ஞாயிறு, 29 ஆகஸ்ட், 2010

தேச பக்தி

சொத்து, காதல், மரியாதை
சொந்த பந்தத்தில் அவமானம்
கடன் கேட்டுப் பெறாமை
கடன் கொடுத்து வராமை
என் சாதியை உன்சாதி தாக்குதல்
என் சாதி தாக்கி போலீசில் புகார்
அண்டை மாநிலத்து நீர் வராமை
அண்டை மாநிலம் நீர் கோருதல்
என் கட்சிக்கு அவமானம்
உன் கட்சிக்கு கௌரவம்
எதிரி நன்றாக  ஆடி
என் கட்சி தோற்றல்
இதெல்லாம் ஏதும் இன்றி
எல்லாம் சரியாக இருந்தால்
இந்திய நாடு என் நாடு
இந்தியர் யாவரும் எம் மக்கள்


13 கருத்துகள்:

 1. அப்ப இந்தியா இப்போதைக்கு உங்க நாடு இல்லைங்கறீங்க!

  பதிலளிநீக்கு
 2. இதெல்லாம் ஏதும் இன்றி
  எல்லாம் சரியாக இருந்தால்
  இந்திய நாடு என் நாடு
  இந்தியர் யாவரும் எம் மக்கள்


  .....இப்போதைக்கு இதெல்லாம் இருப்பதுதான் இந்தியா..... ம்ம்ம்ம்......

  பதிலளிநீக்கு
 3. இதெல்லாம் இருப்பதுதான் இந்தியா. Enna aachu Gowthaman. Don't day dream

  பதிலளிநீக்கு
 4. // சாய் said...
  இதெல்லாம் இருப்பதுதான் இந்தியா. Enna aachu Gowthaman. Don't day dream//

  பழி ஓரிடம், பாவம் ஓரிடம்.

  பதிலளிநீக்கு
 5. இதெல்லாம்(பெருமை) இருப்பதுதானே நம்நாடு !

  பதிலளிநீக்கு
 6. வந்து ஏமாத்தறோம்...வந்து ஏமாத்துறோம்..

  பதிலளிநீக்கு
 7. ரகுபதி ராகவ ராஜாராம்.....

  அன்புடன் ஆர்.வி.எஸ்.

  பதிலளிநீக்கு
 8. இவ்வளவு வேற்றுமையிலும், நாம் இந்தியர் என்ற ஒற்றுமை இருக்கிறதே..
  விரைவில் வேற்றுமைகள் களையப்படும் , ஒற்றுமை மேலோங்கும்... நம்புவோம்..

  பதிலளிநீக்கு
 9. ஒபாமா கிறித்தவரா இஸ்லாமியரா
  என்று வாதிடாத..
  H1 கட்டண உயர்வு இல்லாத..
  Green House Gas அதிகம் விடாத..
  டாலர் நூறு ரூபாய் என்று விலை இருக்கும்
  அமெரிக்கா சிலருக்குப் பிடிக்கும்.

  அருணாச்சலப் பிரதேசத்தில் பிரவேசிக்காத
  விசா வழங்குவதை விவகாரமாக்காத
  இங்க்லீஷ் பேசாத
  இன்பர்மேஷன் டெக்னாலஜியில் வளராத
  சைனா சிலருக்குப் பிடிக்கும்

  ராஜபக்சேவுக்கு மூன்றாவது முறை முடிசூட்டாத
  இந்தியக் காசில் சீனத் துறைமுகம் கட்டாத இலங்கை சிலருக்குப் பிடிக்கும்

  பா ஜ க ஆட்சியில் மன்மோகன் நிதியமைச்சராயிருக்கும் இந்தியா உங்களுக்குப் பிடிக்க வாய்ப்பிருக்கிறது

  பதிவை விடப் பெரிய பின்னூட்டம் விடுபவரை யாருக்கும் பிடிக்காது என்று தெரிவதால் நிறுத்திக் கொள்கிறேன்!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!