புதன், 29 செப்டம்பர், 2010

அதிசயக் காட்சியின் பின்னணி!

வலையாபதியின் பொறுமையை மேலும் சோதிக்காமல், அவர் அனுப்பிய முதல் படத்தை, இங்கே வெளியிட்டுவிடுகின்றோம். 
    
ஏற்கெனவே வலையாபதி குறிப்பிட்டிருந்தபடி, இரண்டாவது படம் (செப்டம்பர் 23 தேதி பதிவு)  இங்கே உள்ள இதே வியூவை, மூவி அமைப்பில் (அதாவது டிஜிடல் காமிராவில், செட் அப் பொத்தானை அமுக்கிக்கொண்டே வரும்பொழுது, ஒரு பிறைச் சந்திர வடிவமும் இரண்டு கூட்டல் குறிகளும் தெரிந்தபோது) கிளிக்கிய படம்தான். வலையாபதியின் பக்கத்தில் இருந்த ஒருவர் (mind's voice?)  அந்த அமைப்பு குறியீட்டைப் பார்த்துவிட்டு, 'வலையாபதி, முழுச் சந்திரனைப் படம் எடுக்க இதுதான் சரியான அமைப்பு. பிறைச் சந்திர வடிவம் + + என்று போட்டிருப்பதால், அப்படியே வைத்து, படத்தை எடு' என்று சொல்ல, அதை நம்பி வலையாபதி கிளிக்கிய படம் அது. 
   
இப்பொழுது அந்த சந்திர இழுப்பும் பக்கத்தில் உள்ள நட்சத்திர இழுப்பும் எவை என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்! 

நட்சத்திர இழுப்பு போலத் தெரிவது, இலையில் காணப்படும் விளக்கு பிரதிபலிப்பு! 

நாங்கள் சொல்வதற்கு முன்பே அதிசயக் காட்சியின் மர்மத்தை சரியாக சொன்னவர்களுக்கு, எங்கள் பாராட்டுகள். 

(படங்கள் நன்றாக உள்ளன என்று பின்னூட்டத்தில் எல்லோரும் தெரிவித்துவிடுங்கள். இல்லையேல் வலையாபதி தனிப் பதிவு ஆரம்பித்து நம்மை படாத பாடு படுத்திவிடப்போகிறார்!)
       

6 கருத்துகள்:

  1. ஏதோ சொல்றீங்க.
    கேட்டுக்கிறேன்.படம் அழகா இருக்கு.அதுமட்டும் பிடிச்சிருக்கு !

    பதிலளிநீக்கு
  2. நிலா வெளிச்சத்தில் மின்சாரக் கம்பிகள் கூட நாலு ஒளிக் கீற்றுகளாய்த் தெரிகின்றன.

    பதிலளிநீக்கு
  3. படம் ரொம்ப அற்புதமா வந்திருக்குங்க. ரசித்தேன்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!