புதன், 4 மார்ச், 2015

"உங்களுக்கு பரிசு விழுந்திருக்கு......."


                                                                      Image result for phone conversation between two persons images


"ஹலோ.."

"சொல்லுங்க... யார் நீங்க?  உங்களுக்கு என்ன வேணும் மேடம்?"

"ஹலோ ஸார்..  வாழ்த்துகள் ஸார்!  உங்களுக்கு பரிசு விழுந்திருக்கு"

"எங்க விழுந்திருக்கு?  நீங்க யார் மேடம்?"

"நான் -------------------  கம்பெனிலேருந்து பேசறேன்.   உங்க பேர் என்ன ஸார்?"

"என்ன பேர்னே தெரியாம எப்படி பரிசு விழுந்திருக்குன்னு சொல்றீங்க?"

"உங்க நம்பர் ஸார்!  இந்த நம்பருக்கு விழுந்திருக்கு..உங்களுக்குக் கல்யாணமாயிடுச்சா ஸார்?"

"ஆச்சு.. ரெண்டு தரம்.  என் நம்பர் உங்க கிட்ட எப்படி விழுந்தது மேடம்?"

"ஓ... ரெண்டு தரமா?  நம்பர் ரேண்டமா செலெக்ட் பண்ணுவோம் ஸார்.  35,000 ரூபாய்க்கு உங்களுக்கு ஒரு கிஃப்ட் ஹாம்பர்..   நீங்க எங்கே இருக்கீங்க ஸார்?"

"எதுக்கு மேடம்?   எப்ப வேணா வாங்க..  நான் ------------------------- ல இருக்கேன்.  உங்க பேர் என்ன மேடம்?"

"ஓ.. நோ ஸார்!  உங்களால வேளச்சேரி வர முடியுமா?"

"ஓ..எஸ்.. வந்தாப் போச்சு!  அங்கதான் இருக்கீங்களா மேடம்?"

"நான் இல்லை.... அங்கதான் கம்பெனி இருக்கு.."

"அப்போ நீங்க அங்க இல்லியா மேடம்?  நீங்க எங்க இருப்பீங்க?"

"ஐயோ ஸார்... அது எங்க கம்பெனி அட்ரஸ்.  நானும் அங்கதான் இருப்பேன்"

"ஓகே மேடம்.. இப்போ என்ன செய்யணும் நான்?"
 

"கடைசியாக் கல்யாணம் ஆனவங்களுடன் நாளை வேளச்சேரி வரமுடியுமா ஸார்?"
 
"அது கஷ்டம் மேடம்"

"ஏன் ஸார்?"

"கடைசியா ஆனவங்களுடன் வந்தா மத்த ரெண்டு பேருமே பிரச்னை பண்ணிடுவாங்க மேடம்"

"என்னது?  என்ன சொல்றீங்க?  நாளைக்கு வரமுடியுமா   வரமுடியாதா நீங்க?"

"நான் அட்ரஸ் சொல்றேன்.  பரிசை வீட்டுக்கு அனுப்பிடுங்களேன் மேடம்"

"அதெல்லாம் வழக்கமில்லை ஸார்..  நீங்க உங்க மனைவியுடன் நாளை நான் சொல்ற இடத்துக்கு வாங்க.. உங்களுக்கு 35,000 ரூபாய்க்கு........."

"இல்லை மேடம்.. குரியர் சார்ஜா 5,000 ரூபாய் எடுத்துகிட்டு மிச்சத்தை அனுப்பிடுங்களேன்..."

"உங்களால ஏன் நாளை வரமுடியாது ஸார்?"

"நாளை எனக்கு ப்ரியா கூட எங்கேஜ்மென்ட் இருக்கு.. முன்னாடியே சொல்லிட்டேன்.  ரொம்ப கோவக்காரி ப்ரியா.  அதனால என்னால வர முடியாது.  வேணா ரெண்டு நாள் கழிச்சு வரவா?
"


டொக்.


யார் கிட்ட?   எத்தனை கால் பார்த்திருக்கோம் நாங்க!

25 கருத்துகள்:

 1. ஹா ஹா :) எல்லா எக்சிபிஷன் நடக்கும் இடங்களில் வாசலில் நம்ம பேர் போன் நம்பரை கூபனில் எழுதி வாங்கறாங்க அப்புறம் இப்படி ஸ்காண்டல்ஸ் நடக்குது .

  பதிலளிநீக்கு
 2. யார் கிட்ட? எத்தனை பார்த்திருக்கோம் நாங்க,,,,,,,,,,,, நான் போய் டி கப் வாங்கிகேன்.

  பதிலளிநீக்கு
 3. நாங்கள்லாம் யாரு? எங்ககிட்டயேவா?

  பதிலளிநீக்கு
 4. உங்களுக்கு பரவாயில்லை ஆயிரக்கணக்கில்தான்,எனக்கு பல கோடிக்கணக்கில் பரிசு ,நான்தான் பெருந்தன்மையா நீங்களே வச்சுக்குங்கன்னு சொல்லிட்டேன் :)

  பதிலளிநீக்கு
 5. என் பேரைச் சொல்லி அதை அருகில் உள்ள அனாதைகள் இல்லத்திற்கு நன்கொடையாக கொடுத்திடுங்கம்மா.

  பதிலளிநீக்கு
 6. நல்ல நகைச்சுவை பதிவு. ஒருவேளை போனில் பேசிய அம்மணி நேரில் வந்து இருந்தால் என்ன செய்து இருப்பீர்கள்? எனக்கும் அடிக்கடி கோடிக் கணக்கில் டாலர்கள் பரிசு விழுந்து இருப்பதாக SMS மற்றும் போன் அழைப்புகள் வரும்.

  பதிலளிநீக்கு
 7. இப்படி ஏதாவது சொன்னால்தான் இவர்களின் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். நல்ல வேடிக்கை பதிவு..

  பதிலளிநீக்கு
 8. உங்களோட சொந்த அனுபவம் சூப்பராக இருக்கே.

  பதிலளிநீக்கு
 9. எங்களுக்கும் அடிக்கடி இப்படி போன்கள் வருகிறது.
  ரீடர்ஸ்டைஜஸ்ட் என்ற பெயரில் மூன்று கோடி வெற்றி பெற்றுவிட்டீர்கள் என்று மாடல் செக்கே ஒருமுறை அனுப்பி இருந்தார்கள்.

  பதிலளிநீக்கு
 10. பெரும்பாலும் இப்படித்தான் கடுப்பேத்தறாங்க......!!!!

  பதிலளிநீக்கு
 11. இந்தத் தொல்லை தாங்க முடியாம பிஎஸ் என் எல்லிடம் புகார் கொடுத்து இப்போத் தான் இம்மாதிரி வேண்டாத அழைப்புகளை நிறுத்தச் சொல்லி வேண்டுகோள் கொடுத்தோம். நிறுத்தி இருக்காங்க. முன்னை மாதிரி வரதில்லை. என்றாலும் இங்கே உள்ளூரிலேயே நகைச்சீட்டு, புடைவைச் சீட்டுனு பரிசு விழுந்திருக்குனு கூப்பிடறாங்க. ஜிமெயிலில் தாங்க முடியலை. பில்லியன் டாலரிலும், பவுன்டிலும் தான் பரிசே விழுது. வைச்சுண்டு என்ன செய்யறது! வேணாம்னு பெருந்தன்மையாச் சொல்லிட்டுப் போக வேண்டி இருக்கு! :)))))

  பதிலளிநீக்கு
 12. அட ஸ்ரீராமா பேசினது. தேவலியே. நல்ல சிரிப்பு. இனிமேல் ஜன்மத்துக்கும் அந்தப் பொண்ணு
  இந்த மாதிரிப் பேசாது.

  பதிலளிநீக்கு
 13. கான்வர்சேஷன்லே ஓரிரண்டு சொந்த கித்தாப்புகள் இருந்தாலும் ஏறக்குறைய அப்படியே எழுதியிருக்கிறீர்கள்.

  அதற்காகவே ஒரு அன்பான ஷொட்டு.

  பதிலளிநீக்கு
 14. ஹா ஹா... இவங்க தொல்லை தாங்க முடியல!

  ஒரு முறை கடன் தரேன்னு ஒருத்தர் இப்படித்தான் ஃபோன் பண்ணார். அலுவலக்த்தில் வேலைகளில் மூழ்கி இருந்த நேரம் - திருப்பித் தர வேண்டாத கடன் தருவீங்களான்னு கேட்டேன் - எதிர் பக்கத்தில் நிசப்தம். :)))

  பதிலளிநீக்கு
 15. ஹஹஹாஹ்ஹஹ் செம! ஐயோ சிரிச்சு சிரிச்சு....முடியலைங்க....செம காமெடி.....

  பதிலளிநீக்கு
 16. நல்ல நகைச்சுவை! ரசித்துச் சிரித்தேன். இந்தப் பதில் அவளுக்கு ஒரு மாதத்துக்குத் தாங்கும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!