புதன், 18 ஆகஸ்ட், 2010

தியான சுகம் .


தியானம் மெடிடேஷன் என்று இப்போது ஒரேயடியாக பிரபலம் ஆகி விட்டது. தியானத்தில் பல பிராண்டுகள் வந்து விட்டன தாடி வைத்த குரு, நெடுமுடி குறுந்தாடி, குறுமுடி நெடுந்தடி தரித்த குரு, தலைப்பாகட்டு சால்வை குரு, வயிற்றை எக்கியே கம்யூனிகேட் செய்யும் சிரித்த முகத்து குரு, ஒரு நாள் மழித்து ஒரு நாள் வளர்த்து வெரைட்டி காட்டும் சிநேகமான குரு, 'சொல்' என்பதை 'சொள்' என்றும் 'கொள்' என்பதை 'கொல்' என்றும் உச்சரித்து நம்மைக் குழப்பும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ (இதுவரை மூன்றுதான் லிமிட். இது என்று ஐந்து ஆறு என்று பெருகப் போகிறதோ அப்போ இருக்கு நமக்கு ஆப்பு. ) சுவாமி என்று நமக்கு தியான / விளக்க சூப்பர் மார்க்கெட்டே இருக்கிறது.   
  
இப்படி பலமாதிரியான ஆசான்கள் நமக்கு தீட்சை அளிக்கத தயாராக இருக்கிறார்கள்.  
  
என் தியான மண்டபம் வேறு மாதிரியானது. என் குருவோ ஒரு நிஜமான கர்மயோகி அவரது ஆசிரமம் சிரமம் இல்லாதது. சுகம் நிறைந்தது. ஆனால் தியானத்துக்கு மிகவும் ஏற்ற இடம். இங்கு குரு ஒரு வண்டு போல காது கிட்ட ரீங்காரம் செய்து கொண்டே இருப்பார். அது போக 'ஞிஞய் சிசிர்' என்றோ, 'ஜிகு ஜிகு ஜிகு சட' என்றோ வாத்திய சங்கீதம் ஒரு ஆப்பிரிக்க இசை வடிவு போல வந்து கொண்டே இருக்கும். சில சமயம் தம்புரா சுருதி போல ஒன்று கேட்கும். 'தடக் தடக்' என்று ஒரு தாள ஜதி இழையும் எங்கேயோ எப்போதோ கேட்பது போல், 'சள சள' வென்று ஆனால் சன்னமான குரலில் ஒரு பேச்சு பேசுவது போல இருக்கும் ஆனால் இருக்காது. இந்த அபூர்வ சூழ்நிலை தினமும் வாய்க்காது. ஐம்பது அறுபது நாட்களுக்கு காத்திருக்க வேண்டும்.  
    
ஆகா, மனம் ஒருமித்து நம் மூச்சை நாமே கவனிப்பதும், நம் எண்ண ஓட்டங்களை மிகச் சரியாக எடை போடுவதும் உலகின் நன்மை தீமைகளை சீர் தூக்கிப் பார்ப்பதுமாக நாம் ஆழ் நிலையில் அமிழ்ந்து போகும் போது திடீரென்று குருவின் குரல் நம்மை இந்த உலகத்துக்குக் கொண்டு வரும்:
   
"சார் ஷேவிங்(கும்) செய்யணுமா?"   
    

6 கருத்துகள்:

  1. இங்கு குரு ஒரு வண்டு போல காது கிட்ட ரீங்காரம் செய்து கொண்டே இருப்பார். அது போக ஞிஞய் சிசிர் என்றோ ஜிகு ஜிகு ஜிகு சட என்றோ வாத்திய சங்கீதம் ஒரு ஆப்பிரிக்க இசை வடிவு போல வந்து கொண்டே இருக்கும். சில சமயம் தம்புரா சுருதி போல ஒன்று கேட்கும். தடக் தடக் என்று ஒரு தாள ஜாதி இழையும் எங்கேயோ எப்போதோ கேட்பது போல் சள சள வென்று ஆனால் சன்னமான குரலில் ஒரு பேச்சு பேசுவது போல இருக்கும் ஆனால் இருக்காது


    ....... hilarious!

    பதிலளிநீக்கு
  2. //அவரது ஆசிரமம் சிரமம் இல்லாதது. சுகம் நிறைந்தது.//

    ஃபீஸும் ரொம்பக் கம்மிதானுங்களே இல்லியா?

    பதிலளிநீக்கு
  3. ப்ச். எனக்கெல்லாம் வருஷம் ரெண்டு வாட்டிதான் த்யானம்:(

    பதிலளிநீக்கு
  4. வாண்டுகள் வராத நேரமா பாத்து தியான மண்டபத்துக்கு போங்க. இல்லாட்டி உங்க தியானம் தடை பட்டுடும். ஏன்னா சில வாண்டுகள் ருத்ர
    தாண்டவம் ஆடும்.

    பதிலளிநீக்கு
  5. இந்தப் பதிவுக்கான யோசனையும் குரு பீடத்தில் தான் வந்தது போல..

    பதிலளிநீக்கு
  6. இதில் என்ன காமெடி என்றால் என் மா.... இல்லை இல்லை என் மனைவியின் அ... இல்லை வேண்டாம்.... ஏதோ ஒரு சொந்தக்காரர் என்று வைத்துக்கொள்ளுங்கள்... பாவம் .. அவருக்கு தியானமே தேவையில்லை

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!