சனி, 28 பிப்ரவரி, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்



1)  "இங்க படிக்கிற பசங்கள்ல ஹாஸ்டல் சேர முடியாதவங்க நோட்ஸ், ஃபீஸ் கட்ட முடியாதவங்களுக்கு என்னாலானதைச் செய்கிறேன்  வருஷத்துக்கு ரெண்டுபேரைத் தேர்ந்தெடுத்து அவங்க படிக்க முழு செலவையும் ஏத்துகிட்டு படிக்க வைக்கிறேன்" என்று சொல்லும் தெய்வப்பிரகாசன் பிறப்பிலேயே பார்வையில்லாமல் பிறந்து,  அடுத்தவர் உதவியுடன் படித்தவர். (கல்கி)





2) "உடம்பில் தெம்பு இருக்கும் வரை உழைக்கணும். யாரிடமும் கையேந்தி நிற்கக் கூடாது. அது, பெற்ற மகன்களாக இருந்தாலும் சரி.கஷ்டமில்லாத வாழ்க்கையில் கற்றுக் கொள்ள எதுவும் இருக்காது. கஷ்டங்கள் தான், வாழ்க்கை பாடங்களாக இருக்கும்.."  குட்டியம்மாள்.




3) திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதரவற்ற இல்லங்களை எல்லாம் தத்தெடுத்து ஆதரவு கொடுத்து வருகிறார் வெளிநாடு வாழ் இந்தியரான கல்ராம்.  இவர் யு.எஸ்.ஸில் வேலை கிடைத்து அங்கேயே செட்டில் ஆகிவிட்ட போதிலும் தன்னுடைய வருமானத்தில் ஒரு பங்கை இந்தியர்களுக்குச் செலவிடுவதை தனது கடமையாக நினைக்கிறார். இவரது உதவியால் தற்போது கல்வி அறிவு பெற்றுவரும் குழந்தைகளின் எண்ணிக்கை மட்டும் இரண்டாயிரத்தைத் தாண்டி உள்ளது.  




4) 20 ரூபாய் மருத்துவம்.  மருத்துவர் பத்மினி.




5)  இப்படியும் மனிதர்கள் தேவைதான்.  முன்னர் தனி ஒரு மனிதனாய் ஒரு காட்டை நிர்மாணித்த மனிதர் பற்றி தனிப் பதிவாகவே பார்த்தோம்.  இப்போது ஒரு தம்பதியர்.  23 வருட உழைப்பில் 55 ஏக்கரை 300 ஏக்கராக மாற்றி, வன விலங்குகளுக்கு ஒரு சொர்க்கத்தை நிர்மாணித்துள்ளனர். இயற்கை வாழ இதெல்லாம் எவ்வளவு அவசியம் என்று சொல்ல வேண்டியதில்லை!   பமீலா தம்பதியர்.





6)  "தனி ஒரு மனிதனுக்கு டாய்லெட் இல்லையெனில், கிராமத்துக்கு 25 டாய்லெட்கள் அமைத்திடுவோம்"  ரீஸா மௌர்யா.





7) பெங்களுருவில் எவ்வளவோ அசம்பாவிதங்கள் கேள்விப் பட்டிருக்கிறோம்.  அங்குதான் இந்த மனிதரும் இருக்கிறார். பாராட்டப்பட வேண்டியவர்.  அவர் படம் கிடைக்கவில்லை. ஆட்டோ டிரைவர் ஆனந்த குமார்




8) அனுப் விஜாபூர்.




9) நம் வீட்டை நாம் சுத்தமாக வைத்துக் கொண்டால் ஊரே சுத்தமாக இருக்கும் என்று சொல்வார்கள். அதுபோல ஒவ்வொரு ஊர்க்காரர்களும் அவரவர் ஊர்களில் இதுபோல சேவை செய்தால் நாடே சுபிட்சமாகும். 





10) வீட்டைச் சீராக்கி, தெருவைச் சீராக்கி, நாட்டைச் சீராக்கும்,  குப்பையைக் கூட வீணாக்காமல் பயனுள்ள முறையில் ஏலவழிக்கக் கற்றுக் கொடுக்கும் மங்களம் பாலசுப்ரமணியன்.  நன்றி வெங்கட்.




11)  "மாற்றுத்திறனாளிகள், அவர்களுடைய பிரச்சினைகளுக்கென்றே சில தொன்டு நிறுவனங்கள் சேவை செய்து வருகின்றன. அவற்றைப்பற்றி நிறைய பேருக்கு வெளியே தெரிவதில்லை. நமக்கோ, நமக்கு நெருங்கியவர்களுக்கோ பிரச்சினைகள் வரும்போது தான் நம்மில் பெரும்பாலானோர் மேல் விபரங்களைத் தேட ஆரம்பிக்கிறோம். சமீபத்தில் ஒரு பெண்கள் இதழில் சில முக்கியமான சேவை அமைப்புகள் பற்றிய தகவல்கள் வெளி வந்தன. அவற்றைப்பற்றி கீழே எழுதியிருக்கிறேன். நிச்சயம் யாருக்கேனும் இவை பயன்படும். முக்கியமாய் பாஸிடிவ் செய்திகள் எழுதி வரும் ஸ்ரீராம் அவர்களுக்கும் இத்தகவல்கள் பயன்படும்!" என்று சொல்லி அந்த உபயோகமான சேவை செய்யும் இடங்கள் பற்றிய விவரங்களைத் தந்திருக்கிறார் திருமதி மனோ சாமிநாதன் மேடம். 




12) இந்த மனம் யாருக்கு வரும்?  30 லட்ச ரூபாயை நன்கொடை அளித்து விட்ட சூப்பர் சிங்கர் ஜெஸ்ஸிகா.

 

13 கருத்துகள்:

  1. ரீஸா மௌர்யா அவர்களும் பமீலா தம்பதியர் அவர்களும் சிறப்பு...

    பதிலளிநீக்கு
  2. Good work by "Udavum Nanbargal" in transforming this society.


    Great work by Reesa Maurya
    "Now she is a role model for other ASHAs working in neighbouring Gram Panchayats. For Panchayati Raj Department of the district, she is a catalyst whose success is being replicated in other villages."

    These good catalyst are a great inspiration for us to give something back to the society.

    Thanks Sriram for highlighting all the good deeds.

    பதிலளிநீக்கு
  3. இன்று இடம் பெற்ற் அனைத்தும் நல்லமனம் படைத்தவர்களை காட்டுகிறது. நல்லமனம் வாழ்க! நாடு போற்ற வாழ்க! என்று வாழ்த்த தோன்றுகிறது.
    நன்றி உங்களுக்கு.

    பதிலளிநீக்கு
  4. ஒவ்வொருவரும் பாராட்டுக்கும் மதிப்பிற்கும் உரியவர்கள்! பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  5. நல்ல மனம் படைத்த இவர்கள் நீண்டு வாழட்டும்.

    பதிலளிநீக்கு
  6. ,இவர்களைப் போல் ஊருக்கு ஒருவர் இருந்தால் நாடு நலம் பெறும்

    பதிலளிநீக்கு
  7. அனைத்துமே அருமை. வாழ்த்துக்கள்.

    அந்த ஆட்டோ டிரைவர் பாரட்டப்பட வேண்டியவர்.

    பதிலளிநீக்கு
  8. வழக்கம் போல வகுப்பறையில் பகிர்ந்து கொள்ள அருமையான பதிவை தந்திருக்கிறீர்கள் சகா!! மிக்க நன்றி !

    பதிலளிநீக்கு
  9. நம்பிக்கை ஊட்டும் செய்திகள்! அனைத்துமே சிறப்பு! நன்றி!

    பதிலளிநீக்கு
  10. 23 ஆண்டுகளில் ஒரு வனவிலங்கு சரணாலயத்தையே உருவாக்குவதற்கு எவ்வளவு உழைப்பு தேவைப் பட்டிருக்கும்! சாதனை மனிதர்கள் தாம்!

    பதிலளிநீக்கு
  11. பிரமிக்க வைப்பவர்கள் அனில், பமெலா தம்பதியர்!!!!! எவ்வளவு பாராட்டினாலும் போதாது....வார்த்தைகள் இல்லை. இவர்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும், உங்கள் லிங்க் தான் அவர்களைப் பற்றிய முழு தகவல்களும் அறியக் கிடைக்க உதவியது. மிக்க நன்றி நண்பரே! அவர்களது எண்ணங்கள் அருமையானவை. சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை...

    //“People think that animals need the forest. But the truth is, the forest needs the animals equally. While the forest helps animals in providing shelter and food, animals help forests in regeneration – they are both inter-dependent and we should make efforts to preserve both,” says Dr. Anil. - // இது மட்டுமல்ல இன்னும் பல அவர்கலது வார்த்தைகள் எத்தனை உண்மையானவை!! Hats off to them!!!

    அது போன்று ரீஸா மௌர்யா....ஆஷா போன்றோர் மிகவும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.....//‘I am very excited to have a latrine of my own,’ Ms Reesa said. ‘All my family members have started using the latrine. They drink safe water as well as clean the surroundings around the home.’ - // ரீஸாவின் வார்த்தைகள் மனதை ஒரு பக்கம் மகிழ்வித்தாலும் மறுபக்கம் இத்தனை வருடங்கள் எத்தனை கஷ்டப்பட்டிருப்பார்கள், இன்னும் இதைப் போன்று எத்தனை கிராமங்கள் கஷ்டப்படுகின்றன என்று தோன்றியது....வாழ்க ரீஸா, ஆஷா....

    கல்ராம், பங்களூர் ஆனந்தகுமார், மருத்துவர் பத்மினி, அனூப், குட்டியம்மாள் எல்லோரும் நல்ல மனம் படைத்தவர்கள்....வாழ்க! வளர்கள் அவர்களது நல்ல செயல்கள்!

    பதிலளிநீக்கு
  12. தெய்வப்பிரகாசன் பலரது கல்விக் கண்களை திறந்து வருவது பாராட்டுக்குரிய செயல் !

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!