Wednesday, May 20, 2015

ரேடியோவைக் கண்டு பிடித்தது யார்? மறைக்கப்பட்ட உண்மைகள்!
இந்தக் கேள்விக்கு நமக்கு (எனக்குத்) தெரிந்த பதில் மார்க்கோனி!

ஆனால் அதைக் கண்டு பிடித்தவர் நிகோலா டெஸ்லா!  

                              


1892 இல் தனது ஆராய்ச்சி முடிவுகளை பேடன்ட் வாங்கக் கொடுத்து,  பதிவு செய்திருக்கிறார்.  ஆனால் மார்க்கோனி அதை வைத்து 1895 இல்,  தான் கண்டுபிடித்ததாய்ச் சொல்லி, அதன் காரணமாக நோபல் பரிசும் பின்னர் பெற்றிருக்கிறார்.  மார்க்கோனி மேல் டெஸ்லா வழக்கு தொடர்ந்தும் பயனில்லை.  பணம் பாதாளம் வரை பாய்ந்தது. ஆனால், ஒரு வழியாய் 1943 இல் அமெரிக்க உச்ச நீதிமன்றம் இந்த உண்மையை ஒத்துக் கொண்டதைக் கூட அதிகம் மீடியாவில் வராமல் பார்த்துக் கொண்டனர் பணவான்கள்!

                                                   


பணமும் அதிகாரமும் எந்த அளவு பாயும் என்பதற்கு டெஸ்லா ஒரு உதாரணம்.  தாமஸ் ஆல்வா எடிசனும் சரி, ஜார்ஜ் வெஸ்டிங்ஹௌஸும் சரி, தங்கள் பண பலத்தால் இவர் புகழ் வெளிவராமல் பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

                


எந்திரன் சிட்டி மாதிரி இவர் பார்க்கும், படிக்கும் புத்தகங்கள் இவர் மூளையில் போட்டோ பிடித்தது போலப் பதியுமாம்.  இவருக்குத் தோன்றும் புதிய ஐடியாக்கள் கூட ஒரு மூவி போல மூளையில் தோன்றுமாம்.


ரேடியோ என்பதைத் தலைப்புக்காக மட்டும் சொல்லி இருந்தாலும்,  அவரின் (பெயர் திருடப்பட்ட) கண்டுபிடிப்புகள் ஏராளம்.
டெஸ்லா 'கெட்டும் பட்டணம் சேர்' என்று தன்னுடைய இளவயதுக் காட்சிக் கனவான நயாகரா நீர்மின் திட்டத்தைச் செயல் படுத்த முதல்படியாக அமெரிக்கா வந்து தான் பெருமதிப்பு வைத்திருந்த எடிசனிடம் வேலைக்குச் சேர்ந்தார்.

நாளொரு கண்டுபிடிப்பாக வந்து நின்ற டெஸ்லாவின் அறிவு எடிசனை அச்சுறுத்தியதோடு எச்சரிக்கையாகவும் இருக்க வைத்துள்ளது.  டெஸ்லா கண்டுபிடிக்கும் ஒவ்வொன்றுக்கும் தனது (ஆய்வக) பெயரில் காப்புரிமை பெறவும் அவர் தயங்கவில்லை.

DC மோட்டார் விஷயத்தில்தான் கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்திருக்கின்றனர்.  தனி ஆய்வகம் வைத்த டெஸ்லாவின் ஆய்வகம் பல கண்டுபிடிப்புகளுக்கான குறிப்புகளுடன் ஒரு மர்மமான தீ விபத்தையும் சந்தித்தது.


DC மோட்டார், நயாகராவில் மின்சாரம் தயாரிக்கும் முயற்சி, எக்ஸ்ரே ரேடார், நிலநடுக்கத்தை அளவிடும் கருவி உட்பட 1200 க்கும் மேற்பட்டவைகளைக் கண்டுபிடித்து, 700 க்கும் மேலான கண்டுபிடிப்புகளுக்குக் காப்புரிமையும் பெற்றிருக்கும் இவருக்குப் பணத்தின் மீது ஆசை இல்லை.  இவரது DC கரண்ட் முயற்சி வெற்றி பெறாமலிருக்க மிக மோசமான முயற்சிகள் எல்லாம் எடுத்திருக்கிறார் எடிசன்!

உலகத்துக்கே இலவசமாக மின்சாரம் வழங்க ஏற்பாடு செய்து விட்டார் டெஸ்லா, ஜே.பி மோர்கன் எனும் கோடீஸ்வரர்  உதவியுடன் நூறடி உயர கோபுரம் (டவர்) கட்டி வேலைகளைத் தொடங்கியும் விட்டார்.அதன்மேல் உலோகக் கோளம் ஒன்றும் பொருத்தப்பட்டது. 
ஏற்கெனவே டெஸ்லாவின் கண்டு பிடிப்புகளை வைத்து கோடி கோடியாகப் பணம் பார்த்திருந்த எடிசன், வெஸ்டிங்ஹௌஸ் போன்றவர்களைப் போல தானும் பணம் பார்க்கலாம் என்று நினைத்திருந்த மோர்கன், எதற்கு இது என்று விசாரித்ததும் "உலகம் முழுவதும் இலவச மின்சாரம் வழங்கும் திட்டம்தான் இது"  என்று டெஸ்லா கூறியதும், உடனடியாக டெஸ்லாவுக்கு உதவுவதை நிறுத்தி விட்டார்.
                       JohnPierpontMorgan.png

அமெரிக்க அரசாங்கமும் போர்க்கால நடவடிக்கையாக அந்த கோபுரத்தை இடித்துத் தரைமட்டமாக்கியது!  இதில்தான் அவர் மிகவும் நொந்து போனாராம்.  பின்னாட்களில் Charged Particle Particle Beam Weapon என்ற ஒன்றை அவர் தயாரிக்க நினைத்ததுதான் அவருக்கு எமனாய் முடிந்திருக்கிறது.

இவரது மிகப் பழைய மறைக்கப்பட்ட பேட்டி ஒன்று.

ஸ்மார்ட் ஃபோனுக்கான முயற்சியை 1901 லேயே செய்திருக்கிறார் டெஸ்லா.

திருமணமே செய்து கொள்ளாமல் 86 வயது வரை வாழ்ந்த இவர் பிறந்தது 1856, ஜூலை பத்தாம் தேதி!

23 comments:

பழனி. கந்தசாமி said...

போட்டியும் பொறாமையும் இல்லாத மனிதர்களே இல்லை போலும்.

KILLERGEE Devakottai said...


அறியாத செய்தியாக இருக்கிறது பணம் அன்றே பாதாளம்வரை பாய்திருக்கின்றது
உலகத்துக்கே இலவச மின்சாரம் எவ்வளவு ஒரு உயர்ந்த சிந்தனை நமது ஆற்காடு வீராசாமியைவிட உயர்ந்தவர்.

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதுவரை அறியாத செய்தியினை மிக அழகாக அருமையாக பதிவாக்கிக் கொடுத்துள்ளீர்கள்.

சிலருக்கு தனித்திறமைகள் இருந்தும், உலகில் அதற்கான பெருமைகளும் அங்கீகாரங்களும் அவர்களுக்குக் கிட்டாமல் போய் விடுகிறது என்பதை நினைக்க மிகவும் வருத்தமாக உள்ளது.

பயனுள்ள பகிர்வுக்கு நன்றிகள்.

peace said...

https://m.facebook.com/notes/ravi-shankar-chavali/who-invented-radio-marconi-or-jagadish-chandra-bose-/471023366263784

Here is another contender

Bagawanjee KA said...

இத்தனை பெரிய மனிதருக்கு இத்தனை சிறிய மனம் இருக்கு :)

Angelin said...

ரேடியோ என்றால் மார்க்கோனி என்றதானே சட்டென்று நினைவு வரும் :(
டெஸ்லா பற்றி உங்க பதிவில் அறிந்து கொண்டேன் பகிர்வுக்கு நன்றி ..

திண்டுக்கல் தனபாலன் said...

அறியாத தகவல்... நன்றி...

Pandiaraj Jebarathinam said...

நமது கல்வி பொய்யால் நிரம்பியது என்று நிரூபிக்கும் மற்றொரு தகவல்..

narasimhan said...

Nicola Tesla and Swami Vivekananda:
http://www.teslasociety.com/tesla_and_swami.htm

Geetha Sambasivam said...

இது படிச்சேன், அல்லது தொலைக்காட்சியில் சொன்னாங்க??? ஏதோ ஒண்ணு! ஆனால் கேள்விப் பட்டிருக்கேன். அதேபோல் வேறே ஏதோ ஒண்ணைக் கண்டுபிடிச்சதும் கல்கத்தாவின் ஒரு விஞ்ஞானி எனவும் அவர் பெயர் வெளிவராமல் வெள்ளைக்கார அரசாங்கம் செய்து விட்டது என்றும் சொல்வாங்க. எதைனு நினைவில் இல்லை. தொலைபேசி? மின்சாரம்? ம்ஹூம் நினைவில் இல்லை

'நெல்லைத் தமிழன் said...

கீதா மாமீ சொல்வது 'போஸ்' என்று நினைக்கிறேன். நல்ல பதிவு.

வல்லிசிம்ஹன் said...

டெஸ்லா பெயரில் இப்போது ஒரு கம்பெனியே இருக்கிறதாமே. அவர் பெயரில்
மின்சாரக் கார் ஓடுகிறது.

Ranjani Narayanan said...

//பணமும் அதிகாரமும் எந்த அளவு பாயும் என்பதற்கு டெஸ்லா ஒரு உதாரணம். //
டெஸ்லா பணத்தையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி ஏதோ செய்தார் என்கிற மாதிரி பொருள் வருகிறதே! கொஞ்சம் மாற்றிவிடுங்களேன், வாக்கிய அமைப்பை. தவறாக நினைக்க வேண்டாம், ப்ளீஸ்.
பாவம், பணமும் அதிகாரமும் இவரது உழைப்பை சுரண்டிவிட்டது.
வருத்தமான செய்தி தான்.

Geetha Sambasivam said...

@நெல்லைத் தமிழர், "போஸ்" என எனக்கும் நினைவில் இருந்தது. ஆனால் ஜகதீஷ் சந்திர போஸோ, சுபாஷ் சந்திர போஸோ இல்லை. இவர் முழுப் பெயர் தெரியவில்லை என்பதால் குறிப்பிடவில்லை. சில மாதங்கள் முன்னர் இணையத்தில் ஒரு பதிவில் கூட இவரைப் பற்றி எழுதி இருந்ததைப் படித்த நினைவும் இருக்கிறது.

காரிகன் said...

டெஸ்லா மக்கள் மறந்துவிட்ட ஒரு அதி அற்புத விஞ்ஞானி. அவர் காலத்தில் அவர் பைத்தியக்காரன் என்றும் பேய் விஞ்ஞானி என்றும் அழைக்கப்பட்டவர். மின்சார அறிவியலில் எடிசனுக்கு பலத்த போட்டியாக இருந்தவர். அதனாலேயே எடிசன் என்னும் விஞ்ஞான வியாபாரியால் பழிவாங்கப்பட்டவர்.

நல்ல பதிவு. பாராட்டுக்கள். மற்றொரு செய்தி. ரேடியோ கண்டுபிடிப்பில் பெங்காலைச் சேர்ந்த ஜகதீஷ் சந்திர போஸ் என்ற விஞ்ஞானிக்கும் தொடர்பு இருக்கிறது. சிலர் ஜகதீஷ் போஸ் தான் முதலில் ரேடியோயோவை கண்டுபிடித்தார் என்றும் ஆனால் மார்கோனி அதை பேடன்ட் செய்ததால் பெயர் பெற்றுவிட்டார் என்றும் சொல்வார்கள்.

துளசி கோபால் said...

ஏமாளிகள் இருக்கும்வரை ஏமாற்றுபவர்கள் நிறைந்திருக்கும் உலகம் இது:(

இதுவரை அறியாத தகவல். நன்றிகள்!

Geetha Sambasivam said...

காரிகன், ஜகதீஸ் சந்திர போஸ் தாவர இயல் விஞ்ஞானி என நினைவு. அவர்தானா ரேடியோவைக் கண்டறிந்தது, இது குறித்துத் தமிழ் மாதப் பத்திரிகை மஞ்சரி(?)யில் கட்டுரை வந்ததென நினைவு.

Kalayarassy G said...

புதிய செய்தி. எடிசனுக்கு இன்னொரு முகம் இருந்திருக்கிறது என்பதறிய வியப்பு. பாவம் டெஸ்லா! விஞ்ஞானியாக இருந்தால் மட்டும் போதாது சாமர்த்தியசாலியாகவும் இருக்க வேண்டும் போலிருக்கிறது. அறியாத செய்தியைத் தெரிவித்தமைக்கு நன்றி!

காரிகன் said...

கீதா சாம்பசிவம்,

நீங்கள் சொல்வது உண்மைதான். ஜகதீஷ் போஸ் ஒரு தாவரவியல் விஞ்ஞானி யாக இருந்தாலும் இந்தியாவில் முதல் முதலில் அறிவியல் புனைவுக் கதைகள் எழுதியவர். தாவரவியல் தாண்டி அவர் பல அறிவியல் சிந்தனை கொண்டிருந்தவர். எடிசன் மார்கோனி அளவுக்கு பெயர் பெற்றிருக்க வேண்டியவர் டெஸ்லா போன்று பாராட்டப்படாதவராகி விட்டார் என்பது வலிக்கும் நிஜம்.

Geetha Sambasivam said...

தெளிவு செய்தமைக்கு மிக்க நன்றி காரிகன். கொஞ்சம் குழம்பி விட்டேன். :)

Thulasidharan V Thillaiakathu said...

இந்த தகவல் தெரிந்தது...மிகவும் வேதனையான விஷயம். அதை நீங்கள் அழகான பதிவாகக் கொண்டு பதிவிட்டிருக்கின்றீர்கள்.

அரசிய்லைல் சகஜமப்பா என்பது போல் அறிவியல் ஆராய்ச்சி உலகிலும் இதெல்லாம் சகஜமப்பாதான். அதுவும் அன்றிலிருந்து இன்று இதோ இந்த நிமிடம் வரை கூட தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. என் நம்ம பதிவுலகிலும் கூட சில மொக்கை பதிவுகள் கூட காப்பிடடிக்கப்படுகிறதே....

பணம் என்பது பாதாளம் வரை பாயும் என்பது தேர்ட் வேர்ல்ட் நாடுகள் என்றில்லை....வளர்ந்த நாடுகளிலும் இப்படித்தான் நடந்து வருகின்றது காலம் காலமாக.....காலம் மாறும் என்று கானல் நீர் கனவுகள் நமக்கு...

Thulasidharan V Thillaiakathu said...

காரிகன் சொல்வதும் அதே!

Ranjani Narayanan said...

ஜகதீஷ் சந்திர போஸ் பற்றி அரவிந்தன் நீலகண்டன் எழுதிய கட்டுரை இணைப்பு
http://www.dinamani.com/junction/arithalin-ellaiyil/2015/03/22/%E0%AE%9C%E0%AE%95%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F/article2722785.ece

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!