புதன், 2 பிப்ரவரி, 2011

கேள்வி நேரம் : ஒரு நிமிடம்


மொத்த நேரம் : 60 வினாடிகள்.

அ) தமிழ் மாதங்களில், எந்த மாதத்தில் இருபத்தெட்டு நாட்கள்?

ஆ) லால்பஹதூர் சாஸ்திரி காலமாவதற்கு முன்பு யார் பிரதம மந்திரி?

இ) If you take away 3 numbers of cakes from a pack containing a long dozen, what will be left behind ?
(ஒரு 'லாங் டசன்' பாக் செய்யப்பட்ட கேக்குகளிலிருந்து, மூன்றை எடுத்துவிட்டால் மீதம் எவ்வளவு கேக்குகள் இருக்கும்?)

ஈ) தமிழில் எவ்வளவு ஓரெழுத்து வார்த்தைகள் உள்ளன?

உ) கொன்னக்கோல் வித்வான் வாசிக்கும் வாத்தியத்தின் பெயர் என்ன?
                         

22 கருத்துகள்:

  1. எல்லா மாதங்களிலும்

    அவர்தான்

    அடுத்த கேள்வி பிரியலை

    ஆ, கா, ஈ,கோ, நீ, தா,

    அவர் வாத்தியம் எதுவும் வாசிப்பதில்லை

    மூணு, நாலாவது கேள்விக்கு நான் சரியா ஆன்சர் பண்ணலை:-(

    பதிலளிநீக்கு
  2. ஆ) லால்பஹதூர் சாஸ்திரி காலமாவதற்கு முன்பு யார் பிரதம மந்திரி?

    உயிரோடு இருந்த லால்பஹதூர் சாஸ்திரி. சரியா.

    பதிலளிநீக்கு
  3. அ. எல்லா மாதமும்..
    ஆ. உசுருள்ள லா.சாஸ்த்ரி.
    இ.பத்து
    ஈ.சீ.கை.மை.பை.வை.தை.வா.பூ.போ.ஆ.நீ.கோ.ஈ.ஓ.
    உ. வாய் வாத்தியம்.

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  5. பதில்கள் கொஞ்சம் விதண்டாவாதமத்தான் இருக்கும் போலிருக்கு ...கொஞ்ச மூளையை கசக்கியே பதில் சொல்லுவோம்

    1. ஒரு மாதமும் இல்லை எல்லாம் 28க்கு மேலே தான் ..ஆனி 32 ஆச்சர்யம்..

    2.டாஷ்கண்ட் ஒப்பந்தம் போட வெளிநாடு பயணத்துக்கு முன்னமே ஒருத்தர்கிட்ட பொறுப்ப ஒப்படைச்சுட்டுதான் போனார்..

    3. ஆ, கா, ஈ,கோ, நீ, தா, ஈ.சீ.கை.மை.பை.வை.தை.வா.கோ , நா, பா, மா, போ...இன்னும் இருக்கு சட்டுன்னு வரமாட்டிங்குது

    4... கொன்னக்கோல் மாமான்னு அந்நியன்ல விவேக் ஜோக் அடித்ததுதான் தெரியும்

    பதிலளிநீக்கு
  6. // ஈ) தமிழில் எவ்வளவு ஓரெழுத்து வார்த்தைகள் உள்ளன? //

    Q ) ஒற்றை எழுத்துக்களுக்கு இலக்கணப் படி உள்ள பெயர் என்ன ?
    விடை : ஒரேழுத்தொருமொழி.

    பதிலளிநீக்கு
  7. மூனாவது கேள்விக்கு விடை ..நீள டஜன்ல 3 போனா 10...நீள டஜன் பேக்கரிக்காரங்க கஸ்டமர பிடிக்கவேண்டி கொசுறு ஒன்னு சேர்த்தி போடுவாங்க...

    ஊட்டி பஸ் ஸ்டேண்ட் பக்கம் ப்ளு ஹில்ஸ் பேக்கரில அளந்தது போக நாலு வர்க்கி கூட போடுவாங்க...

    பதிலளிநீக்கு
  8. கொன்னக்கோல் வாத்தியம் அல்ல. வேண்டுமானால் வாய்தான் வாத்தியம்

    பதிலளிநீக்கு
  9. நிச்சயமாய் எனக்கு ஒன்றும் புரியவில்லை..!

    பதிலளிநீக்கு
  10. ஹூம்.. இப்பத்தான் நிறைய பதில் தெரிஞ்ச கேள்விகளா இருக்கேன்னு சந்தோஷமா வந்தா, அதுக்கு மின்னயே எத்தினி பேரு இங்க... எப்படா ‘எங்கள்’ போஸ்ட் வரும்னு காத்துகிட்டிருப்பாய்ங்களோ? ? ;-)))))

    பதிலளிநீக்கு
  11. கேள்வித்தாள் ரொம்ப கஷ்டமா இருக்கறதால, எங்கள் ப்ளாக் வாசகி அப்படிங்கற முறைல ஒரு attendance குடுத்துடறேன், அவ்வளவுதான்.
    1. எதுவுமே இல்லை. எல்லாமே 28 க்கு மேலதான்
    2. நேரு
    3. 10
    4. 22 (ஆ, ஈ, ஊ, ஐ, ஓ, கூ, கை, சீ, சோ, டீ, தீ, தூ, தை, நீ, பீ, பூ, பை, போ, மே, மை, வா, வை)
    5. கொன்னக்கோல்
    மொத்த நேரம் 60 வினாடிகள் அப்படின்னு இருக்கே, அது பதில் எழுதறதுக்கா? அப்படின்னா நான் failu failudhaan, ஏன்னா நாலாவது கேள்விக்கு விடை எழுதறதுக்குள்ளே போறும், போறும்னு ஆயிடுத்து.

    பதிலளிநீக்கு
  12. 1 எந்த தமிழ் மாதமும் 28 நாள் இல்லை
    2 . உயிரோடு இருந்த லால்பஹதூர் சாஸ்திரி (எங்கள் ப்ளாக்ல தர்மஅடி குடுக்க மாட்டீங்கன்னு ஒரு நம்பிக்கை:)))
    3 . long dozen என்பது 12 + 1 என படித்துள்ளேன்...அது வெச்சு பாக்கறப்ப 13ல மூணு எடுத்துட்டா 10 மிச்சம் இருக்கும்
    4 நீ, போ, தீ, வா, ம், ஹா, பூ, ஓ, மை, கை, வை (இவ்ளோ தான் இப்போ தோணுச்சுங்க...)
    5 இந்த ஏரியா எனக்கு பழக்கம் இல்லை... வேண்டாம் பதில் சொல்லி உங்கள டென்ஷன் பண்ண விரும்பலை... ஹா ஹா...:))

    பதிலளிநீக்கு
  13. அகராதியில 'கி' என்பதற்கு 'மூன்றாம் உயிர்மெய் எழுத்து'னு அர்த்தம் போட்டிருக்குங்க. இந்த ரேட்டுல போனா ஓரெழுத்து வார்த்தைங்க

    பதிலளிநீக்கு
  14. அ. இருபத்தொன்பது நாட்கள் இருக்கும் மாதங்கள் எல்லாவற்றிலும்

    பதிலளிநீக்கு
  15. //ஈ) தமிழில் எவ்வளவு ஓரெழுத்து வார்த்தைகள் உள்ளன? //

    ஆ........!!

    பதிலளிநீக்கு
  16. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  17. அ) எல்லா மாதத்திலும்
    ஆ) சாஸ்திரி தான்
    இ) 10
    ஈ) ஆ, ஈ, ஊ, ஐ, ஓ, கா, கூ, கை, கோ, சா, சீ, சே, தா, தீ, தூ, தே, தை, பா, பீ, போ, பை, மா, மூ, மை, வா, வை ,நா, நீ, நை,

    .....இப்படி நிறைய இருக்கு

    உ௦) வாய்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!