Saturday, February 21, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.
1) அன்ஷு எடுத்துள்ள முடிவு சரியா என்று காலம் சொல்லட்டும்!
 


2) கூட்டுக் குடும்ப வாழ்வில் நம் குழந்தைகள் பெற்றதை,  இந்த பரபரப்பான 'ஃபாஸ்ட்ஃ புட்'  யுகத்தில் இழந்து கொண்டிருப்பதை,  மீட்டுத் தரும் இந்த நவீன இளைஞர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்களே.  மாற்றத்தைக் குழந்தைகளிடமிருந்து தொடங்க வேண்டும் என்பார்கள். இவர்கள் அதைத்தான் செய்கிறார்கள்.
 


3) வெற்றிக்கு வழி... இந்திரலக்ஷ்மி 
 


4) கழிவுகளைக் காசாக்கும் மகளிர்.  காமாட்சி  சொல்வது...
 


5) மூன்று லட்சம் செயற்கைக் கால்களை இதுவரை இலவசமாகவே வழங்கியுள்ள முக்தி அமைப்பு.
 


6)  நேர்மைதான் துணிச்சலைத் தரும்.   நிறைய ஆண்களிடமும் இல்லாத அந்தத் துணிச்சலைப் பெற்றுள்ள பெண் ஆர் டி ஓ  பிரியதர்ஷினி.
 
 

6) ஃ பேஸ்புக்கில் நானெல்லாம் அனுஷ்கா படத்தை ஷேர் செய்துகொண்டு இருக்கும்போது,  உருப்படியாக அதில் வியாபாரம் செய்து முன்னேறும் இளைஞர் (பொறியியல் மாணவர்) சக்தி வேல்.    "சவுக்கு நாற்றுகள் விற்பனை மூலம், மாதம், 50 ஆயிரம் ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறேன். அது மட்டுமல்லாது, என் கிராமத்தைச் சேர்ந்த, 50 விவசாயப் பணியாளர்களுக்கு, நாற்றுப் பண்ணையில் வேலையும் வழங்கி வருகிறேன்."  என்கிறார் அவர்.

7) அரசு ஆஸ்பத்திரிகளால் கூட புறக்கணிக்கப்பட்ட முதியோர்களை, மனநலம் பாதித்தவர்களை, நோய் முற்றியவர்களை ஒரு தாயுள்ளத்தோடு அணுகி அவர்களுக்கு வேண்டிய முதலுதவிகளை செய்தபின் நிலையான அமைதியை தேடி
த்தரும் வகையில் இந்த விடுதியில் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறார்.  தனது வாழ்வாதாரத்திற்கான நேரம் போக மீதிநேரம் முழுவதும் இந்த விடுதி வாழ் மக்களே உறவாக கருதி ஈர நெஞ்சத்தோடு இயங்குபவர், இயக்குபவர் மகேந்திரன்.

 

15 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

குழந்தைகளிடமிருந்து... அதே அதே...

சக்திவேல் அவர்கள் மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

இன்றைக்கு பல மகேந்திரன்கள் தேவை...

RAMVI said...

சிறப்பான செய்திகள்....
நவீன இளைஞர்கள் பாராட்டபட வேண்டியவர்கள்.

பரிவை சே.குமார் said...

நவீன இளைஞர்கள்...
சவுக்கு வியாபாரம் மூலம் வேலை கொடுக்கும் இளைஞர்...
கழிவுகளை காசாக்கும் மகளிர் அணி என எல்லாமே சிறப்பான செய்திகள்...

புலவர் இராமாநுசம் said...


அனைவருமே போற்றத் தக்கவர்கள்!
திரட்டித் தந்த தங்களுக்கும் மிக்க நன்றி!

‘தளிர்’ சுரேஷ் said...

சக்திவேலின் சாதனை வியப்பளித்தது! முகநூல் இதற்கெல்லாம் உதவுகிறது என்பது ஆச்சர்யம்! சிறப்பான செய்திகள்! நன்றி!

rajalakshmi paramasivam said...

அன்ஷுவிற்கு என் வாழ்த்துக்கள் . கதை சொல்வதை மீட்டு வர முயற்சிக்கும் இளைஞர்களுக்கு பாராட்டுக்கள் பல.பல் இல்லத்தரசிகளுக்கு வழிகாட்டியாய் நிற்கும் இந்திரலட்சுமிக்கு ஒரு ஜே !கழிவுகளை காசாக்கும் காமாட்சிக்கு பாராட்டுக்கள் . பலருக்கும் உதவும் முக்தி எத்தனைப் பாராட்டினாலும் தகும். இது போன்ற பாசிடிவ் செய்திகளைப் பகிர்ந்து கொண்டு வரும் உங்களுக்கும் ஒரு ஜே !

Geetha Sambasivam said...

அனைத்தும் பாராட்டுக்கு உரிய முயற்சிகள். அனைவருக்கும் வாழ்த்துகள்.

Bagawanjee KA said...

#ஒரு இடத்திற்குச் சென்று வேலை பார்த்து, அந்தத் தொழிலை அட்சர சுத்தமாக கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பலம், பலவீனம் என்ன என்பது தெரியாமல், எந்தத் தொழிலிலும் இறங்காதீர்கள்.#திருமதி இந்திரலட்சுமியின் கருத்து மிகவும் சரி !

Bagawanjee KA said...

#ஒரு இடத்திற்குச் சென்று வேலை பார்த்து, அந்தத் தொழிலை அட்சர சுத்தமாக கற்றுக் கொள்ளுங்கள். உங்கள் பலம், பலவீனம் என்ன என்பது தெரியாமல், எந்தத் தொழிலிலும் இறங்காதீர்கள்.#திருமதி இந்திரலட்சுமியின் கருத்து மிகவும் சரி !

வெங்கட் நாகராஜ் said...

மனதிற்கு மகிழ்ச்சி தரும் செய்திகள்.

பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

முனைவர் இரா.குணசீலன் said...

நம்பிக்கை தரும் மனிதர்கள்.

ராமலக்ஷ்மி said...

அன்ஷூ ஆச்சரியப்படுத்துகிறார்.

நல்ல செய்திகளின் பகிர்வுக்கு நன்றி.

கோமதி அரசு said...

உங்கள் கண்ணில் பட்ட பாஸிட்டிவ் செய்திகள் அனைத்து பகிர்வுக்கும் நன்றி.

கதை சொல்லி மாணவ, மாணவிகளை கதை சொல்ல வைக்கும் நவீன இளைஞர்கள் பாராட்டுக்குரியவர்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

அன்ஷு, நவீன இளைஞர்கள், இந்திர லஷ்மி, வெல்த் ஃப்ரம் வேஸ்ட் (இது கல்லூரி காலத்தில் ஒரு போட்டியாகக் கூட வைத்திருந்தார்கள்) கழிவுகளைக் காசாக்கும் காமாட்ச்சி, முக்தி அமைப்பு, கோட்டாட்சியர் பிரியதர்ஷினி, சக்திவேல், ஈர நெஞ்சம் மகேந்திரம்.....எல்லோருமே பாராட்டிற்குரியவர்கள். நல்ல பாசிட்டிவி செய்திகள்

Thenammai Lakshmanan said...

positive energy :)

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!