வியாழன், 24 மே, 2012

வாசகர்களுக்கு மூன்று கேள்விகள்... 05



1) ஆண்களின் கோபம் எப்படி வெளிப்படுகிறது? பெண்களின் கோபம் எப்படி வெளிப்படுகிறது?

     
2) உங்களின் எண்ணங்களுக்கு எதிர் எண்ணங்கள் இருப்பவர்களை விரும்புவீர்களா? ஒத்த எண்ணங்களை உடையவர்களை விரும்புவீர்களா? ஏன்?    
            
3) "உள்ளத்தில் பாசமுண்டு ஊமைக்குத் தெரியும்.... ஊமையின் பாஷை இங்கு யாருக்குத் தெரியும்?" - எந்தப் பாடலில் வரும் வரிகள் இவை?   
        
ஆக்சுவலா இது மூன்று கேள்விகள் இல்லை; மூன்று செட் கேள்விகள்.      
                 

16 கருத்துகள்:

  1. //உள்ளத்தில் பாசமுண்டு ஊமைக்குத் தெரியும்//

    "மன்னவன் வந்தானடி" படத்தில் வரும் வரிகள் இவை..

    பதிலளிநீக்கு
  2. 1-ம் எண்ணிட்ட கேள்விக்கு பதில்:

    1. ஆண்களின் கோபம் பேச்சில்.

    2. பெண்களின் கோபம் செயலில்.


    2-ம் எண்ணிட்ட கேள்விக்கு பதில்:

    1. ஒத்த எண்ணம் உடையோரிடம் இயல்பாகவே ஒத்துப் போகலாம்.

    2. எதிர் எண்ணம் கொண்டோரிடம் நிறைய தெரிந்து கொள்ளலாம்.
    நாளாவட்டத்தில் அவர் எண்ணமும் நம் எண்ணமாகி அவருடனும் ஒத்துப் போகலாம். இல்லை,
    vice versa

    அதனால் இந்த இரு வகையும் தேவைதான்.

    3-ம் எண்ணிட்ட கேள்விக்கு:

    சினிமாவுக்கும் நமக்கும் காத தூரம்.
    அதனால் ஜூட்.
    இருந்தாலும் தெரிந்து கொள்ளும் ஆசை யாரை விட்டது?
    கூகுளாரிடமிருந்து தெரிய வந்தது:
    'மன்னவன் வந்தானடி' படத்தில்
    'சொர்க்கத்தில் கட்டப்பட்ட தொட்டில்' பாடல் வரி.

    பதிலளிநீக்கு
  3. 1)பெண்ணின் கோபம் - புலம்புல்
    ஆணின் கோபம் - அமைதி !

    2)எதிர் வாதமுள்ளவர்களோடு பழக எனக்குப் பிடிக்கும்.நிறைய விஷயங்களை முரண்பட்டுப் புரிந்துகொள்ள புரிந்துகொள்ள முடியும் !

    பதிலளிநீக்கு
  4. 1) ஆணின் கோபம் - வார்த்தையாய் வெடிக்கும்!
    பெண்ணின் கோபம் - பொருட்களில் வெடிக்கும்!

    2) எதிர் கருத்துள்ளவர்களிடம் பழகுவதே இனிமையானது. நிறைய விவாதித்து தெரிந்து கொள்ள முடியும். தனக்கு நிகராக வாதம் செய்வோரிடம் உள்ளீடாக ஒரு பாசமும் வந்துவிடும். ஆகவே... எதிர்மறையே என் சாய்ஸ்!

    3) ஜீ.வி. என்னை முந்தி விடையளித்து விட்டாரே... என் செய்ய?

    பதிலளிநீக்கு
  5. 1,ஆணின் கோபம் அந்த அந்த ஆணைப் பொறுத்தது,.பொறுமையாக இருப்பார்கள். திடீரென்று ஒரு நாள் வெடிக்கும்.என் போன்ற அசட்டுக்குத் தெரிந்தது இந்தக் கோபம்:)
    பெண்ணின் கோபம் வயதைப் பொறுத்தது.இளம்வயதில் உடனே வெளிப்படும். நாளாக நாளாக அவ்வப்போது வெளிப்படும். ஆண்கள் விழிக்க்கும் நேரம் அது. எந்தத் தப்புக்காக இப்போது கோபிக்கிறாள்!!!!!!!

    ஒத்த எண்ணங்கள் தென்றல்
    மாற்று எண்ணங்கள் கொண்டவர்கள் நம் உத்சாகத்தைத் தூண்டிவிடுபவர்கள். எனக்கு விவாதம் பிடிக்கும்.அது எதிர்மறை எண்ணங்கள் பொருந்தியவரும் வாதிடக் கூடியவரோடும் நடக்கக் கூடியது.

    பதிலளிநீக்கு
  6. குரோம்பேட்டை குறும்பன்25 மே, 2012 அன்று AM 7:09

    கோபம வந்தால், பெரும்பாலும் ஆண்கள் கத்தித் தீர்த்துவிடுவார்கள்; பெண்கள் கண்ணீர் விட்டுத் தீர்த்துவிடுவார்கள்.

    எதிர் எண்ணங்கள் கொண்டவர்களால்தான் நம்முடைய அறிவு விசாலமாகும். They show us the other side of the coin. ஆனால் அவர்கள் இடித்துரைப்பவர்களாக இல்லாமல், எடுத்துரைப்பவர்களாக இருக்கவேண்டும்!

    எனக்குத் தெரிந்ததெல்லாம் 'மன்னவன் வந்தானடி' என்கிற அருமையான கல்யாணி ராகப் பாடல் மட்டுமே!

    பதிலளிநீக்கு
  7. ஆண் பெண் என்றில்லாமல் கோபம் மனிதரின் தனிப்பட்ட இயல்பின்படியே வெளிப்படும்.

    ஒத்த கருத்துடையவர் நட்பு மனதுக்கு இதம் என்றால் மாற்றுக் கருத்துடையவர்களுடனான நட்பு உற்சாகம்!

    பாடலுக்கான பதில் பலரும் தந்து விட்டார்கள்:)!

    பதிலளிநீக்கு
  8. குரோம்பேட்டை குறும்பன்25 மே, 2012 அன்று AM 8:12

    படத்துல இருக்கும் பையன் யாரு? சின்ன வயசு ஆல்பி மார்க்கலா?

    பதிலளிநீக்கு
  9. பெண்ணின் கோபத்தில் அன்பிருக்கும் ..
    ஆணின் கோபத்தில் ஆணவமிருக்கும் .
    எதிர்மறையான எண்ணங்கள் இருப்பவர்களிடமே விஷயம் இருக்கும் .

    பதிலளிநீக்கு
  10. ஆண்களின் கோபம் பெண்களிடம் வார்த்தைகளாய்,
    பெண்களின் கோபம் அலட்சியமாய்

    பதிலளிநீக்கு
  11. 2. ஒத்த கருத்துடையவர்களின் நட்பே

    பதிலளிநீக்கு
  12. 1. நான் புலம்பித் தள்ளுவேன். அவர் ஐபிஎல் பார்த்துக் கொ’ல்லு’வார்!! ஆனா, தோழி வீட்டிலே வேற மாதிரி. ஸோ, பொதுவா இதுதான்னு சொல்லமுடியலை.

    2. இது, ஒருவரை எதுக்காக தேர்ந்தெடுக்கிறோம்னு பொறுத்தது. ரயில் பயணம்னா எதிர்க்கருத்து கொண்டவராயிருப்பது நேரம் போக்க உதவும்.
    வாழ்க்கைப் பயணம்னா, ‘ஆமாஞ்சாமி’ போடுறவர்தான் வேணும் கண்டிப்பா!! :-)))))

    3. சாரி, பொதுஅறிவு கொஞ்சம் கம்மி.

    பதிலளிநீக்கு
  13. ஜீவி சார் - நன்றாக பதில் அளித்து விட்டார்.

    பதிலளிநீக்கு
  14. முதல் ந(ண்)பராக வந்து சரியான விடை சொன்ன அமைதிச்சாரலுக்கு நன்றி.

    ஜீவி சார்...பாடல் தெரியாது என்றாலும் கூகிளார் உதவியுடன் சொல்லி விட்டீர்கள். ஆண்கள் பெண்கள் கோபம் பற்றி அழகாகச் சொல்லியுள்ளீர்கள். ஆண்களின் கோபம் எதில் தெரியும் என்ற கேள்விக்கு மதனின் பதில் பாதி சாப்பாட்டில் எழுந்து போவதில் என்று சொல்லியுள்ளார். கேள்வியின் பாதி அங்கிருந்து எடுத்தது! பெண்களின் உள்ளத்தில் உள்ளதை மறைக்கத் தெரியாது. அவர்கள் 'ஊமையும்' இல்லை. எனவே பேச்சில் கொட்டி விடுவார்கள்! இது மதன் சொன்னது இல்லை!
    ஒத்த எண்ணம் எதிர் எண்ணம்...சில சமயங்களில் ஒத்த எண்ணம் என்ற பெயரில் ஜால்ரா மாதிரி தோன்றி விட சான்ஸ் இருக்கிறதா...வெறுப்பு தோன்றக் காரணமாகி விடுமே..! எதிர் எண்ணம் கொண்டவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளலாம்... ஆனால் எதிர் வாதம் செய்து கொண்டேயிருந்தால் ஒரு எரிச்சல் உண்டாகுமா இல்லையா.... இது எங்கள் கருத்து என்று அர்த்தம் இல்லை. நீங்களும் அனைத்து நண்பர்களும் சொல்லியிருப்பதை வைத்து யோசித்தபோது தோன்றியது! பொதுவாகவே மனதில் தோன்றும் கேள்விகளைக் கேட்டு விட்டு இதற்கு நமக்கு என்ன பதில் தோன்றுகிறது, மற்ற அனைவரும் என்ன நினைக்கிறார்கள் என்று பார்க்கும்போது நம்மையும் மாற்றிக் கொள்ள முடிகிறது. இதில் எதிர்க் கருத்து கொண்டவர்களை ரசிக்கவும் முடிகிறது. பாராட்டவும் முடிகிறது!

    ஆணின் கோபம் அமைதி என்று எதை வைத்துச் சொல்கிறீர்கள் ஹேமா.. எங்கள் வீட்டு உறவு/நட்பு ஆண்களின் கோபத்தில் பொருட்கள், பாத்திரங்கள் பறக்கும் தெரியுமோ...! :))

    கணேஷின் கருத்து சரி...படிக்கும்போது 'ஆமாம்' என்று புன்னகைக்க வைக்கிறது!

    வல்லிம்மா சொல்வது கரெக்ட். வயதைப் பொறுத்ததும் கூட. ஆனால் கணேஷ், வல்லிம்மா எல்லோரும் சொல்வதைப் போல எதிர்மறை எண்ணங்கள் கொண்டவர்களை கொண்டாடுவோமா தெரியவில்லை! ஒரு குறிப்பிட்ட எல்லை வரை ஓகே. அப்புறம்...? எதிர்பாலாராக இருந்தால் அவர்கள் நினைவு இதனாலேயே மனதில் இருந்து கொண்டே இருந்து அதனால் அவர்கள் ஞாபகம் இருக்கலாம். அதுவும் ரொம்ப நெருங்கியதும் நிறைய இடங்களில் விவாதத்தைத் தவிர்த்து விடுவோம் என்று தோன்றுகிறது.இதில் குரோம்பேட்டைக் குறும்பன் சொல்வது சரி...இடித்துரைப்பவர்களாக இல்லாமல் எடுத்துரைப்பவர்களாக இருக்க வேண்டும்.

    ராமலக்ஷ்மி சொல்வதுபோல கோபத்தில் ஆண் என்ன, பெண் என்ன... இதுவும் பொருந்துகிறது. ஒத்த கருத்துடையவர்களை விட மாற்றுக் கருத்துள்ளவர்களைச் சற்றுத் தள்ளியே வைத்திருப்போம் என்கிறார் நண்பர் ஒருவர்... அது சரியா?

    சசிகலாவின் பின்னூட்டம் ரசிக்க வைக்கிறது. ஒற்றை வரிகளில் அழங்கான பதில். ஆனால் ஆணின் கோபத்தில் (மட்டும்) ஆணவம்.... ஏற்றுக் கொள்ள முடியவில்லை யுவர் ஆனர்!

    வாங்க HVL, என்ன ஆளையே காணோம்... பெண்கள் கோபத்தில் மற்றவர்களை அலட்சியப் படுத்துவார்கள் என்று சொல்கிறீர்களா... "ஒத்த கருத்துடையவர்கள் நட்பே..." கரெக்ட். எதிர்க் கருத்தை வெறுப்பதில்லை. ஆனால் நெருக்கம் அவ்வளவு இருக்காது என்றுதான் தோன்றுகிறது.

    ஹுஸைனம்மா... பொதுவாக நீங்கள் விஷயங்களை அணுகும் விதம் பாராட்டுக்குரியது. மனதில் பட்டதை நன்றாக யோசித்துச் சொல்பவர்களில் நீங்கள் ஒருவர். உங்கள் பதில்கள் ரசிக்க வைத்தன.

    நன்றி திண்டுக்கல் தனபாலன்.

    பதிலளிநீக்கு
  15. இந்தப் பதிவே இப்போத் தான் பார்த்தேன். ஆணின் கோபத்தில் சாப்பாடே தூக்கி எறியப் படும். என்னோட அப்பா அப்படித்தான். தட்டு பறக்கும். சில சமயம் வெண்கலப் பானையே கவிழ்க்கப் படும். நாங்கல்லாம் கோபம் என்று சொல்லிப் பார்த்துக் கொள்வோம். அவ்வளவே.

    கல்யாணம் ஆனதும் கோபம் என நான் நினைப்பதைச் சின்னக் குழந்தையோட கோபம்னு சொல்லிடுவார் நம்ம ரங்க்ஸ். குழந்தைகளோ அம்மாதான் எல்லாத்துக்கும்னு இருந்தது. கோபம் வரும். அடிதடி உண்டுன்னாலும் மீண்டும் அம்மா. மற்றபடி பெரிய குடும்பத்தில் வாழ்க்கைப் பட்டதால் கோபம் என்ற உணர்வைக் காட்டினால் குடும்பம் சிதறும் என்று புரிந்து கொண்டு தேவையான நேரத்தில் கூட நானோ, அவரோ கோபத்தைக் காட்டியதில்லை. மெளனத்தை விடச் சிறந்த கோபம் வேறில்லை.

    எதிர் எண்ணங்களும் வேண்டும், ஒத்த எண்ணங்களும் வேண்டும். நானும், அவரும் எல்லாத்திலேயும் கான்ட்ராஸ்ட் தான். ஆனால் வீடு சம்பந்தமான நிர்வாக முடிவெடுக்கையில் இருவருக்கும் ஒத்த கருத்து ஏற்பட்டிருக்கும். அதைப் பகிர்ந்து கொள்ளும்போது தெரிந்து கொள்வோம். நான் நினைக்கறாப்போல் அவரும் நினைச்சிருப்பார். மற்றபடி இருவரின் எண்ணங்களும் ஒன்றாகி விட்டால் ஒருவர் மற்றவரை அடக்கிவிட்டார் அல்லது அடங்கி விட்டார் எனக் கொள்ளலாமோ? வாழ்க்கையில் ரசம் வேண்டுமெனில் கொஞ்சம் மாற்றுக் கருத்துக்கும் இடம் கொடுக்க வேண்டும்.

    கடைசிக் கேள்விக்கு பதில் தெரியாது; ஆனால் எல்லாரும் சொல்லி இருக்காங்க.

    அது சரி இதுக்குப் பரிசு உண்டா என்ன?

    பதிலளிநீக்கு
  16. //பதில் பாதி சாப்பாட்டில் எழுந்து போவதில்..//

    சினிமாக்களில், சீரியல்களில்
    பாதிச் சாப்பாட்டிலேயே சாப்பிடும் தட்டிலோ, இலையிலோ அப்படியே கைகழுவி விட்டு எழுந்து விடுவார்களே..

    //அது சரி இதுக்குப் பரிசு உண்டா என்ன?//

    தூறல் நின்னு போச்சாம்! :))) (சும்மாக்காச்சும்!..)

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!