Friday, June 23, 2017

வெள்ளி வீடியோ : ஏழேழு ஜென்மம் இந்த அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும்     அண்ணன் தங்கை செண்டிமெண்ட் 
பாசமலரில்தான் அமோகமாகத் தொடங்கியதா?  இருக்கலாம்.  தங்கை பற்றி அண்ணன் பாடும் பாடல்கள் இந்தப் படத்தில் இரண்டு பாடல்கள்.  ஒன்று மிகப்பிரபலமான  மலர்ந்தும் மலராத (ஆபேரி ராகம்?) பாடல்.   இரண்டாவது மலர்களைப்போல் தங்கை உறங்குகிறாள்.  இரண்டையும் ரசிக்காதவருண்டா?


     அடுத்து நான் சொல்லும் பாடலும் ஜிவாஜி (நன்றி கீதாக்கா) பாடல்தான்.  படமே அண்ணன் ஒரு கோவில்!  மல்லிகை முல்லை... பொன்மொழிக் கிள்ளை...  ஒரு மாறுதலுக்கு இதில் அண்ணனைப் பற்றி தங்கை பாடும் பாடலும் உண்டு! அண்ணன் ஒரு கோவிலென்றால்... தங்கை ஒரு குளம்.. மன்னிக்கவும் தீபம் அன்றோ...  சுமாரான பாடல் -  தங்கை படத்தில் வரும் பழைய சுசீலா பாடலோடு ஒப்பிடும்போது!
 
     இன்னும் சில ஜிவாஜி (நன்றி கீதாக்கா) பாடல்கள்.  எதையும் தாங்குவேன் அன்புக்காக.. நான் இதையும் தாங்குவேன் தங்கைக்காக..  இமைகள் வாழ்வதே கண்ணுக்காக.. என் இதயம் வாழ்வதே தங்கைக்காக..  (அழகான வரிகள் இல்லை?)
     
     நான் வாழவைப்பேன் படத்தில் எந்தன் பொன்வண்ணமே
 

     என் தம்பி என்று படத்தின் பெயராக இருந்தாலும் அதில் சின்னத் தங்கையைப் பார்த்து ஜிவாஜி (நன்றி கீதாக்கா)   டி எம் எஸ் குரலில் பாடும் முத்துநகையே பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடலாகும்!  தங்கை படத்தில் மறக்க முடியாத "தண்ணீரிலே தாமரைப்பூ.."..   இந்தப் பாடலில் டி எம் எஸ் ஆரம்பிக்கும் ம்ம்ம்ம்...  ம்ம்ம்... தான் எவ்வளவு உருக்கம்..    இந்தப் படத்தில் சுசீலா குரலில் அண்ணனைப் பற்றி பாடும் மிக இனிமையான தாயின் முகமிங் நிழலாடுது பாடல் எனக்கு மிகவும் பிடிக்கும்.  மிகவும் என்றா சொன்னேன்?  மிக மிக மிக மிகப் பிடிக்கும்!

     எம் ஜி ஆர் 'என் தங்கை' என்று ஒருபடத்தில் நடித்திருந்தார். பாட்டு எதுவும் நினைவில்லை.  ஆனால் எம் ஜி ஆர் படத்தில் இரண்டு பாடல்கள், இல்லை இல்லை மூன்று பாடல்கள் சட் சட்டென நினைவுக்கு வருகின்றன.  பூமழை தூவி ( இதற்கு ஹிந்தியில் கிஷோர் குரலில் பாடல்.  காட்சியில் ராஜேஷ் கன்னா),  திருநிறைச்செல்வி மங்கையர்க்கரசிஒரு கொடியில் இரு மலர்கள்...

     ராஜேந்தரை மறக்கலாமா?  தங்க நிலவே உன்னை உருக்கி... (இதே படத்தில் தங்கை மகனை [சிம்பு!!] பார்த்து எஸ் பி பி குரலில் ராஜேந்தர் வாயசைக்கும் "தோள் மீது தாலாட்ட "  [சம்பந்தம் இல்லை என்றாலும்] பாடல் ஒரு இனிமை).  ஆனால் ஒன்று. ராஜேந்தர் பாடல்களில் வரிகள் சந்தங்களுக்குள் இடமில்லாமல் அடைந்து கிடைக்கும்!

 
     அப்புறம் கே எஸ் ரவிக்குமார் படத்தில் அழகான சின்ன தேவதை.... 

     பாசப்பறவைகள் படத்தில் தென் பாண்டித் தமிழே....   இளையராஜா!

     ஜெய்சங்கர் படத்தில்  கண்ணனின் சன்னதியில்...   ரொம்பப் பிடிக்கும்.  இதே பாடல் இரண்டாவது ஜெயச்சந்திரன் பாடியது.  இது கே ஜே யேசுதாஸ்.  இன்னொரு மிக முக்கியமான இனிமையான பாடல் மறந்து விட்டேனே..  உயிரா மானமா படத்தில் வரும் "கொடியில் இரண்டு மலருண்டு..."


     அப்புறம் ராஜராஜேஸ்வரி என்னும் படத்தில் வரும் இந்தப்பாடல்.  சற்றே சோகம் கலந்தது.. முத்துராமன்.  சோகத்தில் முடி வெட்டாமல் இருக்கிறாரோ!  "என் கண்ணின் மணியே..."

     விஜய் படத்திலிருந்து இரண்டு பாடல்கள் ஆனந்தக் குயிலின் பாட்டு (அழகான ஷாலினி), ரத்தத்தின் ரத்தமே...

     உலக்கை நாயகன் (நன்றி கீதாக்கா)  (நன்றி நெல்லை!  திருத்திட்டேனே...) படங்களில் இந்தத் தங்கைசெண்டிமெண்ட் ஒரு பாடலுமே நினைவுக்கு வரவில்லை.  ஆமாம் அவர் இல்லுமினாட்டியாமே...  இ பு ஞா சொல்லியிருக்கிறார்...!


     நாகேஷுக்கு ஒரு பாட்டு சொல்லணுமே...  கல்யாணச் சாப்பாடு போடவா... 
 

     சரிங்க தோழர், போன வாரம் ஹிந்திப் பாடல் பகிர்ந்தீர்களே... இந்த வாரம் இல்லையா? என்று அதிரா. ஏஞ்சலின், நெல்லை ஆகியோர் ஆவலுடன் ( !!! ) கேட்பது காதில் விழுகிறது.  சட்டென நினைவுக்கு வரும் இரண்டு கிஷோர் குமார் பாடல்களை மட்டும் சொல்லிச் செல்கிறேன்.  ஒன்று ஹரே ராமா ஹரே கிருஷ்ணா படத்தில் வரும் என் தங்கை ஆயிரத்தில் ஒருவள் என்று பூக்களும் நட்சத்திரங்களும் சொல்லும் (என்ன ஒரு பாடல் தெரியுமா?  நான் அடிக்கடி பாடி அருகிலுள்ளவர்களை பயமுறுத்தும் பாடல்!) என்னும் பாடலும், தோங்கீ  படத்தில் வரும் முத்து முத்தான கண்ணீர்த்துளிகளை விரயம் செய்து ஏன் அழுகிறாய் சகோதரி?  இந்த முத்துக்களின் விலை அன்புதான்" எனும் பாடலும்!  (ஹிந்திப் பாடல்களை யாராவது கேட்டீர்களா என்று பின்னூட்டத்தில் விவரம் சொல்லவும்!) 


     அப்புறம் ஒரு ரஜினி நடிக்கும் காட்சி.  பைரவி படத்தில் நண்டூறுது நரியூறுது... இளையராஜாதானே இசை?  டி எம் எஸ் குரலில் 

 
     
     ரஜினி படத்தில், இளையராஜா இசையில் மலேஷியா வாசுதேவன் குரலில் மிக அற்புதமான பாடல் ஒரு தங்க ரதத்தில்...   ரொம்பப் பிடித்த பாடல்.
 

     இன்று நான் பகிரப்போகும் பாடல்தான் அடுத்த பாடல்...  நான் சிவப்பு மனிதன் படத்தில் இடம்பெறும் வெண்மேகம் விண்ணில் நின்று கண்ணே இன்று பன்னீர் தூவும்... செவ்வானம் மண்ணில் வந்து மஞ்சள் நீராட்டும்.. வரிகளுக்காகவும் ரசிக்கலாம்.  இளையராஜாவின் அருமையான இசைக்காகவும் ரசிக்கலாம். எஸ் பி பாலசுப்ரமணியத்தின் இனிமையான குரலுக்காகவும் ரசிக்கலாம்.  அவரவர் சகோதரியை நினைத்தும் ரசிக்கலாம்.  சரிதானே கில்லர்ஜி?  ஏழேழு ஜென்மம் இந்த அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும்..  எந்நாளும் எந்தன் பக்கம் தாயே நீ வேண்டும்...

     ஆனால் ஒன்று... திருமணத்துக்குமுன் அண்ணன் என்றும் தங்கை என்றும், தம்பி என்றும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழும் நாம், திருமணத்துக்குப்பின் எங்கெங்கோ பிரிந்து, வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு மனநிலையில் பாசம் குறைந்து போகிறோமோ?

     ஒரு பாடலை மட்டும் இங்கேயே பார்க்கப் பகிர்ந்திருக்கிறேன்.  மற்ற பாடல்களின் லிங்க் அந்தந்த வரிகளில் சேர்த்திருக்கிறேன்.  "எனக்கு 'இந்த'ப் பாடலை விட 'அந்த'ப் பாடல் பிடிக்குமே..." என்று சொல்லும் நண்பர்களுக்கு...   விரும்பும் பாடலின் வரிகளைத் தொட்டு "அங்கே" என்று அந்தப் பாடல்களையும் உங்கள் ரசனைக்கேற்ப நீங்கள் ரசிக்கலாம்.     பின்குறிப்பு :   அண்ணன் என்று "ரைப்" (நன்றி அதிரா) அடித்தால் கூகிள் அன்னான் அன்னான் என்று வருவது ஒரு பயங்கரக் கடுப்பு (கடுப்ஸ்).  எவ்வளவு திருத்தங்கள் செய்யவேண்டியிருந்தது!
லாயல்டியா...  நோ...  கீதா இது அடுக்ஸ்ஸாது!
மாரித்தவக்கைக்கு நெல்லை சொல்லியிருக்கும் விளக்கம் சரியா அதிரா அவர்களே?


நன்றி Youtube.
தமிழ்மணத்தில் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்து வாக்களிக்கலாம்.

93 comments:

Rajeevan Ramalingam said...

காலை வணக்கம் நண்பர்களே

Rajeevan Ramalingam said...

இன்று அண்ணன் - தங்கை பாடல் தொகுப்பா..?? இதில் எனக்குப் பிடித்த சில பாடல்களும் உண்டு.

ஆனா ஒரு தங்கச்சி இல்லையே என்பதுதான் வருத்தம்

துரை செல்வராஜூ said...

இங்கே சொல்லப்பட்டுள்ள பாடல்கள் அனைத்துமே பிடித்தமாவை.. ஏனெனில் இரண்டு தங்கைகள் எனக்கு.. பெரியப்பா சித்தப்பா வீடுகளிந் தங்கைகள் தனிப் பிரியம்.. வாழ்க தங்கைகள்!..

Asokan Kuppusamy said...

அனைத்தும் அருமை பாராட்டுகள்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

கதையோடு இசையை இரசித்தேன் ஐயா மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

KILLERGEE Devakottai said...

அண்ணன்-தங்கை பாசத்தைக் குறித்த பாடல்கள் அனைத்தும் எனக்கு பிடித்த அருமையான பாடல்களே இவ்வகையில் எனக்கு மிகவும் பிடித்த பாடலொன்று மனதில் நிற்கிறது ஞாபகம் வரவில்லை.தமிழுக்காக என்ற வரிகள் வரும்.... எனது தங்கையின் பெயர் தமிழ் என்பதால் அந்தப்பாடல் மிகவும் பிடித்தது.

ஞாபகம் வந்தால் மீண்டும் வருவேன்.

அண்ணன்-தங்கையின் பாச உறவுகள் திருமணத்துக்குப் பிறகு மாறுபடுவதாக எழுதி இருக்கின்றீர்கள் மறுப்பதற்கில்லை ஆனால் என்னைப் பொருத்தவரை எனது தங்கைக்காக எனது வாழ்வை விட்டுக் கொடுத்தவன் என் தங்கையின் திருமணத்தை நானே தீர்மானித்தேன் (வீட்டில் அம்மாவையும் சேர்த்து எனக்கு மேலே மூன்று நபர்கள் இருந்தும்).அந்த பாசத்தை இன்றுவரை எனது தங்கையும் மறக்கவில்லை இப்பொழுதும்கூட அந்த தங்கைக்காகத்தான் வாழ்கிறேன்.

முதல் நபராக வந்து தமன்னா இட்டு, நீண்ட கருத்துரை எழுதி பப்ளிஷ் செய்யும் பொழுது கரண்ட் போய் விட்டது மனம் வெறுத்து போய் விட்டேன் மீண்டும் வருகிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

கீதாக்கா உங்களுக்கு எத்தனை நன்றிகள் பாருங்கள்! அத்தனைக்கும் ராயல்டி கேளுங்க!!!! (ஹப்பா நம்ம வேலை முடிஞ்சுச்சு!!!)

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

எனக்கு மிகவும் பிடித்த உறவு அண்ணன் உறவு! ஆனால் எனக்கு அப்படியான உறவு இல்லவே இல்லை! கூடப் பிறந்த அண்ணன் இல்லை. சரி உடன் பிறவா அண்ணன்? கல்லூரியில் படிக்கும் காலத்து இருந்தார். கவிதை எல்லாம் எழுதியும் தந்தார் கல்லூரி முடிந்த போது பிரியும் துயர் என்று...ஆனால் அதன் பின் தொடர்பே இல்லாமல் போனது!!! அப்போது அண்ணன் தங்கை பாடல்கள் பல பாடுவோம் வகுப்பில்...ரசித்து ரசித்து....ஃபேர்வெல் டேயின் போது கூட...

அனைத்தும் பிடித்த பாடல்கள்....

அது சரி இன்று ப்ரதர்ஸ் டேயா இல்லை ஸிஸ்டர்ஸ் டேயா...இல்லை ப்ரதர் ஸிஸ்டர் டேயா??!!!

கீதா

Pradeep Rajadas said...

அருமையான பகிர்வு
தமிழ் செய்திகள்

asha bhosle athira said...

/// அப்புறம் ஒரு ரஜினி நடிக்கும் காட்சி. பைரவி படத்தில் நண்டூறுது நரியூறுது...////

ஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ் மீ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்ன் அஞ்சூஊஊஊஊஊஊஉ ஓடிக் கமோன்ன்ன்ன்ன்:) ஸ்பெல்லிங் மிசுரேக்கு விட்டிட்டார் ஸ்ரீராம்ம்ம்ம்ம்ம்ம்... :) .. எனக்கு நெஞ்சு பொறுக்குதில்லையே:) டமில்ல ஆரும் எழுத்துப் பிழை விட்டால் மீ தாங்க மாட்டேன்ன்ன்:).. எனக்கு டமில்ல டி ஆக்கும்:)...

Thulasidharan V Thillaiakathu said...

ஒரு தங்க ரதத்தில் மிகவும் பிடித்த பாடல்....அது போலவீடியோ வாகப் பகிர்ந்திருக்கும் பாடலும்...

பைரவி பாடல் இளையராஜாதான்....

நீங்கள் பகிர்ந்திருக்கும் பாடலில் அவ்வளவாகக் கேட்டிராத, நினைவில் இல்லாத பாடல்களைக் கேட்க வேண்டும்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அதிரா....ரைப் ரைப்.....லாயல்டி லாயல்டி...ஓ ஸாரி ராயல்டி கேளுங்கோ ஸ்ரீராமிடம்!!!!

கீதா

asha bhosle athira said...

/// சரிங்க தோழர், போன வாரம் ஹிந்திப் பாடல் பகிர்ந்தீர்களே... இந்த வாரம் இல்லையா? என்று அதிரா. ஏஞ்சலின், நெல்லை ஆகியோர் ஆவலுடன் ( !!! ) கேட்பது காதில் விழுகிறது.///

இல்ல இல்ல இல்ல சத்தியமா அப்பூடி நாங்க ஆரும் எந்தக் கிளவியும்:).. ஹையோ டங்கு ஸ்லிப் ஆகுதே.. கேய்வியும்:) கேட்கவே இல்லை:).. நீங்க நாங்க கேட்டதா நினைச்சு.. ரெயினை ஹிந்தி ட்றக்:) ல ஓட விட்டிடாதீங்கோ பிளீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:).

Thulasidharan V Thillaiakathu said...

கமல் இல்லுமினாட்டி, இபுஞா பதிவு பார்த்துட்டேன்....அவர் தனது சந்தேகத்தை எழுப்பி, விஜய் டிவி அந்தக் குறியீடுகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்...

கீதா

நெல்லைத் தமிழன் said...

த ம +1. இடுகையைப் படிக்கும்போதே "தங்கைக்கோர் கீதம்" கில்லர்ஜி நினைவில் வந்துபோனார். தங்கை சென்டிமென்ட் டி.ஆர் உடையதாயிற்றே.

"வரிகள் சந்தங்களுக்குள் இடமில்லாமல் அடைந்துகிடக்கும்" - அவரின் அனேக பாடல்களில் இதுதான்.

asha bhosle athira said...

///Thulasidharan V Thillaiakathu said...
அதிரா....ரைப் ரைப்.....லாயல்டி லாயல்டி...ஓ ஸாரி ராயல்டி கேளுங்கோ ஸ்ரீராமிடம்!!!!

கீதா///

ஸ்ஸ்ஸ்ஸ் கீதா மெதுவா மெதுவா..:) அவருக்கு பாஆஆஆஆஆஆஆஆ...புக் காதாக்கும் நாம் நினைப்பதெல்லாம் கேட்குதே:) .. ஹிந்திப் பாட்டுக் கேட்கலாம் என நினைச்சதே கேட்டிடுச்செண்டால் பாருங்கோவன்:)..

நாங்க நித்திரை கொள்ளும் நேரமாப் பார்த்து மளமள என எழுதிப் போஸ்ட்டைப் போட்டிடுறார்.. போட்டிட்டு ஸ்ரெயிட்டா மேசைக்குக் கீழ ஒளிச்சிருந்து “விடுப்ஸ்” பார்க்கிறதே வேலையாப் போச்சு:).. நாம் இங்கின வந்து “மாரித்தவக்கை:” மாதிரி கத்தோ கத்தெனக் கத்தினாலும்.. வெளியே வாறாரா பாருங்கோ:)..
ஊசிக்குறிப்பு: எனக்கே சமீபத்திலதான் மாரித்தவக்கை என்றால் என்ன எனும் மீனிங் தெரிஞ்சது:) ஆனா பிறந்ததிலிருந்தே சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன் அதை:)..

நெல்லைத் தமிழன் said...

அவர் ஒலக நாயகன்னு அவங்க எழுதமாட்டாங்க. உலக்கை நாயகன்னு எழுதுவாங்க

நெல்லைத் தமிழன் said...

மாரித்தவக்கை - மாரி தவக்களை - மழை பெய்யும்போது நுணல் கத்திக்கொண்டே இருக்கும். அந்தப் சத்தத்தினால் பாம்பு கிட்ட அகப்பட்டுக்கொண்டான் (வாயசைவில் பாம்பு கண்டு லபக்) அதுதான அர்த்தம்? அதனால்தான் நுணலும் தன் வாயால் கெடும்னு பழமொழி வந்தது.

asha bhosle athira said...

///நெல்லைத் தமிழன் said...
மாரித்தவக்கை - மாரி தவக்களை//

ஹா ஹா ஹா மாரி காலத்தில் இரவிரவாக் கத்துமாம், கத்தி விடிஞ்சதும்.. தொண்டை வெடித்தே செத்திடுமாம் எனக் கேள்விப்பட்டேன்ன்ன்... அந்த மாரித் தவக்கை கத்தும் சத்தம் கேட்டதுண்டோ?:) நான் சின்ன வயதில் ஒரு மாதம் ஒரு ஆன்ரி வீட்டில் இருந்தபோது.. இரவில் ஆரம்பமாகிடும் கூக்குரல்.. நித்திரையே கொள்ள முடியாது அவ்ளோ சத்தம்.. அந்த ஆன்ரி சொல்லுவா.. “மோகன் - ரங்கன்” இசைக்குழுவினர் ஆரம்பிச்சிட்டினம் என:).. ஹா ஹா ஹா என்னா ஒரு ரசிப்புத்தன்மை:)

Thulasidharan V Thillaiakathu said...

என் தங்கை ஆயிரத்தில் ஒருவள்..ஃபூலோன் கா தாரோன் கா ..ஹிந்தி பாடல் சூப்பர்!!! தேவ் ஆனந்த் அவரே நடித்து இயக்கிய படம்.... இந்தப் படம் பார்த்திருக்கிறேன்...பல வருடங்களுக்கு முன்...திருமணத்திற்கு முன்..உபயம் ஹிந்தி தெரிந்த என் தங்கை...அவளுக்குத் தேவ் ஆனந்த் பிடிக்கும் என்பதாலோ எனக்கும் பிடிக்கும்!! பாடலைப் பார்த்ததும் தான் நினைவுக்கு வந்தது....தேவ் ஆனந்த் தன் தங்கையைத் தேடிப் போவார்...அது மட்டும் நினைவில் உள்ளது. மற்றபடி படம் நினைவில்லை..

முத்து முத்தான கண்ணீர்த்துளிகளை.....ப்யரா ஸா தேரா முக்தா....இதுவும் நல்லாருக்கு.!! ஆனால் ஆரம்ப வரிகள் புரியவில்லை...சத்தம் மிகவும் குறைவாக இருக்கிறது...நடிகர் ரந்தீர் கபூர் மலையாள நடிகர் மது வை நினைவுபடுத்துகிறார்..

.கீதா

Thulasidharan V Thillaiakathu said...

கில்லர்ஜி எழுதும் பதிவும் நினைவுக்கு வந்தது. தன் தங்கையைப் பற்றி...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

அவர் ஒலக நாயகன்னு அவங்க எழுதமாட்டாங்க. உலக்கை நாயகன்னு எழுதுவாங்க// நெல்லை நான் இப்ப அடிக்க வந்தேன்...நீங்களே சொல்லிட்டீங்க...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

மாரித்தவக்கை- மழை பெய்யும் காலத்தில் இந்தத் தவளை இருக்கே கத்திக்கிட்டே இருக்கும் ஆனா மாட்டிக்கும்...ஆனா அதிரா நீங்க என்ன கத்தினாலும் .....சரி விடுங்க போனா போகுது...ஸ்ரீராம் இன்னும் மேசைக்கடியிலேயேதான் இருக்கார். கௌ அண்ணன் வெளிய வரவே இல்லையாமே!!! கட்டிலுக்கடியில தேடுங்கோ...புதன் புதிர் அடுத்த வாரம்தான் வருவார் போல...சரி நாளை வராரா பார்ப்போம்...அது ரகசியம்..அதிரா....ஹிஹிஹி

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

உலக நாயகன் உலக்கை நாயகனாக மாறிவிட்டார்!!ஹாஹ்ஹ ஸ்ரீராம்...மாற்றிவிட்டீர்கள் சூப்பர். ஹப்பா கீதாக்கா இப்ப தைரியமா ராயல்டி கேக்கலாம்!!!ஹஹஹஹ்ஹ்

//லாயல்டியா... நோ... கீதா இது அடுக்ஸ்ஸாது!-ஹஹஹஹஹ்
மாரித்தவக்கைக்கு நெல்லை சொல்லியிருக்கும் விளக்கம் சரியா அதிரா அவர்களே?//

அதிரா ப்ரில் போட்டு நல்லா விளக்குங்க!!! இப்ப அதுதான் நல்லா போகுது!!!ஹிஹி

ஸ்ரீராம் இந்தத் தவக்கை மாரித் தவக்கை மாதிரி எல்லாம் இல்லை..வீட்டுக்குள்ள பீரோக்குள்ள இருந்துதான் கத்தும்!! இல்லியா அதிரா!!!

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம், ஆங்கிலத்தில் அண்ணன் என்று அடிப்பதற்குப் பதில் ப்ரதர் ஸிஸ்டர் ஸாங்க்ஸ் இன் டமில் மூவிஸ்னு தான் தேட முடியுது....கூகுள் தேவதை இன்னும் தமிழ் சரியா கத்துக்கலையாம்!!

கீதா

Angelin said...

@ATTTHIRAAAV கர்ர்ர்ர் மியாவ் சொல்லிட்டுதான் இனிமே மிஸ்டேக்குக்கு தட்டி கேக்க கூப்பிடனும்
ஸ்ரீராம் சரியாத்தான் சொல்றார் ..நண்டூறுது நரியூறுது கரெக்ட்தான் :)

Angelin said...

@ATHIRRRA //ஊசிக்குறிப்பு: எனக்கே சமீபத்திலதான் மாரித்தவக்கை என்றால் என்ன எனும் மீனிங் தெரிஞ்சது:) ஆனா பிறந்ததிலிருந்தே சொல்லிக்கொண்டுதான் இருக்கிறேன் அதை:)..

June 23, 2017 at 12:34 PM//
அதாவது கடந்த 79 ஆண்டுகளாகன்னு சொல்லுங்க :))))

Angelin said...

@ஸ்ரீராம் பாடல்கள் எல்லாம் நல்லா இருக்கு ..ஆனா ஓர் கவலை அண்ணன்தான் இல்லை எனக்கு

Angelin said...

நான் சிகப்பு மனிதனில் சித்தப்பா ஹாண்ட்ஸம்மா இருக்கார் :))

Angelin said...

//ஆனால் ஒன்று... திருமணத்துக்குமுன் அண்ணன் என்றும் தங்கை என்றும், தம்பி என்றும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழும் நாம், திருமணத்துக்குப்பின் எங்கெங்கோ பிரிந்து, வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு மனநிலையில் பாசம் குறைந்து போகிறோமோ?//

இல்லையாம் என் கணவர் சொல்றார் :)

asha bhosle athira said...

///Angelin said...
@ஸ்ரீராம் பாடல்கள் எல்லாம் நல்லா இருக்கு ..ஆனா ஓர் கவலை அண்ணன்தான் இல்லை எனக்///

அதுக்குத்தானே கோபு அங்கிள்.. வெரி சோரி.. கோபு அண்ணா இருக்கிறாக.... ஊரில கொட்டிக்கிடக்கும் தங்கம் வைரம் எல்லாம் அள்ளி அள்ளிச் எனச் சீதனம் தருவார் தங்கைக்கு:).. ஊரிலுள்ள பாட்டெல்லாம் எடுத்து வந்து பாடுவார்ர்:).. இதை விட வேறென்ன வேணும் நீங்களுக்கு?:) சொல்லுங்கோ அஞ்சு?:))... ஹா ஹா ஹா :) அவர் இதைப் படிக்க மாட்டார் எனும் தெகிரியத்தில எழுதிட்டேன் அஞ்சு படிச்சதும் ரெயார் இட் பீஸ்ஸ்ஸ்ஸ்:).

KILLERGEE Devakottai said...

Angelin
////சித்தப்பா ஹாண்ட்ஸம்மா இருக்கார் :))///// ஹா... ஹா... ஹா...ஸூப்பர்

Anonymous said...

கண்ணே நான் அண்ணன் அல்ல - பாடல் என்னோட பேவரைட்.

asha bhosle athira said...

///பின்குறிப்பு : அண்ணன் என்று "ரைப்" (நன்றி அதிரா) அடித்தால் ///

ஈன்ற பொழுதிலும் பெரிதுவக்கும் தன் மகனை.... என்பதுபோல:).. மீ டமிலில் “டி” எடுத்ததன் பெருமையை:).. இப்போ ஸ்ரீராமின் அழகான:).. கரீட்டான:) டமில் பார்த்து பூசிச்சிட்டேன்ன்:).. இண்டைக்குத்தான் ஸ்ரீராம் கரெக்ட் டமில்ல பேசுட்டார்ர்ர்ர்:))..

ஹையோ இதைப் பார்த்ததும் எங்கட நெல்லைத்தமிழன் ஓடிப்போய் அந்த.. பாலைவனச் சுடுமணலில் பிறதட்டை பண்ணிடப்போறாரே,,,, ஆஆஆஆஆவ்வ்வ்வ் அஞ்சூஉ கீதாஆஆஆஆஆ முதல்ல பயர் எஞ்சினுக்கு அடிச்சு நெ.த நைக் காப்பத்துங்கோஓஓஓஓஓஒ.. இல்லையெனில் எங்கள் புள்:ஒக்குக்கு போலீசூஊஊஊஊ வரப்போகுதே.... போலீஸ் வந்து ஸ்ரீராமை மேசைக்குக் கீழே பார்த்தால்ல்ல்ல் விசாரணையே தேவையில்லாமல் ஸ்ரெயிட்டாஆஆஅ.. கம்பிதேன்ன்ன்ன்ன்:)

ஹையோ இப்போ மீ என்ன பண்ணுவேன்ன்ன் நேக்கு காண்ட்ஸ் உம் ஓடல்லே.. லெக்ஸும் ஆடல்லேஎ:)

asha bhosle athira said...

///Angelin said...
//ஆனால் ஒன்று... திருமணத்துக்குமுன் அண்ணன் என்றும் தங்கை என்றும், தம்பி என்றும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழும் நாம், திருமணத்துக்குப்பின் எங்கெங்கோ பிரிந்து, வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு மனநிலையில் பாசம் குறைந்து போகிறோமோ?//

இல்லையாம் என் கணவர் சொல்றார் :)///

அன்பு குறையாது.. நீறு பூத்த நெருப்பு போல இருக்கும்.. தூரப் போயிடுவதனால்:).

asha bhosle athira said...

///Angelin said....

June 23, 2017 at 12:34 PM//
அதாவது கடந்த 79 ஆண்டுகளாகன்னு சொல்லுங்க :))))///

விடுங்கோ விடுங்கோ... என்னை அஞ்சு இப்படி ஒரு பபுளிக்குப் பிளேசில மானபங்கப்படுத்திட்டாஆஆஆ... மீ தேம்ஸ்ல குடிக்கப்போறேன்ன்:)... ஆஆஆஆஆஆஆ நோஓஓஓஓஓஒ இண்டைக்கு குதிக்க மாட்டேன்ன் ஏனெனில் வெள்ளிக்கிழமை ஆச்சே:).. வெள்ளிக்கிழமை உசிர் தனியே போகாதாம்ம்:) அதனால இண்டைக்கு வாணாம்ம்ம்.. நாளைக்குப் பார்த்துக்கலாம்:)..

asha bhosle athira said...

///Angelin said...
@ATTTHIRAAAV கர்ர்ர்ர் மியாவ் சொல்லிட்டுதான் இனிமே மிஸ்டேக்குக்கு தட்டி கேக்க கூப்பிடனும்
ஸ்ரீராம் சரியாத்தான் சொல்றார் ..நண்டூறுது நரியூறுது கரெக்ட்தான் :)///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்: ஹையோ ஹையோ இதைத்தட்டிக் கேட்க இங்கின ஆருமே இல்லையாஆஆஆஆஆஆஆஆஆ?:) ஊருவது வேறு.. ஊறுவது வேறு:) ... ஊறுவது உழுந்து, பருப்பு, உடைகள் தண்ணியில் ஊறுவது.... ஊருவது என்பது புழு.. பூச்சி.. மசுக்குட்டி:)... ஊர்ந்து ஊர்ந்து போவது:).. விடமாட்டேன்ன் இப்பவே போகிறேன்ன் பிரித்தனியாக் காண்ட் கோர்ட்டுக்கு:)

asha bhosle athira said...

///.புதன் புதிர் அடுத்த வாரம்தான் வருவார் போல...சரி நாளை வராரா பார்ப்போம்...அது ரகசியம்..அதிரா....ஹிஹிஹி

கீதா///

நோஓஓஓஒ இண்டைக்குத்தான் கெள அண்ணனின் ரேன்:).. நாளைக்கு ஸ்ரீராமின் முறையாக்கும்:) அதனால மீண்டும் அடுத்த புதன் புதிரில் ஒருவேளை:) அவர் வெளியே வரலாம்ம் பட்ட்ட்ட்ட் அதிரா வருவேனாஆஆஆஆஆ????:).

asha bhosle athira said...

///Friday, June 23, 2017
வெள்ளி வீடியோ : ஏழேழு ஜென்மம் இந்த அண்ணன் தங்கை சொந்தம் வேண்டும்//

அப்போ எட்டாவது ஜென்மத்துல வாணாமோ?:) கர்ர்ர்:) பீஸ்ஸ்ஸ்ஸ் ஆராவது கிளியர் மை டவுட் பீஸ்ஸ்ஸ்ஸ்ஸ்:)..

எப்பூடிக் கத்தினாலும் யாரும் வாயே திறக்க மாட்டினமாமே:).

Anonymous said...

திருமணத்துக்குமுன் அண்ணன் என்றும் தங்கை என்றும், தம்பி என்றும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழும் நாம், திருமணத்துக்குப்பின் எங்கெங்கோ பிரிந்து, வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு மனநிலையில் பாசம் குறைந்து போகிறோமோ?// Yes and No. பாசம் குறையுமா என்றால், குறையாது என்றே கூறுவேன். பட், அப்போ வெளிப்படுத்திய அதே முறையில், அளவில் வெளிப்படுத்த முடிவதில்லை என்பதும் உண்மைதான்.

asha bhosle athira said...

///http://sivamgss.blogspot.co.uk/2017/06/blog-post_23.html///


ஆவ்வ்வ்வ்வ் கீதாக்காவின் நம்ம ஏரியாக் கதை இங்கே வெளியாகியிருக்கு எல்லோரும் ஓடுங்கோ:) தற்செயலாத்தான் பார்த்தேன்ன் இல்லாட்டில் தெரிஞ்சிருக்காது... இப்படி கதை எழுதுவோர்.. இங்கினயும் ஒரு தகவல் சொல்லுவது நல்லதே.. அல்லது ஸ்ரீராம் ஆவது, அன்றைய நாள் எங்கள்புளொக் போஸ்ட்டில் ஒரு ஊசிக்குறிப்புக் கொடுப்பது நல்லதே.... எதுக்கும் விளம்பரம் தேவை.. இல்லை எனில் பலருக்கு தெரியாது..

Thulasidharan V Thillaiakathu said...

ஐயோ...அதிரா தமிழ்ல டி போடக்கூடாது...நிறைய பேருக்குக் கோபம் வந்துரும்....ஹிஹிஹி

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஏஞ்சல்.....79...ஹஹஹஹ..அப்படிப் போடுங்க

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

தட்ஸ் பீகாஸ் ஆப் யு ஏஞ்சல்!!.இது போன்று எக்ஸெப்ஷன்ஸ் உண்டு...பட் பல குடும்பங்களில்....அந்த பாசம் மறைந்து அல்லது வெளிப்படுத்த முடியாத ஒன்றாகி விடுகிறது

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

நம்ம ஏரியாவில் கௌ அண்ணன் இன்று வெளியில் வந்திருப்பார்....என்று நினைக்கிறேன்....நான் விரிவாகப் பார்க்கலை அதிரா

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஓ அது கீதாக்காவா.... குரோம்பேட்டை குறும்பன் என்று இருந்தது....நான் இன்னும் சரியா பார்க்கலை....போறேன்...

கீதா

G.M Balasubramaniam said...

பின்னூட்டங்களில் மாரித்தவக்கை என்பதைப் பார்க்கு ம்போது
”ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே குறி
மலையாளமின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே
நேற்றுமின்றும் கொம்பு சுற்றி காற்றடிக்குதே
கேணி நீர் படு சொறித்தவளை கூப்பிடுகுதே “ என்னும் பழைய பாடல் (சினிமாப்பாட்டு அல்ல) நினைவுக்கு வருகிறது

asha bhosle athira said...

///Angelin said...
//ஆனால் ஒன்று... திருமணத்துக்குமுன் அண்ணன் என்றும் தங்கை என்றும், தம்பி என்றும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழும் நாம், திருமணத்துக்குப்பின் எங்கெங்கோ பிரிந்து, வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு மனநிலையில் பாசம் குறைந்து போகிறோமோ?//

இல்லையாம் என் கணவர் சொல்றார் :)///

///Thulasidharan V Thillaiakathu said...
தட்ஸ் பீகாஸ் ஆப் யு ஏஞ்சல்!!.இது போன்று எக்ஸெப்ஷன்ஸ் உண்டு...பட் பல குடும்பங்களில்....அந்த பாசம் மறைந்து அல்லது வெளிப்படுத்த முடியாத ஒன்றாகி விடுகிறது

கீதா///
ஹா ஹா ஹஹ தட் பிக்கோஸ் ...குளுக்கோஸ்:) இதுக்கு யான் ஒரு பதில் சொல்லிடுறேன்ன்ன்:)..

அதாவது அதிரா காட்டும் அதீஈஈஈஈஈஈஈஈஈஈஈத அன்பிலே.. பாசத்திலே.. அப்பூடியே நனைஞ்சு குளிர்ந்து.. அகிலம் எல்லாம் மறந்து தங்கை பாசம் எல்லாம் குறைஞ்சு போயிடும் ஆத்துக்காரருக்கு:)...

ஆனா அஞ்சு காட்டும் பாசம் பத்தல்ல:) அதனாலதான் இன்னும் தங்கை பாசம் குறையல்லே எனச் சொல்லிட்டு இருக்கார்ர் அஞ்சுட ஆத்துக்காரர்:)..

ஹா ஹா ஹா ஹையோ வைரவாஆஆஆஆஆஆ இண்டைக்கு ஆராலயுமே அடிராவை சே.. சே.. அதிராவைக் காப்பாத்தேலாமல் போயிடப்போகுதேஏஏஏஏஏஏஏ :)... மீ ஜம்பிங்:).. வெள்ளிக்கிழமை எண்டால் என்ன?:) மீக்கு மானம் முக்கியம்:)

https://aws.boxofficebuz.com/shows/video-images/planet-earth-ii-extended-series-trailer.jpg

asha bhosle athira said...

///G.M Balasubramaniam said...
மலையாளமின்னல் ஈழமின்னல் சூழ மின்னுதே ///

ஆஹா ஈழத்தையும் மலையாளத்தையும் இணைச்ச பாட்டோ.. சூப்பர் ஜி எம் பி ஐயா.

Angelin said...

//அதுக்குத்தானே கோபு அங்கிள்.. வெரி சோரி.. கோபு அண்ணா இருக்கிறாக.... ஊரில கொட்டிக்கிடக்கும் தங்கம் வைரம் எல்லாம் அள்ளி அள்ளிச் எனச் சீதனம் தருவார் தங்கைக்கு:)..//

இல்லை அதிரா எனக்கு சீதனம் வேணாம் ஆனா அண்ணனுக்கு பொண்ணு பார்க்கணும் நானே செலக்ட் பண்ணனும் அண்ணியைன்னு சின்ன வயது ஆசை ..:)
என் சிஸ்டரின்லா அவங்கதான் எல்லா அண்ணன்களுக்கும் ஓடித்திரிஞ்சு அண்ணிங்களை சூஸ் பண்ணின்னார் :) அதெல்லாம் பார்த்தப்போ இன்னும் ஆசையா ஏக்கமா இருந்தது ..

அதனால் எனக்கு இன்ஸ்டன்ட்டா ஒரு அண்ணன் வேணும் அவருக்கு நானே அழகான பொண்ணு பார்க்கணும்

இந்த கமெண்டை பார்த்துட்டு மதுரை தமிழன் எங்கிருந்தாலும் வருவார் பாருங்களேன் :))

Angelin said...

@ geethaa ..குரோ குறு நம்ம ஏரியாவிலும் கீதாக்கா அவங்க பக்கத்திலும் கதை போட்டாச்சு :)

Angelin said...

ஆனா அஞ்சு காட்டும் பாசம் பத்தல்ல:) அதனாலதான் இன்னும் தங்கை பாசம் குறையல்லே எனச் சொல்லிட்டு இருக்கார்ர் அஞ்சுட ஆத்துக்காரர்:)..//


@athiraavvvv !"$$£&%*&YJG%TBBQETYUIUJN !£$%*(PL+_)(*^%T garrrr

Angelin said...

@geetha
தட்ஸ் பீகாஸ் ஆப் யு ஏஞ்சல்!!.இது போன்று எக்ஸெப்ஷன்ஸ் உண்டு...பட் பல குடும்பங்களில்....அந்த பாசம் மறைந்து அல்லது வெளிப்படுத்த முடியாத ஒன்றாகி விடுகிறது//
//

தாங்க்யூ தாங்க்யூ கீதா :)

நெல்லைத் தமிழன் said...

அதிரா -- நீங்க தமிழ்லதான் டிஸ்டிங்ஷன் போல் இங்கிலீஷ்ல காலியா? ஏழேழு ஜென்மம்னா 7 X 7 பதினாலு ஜென்மத்துலயும். எட்டு, பதினாலுக்குள்ளதானே. அப்ப பதினாலுக்கப்புறம்... ஆயுள் தண்டனையே 14 வருஷம்தானே.

நெல்லைத் தமிழன் said...

ஏஞ்சலின் -- நான் சிகப்பு மனிதனில் சித்தப்பாவா? அவர் எனக்குத் தாத்தான்னா? இப்போதான் நீங்க கேட்ட அண்ணன் நான்னு சொல்லலாம்னு நினைச்சா நீங்களே எனக்கு சித்தி வயது போலிருக்கே!

நெல்லைத் தமிழன் said...

GMB Sir.. முக்கூடல் பள்ளு - பள்ளியில் படித்தது. நினைவுபடுத்தி விட்டீர்கள். (ஆற்று வெள்ளம் நாளை வரத் தோற்றுதே...)

கரந்தை ஜெயக்குமார் said...

Tha ma +1
From cell phone

Angelin said...

June 23, 2017 at 5:34 PM
@ நெல்லைத் தமிழன் said...
//ஏஞ்சலின் -- நான் சிகப்பு மனிதனில் சித்தப்பாவா? அவர் எனக்குத் தாத்தான்னா? இப்போதான் நீங்க கேட்ட அண்ணன் நான்னு சொல்லலாம்னு நினைச்சா நீங்களே எனக்கு சித்தி வயது போலிருக்கே!//

ஹாஹா ஏற்கனவே நான் சித்தப்பாவாக்கினதுக்கு அவர் ரசிகர்கள் என்னை வலை வீசிதேடறாங்களாம் :)நீங்க தாத்தான்னு சொல்ரீங்க :)

ஹாஹா :) உங்க ஹஸ்பண்ட் போதும் உங்களுக்கு ..நினைச்சேன் அண்ணி தேடலாம்னு கமெண்ட் போட்டதும் வரிசையா அண்ணங்களா வருவங்களேன்னு :) என்னா ஆசை :) தோசை அப்பள வடை

asha bhosle athira said...

/////Angelin said...//அதனால் எனக்கு இன்ஸ்டன்ட்டா ஒரு அண்ணன் வேணும் அவருக்கு நானே அழகான பொண்ணு பார்க்கணும்///

நெல்லைத் தமிழன் said...
ஏஞ்சலின் -- நான் சிகப்பு மனிதனில் சித்தப்பாவா? அவர் எனக்குத் தாத்தான்னா? இப்போதான் நீங்க கேட்ட அண்ணன் நான்னு சொல்லலாம்னு நினைச்சா///

ஹா ஹா ஹா கர்:) ஹையோ அபச்சாரம் அபச்சாரம்....:) பொண்ணு பார்க்கிறேன் என்றதும் எல்லோரும் இப்பூடி முந்தி வருகினமே:)...

இருந்தாலும் ஓகே... அஞ்சு என் கனவில 3 அண்ணன்கள்[ஹா ஹா ஹா] வாறாங்க:))... .. ம.த, நெ.த, ஸ்ரீ...:).. பார்க்கிறதுதான் பார்க்கிறீங்க... மூவராப் பாருங்கோ.. ஆனா ஒண்ணு பெண்ணின் படங்களை மீ அனுப்புவேன்ன்.. நீங்க ஆராருக்கு எது ஓகேயாகும் என செலக்ட் பண்ணிடுங்கோ:)

Angelin said...

@athiraa சீக்கிரம் அனுப்புங்க நாளைக்கே தேதி முடிவு பண்ணிடலாம்

asha bhosle athira said...

///நெல்லைத் தமிழன் said...
அதிரா -- நீங்க தமிழ்லதான் டிஸ்டிங்ஷன் போல் இங்கிலீஷ்ல காலியா? ஏழேழு ஜென்மம்னா 7 X 7 பதினாலு ஜென்மத்துலயும். எட்டு, பதினாலுக்குள்ளதானே. அப்ப பதினாலுக்கப்புறம்... ஆயுள் தண்டனையே 14 வருஷம்தானே//

அஞ்சூஊஊஊஊஊஉ கொஞ்சம் ஓடிக்கம்ம்ம்ம்:) 7 * 7 = பதின்நான்கு என்பது கணக்கெல்லோ?:) இதில இங்கிலீசு வருதாஆஆஆஆஆஆஆஆஆஅ?:).. தனக்கு பொண்ணு பார்க்கல்ல எனும் கோபத்தில இப்பூடிச் சொல்லிட்டார்ர் கர்:) இருங்க இதோஓஓஓஓஓ பொண்ணோட வாறேஏஏஏஏஏன்ன்ன்ன்ன்:)..

ராஜி said...

பாட்டு பிரியையான எனக்கு எந்த பாட்டும் சட்டுன்னு நினைவுக்கு வரலியே!

asha bhosle athira said...

http://tamil.oneindia.com/img/2016/07/26-1469512557-sivaji-rajini-movie-angavai-sangavai-600.jpg

http://eluthu.com/images/poemimages/f25/gqkmj_257104.jpg///

அஞ்சூஊஊஊஊஊ மேலே இருக்கும் அழகிகளை நெ.த வுக்கும்.. ம.த நுக்கும் செலக்ட் பண்ணிடுங்கோ

இங்கு கீழே இருக்கும் இஞ்சி இடுப்பழகி ஸ்ரீராமுக்கேஏஏ.... இதை நானே சொல்லிடுறேன்ன்..:).. ஆனா ஒண்ணு பொம்பிளைகளுக்கு மாப்பிள்ளைதான் டவுரி கொடுக்கோணும்ம்ம்:)

http://eluthu.com/images/data/vimarsanam/f0/219/eswvb219.jpg

Srikanth said...

பிரமாதம். அடுத்து அண்ணன், தம்பி பதிவு போட வேண்டுகிறேன்

Thulasidharan V Thillaiakathu said...

அதிரா வருவேனாஆஆஆஆஆ????:).// அப்ப தேம்ஸ்ல ஒளிஞ்சுருக்கப் போறீங்களா?!! அத்தனைக்கு மூச்சு தம் பிடிக்க முடியுமா!! வாவ்!!!! அதுவும் 80 வயசுல கின்னஸ் ரெக்கார்ட்!!!!!!!

கீதா

Angelin said...

அதிராவ் நான் மல்ட்டியை கூட்டிட்டு வரத்துக்குள்ள நீங்களே சூப்பரா செலக்ட் செஞ்சு கொடுத்திட்டிங்க :)

ஸ்ரீராம் எங்கே இங்கே காணோமே :)))

ஆரத்தி எடுக்கும்போது என் தட்டில் தங்க நாணயாம் விழணும் சொல்லிட்டேன் :)

அதிரா வாங்க நாம ஹேர்டு மேக்கப் எல்லாம் போட்டு தயாராவோம் :)

asha bhosle athira said...

ஆஆஆஆங் அஞ்சூஊஊ நான் இப்போ பியூட்டி பாலர்லதான் இருக்கிறேஏஏஏஏன்ன்ன்...

உங்களுக்கு எல்லா அண்ணிங்களும் பிடிச்சிருக்காஆ? அருக்காணி அண்ணி ஆருக்கூஊஊஊஉ???

Thulasidharan V Thillaiakathu said...

நெல்லை என்னாச்சு மாரித்தவக்கை மாட்டிக்கும்னு அதிராவைச் சொல்லிட்டு நீங்க மாட்டிக்கிட்டீங்களே அதிராகிட்ட....ஹஹஹ்ஹ் 7*7 = 14 நு சொல்லி மாட்டிக்கிட்டீங்களே!!!! இப்படி ஹஹஹ்ஹ்

கீதா

asha bhosle athira said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * 342567289 போர் கீதா:)

Thulasidharan V Thillaiakathu said...

அதிரா உங்களுக்கு ஒன்னு தெரியுமா இலங்கைத் தமிழுக்கும், மலையாளத்திற்கும் கொஞ்சம் லிங்க் உண்டு. அது போல உணவுப்பழக்கம், உடை முறைகள் என்றும் ஒற்றுமை உண்டு.

கீதா

Angelin said...

//உங்களுக்கு எல்லா அண்ணிங்களும் பிடிச்சிருக்காஆ? அருக்காணி அண்ணி ஆருக்கூஊஊஊஉ???//

angavai sangavai and anush only are here :) angavai for america sangavai for nellai thamizhan and anush only for sreeram :)))))))))))

asha bhosle athira said...

//Thulasidharan V Thillaiakathu said...
அதிரா உங்களுக்கு ஒன்னு தெரியுமா இலங்கைத் தமிழுக்கும், மலையாளத்திற்கும் கொஞ்சம் லிங்க் உண்டு. அது போல உணவுப்பழக்கம், உடை முறைகள் என்றும் ஒற்றுமை உண்டு.

கீதா//

யேஸ் யேஸ்ஸ் தெரியும் கீதா.. என்னமோ ஒரு பொருத்தம் இருக்கு..

asha bhosle athira said...

//angavai sangavai and anush only are here :) angavai for america sangavai for nellai thamizhan and anush only for sreeram ://

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், 2 வது லிங் பாருங்கோ அருக்காணி அண்ணி ரொம்ப அயகா இருக்கா:)...

ஊசிக்குறிப்பு:
இன்று அதிகம் கொமெண்ட்ஸ் போட்டிட்டேனாம்ம்ம் எல்லா இடத்திலும், அதனால ரோபோ தலையை வெளியே நீட்டத் தொடங்கிட்டுது கர்ர்ர்:) இனி நான் எஸ்கேப் ஆகிறேன்ன்ன்:)

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை...

அடியேனுக்கே போட்டியா...? வாழ்க...

நெல்லைத் தமிழன் said...

ஏஞ்சலின் எங்கிருந்தாலும் வரவும். நான் போட்டிருந்தது 7 + 7. பூசார் குதிச்ச குதில + ஆடி x னு ஆச்சுன்னு தோணுது. நீங்க என்ன சொல்றீங்க? அப்பத்தான் கீதா ரங்கனுக்கு தப்பு என்னோட கணக்குல இல்லை, பூசார் ஆட்டத்துலன்னு தெரியும். கன்ஃபர்ம் பண்ணுங்க.

Angelin said...

@ நெல்லைத்தமிழன் ஆமா ஆமா ..நீங்க சொல்றதுதான் கரெக்ட் ..இந்த பூனை டயட் செய்றேன்னு சொல்லிட்டு மூக்கு முட்ட சாப்புடறாங்க ..எத்தினி தடவை சொல்லியிருக்கேன் அத்திகிறா நாங்க கமெண்ட் போடும்போது கை காலாட்டக்கூடாதுன்னு :)
இப்போ பாருங்க ப்ளஸ் சைன் x ஆயிருச்சு :)

Angelin said...

..எத்தினி தடவை சொல்லியிருக்கேன் அத்திகிறா /// thats athiraa

நிஷா said...
This comment has been removed by the author.
நிஷா said...

ஆஹா இந்த அண்ணன் தங்கை பாசம் பற்றிய பாடல் தொகுப்பை நான் ஏற்கனவே ஒரு பதிவாக இட்டிருந்தேன். இந்த லிங்கில் பாருங்கள்.. http://www.chenaitamilulaa.net/t51491-topic .


தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு பாடலுடன் காட்சிகளும் பிடிக்கும், சாமந்திப்பூப்போல சாய்ந்தாடம்மா எனும் பாடல் அந்த காட்சி அமைப்பு பாடல் வரிகளுக்காகவே பிடிக்கும்.

Bagawanjee KA said...

நான் சொல்வதற்கு ஒன்றுமில்லாத அளவுக்கு அ த பாசப் பாடல்களை நீங்களே சொல்லி விட்டீர்களே :)

நிஷா said...
This comment has been removed by the author.
பி.பிரசாத் said...

பாசக்கார ஆராய்ச்சி ! ரசித்தேன் !

நிஷா said...

எனக்கு அண்ணா இல்லை எனும் கவலை இருந்தது. ஆனால் கடந்த பத்து வருடமா உடன் பிறந்த அண்னாவை விட என்னில் அன்பும் பாசமும் அக்கறையையும் காட்டும் அண்ணாவை முத்தமிழ் மன்ற இணையத்தளம் கொடுத்தது. இன்றைக்கு எங்கள் இரு குடும்ப நட்பும் திருமணத்துக்கு பின்னர் தான் அன்பு கூடியது போல பாசமாக இருக்கின்றோம். அண்ணா மட்டுமல்ல அண்ணாவின் அம்மா, தம்பிக்கு நான் அவர்கள் வீட்டுப்பெண் தான். என் பிள்ளைகளுக்கு மாமா எனில் நினைவுக்கு வரும் முதல் உறவாயும் ஆனான். அண்ணா எனின் சினிமாவில் காட்டும் பாசம் நடிப்பு போலிருக்கும், ஆனால் உண்மையில் அதை விட மேன்மையானது அண்ணனின் அன்பு என்பதை எங்கள் வீட்டில் வளரும் மகன் மகளை வைத்து கண்டிருக்கின்றேன்.தங்கைக்கு நாங்கள் கோபமாக திட்டினால் அவள் தப்புச்செய்தாலும் அவனுக்கு தான் கோபம் வரும். தங்கைக்கு திட்டக்கூடாதென அப்பாவுடன் மூன்று நாள் பேசாமல் கோபமாயிருந்ததும் உண்டு.. அதே போல் வீட்டில் ஏதேனும் பிரச்சனை எனில் மகள் தேடுவதும் அண்ணனைத்தான்.அண்ணா வீட்டில் இருந்தால் எனக்கு இப்படி திட்டுவீர்களா என கேட்பது அடிக்கடி எங்கள் வீட்டில் நடக்கும் விடயம்.

சினிமாக்களில் இந்தப்பாசம் அதீதமாகக்காட்டப்படுகின்றதோ என நாம் நினைப்போம். நிஜத்திலும் உள்ளுக்குள் இருக்கும் உணர்வை வெளிப்படுத்த தெரியாத, முடியாத பல அண்ணன் தங்கைகள் உண்டு. தூரமானாலும் உள்ளத்தில் நெருக்கமானோராய் இருப்பதை காணும் போது பிறந்தால் அண்ணனுக்கு தங்கையாக பிறக்க வேண்டும் என தோன்றும். அண்ணா எனின் அன்பு மட்டுமல்ல அக்கறை பாதுகாப்பும் தான். அண்ண்ன் இருக்கின்றான் என்பதே அதீத தைரியம் தருவதும் தான்.

Angelin said...
This comment has been removed by the author.
couponsrani said...

amazon offers Very nice article, a very good read.

Angelin said...

//மாரித்தவக்கைக்கு நெல்லை சொல்லியிருக்கும் விளக்கம் சரியா அதிரா அவர்களே?//


தமிழில் டீ குடித்த தலைவி செந்தமிழ் செல்வி பொன் parrot பரிசு பெற போகும் கவிதாயினி புலவி:) வந்து பதில் சொல்லவும்

Angelin said...

அதிரா நீங்கள் எழத சொன்ன மாதிரி எழதிட்டென் .ஒகெவா ;)

Geetha Sambasivam said...

ஆஹா! நேத்திக்கு கணினி அப்டேட் பண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ண்ணிட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்டே இருந்தது! மணிக்கணக்கா ஆச்சா! இந்தக் கும்மியைப் பார்க்கவே முடியலை! என்னை வைச்சு அடிச்ச கும்மிக்கு ராயல்டி தரணும்!
அதிரா, ஏஞ்சலின், தில்லையகத்து கீதா, சரியா? நீங்கல்லாம் சொன்னாப்போல் ராயல்டி கேட்டுட்டேன்! :)))))

Geetha Sambasivam said...

ஆச்சரியமாக இதில் உள்ள பெரும்பாலான பாடல்களைக் கேட்டிருக்கேன். உல(க்)கை நாயகன் பாடல்களைத் தவிர்த்து! அவர் தங்கை பாசத்துக்கு உருகி இருக்காரா என்ன? தெரியலை! ரஜினி படப்பாடல் நான் சிவப்பு மனிதன்! படத்திலே கேட்டதில்லை. :)))))

Geetha Sambasivam said...

அண்ணனோ, தங்கையோ அவரவர் குடும்பம் என்று ஆன பின்னால் பாசம் திசை மாறுவதே உண்மை!

கோமதி அரசு said...

பகிர்ந்த பாடல்கள் அனைத்தும் நல்ல பாடல்கள்.
ரசித்து கேட்டவை.
மீண்டும் கேட்க வாய்ப்பு நன்றி.

ஸ்ரீராம். said...

ஜெய்சங்கர் பாடல்களில் இணைக்க மறந்து விட்ட மிக முக்கியமான பாடல் ஒன்றை இப்போது இணைத்துள்ளேன். உயிரா மானமா படத்தில் வரும் "கொடியில் இரண்டு மலர் உண்டு.." என்னும் பாடல். பதிவை எழுதிக்கொண்டே வரும்போது நினைவில் இருந்தது. ஒரு கொடியில் இருமலர்கள் பாடலை இணைத்தவுடன் இதை இணைக்க மறந்து விட்டேன் போலும்!

kg gouthaman said...

எனக்குப் பிடித்த அண்ணன் தங்கை பாடல், போலீஸ்காரன் மகள் படத்தில், "இந்த மன்றத்தில் ஓடி வரும் ...."

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!