Saturday, May 16, 2015

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.1) ஆனந்தகுமார்.  யானைகளிடமிருந்து மனிதனையும், மனிதர்களிடமிருந்து யானைகளையும் காக்க எளிய ஒரு வழி கண்டுபிடித்து விருது வாங்கியிருப்பவர்.
 

 
2)  இனியவன்.  உழைப்பின் பெருமை.  
 

 
3) மும்பைப் பெண்ணுக்கு வேதாரண்யத்தில் என்ன வேலை?  அதுவும் பார்த்துக் கொண்டிருந்த நல்ல வேலையை உதறி விட்டு? அழகான குடும்பத்தை விட்டு விட்டு?
 

 
4) லட்சியமும் விடாமுயற்சியும்.  சென்னை போரூரைச் சேர்ந்த நாககன்னி.
 


 
5) இப்படி வெளிநாட்டு பயணத்திற்கு செலவு செய்வதை நிலத்தில் நகையில் முதலீடு செய்தால் எதிர்காலம் நன்றாக இருக்குமே என்று சொல்பவர்களை பார்த்து இவர் நிகழ்காலத்தில் வாழ்க்கையை அனுபவிக்க பாருங்கள் எதிர்காலத்தை எண்ணி நிகழ்காலத்தை விட்டுவிடாதீர்கள் என்பதே!  விஜயன்-மோகனா தம்பதியர்.   "மலையாளம் மட்டுமே பேச படிக்க தெரியும், தமிழ் பேசினால் புரியும், ஸ்மார்ட் போன் கிடையாது,  இண்டர்நெட் மெயில் பற்றி தெரியாது.   ஆனால் சந்தோஷமாக இருக்க தெரியும், எனக்கு!  இல்லையில்லை எங்களுக்கு" என்று மனைவியின் தோள் தொட்டு சொல்கிறார், வெட்கமும் சந்தோஷமும் மோகனா விஜயனின் முகத்தில் பொங்குகிறது.
 

6) நம்பிக்கைக்கும், விடாமுயற்சிக்கும் ஒரு தியாகராஜன்.


14 comments:

Geetha Sambasivam said...

ஆனையை மட்டும் படிச்சேன். மத்ததுக்கு அப்புறமா வரேன்.

Thulasidharan V Thillaiakathu said...

யானை விஷயம் சூப்பர்...இது மற்ற விலங்குகளுக்கும் புலி....போன்றவற்றிற்கும் கொண்டு வரலாம் இல்லையோ...

பொதுவாக டாக்டர்கள் காய்சலில் இருந்து விடுபட்டு வரும் போது இல்லை வேறு ஏதேனும் பிரச்சனைகள் என்றாலும் இட்லியை பரிந்துரைப்பார்கள்...இனியன் அந்த இட்லியாலேயே டாக்டர் பட்டம்.....சூப்பர்...

சோனம் மும்பைப் பெண் அட மிக மிக உயரிய பணையை செய்வது அவரது நல்ல மனதைக் காட்டுகின்றது..வாழ்த்துவோம் அவரை!விஜயன் மோகனா தம்பதியினர் வியக்க வைக்கின்றனர்.....நல்ல விஷயம் தான் ....ஆனால் எல்லோராலும் இப்படி முடிய்மா தெரியவில்லை....

நாககன்னிக்கும், தியாகராஜனுக்கும் வாழ்த்துகள்!

பழனி. கந்தசாமி said...

விஜயன்-மோகனா தம்பதியினரைக் கண்டு பொறாமைப் படுகிறேன்.

திண்டுக்கல் தனபாலன் said...

விஜயன்-மோகனா தம்பதியர் - சந்தோஷமாக இருக்க மட்டுமே தெரியும்... ஆகா...!

KILLERGEE Devakottai said...


அனைவரும் பாராட்டுக்குறியவர்கள்.

Geetha Sambasivam said...

எல்லாச் செய்திகளையும் படித்தேன். அருமை. நன்றி.

Geetha Sambasivam said...

"இனியவன்" இட்லியைச் சாப்பிட்டுப் பார்த்துத் தான் சொல்லணும். மும்பைப் பெண் அசத்துகிறாள்.

‘தளிர்’ சுரேஷ் said...

எல்லாமே அசத்தலான செய்திகள்! மேலும் இந்தவாரத்தில் என் கண்ணில்படத் தவறிய செய்திகள்! பகிர்வுக்கு மிக்க நன்றி!

Thenammai Lakshmanan said...

இனியவன் இட்லி கேள்விப்பட்டிருக்கிறேன். விஜயன் மோகனா தம்பதிகள் சூப்பர் :)

middleclassmadhavi said...

வாழ்க்கைப் பாதையில் ஒரு T-ஜங்க்ஷனில், என்னாகுமோ என்ற பயத்தில் இருக்கும்போது, இம்மாதிரி பாஸிடிவ் செய்திகள் தாம் தைரியம் ஊட்டுகின்றன! நன்றி!

R.Umayal Gayathri said...

வியப்பாய் இருக்கிறது அனைத்தையும் படிக்க படிக்க.... வாராவாரம் பூஸ்ட் தரும் உங்களுக்கு வாழ்த்துக்கள்...சகோ நன்றி

Bagawanjee KA said...

ஆனந்த குமார் காட்டும் வழி ஆனந்த வழிதான் மனிதனுக்கும் ,யானைக்கும் :)

மனோ சாமிநாதன் said...

அனைவருமே பாராட்டுக்குரியவர்கள்!

Kalayarassy G said...

யானைகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால் மனிதன் யானைக்கிடையே நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டு வரும் விதத்தில் மொபைல் போன் மூலம் தீர்வு கண்டிருக்கும் ஆனந்தகுமாருக்குப் பாராட்டுக்கள்! உப்புத் தொழிலாளர்களின் கழிவறைப் பிரச்சினைக்குத் தீர்வு சொல்லும் மும்பைப்பெண்ணின் முயற்சியும் ஆர்வமும் வியக்கவைக்கிறது. நிகழ்காலத்தை மகிழ்ச்சியாகக் கழிக்கும் தேநீர்க்கடை நடத்தும் தம்பதியினர் வெளிநாட்டுப் பயணம் பற்றிய செய்தியும் என்னைக் கவர்ந்தது.

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!