சனி, 14 பிப்ரவரி, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.1)  நான் யாருக்கும் சளைத்தவள் இல்லை! பூமாரி.
 

2) சமீபத்தில் வெங்கட் நாகராஜ் இதே போன்ற ஒரு பாஸிடிவ் மனிதரைப் பற்றி எழுதி இருந்தார்.  அதே போல வடநாட்டில் ஒருவர்.  ஸ்ரீ ஹர்ஜிந்தர் சிங்.
 


3)  மின்சாரம் இல்லாத தெருவோரக் குழந்தைகள் பலர் அதனாலேயே கல்வியைத் தொடர முடியாத நிலையம் டெல்லியில்.  சுமார் 15 சதவிகிதம் இது மாதிரி குழந்தைகள் இருக்கின்றனராம்.  இவர்களுக்கு உதவ வித்தியாசமாக யோசித்திருக்கிறார்கள்.  ஆனாலும் இதன் விலை என்ன, எல்லாக் குழந்தைகளுக்கும் இது எப்படிப் போய்ச்சேரும் என்று தெரியவில்லை. சோலார் பானல் மற்றும் எல் ஈ டி விளக்குகளை வைத்துச் செய்யப்படும் ஸ்கூல் பை.
 


4) பரஸ்பர உதவி.  கோவையில் ஒரு சேவை.
 


5) மரணத்தின் வாயிலில் அனாதைகளாய் அலைந்து திரியும் முதியவர்களுக்கும், மனநிலை பாதிக்கப் பட்டவர்களுக்கும் வைத்தியம் பார்க்கும், பராமரிக்கும் திண்டுக்கல் பாதிரியார்.
 


6) ஃ பேஸ்புக், இணையம் என்று பொழுதைக் கழிக்காமல் உபயோகமான வகையில் பொழுதுகளைச் செலவழிக்கும் மதுரை இளைஞர்கள்.
 


7)  இந்த மாணவன் உருவாக்கியிருப்பது பின்னால் பயனுக்கு வருமா, தெரியாது.  மாணவனின் அறிவின் மேம்பாட்டை நமக்கு உணர்த்துகிறது.  திறமையான மாணவன் என்று அம்மாநில முதல்வரால் அடையாளம் காணப்பட்டு, தன்னுடைய மேல் படிப்புக்கு வழியும் செய்து கொண்டிருக்கிறான்.  உத்தர பிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள காய்தி என்ற கிராமத்தை சேர்ந்த அப்துல் சமது.
 
8) 
முன்ன மாதிரி இல்லை!   
ஈரோடு மாவட்டம், கோபி தாலுகாவிற்கு உட்பட்ட கோசனம், 'அ' கிராமத்தில், சந்திரகாந்தா என்ற வி.ஏ.ஓ.,வும், கோசனம், 'ஆ' கிராமத்தில், கிருஷ்ணன் என்ற வி.ஏ.ஓ.,வும் மக்களை அலைய வைக்காத முன்மாதிரி அதிகாரிகள்.  இப்படியே தொடர வாழ்த்துகள்.
 


9)  வித்தியாசமான மணிகர் பசுபதினாதன்.  இவரது தந்தையான சுதந்திரபோராட்ட தியாகி அர்த்நாரி நாட்டின் நலனிற்கு நாங்கள் உழைத்தோம் ஆனால் நீ உனக்காக மட்டுமே உழைக்கிறாய் உன் உழைப்பு கொஞ்சமாவது சமுதாயத்திற்கு பயன்படவேண்டும் என்று சொல்லிவிட்டு மறைந்துவிட்டார். "சினிமா இயக்குனர் சசி தோல்விகளால் துவண்டு போய் இனி சினிமாவே வேண்டாம் என்று முடிவு செய்து சேலம் பக்கம் வந்தபோது நான் எழுதிப்போட்டிருந்த 'ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம், ஒவ்வொரு நொடியும் துணிந்தால் சாதனையாளராக வாழ்ந்துவிடலாம்' என்ற வார்த்தையை படித்துவிட்டு தனது முடிவை மாற்றிக்கொண்டு மீண்டும் சினிமாவில் சாதித்தார் என்று கேள்விப்பட்டேன்,பெருமையாக இருந்தது."  என்கிறார்.
 


10)  உலக நன்மைக்காகப் பசுமைச் சூழலை வளர்க்க விரும்பும்  மின்வாரிய கடைநிலை ஊழியர் பாஸிடிவ் ராமகிருஷ்ணன்.
 


11)  ஆஷா என்றால் நம்பிக்கை என்று பொருள்.  தங்கள் கிராமத்துக் குழந்தைகளின் எதிர்காலத்தை இவர் குழு போராடிப் பாதுகாத்ததை அவர்கள்தான் யாரும் பாராட்டவில்லை,  நாம் பாராட்டுவோம் வாருங்கள்.  வீராங்கனைகள்.
 12) பொறியியல் படித்த காவலர்.  அவர் கண்டு பிடித்த கருவி.  திருட்டைத் தடுக்கவேண்டும் என்னும் அவரது முயற்சி பாராட்டப்பட வேண்டியது.  பாரத்.
 


13)  'யாம் பட்ட கஷ்டம் படக்கூடாது இந்தப் பிள்ளைகள்'...  HOPE அமோல்.

 

11 கருத்துகள்:

 1. நம்பிக்கை தரும் நற்செயல்கள்! ஆஷா குழுவினருக்கும் மற்றவர்களுக்கும் நம் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
 2. ராமகிருஷ்ணன் அவர்கள் சிறப்பு... மற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்... நன்றி...

  பதிலளிநீக்கு
 3. வணக்கம்
  ஐயா
  எல்லாம் தன்நம்பிகை நட்சத்திரங்கள்... சிறப்பாக தொகுத்து வழங்கியமைக்கு நன்றி ஐயா.த.ம 1
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
 4. எல்லாமே அருமை தான் என்றாலும் நல்லெண்ணங்களையும் நற்சிந்த‌னைகளையும் ஆயிரக்கணக்கானவர்கள் மனதில் தினமும் பதிய வைக்கும் பசுபதிநாதன் தனித்து நிற்கிறார். மதுரை இளைஞர் படை எதிர்கால சமுதாயம் மீது நம்பிக்கை எழ வைக்கிறது!

  பதிலளிநீக்கு
 5. சிறப்பான செய்திகள்.வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 6. அனைத்தும் சிறப்பான செய்திகள்... அருமை.

  பதிலளிநீக்கு
 7. தாங்கள் சாதிக்கிறோம் என்று தெரியாமலேயே பெரும் சாதனைகளைச் செய்யும் சாதனையாளர்களுக்கு என் இனிய வாழ்த்துகள். வாழ்க்கையில் சோர்ந்திருக்கும் பலருக்கும் முன்மாதிரியாக விளங்கும் அற்புத மனிதர்களை அறிமுகப்படுத்தும் தங்களுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 8. நம்பிக்கை தரும் நற்செயல்கள்! வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு
 9. எல்லோருமே மனதில் நம்பிக்கை ஊட்டி விட்டனர்.

  பதிலளிநீக்கு
 10. தன்னம்பிக்கை மனிதர்கள்.....

  என் வலைப்பூவில் வந்த விஷயம் பற்றியும் இங்கே குறிப்பிட்டமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!