ஆவ்வ்வ்வ்வ் இங்கின இருக்கும் லிங்கைத் திறந்து யாரும் ஆசையில் கையை வச்சீங்க அவ்ளோதேன்ன்ன்ன் வச்சிடுவேன்ன்ன்:).. என் பக்கத்துக்கு இன்சூர் பண்ணாமல் விட்டது எவ்ளோ தப்பூ என இப்போதானே தெரிது.. அப்பவும் டிடி படிச்சூஊஊஉ அடிச்சு சொன்னார்ர் லொக் போடுங்கோ என கேய்ட்டேனா:).. ஆனாலும் ஒன்லி லுக்கிங் தேன்ன் ஆரையும் டச்சு பண்ண விடமாட்டேன்ன்ன்ன் கர்ர்:)

  https://media.giphy.com/media/OaFQQBqIOpHag/200w.gif

  பதிலளிநீக்கு
 78. ///Angelin said...
  வாங்க வாங்க கோபு அண்ணா இந்தாங்க பிரிட்ஜை திறந்து வச்சிருக்கேன் உங்களுக்கு பிடிச்ச எதுனாலும் எடுக்கலாம் வேணும்னா அந்த ப்ரிட்ஜையே கூட எடுத்துக்கலாம் :)) வருகைக்கும் தமிழ்மண வாக்கிற்கும் மிக்க நன்றி அண்ணா ///

  கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உள்ளே தள்ளிக் கதவை மூடி விட்டிடுவேன்ன்ன் ஜாக்க்க்க்க்ர்ர்ர்ர்தை:)

  பதிலளிநீக்கு
 79. asha bhosle athira said...

  Angelin said...
  வாங்க வாங்க கோபு அண்ணா இந்தாங்க பிரிட்ஜை திறந்து வச்சிருக்கேன் உங்களுக்கு பிடிச்ச எதுனாலும் எடுக்கலாம் வேணும்னா அந்த ப்ரிட்ஜையே கூட எடுத்துக்கலாம் :))

  //கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) உள்ளே தள்ளிக் கதவை மூடி விட்டிடுவேன்ன்ன் ஜாக்க்க்க்க்ர்ர்ர்ர்தை:)//

  ஹைய்ய்ய்ய்யோ ..... ஜாலியா ஜில்லுன்னு குளுகுளுன்னு உள்ளே குந்திக்கொள்வேனே ! :)

  பதிலளிநீக்கு
 80. ஏஞ்சல் கிஃப்ட்டுக் மிக்க நன்றி ஏஞ்சல்!!ஹையொ என்ன கலரப்பா அது அழகு!!! ரொம்ப தாங்க்ஸ்பா...ஸாரி லேட்டாயிடுச்சு....

  கீதா

  பதிலளிநீக்கு
 81. ரொம்ப லேட்டா வந்து இருக்கேன்...

  வழக்கமா இடியாப்பம் தான் செய்வோம்...ஆன இப்படி பூரணம் எல்லாம் வச்சு செஞ்சது இல்ல அஞ்சு..

  அடுத்த முறை இப்படியும்...கீதாக்கா சொன்ன மாதரி வெல்லம் தூவியும் செய்து பார்க்கணும்..


  சூப்பரான ரெசிப்பி..

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!