சனி, 7 மார்ச், 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.1) பாராட்டப்பட வேண்டியவர்கள்.  ஆடிட்டராக பணியாற்றும் ஞானசுந்தரம், பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரி பேராசிரியர் கனகராஜ், தமிழக அரசின் கைத்தறித்துறை உதவி இயக்குனர் முத்துச்சாமி, விவசாயி சிவராஜ் உள்ளிட்ட, முன்னாள் மாணவர்கள், 250 பேர் ஒன்றிணைந்து, ? லட்சம் ரூபாய் நன்கொடையாக வழங்கினர். 
 

 
2) நம் நாட்டின் மதிப்பைக் காக்க மீனாட்சி சுந்தரம் எடுத்திருக்கும் முயற்சி என்ன தெரியுமா?  மேலும், கர்ப்பிணிகளுக்கு இலவசம்,  மாணவ, மாணவியருக்கு இலவசம்...  இரவினில் அதிகக் கட்டணம் இல்லை... 
 

 
3) நமக்கு நாமே..  மாடியில் ஆர்கானிக் தோட்டம்!  பிரேமா - பிரேம்குமார் தம்பதிகள்.
 


 
4) 'மின் பற்றாக்குறையும், மின்தடையும் இப்போது இல்லை. ஏழு ஏக்கர் நிலத்தில் வெங்காயம், மஞ்சள், சோளம், தக்காளி சாகுபடி செய்து வருகிறேன். ஐந்து லட்சம் ரூபாய் செலவிலான இத்திட்டத்துக்கு, 1.17 லட்சம் ரூபாய் பங்கு தொகையாக செலுத்தினேன். ஐந்து குதிரைத்திறன் சக்தி கொண்ட சோலார் மின் மோட்டார் வாயிலாக 7 குதிரைத்திறன் அளவுக்கு தண்ணீர் கிடைப்பது திருப்தியாக உள்ளது,'' என்றார் கதிரேசன் 
 

 
5)  அடுத்தவர் சொத்துக்கு ஆசைப் படாத உர வியாபாரி ராம்பாபு (66)
 

 
6)  வேலை செய்தால் சுமன் ஜெய்ன் போல வேலை செய்யணும்!
 

 
7)  அக்ஷய் கௌஷிக்கின் இந்த முயற்சி வெற்றி பெறுகிறதோ இல்லையோ,  அவர் பரிசு வாங்குவாரோ மாட்டாரோ..  ஆனால் வீண் கவனக் கலைப்புகளில் சிக்காமல் பயனுள்ள முறையில் மூளையைச் செலவழித்திருக்கும் இவர் போன்ற இளைஞர்கள்தான் இந்தியாவின் பலம்!
 


8) சாதாரண சாதனை அல்ல கல்பனா செய்திருப்பது.  செல்லும் இடம்தோறும் இதே சேவையாய்...
 

9) இந்த பிசினஸ், எனக்கு மட்டுமல்ல; என்னை நம்பி இந்த வேலையில் இறங்கிய எண்ணற்ற கிராமப் பெண்களின் வாழ்க்கையிலும் விளக்கேற்ற ஆரம்பித்தது. அதுமட்டுமல்ல, கொண்டாட ஆளில்லாமல், நலிந்த நிலையில் இருந்த பல இந்தியத் தையல் கலைகள், உயிர் பெற ஆரம்பித்தன.... ரிதுகுமார்:

 

15 கருத்துகள்:

 1. காலையில் பாசிடிவ் செய்திகளை படித்ததும் ஒரு புத்துணர்வு உண்டாகிறது. இந்த சாதனையாளர்களுக்கு வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
 2. அனைத்து செய்திகளும் சாதனையாளர்களை குறிப்பிடுகிறது. கஷ்டப்பட்டு சாதித்த அனைவருக்கும் வாழ்த்துக்கள்.மதுரை ஆட்டோஓட்டி மீனாட்சி சுந்தரம் வாழ்வில் மகிழ்ச்சி அலை வர வாழ்த்துக்கள்.
  கதிரேசன் அவர்கள் கதிரவனின் ஒளியில் மின்சாரம் தயாரித்து மின் பற்றாக்குறையை போக்கியது அருமை.

  பதிலளிநீக்கு
 3. கதிரேசன் அவர்களின் முயற்சி, ராம்பாபு அவர்களின் நேர்மை, அக்ஷய் கௌஷிக்கின் ஆர்வம் என அனைத்தும் சிறப்பு...

  பதிலளிநீக்கு
 4. உரம் விற்கும் வணிகரின் செயல் , மின்வெட்டை நீக்கிய விவசாயி இது போன்ற குறிப்பிட்டுள்ள மற்றவர்களுக்கும் பாராட்டு!

  பதிலளிநீக்கு
 5. பாஸிடிவ் செய்திகள் உற்சாகத்தையும் ஊக்கத்தையும் கொடுக்கிறது.

  வாழ்த்துக்கள்.

  பதிலளிநீக்கு

 6. பாராட்டப்படவேண்டியவர்கள் எமது வாழ்த்துகளும்.

  தங்களது தளத்தில் இணைத்துக்கொண்டேன் நண்பரே...
  கில்லர்ஜி

  பதிலளிநீக்கு
 7. சமுதாயத்திற்கு நல்லது செய்யும் இவர்கள் எல்லோருக்கும் எங்கள் பாராட்டுக்கள்! வாழ்த்துக்கள்! முன்னாள் மாணவர்களின் முயற்சி,ஆட்டோ ஓட்டும் மீனாட்சி சுந்தரம் முதல் பெண்களின் வாழ்விற்காக உதவும் ரீது குமார் வரை....எல்லோருக்கும் வாழ்த்துக்கள்! பாராட்டப்பட வேண்டியவர்கள்!

  பதிலளிநீக்கு
 8. பாசிட்டிவ் தகவல்கள்....

  பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.

  பதிலளிநீக்கு
 9. மாடித் தோட்டம் நம் மூத்த (?) பதிவர்களில் ஒருவரான நுனிப்புல் உஷா கூட அருமையாகப் போட்டிருக்கிறார். துளசியின் பதிவுகளில் படங்களைக் காணலாம். முகநூலிலும் உஷாவே பகிர்ந்திருக்கிறார். எனக்கும் இந்த மாடித் தோட்டத்தில் ரொம்ப விருப்பம் உண்டு. ஆனால் அம்பத்தூரில் இருந்தவரை ரங்க்ஸ் அனுமதி கொடுக்கவில்லை. தண்ணீர் கூரை வழியாக ஒழுகுமோனு பயம் அவருக்கு. இங்கே அவ்வளவா முடியாது. ஆசை நிராசையாப் போனது தான் மிச்சம்.

  பதிலளிநீக்கு
 10. அனைத்துச் சாதனையாளர்களுக்கும் தேடித்தேடி சாதனைகளை ஆவணமாக்கும் உங்களுக்கும் வாழ்த்துகள். அனைத்தையும் தனியாகத் தொகுத்து மின்னூலாக்குங்கள்.

  பதிலளிநீக்கு
 11. இவர்கள் அநௌய்வரும் பாராட்டப்பட வேண்டியவர்கள்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!