திங்கள், 23 மார்ச், 2015

'திங்க'க்கிழமை : வடைக் குழம்பு


இந்த ஞாயிறு என் நாளாகியது.  உடல் நிலை சரியில்லாத மனைவி இன்றைய பொழுதை புளிக்காய்ச்சல் பிசைந்து ஓட்டி விடலாமா என்று கேட்க,  அதில் எனக்கும் என் செல்வங்களுக்கும் சம்மதமில்லாமல் போக, சங்கீதாவிலிருந்து குழம்பு, பொரியல் வாங்கிக் கொள்ளலாமா என்ற பேச்சைக் கடந்து, என்னைக் களம் இறக்கி விட்டார்கள்.  "சிம்பிளா நீங்க ஏதாவது செய்யுங்களேன்"

செய்துட்டாப் போச்சு.  என்ன இருக்கிறது என்று பார்த்தேன்.  


உருளைக்கிழங்கு, தக்காளி வெங்காயம் தவிர வேறு ஏதும் வீட்டில் இல்லை.  கரி,கொத். கூட இல்லை. மணி 11.50. சாப்பிடும் நேரம் நெருங்கிக் கொண்டிருக்கிறது!
 

டட்..டடாய்ங்க்.. 

சனிக்கிழமை செய்த பருப்பு வடையில் பாக்கி 12 ஃப்ரிஜ்ஜில் இருந்தன.

அவ்வப்போது பருப்புருண்டைக் குழம்பு செய்வோம்.  இதில் மசாலா சேர்க்கும் வழக்கம் இல்லை.   எனவே என், மற்றும் மகன்களின் சுவைக்காக, கடைகளில் மசால் வடை வாங்கிக் குழம்பு செய்வேன்.  ஒரே வேளையில் ஓடி விடும்.  வீட்டிலேயே மசால் வடையும் செய்யலாம்தான்.  1) பொறுமையும் நேரமும் இல்லாத தருணங்கள்,  2) அது மசால்வடையின் வாசனைகளைச் சரி விகிதத்தில் தாங்கி நிற்பதில்லை! (சில) கடைகளில் ம.வ அபாரமாகச் செய்கிறார்கள்.
 
'இப்போது இந்த பருப்பு வடையில் மசாலா வாசனை இல்லையே...' மகனின் கவலையைத் தீர்த்தேன்!
 

பத்து சின்ன வெங்காயம் தோல் உரித்துத் தரச் சொல்லி, இரு முனைகளையும் அகற்றி விட்டு,  நான்கு பல் பூண்டை உரித்து அதனுடன் சேர்த்து (இதுவே போதும் , என்றாலும்) அரைத் தக்காளியைச் சேர்த்து (இஞ்சி சேர்க்கலாம், என் மகனுக்குப் பிடிக்காது) மிக்ஸியில் அரைத்து எடுத்துக் கொண்டு, 

புளி கரைத்து, உப்பு, குழம்புப் பொடி சேர்த்துக் கரைத்து எடுத்துக் கொண்டு அடுப்பில் ஏற்றி, தாளித்துக் கொண்டு கொதிக்க ஆரம்பிக்கும்போது இந்தக் கலவையையும் ஊற்றி கொதிக்க விட்டு,


இறக்கிக் கீழே வைத்து (கறிவேப்பிலைதான் இல்லையே) வடைகளைத் துண்டுகளாக்கிக் கொண்டு அதில் சேர்த்து, மூடி,





இடையிலேயே குக்கரில் வைத்து எடுத்த உருளைக் கிழங்கை உரித்து, வெங்காயம் வதக்கி, உரித்த உ.கி சேர்த்து, புரட்டி எடுத்துக் கொண்டிருக்கையிலேயே,




இன்னொரு அடுப்பில் புளித் தண்ணீருடன் தக்காளியைச் சேர்த்துப் பிசைந்து, மாடித் தோட்டச் செடியில் இருந்த ஒற்றைப் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு, உப்பு, சாம்பார்ப்பொடி சேர்த்துக் கொதிக்க வைத்துப் பெருக்கி, பெருங்காயத் தூள், மிளகு சீரகப்பொடி சேர்த்து இறக்கித் தாளிக்கவும், மணி 12.20  அகவும் சரியாக இருந்தது!


நடுவிலேயே குழம்பிலும், உ.கி பொரியலிலும் வெங்காயம், பூண்டு சேர்க்குமுன் தனியாக எடுத்துக் கொஞ்சம் பாஸுக்காக வைத்து விட்டேன்!


சமையல் ரெடி!







பி.கு : புகைப்படம் எடுத்துக் கொண்டால் 'திங்க'க்கிழமைக்கு ஆகுமே என்று தாமதமாகவே தோன்றியதால் இரண்டு படங்கள் மட்டும்!

23 கருத்துகள்:

  1. முதலில் பருப்பு வடை செய்து ஃப்ரிஜ்ஜில் வைக்க வேண்டும்...! அதே சமயம் பழனி ஐயாவையும் மறக்க வேண்டும்... ஹிஹி...

    பதிலளிநீக்கு
  2. //சனிக்கிழமை செய்த பருப்பு வடையில் பாக்கி 12 ஃப்ரிஜ்ஜில் இருந்தன.//

    நெசமாவா? நம்ம வீட்டில் சனிக்கிழமை வடை எட்டே எட்டு. அதுவும் அன்றையப்
    பகலே காலி!

    பதிலளிநீக்கு
  3. இருக்கிற மிகக் குறைவான சாமான்களை வைத்துக்கொண்டு அசத்தல் சமையல் செய்து விட்டீர்கள்! உங்கள் மனைவி கொடுத்து வைத்தவர்!

    பதிலளிநீக்கு
  4. யாருக்கு உடல் நலம் சரியாக இல்லாவிட்டால் என்ன.?நாக்குக்கு வக்கணையாகச் செய்ய வேண்டி இருக்கிறது

    பதிலளிநீக்கு
  5. ஆஹா! வடைக்குழம்பு வித்தியாசமா இருக்கு. செய்து பார்க்கிறேன்.

    வடை மாவு அதிகமாக இருந்தால் அப்படியே ஃப்ரிட்ஜில் வைத்து விட்டு வேண்டிய போது சூடாகவே தட்டி போட்டு சாப்பிடலாமே...:) க்ரிஸ்பியாகவும் வரும்....:)

    பதிலளிநீக்கு
  6. //அதே சமயம் பழனி ஐயாவையும் மறக்க வேண்டும்... ஹிஹி...//

    நடுவில என்னை எதுக்கு வம்புக்கு இழுக்கறீங்க, DD. நானே ஓய்ந்து போயிக் கிடக்கிறேன்.

    நல்ல மெனு ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு

  7. வடைக்குழம்பு வித்தியாசமா இருக்கும் போலயே செய்யச்சொல்லி பார்க்கனும்.

    பதிலளிநீக்கு
  8. ஹா....ஹா...ஹா.... சரியாகச் சொன்னீர்கள் டிடி!

    வாங்க துளசி மேடம்... கொஞ்சம் டேஸ்ட் ஒருமாதிரியா இருந்தாலும் அப்படியே வைத்து விடுவார்கள்!

    நன்றி மனோ சாமிநாதன் மேடம்.

    நன்றி ரமா ரவி.

    நன்றி ராமலக்ஷ்மி.

    நன்றி ஜி எம் பி ஸார்.

    நன்றி ஆதி வெங்கட். அப்படியும் செய்வதுண்டு. அது வேற. சில சமயங்களில் இது போலச் செய்வதற்காகவே உண்டு. ஃபிரைட் இட்லி, இட்லி உப்புமா, மசாலா பரோட்டா, பழன்குழம்புகள் போல!

    நன்றி பழனி.கந்தசாமி ஸார்.

    நன்றி கில்லர்ஜி.

    நன்றி புலவர் ஐயா.

    நன்றி சென்னைப்பித்தன் ஸார்.

    பதிலளிநீக்கு
  9. நாங்க கொடுத்து வச்சது அவ்வளவுதான் ,ரெண்டு படத்தைப் பார்த்து சப்பு கொட்டிக்கிறோம்:)

    பதிலளிநீக்கு
  10. வணக்கம்
    செய்முறை விளக்கத்துடன் அசத்தல் அருமையாக உள்ளது... த.ம 1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
  11. வடைக்குழம்பு பேரே நல்லா இருக்கே. ஆமா, மெட்ராஸ்ல வடைகறின்னு ஒண்ணு சொல்லுவாங்களே, அதுவும் இதுவும் ஒண்ணா?

    பதிலளிநீக்கு
  12. //முதலில் பருப்பு வடை செய்து ஃப்ரிஜ்ஜில் வைக்க வேண்டும்...! அதே சமயம் பழனி ஐயாவையும் மறக்க வேண்டும்... ஹிஹி...//

    எதுக்குப் பழனி ஐயாவை மறக்கணும்னு டிடி சொல்றார்? புரியலையே?

    பதிலளிநீக்கு
  13. இந்த மாதிரி மசாலாக் குழம்பெல்லாம் நம்ம வீட்டிலே செய்ய முடியாது. அப்படியே செய்தாலும் நோ பூண்டு. அதோட இதைச் சப்பாத்திக்குத் தான் தொட்டுப்போம். :) சங்கீதாவிலே நாலைந்து பேருக்குக் காணும்படி, குழம்பு, ரசம் கொடுக்கிறாங்களா என்ன? அவங்க கொடுத்த ஒரு கைத் தயிர்சாதத்தை(சாதத்தை அதிலே தேடணும், நாலைந்து பருக்கைதான் இருந்தது)யே இன்னும் மறக்க முடியலை. :)

    பதிலளிநீக்கு
  14. வடையெல்லாம் பண்ணினால் மிஞ்சறாப்போல் பண்ணறது இல்லை. அப்படியே மிஞ்சும் போல் தோணினால் மாவை எடுத்துக் குளிர்சாதனப் பெட்டியில் வைச்சுட்டு மறு நாள் சூடாகப் போட்டுக் கொள்ள வேண்டியது தான். :)

    பதிலளிநீக்கு
  15. வடகறி வேறே சொக்கன் சுப்பிரமணியம். உண்மையில் எனக்குத் தெரிந்த அறுபதுகளின் சென்னையில் மீந்து போன வடைகள், வெங்காய பக்கோடாக்கள், காலை செய்த சாம்பார், ரசத்தின் பருப்பு போன்றவற்றைச் சேர்த்துக் கொதிக்க வைத்து அதில் வெங்காயம், பூண்டு, பச்சைமிளகாய், இஞ்சி அரைத்து விடுவாங்க. ஆனால் இப்போல்லாம் வடகறினு தனியாவே செய்யறாங்க. கிட்டத்தட்ட பாவ் பாஜிக்குச் செய்யும் பாஜியின் செய்முறைதான் வடகறியிலும். வடையை வெங்காயம், சோம்பு போட்டு அரைத்துப் பொரித்து எடுத்துக் கடைசியில் சேர்க்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
  16. ஹா...ஹா...ஹா... நன்றி பகவான்ஜி!

    நன்றி ரூபன்.

    நன்றி சொக்கன் சுப்பிரமணியம். இது வடகறி இல்லே... அதுக்கும் மேல!

    என்ன கீதா மேடம் லேட்? பழனி கந்தசாமி ஸார் பதிவு(கள்) படித்தால் விஷயம் புரியும். சங்கீதா என்றில்லை, எல்லா ஹோட்டல்களிலுமே குழம்பு, ரசம் பொரியல், கூட்டு, எல்லாமே இரண்டு ஆட்கள் போட்டுக்கொள்ளுமளவு தருவார்கள். சங்கீதாவில் ஒரு பாக்கெட் 35 ரூபாய்! (அம்மாடி!) வடை, சில கெஸ்ட்ஸ் வரேன்னு சொல்லி ஏமாத்தியதால மிஞ்சியது! வடகறி வேற...

    பதிலளிநீக்கு
  17. தாமதம் ஆகி விட்டது.ம்ம்ம்ம் ஒரு பாக்கெட் 35 ரூபாய்? அதுவும் இரண்டு பேர் போட்டுக்கொள்ளும் அளவு மட்டும்? சரியாப்போச்சு போங்க. இங்கே குழம்பு, ரசம், கறி, கூட்டு எல்லாம் தலா பத்து ரூபாய்க்கு வாங்கினால் இரண்டு பேர் தாராளமாச் சாப்பிட முடியும். அதுவும் குழம்பும், ரசமும் நாங்க சாப்பிட்டு மிஞ்சும். :))) நமக்கெல்லாம் சங்கீதா கட்டுபடி ஆகாதுங்கோ! சங்கீதானாலே அலர்ஜி ஆயிடுச்சு இப்போல்லாம். :)

    பதிலளிநீக்கு
  18. என்ன நண்பரே! இப்படிஎ எல்லாம் அசத்தி எங்களைப் பொறாமை பட வைக்கின்றீர்கள்! எங்கள் வீட்டுச் செல்லங்கள் போல (நாலுகால்) உங்க வீட்டுக்கிச்சனையே/படத்ததான் சொல்லறோம்....ஏக்கமாகப் பார்த்து ஜொள் விட வைச்சுட்டீங்களே! எங்களைக் கொஞ்சம் செல்லங்கள் போல யோசித்துப் பாருங்கள்....ஹஹஹ்

    பதிலளிநீக்கு
  19. கீதா: நானும் சென்னைதான்...இதுக்காகவே உங்க வீட்டுக்குக் கண்டிப்பா ஒரு விசிட் அடிக்கணும்.....நாக்குல ஜொள்ளு இப்பவே....நான் வரும் போது நோ சங்கீதா.....சொல்லிப்புட்டேன்...சரி வரலாமா? உங்ககிட்ட பெர்மிஷன் கேக்காமலேயே சொல்லிண்டே போறேனே...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!