ஆறு முதல் எட்டு வரை எங்கள் பள்ளி!
ஐந்தாம் வகுப்பு தேறியவுடன், பெரிய பள்ளி என்கிற National High School லில் கொண்டு சேர்க்கப் பட்டோம். ஐந்தாவது வரை தரையிலும், பெஞ்சிலும் குப்பை கொட்டிவிட்டு, பெரிய பள்ளியில் டெஸ்க் அட்டாச்ட் பென்ச் புதுமையான மாற்றம், எங்கள் செதுக்கும் திறமையை அங்கு எங்கும் காணலாம். பென்ச், டெஸ்க்டாப், ரப்பர், வகுப்பு வாசலில் இருக்கும் மரம் யாவற்றிலும் நீக்க முடியாதபடி நிலைத்திருக்கும். ஆறுமுகம்(பத்தர்) ஜோசஃப்ரயான், ஸ்ரீதர், புஷ்பவனம், தியாகராஜன், ப்ழ பழ பழ்லெ பழனியப்பன் போன்றவர்கள் அறிமுகம் அங்கு தொடங்கிய்து. பெரிய பண்டிட், வைத்தியனாத வாத்யார், லக்ஷ்மண வாத்யார், கடுமையாக அடிக்கும் ட்ராயிங்க் மாஸ்டர் வடிவேலு ஸார், லக்ஷ்மிஸ்டோர் வைத்யனாத வாத்யார் என்கிற புதிய ஆசிரியர்கள் மத்தியில் சற்றே மிரட்சியுடன் தொடக்கம். ஹைஸ்கூலில் பெரிய பண்டிட் மகன்தான் ப்ரேயர் பாட்டாகிய, "கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளும் களிப்பே" யை பாடுவான். அவன் லீவில் போனால்தான் வேறு யாரும் அந்த இடத்தைப் பிடிக்க முடியும். அஸிஸ்டண்ட் ஹெட் மாஸ்டர் கஸ்தூரி ரங்கன் சார் ப்ரேயரில் யாரேனும் பேசுகிறார்களா என தீவிரமாகக் கண்காணிப்பார். பேசுபவர்களுக்குப் பிரம்படி உண்டு.
எட்டாவதில் நான், சந்தானம், ஸ்ரீதர், புஷ்பாவனம், ஜோசப்ராயன், காராசேவ் மணி ஒரே க்ளாஸில் படித்தோம். ஸ்ரீதர் அவன் வீட்டு ரேடியோவில் விவித்பாரதி பாடல்களை கேட்டு எங்களுக்கு ஒலி பரப்புவான். இன்றய ஹாரி பாட்டெர் கதை போல் சோமசுந்தரம் எங்களுக்கு ஸ்கூலில் கதைகள் சொல்வான். கன்னித்தீவு மாதிரி முடிவே இல்லாத கதை. சப்த ஸ்வர ஜாலங்களுடன், நடிப்புடன் அவன் சொல்வதை வாய் மூடாமல் கேட்போம். இரண்டரை மணி சினிமா அவன் வாயில் நாள் கணக்கில் தொடரும். 'பறக்கும் தட்டு' என்ற கதையை முடிவேயில்லாமல் சொல்லிக்கொண்டே இருந்தான்!
பூசாரி(அவர் பெயரே பெரும்பாலும் யாருக்கும் தெரியாது) மாஸ்டர்(!) தான் in-charge. கோடையிடி ராமசாமியும், பூசாரியும் பி.டி மாஸ்டர்கள். முன்னவர் வாலிபால் சர்விஸ் போட்டால் கோடை இடிபோல் சௌண்ட் வருமாம். "கோடையிடி இடிக்க, பூசாரி உடுக்கடிக்க, சிங்காரவேலு நாட்டியமாட!" என்ற பாட்டுஅவர்கள் வரும்போது எங்கள் நடுவில் இசைக்கப்படும். சிங்காரவேலு மற்றொரு பி.டீ & என்.சீ.சீ மாஸ்டர். அந்த காலதிலேயே சிண்டிகேட் அமைத்து, பள்ளி ஏலத்தில் குறைந்த விலைக்கு பழைய ஸ்போர்ட்ஸ் பொருட்களை வாங்குவோம். நான் பாட்மிண்டன் விளையாடுவேன். ராக்கெட்டின் கெட் அடிக்கடி பிய்ந்துவிடும். ஃபுட்பால் மௌத் பன்னார் அறுந்துவிடும் எனவே சியால்காட் ஸ்போர்ட்ஸ் கடையை அடிக்கடி முற்றுகையிடுவோம்.
முதலில் ACC ல் சேர்ந்தோம். சிங்காரவேலு ஸார்தான் மாஸ்டெர். ஏ.சி.சி யில் சேர்ந்தால்தான் என்.சீ.சீயில் சேர்த்துக் கொளவார் என்பதனால் அதில் சேர்ந்தோம். நானும், சந்தானமும் எதிலும் சேர்ந்துதான் இருப்போம். எட்டாவதுவரை குமர கோவில் ஷெட்டில்தான் வகுப்புகள். ஏழாவ்தில் குடுமி வைத்யனாத அய்யர் க்ளாஸ். ஒவ்வொரு வகுப்பிலும் பின்புறம் உள்ள இடத்தில் தோட்ட வேலை செய்து பூ அல்லது கறிகாய் செடிகளைப் பயிரிடவேண்டும். ஆசையாக செடிகளை வளர்த்து, பின் வேறு க்ளாஸ் போவது கஷ்டமாகஇருக்கும். எட்டாவது லக்ஷ்மண வாத்யார் க்ளாஸ். நான், ஸ்ரீதர், புஷ்பவனம் ஒரே பெஞ்ச். எதனாலோ சண்டை வந்து நானும் ஸ்ரீதரும் பல வருடங்களுக்குப் பேசிக் கொள்ளவில்லை. அவன் அண்ணா சந்த்ரு, எனக்கு ரொம்ப க்ளோஸ். பேருக்குத்தான் ஹைஸ்கூல். ஆனால் 6வது, 7வது, 8வது வகுப்புக்கள் மாத்திரம் சுதந்திரமாக இங்குநடக்கும். பள்ளி ப்யூன் அவ்வப்போது சர்க்குலர்களைக் கொண்டு வந்து ஆசிரியர்கள் கையொப்பம் பெற்றுச செல்வார். மற்ற பெரிய வகுப்பு மாணவர்கள் தொடர்பு மிக குறைவு. எனக்கு சூப்பர் சீனியரான ஜயராமன் மூன்றாவது வீடு. எனவே, அவர்களுடன் ஸ்கூல் வரும்போது கூட வருவேன், போவேன். அவ்வளவுதான்!
With love and affection,
ரங்கன்.
AHM கஸ்தூரி ரங்கன் என்னும் பெயரே உங்கள் கட்டுரை படித்த பின் தான் நினைவுக்கு வருகிறது.
பதிலளிநீக்குநீங்கள் சொல்வது போல் பூசாரி என்ற பெயர் அவ்வளவு பிரசித்தமாகி அவர் பெயர் எஸ். ஆர். தியாகராஜன் என்பதையே மறக்கச் செய்து விட்டது.
அவர் வீடு இருந்த அச்சுத நாராயண (பிள்ளை) தெரு வழியே நடந்து போகக்கூட பயமாக இருக்கும். ஆனால் விளையாட்டு மைதானம் தவிர வேறு எங்கும் அவர் நம் (தெருப் பிள்ளைகளின்) விஷயங்களில் தலையிட்டதே கிடையாது என்றாலும் SRT யின் சைக்கிள் வருகிறது என்றால் நண்பர்கள் எல்லோரும் யார் வீடு என்று கூடப் பார்க்காமல் உள்ளே ஓடி ஒளிந்து கொள்வது அன்றாடம் நடக்கும் விந்தை.
'பூசாரி' யை - அப்பா என்று அழைப்பவர் என்னுடன் பாலிடெக்னிக் படித்ததாக ஞாபகம் - எனக்குத் தெரிந்த அரை குறை வ பாஷையில் - குளிர் நீர் - என்று அவருடைய பெயர் மொழி பெயரும் ... TDP studying in VDP என்று நான் கேலி செய்தது உண்டு!
பதிலளிநீக்கு"லோயர் பாரம் !
பதிலளிநீக்குரொம்ப நேரம் அடக்கக் கூடாது...!
பள்ளி சென்ற காலங்கள் பசுமையானவை. எங்கள் பள்ளி நாட்களில் குறும்புகள் குறைவு. ரசிப்புகள் இல்லவே இல்லை. கொடுங்கோலர்கள் ஆட்சி ரொம்ப சாதாரணம். இரண்டொரு நல்ல பண்பான ஆசிரியர்கள். மற்ற பல பெரும் கட்டுப் பாடு என்ற பெயரில் பிரம்பும் கையுமாக அலைவார்கள். என்ன ஆனாலும் கல்வி கற்பிப்பதில் திறன் குறைந்தவர்கள் இரண்டொருவர். இப்போது போல் இல்லை.
பதிலளிநீக்குபேரும் என்பது பெரும் என்று வந்ததற்கு வருந்தவேண்டியதுதான். வேறென்ன செய்ய முடியும்?
பதிலளிநீக்கு