Friday, June 16, 2017

வெள்ளிக்கிழமை : 'மேரி நைனா'வும் சிவரஞ்சனியும்!

     'நான் அதிகமாக ஹிந்திப் பாடல்கள் கேட்டதில்லை' என்று சொல்லியிருந்தார் நெல்லைத்தமிழன்.  அவருக்கு இந்தப் பாடலைக் கேட்க சிபாரிசு செய்கிறேன்.  அழகு ராஜேஷ் கன்னாவுக்காக, அழகு ஹேமமாலினிக்காக,  காட்சியுடன்  தனியாக ஒருமுறையும்,  காட்சியைப் பார்க்காமல் கிஷோர் குமார் குரலை மட்டும் ஒருதரமும் கேட்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.  (அதிரா...  ஹிந்திப் பாடல்கள் கேட்டிருக்கிறீர்களோ?  இதை முழுசாக் கேட்கோணும்... சொல்லிப்போட்டேன்!!)


     பாடல் ஒன்றை ரசிக்க காணொளி தேவையில்லை, கவனம் திருப்பும் என்பது என் அபிப்ராயம்.  காட்சியைக் காணும்போது பாடலின் இனிமையை, பாடகரின் குரலின் குழைவை ரசிப்பதில் கவனம் சிதறுகிறது.  (கில்லர்ஜி பாடகர் ஒருவர் பற்றி போட்டிருக்கும் பதிவு நினைவுக்கு வந்து "அந்தப் பாடகர் யாராயிருக்கும்" என்ற கேள்வி மனத்தைக் குடைகிறது!) ஆனால் என்ன செய்ய?  இன்று 'வீடியோ கிழமை'.  வீடியோ பகிரவேண்டிய கட்டாயம்!  


     இந்தப் பாடலில் கிஷோரின் குரலைத்தான் முக்கியமாகச் சொல்லவேண்டும்.  அர்த்தம் புரிந்தால் வரிகளையும் மிகமிகமிகமிக ரசிக்கலாம்.  என் அபிமான பாடகர்.  என் அபிமான இசை அமைப்பாளர்.  இந்தப் பாடல் அமைந்துள்ள ராகம் சிவரஞ்சனி.  இந்தப் பாடலைக் கேட்கும்போதே இதே ராகத்தில் வேறு சில பாடல்களும் உங்களுக்கு நினைவுக்கு வரவேண்டும். ஏனென்றால் இந்த ராகத்தில் பல பாடல்களை பலரும் அமைத்திருக்கிறார்கள்.  சில பாடல்கள் எனக்கே "அப்படியா?  இதுவும் சிவரஞ்சனியா?" என்று ஆச்சர்யப்படவைத்தது!  (ராமலிங்கம் ராஜீவனுக்கு ஆச்சர்யம் இருக்காது.  அவரும் ராகங்கள் தெரிந்து பாடல்கள் ரசிக்கிறார்.  பாடலை முழுமையாகக் கேட்பீர்கள் இல்லையா ராரா?)


     ஹிந்தியில் மேரா நாம் ஜோக்கர் படத்தில் முகேஷ் பாடிய "ஜானே கஹாங்..  கயே ஓ தின்.." பாடல், ஏக் துஜே கேலியே படத்தில் எஸ் பி பி லதா மங்கேஷ்கர்  பாடும் "தேரே மேரே பீச் மெயின்" 


     தமிழில் நான் அடிமை இல்லை படத்தில் வரும் "ஒரு ஜீவன்தான்", நட்சத்திரம் படத்தில் வரும் "அவளொரு மேனகை" இதயகோவில் படத்தில் வரும் "வானுயர்ந்த சோலையிலே"  பாடல் ஆகியவற்றைச் சொல்லலாம்.  இவை பெரும்பாலும் சோகராகமாகவே அமைந்த பாடல்கள் என்று பார்த்தால் திருடா திருடா படத்தில் வரும் "கண்ணும்  கண்ணும் கொள்ளையடித்தால்"  பாட்டு கூட இதே ராகம்தானாம் (ஏஞ்சலின்... ஹிந்திப் பாடல்கள் நீங்கள் கேட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது.  "இந்தி"யாவில் இருந்திருக்கிறீர்களே!!!!!  அட்லீஸ்ட் ஆராதனா, ஷோலே, பாபி போன்ற படப்பாடல்கள்)


     இன்னும் கூட பாடல்கள் உண்டு. உங்களால் ஏதாவது கண்டு பிடிக்க முடிகிறதா என்று பார்க்கலாம்!  (ஜி எம் பி ஸார் "நான் சினிமாப் பாடல்களே கேட்பதில்லை ஸ்ரீ!" என்பார்!)


     கீதாக்கா பாடலை முழுசும் கேட்டு கமெண்ட் செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன்.  நழுவி எஸ்கேப் ஆயிடக் கூடாது.  வல்லிம்மாவை மிஸ் செய்கிறேன்.  நெட் இல்லாததால் பதிவுப் பக்கம் காணோம்.  இல்லாவிட்டால் ஹிந்திப் பாடல் ரசிகர்களில் அவரும் ஒருவர்.  கீதா ரெங்கன் டூர்!  ம்ம்ம்.... பார்ப்போம்!தமிழ்மணம் வாக்களிக்க இங்கு க்ளிக் செய்யவும்.

113 comments:

KILLERGEE Devakottai said...

அருமை ஸ்ரீராம் ஜி நான் பலமுறை கேட்டு இருக்கிறேன்
அற்புதமான பாடல் இதே ராகத்தில் மறைந்த நாகூர் ஹனீபா அவர்கள் //அதிகாலைவேளை ஸுபுவுக்கு பின்னே அண்ணல் நபி நடந்து வந்தாரே// என்ற பாடலை பாடியிருப்பார்.

சிறு வயதில் அனைத்து மத பக்தி பாடல்களும் என்னிடம் இருப்பு இருக்கும் உங்களுக்கு நல்ல இசைஞானம் இருப்பது அறிந்து மகிழ்ச்சி.
தங்களது குழப்பம் தீர அந்தப் பாடகரைப்பற்றியே ஒரு பதிவு தங்களுக்காக விரைவில் வரும் நன்றி ஜி

ஸ்ரீராம். said...

வாங்க கில்லர்ஜி. நன்றி.

நீங்கள் குறிப்பிடும் நாகூர் ஹனிபா பாடல் நான் கேட்டதில்லையே.. சுட்டி கொடுங்களேன். நானும் அனைத்து மதப் பாடல்களும் கேட்பேன். ஒரு லிஸ்ட்டே கொடுக்க ஆர்வம்! ஏனென்றால் இன்றுவரை கிடைக்காத ஒரு பாடல் உண்டு. நாகூர் ஹனீபா பாடல்களில் ஹிந்தோளத்தில் தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு பாடல் உட்பட நிறைய நிறைய பாடல்கள் எனக்குப் பிடிக்கும். நாகூர் ஹனீபா நிறைய பழைய ஹிந்திப் பாடல்கள் மெட்டில் தமிழில் பாடியிருக்கிறார். உதாரணமாக ஹாத் கி சஃபாய் பாடலான "வாதா கர்லே சாஜ்னா.." பாடலை தமிழில் "ஏகம் உண்மைத் தூதரே..."

KILLERGEE Devakottai said...

ஸ்ரீராம் ஜி என்னிடம் சுட்டி இல்லை எப்படியாவது தேடி அல்லது பாடலையாவது தங்களுக்கு அனுப்புகிறேன்.

KILLERGEE Devakottai said...

இதோ அனைவரும் கேட்டு மகிழ்ந்திட சுட்டி ஸ்ரீராம் ஜி போதுமா ?

https://www.youtube.com/watch?v=w74P6-H-YYw

ஸ்ரீராம். said...

அட நன்றி கில்லர்ஜி..

இந்தப் பாடல் கூட அப்படியே நான் பகிர்ந்திருக்கும் பாடலின் வடிவம்தான். ஏற்கெனவே நான் சொல்லியிருப்பது போல நாகூரார் நிறைய இனிமையான ஃபேமஸ் பாடல்களை தமிழில் கொண்டு வந்திருக்கிறார்.

கோமதி அரசு said...

அருமையான பாடல் பகிர்வு.
தேவகோட்டைஜி சொல்லி இருக்கும் நாகூர் ஹனீபா அவர்கள் பாடிய பாடல்
ஈச்சை மரத்து இன்பசோலையில் என்ற பாடலா?

துரை செல்வராஜூ said...

அருமை.. பாடலைக் கேட்டதுண்டு.. படத்தின் பெயர் தெரிவதில்லை.. இதெல்லாம் குவைத்திற்கு வந்த பிறகு தான் இந்திப் பாடல்களில் லயிப்பு.. குறிப்பாக சாஜன், ராஜா இந்துஸ்தானி இன்னும் பல படங்கள்.. பெயர்கள் நினைவில் இல்லை..

இனிமை.. வாழ்க நலம்..

KILLERGEE Devakottai said...

சகோ திருமதி. கோமதி அரசு அவர்களுக்கு அப்பாடலின் முதல் வரி

//அதிகாலை நேரம் ஸுபுவுக்கு பின்னே அண்ணல் நபி நடந்து வந்தாரே//

கோமதி அரசு said...

தேவகோட்டை ஜி நன்றி பாடலை கேட்டுகொண்டு இருந்தேன்.
உங்கள் சுட்டியை பார்த்து போய் கேட்டு விட்டேன்.

கோமதி அரசு said...

அவள் ஒரு ரஞ்சனி சிவரஞ்சனி என்ற பாடல்

ஸ்ரீராம். said...

வாங்க கோமதி அரசு மேடம்...

நான் பதில் சொல்றதுக்குள் கில்லர்ஜியும் பதில் சொல்வதற்குள் நீங்களே அந்தப் பாடலைக் கேட்டு விட்டீர்கள் என்பது மகிழ்ச்சி. கிஷோர் பாடல் கேட்டீர்களா? வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஸ்ரீராம். said...

வாங்க துரை செல்வராஜூ ஸார்.. நீங்கள் சொல்வது சமீப காலப் படங்கள். சாஜன் மாதுரிக்காகவும், பாடல்களுக்காகவும் எனக்கும் பிடிக்கும்! ராஜா இந்துஸ்தானியிலும் நல்ல பாடல் உண்டு. இதே லிஸ்ட்டில் ஹம் ஹை ராஹி ப்யார் கே, பாப்பா கெஹத்தே ஹை, தீவாங்கி, மைனே ப்யார் கியா, ஆஷிக்கி,என்றும் இன்னும் சில படங்களும் உண்டு. நான் பகிர்ந்திருப்பது 70 களில் வந்த படம். படத்தின் பெயர் மெஹபூபா.

கோமதி அரசு said...

"அவளொரு மேனகை" பாடலை நீங்கள் குறிபிட்டுவிட்டீர்கள். முடிவில் அவள் ஒரு ரஞ்சனி சிவரஞ்சனி என்று வரும்.

கோமதி அரசு said...

முழுதும் கேட்டேன் கிஷோர் பாடலை, நல்ல பாடல் பகிர்வு நன்றி ஸ்ரீராம்.

ஸ்ரீராம். said...

//அவள் ஒரு ரஞ்சனி சிவரஞ்சனி என்ற பாடல்//

நட்சத்திரம் படப்பாடலைத்தானே சொல்கிறீர்கள்? அது அவள் ஒரு மேனகை...என் அபிமானத் தாரகை...

//அவளொரு மேனகை" பாடலை நீங்கள் குறிபிட்டுவிட்டீர்கள். முடிவில் அவள் ஒரு ரஞ்சனி சிவரஞ்சனி என்று வரும்//

ஓ... ஒருவேளை நீங்கள் அந்தப் படத்தின் ஒரிஜினலாக தெலுங்குப் பாடலைச் சொல்கிறீர்களோ என்று நினைத்தேன்.

//முழுதும் கேட்டேன் கிஷோர் பாடலை, நல்ல பாடல்//

நன்றி கோமதி அரசு மேடம்.

dharini said...

THIRUDA THIRUDA PADAL SIVARANJANI RAGATHIL AMAIDHULATHU ENBADHU IDHU VARAI ARIDLNDHAILAI

மோகன்ஜி said...

இந்த ராகம் பிரிவாற்றாமை,melancholy mood பாடல்களுக்கு வாகான ராகம்.
பல தெலுங்கும் பாடல்கள் சிவரஞ்சனியில் புகழ் பெற்றவை. தமிழில் எனக்குப் பிடித்த சி. ர மெட்டுப் பாடல்கள்:
ஈரமான் ரோஜாவே
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி
போன்றவை.

நெல்லைத் தமிழன் said...

கண்ணை மூடிக்கொண்டு கேட்டால் தேரேமேரேபீச் பாடல்தான் நிழலாடுகிறது. கண்ணைத் திறந்தால், கதாநாயகன் வேலை வெட்டி இல்லாத ஏழை போலிருக்கிறது. ஒரே நீலச்சட்டை, காலையில் இருந்து இரவு வரை ஒரே பாட்டு. கதாநாயகிக்கு ரெண்டு செட் டிரெஸ் கொடுத்திருக்காங்க. த ம +1

விஜய் said...

ரசித்தேன்,அருமை.
தமிழ் செய்திகள்

ஸ்ரீராம். said...

வருக வருக தாரிணி.. தொடர்ந்து வந்து படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.

ஸ்ரீராம். said...

வாங்க நெல்லைத்தமிழன். அதேதான். இன்னும் சில பாடல்கள் கூட நினைவுக்கு வரும். அதுசரி, கிஷோர் குரல் எப்படி? கதாநாய் முன்ஜென்ம நினைவு வந்து சோகத்தில் இருப்பதால் ட்ரெஸ் மாற்ற நேரமில்லை! நாயகிக்கு அந்தக் கவலை இல்லை. இனிதான் அவருக்கு முன்ஜென்ம நினைவு வரவேண்டும்! அவரும் அப்புறம் இதே பாடல் பாடுவார் - பெண்குரலில்!

ஸ்ரீராம். said...

நன்றி விஜய்.

வல்லிசிம்ஹன் said...

Net vanthuvittathu. manasillai. Sriram. lovely song. brings tears everytime I hear.

Asokan Kuppusamy said...

மரோ சரித்ரா இந்தி படத்தில் டெரே மேரே பாடலும் இருக்கிறதா? என்னங்க நான் சரியாத்தான் சொல்றேனா ?

Angelin said...

ஹாஹா :) ஸ்ரீராம் இப்பவும் லிட்டில் இந்தியாவில் தான் இருக்கேன் :)

இதே ராகம் ஏக் துஜே கேலியேவில் கூட ஒரு பாட்டு வரும்னு நினைக்கிறேன்

ஹை :)ஹேமமாலினி

முழுப்பாட்டும் கேட்டேன்

Angelin said...

நிறைய பாட்டு ஓடுது சட்டுனு வரலை :) எங்க பட்டினத்தார் புகழ் மியாவ் தலைவி வந்து சொல்வாங்க :)
தலையிருக்க வால் ஆடலாகாது :)
சொர்ணாக்கா சீக்கிரம் சபைக்கு வரவும் :)

Angelin said...

புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே இதே டியூன் வருமா ?
அப்புறம் இதயத்தை திருடாதே பாட்டு ஓ பிரியா

asha bhosle athira said...

//அழகு ஹேமமாலினிக்காக, ///
ஹா ஹா ஹா மீ வந்துட்டேன்ன்ன்ன்ன்ன்:) அஞ்சு ஊஊஊ நீங்கதானே வல்லாரௌ ஊஸ் குடிப்பீங்க.. கொஞ்சம் சொல்லுங்களேன்ன்.. ஹேமமாலினி ஆருக்குச் சொந்தம் என அன்று:) இங்கின பேசினோம்....?:).. ஸ்ரீராமுக்கா இல்ல நெல்லைத்தமிழனுக்கோ?:)).. எனக்கு மண்டை வெடிச்சிடும்போல இருக்கேஎ:)

asha bhosle athira said...

//அதிரா... ஹிந்திப் பாடல்கள் கேட்டிருக்கிறீர்களோ? இதை முழுசாக் கேட்கோணும்... சொல்லிப்போட்டேன்!!)
//
இதென்ன பிரித்தானியாவுக்கு வந்திருக்கும் சோதனை:).. நான் வாழ்க்கையில் ஹிந்திப் பாடல்கள் கேட்பதெ இல்லை. புதன்கிழமைப் புதிரில் கெள அண்ணனின் பாட்டைக் கண்டு பிடிப்பதற்காக.. அவரின் பாடல்களை அப்படியே ஓட விட்டேன்ன்.. அது பாடிக்கொண்டே போய் பின்பு ஹிந்தி ஆரம்பமாகிச்சுதா... ஓவ் பண்ணிட்டேன்ன்ன்ன்:)..

இப்போ ஸ்ரீராம் சொல்லிட்டாரே என 2ம் தடவையாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்ன்ன்... இதனைக் கேட்க நன்கு நெருங்கிய தமிழ்பாடல் வருது.. ஆனா கண்டு பிடிக்க முடியல்ல:)..

நான் பாடல்கள் கேட்பதே அதில் வரும் வரிகளுக்காகவே.. மியூசிக்காக பாடல் கேட்பதென்பது 5 வீத்தத்திலும் குறைவு. அதனால புரியாத பாசைப் பாட்டுக்கள் கேட்பதில்லை:).

asha bhosle athira said...

@ஸ்ரீராம்// பாடல் ஒன்றை ரசிக்க காணொளி தேவையில்லை, கவனம் திருப்பும் என்பது என் அபிப்ராயம்.//

இதனை நான் படு வன்மையாக ஆதரிக்கிறேன்ன். முன்பு ஒரு பாட்டு ரேடியோவில் பல தடவை கேட்டு மனமுருகி.. காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கிய வேளை.. ரிவியில் அப்பாடல் போய்ச்சுதா... ஜனகராஜ் ஓடி ஓடிப்பாடினார்ர்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் அத்தோடு அப்பாடல் கேட்பதை விட்டிட்டேன்ன் ஹா ஹா ஹா:).

Angelin said...

//ஏக் துஜே கேலியேவில் கூட ஒரு பாட்டு//

ஏற்கனவே மென்சன் செஞ்சிருக்கீங்க நான் அதை கவனிக்கல

asha bhosle athira said...

/// (ஏஞ்சலின்... ஹிந்திப் பாடல்கள் நீங்கள் கேட்டிருக்க வாய்ப்பு இருக்கிறது. "இந்தி"யாவில் இருந்திருக்கிறீர்களே!!!!! //

இப்பூடி ஒரு பப்பூளிக் பிளேசில வச்சு.. என் பேசனல் செக்க்ரட்டறி..:) அஞ்சுவை மானபங்கப்படுத்துவதை மீ வன்மையாக.... படு பயங்கரமாக....
.................
ஆணித்தரமாக.....................
............

.......
ஆமோதிக்கிறேன் எனச் சொல்ல வந்தேன்ன்ன்:).. ஹா ஹா மீ எசுக்கேப்பூஊஊஊஉ:)..

Angelin said...

@athiraav //ஹேமமாலினி ஆருக்குச் சொந்தம் என அன்று:) இங்கின பேசினோம்....?:).. ஸ்ரீராமுக்கா// yes yes

asha bhosle athira said...

///Angelin said...
நிறைய பாட்டு ஓடுது சட்டுனு வரலை :) எங்க பட்டினத்தார் புகழ் மியாவ் தலைவி வந்து சொல்வாங்க :)
தலையிருக்க வால் ஆடலாகாது :)
சொர்ணாக்கா சீக்கிரம் சபைக்கு வரவும் :)///

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) இதென்ன புயு வம்பாக்கிடக்கூஊஊஊஊ:).. இண்டைக்கு விடிய எழும்பும்போதே பல்லி கிச்சுக் கிச்சு எண்டிச்சுது.. அப்பவே ஓசிச்சேன்ன் புளொக்ஸ் பக்கம் போறதா வாணாமா என:) கர்ர்ர்ர்ர்:)

Angelin said...

//ஆணித்தரமாக.....................
............

.......
ஆமோதிக்கிறேன் எனச் சொல்ல வந்தேன்ன்ன்:)..//
கர்ர்ர் டேபிள் மேலேறி மைக் போட்டுச்சொல்லுங்க :)

asha bhosle athira said...

///Angelin said...
@athiraav //ஹேமமாலினி ஆருக்குச் சொந்தம் என அன்று:) இங்கின பேசினோம்....?:).. ஸ்ரீராமுக்கா// yes yes//

ஹா ஹா ஹா நினைவிருந்துது ச்ச்சும்மா கேட்டேன்ன் ஏனெனில் அடி விழுந்தா சேர்ந்து வாங்கலாமெல்லோ:).. மீ மட்டும் டனியா:) வாங்கப் பயம்:)
http://www.naturalcatcareblog.com/wp-content/uploads/2011/04/cat_with_rose.jpg

ஸ்ரீராம். said...

வாங்க மோகன்ஜி... சோகராகம்தான் சிவரஞ்சனி. ப்ளஸ் சுகராகம். நீங்கள் சொல்லியிருக்கும் பாடல்கள் எனக்கும் பிடிக்கும்.

Geetha Sambasivam said...

இந்தப் பாடலை முன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்னரே கேட்டிருக்கேன்.நிறையத் தரம்! இந்த ராகத்திலேயே பல பாடல்கள் வந்திருப்பதும் ஓரளவு தெரியும்.பாட்டை ரசிப்பேன்! ராகமெல்லாம் கண்டு பிடிக்கத் தெரியாது! இங்கே கொடுத்திருக்கும் பட்டியலில் உள்ள பாடல்கள் அனைத்துமே கேட்டிருக்கேன்.

ஸ்ரீராம். said...

வாங்க வல்லிம்மா... நினைச்சதும் வந்துட்டீங்க... மனசு சரியில்லைன்னாலும் பாட்டு(இசை)தானே மருந்து!

asha bhosle athira said...

நான் வாழ்க்கையில் பார்த்தது ரெண்டே ரெண்டு ஹிந்திப்படங்கள் தான்..

ஒன்று .. அப்பாவுக்கு யாரோ ஒபிஷில் சொல்லி விட்டார்கள்.. அமிதாப்பச்சனின் “அபிமன்யு” நிட்சயம் பார்க்க வேண்டிய படம் என... உடனே.. வீடியோ கசட் எடுத்து வந்து வீட்டில் பார்த்தோம்.

பின்னர்.. இப்போ 2015 இல் .. ஷாருகானின் ஒரு படம்.. பாகிஸ்தானில் இருந்து வழி மாறி இந்திய எல்லிக்குள் ஒரு பெண் குழந்தை வந்து சாருக்கான் கையில் கிடைச்சு.. அதை அவர் பாதுகாத்து திரும்ப ஒப்படைக்கும் கதை.. படத்தின் பெயர் வாயில் நுழையவே மாட்டுதாம்ம். பெரிய பெயரும் கூட:).. ஆனா அருமையான படம்:)...

இவை தவிர ஹிந்தி நஹி.. நஹீஈஈஈ:)

ஸ்ரீராம். said...

வாங்க நண்பர் அசோகன் குப்புசாமி.. சரியாய்த்தான் சொல்லியிருக்கீய.. சரிதேன்...

ஸ்ரீராம். said...

வாங்க ஏஞ்சலின்.. ஏக் துஜே கேலியே பாடல் பற்றி பதிவிலேயே குறிப்பிட்டிருக்கேனே... பதிவைப் படிக்கலியோ... அதிரா... அதெப்படிச் சொல்லணும்? கர்ர்ர்ர்ர்ர்.... என்று டைப்புவதற்குள் உங்கள்


//ஏற்கனவே மென்சன் செஞ்சிருக்கீங்க நான் அதை கவனிக்கல //

வந்து விட்டது. ஓகே ஓகே!

நன்றி!

ஸ்ரீராம். said...

@ஏஞ்சலின்

ஹேமா அழகாய் இருக்கும் பாடல்கள் என்றே ஒரு லிஸ்ட் போடலாம். நீங்கள் பாடல் கேட்க மாட்டீர்களே!

நீங்கள் சொல்லியிருக்கும் இரண்டு பாடல்களும் இதே ராகம்தான்.

ஸ்ரீராம். said...

வாங்க அதிரா...

//ஸ்ரீராமுக்கா இல்ல நெல்லைத்தமிழனுக்கோ?:)).

ஹேமாவை யாருக்குத்தான் பிடிக்காது?

ஸ்ரீராம். said...

@அதிரா..

புரியாத பாஷை என்றாலும் கூகிள் செய்து அர்த்தம் தெரிந்து கூடக் கேட்கலாம். நிறைய நிறைய நிறைய நிறைய நிறைய ஹிந்திப் பாடல்கள் மிகமிகமிகமிகமிக இனிமையானவை.

ஸ்ரீராம். said...

@அதிரா..

//வன்மையாக ஆதரிக்கிறேன்ன். //

அதானே பார்த்தேன். பயந்துட்டேன்! ஜனகராஜ் பாடலா? என்ன பாடல் அது? நாயகன் பாடலோ?

ஸ்ரீராம். said...

@அதிரா...

//அஞ்சுவை மானபங்கப்படுத்துவதை//

ஆ... இந்தியா என்று சொல்வது அப்படி ஒரு தப்பா?

ஸ்ரீராம். said...

@ ஏஞ்சலின்..

// ஸ்ரீராமுக்கா// yes yes//

ஆமாம். ஒத்துக் கொள்கிறேன். எனக்கு ஹிந்தியில் ரொம்பப் பிடித்த கதாநாயகிகள் மூவர். மும்தாஜ், ஹேமா, மாதுரி!! ஆனால் நெல்லைக்கும் ஹேமாவைப் பிடிக்கும்!

ஸ்ரீராம். said...

@அதிரா..

//சொர்ணாக்கா சீக்கிரம் சபைக்கு வரவும் :)/////

சொர்ணாக்கான்னா யாரு?!!

ஸ்ரீராம். said...

நன்றி கீதாக்கா.. பழைய பாடல்தானே? நிச்சயம் கேட்டிருப்பீங்க.. நன்றி.

asha bhosle athira said...

////ஸ்ரீராம். said...
@ ஏஞ்சலின்..

// ஸ்ரீராமுக்கா// yes yes//

ஆமாம். ஒத்துக் கொள்கிறேன். எனக்கு ஹிந்தியில் ரொம்பப் பிடித்த கதாநாயகிகள் மூவர். மும்தாஜ், ஹேமா, மாதுரி!! ஆனால் நெல்லைக்கும் ஹேமாவைப் பிடிக்கும்///

ஹா ஹா ஹா ஹேமமாலினியை சோட்டா.. செல்லமா ஹேமாஅ எனக்கூப்பிடும்போதே புரிஞ்சுபோச்ச்ச்ச்:) யாருக்குப் பிடிக்குமென:).. இதில நெ.த வை ஜோடி சேர்த்திட்டார்ர்ர்ர்ர் ஜெல்ப்பாக இருப்பார் என:) ஹா ஹா ஹா:)..

asha bhosle athira said...

///ஸ்ரீராம். said...
@அதிரா..

//சொர்ணாக்கா சீக்கிரம் சபைக்கு வரவும் :)/////

சொர்ணாக்கான்னா யாரு?!!//

ஹா ஹா ஹா அதானே அப்பூடிக் கேளுங்கோ ஸ்ரீராம்ம்.. கிளவி கேட்க.. ஹையோ கேய்வி கேட்க ஆள் இல்லை என நினைச்சுட்டு இருக்கிறா வ கர்ர்:)

ஸ்ரீராம். said...

@அதிரா

//அமிதாப்பச்சனின் “அபிமன்யு” நிட்சயம் பார்க்க வேண்டிய படம் என..//

அது அபிமான். அந்தப் படத்தின் பாடல்கள் எல்லாம் தேன்சுவை.

//015 இல் .. ஷாருகானின் ஒரு படம்.. //

சமீபத்துப் படங்கள் பார்ப்பதில்லை. ரொம்ப ரேர். டங்கல், பிங்க், என்று செலெக்டடாக பார்ப்பேன்.

asha bhosle athira said...
This comment has been removed by the author.
ஸ்ரீராம். said...

//ஜனகராஜ் ஒரு பூங்காவில் ஓடி ஓடிப் பாடுவார் அதில் ஹா ஹா ஹா:). //

பாலைவனச்சோலை பாடலோ? காதல் பாடல் ஜனகராஜ் நடித்தா? புதன் புதிரை விடக் கடுமையா இருக்கே!

asha bhosle athira said...


//ஸ்ரீராம். said...
@அதிரா..

//ஜனகராஜ் பாடலா? என்ன பாடல் அது? நாயகன் பாடலோ? //


இப்போ நினைக்க மனதில் வருகுதில்லை.. சூப்பர் காதல் பாடல்.. அதில் வரும் சில வரிகள் மிக அருமை...

ஜனகராஜ் ஒரு பூங்காவில் ஓடி ஓடிப் பாடுவார் அதில் ஹா ஹா ஹா:).

asha bhosle athira said...

///புதன் புதிரை விடக் கடுமையா இருக்கே!//

ஹா ஹா ஹா அந்த காட்சி மட்டும் கண்ணில நிக்குது.. பாட்டு வரமாட்டேனெண்டுது.. எப்போதாவது ரேடியோவில் கேட்டால் நினைவு வரும்.

இன்னொரு இலங்கைப் பாடல்.. அதனை நான் 1000 தடவைகளாவது கேட்டிருப்பேன்ன்ன்.

ஆனா இப்போ கிடைக்குதேயில்லை தேடி அலுத்திட்டேன்ன்.. அது யூ ரியூப்பில் இல்லை, முன்பு இமா தேடி ஒரு லிங் தந்தா, அதில் கேட்டேன்.. இப்போ அதுவும் வேலை செய்யுதில்லை...

ஆராவது கண்டு பிடிச்சால்ல் லிங் தாங்கோ இங்கு பிளீஸ்ஸ்ஸ்ஸ்.. பாடல்..

அழகான ஒரு சோடி கண்கள்...
அவை அம்புகள் பாய்ச்சி என் உடலெல்லாம் புண்கள்...

பின்னர் இப்படி வரும்..

புவியியல் பாடம் நடக்கும்..
மனம் எப்படிக் கண்ணே பாடம் படிக்கும்...

asha bhosle athira said...

அது உடல் அல்ல உளமெல்லாம் புண்கள் ஹா ஹா ஹா:)

ஸ்ரீராம். said...

//ழகான ஒரு சோடி கண்கள்...
அவை அம்புகள் பாய்ச்சி என் உடலெல்லாம் புண்கள்...

பின்னர் இப்படி வரும்..

புவியியல் பாடம் நடக்கும்..
மனம் எப்படிக் கண்ணே பாடம் படிக்கும்... //

ஊ....ஹூம்.. கண்டுபிடிக்க முடியவில்லை. தெரிந்தவுடன் அவசியம் சொல்லுங்கள்.

:)))

Angelin said...

m.soundcloud.com/raphel-canada/o8vm2ibfwojw

KILLERGEE Devakottai said...

ஹேமமாலினி தர்மேந்திராவுக்கு சொந்தம்.

Angelin said...

Miyaav sound cloud LA irukku

ஸ்ரீராம். said...

//ஹேமமாலினி தர்மேந்திராவுக்கு சொந்தம். //

வாங்க கில்லர்ஜி.... ஆனால் தர்மேந்திரா ஹேமமாலினிக்கு மட்டும் சொந்தமில்லை!!

:)))

KILLERGEE Devakottai said...

அதிரா சொன்ன ஜனகராஜ் பாடல்

//காதல் என்பது பொதுவுடமை கஷ்டம் மட்டும்தானே தனிஉடமை//

KILLERGEE Devakottai said...

ஹா.. ஹா.. ஹா.. ஸூப்பர் ரெண்டும் அந்த கேஸுகள்தானே...

ஸ்ரீராம். said...

//Miyaav sound cloud LA irukku //

@ஏஞ்சலின். இதுதான் அதிரா சொன்ன ஸ்ரீலங்கா பாடலோ! எனக்கு இலங்கைப் பாடல்களில் 'சின்ன மாமியே... உன் சின்ன மகளெங்கே...' பாடல் ஒன்று கேட்டிருக்கிறேன். அப்புறம் சுராங்கனி...

ஸ்ரீராம். said...

அதிரா சொன்ன ஜனகராஜ் பாடல்

//காதல் என்பது பொதுவுடமை கஷ்டம் மட்டும்தானே தனிஉடமை//

நன்றி கில்லர்ஜி. அதிரா தான் உறுதி செய்ய வேண்டும்!

ஸ்ரீராம். said...

@கில்லர்ஜி

//ரெண்டும் அந்த கேஸுகள்தானே..//

இல்லை. தர்மேந்திரா மட்டும்தான்.

asha bhosle athira said...

ஆஆஆஅ கில்லர்ஜி உம் லாண்டட்ட்ட்.. நில்லுங்க கேட்டிட்டு வாறேன்ன் அதுதான் பாட்டோ என..

அஞ்சு அது இப்போ வேர்க் ஆகுதா சவுண்ட் கிளவுட்.. வாறேன் செக் பண்ணிட்டு..

asha bhosle athira said...

KILLERGEE Devakottai said...
ஹேமமாலினி தர்மேந்திராவுக்கு சொந்தம்.///

ஹா ஹா ஹா கில்லர்ஜி.. வந்த வேகத்தில இப்பூடிக் குண்டைத்தூக்கிப் போட்டு ஸ்ரீராமின் ஹப்பி மூட்டை ஓவ் ஆக்கிடக்குடா:)

asha bhosle athira said...

இல்ல கில்லர்ஜி அது இல்லை.. நான் சொன்னதில் ஜனகராஜ் தான் ஹீரோ வாக இருப்பார் என நினைக்கிறேன்ன்.. கோட் சூட் போட்டுக்கொண்டு பூங்காவில் காதலியோடு டூயட் பாடுவது போல நினைவாக இருக்கு..:)

asha bhosle athira said...

///Angelin said...
m.soundcloud.com/raphel-canada/o8vm2ibfwojw///

ஆவ்வ்வ்வ்வ் அஞ்சூஊஊஊஊஉ அதே.. அதே..... சூப்பர்ர்ர்.. தங்கூஊஊஊஉ:)..

asha bhosle athira said...

///ஸ்ரீராம். said...
@அதிரா...

//அஞ்சுவை மானபங்கப்படுத்துவதை//

ஆ... இந்தியா என்று சொல்வது அப்படி ஒரு தப்பா?//

ஹா ஹா ஹா இல்ல ஸ்ரீராம்.. அதுக்கு சொல்லவில்லை.. தமிழ்ப் பாட்டே கேட்கிறாவோ தெரியேல்லை அப்படிப்பட்ட அஞ்சுவைப் போய் ஹிந்திப்பாட்டுக் கேட்பீங்க என நம்புறேன் எனச் சொல்லிட்டீங்க பாருங்கோ:).. ஹா ஹா ஹா அதுக்குச் சொன்னேன்:)

ஸ்ரீராம். said...

//அப்படிப்பட்ட அஞ்சுவைப் போய் ஹிந்திப்பாட்டுக் கேட்பீங்க என நம்புறேன் எனச் சொல்லிட்டீங்க பாருங்கோ:).. ஹா ஹா ஹா அதுக்குச் சொன்னேன்:) //

ஹா... ஹா... ஹா.. சும்மா கலகம் செய்யலாமேன்னு பார்த்தேன்! கலக்கம் அடையவில்லை நீங்கள்!

//இல்ல கில்லர்ஜி அது இல்லை.. நான் சொன்னதில் ஜனகராஜ் தான் ஹீரோ வாக இருப்பார்//

உங்களுக்கு ஒரு லிங்க் அனுப்பி இருக்கேன் அதுவா என்று பாருங்கள்!

asha bhosle athira said...

ஹையோ இப்போதான் பார்த்தேன் அதுவும் இல்லை ஸ்ரீராம்ம்.. அது இருகுரல் பாடல் என நினைவு...

ஒரு பாட்டில் இடையே ஒரு வரி வருகிறது...

“காக்கிச் சட்டைக்குள்ளேயும் ஆசை மனம் உள்ளது”.. எனும் வரிகள்... அதுவாக இருக்குமோ தெரியவில்லை.. ஏனெனில் சில வரிகளுக்காகவே.. பாடலை மீண்டும் மீண்டும் கேட்பேன்:)..
அதைப்போட்டுத் தேடினாலும் கிடைக்குதில்லை... இவ்வரி இடையே.. வரும் பாடலை முடிஞ்சால் கண்டு பிடிங்கோ:).. ஹா ஹா ஹா எல்லோருக்கும் இன்று இது என் ஹோம் வேர்க்:).

ஸ்ரீராம். said...

@அதிரா...

“காக்கிச் சட்டைக்குள்ளேயும் ஆசை மனம் உள்ளது என்ற பாடல் "நந்தவனம் பூத்திருக்குது ஆதி அம்மாடி.." எனும் பாடலில் வரும். அந்தக் காட்சியில் நடித்திருப்பவர் சந்திரசேகர்.

Angelin said...

Garrrrr miyaav. Velila irukken vanthu vachikkRen

Angelin said...

Garrrrr miyaav. Velila irukken vanthu vachikkRen

asha bhosle athira said...

//ஸ்ரீராம். said...
@அதிரா...

“காக்கிச் சட்டைக்குள்ளேயும் ஆசை மனம் உள்ளது என்ற பாடல் "நந்தவனம் பூத்திருக்குது ஆதி அம்மாடி.." எனும் பாடலில் வரும். அந்தக் காட்சியில் நடித்திருப்பவர் சந்திரசேகர்.//

ஓ அப்போ அது இதுவல்ல.. நான் சொன்னது ஜனகராஜ் தான் பாட்டில் பாடி நடிக்கிறார். சரி விடுங்கோ.. பின்னொரு காலத்தில் கிடைச்சால் சொல்கிறேன்..

அந்த காக்கிச் சட்டை வரிகள்.. அதில் ஒரு கதை இருக்கு...

என்னவெனில்... படிக்க்கும்போது இடையே ஆமி, பொலிஸ் செக் பொயிண்ட்டுகள் இருக்கும்... அதை கடக்கும்போது.. வாகனங்களில் வருவோர் எல்லோரும் இறங்கி நடந்தே போக வேண்டும்...

அந்த இடத்தில் ஒரு பக்கம் பொலீஸ் ஸ்டேசன் மறு பக்கம் ரீக் கடைகள்... அப்போ காலையில் நாம் ஸ்கூலுக்குப் போகும்போது.. அவ்விடத்தை கடக்கும்போது.. இந்த போலீஸ்காரர்கள்.. ரோட்டில் குறுக்கும் நெடுக்குமாக ரீ குடிக்கப் போவார்கள்.. அப்போ ஒருநாள் அந்நேரம் அந்த ரீக் கடையில் இப்பாட்டு வரிகள் போனது... சந்தர்ப்பம் சூழலுக்கு ஏற்ப அது அமைந்து விட்டமையால் மனதில் பதிந்து விட்டது...

ஏனெனில் இலங்கையில் நாம் எப்பவும் பொலிஸ் ஆமி [காக்கிச்சட்டை ] எனில் விரோதிகளாகத்தான் பார்ப்போம்:). அவர்களுக்குள்ளும் ஒரு மனமிருக்குது என்பதை நினைப்பதில்லை:(.

asha bhosle athira said...

///Angelin said...
Garrrrr miyaav. Velila irukken vanthu vachikkRen///

ஸ்ஸ்ஸ்ஸ் அப்பாஆஆஆஆ நல்ல வேளை.. நான்.. நீங்க உள்ளே ஆக்கும் என நினைச்சு நடுங்கிக்கொண்டே ரைப்பண்ணிக்கொண்டிருந்தேன்ன் ஹா ஹா ஹா.. நீங்க மெதுவா வாங்கம்மா:).. ஒண்ணும் அவசரமில்லை:).

asha bhosle athira said...

ஆச்சசியமாக இருக்குது ஸ்ரீராம்ம்.. நந்தவனம் பாட்டின் கடசிப் பந்தியில்தான் அவ்வரிகள் வருது, எப்படி இவ்ளோ ஸ்பீட்டாக் கண்டு பிடிச்சீங்க பாட்டை என நான் வியக்கேன்ன்ன்:).

asha bhosle athira said...

இந்தப் பாட்டு வரிகளையும் அதுக்காக என்னிடம் குவிந்திருக்கும் குட்டிக் குட்டிக் கதைகளையும்:) ஒரு போஸ்ட்டாகப் போட நினைச்சேன் போன கிழமை.. ஆனா நேரம் போதாமையால் நிறுத்தி விட்டேன்ன்.. பார்ப்போம் பின்னொரு காலத்தில் முடிஞ்சால்ல்ல்..

G.M Balasubramaniam said...

ஒரு காலத்தில் பாடல்களைக்கேட்டு ரசித்ததுண்டு மன்னா டே மலையாளத்தில் பாடிய மானச மய்னே வரூ எனக்கு மிகவும் பிடித்த பாடல் வாழ்வியலில் சினிமாப் பாடல்களென்னும் பதிவுகூட எழுதி இருக்கிறேன் மொழிதெரியாமல் ஒரு பாடலை ரசிக்க வேண்டுமானால் இசையில் ஒரு பேசிக் ஞானம் வேண்டும் என்று நினைக்கிறேன் வித்தியாசமாகப் பின்னூட்டம் எதிர்பார்க்கவில்லையா ஸ்ரீ

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கடந்த 10 நாள்களுக்கும் மேலாக சொந்த மற்றும் ஆய்வுப்பணியாக வெளியூர் சென்றிருந்தேன். தற்போதுதான் வலைப்பக்கம் வரமுடிந்தது. தொடர்ந்து பதிவுகள் மூலமாகச் சந்திப்போம். //// பாடலை ரசித்தேன். நன்றி.

Rajeevan Ramalingam said...

அடடா..... இன்று சிவரஞ்சனியா? சரியாப் போய்ச்சு.... இனி எப்படியாம் நான் வேலை செய்வது? இப்பவே எல்லாப் பாடல்களையும் கேட்க வேண்டும் போல உள்ளதே....

அந்த ஹிந்திப் பாடல் அவ்வளவு இனிமை..! அதன் ஓடியோவை டவுன்லோட் செய்து என் ஐ டியூனில் ஏற்றி விட்டேன்.

Rajeevan Ramalingam said...

சிவரஞ்சனி கேட்டு உருகாதவர்கள் யாரும் இருக்க முடியாது. சாருகேசிக்குப் பிறகு எனக்கு அதிகம் பிடித்த பாடல்... எம்கேடி யில் இருந்தே சிவரஞ்சனி உருகத் தொடங்கிவிட்டாள். ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து’ பாடல் ஒரு இராகமாளிகாவாக இருந்தாலும் அதன் தொடக்கம் சிவரஞ்சனிதான்.

‘கன்னத்தில் கன்னம் வைக்க ஒத்துக்கோ’ என்று ஒரு அருமையான பாடல். தேவா இசையமைத்தது. உண்மையில் இதன் ஒரிஜினல் தெலுங்கில் வந்தது. அப்பாடலின் பெயர் என் வாய்க்குள் நுழையவில்லை. மரகத மணி இசையமைத்தது. என்றாலும் தேவாவின் இசையில் வந்த ‘கன்னத்தில் கன்னம் வைக்க’ அவ்வளவு இனிமையாக இருக்கும்.

‘பெண்ணெல்லாம் பெண் அல்ல.. இங்கு யாரும் இல்லை உன்னை வெல்ல’ என்று ஒரு சூப்பர் வரி வரும் :) :)

Rajeevan Ramalingam said...

இதேபோல ‘இயக்கப்பாட்டுக்கள்’ என்று நாம் அழைக்கும் விடுதலைப் பாடல்களில், ‘வானுயர்ந்த காட்டிடிடையே நான் இருந்து பாடுகின்றேன். வயல்வெளிகள் மீது கேட்குமோ, இல்லை வல்லைவெளி தாண்டிப் போகுமோ’ என்று ஒரு அருமையா நெஞ்சை உருக வைக்கும் பாடல் உண்டு. அதுவும் சிவரஞ்சனிதான்.

ஸ்ரீராம். said...

வாங்க ஜி எம் பி ஸார்...

//வித்தியாசமாகப் பின்னூட்டம் எதிர்பார்க்கவில்லையா ஸ்ரீ //

ஓரளவு அதை எதிர்பார்த்துதானே பதிவில் குறிப்பிட்டேன்! எனினும் ஏமாற்றவில்லை நீங்கள். மொழி தெரியாமல் இசையை ரசிக்க அது மெலடியாக இருந்தாலே போதும்.. முதலில் நான் கேட்கும்போது எனக்கும் ஹிந்தி தெரியாது!

ஸ்ரீராம். said...

வாங்க முனைவர் ஐயா..

ரசனைக்கு நன்றி.

ஸ்ரீராம். said...

வாங்க ரா ரா...

அருமையா உதாரணம் சொல்லி மகிழ்வித்தீர்கள். வானுயர்ந்த காட்டிடையே நானிருந்து பாடுகிறேன் பாடலை வானுயர்ந்த சோலையிலே ராகத்திலேயே பாடலாம் போல இருக்கிறதே..

Rajeevan Ramalingam said...

’வானத்து நிலவெடுத்து வாசலில் வைக்கட்டுமா?’ என்று ஒரு பாடல். அதுவும் சிவரஞ்சனி என்றுதான் நினைக்கிறேன். அல்லது அதன் ஜன்னிய இராகங்களில் ஒன்றாக இருக்க வேண்டும்.

ஸ்ரீரா` உங்களுக்கு இந்தப் பாட்டுத் தெரியுமா? ‘பூ வண்ணம் போல மின்னும் பூபாளம் பாடும் நேரம்’ - அதுவும் சிவரஞ்சனி தான்.

Rajeevan Ramalingam said...

அப்புறம் நம்ம Asha Bhosle - Spb பாடிய ‘அதிகாலை நேரம் கனவில் உன்னைப் பார்த்தேன்’ கூட சிவரஞ்சனிதான்.

சரிசரி, எனக்கு நேரமாச்சு ஸ்ரீராம். இன்ரு நாள் முழுக்க சிவரஞ்சனி பாடல்கள் தான் கேட்கப்போகிறேன். பை பை :) :)

ஸ்ரீராம். said...

@ரா ரா

//உங்களுக்கு இந்தப் பாட்டுத் தெரியுமா? ‘பூ வண்ணம் போல மின்னும் பூபாளம் பாடும் நேரம்’ - அதுவும் சிவரஞ்சனி தான்//

நல்லாத தெரியுமே.. அழியாத கோலங்கள் படம். சலீல் சவுத்ரி இசை. அது மட்டுமில்லாமல் எனக்குப் பிடித்த ஜெயச்சந்திரன் குரல்.

middleclassmadhavi said...

இப்பல்லாம் பதிவுடன் கருத்து விவாதங்கள் இன்ட்ரஸ்டிங்க்!

Srikanth said...

அருமை. டிட்டோ இதே மாதிரி தமிழில் ஒரு பாட்டு இருக்கே!!!

Angelin said...

சொர்ணாக்கா னு எதுக்கு சொன்னேன்னா கரெக்ட்டா என்னை பற்றி சொல்லிட்டாங்க அதுக்குதான் :) இன்னொரு ரீசனும் இருக்கு :) அப்புறம் சொல்றேன்
தமிழ்பாடல் கேட்கிற வழக்கம் போயி போச்சு அப்பப்போ பதிவுகளில் பார்த்து ஆராய்ச்சி செய்வேன் ..என் பொண்ணுக்கு ஆங்கில பாடல்கள் பிடிக்கும் அதனால் அதையே நானும் கேட்கிறேன் இப்போல்லாம் :)

asha bhosle athira said...

இதோ இன்றைய ஸ்ரீராம் தலைமையிலான.. “சிவரஞ்சனி” ராகத்தில் அமைந்த பாடல்கள் இசை நிகழ்ச்சியை நிறைவு செய்ய... வருகிறார்ர்.. உங்கள் பேரன்புக்கும் பெருமதிப்புக்கும் உரிய “ஆஷா போஸ்லே அதிரா” அவர்கள்... இப்பாடலை அவர், “அஞ்சுவுக்காக” டெடிகேட் பண்ணுகிறாராம்ம்... இதோ சிவரஞ்சனி ராகத்தில் உங்கள் ஆஷா போஷ்லே அதிரா... எங்கே உங்கள் கரகோசம் “கூரையைப் பிரிக்கட்டும்”.....:).. நன்றி.. வணக்கம்_()_.

https://www.youtube.com/watch?v=DXjrPO-q954

asha bhosle athira said...

ஊசிக்குறிப்பு:) கண்ணை மூடி... சிவரஞ்சனியை ரசிக்கவும்.

Bagawanjee KA said...

வந்த புதிதில் கேட்டு ரசித்ததோடு சரி ,இப்போதெல்லாம் பாடல்கள் கேட்கக் கூட நேரமில்லை :)

Angelin said...

100 வது நானே

Angelin said...

ஸ்ரீராம் நீங்க ஓ மாலா ஓ ஷீலா பாட்டு கேளுங்க அதும் நல்லா இருக்கும்

Angelin said...

ஆவ் !!மியாவ் தாங்க்யூ எனக்கு டெடிகேட் செஞ்ச பாட்டுக்கு :)
தங்க மீன்ஸ் soooo கியூட்

ஸ்ரீராம். said...

வாங்க மிகிமா... நன்றி.

விவாதங்கள் என்பதை விட, கலந்துரையாடல்!

ஸ்ரீராம். said...

வெல்கம் ஸ்ரீகாந்த்..

//டிட்டோ இதே மாதிரி தமிழில் ஒரு பாட்டு இருக்கே//

என்ன பாட்டு என்றும் சொல்லலாமே? "பகை கொண்ட உள்ளம்... துயரத்தின் இல்லம்.." தானே?

ஸ்ரீராம். said...

வாங்க அதிரா...

//இதோ சிவரஞ்சனி ராகத்தில் உங்கள் ஆஷா போஷ்லே அதிரா... எங்கே உங்கள் கரகோசம் “கூரையைப் பிரிக்கட்டும்”.....:).. நன்றி.. வணக்கம்_()_.//


படபடபடபடபட.. (கை தட்டல்தான்.... பயந்துடாதீங்க!) கேட்டுடுவோம்!

ஸ்ரீராம். said...

வாங்க பகவான்ஜி
நன்றி.

ஸ்ரீராம். said...

@ஏஞ்சலின்

//ஸ்ரீராம் நீங்க ஓ மாலா ஓ ஷீலா பாட்டு கேளுங்க அதும் நல்லா இருக்கும் //

கேட்டிருக்கறா மாதிரிதான் தெரியுது!

ஏகாந்தன் Aekaanthan ! said...

ராகத்தைப் புரிந்துகொண்டு பாடல் எனக்கேட்டதில்லை. இசைநயமிக்க பழைய தமிழ், ஹிந்திப் பாடல்களில் மனம் லயித்ததுண்டு. ராஜேஷ் கன்னா, ஹேமமாலினி பாடலை நிறையக் கேட்டிருக்கிறேன் நான் டெல்லிபோன புதிதில்.

இங்கு குறிப்பிடப்பட்டிருக்கும் 80-90களின் பல தமிழ்ப்பாடல்களை நான் கேட்டதில்லை. அந்தக் காலகட்டத்தில் இந்திய தூதரக வாழ்வில் வெளிநாடுகளில் பிஸியாக இருந்ததே காரணம். 2000-க்கு அப்புறம் வந்துகொண்டிருக்கும் தமிழ்ப்பாடல்களை நான் கேட்பதில்லை என்பதில் பெருமிதம் கொள்கிறேன். இப்போது இசைக்கப்படும் சினிமா இசைபற்றி சிலநாட்கள் முன்பு இளையராஜா சொன்ன கமெண்ட்ஸைப் படித்திருப்பீர்கள். நான் வழிமொழிகிறேன்.

டிவி ரிமோட்டில் ஆடியோவை ம்யூட் பண்ண பட்டன் இருப்பதுபோல், நல்ல பாட்டுக்கேட்கும்போது அபத்தக்காட்சிகளைத் தவிர்க்க ’வீடியோ-ம்யூட்’ பட்டன் இருந்தால் வசதியாக இருக்குமே என நினைத்ததுண்டு.

ஸ்ரீராம். said...

வாங்க ஏகாந்தன் ஸார்...

//அபத்தக்காட்சிகளைத் தவிர்க்க ’வீடியோ-ம்யூட்’ பட்டன் இருந்தால் வசதியாக இருக்குமே என நினைத்ததுண்டு//

ஆமாம்.. எனக்கும் அப்படித் தோன்றும்வதுண்டு.

//2000-க்கு அப்புறம் வந்துகொண்டிருக்கும் தமிழ்ப்பாடல்களை நான் கேட்பதில்லை என்பதில் பெருமிதம் கொள்கிறேன்//

உண்மைதான். கொஞ்சம் விதிவிலக்குகள் உண்டு.

நன்றி.

காமாட்சி said...

நிறைய ஹிந்திப் பாடல்கள் கேட்டிருக்கிறேன். இருந்ததெல்லாம் வடக்கே ஆயிற்றே! எந்தப்படம் இதெல்லாம் தெரியாது. க்விஸ் நிகழ்ச்சி மாதிரி அடேயப்பா. எவ்வளவு சினிமா பாட்டுகள் ஞானம். படித்து ரஸிக்கிறேன். அவ்வளவுதான்.அன்புடன்

asha bhosle athira said...

//ஸ்ரீராம். said...
வாங்க அதிரா...


படபடபடபடபட.////

ஹையோ சுட்டிட்டாங்கோஓ சுட்டிட்டாங்கோஓ.. சுட்டிட்டாங்கோஓஒ.. :)

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம்...ஏழிசை கீதமே என்ற பாடல், அப்புறம் குயில் பாட்டு அப்படின்ற பாட்டு சிவரஞ்சனி ராகப் பாடல்கள் தான்.

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

இதயவீணை தூங்கும் போது, பூ வானம் போல நெஞ்சம் (அழியாத கோலங்கள்)..,உன்னைத்தானே (நல்லவனுக்கு நல்லவன்)....வா வா அன்பே.(அக்னி நட்சத்திரம்)..ஒருஜீவன் தான்.....ஆனந்தம் ஆனந்தம் பாடும்...நலந்தானா நலந்தானா (தில்லானா மோகனாம்பாள்)இன்னும் நினைவுகு வந்தால் சொல்லுகிறேன்...இப்போதைக்கு இவ்வளவு...

கீதா

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!