புதன், 11 ஆகஸ்ட், 2010

வயசுக் கோளாறு.




ஆச்சரியப் படும் வகையில் பஸ்ஸில் நிறைய காலி சீட்டுகள்! புது பஸ் வேறு. ஏதோ நல்ல சினிமா தியேட்டரில் ஆற அமர உட்கார்ந்திருப்பதுபோல் நான் ரசித்து சுற்று முற்றும் நோட்டம் விட்டபடி இருந்தேன். அப்போதுதான் அந்தப் பெண் ஒரு குளிர் மென் காற்று வீசியது போல உள்ளே நுழைந்தாள். பளிச் என்ற ஆடை அலங்காரம் - புத்திசாலிக் களை சொட்டும் தோற்றம். அதற்கும் மேலாக என் பிரியமான "டார்லிங்" புனிதா (அப்படிச் சொன்னால் தான் அவளுக்குப் பிடிக்கும்) போலவே ஒரு ஆளுமை. அவள் என் பக்கத்தில் உட்கார மாட்டாளா என்று என் மனதில் ஒரு சின்ன எதிர்பார்ப்பு

    
அங்கும் இங்கும் பார்த்தவள் என்னைப் பார்த்ததும் ஒரு கணம் யோசித்தது போல் இருந்தது. விறு விறுவென்று என் அருகில் வந்து நின்றாள். ஒரு சுகந்தம் வீசியதில் நான் சொக்கிப் போனேன்

        
"எக்ஸ்கியூஸ் மி, நான் இங்கே உட்காரலாமா?"

                  
என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. " தாராளமா. . " என்று குழைவாகச் சொன்னேன்

          
"அப்பா" என்று முனகியபடி திடும் என்று என்மேல் கொஞ்சம் இடித்தபடி உட்கார்ந்தாள். அது மட்டும் இல்லை. கொஞ்ச நேரத்தில் தூங்க ஆரம்பித்து வெடுக் வெடுக் என்று என் மேல் விழுந்தாள். சுகமான சுமை. வாகாக உட்கார்ந்து அவளுக்கு வசதி செய்து கொடுத்தேன்

       
"சாரி லஸ் வந்ததும் எனக்குச் சொல்றீங்களா?" இனிய குரலில் மரியாதை கொஞ்சம் அதிகமாகவே இருந்தது

       
"நிச்சயமா சொல்றேன். டேக் ரெஸ்ட்!" அவளது சந்தோஷம் வெளிப்படையாகத் தெரிந்தது. குறட்டை விடாத குறையாக தூங்க ஆரம்பித்தாள்! மேலே சாய்ந்து சரியப் போகும் போதெல்லாம் அட்ஜஸ்ட் செய்து அவளை விழாமல கவனமாகப் பார்த்துக் கொண்டேன்

        
லஸ்ஸும் வந்தது.

அவளை மெல்லத் தட்டி எழுப்பினேன். "லஸ்" என்று சுருக்கமாகச் சொன்னேன்

         
"ரொம்ப தாங்க்ஸ். உங்களுக்கு சிரமம் கொடுத்துட்டேன் பாட்டி " என்று சிரித்தாள்

       
"சே அதெல்லாம் இல்லை. என் பேத்தி புனிதாவும் இப்பிடித்தான் செய்வா! " என்றபடி புடவையை சரிசெய்துகொண்டேன்.    
   

21 கருத்துகள்:

  1. சூப்பர் கதை...

    எதோ வயசு பையன் சொல்வது போன்றே இருந்தது...

    அருமையான நடை...

    பதிலளிநீக்கு
  2. சரி சரி, பேத்தி புனிதா பாப்பா எப்படி ?

    பதிலளிநீக்கு
  3. yov poya pooooooooo eatho nammala maathri aazungalukku story solliirrukkkeeerunu padikka vantha ippudi emaathiputteerea


    wel the job is done.

    Total damage.

    பதிலளிநீக்கு
  4. yov poya pooooooooo eatho nammala maathri aazungalukku story solliirrukkkeeerunu padikka vantha ippudi emaathiputteerea


    wel the job is done.

    Total damage.

    பதிலளிநீக்கு
  5. //சாய்ராம் கோபாலன் said...
    சரி சரி, பேத்தி புனிதா பாப்பா எப்படி ?//


    HA HA HA..

    பதிலளிநீக்கு
  6. நல்ல ட்விஸ்ட்.
    நேற்று பதிவை எப்பொழுது தொடரப்போகிறீர்கள் ?

    பதிலளிநீக்கு
  7. வெறும்பய said...
    எதோ வயசு பையன் சொல்வது போன்றே இருந்தது...


    வழிமொழிகிறேன்.

    பதிலளிநீக்கு
  8. //Madhavan said... சாய்ராம் கோபாலன் said... சரி சரி, பேத்தி புனிதா பாப்பா எப்படி ? HA HA HA..//


    யோசிப்போம்ல !!! எப்படிடா மாதவா இல்லே !!

    பதிலளிநீக்கு
  9. 'சரியான அம்மாஞ்சி அகப்பட்டான்.. ஓக்கே.. பர்ஸ் காலி' என்று படிக்கத் துவங்கியவுடன் நினைத்தவன், இறுதிப் பகுதி வந்ததும் ஏமாந்தேன்!

    எப்படியெல்லாமோ இப்படி அப்படி சுற்றி சுழன்று வந்து கடைசியில் இந்த மாதிரிக் கதைகள் அப்படியே வழக்கம் போல 'ஞே.' என்று முடிவது தான் ஆச்சரியம்!

    சொல்லப் போனால், 'இப்படி,அப்படி' சுற்றுவதில் தான் சுவாரஸ்யமே இருக்கு, இல்லையா?..

    பதிலளிநீக்கு
  10. கதையைப் பாராட்டி கருத்து உரைத்த காயத்ரி, சிவராம்குமார், வெறும்பய, சாய்ராம், எல் கே, வினு, வானம்பாடிகள், ராமலக்ஷ்மி, மாதவன், பின்னோக்கி, altruist, தமிழ் உதயம், செந்தில்1426, ஜீவி, ப்ரியமுடன் வசந்த், சி எஸ் எல்லோருக்கும் எங்கள் நன்றி.
    (இதுல பாராட்டாதவர் யாராவது இருந்தா வகுப்பைவிட்டு வெளியே போயி வராந்தாவில் நிற்கவும்)

    பதிலளிநீக்கு
  11. பழைய ப்ளாக் லிஸ்டில் தேடி எடுத்து படித்தேனே .. எனக்கு இது வேணும் ..

    பழையது கேட்கின் ... பழையது கிடைத்தது ..

    பதிலளிநீக்கு
  12. எப்படிப் படிக்காம விட்டேன்!!அருமை.;)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!