சனி, 21 மார்ச், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - .கடந்த வாரம்.1) நிர்பயமாகப் போராடத் துணிந்த டெல்லி பெண்.  "உங்களை நீங்களே காத்துக் கொள்ளுங்கள்.  யாரும் உதவ மாட்டார்கள்" என்கிறார்.
 

 
2) பாராட்டப்படவேண்டிய அதிகாரிகள்.  தமிழகத்தில், பத்து டவுன்பஞ்சாயத்தில் மட்டுமே, மக்கும் குப்பையில் இருந்து மண்புழு மற்றும் இயற்கை உரம் தயாரிக்கும் பணி நடக்கிறது. அதில், அதிகப்படியான உற்பத்தி மற்றும் விற்பனையில், ப.வேலூர் முதலிடத்தில் உள்ளது. மாதம் தோறும், இயற்கை மற்றும் மண்புழு உரம், 1.50 டன் அளவிற்கு உற்பத்தி செய்யப்பட்டு, லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையோடு விற்பனையாகிறது.
 


 
3)  சம்பளம்  வாங்கும் வேலையாய் இருந்தாலும் அர்ப்பணிப்புணர்வுடன் செய்ய வேண்டும்.  திருமதி சுசீலா போல.
 

 
4) காவ்யா, வித்யா.  கண்ணூர்ப் பெண்கள். புதுவைப் பல்கலைக்கழக மாணவிகள்.  ரேகிங் செய்ய முயன்ற சீனியர் மாணவனை எதிர்த்துப் புகார் கொடுத்தால், 'என்னால் நீ பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டாய்' என்று செய்தி பரப்புவேன் என்ற  அவனைப்பற்றிக் கல்லூரி நிர்வாகத்திடம் புகார் கொடுத்து,  அங்கு பலன் எதுவும் இல்லாமல் போக, நீதிமன்றத்தை நாடி, அங்கும் நீதிபதி கல்லூரி நிர்வாகத்தின் பக்கம் நின்று இந்த மாணவிகளை மன்னிப்புக் கடிதம் எழுதித் தரச் சொல்லி வற்புறுத்த, மறுபடியும் இவர்கள் நீதி மன்றத்தின் உதவியை நாட,  நீதிபதி (தனி) ராமசுப்ரமணியம் நியாயத்தை நிலை நாட்ட முயற்சித்திருக்கிறார்.  சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையிலும்,  செமஸ்டர் தேர்வுகளை எழுத முடியாத நிலையிலும்,  'தவறு செய்யாத நிலையில் மன்னிப்புக் கேட்க மாட்டேன்' என்று நிமிர்ந்து நின்ற இந்த இரு பெண்களுக்கும், நீதிபதி ராமசுப்ரமணித்துக்கும் பாராட்டுகள்.  (விகடன்)
 

 
 

 
6)  நட்பு.    இது வெளி நாட்டு பாஸிட்டிவ்!
 


 
 


8) பலரது உயிரைக் காப்பாற்றிய 9 வயது சித்தேஷ். 

9) பணம் கொட்டும் ரப்பர் விளைந்த, 1.45 ஏக்கர் நிலத்தை, பி.எம்ஜோஸ் மற்றும் அவரது அம்மா மரியம்மா மேத்யூ தான், எங்கள் பள்ளிக்காக இலவசமாகவே கொடுத்து உதவினர். அத்துடன், மாணவர்களுக்கு இன்னமும் உதவி செய்கின்றனர். சபாஷ் மனோகரன்.

 

 
10) பாராட்டப்பட வேண்டிய அமைப்பு.
 
 

 
 
 

 
 
 

 
13)  அமுலுக்கு வந்தால் இது ஒரு நல்ல செய்திதான்.
 
 

 
14)  சீன பாஸிட்டிவ்!  படிப்பவர்களுக்கு ஊக்கம் தரும் செய்தி.  இந்தப் பக்கத்தில் இரண்டாவது செய்தியைப் படியுங்கள்  ரியல் ஹீரோஸ்!
 

 
15) நம்மைப் பற்றிய பிறரின் கணிப்புகள் எப்போதுமே சரியாய் இருப்பதில்லை.  நம் பலம் நமக்குத் தெரியவேண்டும். V. R. ஃபெரோஸ் போல.
 

 
16) விளையும் பயிர்.  உன் எண்ணத்துக்குப் பாராட்டுகள் பாவ்யா.
 
 

10 கருத்துகள்:


 1. அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

  பதிலளிநீக்கு
 2. நல்ல மனங்கள்! நற்பணிகள்!

  பகிர்வு தொடரட்டும்!

  பதிலளிநீக்கு
 3. இப்படி முத்து முத்தா எப்படித்தான் தேடிக் கோர்க்கிறீர்களோ?

  பதிலளிநீக்கு
 4. இந்த மாதிரியான பாசிடிவ் செய்திகளைப்படிக்கும் போது பாராட்டு என்பது தவிர வேறெதுவும் எழுத முடிவதில்லை.ஆகவே இம்மாதிரிப் பதிவுகளுக்குப் பின்னூட்டம் இடுவது சிரமம்

  பதிலளிநீக்கு
 5. குழந்தையின் வெளியுலகப் பிரவேசத்துக்காக ஒரு தாய்க்கு உறுதுணையாக இருக்கும் அந்தச் சேவையை 27 ஆண்டுகளாகச் செய்துவருகிறார் செவிலியர் சுசீலா.
  வணக்கத்திற்குரியவர். வாழ்க வளமுடன்.


  //பெண்மையை மதிக்கும் ஆண், பெண்களைக் காட்டிலும் மேலானவர். சில சமயங்களில் பெண்ணுக்கு எதிரியாகப் பெண்களே மாறி நிற்கும் ஒவ்வாமையை ஒழிக்க வேண்டும்.//

  செவிலியர் சுசீலா அருமையாக சொன்னார்கள்.
  அவர் லட்சிய கிராமசேவை பணி வாழ்க!

  காவ்யா, விதயா துணிச்சலுக்கு பாராட்டுக்கள்.

  தங்களது வீட்டின் ஒருபகுதியைச் சரணாலயமாக மாற்றிய சந்திரசேகரன் - கீதா தம்பதிகளுக்கு வாழ்த்துக்கள்.

  அனைவருக்கும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.
  நல்ல செய்திகளை, நல்ல மனிதர்களை தேடி தந்த உங்களுக்கும் வாழ்த்துக்கள்.  பதிலளிநீக்கு
 6. நம்பிக்கை ஊட்டும் செய்திகளுக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
 7. /பெண்மையை மதிக்கும் ஆண், பெண்களைக் காட்டிலும் மேலானவர். சில சமயங்களில் பெண்ணுக்கு எதிரியாகப் பெண்களே மாறி நிற்கும் ஒவ்வாமையை ஒழிக்க வேண்டும்.//
  செவிலி சுசீலா வாழ்க! உண்மையான வார்த்தைகள்! அவரது அருமையான பணி தொடர வாழ்த்துக்கள்!

  தங்கள் வளம் கொழிக்கும் ரப்பர் தோட்டத்தை பள்ளிக்குக் கொடுத்து உதவிய பி.எம்ஜோஸ் மற்றும் அவரது அம்மா மரியம்மா மேத்யூ அவர்களுக்கும் பள்ளியை உரு மாற்றிய மனோகரன் அவர்களுக்கும் அதே போன்று தங்களது வீட்டின் ஒருபகுதியைச் சரணாலயமாக மாற்றிய சந்திரசேகரன் - கீதா தம்பதிகளுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
  சீனாவில் மரம் நடும் ஹீரோசுக்கும், ரியல் ஹீரோசுக்கும் பாராட்டுக்கள்...அருமை...

  பாவ்யா இப்போதே இப்படி இருப்பது எதிர்காலத்திலும் தொடர வாழ்த்துக்கள்.
  அந்த வெளிநாட்டு நட்பு மனதைத் தொட்டது.

  லாஸ்ட் பட் நாட் தெ லீஸ்ட்....கண்ணூர் பெண்கள் காவியா, வித்யா போன்றவர்களுக்கு அந்த டெல்லிப் பெண் சொல்லுவதுதான் ...பெண்கள் தற்காப்புக் கலைகளைக் கற்றுக் கொண்டு தங்களைக் காத்துக் கொள்ளும் தைரியமும் இருந்தால் எதற்கு ஒரு தினம்?!!

  பதிலளிநீக்கு
 8. நம்பிக்கை தரும் பாசிடிவ் செய்திகளுக்கு நன்றி சார்

  பதிலளிநீக்கு
 9. நம்பிக்கையூட்டும் செய்திகள்.
  அனைவருக்கும் பாராட்டுகள். அதிலும் சிறுவர்களின் செயல்கள் உண்மையிலேயே மெய்சிலிர்க்க வைக்கிறது.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!