எங்கள் B+ செய்திகள்.
- விபத்துச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- கொலை, கொள்ளை, கற்பழிப்புச் செய்தி இல்லாத நாள் வேண்டும்.
- நேர்மையாக நடந்த ஒருவர் பற்றிய செய்தியாவது வேண்டும்.
- சென்ற வாரத்துச் செய்திகளிலிருந்து, இதோ சில B+ செய்திகள்....
1) இன்னொரு மரக் கா(த)வலர் (முகநூல்-இன்று ஒரு தகவல்)
2) எந்த வயதானால் என்ன? பிறர் கை (உதவி) வேண்டாம். என் கை போதும் நான் வாழ.. (முகநூல்-இன்று ஒரு தகவல்)
3) சேலம் கந்தம்பட்டி அரசு நடுநிலைப் பள்ளி ஆசிரியை எஸ் பார்வதி. தமிழ் விக்கி
பீடியாவின் நிர்வாகியாக இருக்கிறார்.
ஆங்கிலத்தில் இருக்குமளவு தமிழில்
இல்லையே என்று அவரே தமிழ் விக்கியில் எழுதத் தொடங்கி, ஈ மெயில் தொடங்கி
பல்வேறு இணைய விஷயங்களையும் புரிந்து கொண்டு, இன்று மற்றவர்கள் எழுதுவதைத்
திருத்துவதில் தொடங்கி, அதில் சேர்க்க வேண்டுமென்றாலும் சேர்த்து என்று
அதில் நிர்வாகியாக உள்ளார். (தினமணி ஞாயிறு இணைப்பு)
4) மக்களுக்கெல்லாம் உதவணும்!
கண் பார்வையற்றவராக இருந்தாலும்,
எம்.ஜி.ஆரின் சொல்லுக்கு கட்டுப்பட்டு, மக்களுக்கு உதவும், கொளஞ்சி: நான்,
பெரம்பலூர் மாவட்டத்தின், கிளியூர் குக்கிராமத்தில் பிறந்தவன். மஞ்சள்
காமாலையால், ஏழு வயதிலேயே, இரு கண்களிலும், பார்வை இழந்தேன். எனினும்,
ஊரார் ஏளனமாக நடத்தாமல் ஊக்கமளித்ததால், பார்வை இல்லாததை ஒருபோதும்
உணர்ந்ததில்லை. திருச்சி, புத்தூர் பார்வையற்றோர் பள்ளியில் படிக்கும்
போது, பிரெய்லி முறையில் வாசிக்க கற்றுக் கொண்டேன். பார்வையற்ற நிலையிலும்,
சரியாக வாசிப்பதை ஆச்சரியத்துடன் பார்த்த, முன்னாள் முதல்வர்,
எம்.ஜி.ஆர்., என்னை தொட்டு பாராட்டினார்.
ஓட்டப் பந்தயத்திலும் பங்கேற்று,
அவர் கையால் முதல் பரிசு வாங்கிய போது, "நீ நல்லா படிச்சு பெரிய ஆளா
வரணும்; மக்களுக்கெல்லாம் உதவணும்' என, என்னை ஊக்கப்படுத்தினார். லயோலா
கல்லூரியில், பி.ஏ., தமிழ் படிக்கும் போது, என் தந்தை இறந்ததால், படிப்பை
தொடர முடியாமல், பேசின் பிரிஜ்ஜில், "டெலிபோன் பூத்' நடத்தி, குடும்பத்தை
காப்பாற்றினேன். படிப்பு முடிந்ததும், சேர்ந்த மாவட்டமான பெரம்பலூர்
பேருந்து நிறுத்தத்தில், ஒரு பங்க் கடை போட்டு, தொழில் செய்தேன். நான்
தினமும் பெரம்பலூர் செல்வதால், தாலுகா மற்றும் கலெக்டர் அலுவலகத்துக்கு
கொடுக்க வேண்டிய மனுக்களை, கிராமத்தினர், என் மூலம் கொடுத்தனுப்புவர்.
நானும் இதில் தன்னார்வத்தோடு ஈடுபட்டு, பல பேருக்கு முதியோர் பென்ஷன்
வாங்கி தந்திருக்கிறேன். அரசின் திட்டங்களை ஆர்வத்தோடு அறிந்து, என் கிராம
மக்களுக்கு பெற்று தருகிறேன். உள்ளாட்சி பிரதிநிதியாக, கட்சி வேறுபாடின்றி,
கிராம மக்களின் நியாயமான கோரிக்கைகளை, அரசு அதிகாரிகளிடம், முறையாக
விண்ணப்பித்து நிறைவேற்றுகிறேன். பதவி என்பது, சம்பாதிப்பதற்கான வழி
கிடையாது. அது ஊருக்கு உழைக்க கிடைத்த வாய்ப்பாக கருதினேன். 43 வயது
மாற்றுத் திறனாளியாக இருந்தாலும், மக்களுக்கெல்லாம் உதவணும் என்ற
வார்த்தைக்கு கட்டுப்பட்டு, இன்றும் உதவி செய்கிறேன்.
5) இந்த வார ஈர நெஞ்சம் செய்தி : கோவை செல்வபுரம் அருகில் பிச்சை
எடுத்துக்கொண்டு இருந்த சுமார் 75 வயதான ஒருவர் நோய்வாய் பட்டு 10.06.2013
சாலையோரம் இறந்து கிடந்தார். ஒருவர் இறந்து கிடக்கிறார் என்பதை கூட அறியாத
நிலையில் பலர் இருக்க இளகிய உள்ளம் கொண்ட ஒருவரால் B10 காவல் துறைக்கு
தகவல் கொடுக்க பட்டது .அதனை தொடர்ந்து காவல் துறை விசாரணைக்கு பிறகு அந்த
முதியவருக்கு யாரும் இல்லை அவர் ஆதரவற்றவர் என்று நிலையில் ஈரநெஞ்சம்
அமைபிற்கு B10 காவல் துறையுனரால் அந்த பெரியவரின் பிரேத உடலை நல்லடக்கம்
செய்து தரும்படி கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஈர நெஞ்சம் அந்த பெரியவரின் உடலை
11.06.13 அன்று சொக்கம்புத்துர் மயானத்திற்கு எடுத்து சென்று நல்லடக்கம்
செய்தது .
உடலை நல்லடக்கம் செய்ய துணை இருந்த B10 துணை ஆய்வாளர் திரு.
முருகையன் , அமைப்பின் நண்பர் சுப்பு , மயான தொழிலாளி வைரமணி அவர்களுக்கு
ஈரநெஞ்சம் மனதார நன்றி தெரிவித்துகொள்கிறது. இறந்த பெரியவருக்கு துணையாக
உறவுகள் இல்லாவிட்டாலும், அவரின் இறுதி காலத்தில் ஈர நெஞ்சம் துணையானது.
அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனிடம் உங்களோடு சேர்ந்து நாங்களும்
வேண்டுகிறோம். (முகநூலிலிருந்து)
உழைப்பால் வந்த உறுதி உடலிலும் - மனதிலும்
பதிலளிநீக்குஆசிரியை எஸ் பார்வதி அவர்களுக்கு வாழ்த்துக்கள்...
மற்ற அனைத்து செய்திகளுக்கும் நன்றி...
எல்லா நல்ல செய்திகளுக்கும் நன்றி. முதல் படத்தில் அந்த வீடு பார்த்த ஞாபகம் இருக்கே! :))))
பதிலளிநீக்குதொடர
பதிலளிநீக்குஎல்லா செய்தியிமே மனித நேயத்தைச் சொல்லுகிறதே அருமை.தொடர வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குநிறைவு தரும்
பதிலளிநீக்குசெய்திகள் பகிர்வுகள்...
அநாதை ஸம்ஸ்காரம் தான் மிகப் பிரமாதமான செய்தி. அந்த ஆத்ம சாந்தி அடையும். கடைசி நிலையிலாவது ஈரநெஞ்சம் ''வந்துவிட்டதே.கடவுளின் கருணை. வீக்கிபீடியா அம்மாவுக்குத் தமிழ் நன்றி.
பதிலளிநீக்குஆசிரியை பார்வதிக்கு முதலில் பாராட்டு.
பதிலளிநீக்குஇறுதி மரியாதை செய்த ஈர நெஞ்சம் அமைப்புடன் சேர்ந்து நாமும் அந்த ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திப்போம்.
வாராவாரம் பாசிடிவ் செய்தி கொடுக்கும் உங்களுக்கு பாராட்டுக்கள்!
நல்ல செய்திகள் மன நிறைவு தருகிறது! பகிர்வுக்கு நன்றி!
பதிலளிநீக்குமரக் காவலர்கள் ஆச்சரியப்படுத்துகிறார்கள். அருமையாக வழிவிட்டு வடிவமைத்திருக்கிறார்கள்.
பதிலளிநீக்குதன்னம்பிக்கை போற்றுதலுக்குரியதாயினும் முதுமையில் இத்தனைக் கடினமான உடல் உழைப்பு என்பது வருத்தமும் தருகிறது.
3,4,5 பாராட்டுக்குரியவர்கள்.
செய்திகளுக்கு நன்றி.
சில செய்திகள் ஆச்சர்யப் படவைத்தன. சில செய்தகள் கண்கலங்க வைத்தன.
பதிலளிநீக்குசில பெருமைப்பட வைத்தான்.சில நம்பிக்கை ஊட்டின. நன்றி
நல்லனவற்றைப் பகிர்ந்தமைக்கு நன்றி.
பதிலளிநீக்குதன் கையே தனக்குதவின்னாலும் அதுக்கும் ஒரு வயது வரம்பில்லையா?? பாவம்தான்.
இறுதி செய்தி நாட்டில் இருக்கும் நல்லவர்களை உலகுக்கு காட்டுகிறது... மூன்றாம் செய்தி மிக நல்ல விஷயம்
பதிலளிநீக்குமரமும் வீடும் அருமை.மரத்தை வெட்டாமல் வடிவமைத்து கட்டியவர்களுக்கு வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குமுதியவரின் தன்னம்மிக்கை பாராட்டவேண்டும்.
ஆசிரிய்ர் பார்வதிக்கு பாராட்டுக்கள்.
ஈரநெஞ்சம் அமைப்புக்குக்கும்வாழ்த்துக்கள்.