Friday, June 8, 2018

வெள்ளி வீடியோ 180608 : ஆ ஹா... ஆ ஹ ஹா ஹா... ஏ ஹே ஹா ஹ ஹா ஹா...


ஏகாந்தன் ஸார் எந்தப்பாடல் போட்டாலும் வரிகள் சுமார்...  வரிகள் சுமார் என்கிறார்.  எனவே இந்த வாரம் வரிகளே / வார்த்தைகளே இல்லாமல் ஒரு பாடல்! 


இளையராஜா புயல் போல மேலே வந்து கொண்டிருந்த நேரத்தில் எம் எஸ் வி கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போய்க்கொண்டிருந்தார்.  இசைமழை என்று ஒரு படம் வெளியிட்டார்.  கமல் நடித்த மங்களவாத்தியம் என்கிற ஒரு கண்றாவியான படம்.  படமும் ஊத்தல்.  பாடல்களும் திராபை!அப்புறம் வந்தது 'நினைத்தாலே இனிக்கும்' (இது ஒரு தேனிசை மழை என்று டைட்டிலுக்குக் கீழே எழுதி இருக்கும்) அந்த இளமைக்காலத்தில் இந்தப் படத்தின் 98% பாடல்கள் பிடித்திருந்தன.  நல்லவேளை, படத்தின் பெயர் எழுதி விட்டேன்.  இல்லா விட்டால் பாடல் கேட்காத ஜி எம் பி ஸாருக்கு தெரியாமல் போயிருக்கும்!!!!

1979 இல் வெளிவந்த படம்.  சுஜாதா கதை, கே பாலச்சந்தர் படம்.  எஸ் வி சேகர் அறிமுகமான படம் (ஒரு சிறு காட்சியில்).  கமல் - ரஜினி இணைந்து நடித்த மிகச்சில படங்களில் ஒன்று.  வில்லன் இல்லாத ரஜினி!
முதல் ரிலீஸில் படம் சரியாய் ஓடவில்லை என்று நினைக்கிறேன்.  விரைவிலேயே இரண்டாவது ரிலீஸ் கண்டது படம்.  ஸூப்பர் ஹிட்!இன்றைய பாடலை "எழுதியது" யார் என்று தெரியவில்லை! (எல்லாப் பாடல்களும் கவியரசர் எழுதியது)    இசை எம் எஸ் விஸ்வநாதன்.ஒரு சோகமான கட்டத்தைச் சந்திக்கும் நாயகன் - நாயகி, அவர்கள் மனம் இசைக்கும் பாடலாக, இல்லை இல்லை டியூனாக அமைந்த பாடல்.  இது போல வரிகள் இல்லாமல் இதற்கு முன்னாலோ, பின்னாலோ பாடல்கள் இருந்ததா என்று எனக்குத் தெரியவில்லை.85 comments:

துரை செல்வராஜூ said...

வாழ்க..

துரை செல்வராஜூ said...

அன்பின் ஸ்ரீராம் ,கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்..

ஸ்ரீராம். said...

இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்... இன்னும் ஒரு வாரத்துக்கு கீதா ரெங்கன் பாச பிஸி..! வருவது கடினம்.

துரை செல்வராஜூ said...

// இது போல வரிகள் இல்லாமல்..//

அப்படி ஒன்றும் இதுவரை இல்லை என்று தான் நானும் நினக்கிறேன்...

இருந்தாலும்
ஆராய்ச்சி அம்புஜங்கள் வந்ததும் மேலும் விளங்கும்...

Thulasidharan V Thillaiakathu said...

இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் துரை அண்ணா, கீதாக்கா...கீதாக்கா இன்னும் காபி ஆத்தலையா

இன்று இப்போது வணக்கம் ...இன்றே லேட்டாகிவிட்டது. எழுந்தது வழக்கம் போல் என்றாலும் கிச்சன் க்ளீனிங்க் வேலை என்று...

கீதா

துரை செல்வராஜூ said...

ஆம்..நானும் அறிவேன்..
பாசம் கொண்டாடி விட்டு வரட்டும்...

கீதா R தமக்கு நல்வாழ்த்துகள்..

Thulasidharan V Thillaiakathu said...

ஹா அஹ ஹா ஹா ஹா ஸ்ரீராம்...ஆமாம் ஸ்ரீராம் இன்று எட்டிப் பார்த்துட்டேன்...ஆனால் நாளை முதல் தான் ..வருவது சிரமம்....19 அன்று வருவேன்..அன்று கொஞ்சம் சோக கீதம் பாடிக் கொண்டு ஹா ஹா ஹா ஹா ஹா இந்தப் பாட்டைப் பாடிக் கொண்டு நினைத்தாலே இனிக்கும் என்று ஹா ஹா ஹா

கீதா

ஸ்ரீராம். said...

அடடே... வாங்க கீதா ரெங்கன்... காலை வணக்கம்!

ஸ்ரீராம். said...

ஆராய்ச்சி அம்புஜங்கள்... ஹா.. ஹா... ஹா... வரட்டும்.. வரட்டும் துரை செல்வராஜூ ஸார்...

Thulasidharan V Thillaiakathu said...

துரை அண்ணா நன்றியோ நன்றி....இரண்டுவருடம் ஆகிறது...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

ஸ்ரீராம் இதில் எஸ்பிபி என்னமா ஹம்மிங்க் ல....நான் மிக மிக ரசிக்கும் ஒரு பாடல்

கீதா

வல்லிசிம்ஹன் said...

வெகு இனிமை. இசை யும் குரலும். அருமை. எத்தனை நபர்களின் நினைவுகளைக் கிளறியதோ.


மிக நன்றி ஸ்ரீராம்

Thulasidharan V Thillaiakathu said...

இதே படத்தில் எம் எஸ் வி யின் சிவசம்போ பாடலும் ரொமப்ப் பிடிக்கும் நல்ல இசை அது....

கீதா

ஸ்ரீராம். said...

ஆமாம் கீதா.. அதுவும் சரண ஹம்மிங்கில் எஸ் பி பி தூள்! இந்தப் படத்தின் அனைத்துப் பாடல்களும் எனக்குப் பிடிக்கும். நான் எல் ஆர் ஈஸ்வரியின் ரசிகனும் கூட. இந்தப் படத்தில் வரும் "ஆனந்தத் தாண்டவமோ.." பிடித்த பாடல். அப்புறம் பாரதி கண்ணம்மா... எங்கேயும் எப்போதும், யாதும் ஊரே, காத்திருந்தேன் காத்திருந்தேன்...

ஸ்ரீராம். said...

வாங்க வல்லிம்மா...

// எத்தனை நபர்களின் நினைவுகளைக் கிளறியதோ.//

ஹா... ஹா... ஹா... உண்மை... உண்மை.. நானே இருக்கேனே....!

Thulasidharan V Thillaiakathu said...

ஹைஃபைவ் ஸ்ரீராம்....எனக்கும் இந்தப் படத்தில் எல்லா பாடல்களும் பிடிக்கும் எனக்கும் எல் ஆர் ஈ யின் வாய்ஸ் ரொம்பப் பிடிக்கும். வித்தியாசமான குரல்...

கீதா

Thulasidharan V Thillaiakathu said...

சரி அப்பால வாரேன் முடிஞ்சா....

காபி கஞ்சி ஆத்தறவங்களுக்கும் ஹாய் சொல்லிட்டுப் போலாம்னு பார்த்தேன்...திப்பிஸம் பண்ணினதுல மாமாவுக்கு மாங்காய்ச் சாதம் பிடிச்சுருச்சுனு இன்னிக்கு என்ன திப்பிஸம் பண்ணலாம்னு யோசிச்சுட்டுருக்காங்களோ...ஹா ஹா ஹா ஹா

கீதா

ஸ்ரீராம். said...

எல் ஆர் ஈஸ்வரியின் பல பாடல்கள் எனக்குப் பிடிக்கும் கீதா... சில மாதங்களுக்கு முன் "மௌனம்தான் பேசியதோ" பாடல் கூடப் பகிர்ந்திருந்தேன்... இன்னும் சில பாடல்கள் யோசித்து வைத்திருக்கிறேன்.

Thulasidharan V Thillaiakathu said...

வல்லிம்மா குட் ஈவ்னிங்க்....

கீதா

KILLERGEE Devakottai said...

ரசித்த பாடலே... நீண்ட இடைவெளிக்குப் பிறகு காட்சி அமைப்புகளை (ப்ரேம் டூ ப்ரேம்) மிகவும் இரசித்தேன்.

Bhanumathy Venkateswaran said...

காலை வணக்கம். நல்ல பாடல். துரை சார் வந்து விட்டேன் ஆராய்ந்து அம்புஜம். இந்த பாடலைப்போல வார்த்தைகள் இல்லாத இன்னொரு பாடல் நீ பாதி, நான் பாதி படத்தில் 'லலல்ல லால லா நிவேதா..' என்று ஒரு பாடல் உண்டு.

Bhanumathy Venkateswaran said...

ஶ்ரீராம் நி.இ. படத்தில் கடைசி பாடலான இனிமை நிறைஞ்ச உலகம் இருக்கு பாடலை எழுதியது வாலி என்று நினைக்கிறேன்.

துரை செல்வராஜூ said...

// இவரது இல்லாத இன்னொரு பாடல்...//

இது தான்... அருமை...

ஆனாலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள பாடலை கேட்டதில்லை...

ஸ்ரீராம். said...

வாங்க கில்லர்ஜி... ரசித்ததற்கு நன்றி.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல இனிமையான குரல் வளம். எஸ் பி பி யின் ஹம்மிங் சூப்பரா இருக்கும். நானும் கேட்டிருக்கிறேன். இரண்டாவது ரீலீஸ் என்பது எனக்கு பதிய தகவல். அப்போதெல்லாம் புது சினிமா வந்தவுடன் போய் பார்ப்பதில்லை. இதில் வரும் பாடல்கள் அனைத்தும் நன்றாகவே இருக்கும். வீட்டில் வந்த உறவுகளுக்காக படமும் பார்த்திருக்கிறேன். ஆனால் அது இரண்டாவது ரீலீஸோ என்னவோ... மீண்டும் பல வருடங்கள் கழித்து இப்போது கேட்க வைத்தமைக்கு நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் பானு அக்கா.. ஆமாம்.. . எனக்கும் நினைவுக்கு வருகிறது... ஸ ஸ ஸ ஸ ஸா நி தா...நிவேதா என்று வரும்..

ஸ்ரீராம். said...

/ / இவரது இல்லாத இன்னொரு பாடல்...//

இது தான்... அருமை...//

போச்சு... தபபாகி விட்டதா!!! இது எங்கே வருகிறது துரை ஸார்? நீங்கள் இந்தப் பாடலைக் கேட்கவில்லை என்று சொல்கிறீர்கள்?

துரை செல்வராஜூ said...

// இவரது இல்லாத!?...//

காலக் கெரகம்!..

வார்த்தைகள் இல்லாத.. - என்று வந்திருக்க வேண்டும்...

கைத்தொலைபேசியில்- ஒவ்வொரு சமயத்தில் தளம் - ஜங்...ஜங்.. என்று குதிக்கும்..

அதில் வந்த கோளாறு...

ஸ்ரீராம். said...

//கைத்தொலைபேசியில்- ஒவ்வொரு சமயத்தில் தளம் - ஜங்...ஜங்.. என்று குதிக்கும்.. அதில் வந்த கோளாறு...//

ஓகே ஓகே... தெரிந்து தெளிந்தேன்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

கல்லூரியில் இறுதியாண்டான 1979இல் இப்படம் வெளியானபோது பல முறை சென்று பார்த்தேன். பாலசந்தரின் வித்தியாசமான படங்களில் ஒன்று. எங்கேயும் எப்போதும்...பாடலை ரசித்துக் கேட்பேன். நான் அதிகம் ரசித்த படம். 'சோனான்னா தங்கம்...தங்கக்கலர்தான்', 'ஓகோ ஒங்க பாஸ் ஒங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லிட்டாரா?', 'ஐ வாண்ட் டு லிவ்..நான் வாழணும்னு ஆசைப்படுறேன்', 'இந்த மாதிரி அழகான பெண்ணை பெத்த அப்பா அம்மாவுக்கு நன்றி சொல்லணும்'...'அப்படின்னா நீங்க காரைக்கால்தான் போகணும்'... 'சந்துருக்கண்ணா இந்த சோணாவாட வாழ்க்கை ஒரு புரியாத புதிர் மட்டுமல்ல, சீக்கிரமே முடியப்போற முற்றுப்புள்ளிகூட', உண்மையிலேயே இப்படத்தை நினைத்தாலே இனிக்கும்.

ஸ்ரீராம். said...

முனைவர் ஐயாவா இது! என்னவொரு நினைவுச்சிதறல்... வல்லிம்மா சொன்னது கரெக்ட்தான்! நானும் அதிகமுறை பார்த்த படம் இதுதான். எனக்கும் வசனங்கள் மனப்பாடம்! இன்று உங்கள் பின்னூட்டம் மகிழ்வைத் தந்தது.

நெ.த. said...

இந்தப் படத்தின் மற்ற பாடல்கள் இன்னும் நல்லா இருக்கும். இளையராஜா பாணிக்குப் போட்டியா எம்.எஸ்.வி அவர்கள் இசையமைத்த பாடல்கள் என்று சொல்வார்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

நினைத்தாலே இனிக்கும்....!

வெங்கட் நாகராஜ் said...

காலை வணக்கம் 🙏.

இந்தப்படம் நிறைய பாடல்கள் கொண்டது. பாடல்கள் பிடிக்கும்.

கோமதி அரசு said...

அருமையான பாடல், இனிமையான பாடல்.

எல் ஆர் ஈஸ்வரி ஹம்மிங் மிகவும் நன்றாக இருக்கும் பல இனிமையான பாடல்கள் இருக்கிறது எல். ஆர் . ஈஸ்வரி அவர்கள் ஹம்மிங் செய்த பாடல்கள்.
முனைவர் ஐயா அவர்கள் வசனங்களை அழகாய் சொல்லி அசத்தி விட்டார்கள்.

Bhanumathy Venkateswaran said...

பாடல் வரிகள் இல்லாத இன்னொரு பாடல் 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' படத்தில் வரும் 'அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்' பாடல்.

Bhanumathy Venkateswaran said...

ஜம்புலிங்கம் சார் நி.இ.படத்திலிருந்து நிறைய வசனங்களை பகிர்ந்து கொண்டிருந்தார். எனக்கு மிகவும் பிடித்த காட்சி விமானத்தில் கமல்,ஜெயப்ரதாவிற்கு கைரேகை பார்க்கும் காட்சி.
"உங்களுக்கு ஒரு அண்ணா ஒரு தம்பி இருக்கனுமே?...இல்லையா? ஒரு அம்மா, ஒரு அப்பா?"
என்ன நீ னன்னு சொல்லறேனேனு பாக்கறயா? அதான் நெருங்கிட்டோமே?"
என்று கமல் கூற,"ஆமாண்டா சந்த்ரு"என்று ஜெயப்ரதா பதிலளித்து விட்டு முகத்தை புத்தகம் படிப்பதை தொடருவார்.

Bhanumathy Venkateswaran said...

இந்த படத்திற்கான விமர்சனத்தில் குமுதம் பத்திரிகையில்,'தேனிசை மழை என்று போட்டிருக்கிறார்கள்.ஒரு குடை கொண்டு வந்திருக்கலாமோ என்று நினைக்கும் அளவிற்கு இசை மழைதான். தேன் பஞ்சம் என்று எழுதியிருந்தார்கள்.

Bhanumathy Venkateswaran said...

நி.இ.பட நாயகன் கமலாக இருந்தாலும் Rajini steals the show என்று தோன்றும். சிவ ஷம்போ!

ஸ்ரீராம். said...

வாங்க நெல்லை,

// மற்ற பாடல்கள் இன்னும் நல்லா இருக்கும்//

ஏன், இந்தப் பாடலுக்கு என்ன குறை? மற்ற பாடல்களும் நல்லா இருக்கும். இளையராஜா தனது இசையில் என்ன வித்தியாசம் செய்தார் என்று தனது 75வது பிறந்த தின சிறப்பு பேட்டிகளில் சொல்லி இருக்கார்.

ஸ்ரீராம். said...

நன்றி தனபாலன்,

ஸ்ரீராம். said...

காலை வணக்கம் வெங்கட்.

ஸ்ரீராம். said...

வாங்க கோமதி அக்கா...

// எல் ஆர் ஈஸ்வரி ஹம்மிங் மிகவும் நன்றாக இருக்கும் //

இந்தப் பாடலிலா சொல்கிறீர்கள்? இது எஸ் ஜானகி குரல்.

ஸ்ரீராம். said...

பானு அக்கா... அழகே உன்னை ஆராதனை செய்கிறேன் பாடலில் வரிகள் அதிகமாகவே வருகின்றன. அழகே உன்னை ஆராதனை செய்கிறேன்... அழகே மலரே... ஆராதனை செய்கிறேன்..

ஸ்ரீராம். said...

பானுக்கா...

// விமானத்தில் கமல்,ஜெயப்ரதாவிற்கு கைரேகை பார்க்கும் காட்சி//

அது டிபிகல் சுஜாதா "டச்"

குமுதம் விமர்சனத்தில் நியாயமில்லை. அவர்களுக்கு என்ன நிர்ப்பந்தமோ!!!

ஸ்ரீராம். said...

// நாயகன் கமலாக இருந்தாலும் Rajini steals the show என்று தோன்றும்//

அதகளம் செய்வதால். மௌனராகம் படத்தில் மோகன் நாயகனாக இருந்தாலும் கார்த்திக் எல்லோர் மனத்திலும் சட்டென இடம் பிடித்திருப்பார். அது போல!

Bhanumathy Venkateswaran said...

//குமுதம் விமர்சனத்தில் நியாயமில்லை. அவர்களுக்கு என்ன நிர்ப்பந்தமோ!!!///
இதை ஒப்புக் கொள்ளவே முடியாது. எஸ்.ஏ.பி. ஆசிரியராக இருந்தவரை மிகவும் நியாயமாக விமர்சனம் எழுதிய பத்திரிகை குமுதம்தான். அப்போதெல்லாம் குமுதத்தின் விமர்சனத்தை படித்து விட்டு படத்திற்கு செல்லலாமா வேண்டாமா என்று முடிவு செய்தவர்கள் உண்டு. இப்போது குமுதம் படிப்பதில்லை என்பதால் சொல்ல முடியவில்லை.

எந்தவித நிர்பந்தத்திற்கும் ஆளாகி விடக்கூடாதே என்பதற்காக பத்திரிகையாளர்களுக்கான பிரத்யேக காட்சிகளுக்கு செல்லாமல் வரிசையில் நின்று டிக்கெட் வாங்கிக் கொண்டுதான் படம் பார்ப்பாராம் திரு.எஸ்.ஏ.பி. அவர்கள். அப்படி பார்த்த படங்களை பற்றி ஆசிரியர் குழுவில் இருந்த ரா.கி.ரெங்கராஜன், ஜ.ரா.சுந்தரேசன், புனிதன் எல்லோரையும் தனித்தனியாக சுருக்கமாக விமர்சனம் எழுதச் சொல்லி, அவைகளிலிருந்து சிறப்பான வரிகளை சேர்த்துக்கொள்வாராம்.

பத்திரிகையாளர்களுக்கான பிரத்யேக காட்சிகளை அறிமுகம் செய்தது எம்.ஜி.ஆர். என்றும், அந்த காட்சிகளுக்கு வரும் பத்திரிகையாளர்களுக்கு சூட்கேஸ் வழங்கப்படும் என்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். அதை வாங்காமல் தைரியமாக எம்.ஜி.ஆர் படங்களை விமர்சனம் செய்த பத்திரிகை குமுதம்.

எம்.ஜி.ஆரின் நீதிக்குப் பின் பாசம் படத்திற்கு 'பாதிக்கு மேல்
மோசம்' என்றும் வேறு ஏதோ ஒரு படத்திற்கு விமர்சனமே எழுதாமல் படத்தை மட்டும் போட்டு விட்டு, பக்கத்தை வெறுமையாக விட்டு விட்டார்கள் என்றும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

என் நினைவில் இருந்த வரை 'நெற்றிக்கண்' பட விமர்சனத்தில் 'ரஜினி தூளடிக்கிறார், டிகாஷன் குறைச்சல்' என்றும், அஞ்சலி பட விமர்சனத்தில்,'அசல் தாய், அசல் மனைவி, அசல் குடும்பத் தலைவி இதன் அத்தனை பரிமாணங்களையும் ரேவதியின் முகமும் குரலும் நன்கு வெளிப்படுத்துகின்றன.முகம் தெரியும் பொழுது பார்த்துக் கொள்ளலாம், தெரியாத பொழுது குரலை வைத்து யூகித்துக் கொள்ள வேண்டியதுதான்' என்றும் எழுதியிருந்தார்கள். மேலும் எல்லா பத்திரிகைகளும் ஆஹா, ஓஹோ என்று கொண்டாடிய 'ஜெண்டில்மேன் ' படத்தை 'பிரச்சார போர்வை போர்த்திய செக்ஸ் படம்' என்று விமர்சித்திருந்த ஒரே பத்திரிகை குமுதம்தான்.

நான் ஆரம்பத்திலேயே சொல்ல நினைத்தேன், குற்றம் கண்டு பிடிக்க வேண்டாமே என்று பேசாமல் விட்டதை இப்போது சொல்ல வைத்து விட்டீர்கள், இந்த படத்திற்கு போட்டதை விட அருமையான பாடல்களை எம்.எஸ்.வி. வேறு பல படங்களுக்கு போட்டிருக்கிறார்.

Bhanumathy Venkateswaran said...
This comment has been removed by the author.
Bhanumathy Venkateswaran said...

ரொம்ப பொய்ங்கிட்டேனோ? விமர்சனம் பற்றி ஒரு கிசு கிசுவோடு முடிக்கலாம்.

இப்போதெல்லாம் நடிகர்களும், சினிமா இயக்குனர்களும் அதிகம் பயப்படுவது பிரபலமான அந்த ஆங்கில நாளேட்டில் விமர்சனம் எழுதும் அந்த பெண்மணியின் விமர்சனத்திற்க்குத்தானாம். ஒரு பிரபல நடிகரின் படம் வெளியான பொழுது, குறிப்பிட்ட அந்த பத்திரிகை ஆசிரியரை தொலைபேசியில் அழைத்து,"அந்த லேடியை அனுப்பாதீங்க, அவங்க ரொம்ப கிழிச்சுடுவாங்க, வேறு யாரையாவது அனுப்புங்க" என்று வேண்டிக் கொண்டார்களாம். சம்பந்தப்பட்ட பத்திரிகை அனுப்பிய இளைஞர் அந்த பெண்மணியை விட மோசமாக அந்த படத்தை நார் நாராக கிழித்து விட்டாராம். அதன் பிறகு அந்த நடிகரின் மனைவி, மேற்படி பத்திரிகை அலுவலகத்திற்கு பலமுறை ஃபோன் செய்து, "ஏற்கனவே ரெண்டு படங்கள் ஃபிளாப், இந்த படமும் ஓடவில்லை என்றால் ரொம்ப கஷ்டம், எப்படியாவது கொஞ்சம் நல்லபடியாக எழுதுங்கள்" என்று கெஞ்ச, யாரோ ஒரு மாணவர் அந்த படத்தை சிறப்பாக விமர்சித்திருந்ததை வெளியிட்டார்களாம்.

ஸ்ரீராம். said...

பானு அக்கா..

உங்களுக்கு அபார ஞாபக சக்தி. அஞ்சலி மற்றும் படங்களின் விமர்சன வரிகளை எல்லாம் .நினைவில் வைத்திருக்கிறீர்கள். இந்தப் படத்தின் பாடல்கள் அப்போது செம ஹிட். அதனால் ஒப்புக்கொள்ள முடியாது என்று சொன்னேன். நிர்ப்பந்தத்துக்கு விளக்கமாக பதில் சொல்லி ரசிக்க வைத்ததற்கு நன்றி.

ஸ்ரீராம். said...

// நான் ஆரம்பத்திலேயே சொல்ல நினைத்தேன், குற்றம் கண்டு பிடிக்க வேண்டாமே என்று பேசாமல் விட்டதை இப்போது சொல்ல வைத்து விட்டீர்கள், இந்த படத்திற்கு போட்டதை விட அருமையான பாடல்களை எம்.எஸ்.வி. வேறு பல படங்களுக்கு போட்டிருக்கிறார். //


இல்லை என்று சொல்ல முடியுமா? கண்டிப்பாக. இந்தப் பாடலும் ரசிக்கக்கூடிய ஒன்று. - குறைந்தபட்சம் எனக்காவது!!!!

துரை செல்வராஜூ said...

பானுமதி வெங்கடேசன் அவர்கள் பழைய விஷயங்களை அள்ளிக் கொட்டியிருப்பது அருமை...

ஸ்ரீராம். said...

பானு அக்கா...

எந்த ஆங்கில நாளேட்டின் எந்தப் பெண்மணி? இங்கு என்ன கிசுகிசு? குமுதம் பாதிப்பா?!!! யார் அது என்று சொல்லுங்களேன்... இந்துமதி?

athira said...

///ஏகாந்தன் ஸார் எந்தப்பாடல் போட்டாலும் வரிகள் சுமார்... வரிகள் சுமார் என்கிறார். //

உப்புப் புளிப்பு உறைப்பு போதாமல் இருக்குதென்கிறாரோ?:)

athira said...

படப்பெயர் அறிந்திருக்கிறேன் ஆனா இன்னும் பார்த்ததில்லை...

பாட்டு முழுவதும் நினைச்சுக்கொண்டே இனிப்போடு இருக்கிறார்களோ?:) ஹா ஹா ஹா ஏகாந்தன் அண்ணனுக்கு உப்புப் புளிப்புப் போட வெளிக்கிட்டு நம்மை.. வசனம் தத்துவம் ஏதுமில்லாப் பாட்டுப் போட்டு ஏமாத்திப்போடீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. தத்துவப்பாடலா வேணும்.. போராடுவோம்ம் போராடுவோம்ம் தத்துவப்பாடலுக்காகப் போராடுவோம்:))

ஸ்ரீராம். said...

அதிரா.... நினைத்தாலே இனிக்கும் பார்த்ததில்லையா? ஆச்சர்யம்தான்! ஏகாந்தன் ஸாரை இன்னும் காணோமே...

athira said...

இல்லை படம் இதுவரை பார்த்ததில்லை.. விரைவில் பார்த்திடுவேன்.. பாட்டும் கேட்டதில்லை[கேட்பதற்கு வசனம் இல்லையே:))].. வித்தியாசமான பாடலை அறிமுகப்படுத்தியிருக்கிறீங்க.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஏகாந்தன் அண்ணனை டிசுரேப்பு பண்ணாதீங்கோ:)) இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் சூடு பறக்குது.. ஏகாந்தன் அண்ணன் சோஃபாவின் நுனிக்கே வந்திட்டார் டென்ஷனில்:)).. மச் முடிந்ததும் வந்திடுவார் வெயிட்:)) ஹையோ அவரது கையில் இருக்கும் றிமூட்டை ஆராவது பறியுங்கோ:))

கோமதி அரசு said...

இந்த பாடலில் இல்லை, பல பழைய பாடல்களில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங் நன்றாக இருக்கும் என்றேன்.

கோமதி அரசு said...

ங்க கோமதி அக்கா...

// எல் ஆர் ஈஸ்வரி ஹம்மிங் மிகவும் நன்றாக இருக்கும் //

இந்தப் பாடலிலா சொல்கிறீர்கள்? இது எஸ் ஜானகி குரல்.//

இந்த பாடலில் இல்லை, பல பழைய பாடல்களில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங் நன்றாக இருக்கும் என்றேன்.ஸ்ரீராம். said...

அதிரா... இப்போது ஏது இந்தியா பாகிஸ்தான் மேட்ச்? ஆனால் ஆப்கானிஸ்தான் பங்ளாதேஷை T 20 மேட்சில் துவைத்து எடுத்து விட்டது. அதைப் பற்றி அவர் பதிவு போடுவார் என்று நினைக்கிறேன்.

ஸ்ரீராம். said...

// இந்த பாடலில் இல்லை, பல பழைய பாடல்களில் எல்.ஆர்.ஈஸ்வரியின் ஹம்மிங் //

ஓகே அக்கா...

G.M Balasubramaniam said...

ஒரு காலத்தில் நிறையவே படங்கள் பார்த்ததுண்டு பாடல் வரிகளும் நினைவில் இருக்கும் என்னை அறியாமல் அந்த வரிகள் நினைவில் வந்துமோதும் ஆனால் இக்காலப் பாட்டுகள் நயத்தைவிட ஓசையே அதிகம் என்பது என் எண்ணம்

Geetha Sambasivam said...

//அதிரா.... நினைத்தாலே இனிக்கும் பார்த்ததில்லையா? ஆச்சர்யம்தான்! ஏகாந்தன் ஸாரை இன்னும் காணோமே.// ஙே!!!!!!!!!!!!!!!!!!! :)

Geetha Sambasivam said...

கொல்லன் பட்டறை! இந்த ஈ என்ன செய்யும்! காலம்பர வர முடியலை! கொஞ்ச நேரமே கணினியில் அமர்ந்தேன். எதுவும் படிக்கவோ, எழுதவோ முடியலை! ஏழு மணிக்குப் பரிட்சை! அதே ஞாபகம்! எப்போவும் வீட்டுக்கு வருவார். அந்த நபர் இன்று கிடைக்கலை. புதிய நபர் வந்தார். பரிட்சை வைத்தார். ரெண்டு பேருமே வழக்கம்போல் பரிட்சையில் தோல்வி! அதிக மதிப்பெண்கள்! ஆகவே நாளையிலே இருந்தும் காலை வருவேனா சந்தேகமே! :))))) காலை நடைப்பயிற்சியைக் கால் வலி அதிகம் ஆனதால் நிறுத்தி இருந்தேன். அதை ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன். பார்ப்போம்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

இந்த படத்தில் ரஜனி ஸ்டைல் நன்றாக இருக்கும். பொதுவாகவே அப்போது வந்த ரஜினி படங்களில் ஸ்டைலும், முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்களில் நடிப்பும் நன்றாக இருந்தது. ஆனால் அதன் பின்பு வந்த எந்த படங்களும் திரைஅரங்குகளில் சென்று பார்த்ததில்லை. இந்தப் படம் ஒரு உறவினருடன் சென்று பார்தோம். கதை கூட எனக்கு இப்போது நினைவில்லை. இந்தப் படத்தின் பாடல்கள் வானொலியில் கேட்டு பிடித்தமாகி விட்டது. அதுவும் எஸ. பி. பி யின் குரலுக்காக அடிக்கடி கேட்பேன்.

இதற்கு முன் காலையிலேயே பாடலைப் பற்றி ஒரு கருத்துரை தந்திருந்தேன். நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

வாங்க ஜி எம் பி ஸார்... நன்றி. இதுவே பழைய படம்தானே? நீங்கள் கேட்டிருப்பீர்களே...

ஸ்ரீராம். said...

ஙே!!!!!! எதற்குக்கா? சர்க்கரைச் சோதனையா? இரண்டு பேருமே அதிக மதிப்பெண்கள் எடுத்து ஃபெயிலா? நடைப்பயிற்சியை ஏன் நிறுத்தினீர்கள்? டயட்?

ஸ்ரீராம். said...

வாங்க சகோதரி கமலா ஹரிஹரன் .. காலையில் உங்கள் கமெண்ட் பார்த்தது போல நினைவில்லையே... நன்றி சகோதரி.

Geetha Sambasivam said...


// நடைப்பயிற்சியை ஏன் நிறுத்தினீர்கள்? டயட்?//
//காலை நடைப்பயிற்சியைக் கால் வலி அதிகம் ஆனதால் நிறுத்தி இருந்தேன். அதை ஆரம்பிக்கணும்னு நினைக்கிறேன். பார்ப்போம்.// க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், ஒழுங்காப் படிங்க! :))))))

Geetha Sambasivam said...

6-51க்குக் கமலா ஹரிஹரன் ஒரு கருத்துச் சொல்லி இருக்காங்க! எங்கே! சரியாவே படிக்கலை! :))))))

Geetha Sambasivam said...

//ஙே!!!!!! எதற்குக்கா?// கொல்லன் பட்டறையில் ஈக்கு என்ன வேலை? அதான் ஙே!

ஸ்ரீராம். said...

மன்னிக்கவும் கீதா அக்கா... என் கேள்வியில் தவறு... டயட் சரியாய் இருக்கிறீர்கள்தானே என்பதை சுருக்கமாக கேட்க நினைத்தது என் தவறு!

ஸ்ரீராம். said...

ஆமாம்... காலையிலேயே சகோதரி க ஹ எழுதி இருந்த கமெண்ட் நாந்தான் கவனிக்கவில்லை... இப்ப நான் சொல்றேன்...

ஙே..............!!!

Kamala Hariharan said...

இரண்டையும் பார்த்து பதிலளித்தமைக்கு சகோதரருக்கு மிக்க நன்றி.
காலையில் அனுப்பியதை பார்த்து குறிப்பிட்ட கீதா சாம்பசிவம் சகோதரிக்கும் என் மனமார்ந்த நன்றி.

Angel said...

ஹை சித்தப்பா அண்ட் கமல் அங்கிள் ரெண்ண்டுபேரும் நடிச்ச படம் .நான் டிவியில் தான் பார்த்தேன் .
காட்சிகள் க்ளியரா இருக்கு .
டைரக்டர் பாலசந்தருக்கு தாங்க்ஸ் சொல்லணும் இதில் ஸ்ரீராமின் ஆஸ்தான வெறி :) டியர் ஹீரோஸ் யாரையும் போடாததுக்கு :)
சாமீ கற்பனைகூட பண்ண முடில :)
spb குரல் காந்தம் .

ஸ்ரீராம். said...

வாங்க ஏஞ்சல்...

// இதில் ஸ்ரீராமின் ஆஸ்தான வெறி :) டியர் ஹீரோஸ் //

ஓ.... ஜெச ,சிகு, சிக மாதிரியா!

:)))

ஏகாந்தன் Aekaanthan ! said...

காலையிலிருந்தே பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன். மிடில் ஆர்டர் ப்ரமாதமாக பேட்டிங் செய்கிறதே. நாம் லோயர் ஆர்டர்தானே, சாவகாசமாக இறங்குவோம் என நினைத்திருந்தேன்.

அந்தக் காலகட்டத்தில் இளையராஜா கொடுத்த இசை அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்திருக்கவேண்டும் எம்.எஸ்.வி என்று நினைக்கிறேன். கிரிக்கெட் அணியில் புதிய பேட்ஸ்மன் ஒருவன் அறிமுகப்படுத்தப்பட்டு, அவனும் பேட்டைக் கையிலெடுத்தவுடனேயே வீரேந்திர சேஹ்வாக் போலக் கலக்கோகலக்கு எனக் கலக்க ஆரம்பித்தால், இதுவரை ’நம்மை விட்டால் டீமுக்கு வேறு ஏது கதி’ என்றிருந்தவர்கள், பொழுதுபோக்கு ஆட்டம் காண்பித்துக்கொண்டிருந்தவர்கள், திடுக்கிட்டு விழித்து, சரியாக நின்று, மட்டையை ஒழுங்காகப் பிடிக்க ஆரம்பிப்பார்கள்.. அவுட் ஆகாமல் இருக்கவேண்டுமே ஆண்டவா என்று பதட்டத்துடன் ஆடுவார்கள் அல்லவா - அதைப்போன்ற அனுபவம்போலும் எம்.எஸ்.வி-க்கு.

ஹம்மிங்கை வைத்தே சில நிமிஷங்கள், இனிமையாக, நன்றாக ஓட்டத் திறமை வேண்டும். எம் எஸ் வி-க்கு அதற்குக் குறைவில்லை எனினும் இங்கேதான் முயற்சித்தார். ஒரு வித்தியாசமான ஷாட்..பௌண்டரி! ரசிகர்களின் ஆரவாரம்!

ஆனால், இடையிடையே ’நினைத்தாலே இனிக்கும்...’ என்று அடிக்கடி வருவது அவ்வளவு இனிக்கும்படி இல்லை.

பாடலில், கண்கலங்கும் ஒரு ஸ்டில்லில் ஜெயப்ரதாவின் முகம் காண்பிக்கும் ஜாலத்தை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லையே..

2018-ல் வரப்போகிற காலா அப்போதே ஒரு ஹிண்ட் - ரசிகர்களுக்கு இந்தப் படத்தின்மூலம் கொடுத்திருப்பதாகத் தெரிகிறதே..அதாவது தாடி வெளுக்காத காலா..

ஏகாந்தன் Aekaanthan ! said...

மிருணாள் சென், அரவிந்தன், ஷ்யாம் பெனெகல், சத்யஜித் ரே, ஜான் ஆப்ர்ஹாம் என சினி-ஆளுமைகளின் க்வாலிட்டி சினிமாவை (ஃபிலிம் ஃபெஸ்ட்டிவல்களில்) தேர்ந்தெடுத்து நண்பர்களுடன் போய்ப்பார்க்க ஆரம்பித்துவிட்டிருந்த காலகட்டம் அது. தமிழ், ஹிந்தி போன்ற மொழிகளின் சராசரி அல்லது ஸ்டீரியோடைப் படங்களிலிலிருந்து வெகுதூரம் வந்துவிட்டிருந்தேன். இருந்தும், பாலசந்தர், பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா, மணிரத்னம் போன்றோர்கள்மீது ஒரு கண்ணும் இருந்தது – அவர்களின் படங்களையெல்லாம் துரத்திச் செல்லவில்லை என்றபோதும். அப்போது தவறவிட்டிருந்த பலபடங்களில் இதுவும் ஒன்றானது.

ஏகாந்தன் Aekaanthan ! said...

@ அதிரா: ..ஏகாந்தன் அண்ணனுக்கு உப்புப் புளிப்புப் போட வெளிக்கிட்டு நம்மை.. வசனம் தத்துவம் ஏதுமில்லாப் பாட்டுப் போட்டு ஏமாத்திப்போடீங்க ..//

அதானே! ஞானிக்குப் பிடித்தது தத்துவமெல்லோ!

@ஸ்ரீராம்: ..அதிரா... ஆப்கானிஸ்தான் பங்ளாதேஷை T 20 மேட்சில் துவைத்து எடுத்து விட்டது. அதைப் பற்றி அவர் பதிவு போடுவார் என்று நினைக்கிறேன்.//

கவனித்தேன். இடையிலே, இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி கேட்டுக்கொண்டதால், ரசிகர்களால் நிரம்பி வழிந்த மும்பை ஸ்டேடியத்தை, மேட்ச்சை டிவியில் கண்டுகளித்தேன். நேற்று, ஜூனியர் டெண்டுல்கர் இந்தியா U-19 அணிக்குத் தேர்வாகியிருக்கும் அதிரடி நியூஸ்..

இருந்தும், வேறெதெதோ எழுத முயற்சித்துக்கொண்டிருக்கிறேன்..ஒன்னும் சரியாக வரமாட்டேன் என அடம்பிடிக்கிறது. இடையிடையே எபி கொஞ்சம் ரிலாக்ஸ் செய்துகொள்ள உதவுகிறது..நன்றி.

ஸ்ரீராம். said...

வாங்க ஏகாந்தன் ஸார்..

கிரிக்கெட்டிலேயே பதில் சொல்லி விட்டீர்கள். நீங்கள் சொன்னபிறகு பாடலில் "நினைத்தாலே இனிக்கும்" வார்த்தையை நீக்கிப் பார்க்கிறேன்.​ நிறைவு இருக்காது என்று தோன்றுகிறது. அல்லது அந்த இடத்துக்கும் னனனானா னனன்னா என்று வரவேண்டுமோ!

//பாடலில், கண்கலங்கும் ஒரு ஸ்டில்லில் ஜெயப்ரதாவின் முகம் காண்பிக்கும் ஜாலத்தை//

படம் பார்த்ததில் பாதி ஜெயப்ரதாவுக்காகப் பார்த்தது.. மிஸ் செய்வோமா!

நீங்கள் சொல்லும் பெரிய ஜாம்பவான்கள் படம் எதுவும் நான் பார்த்ததில்லை - சந்தர்ப்பம் ஏற்பட்டும்!

ஜுனியர் டெண்டுல்கர் செய்தி உட்பட எல்லாவற்றையும் சொல்லி ய்விட்டீர்கள். ரஷித்கான் ஹர்ஷா போக்லேயை ப்ரோ என்று கூப்பிட்டு (ஒரு ஆர்வக்கோளாறில்) அசடு வழிந்ததும் படித்திருப்பீர்கள்!

வல்லிசிம்ஹன் said...

எல்.ஆர் ஈஸ்வரியின் குரலில்
மயக்கம் அதிகம்.
60களில் வந்த அனேகம் பாடல்களில் ஈஸ்வரியின்
குரை பரிமளிக்கும்.
//எனக்கு வந்த இயக்கம்,உனக்கும் வரவேண்டும் என்ற பாடல்
இன்னும் ஒலிக்கிறது என் மனதி. ஜெ.அவர்களின் படம் நீ.அதில் இந்தப் பாட்டு வந்ததாக நினைவு.

கேட்டுப் பாருங்கள்.

வல்லிசிம்ஹன் said...

குரல் என்று மாற்றிப் படிக்கவும்.நன்றி.

ராஜி said...

இந்த படத்தில் எல்லா பாடலும் ரொம்ப நல்லா இருக்கும். எனக்கும் பிடிக்கும். முக்கியமா பாரதி கண்ணம்மா..ன்ற பாடலும், நினைத்தாலே இனிக்கும்ன்ற ஒரே ஒரு வார்த்தைய வச்சே ஒரு பாடல் இருக்கும் அந்த பாடலும் பிடிக்கும்

ராஜி said...

எனக்கு பிடிச்ச பாடலை பகிர்ந்தமைக்கு நன்றி சகோ

Asokan Kuppusamy said...

இப்பொழுது நினைத்தாலும் இனிக்கிறது. நினைத்தாலே இனிக்கும் பாராட்டுகள்

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!