ஞாயிறு, 1 ஆகஸ்ட், 2010

என்கவுண்டர் ஏற்பு உடையதா?

சாதாரணமாக அரசியல் விவாதங்கள் நமக்கு ஒத்து வராதவை. காரணம் ஒவ்வொருவரும் தம் அரசியல் பிடிமானங்களை விட்டுத் தரத்  தயாரில்லை என்ற  அப்பட்டமான உண்மை.  அத்துடன் நம் நாட்டுக்கே உரிய ஜாதி அபிமானம் அல்லது வேறொரு ஜாதி எதிர்ப்பு என்பது நம் அரசியல் கண்ணோட்டங்களுக்கு நிரந்தர சாயம் பூசுகிறது.  எனவே இந்த வகை விவாதங்களை தவிர்ப்பதே நலம் என்பது உண்மையே. ஆனாலும் மனதை உறுத்துகிற ஒன்றை வெளிச் சொல்வதில் தவறு இல்லை என்ற வகையில் இதை சொல்லப் போகிறேன்.

ஒரு மோசமான கிரிமினல் இருக்கிறார் என்று வைத்துக் கொள்ளுங்கள்.  அவரை சட்ட ரீதியாகப் பிடிப்பது கிட்டத் தட்ட அசாத்தியம். பண பலமும் செல்வாக்கும், ஆள் பலமும் அவரை யாரும் நெருங்க முடியாத அளவுக்கு பாதுகாப்பு செய்து விடுகின்றன. காவல் துறையே பஞ்சாங்கம் பார்த்து அவரை விசாரிப்பது போலவும், பிடிப்பது போலவும்,  வழக்கு  போடுவது போலவும், ஜாமீன் கொடுப்பது போலவும், விசாரணை நடப்பது போலவும், சாட்சியம் இல்லாததால் அவர் வெளி வருவது போலவும், நாடகம் ஆடுவதை கண்கூடாகப் பார்க்கிறோம்.  

ஒருவரை 'போட்டுத் தள்ள' சில பணக்காரர்கள் சேர்ந்து லட்சக் கணக்கில் அல்லது கோடிகளாகக் கொடுக்கிறார்கள் என்கிறார்கள்.  அப்படி என்றால் அந்த போட்டுத் தள்ளப்பட்ட ஆள் அவர்களை பிளாக் மெயில் செய்து வருகிறான், வேறு ஒன்றும் செய்ய வழி இல்லை என்று தானே பொருள் படுகிறது?

அதே போல் வேறொருவரிடம் பயங்கர கொலை ஆயுதங்கள் பறிமுதல் செய்யப் பட்டதாக சொல்லப் படுகிறது.  தீவிர பயங்கர வாதி என்று ஐயப் பட நிறைய இடம் இருக்கிறது.

இன்னொருவரிடம் கொலையுண்ட காவல் துறை அதிகாரிகள் பலர். அவருக்கு பண உதவி செய்து தம்மையும் தம் சொத்துக் களையும் காப்பாற்றிக்கொண்ட பணக்காரர்கள் பலர். அவரிடம் பணம் பெற்றுக் கொண்டு அவரை துதி பாடி புகழ்ந்தவர்கள் சிலர்.

இந்த மாதிரி நபர்களை போட்டுத் தள்ளுவது என்பது சரிதான் என்று நமக்குத் தோன்றுவது சரியா, தவறா?

இது இப்படியே நடந்திருந்தால் சுட்டுத் தள்ளியது சரிதான், ஆனால் இது உண்மையா என்ற ஐயம் இருக்கிறது என்பது ஒரு நிலை.

குற்றவாளி ஆனால் என்ன? அவனை கைது செய்து நீதி மன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக் கொடுப்பதே சரி. அது சாத்தியம் இல்லை என்றால் 'உங்கள் அமைப்பில் கோளாறு, அதை சரி செய்யுங்கள்' என்பது ஒரு நிலை.

'இவனைச் சுட்டது சரிதான். இன்னும்பலரை சுட முடிய வில்லையே' என்பது ஒரு நிலை.

இதில் நான் எங்கு இருக்கிறேன் என்பதை அப்புறம் சொல்கிறேன். நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று தெரிவியுங்கள்.   

6 கருத்துகள்:

  1. oru sila aalgalai ippadithan thandikka mudium thappe illa.. innum envcounter panna vendiya aatkal niraya peru irukaanga. sethavan evanum utthaman illai...

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. தலைப்பிலேய, ஜாதிப் பெயர் உள்ளதை, அன்போடு கண்டிக்கிறேன்.

    'நான்' குஜராத்தில் ஒரு decade இருந்தேன்..

    பதிலளிநீக்கு
  4. நல்ல கேள்வி.
    நல்ல பதிலை தேடி கொண்டிருக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. உங்கள் ஆசிரியர்களில் யாரும் டைம்ஸ் ஒஃப் இந்தியாவில் பணியாற்றுகின்றனரா என்ன, இன்றைய தினசரியில் இது பற்றி ஒரு அரைப்பக்கக் கட்டுரை விழியாகி உள்ளதே?

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!