புதன், 27 ஆகஸ்ட், 2014

மீனாக்ஷி அம்மன் கோவில், அழகர் கோவில், பழமுதிர் சோலை, திருப்பரங்குன்றம்


சமீபத்தில் மதுரை சென்று வந்தபோது ஏற்பட்ட கோவில் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். 


 இந்த பால தண்டாயுதபாணி கோவிலை இத்தனை வருடங்களில் இப்போதுதான் பார்த்தேன்.



சமணர் குகை. உள்ளே இயற்கையான குகைக்குக் கீழேயே கோவில் அமைந்திருப்பது சிறப்பு. மிகச் சிறிய கோவில்.





 
சிறு கோவில்கள், மற்றும் பெரிய கோவில்கள் என்று சென்று வந்ததில் ஒரு விஷயம் கண்ணில் பட்டது.
மூங்கில் கட்டி வளைந்து வளைந்து செல்லும் வழிகளை ஏற்படுத்தி பக்தர்களைத் தொல்லைக்குள்ளாக்கும் முயற்சியில் மீனாக்ஷி அம்மன் கோவிலும்!

முதலில் மீனாக்ஷி அம்மன் கோவில். கோவிலுக்குள் நுழையுமுன்பே வெடிகுண்டு,  ஆயுதச் சோதனைகள் காரணமாக தனி வழி ஏற்படுத்தி அதன் வழியாக உள்ளே செல்ல வழி செய்திருக்கிறார்கள். அதன் வழியே உள்ளே சென்றோம்.

பொற்றாமரைக் குளத்துக்கு அருகே உள்ள மண்டபத்தைப் பிரித்து வைத்திருந்தார்கள். (நான் சென்றது ஜூன் மாதத்தில்) அதைப் பார்க்கவே விநோதமாக இருந்தது. அம்மன் சன்னதி ஆகட்டும், சொக்கநாதர் சன்னதி ஆகட்டும் கம்புத் தடுப்புகள் போடப்பட்டு சுற்றிச் சுற்றிச் செல்லும் நிலையைப் பார்க்கும்போதே கஷ்டமாக இருந்தது. 


அது மட்டுமில்லாமல், ஸ்வாமியைக் கண்ணாரக் கண்டோம் என்ற திருப்தியே பக்தர்களுக்கு ஏற்பட்டுவிடக் கூடாது என்பது போல, நல்ல தூரத்திலேயே நிறுத்தி குங்குமம் கொடுத்து அனுப்பி விடுகிறார்கள். 

இதில் ஒரு தமாஷ் வேற... கூட்டத்தில் எங்களை மீறி முன்னேறிச் சென்றனர் இரு பெண்கள். பின்னாலிலிருந்து ஒரு ஆண்குரல் 'லைன்ல வாங்க.... லைன்லேயே போங்க...குறுக்கப் போகாதீங்க...என்ன அவசரம்?" என்றது அந்தக் குரல். குரலுக்குரியவர் எங்களைத் தாண்டிக்கொண்டு முன்னேற, நாங்களும் ஏதோ கோவிலைச் சேர்ந்தவர் போல என்று பார்த்தால், முன்னே சென்று வசதியாக சுவாமி பார்த்து விட்டு, குங்குமம் பொட்டலத்தில் பெற்றுக் கொண்டு இறங்கி நடந்தார். என்ன சொல்ல! நாங்களும் இறங்கித் தாண்டிச் செல்லும்போது அவரை முறைக்கத்தான் முடிந்தது!


சும்மா வரிசையில் சென்றால் கையில் குங்குமம். ஐந்து, பத்து தட்டில் போட்டால் பாக்கெட்டில் குங்குமம். ம்ம்ம்...


அடுத்த விஷயம், எந்த முக்கியச் சன்னதியையும் பிரதட்சணமாகச் சுற்ற முடியவில்லை. ஜெனெரெட்டர் வேலை, அல்லது பாதுகாப்பு வேலை, பராமரிப்புப் பணி என்று சொல்லி அப்ரதட்சணமாகச் சுற்றச் சொல்லி, உள்ளே சென்றதும் ஒரு உள்வட்டப் பாதையில் பிரதட்சண வலம் வர ஏற்பாடு....






அழகர்கோவில் மேலே உள்ள நூபுர கங்கை சென்றோம். குளிக்க 15 ரூபாயாம். சும்மா உள்ளே போகணும் என்றால் ஒரு ரூபாயாம்.

பழமுதிர்சோலையில் முருகனைப் பார்க்க வேண்டுமென்றால் 5 ரூபாய் மினிமம் கட்டணம்! ஆனால் அழகர் கோவில் கீழே பெருமாளை
சௌகரியமாகப் பார்க்க முடிந்தது. 






அதே சமயம் திருவாதவூர், திருமோகூர்  போன்ற புகழ் பெற்ற ஸ்தலங்கள் எல்லாம் ஜனக் கூட்டம் இல்லாமல் இருந்ததும், அங்கு ஸ்வாமியை நெருக்கமாகப் பார்க்க முடிந்தது என்பதும் ஒரு ஆறுதல், சந்தோஷம். ஊருக்கு வெளியே இருப்பதாலா, என்ன காரணத்தினால் இந்தக் கோவில்களுக்கு கம்பித் தடுப்பு பந்தாக்கள், ஆயுதச் சோதனை இல்லை என்பது புதிர். 



புகைப்படங்களைப் பெரிதாகப் பார்க்க, படங்களின் மேல் கிளிக் செய்யவும்!

9 கருத்துகள்:

  1. கோவில் புனரமைப்பினால் சுவாமியைப் பார்க்க முடியவில்லையா? உங்கள் ஆதங்கம் புரிகிறது.

    பதிலளிநீக்கு
  2. மதுரை பழைய இனிய நினைவுகள்! புகைப்படங்கள் அருமை! இப்போது இப்படி எல்லாம் ஆகிவிட்டதா...அப்போதெல்லாம் இந்த அளவு மூங்கில் தடுப்புகள் எல்லாம் இல்லை....80 களில்....

    பதிலளிநீக்கு
  3. ம்ம்ம்ம் நல்லவேளைய மதுரைக்கு இப்போப் போகலை! :( போயிருந்தால் கோயிலோட நிலைமையைப் பார்த்துக் கொதிச்சுப் போயிருக்கும் மனசு! :(

    பதிலளிநீக்கு
  4. நம்மூர் சாமிகளும் இன்றைய நம் தலைவர்களை மாதிரி தான் ஆக்கிவிட்டார்கள்.
    காசு கொடுத்தால் தான் நின்று பார்க்க முடியும்.....

    பதிலளிநீக்கு

  5. போகிற நிலைமையில் மதுரையும் திருமலைபோல் ஆகிவிடும் போலிருக்கிறதே. நாங்கள் மதுரை சென்றிருந்தபோது ஓரளவு தரிசனம் சிரமமில்லாமல் இருந்தது( உபயம் ஒரு நண்பர்)

    பதிலளிநீக்கு

  6. போகிற நிலைமையில் மதுரையும் திருமலைபோல் ஆகிவிடும் போலிருக்கிறதே. நாங்கள் மதுரை சென்றிருந்தபோது ஓரளவு தரிசனம் சிரமமில்லாமல் இருந்தது( உபயம் ஒரு நண்பர்)

    பதிலளிநீக்கு
  7. சில வருடங்களுக்கு முன்னர் நாங்கள் சென்றிருந்த போதும் தொலைவிலிருந்தே தரிசிக்க முடிந்தது. இப்போது கோவில் வளாகத்துக்குள் புகைப்படங்கள் எடுக்க அனுமதியில்லை எனக் கேள்விப் பட்டேன். நிஜம்தானா?
    அதிக கூட்டமில்லாத கோவில்களிலும் கூட தடுப்பு வைத்து கெடுபிடி செய்யும் வழக்கம் பெங்களூரிலும் அதிகரித்து வருகிறது.

    படங்கள் அருமை.

    பதிலளிநீக்கு
  8. படங்களுடன் அழகான ஆலய தரிசனம்.

    அழகர் கோவில் குலதெய்வக் கோவில் என்பதால் அங்கும் மீனாட்சி அம்மன் கோவிலுக்கும் அடிக்கடி செல்வதுண்டு.

    இந்த முறை ஊருக்கு வந்தபோது அழகர் ஆற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவில் மனைவியின் அம்மா வீட்டில் தங்கி அருமையான சாமி தரிசனம் பண்ணினோம்.

    பதிலளிநீக்கு
  9. சிறந்த பகிர்வு

    தொடருங்கள்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!