வியாழன், 19 ஆகஸ்ட், 2010

பயம் காட்டுதல்

ராகவன், 'சாயந்திரம் ஸ்கூலில் இருந்து வந்தவுடன் உனக்கு பயம் காட்டுகிறேன்' என்று சொல்லிப் போனதிலிருந்து லக்ஷ்மிக்கு உள்ளூரப் பயம் தான்.ஆனாலும் வெளிக்காட்டிக் கொள்ளவில்லை .

'மாறு வேஷத்தில் வருவானா? ஏதாவது பயங்கரமான மனிதர்களை உடன் அழைத்து வருவானா? நாய் பேய் என்று ஏதாவது இருக்குமோ? நெருப்புப் பெட்டியில் கரப்பான் பூச்சியோ?' என்றெல்லாம் நிலை கொள்ளாமல் தவித்தவண்ணம் உள்ளும் புறமும் அலைந்து கொண்டிருந்தாள்.

காலையில் ராகவன், "லக்ஷ்மி, என் பேனாவை நீ எடுத்தியா ?" என்று கேட்டதும், 'இல்லை' என்று ஒரு வார்த்தையில் பதில் சொல்லாமல் ஏதேதோ பேசி விட்டதன் தாக்கம் அந்த சூளுரை வரை போய் விட்டது. நாம் வேறு மாதிரியாகப் பேசியிருக்கலாமோ என்று ஒரு கணம் நினைத்தாலும், அடுத்த நிமிடமே இந்த ராகவன் செய்வது கொஞ்சம் கூட சரியில்லை.  எல்லாவற்றிலும் அவன் சொன்னபடிதான் எல்லோரும் கேட்க வேண்டும் என்று எதிர் பார்ப்பதே அவன் வழக்கம்.  ஆகையால் ஜீன்ஸ் ஐஸ்வர்யா ராய் போல் என்னாகுமோ ஏதாகுமோ என்ற பயத்திலேயே பொழுதைக் கழித்தாள்.

மாலை ராகவன் வந்ததும் வராததுமாக பயம் பற்றிய சர்ச்சையைக் கிளப்பவே பயமாக இருந்தது.  இருப்பினும் ராகவன் ஞாபகமாக "லக்ஷ்மி, காலையில் நான் சொன்னேன் இல்லையா, மாலை நான் வந்ததும் பயம் காட்டுகிறேன் என்று..." என்று சொல்லிக் கொண்டே தன் பையைத் திறந்து அதனுள் கையை விடவும் மின்சாரம் தடைப்படவும் சரியாக இருந்தது.  ஒரே நிசப்தம். ராகவன் கையை வெளியே எடுக்கும் பொழுது "ஆ, அது என்ன? ஜன்னலிலிருந்து வந்த அரைகுறை வெளிச்சத்தில் ஒரு தலை விரி கோலமான குட்டிச் சாத்தான் பொம்மை போல ஒன்றை எடுக்கிறானே என்று நினைத்துக் கொள்ளும் பொழுது மின்சாரம் திரும்பி வர.... 

'அம்மா' என்று ஒரு அலறல் - லக்ஷ்மியிடமிருந்து அல்ல - ராகவனிடமிருந்து.  'அண்ணா நல்லாவே பயம் காட்றே' என லக்ஷ்மி சொல்ல,  ' அ... அ...அ..ங் ' தவிர ராகவனால் வேறு எதுவும் சொல்ல முடிய வில்லை. 

ராகவன் பையிலிருந்து எடுத்தது ஒரு கீரைக் கட்டு என்றாலும் அவன் பார்த்து அலறியது ஒரு பச்சைப் புழுவைப் பார்த்துதான்.  அவனே அலறியதை விட்டு விட்டு அவன் லக்ஷ்மிக்கு எப்படி பயம் காட்ட நினைத்தான் என்பது தெரிந்து கொள்ள ஆசைப் படுபவர்கள் 'bayam' ('பயம்') என்று கூகிளிடவும் அல்லது இந்தோனேசியா வரை பொடி நடையாக போய்ப் பார்த்து வரவும்.   
("ஒபாமாவுக்கு பயம் என்றால் என்ன என்றே தெரியாது.  ஏனென்றால் ..........

அவருக்கு ............

தமிழ் ..... 

தெரியாது !" 

என்று வந்த ஒரு குறுஞ்செய்தி தான் இதற்குத் தூண்டு கோல்.) 
  

14 கருத்துகள்:

 1. வந்தேன்....வந்திட்டேன்.
  எல்லாரும் சுகம்தானே !இரண்டு வாரப் பதிவுகளைத் தவற விட்டிருக்கிறேன்.பார்க்கணும்.

  மீனு...அன்புக்கு மிக்க மிக்க நன்றி.

  அந்தப் பச்சைப் புழுவைப் பார்க்கவே அருவருப்பா பயமாத்தானே இருக்கு.

  ஒபாமாவுக்குத் தமிழ்.... !

  பதிலளிநீக்கு
 2. //ஹேமா said... ஒபாமாவுக்குத் தமிழ்.... !//

  அப்பாதுரைக்கு "ஒபாமாவை" ரொம்ப பிடிக்கும் !!

  தமிழும் நன்கு வரும் !

  பாடம் எடுக்க வேண்டியது தான் பாக்கி !!

  பதிலளிநீக்கு
 3. இது இன்பார்மேடிவா இருக்கு. இலைக்குப் பதில் ஏதாவது பழத்தைப் போட்டுவிட்டு - இதன் பெயர் சென்னைத் தமிழில் "பயம்" என்று சொல்லாதவரைக்கும் நன்றி

  பதிலளிநீக்கு
 4. ஆஹா... சூப்பர் பயம் தான் போங்க..
  படத்துடன் மெசேஜ் அருமை..

  பதிலளிநீக்கு
 5. //Anonymous said...

  இது இன்பார்மேடிவா இருக்கு. இலைக்குப் பதில் ஏதாவது பழத்தைப் போட்டுவிட்டு - இதன் பெயர் சென்னைத் தமிழில் "பயம்" என்று சொல்லாதவரைக்கும் நன்றி //

  அது....!

  பதிலளிநீக்கு
 6. நலமா.
  நல்ல கதை நல்ல புழு!!
  பயத்தைவிட் அருவருப்புதான்.
  கீரையை அலம்பாதவர்களுக்கு நல்ல பாடம்.
  ஒபாமாவுக்கு இப்பப் பிரச்சினைகளைச் சமாளிக்கிறதே பெரும்பாடு!. பாவம்.

  பதிலளிநீக்கு
 7. //பயம் காட்ட நினைத்தான் என்பது தெரிந்து கொள்ள ஆசைப் படுபவர்கள் 'bayam' ('பயம்') என்று கூகிளிடவும்//

  Thanks to "Google" for clearing our doubts about 'bayam' and why you wrote this!

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!