திங்கள், 9 பிப்ரவரி, 2015

'திங்க'கிழமை : அம்மா சமையல் மாதிரி இல்லை - ஒரு ஆய்வு.


எதையாவது சாப்பிடக் கொடுத்தால் எல்லார் வீட்டிலும், எல்லோரும் அடிக்கடி அல்லது அவ்வப்போது சொல்லும் வசனம் ஒன்று, "என்ன இருந்தாலும் எங்க அம்மா செய்தது போல இல்லை.."    மனைவிகளைக் கடுப்பேற்றும் வசனம்.  அந்த மனைவிகள் பின்னால் நம் வாரிசுகள் இதே வசனத்தை அவர்கள் துணையிடம் சொல்வார்கள் என்று எண்ணிப் பார்ப்பது கூட இல்லை!
 
அது ஏன் அப்படி? 

மனைவிக்கு சமைக்கத் தெரியவில்லையா?  அல்லது அம்மா சமைத்தது மாதிரி இனி யாரும் செய்யவே முடியாதா?  அப்போதிருந்த சமையல் பொருட்களுக்கும், இப்போதைக்கும் வித்தியாசம் இருக்கிறதா?  இல்லை, இப்போது அந்தப் பண்டத்தைச் செய்த மனைவி அல்லது மற்றவர்கள் கையில் திறமை / கைமணம்  இல்லையா?
 

                                                    
 
அப்படி எல்லாம் ஒன்றுமில்லை.  சொல்லப் போனால் இப்போது செய்யப்பட்டிருக்கும் அதே பண்டம் முன்பை விட ருசியில் மேம்பட்டுக் கூட இருக்கலாம்.
 
அப்படி என்றால் இப்போது நன்றாயிருக்கிறது என்று சொல்ல நம் ஈகோ இடம் கொடுக்கவில்லையா?  மனைவிக்கு தலைக்கனம் ஏறிவிடும் என்று நினைக்கிறோமோ?  அப்படியும் இல்லை என்றுதான் தோன்றுகிறது.
 
பின் என்னதான் விஷயமாக இருக்கும்?

பழைய பாடல்களைக் கேட்கும்போது ஒரு சந்தோஷம் வருகிறது பார்த்தீர்களா?  ஏன்?  'அமைதியான நதியினிலே ஓடம்..'. என்று கேட்கும்போது நம்மை மறந்து விடுகிறோம்.  கண்கள் மங்கி ஒரு கனவுலகத்துக்குள் போய்விடுகிறோம்.
 

                                                                   
 
என்ன உலகம்?  நாம் அந்தப்  படம் வந்த காலத்துக்கோ அல்லது பாடலை  நாம் முதலில் கேட்ட அந்த இடத்துக்கோ நம் மனம் சென்று விடுகிறது. அந்த இளமைக் கால நினைவைத் தொலைக்க விரும்புவதில்லை நம் உள்மனம்.
 

                                                      
இதே கதைதான் சாப்பாட்டு விஷயத்திலும் நடக்கிறது என்று தோன்றுகிறது.  நாம் நமது சிறு பிராய நினைவுகளை விட்டு வர மறுப்பதுதான், அதை இழக்க / மறக்க விரும்பாததன் குறியீடுதான் "அந்த ருசி போல இது இல்லை" என்று நம்மைச் சொல்ல வைக்கிறது.
 

                                                     
 
அம்மாவின் மடியை மறக்க விரும்பாத மனம்.   இந்தச் சாக்கில் சிறு பிள்ளையாகவே இருக்க விரும்பும் மனம்.
 
இதுதான் காரணம்.  என்ன சொல்றீங்க?
 
அவ்ளோதான்!


தங்கமணிகளுக்குச் சமர்ப்பணம் என்றுதான் தலைப்பு வைக்க நினைத்தேன்.  அப்புறம் படிப்பவர்கள் இது மனைவியைச் சமாதானம் செய்யச் சொல்லப்படும் சாக்கு போக்கு என்று நினைத்துவிடக் கூடாதே என்று தலைப்பை மாற்றி விட்டேன்!


27 கருத்துகள்:

 1. நல்லா இல்லைன்னா....பேசாம நீங்களே உங்களுக்கு வேண்டியதைச் சமைச்சுச் சாப்பிடுங்கன்னு தங்கமணிகள் சொல்ல ஆரம்பிச்சாச்சு:-)

  பதிலளிநீக்கு
 2. ஹஹஹ பெரும்பான்மையான குடும்பங்களில்....னிகழும் நிகழ்வு...கேட்டிருக்கின்றோம்....ஏனோ இது எங்கள் இருவரது குடும்பங்களிலும் இல்லாமல் போனது
  துளசியின் வீட்டில் அவர் அப்படிச் சொல்வது இல்லை.

  கீதாவின் வீட்டில் கணவர் சொன்னாலும் கீதா உடனே மாமியாரிடம் கேட்டுச் தெரிந்து கொள்வது எப்படி செய்வது என்று....

  பதிலளிநீக்கு
 3. துளசி வீட்டில் ஏன் இல்லை என்றால்....துளசியின் வீட்டில் அவரது அக்காதான் சமையல், வீட்டைக் கவனித்துக் கொள்வது முழுவதும்.....லீவு நாட்களில் மட்டுமே வீடு. பள்ளி உள்ள நாட்களில் துளசி பாலக்காட்டில் தனிச் சமையல்...ஹிஹிஹி....

  பதிலளிநீக்கு
 4. நான் சமைக்கும் முன்பே கேட்டுடுவேன் கணவரிடம் //நீங்க இந்த உணவு சின்னதில் சாப்பிட்டிருக்கீங்களா என்று :) எல்லாம் ஒரு safety :)

  பதிலளிநீக்கு
 5. கொஞ்சம் வித்தியாசமாவே பதில் கொடுக்கிறேன். நிச்சயம் கைக்குக் கை சுவை மாறுபடும். அம்மா சமைச்சு அந்தச் சுவைக்குப் பழகி இருக்கும் நாக்கு முதலில் மனைவி என்னதான் ருசியாகச் சமைச்சாலும் அம்மா மாதிரி சமைக்கலைனு தான் சொல்லும். இப்போ எங்க மருமகளிடம் எங்க பையர் அடிக்கடி சொல்லும்வசனமாகி விட்டது. ஆனால் மருமகள் என்னைக் கேட்டுக்கொள்ளுவார். என்னென்ன அடிப்படைப் பொருட்கள் என்பதெல்லாம் கேட்டுத் தெரிந்து கொண்டு செய்வார். என்றாலும் ருசியில் கட்டாயம் மாறுபடும். :))))

  பதிலளிநீக்கு
 6. எனக்கும் கல்யாணம் ஆகிப் புகுந்த வீடு வந்த புதுசில் இந்த ஃபோபியோ இருந்தது. மாமியார் சமையலுக்கும் அம்மா சமையலுக்கும் வித்தியாசம் இருக்கிறது நல்லாவே தெரியும். ஆகவே ரங்க்ஸ் என் கிட்டே சொன்னால் உடனேயே நான் பதில் சொல்லிடுவேனே!"அதெப்படி? உங்க அம்மா மாதிரியே நான் சமைச்சால் காப்பிக் கேட் ஆகி விடாதா? அப்புறமா அவங்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரிய வேண்டாமா? அம்மா, அம்மா தான், மனைவி, மனைவிதான். என்னோட சமையல் இப்படித்தான்னு சொல்லி விட்டேன். :))))) அப்புறமா சாப்பிடக் கூட வாயைத் திறக்க மாட்டாங்கல்ல! :))))

  பதிலளிநீக்கு
 7. //அப்புறமா அவங்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரிய வேண்டாமா? //

  இந்த வரியில் சில வார்த்தைகள் விடுபட்டுப் போயிருக்கின்றன.

  "அப்புறமா அவங்க சமையலுக்கும், என் சமையலுக்கும் உள்ள வித்தியாசம் தெரிய வேண்டாமா?" அப்படினு வந்திருக்கணும். எப்படியோ டெலீட் ஆகி இருக்கு! :))))

  பதிலளிநீக்கு
 8. நாம் நமது சிறு பிராய நினைவுகளை விட்டு வர மறுப்பதுதான், அதை இழக்க / மறக்க விரும்பாததன் குறியீடுதான் "அந்த ருசி போல இது இல்லை" என்று நம்மைச் சொல்ல வைக்கிறது.//

  உண்மை தான்

  பதிலளிநீக்கு
 9. //அம்மாவின் மடியை மறக்க விரும்பாத மனம்.//

  சரியாகச் சொல்லியிருக்கீங்க. சில நினைவுகளை நாம் இழக்க விரும்புவதில்லை என்பது உண்மை.

  பதிலளிநீக்கு
 10. இளமைக் கால நினைவைத் தொலைக்க விரும்புவதில்லை நம் உள்மனம்.//

  உண்மைதான் அதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்.


  அம்மா கைமணம், கை மணம் தான்.
  என் மகளுக்கு இது பிடிக்கும், என் மகனுக்கு இது பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டே அவர்களுக்காக அந்த உணவில் அன்பை குழைத்து தரும் போது அது தனி சுவை தான்.

  ஆரம்பத்தில் நான் அம்மா, அத்தையிடம் கேட்டு கேட்டுதான் சமைத்தேன், ஆனால் அதை பாராட்டி, பாராட்டி நன்றாக சமைக்க வைத்து விட்டார் என் கணவர்.

  என் மகனும் என் மருமகளை பாராட்டி பாராட்டியே வித விதமாய் செய்ய வைத்து விட்டான்.

  உப்பு இல்லை என்றாலும், கொஞ்சம் உப்பு போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொல்லிப் பாருங்கள், அப்புறம் உணவில் தனி கவனம் சேர்ந்து சமைப்பார்கள், சமையல் சுவைக்கும்.

  இன்னொரு ரகசியம் தெரியுமா ? அம்மாவை மிகவும் நேசிக்கும் கணவர் மனைவியை மிகநேசிப்பார்.

  படங்கள் எல்லாம் அருமை.  பதிலளிநீக்கு
 11. இளமைக் கால நினைவைத் தொலைக்க விரும்புவதில்லை நம் உள்மனம்.//

  உண்மைதான் அதுவும் ஒரு காரணமாய் இருக்கலாம்.


  அம்மா கைமணம், கை மணம் தான்.
  என் மகளுக்கு இது பிடிக்கும், என் மகனுக்கு இது பிடிக்கும் என்று சொல்லிக் கொண்டே அவர்களுக்காக அந்த உணவில் அன்பை குழைத்து தரும் போது அது தனி சுவை தான்.

  ஆரம்பத்தில் நான் அம்மா, அத்தையிடம் கேட்டு கேட்டுதான் சமைத்தேன், ஆனால் அதை பாராட்டி, பாராட்டி நன்றாக சமைக்க வைத்து விட்டார் என் கணவர்.

  என் மகனும் என் மருமகளை பாராட்டி பாராட்டியே வித விதமாய் செய்ய வைத்து விட்டான்.

  உப்பு இல்லை என்றாலும், கொஞ்சம் உப்பு போட்டால் இன்னும் நன்றாக இருக்கும் என்று சொல்லிப் பாருங்கள், அப்புறம் உணவில் தனி கவனம் சேர்ந்து சமைப்பார்கள், சமையல் சுவைக்கும்.

  இன்னொரு ரகசியம் தெரியுமா ? அம்மாவை மிகவும் நேசிக்கும் கணவர் மனைவியை மிகநேசிப்பார்.

  படங்கள் எல்லாம் அருமை.  பதிலளிநீக்கு
 12. //நாம் நமது சிறு பிராய நினைவுகளை விட்டு வர மறுப்பதுதான், அதை இழக்க / மறக்க விரும்பாததன் குறியீடுதான் "அந்த ருசி போல இது இல்லை" என்று நம்மைச் சொல்ல வைக்கிறது.//

  அஹா.. அருமையான கண்டுபிடிப்பு.

  பதிலளிநீக்கு
 13. கைப்பக்குவம் என்று ஒன்றிருக்கிறது! வீட்டுக்கு வீடு சமையலின் ருசி மாறுபட்டு இருக்கும்! அதுபோலவே மனைவியின் சமையலுக்கும் அம்மாவின் சமையலுக்கும் கொஞ்சமாவது வித்தியாசம் இருக்கத்தான் செய்யும். ஆனால் இதை பெரிது படுத்தி சொல்லிக் காட்டவேண்டியதில்லை!

  பதிலளிநீக்கு
 14. நானும் பாத்துகிட்டு தான் இருக்கேன். கல்யாணம் ஆனதிலேந்து 40 வருஷம் நான் சமைச்சு கொட்டி இருக்கேன். இப்பதான் நீங்க ஆபீஸ் லேந்து ரிடையர் ஆனப்பறம் எனக்கு கொஞ்ச நாள் ரிடையர்மென்ட் கொடுங்க அப்படின்னு கேட்டு , நீங்க சமைச்சு கிட்டு இருக்கீக...

  ஆமாம். அது சரிதான். இந்த பதினாலு ஆண்டுகளாகத் தான் நான் சமைச்சு கிட்டு இருக்கேன். அதுக்கு முன்னாடி எல்லாம் உன் சமையல் தான். அதுக்கு என்ன இப்ப ?

  இல்ல ஒன்னு சொல்லணும் அப்படின்னு பார்த்தேன்.

  என்னாது ?

  எங்க அம்மா சமைப்பா பாருங்க...அந்த மாதிரி ஒரு நாளாச்சும் சமைப்பீன்களா அப்படின்னு தினமும் பார்த்து ஏமாந்து போறேங்க..

  .அப்படியா.. சார்..ஸ்ரீராம் சார். இங்க கத வேறங்க...

  சுப்பு தாத்தா மீனாட்சி பாட்டி சம்வாதம்

  பதிலளிநீக்கு
 15. அம்மாவின் சமையலில் அன்பு ஒரு சிட்டிகை கூடுதல்...

  பதிலளிநீக்கு
 16. முதலில் ,நம் நாக்கு ருசியை உணர்வது அம்மாவின் கைமணத்தில்தான்!
  ரெண்டுமே லட்டுதான் என்றாலும் முதல் லட்டின் ருசி அளவிற்கு இரண்டாவது லட்டு ருசிக்காது தானே :)

  பதிலளிநீக்கு
 17. இந்த வசனம் முக்கால்வாசி ஆண்கள் சொல்வதுதான். பெண்கள் ஏன் சொல்வதில்லை? அம்மா வீட்டில் எந்தப் பெண் சமையல்கட்டிற்குப் போயிருக்கிறாள்?

  நிற்க. நீங்கள் சொல்வதுபோல இளமையின் இனிமையான நினைவுகள் தான் காரணம். நல்ல அலசல்! கொறிக்க நன்றாக இருந்தது.

  பதிலளிநீக்கு
 18. ஸ்ரீராம் சார் ,

  திங்கக் கிழைமை அன்று ஈதோ தின்பதற்கு புதிதாக இருக்கும் என்று வந்தால் எல்லோருமாக சேர்ந்து அவல் அல்லவா மென்று கொண்டிருக்கிறார்கள். அம்மா சமையலா மனைவி சமையலா என்று பட்டி மன்றமே நடந்து கொண்டிருக்கிறதே. சுவையான பதிவு .

  பதிலளிநீக்கு
 19. அம்மாவின் கைப்பக்குவத்தில் சாப்பிட்டுப் பழகி மனைவியின் மாறுபட்ட ருசியை சுவைக்கும் போது மாற்றம் தெரிவதே எங்க அம்மா போல் சமைக்க முடியாது என்பது...

  அண்ணா அவலை அள்ளிப் போட்டுட்டீங்க எல்லாரும் மென்று கொண்டிருக்கிறோம்....

  பதிலளிநீக்கு
 20. //அம்மா வீட்டில் எந்தப் பெண் சமையல்கட்டிற்குப் போயிருக்கிறாள்?//
  அம்மா வீட்டில் அம்மா ஊரில் இருக்கும்போதே சமைத்த அனுபவம் நிறைய உண்டு ரஞ்சனி. அதுவும் பள்ளிக்குப் போறச்சே சமைச்சு வைச்சுட்டுத் தான் போகணும். அப்பாவோட கண்டிஷன்! இல்லைனா பள்ளிக்கே போக முடியாது! :)))))

  பதிலளிநீக்கு
 21. அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள். பின்னூட்டங்களும் சுவாரஸ்யம்.

  பதிலளிநீக்கு
 22. வாங்க துளசி மேடம்...

  அதெல்லாம் அப்படி தங்கமணிகள் சொல்லாமலே சமைப்போமாக்கும். :))))

  வாங்க துளசிதரன்ஜி, கீதா மேடம்.. நீங்கள் சொல்வது அபூர்வ சமாச்சாரமாக்கும்! துளசிஜி சூப்பரா சமைப்பார்னு சொல்லுங்க!

  வாங்க ஏஞ்ஜலின்... சின்ன வயசுல சாப்பிடாதது மட்டும்தான் சமைப்பீங்களா? :))))

  வாங்க கீதா மேடம்.. அம்மா சமையலின் கைமணம் / கைப்பக்குவம் பற்றி(யும்) முன்னர் நான் போட்ட பதிவு நினைவிருக்கும் என்று நினைக்கிறேன்! உப்பு, புளி, காரத்தோடு அன்பும் பல ஸ்பூன்கள் சேர்ப்பதாலேயே ருசிக்கிறது என்பதும், மனிதன் ருசிக்கும் முதல் சுவை கைமணம் எழுதி இருந்தேன். First is always Best இல்லையா! சில மருமகள்கள் உங்க வீட்டு வழக்கம் அப்படி இருக்கலாம், இதையும் டேஸ்ட் பண்ணிப் பாருங்க என்றும் சொல்வார்கள்! (எங்கள் வீட்டில் இல்லை)

  நன்றி உமையாள் காயத்ரி. சமையலில் கலக்கும் உங்களிடமிருந்து இன்னும் எதிர்பார்த்தேன்! :)))

  நன்றி பழனி.கந்தசாமி ஸார்.

  வாங்க கோமதி அரசு மேடம்.. அத்தையைக் கேட்டுக் கேட்டு சமைத்து இரண்டு மூன்று முறை பழக்கி விட்டால் போதும். அப்புறம் இந்தச் சுவைக்கும் நாக்கு பழகி விடும்! அம்மாவை நேசிக்கும் கணவர் மனைவியை மிக நேசிப்பார் என்பது உண்மைதான். அதேசமயம், பொசஸிவ் அம்மாவாக இருந்தால் வரும் சங்கடங்களும் உண்டு. அப்படி சில குடும்பங்களை அறிவேன். படங்கள் கூகிளாண்டவர் அருள்!

  வாங்க ராம்வி மேடம்... கலாய்க்கறீங்களா, நிஜமா சொல்றீங்களா என்று புரியவில்லை! :P ஆனாலும் நன்றிகள்!

  வாங்க 'தளிர்' சுரேஷ்... நீங்கள் சொல்லி இருக்கும் அதே வரிகளைக் கொண்டுதான் தோசை புராணம் பதிவு தொடங்கினேன் என்பதால் அப்படியே ஒத்துக் கொள்கிறேன்.

  சுப்புதாத்தா... உண்மையில் அந்த மறுபக்கம் பற்றியும் எழுத நினைத்திருந்தேன். அப்புறம் மறந்து விட்டது!

  வாங்க DD... நீங்க சொல்றது உண்மைதான்!

  வாங்க பகவான்ஜி... உண்மை நீங்கள் சொல்வது.. நன்றி.

  வாங்க ரஞ்சனி மேடம்... பெண்களுக்கும் அம்மாவின் ருசி நாக்கில் நினைவு இருக்காமல் இருக்குமா? அவர்களுக்கும் இதே feel இருக்கும்! இன்றைய வலைச்சரத்தில் நீங்கள் அவசரச் சமையலாய்ச் சமைப்பேன் என்று சொல்லி இருந்தது எனக்கு சற்றே ஏமாற்றம்! :))))

  நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் மேடம்... ரசித்து விட்டு மட்டும் போய்விட்டீர்களே... நீங்கள் உங்கள் அனுபவங்களைச் சொல்லவில்லையே..... :))

  நன்றி பரிவை குமார். மனைவியின் சமையலை ரசிக்க மாட்டோம் என்று அர்த்தமா என்ன? கச்ட்டாயம் அதுவும் பிடிக்கும். ஆனால் நடுநடுவில் இந்த வசனம் விட்டுக் கொண்டே இருப்போம்!!

  கீதா மேடம்... ஆண்களே அந்தக் காலத்தில் சிறுவயதில் சமைப்பார்கள். நீங்கள் சமைத்திருக்க மாட்டீர்களா என்ன? :))))

  நன்றி ராமலக்ஷ்மி.

  நன்றி மாதேவி.

  பதிலளிநீக்கு
 23. சிறு வயதிலேயே, எங்கள் வீட்டிலேயே அம்மா, பெரியம்மா, அத்தைப் பாட்டி, பாட்டி என்று பலர் கைமணத்தில் மாறி மாறி சாப்பிட்டிருக்கிறேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கைமணம்.

  ஆனாலும் சும்மா வம்பிழுப்பதற்கென்றே மனைவியிடம் அம்மா செய்யற மாதிரி இல்லை என்று சொல்வதுண்டு! :)

  பதிலளிநீக்கு
 24. சிறுவயதின் நினைவுகள்தான் இதன் காரணம் என்பது சரியே. இன்னொரு காரணம் நமது நாக்குக்கு change management செய்ய அதிக நாட்கள் / வருடங்கள் ஆகிறது என்பது.

  பதிலளிநீக்கு
 25. வணக்கம்


  இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது வாழ்த்துக்கள் பார்வையிட முகவரி இதோ.
  http://blogintamil.blogspot.com/2015/02/blog-post_15.html?showComment=1423961203036#c2363193222159569920

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 26. சாத்தியக் கூறுகள் இல்லை. எங்கள் அம்மா ,அப்பாவைக் கவனித்துக் கூட இருந்து செய்வார். நானும் கணவரும் சாப்பிடும்போது சாப்பாடு மேஜைக்கே வந்துவி டும். செல்ப் சர்வீஸ்தான். இங்கேயோ மகன் வரும் நேரம் மருமகளும் பேத்தியும் தூங்கவே போய்விடுவார்கள். சனி ஞாயிறும் மட்டும் சேர்ந்து உண்பார்கள். மகன் மருமகள் சமையலை விரும்பியே சாப்பிடுகிறார். நல்ல பதிவு. நல்ல பின்னு ட்டங்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!