செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

அரங்கன் அருள்

ரொம்ப நாளைக்குப்பின் ஶ்ரீரங்கம் செல்லும் வாய்ப்பு கிடைத்ததும் கோயிலுக்குச் சென்று அதிகாலை தரிசனம் காணவேண்டும் என்று திட்டமிட்டேன்.

யானை குதிரை பசு கொண்டுவ்ந்து நிறுத்தி வீணை இசைத்து, அரையர் சேவையுடன் பஞ்சாங்கம் படித்து பெருமாளை துயிலெழுப்புதல் பரவசப் படுத்தும் அனுபவம். 

ஆனால், என்ன துரதிருஷ்டம், முன் போல் சுறுசுறுப்பு இருந்தால் அதிகாலை தரிசனம் என்பது பழங்கதை என்பது பின்னால் தெரிந்தது.

"முதல் நாளே அறுபதே அறுபது பேருக்கு மட்டும் பதிவு கிடைக்கும்" என்று சொன்னார்கள். 

சரி கட்டணம் செலுத்தி தரிசனம் செய்து விடலாம் என்று பார்த்தாலும் நெரிசலாக ஆயிரக் கணக்கானோர் நின்று காத்திருந்ததைப் பார்த்ததும் "இது வேலைக்காகாது" என்று தெரிந்தது. 

கடைசியில் ஐம்பது ரூ டிக்கெட்டில் ரங்கனநாயகித் தாயார். தரிசனமும், பத்து பத்து ரூ. க்கு பொங்கல், புளியோதரை, ச.பொங்கல், வெளிப்பிரகாரத்தில் பட்சணப் பிரசாதங்களும் பெற்று அத்தோடு திருப்தியடைய வேண்டியதாயிற்று. 

தரிசனம் குறித்த விபரங்கள் எங்கும் அறிவிப்பாக வைக்கப் படவில்லை அல்லது என் கண்ணில் படவில்லை.

ஏமாற்றம்தான் எனினும் இப்படி பக்தி பொங்கி வழிந்து பெருக்கெடுத்தோடுவது எப்படி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் யோசனை ஓடியது. 

பெருங்கூட்டம் முட்டித் தள்ளும் இந்த காலகட்டத்தில், இந்த நாட்டில்தான் அதி அக்கிரமங்களும் நடக்கின்றன. 

அரங்கனோ அறிதுயிலில் புன்னகைக்கிறார்!

16 கருத்துகள்:

  1. ஆர்யபடாள் வாயிலில், அதாவது ரங்கா கோபுரத்துக்கு அப்புறமா ஆஞ்சநேயரைத் தரிசித்து விட்டு உள்ளே செல்லும் வழியில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டிருந்தது. இப்போ இருக்கானு தெரியலை. மற்றபடி அதில் குறிப்பிட்டிருக்கிறபடி நடக்கும்னு சொல்ல முடியாது. திருவிழாக் காலங்களில் மாறுபடும். அன்றாடம் கோயிலில் ஊழியம் செய்பவர்களுக்கேப் பல சமயம் தெரிவதில்லை. :(

    பதிலளிநீக்கு
  2. மாலை நான்கிலிருந்து ஐந்து மணி வரை மூத்த குடிமகன்களுக்கான தரிசன நேரம். ஐம்பது ரூபாய் டிக்கெட் வரிசையில் உள்ளே விடுவார்கள், ஆனால் சமீப காலமாக அதிலும் கூட்டம் நெரிசல்! அரங்கன் மனம் வைத்தாலே அவனைப் பார்க்க இயலும். :(

    பதிலளிநீக்கு
  3. புளியோதரை, சர்க்கரைப் பொங்கல் எல்லாம் பிரசாத ஸ்டாலில் வாங்கக் கூடாது. பெருமாள் சந்நிதிக்கு எதிரே உள்ள கிளி மண்டபத்தில் ஒவ்வொரு சமயம் விற்பனை நடக்கும். அங்கே வாங்கலாம். அல்லது மதிய நேரத்தில் பனிரண்டரையிலிருந்து இரண்டு மணி வரையும் கிழக்கு கோபுரத்திலிருந்து வரும் வழியில் நிறைய பட்டாசாரியார்கள் வைத்துக் கொண்டு விற்பார்கள். அவர்களிடம் வாங்கலாம். பிரசாதத்தின் சுவைக்கு உறுதிமொழி கொடுக்கலாம்.

    பதிலளிநீக்கு
  4. அப்பாடா, நேத்திக்குத் திங்க ஒண்ணும் தரலையா, இன்னிக்குத் "திங்க"றதைப் பத்தி எழுதிட்டேன். இப்போ நிம்மதியா இருக்கு! :)))))

    பதிலளிநீக்கு
  5. இப்போ எல்ல இடங்களிலும் ஒரே கூட்டம் தான்

    பதிலளிநீக்கு
  6. அரங்கனின் உருவம்தான் அடையாளப் படுத்தப் பட்டு விட்டதே. கற்பனையில் சேவிக்க வேண்டியதுதான், இல்லை பணத்தை அள்ளி வீசி சேவிக்க வேண்டும். அதற்கான அவசியத்தை தீர்மானிப்பது உங்கள் கையில்தானே. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. ஸ்ரீரங்கம் கோயிலுக்குள் சென்று பள்ளிகொண்ட பெருமாளை தரிஸிக்க முயற்சித்தீர்களா ?

    மிகவும் பேராசைதான் உங்களுக்கு :)

    காலம் மாறிக்கொண்டே உள்ளது.

    கோயிலில் ஊழியம் செய்யும் முக்கிய நபர்களை யாரையாவது தெரிந்திருந்து அவர்கள் மூலம் சென்றால் மட்டுமே இதெல்லாம் நடக்கக்கூடும். இல்லாவிட்டால் இன்றைக்கு இதெல்லாம் நடக்காத / நினைத்தே பார்க்க முடியாத காரியங்களாகும்.

    இது சம்பந்தமாக என் இனிய நினைவலைகளை ஏற்கனவே நான் ஓர் பதிவரின் பின்னூட்டத்தில் பகிர்ந்துள்ளேன்.

    இணைப்பு இதோ:

    http://jaghamani.blogspot.com/2013/10/blog-post_23.html#comment-form

    அதில் நான் எழுதியுள்ள சுமார் 25 பின்னூட்டங்களையும் பொறுமையாகப் படித்துப்பாருங்கோ.

    அன்புடன் கோபு [VGK]

    பதிலளிநீக்கு
  8. ஸ்ரீரங்கம் போனால் அதிகாலையில் கோவிலுக்குப் போய் பெருமாளை செவிப்பதுதான் முதல் வேலை. இப்போது அதிகாலை தரிசனம் இல்லை என்று கேட்கவே வருத்தமாக இருக்கிறதே. மதியம் இரண்டு மணிக்குப் போனால் அதிகக் கூட்டம் இருக்காது என்று ஒருமுறை என் அம்மாவை அழைத்துக் கொண்டு போனேன். ஒருமுறை சேவித்துவிட்டு யாரும் இல்லாததால் மறுபடியும் போய் சேவித்தோம். இப்போது அதெல்லாம் நடக்காது போலிருக்கே!

    பதிலளிநீக்கு
  9. கோயில் நடைமுறைகளே மாறிவிட்டன நண்பரே

    பதிலளிநீக்கு
  10. அரங்கனை ஒரு கணம் நினைத்தாலே போதும்.
    அக்கணமே நம் நெஞ்சில் நிறைந்து நிற்பான்.


    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    பதிலளிநீக்கு
  11. ஏமாற்றம்தான் எனினும் இப்படி பக்தி பொங்கி வழிந்து பெருக்கெடுத்தோடுவது எப்படி எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்றும் யோசனை ஓடியது.

    பெருங்கூட்டம் முட்டித் தள்ளும் இந்த காலகட்டத்தில், இந்த நாட்டில்தான் அதி அக்கிரமங்களும் நடக்கின்றன. //

    வழி மொழிகின்றோம்! அது சரி, இப்போதெல்லாம் இறைவனையும் லஞ்சம் கொடுத்துத்தான் வணங்க வேண்டியுள்ளது அதுவும் ஒரு சில நொடித் துளிகளே! சொல்லுவது என்னவோ இறைவனுக்கு முன் எல்லோரும் சமம் என்று. எனவே ரூபாய் கொடுக்க/இதற்கு மனம் இடம் கொடுக்க மாட்டேன் எங்கின்றது. எனவே கூட்டம், முண்டியடித்தல், எதுவுமே இல்லாத, தெருவோரம் ஏழையாக அமர்ந்திருக்கும் தெய்வங்களைத் தரிசித்து உண்மையாகவே கஷ்டப்படும் ஜீவன் களுக்கு ......இதற்கு மேல் சொல்வதற்கு இல்லை.....வலது கை கொடுப்பது இடது கைக்குக் கூடத் தெரியக் கூடாது என்பது காஞ்சிப் பெரியவா வாக்கு!

    பதிலளிநீக்கு
  12. // பெருங்கூட்டம் முட்டித் தள்ளும் இந்த காலகட்டத்தில், இந்த நாட்டில்தான் அதி அக்கிரமங்களும் நடக்கின்றன.

    அரங்கனோ அறிதுயிலில் புன்னகைக்கிறார்! //

    That's the point. I too ponder over this.

    பதிலளிநீக்கு
  13. ஒவ்வொரு முறை திருவரங்கம் செல்லும்போதும் நான் கோவிலுக்குச் செல்வதில்லை - அப்படியே சென்றாலும் தாயாரைப் பார்த்துவிட்டு, சில சிற்பங்களை ரசித்து வருவதோடு சரி.

    பணம் கொடுத்து தரிசனம் செய்யும் அளவிற்கு பக்தி இல்லை! :)

    அத்தனையும் அறிந்த பெருமாள், அறியாதவர் போலத் தான் இருக்கிறார்! :)

    பதிலளிநீக்கு
  14. மதுரைக்கு அடிக்கடி போய் விட்டு மீனாட்சியை பார்க்காமல் திரும்பி வருகிறேன். கூட்டம், வரிசை பலமணி நேரம் காத்திருப்புக்கு பயந்து.

    ஸ்ரீரங்கத்தில் ஒருமுறை 50 ரூபாய் கொடுத்து பார்த்தோம். வர வர மக்களிடம் கொடுக்கும் சக்தி ஓங்கி இருப்பதை காட்டும் கூட்டம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!