சனி, 7 பிப்ரவரி, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.



1)  பிரசவத்தில் சாலையில் உயிருக்குப் போராடிய பசுவுக்கு உதவி செய்த எஞ்சினியர் செல்வம்.
 

 
2)  மனிதத்தை வணங்கும் துறவி!  துறவியான என்னிடம் இழக்க என்ன இருக்கிறது என்று கேட்கும் ஸ்வாமி பிரணவானந்தா.
 


3) 'நமக்கு நாமே' என்று தங்கள் பிரச்னையைத் தீர்த்துக் கொண்ட மேற்கு வங்க கிராம மக்கள்.
 


4) தனது ஒருநாள் ஷேர் ஆட்டோ பயணத்தில் தான் சந்தித்த வேறுபட்ட இரு பாஸிட்டிவ் மனிதர்களைப் பற்றிப் பேசுகிறார் ஒரு பெண்மணி.  தினசரி நாம் சந்திக்கும் மனிதர்களிலேயே எத்தனை பாஸிட்டிவ் மனிதர்கள் என்று வியக்கிறார்.
 


5) கெட்ட நீரை குடிநீராக்கும் இந்தச் செய்தி முன்னரே பகிர்ந்திருக்கிறேனோ என்று நினைத்தேன்.  ஆனால் .  இது ஆந்திரப் பிரதேசத்தில்!
 


6)  தான் கற்ற வித்தையை தன்னைப் போலவே பிற சிறுவர்களும் பெற வேண்டும் என்று எண்ணிய ஒரு உயர்ந்த சிறுவனின் செயலை எடுத்து எழுதி இருக்கும் கரந்தை ஜெயக்குமாருக்கு நன்றிகளுடன் இந்தச் செய்தி.
 





7) அதேபோல், குறைந்த கட்டணத்தில் பயிற்சி வகுப்புகளும் எடுத்து வருகிறேன். ஆரம்ப காலத்தில், காசில்லாமல் வகுப்புக்கு போக முடியாமல் நான் திணறியது போல், மற்ற பெண்களும் திணறக் கூடாது என்பதே இதற்குக் காரணம்.  செண்பகவள்ளி.
 

8)  தான் அறிந்ததும் அல்லாமல், ஏரியா மக்களுக்கும் அறியத் தந்த ஹக்கீம்.
 


9) வீட்டுக் கவலையும், பொறுப்பும் பெண்களுக்கே அதிகம்.  பள்ளி சென்று வரும்போதே வீட்டுக்கான சேவை.





10) பல்வேறு நலத் திட்டங்களை அரசை நம்பாமல் நிறைவேற்ற முடிந்தது.  ஏரி, குளம் கரையோரங் களில் புளிய மரங்களை நட்டு, கரைகளை பலப்படுத்தியதோடு, ஊராட்சிக்கும் வருமானம் பெற வைத்திருக்கும் ஊராட்சி (முன்னாள்) தலைவர் பாலசுப்ரமணியன்.


 

11 கருத்துகள்:

  1. மனித/மிருக நேயத்தை தக்க சமயத்தில் காட்டிய செல்வமவர்களை எப்படிப் பாராட்டினாலும் தகும்

    பதிலளிநீக்கு
  2. இது போன்ற மனிதர்கள் இருப்பதால்தான் இன்னும் மனிதம் தழைக்கிறது
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  3. மேற்கு வங்கம் போல் இங்கும் நடக்கக் கூடாதா...? நடக்கும்...

    // ஒரு விஷயத்தில் நாம் தளராத ஆர்வம் காட்டினால், அதற்கான வழி கண்டிப்பாக கிடைக்கும் // செண்பகவள்ளி அவர்கள் வாழ்க...

    ஆர்வமான மக்கள் அனைவருக்கும் (செய்திகளுக்கு) பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  4. These souls are blessed to have the conviction to make a little change in people around them.

    My wishes and prayers to god to give all of them strength to carry on the good deeds.

    பதிலளிநீக்கு
  5. "You must be the change you want to see in the world" என்கிற காந்தித் தாத்தாவின் வாசகம் நினைவு வந்தது. வாழ்க!

    பதிலளிநீக்கு
  6. செல்வம் ஹாட்ஸ் ஆஃப் டு யு!! தினேஷ் அவர்களுக்கும், மருத்துவர்களுக்கும் நன்றி நன்றி சல்யூட்! மாட்டையும், கன்றுகுட்டியையும் காப்பாற்றியதற்கு!

    (கீதா: இதை உடனே என் மகனுக்குத் தெரிவிக்க வேண்டும். மிகவும் மகிழ்ந்து பூரித்துப் போவான். மகன் கால் நடை மருத்துவன் ஆயிற்றே! அதுவும் நேசித்துச் செய்பவன்)

    மேற்குவங்க கிராமம் போல் எல்லா கிராமங்களும் மாறினால்.....ரொம்ப ஓவரான கனவோ?!

    பாபர் அலி வெங்கட் ஜியின் தளத்தில் ...வாசித்தோம்...

    செண்பகவள்ளி போறறப்பட வேண்டியவர்...

    நியாய விலைக் கடைகள் செய்யும் அநியாயத்தை வெளிக்கொண்டுவந்து நியாயத்தை நிலைநாட்டிய ஹக்கீம் க்கு பாராட்டுக்கள்!

    ஊராட்ச்சி தலைவர் பால சுப்ரமணியன் வாழ்த்துக்கள்! முன்னோடி பலருக்கும்....

    பதிலளிநீக்கு
  7. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  8. செல்வம்,தினேஷ் and vets.. மனமார்ந்த வாழ்த்துக்கள் .மனம் நெகிழ்ந்தது ..எங்க அப்பா நிறைய இப்படி காப்பாற்றியிருக்கார் .அவை அன்பான ஜீவன்கள் ஒரு கோ அம்மா ...எங்க அப்பா கையை நன்றியுடன் நக்கினத சொல்வார் எப்பவும் ..
    கோசாலா ..பெண்மணி பற்றி //நீங்கதானே பகிர்ந்தீர்கள் ?
    மனிதத்தை வணங்கும் துறவி,மற்றும் அனைத்து செய்திகளும் முத்தான பகிர்வு

    பதிலளிநீக்கு
  9. நண்பர் ஸ்ரீராம் அவர்களுக்கு,

    தங்களின் செய்தி தொகுப்புக்களுக்கு எனது பாராட்டுக்கள்.

    பொம்மியை காக்க உதவிய செல்வம் பாராட்டுக்கு உரியவர்.

    ஸ்வாமி பிரணவானந்தா , இழப்பதற்க்கு ஒன்றுமில்லை என்று சொல்லி செய்துவரும் சமூக பணிகள் மூலம் இறவா புகழ் பெற்றவராய் திகழ்கின்றார், அவரது சேவை தொடர, செழிக்க வணங்குகின்றேன் அவரின் அன்புள்ளத்தை .

    மேற்கு வாங்க மக்களை போன்று, எதற்கெடுத்தாலும், அரசுகளின் உதவியை எதிர்பார்க்காமல் தங்களின் தேவைகளை தாங்களே பூர்த்திசெய்துகொண்டது பாராட்டுக்குரியது.

    முன்னாள் ஊர் தலைவர் பால சுப்பிரமணியம் போன்றவர்களின் பதவி காலத்துக்கு பின்னும் , "மின்னும்" சேவை மனப்பான்மை ,உள்ளத்தை சிலிர்க்க வைக்கின்றது.

    எலா செய்தி களும் நேர்த்தியான தொகுப்புக்கள்.

    நட்புடன்.

    கோ

    பதிலளிநீக்கு
  10. செல்வத்தின் மனித நேயத்தை பாராட்டவேண்டும். உடன் வந்து பார்த்த டாக்டர் தினேஷ் குழுவினர்களுக்கும் பாராட்டுக்கள்.ஸ்வாமி பிரணவானந்தாவிற்கு வணக்கங்கள்.

    அனைத்து பாஸிடிவ் செய்திகளும் மனிதநேயம் மிக்கது.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  11. சில செய்திகளை முகப்புத்தகத்தில் படித்தேன்...

    அனைவரும் பாசிட்டிவ் மனிதர்கள் தாம்....

    பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!