செவ்வாய், 24 மார்ச், 2015

அலுவலக அனுபவங்கள் : ஆடிட் ஆச்சர்யம்.
சாதாரணமாக ஆடிட் அனுபவங்களே ஆயாசத்தையும் வெறுப்பையும் தரும்!  ஆனால் இந்தச் சம்பவம் நடந்த வருடம் ஆடிட் கஷ்டமில்லாமல் முடிந்தது மட்டுமில்லாமல்,  நானும் என் நண்பர் தனாவும் என்ன சொன்னாலும் அதை அவர்கள் கேட்டது கண்டு மற்றவர்களுக்கு ஆச்சர்யம். ஏன், எங்களுக்கே நம்ப முடியவில்லை.
 
என்ன நடந்தது என்றால்...

ஆடிட் வரப்போகிறார்கள் என்னும்போது  ஆடிட் குழுவின் தலைமை அதிகாரி அவர்கள் வருவதற்கு ஒரு வாரம் முன்பு தொலைபேசினார்.  மலை வாசஸ்தலம் என்பதால் இங்கு வருவதற்கு எப்பொழுதுமே மக்கள் ஆர்வம் காட்டுவார்கள்.  

"அஃபீஷியலா வந்தாலும் இந்த இடத்தைப் பார்க்கணும்னு வீட்டுல பிரியப்படறாங்க.  அதனால் அவங்களையும் அழைச்சிக்கிட்டு வர்றேன்.  எங்க ரெண்டு பேருக்கு மட்டும் தனியா எங்காவது ஒரு ரூம் புக் பண்ணிடுங்க.  மிச்ச பேரு அஸ் யூஷுவல் ஆபீசிலேயே தங்கிப்பாங்க"

"சரி ஸார்"

நல்ல இடத்தில் அவர்களுக்கு அவர் சொன்ன மாதிரியே காட்டேஜ் புக் பண்ணித் தந்தோம்.  அவருக்கும் மகிழ்ச்சி.  எனினும் ரொம்ப ஒன்றும் காட்டிக் கொள்ளவில்லை.  சற்றே கடுகடு முகத்துடன் மிடுக்காக ஏற்றுக் கொண்டார்.

இரண்டாவது நாள் காலை அவரை அழைத்துவர ஜீப்புடன் அவர் தங்கியிருந்த இடத்துக்குச் சென்றோம்.  டிரைவரைக் காத்திருக்கச் சொல்லி விட்டு,  அவர் அறைக்குச் சென்றோம். 

எங்களைக் காத்திருக்கச் சொல்லி விட்டு அவர் குளிக்கச் சென்றார்.  அவர் மனைவி உள்ளே இருந்தார்..

டெலிபோன் மணி அடித்தது.  அவர் குளித்துக் கொண்டிருந்ததால் அவர் மனைவி வந்து எடுப்பார் என்று எதிர்பார்த்தோம்.  அவர் அசையவில்லை. ஃபோன் விட்டு விட்டு மறுபடி அடித்தது.  உள்ளிருந்து அவர் ஃபோனை எடுக்கச் சொல்லி எங்களுக்குக் குரல் கொடுத்தார்.
 
 

தனா ஃபோனை எடுத்தார்.

"---------------"
 
"ஆமாம்."

"-------------------"
 
"குளிக்கிறாருங்க.."

"----------------------"
 
"அஞ்சு நிமிஷம் கழிச்சு மறுபடி பண்றீங்களா"

"-----------------------"
 
"நான் அவர் ஆடிட் பண்ண வந்திருக்கற ஆபீஸ் சூபரின்டெண்ட்ங்க.."
 
"----------------------------------------------------------------""
 
"இல்லைங்க..  அவங்கள்லாம் ஆபீஸ்ல தங்கி இருக்காங்க   ஸாரும் அவர் மிசஸும் மட்டும் இங்க தங்கி இருக்காங்க"

"----------------------------------------"
 
"ஆமாங்க...  உள்ள இருக்காங்க. கூப்பிடவா?"

"---------------------------------"
 
"சரிங்க.... நீங்க ஃபோன் பண்ணினீங்கன்னு ஸார்ட்ட சொல்லணும்.  அதானே?  சொல்றேங்க...நீங்க யாருன்னு சொல்லட்டும்?"

"----------------"
 

தனா ஃபோனை வைக்கும்போதே அவர் தலையைத் துவட்டியபடியே துண்டுடன் வந்தவர், "என்ன இவ்வளவு நீளமாப் பேசிகிட்டே இருந்தீங்க?  ரூம் செர்வீஸ் இல்லையா?" என்றார்.

"இல்லை ஸார்"  என்றார் தனா.

"அப்புறம் யாரு?" என்று சந்தேகமாகத் திரும்பி நின்று கேட்டார் அவர்.

தனா புன்முறுவலுடன் என்னை ஒருமுறை பார்த்தார். அப்புறம் உள்ளே ஒருமுறை பார்த்து விட்டு மெதுவான குரலில் சொன்னார்.  "உங்கள் மனைவி ஸார்!  மதுரைலேருந்து!"

"---------------------------------"
 
 
 
அந்த ஆடிட் சுலபமாக, அதிகக் கஷ்டமில்லாமல் ஏன் முடிந்தது என்று சொல்லவும் வேண்டுமோ!

20 கருத்துகள்:


 1. ஆடிட் பண்ண வந்தவர் ஆட்டம் போட்டார் போலயே.....ஹா ஹா ஹாாாாாாாாாாஹ்

  பதிலளிநீக்கு
 2. ஆடிட்டர் ஆடிட்டார்....
  ஹ ஹ ஹா!
  அருமை!

  பதிலளிநீக்கு
 3. உண்மை மனைவிக்கு தெரிந்த பின் ,அவர் எப்படி சந்தோசமாய் ஆடிட் செய்ய முடியும் ?மனைவி அவரை வாட்டி எடுத்திருப்பாரே :)

  பதிலளிநீக்கு
 4. நெஜமாவா? இப்படியும் நடப்பார்களா?

  பதிலளிநீக்கு
 5. ஹாஹாஹா! அவர் பாடு திண்டாட்டம்தான்!

  பதிலளிநீக்கு
 6. கதையை மிகவும் ரசித்தேன். தன்னிலையில் சொல்வதால் உண்மை போலவே இருந்தது. மெய்யாலுமா நடந்தது.?

  பதிலளிநீக்கு
 7. சீஃப் ஆடிட்டரை பலவிதங்களிலும் குளிப்பாட்டி மகிழ்விப்பது என்பது எங்குமே வெகு சகஜமாக நடப்பதுதான்.

  இவர் நிஜமாகவே குளித்துக் கும்மாளம் இட்டு உங்களிடம் வசமாக மாட்டியும் உள்ளார் என்பது சற்றே வியப்பாகவும் அதிசயமாகவும் உள்ளது.

  அதை தாங்கள் இங்கு பொடிவைத்து பகிர்ந்துள்ளது தான் அந்த ஆடிட்டர் செய்ததைவிட எனக்குப் படிக்க படு குஜாலாக உள்ளது.

  பாராட்டுக்கள்.

  பதிலளிநீக்கு
 8. வீட்டுக்கார அம்மாகிட்ட சொல்லி,
  ஆடிட்டருக்கே ஒரு ஆடிட் செய்யச் சொல்ல வேண்டும்

  பதிலளிநீக்கு
 9. ஆடாத ஆட்டமென்ன...ஆடிட்டரின் ஆட்டமென்ன....ஹஹஹஹ அப்ப மாட்டிக்கிட்டாரா.?

  ம்ம் பொதுவாக இந்த அஃபிஷியலாகச் செல்லும் ஆஃபீசர்கள் எல்லாருமே தங்கள் குடும்பத்தையும் / இரண்டாவது இது போன்று....அழைத்துச் சென்று அஃபிஷியல் கம் பெர்சனல் ட்ரிப்பாக, எல்லா செலவுகளையும் ஆஃபிஸ் தலையில் கட்டுவது மிகவும் மோசமான எதிக்ஸ். அப்படியே குடும்பத்தை அழைத்துச் சென்றாலும் யோக்கியவாங்களாக இருந்தால் தங்கள் தனிப்பட்டச் செலவுகளை ஆஃபீசின் தலையில் கட்ட மாட்டார்கள். அப்படி நேர்மையாக இருப்பவர்கள் மிக மிகச் சிலரே.....இங்குதான் ஒரு நிறுவனத்தின் தில்லு முல்லுக்கள் ஆரம்பிக்கின்றனவோ....

  பதிலளிநீக்கு
 10. ரசித்தேன் என்று சொல்வதை விடக் கடுப்படைந்தேன் என்பதே உண்மை! :) இப்படியெல்லாம் ஆண்கள் இருக்காங்களேனு ஆத்திரமா வருது. :(

  பதிலளிநீக்கு
 11. ஆண்டு தோறும் இப்படி ஆடிட் நடந்தா
  எவ்வளவு நல்லாயிருக்கும்!

  பதிலளிநீக்கு
 12. படித்துக்கொண்டு வரும்போதே, எங்கோ இடிக்குதேன்னு நினைச்சுக்கிட்டுத்தான் படித்தேன்.
  கடைசியில செமையா மாட்டிக்கிட்டாரே. அதனால தான் போனை அந்த பெண்மணி எடுக்கவில்லை போல.

  பதிலளிநீக்கு
 13. ஹா..ஹா.. உங்க ஆடிட் நல்லபடியாக முடிந்தது சரி.. அவருக்கு என்னவாயிற்று தெரிந்ததா??

  பதிலளிநீக்கு
 14. செம ஆட்டம்! நன்றி கில்லர்ஜி!


  ஆடி விழுந்துட்டார்! நன்றி ஊமைக் கனவுகள்.

  இதெல்லாம் அங்கு சகஜமாயிருந்திருக்கும் பகவான்ஜி! நன்றி!

  நன்றி ராமலக்ஷ்மி.

  நடந்ததே பழனி கந்தசாமி ஸார்!

  நன்றி 'தளிர்' சுரேஷ்.

  நன்றி ஜி எம் பி ஸார். கற்பனையும் கலந்து எழுதுவது வழக்கம்தான். ஆனால் ஊர், பெயர்களில் கற்பனை இருக்கலாம்! சம்பவத்தில் அல்ல!

  நன்றி வைகோ ஸார். இது மாதிரி லாட்டரி எப்போதாவதுதான் அடிக்கும்!

  வீட்டில் ஆடிட் அடிக்கடி நடந்து கொண்டுதானிருந்திருக்கும் கரந்தை ஜெயக்குமார் ஸார்!

  உண்மைதான் துளசிதரன்ஜி! நேர்மையைத் தேடித்தான் கண்டு பிடிக்க வேண்டும். ஆடிட் சம்பிரதாயங்கள்!

  நன்றி டிடி.

  கீதா மேடம்... கோபத்தை விடுங்கள். அவர் மாட்டிக் கொண்டதை ரசியுங்கள்!

  புலவர் ஐயா... அப்படி நடந்தா கொண்டாட்டம்தான்!

  வாங்க சொக்கன் சுப்பிரமணியம் ஸார்.. அந்தப் பெண்மணி உஷார் இல்லாமல் இருப்பாரா? ஆனாலும் தனாவையும் ஃபோனை எடுக்க விட்டிருக்கக் கூடாது!

  வாங்க ரமாரவி... ஆடிட்டால் எங்களுக்குக் கொஞ்சம் ரெகவரி... அவருக்கு முதுகில் பலவரி விழுந்திருக்கும்! ஹா...ஹா...ஹா...

  பதிலளிநீக்கு
 15. ஹா ஹா ஹா! பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டுக்கொண்டார்!

  பதிலளிநீக்கு

 16. அவர் அடிக்கடி மாட்டிக் கொள்கிறவராகவும் இருந்திருக்கக் கூடும் கலையரசி மேடம்!

  :))))  பதிலளிநீக்கு
 17. ஆடிட்டர் ஆடிட்டாராமே !
  அந்த சூப்பிரண்ட்டெண்டை போட்டுத் தாலிச்சிருப்பாரோ அந்த ஆடிட்டர் !
  மேலும் எனக்கொரு சந்தேகம் அந்த சூப்பிரண்டெண்டட் மேலே தான் !
  அவரே
  அரேஞ்ச் பண்ணிவிட்டு மாட்டீட்டுராண்ணு !
  எப்படியோ
  படிப்பதற்கும் இனிமை !
  ரசிப்பதற்கும் இனிமை !
  படித்தேன் ! ரச்த்தேன் ! இன்புற்றேன் !

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!