சனி, 30 மார்ச், 2013

பாசிட்டிவ் செய்திகள் மார்ச் 24, 2013 முதல் மார்ச் 30, 2013 வரை


எங்கள் B+ செய்திகள்.

- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.

- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.

- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்.... 

= = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = = =

1) முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவி

அமைந்தகரை போக்குவரத்து பிரிவின் தலைமைக் காவலர் ரவி (38). இவர், அதிகாலை தேனாம்பேட்டையிலுள்ள தனது வீட்டில் இருந்து வேலைக்
கு பைக்கில் புறப்பட்டார். அமைந்தகரை கூவம் பாலத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது, கூவத்தை எட்டிபார்த்தபடி 20க்கும் மேற்பட்டோர் நின்றிருந்தனர்.
                                                     

இதனால், பைக்கை ஓரத்தில் நிறுத்திவிட்டு அவரும் எட்டிப் பார்த்தார். அப்போது,கூவத்தில் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர், நெஞ்சு பகுதி முழுவதும் மூழ்கிய படி காப்பாற்றுங்கள்... காப்பாற்றுங்கள் என கூக்குரலிட்டபடி கிடந்தார். பொதுமக்கள் யாரும் காப்பாற்றவில்லை. உடனே ரவி மடமடவென கூவத்துக்குள் இறங்கினார். ஆழமாக இருந்ததால் முதியவர் பக்கத்தில் செல்ல முடியவில்லை. அங்கு கிடந்த நீளமான சவுக்கு கம்பை எடுத்து, அந்த முதியரை பிடித்துக் கொள்ள சொன்னார். ஆனால் கம்பு அவருக்கு எட்டவில்லை.
 

பின்னர், ரவி தனது ஷூவில் இருந்த கயிற்றை கழற்றி கம்போடு இணைத்து, அதை பிடித்துக் கொள்ளுமாறு முதியவரிடம் கூறினார். அவரும் அப்படியே செய்ய, அதை பிடித்து இழுத்து வெளியே கொண்டு வந்து காப்பாற்றினார் ரவி. முதியவருக்கு உடல் முழுவதும் பல இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அங்குள்ள வீட்டில் தண்ணீர் வாங்கிய ரவி, முதியவரை குளிப்பாட்டிய பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு முதியவரை அனுப்பி வைத்தார். அவருக்கு இடுப்பு, கைகளில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது. அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். முதியவரை காப்பாற்றிய தலைமைக் காவலர் ரவியை, அப்பகுதி மக்கள் கைகுலுக்கி பாராட்டு தெரிவித்தனர். அதிகாலையில் கூவம் பாலத்தில், சாலையை கடந்தபோது கால் தவறி விழுந்து விட்டார் என தெரிய வந்தது.

2) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் 3000க்கும் மேற்பட்ட மரங்களைத் இலாபநோக்கின்றி தன்னார்வத்துடன் நட்டு வளர்த்த சூழல் ஆர்வலர், ஏழூர் அய்யாசாமி - கோடியில் ஒருவர்.
                                                  

எலும்பு தோலுமாய் காட்சியளிக்கும் பெரியவர் திரு. அய்யாசாமி (80120-26994) 74 வயதை தாண்டிக்கொண்டிருக்கிறார். சின்ன வயதிலிருந்தே இவருடைய தந்தை மரங்களின் மேல் கொண்டிருந்த காதல் இவருக்கும் தொத்திக் கொள்கிறது. விவசாயக் குடும்பத்தைச் சார்ந்த இவர், ஆடு மேய்க்கும் போது, ஊர் ஓரம் இருக்கும் உபரி நீர் செல்லும் பள்ளத்தில் வேப்ப மர விதைகளை ஊன்றி, நீருற்றி கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்தது ஏறக்குறைய பத்தாயிரம் மரங்கள். திட்டம் தீட்டி சமூக விரோதிகள் கொள்ளையடித்தது போக இன்று மிஞ்சியிருப்பது சுமார் 3000 மரங்கள். சிறு செடி முதல் முப்பது, முப்பத்தைந்து வயது வரை இருக்கும் வேப்ப மரங்களை பார்க்கும் போது உடலும், மனதும் சிலிர்க்கிறது.

சுவாரசியமான தகவல், கடும் கோடையில் வீட்டிலிருந்த தண்ணீரைக் கூட எடுத்துச் சென்று செடிகளுக்கு ஊற்றியிருக்கிறார். “ஊட்டுல தண்ணியில்லைனா ஒரு நா சண்ட போடுவாங்க, இல்லன சோறு ஊத்த மாட்டாங்க, ஆனா செடி செத்துப்போச்சுன்னா என்ன பண்றதுங்க” என்ற போது, அருகில் எலும்பும் தோலுமாய் நின்ற அவரது மனைவி வெட்கத்தில் சிரிக்கிறார்.

அதிசயம், இந்த தள்ளாத வயதிலும் பெரியவர் அய்யாசாமி வீட்டில் பத்துப் பதினைந்து மரக்கன்றுகள் தயாராக இருக்கின்றது. பேசி, நெகிழ்ந்து, மனது கனத்து, நாமும் ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தோடு கிளம்பும் போது “அந்த பள்ளத்தோரம் போனிங்கனா, மரங்களைப் பார்க்கலாம்” என்று சொல்கிறார்.

கிட்டத்தட்ட மூன்று மைல் தூரம் பள்ளம் முழுதும் கனத்துக் கிடக்கிறது அழகான வேம்பு. பார்க்க பார்க்க வெயிலில் வெம்பிய உடல், மனதோடு சேர்ந்து குளிர்கிறது. அவருக்கு உதவியாக இருக்கும் திரு. விஜயகுமார் (98423-44399) நம்மோடு வந்திருந்து சுற்றிக் காட்டுகிறார்.

முதிய வயதிலும் மரங்களைப் பேணி வந்த அய்யாசாமி மார்ச் 7, 2011 அன்று காலமானார்.

 
இந்த மனிதர்களை வரும் காலத்தில் உலகம் மறக்காமல் இருக்க ஆவணப்படுத்த வேண்டும் என்ற வேட்கை மனதில் உருவாக, இதைப் பதிவு செய்திருக்கிறார்கள் 'ரிலாக்ஸ் ப்ளீஸ்' முகநூல் தளத்தில்.


3) போராட்டங்கள் மூலம், 25 ஆயிரம் பழங்குடியினருக்கு, அவர்களின் நிலங்களை மீட்டு தந்துள்ள, சி.கே. ஜானு: 


"நான், கேரள மாநிலம், முத்தங்கா காட்டுப் பகுதியின், பழங்குடி இனத்தை சேர்ந்தவள். வறுமையால் பள்ளிக்கு செல்லாமல், ஏழு வயதிலேயே விறகு பொறுக்கும் வேலைக்கு சென்றேன். பல வேலைகள் செய்தாலும், மூணு வேளை கஞ்சிக்கு உத்திரவாதம் இல்லை.ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சட்டப் பாதுகாப்புடன், மரங்களை கடத்த உருவாக்கப்பட்டது தான் வனத் துறை. வனத்தை பாதுகாக்க போகிறேன் என, காலம் காலமாய் குடியிருந்த பழங்குடிகளை நிர்கதியாக விரட்டியடித்து, வனத்தை அழித்து, மரங்களை வெட்டி, வனத் துறை மூலம் கடத்துவது, இன்னும் தொடர்கிறது.கேரளாவில், ஏழைகளின் தோழன் எனும் இடதுசாரி கட்சிக்கும், முதலாளிகளின் கைப்பாவையான காங்கிரஸ் கட்சிக்கும் கொள்கை வேறுபட்டானாலும், பழங்குடி மக்களை ஏமாற்றுவதில் வேறுபடவில்லை. 1992ம் ஆண்டு பழங்குடிகளை ஒன்றிணைத்து, நாங்கள் இழந்த எங்கள் மண்ணின் மீதான உரிமையை மீட்டெடுக்க, "கோத்ரா மகா சபை'யை உருவாக்கி, பல போராட்டங்கள் செய்தேன்.எங்களின் ஒற்றுமையை சீர்குலைக்க, அனைத்து கட்சிகளும் பழங்குடியினர் பிரிவை ஆரம்பித்து, பிரித்தாளும் சூழ்ச்சியில் ஈடுபட்டனர். இதனால், அரசியல் கட்சிகள் எங்களை ஏமாற்றி, பிழைப்பு நடத்துவதை புரிந்து கொண்டேன்.

                                                                                
கடந்த, 2003ம் ஆண்டு, எங்களின் முத்தங்கா காட்டுப் பகுதியில், "இனிமேல் இதுதான் எங்கள் நிலம்' என்ற முழக்கத்தோடு போராடினேன். போலீசின் தாக்குதலால், ரத்தக் கறைகள் மட்டுமே கிடைத்தன. இறுதியாக திருவனந்தபுரத்தில் உள்ள, கேரள அரசின் தலைமை செயலகத்தை சுற்றி, 1,000 குடிசைகள் அமைத்து முற்றுகையிட்டோம்.போலீசின் கொடூர தாக்குதலை சமாளித்து, 48 நாட்கள் தொடர்ந்த போராட்டத்தால், இனி வேறு வழியில்லை என, கேரள அரசு பணிந்தது. 25 ஆயிரம் பழங்குடியினரின் இடங்களை மீட்டேன். நாங்கள் வாழும் வரையில், எங்கள் மண்ணின் மீதான உரிமையை, நிலை நாட்டினோம்.

4) வித்தியாசமாக புகைப்படங்கள் எடுக்கும் 23 வயது ஜெஸ்வின் ரெபெல்லோ பற்றி செய்தி வெளியிட்டிருக்கிறது தினமலர். கீழே அவர் எடுத்த அந்த வித்தியாசமான புகைப்பட
ங்களைப் பார்க்க வசதியும் செய்திருக்கிறது.

அவரைப் பேட்டி காணச் சென்ற நிருபர் சொல்வது : ஒரு பையில் கேமிரா சாதனங்களும், இன்னோரு பையில் விதவிதமான விளக்குகள், நிறைய மின் வயர்கள் என்று ஒரு நவீன "எலக்ட்ரீசியன்' போல உற்சாகமாக அறிமுகமானார். அதன் பிறகு அவர் தந்த நேர்முக விளக்கங்கள் பிரமாண்டமாக இருந்தது.

நல்ல திறந்தவெளி இருட்டில் இவர் கற்பனை செய்து வைத்திருக்கும் விஷயத்தை வித்தியாசமான விளக்குகளை சுழலவைத்து, ஆடவைத்து, உருவங்களின் மீது ஓடவைத்து படம் எடுக்கிறார். ஒரு படம் எடுக்க மூன்று மணி நேரமுமாகலாம், மூன்று நாட்களும் ஆகலாம்.

ஒளி ஒவியம் (லைட் பெயின்டிங்) என்றழைக்கப்படும் இது போன்ற 80 புகைப்படங்களை இவர் எடுத்து வைத்துள்ளார். உலகம் முழுவதிலும் இந்த ஒளி ஓவியத்தை மட்டுமே எடுக்கும் புகைப்படக்கலைஞர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களில் சிறந்தவர்கள் என்று 73 பேரை பட்டியலிட்டு அவர்களது புகைப்படங்களை மும்பையில் கண்காட்சியாக வைத்திருந்தனர். இந்த கண்காட்சியில் இடம் பெற்ற ஒரே இந்திய ஒளி ஓவிய படம் ஜெஸ்வினுடையது மட்டுமே.

இவரது புகைப்படங்களை பார்த்த கண்காட்சி ஏற்பாட்டாளர்கள், நேரில் வந்து, உலகம் முழுவதிலும் இருந்து வந்துள்ள பார்வையாளர்களுக்கு "டெமோ' கொடுக்கும்படி அழைத்திருந்தனர். ஆனால் சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக இவரால் போகமுடியாமல் போய்விட்டது.

                                              
 
நான் இந்த ஒளி ஓவியம் என்று சொல்லக்கூடிய புகைப்படங்களை பற்றி தற்செயலாக இணையதளத்தில் படித்ததும் பிடித்துப்போனது. இது போன்ற புகைப்படங்களை எடுப்பதில் மனது சந்தோஷப்படுகிறது. யாராலும் செய்யமுடியாததை செய்கிறேன் எனும்போது மனசு பெருமிதமும் படுகிறது. இது முழுக்க,முழுக்க எனது மனத்திருப்திக்காக மட்டுமே எடுக்கிறேன் என்கிறார் ஜெஸ்வின்.

உங்களது தொழிலுக்கு இடையூறு இல்லாமல் இந்த வித்தியாசமாக புகைப்படங்களை கண்காட்சியாக மக்களிடம் கொண்டு செல்லுங்கள் என்று கூறி வாழ்த்தினேன். வாழ்த்த விரும்புபவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய எண்: 9944252470.

21 கருத்துகள்:

  1. சூழல் ஆர்வலர், ஏழூர் அய்யாசாமி - கோடியில் ஒருவர்.

    ஆவணப்படுத்திய அருமையான பகிர்வுகளுக்கு பாராட்டுக்கள்..

    பதிலளிநீக்கு
  2. (எ)உங்கள் கவனத்திற்கு

    வணக்கம் சார், எங்கள் பிளாகில் பதிவிடும் எந்தப் பதிவும் எனது டாஷ்போர்ட்க்கு வருவது இல்லை, எனக்கு மட்டும் தான் இந்தப் பிரச்சனையா? அனைவருக்குமா ?

    மீண்டும் ஒருமுறை எனது கணக்கை(FOLLOWER) புதுபித்தேன் அப்படியும் வரவில்லை.

    போலிஸ் பற்றிய செய்தி பேஸ்புக்கில் படித்தேன், படிக்கும் பொழுதே சல்யுட் அடிக்க வேண்டும் போல் இருந்தது...

    அய்யாசாமி போன்றவர்களைப் பார்த்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய விஷயம். அவரின் ஆன்மா நிம்மதியாக இளைப்பாறட்டும்

    ஜெஸ்வின் போன்றவர்கள் கூட நம்முடன் இருப்பது ஆச்சரியமான விஷயம்

    பதிலளிநீக்கு
  3. போக்குவரத்து தலைமைக் காவலர் ரவிஅவர்களுக்கு வாழ்த்துக்கள்.
    சூழல் ஆர்வலர் ஏழூர் அய்யாசாமி போன்றவர்கள் நிறைய வரவேண்டும் அதுதான் நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி.
    சி.கே ஜானு அவர்களுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
    ஓவியர்ஜெஸ்வின் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்.
    நல்ல செய்திகளை தந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. 1. இப்படி எல்லாம் நடக்குமா? ஏகாம்பரம் ஜாக்கிரதை!
    2. பாசிட்டிவ் செய்திகள் மார்ச் 17, 2013 முதல் மார்ச் ...
    3. ஞாயிறு 194:: விட்டாச்சு லீவு!
    4. என்ன அது?
    5. இலக்கியம்...
    6. எஸ்கலேட்டர் அனுபவம்
    7. பாசிட்டிவ் செய்திகள் மார்ச் 24, 2013 முதல் மார்ச் ...

    சீனு அவர்கள் சொன்னது சரி என்று நினைக்கிறேன்...

    மேலே உள்ள பதிவுகள் இன்று தான் எனது dashboard-லும் வந்துள்ளன... ஏற்கனவே படித்து கருத்துகளும் வந்துள்ளன... "அவர்களுக்கு மட்டும் எப்படி உங்கள் பதிவுகள் சென்றது...?" என்று தெரியவில்லை...

    சரி பார்க்கிறேன்...

    பல பாசிட்டிவ் செய்திகளுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  5. //இப்படி எல்லாம் நடக்குமா? ஏகாம்பரம் ஜாக்கிரதை!
    kg gouthaman at எங்கள் Blog - 3 hours ago//

    ஹிஹிஹிஹி, இந்தப் பதிவு, அதுக்கு முந்தைய பதிவெல்லாம் இப்போத் தான் பப்ளிஷ் ஆனதாகப் பொய் சொல்லிட்டிருக்கு கூகிள். என்னத்தைச் சொல்றது! நானாக வந்து தான் பார்க்க வேண்டி இருக்கு! அப்டேட்டே ஆகிறதில்லை.:))))

    பதிலளிநீக்கு
  6. பாசிடிவ் செய்திகளை மெதுவா வந்து படிச்சுக்கறேன். செரியா? :)))

    பதிலளிநீக்கு
  7. டேஷ் போர்டில் அப்டேட் ஆகவில்லை என்று சொன்னதும் திடங்கொண்டு போராடு சீனு உதவினார். அவர் ஆலோசனையில் செட்டிங்க்ஸ் சென்று சரி செய்ததும் சரியாகி விட்டது. சீனுவே 'செக்' செய்து கடைசி 5 பதிவுகள் வரிசையாக போர்டுக்கு வந்ததாகச் சொல்லி உறுதி செய்தார்! நன்றி சீனு.

    பதிலளிநீக்கு
  8. அதானா, ஒரே பதிவு மழை! :)))))ஆனால் எல்லாமே கடந்த மூணு மணி நேரத்துக்குள்ளே பப்ளிஷ் ஆனதாப் பொய் சொல்லுது! அநியாயமா இல்லையோ?

    பதிலளிநீக்கு
  9. 1. காவலர் ரவியின் கடமை உணர்வை எத்தனைப் பாராட்டினாலும் தகும்.

    2. மரங்களின் தந்தை அய்யாச்சாமி அவர்களை நேரில் சந்தித்து ஈரோடு கதிர் எழுதிய பதிவு வாசித்திருக்கிறேன்.

    3. ஜானுவுக்கு வாழ்த்துகள்.

    4. சுவாரஸ்யம்:)!

    பதிலளிநீக்கு
  10. சீனு அதை எப்படி செய்தார் எனும் குறிப்பையும் இங்கே வழங்கினால் பிரச்சனை ஏற்படுபவர்களுக்குப் பயனாகுமே!

    பதிலளிநீக்கு
  11. முதலிரண்டும் கடைசி செய்தியும் அறிந்திருந்தேன்! இடைச்செய்தி புதியது! பகிர்விற்கு நன்றி!

    பதிலளிநீக்கு
  12. எனக்கும் வரிசையாக இன்று தான் டேஸ்போர்டில் காட்டியது.

    பதிலளிநீக்கு
  13. பாருங்க, இத்தனை பேருக்குத் தெரியாம இருந்திருக்கு, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் யாருமே வாயைத் திறக்கலை, நான் தான் தன்னந்தனியாப்புலம்பினதாலே நீங்களும் வழக்கமான புலம்பல்னு நினைச்சுட்டீங்க. சீனு சார் சொன்னாரோ, சரியாச்சு! இல்லைனா, நான் பாட்டுக்குப்புலம்பிட்டு இருந்திருப்பேன். நீங்களும் பேசாம இருந்திருப்பீங்க! :P:P:P:P:P:P:P:P:P:P:P

    அதனாலே நாளைக்குக்காலம்பர வரை உங்கள் ப்ளாகுக்கு நோ பின்னூட்டம்!:)))))))

    பதிலளிநீக்கு
  14. எரர் மெசேஜ் வந்தது. ஆனால் பின்னூட்டம் போயிருக்கு. :))) கூகிளுக்கு என்னவோ ஆயிடுச்சு.

    பதிலளிநீக்கு
  15. @ கீதா மேடம், http://engalblog.blogspot.in/2013/03/194.html இந்தப் பதிவை இன்னும் நீங்கள் பார்க்கவில்லை என்பதால் தெரியவில்லை. ரீடரில் தெரியாததை நானும் ரிபோர்ட் செய்திருக்கிறேன்:)!

    பதிலளிநீக்கு
  16. //சீனு அதை எப்படி செய்தார் எனும் குறிப்பையும் இங்கே வழங்கினால் பிரச்சனை ஏற்படுபவர்களுக்குப் பயனாகுமே!//

    settings => others => Post Feed Redirect URL ......... இதில் இருந்த எங்கள் ப்ளாக் URL ஐ ரிமூவ் செய்து விட்டு ஸேவ் செய்து வெளியேறி, டெஸ்ட் போஸ்ட் போடுவதற்கு பதிலாக கடைசியாகப் போட்ட பாசிட்டிவ் செய்திகளை சீனு யோசனையின் பெயரில் revert to draft போட்டு மறுபடி பப்ளிஷ் செய்தேன்!

    பதிலளிநீக்கு
  17. பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி...நன்றி...நன்றி!

    பதிலளிநீக்கு
  18. தகவலை சேமித்துக் கொண்டேன். நன்றி.

    பதிலளிநீக்கு
  19. 74 வயதுதானே ஆகிறது. நல்ல மனிதர்கள் இன்னும் நீண்ட காலம் இருக்க இறைவா கருணை செய். அவருக்குப் பிறகு யாராவது இந்தப் பணியைச் செயவார்கள் இல்லையா.

    இன்ஸ்பெகடர் ரவிக்கு மனம் நிறைந்த நன்றிகளும் வாழ்த்துகளும்.முதுமையின் அவலம் கொடுமை.

    சிகே ஜானு. வீரமங்கை. என்ன ஒரு துணிச்சல். வருங்காலப் பரம்பரைகள் வாழ்த்திக் கொண்டிருக்கும். செல்வன் ஜெஸ்வின் ரெபெல்லோ புதுமையின் பிரதிநிதி.அவரையும் அறிமுகம் செய்து இந்த நாளைச் செழிப்பாக்கிய எபிக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  20. தகவல்கள் அனைத்தும் மனிதத் தன்மையின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துகின்றன.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!