ஞாயிறு, 31 மே, 2015

ஞாயிறு 308 :: கோலக் கலை !


இது, பக்கத்திலே உள்ள பார்க் ஒன்றில், யாரோ வரைந்தது. ஒரு குச்சியால், மண்ணில் அழகாக கோடு இழுத்து வரையப்பட்ட கோலம்.. வரைந்த கலைஞர் யார் என்று தெரியவில்லை. 

ஆனால், ஆறடிக்கு  ஆறடி உள்ள மண் பரப்பில், நேத்தியாக இழுக்கப்பட்டுள்ள  வளைவுகள், எந்த இடத்திலும் கோணாமல், எந்த இடத்திலும் பிசிறு தட்டாமல் வரையப்பட்டுள்ளது. 

பத்து அல்லது பதினைந்து வயதுக்குள் இருக்கின்ற சிறுவர் சிறுமியர்களைதாம் இந்தப் பார்க்கில் நான் அடிக்கடி பார்ப்பேன். அவர்களில் யாரோ ஒருவர்தான் இதை வரைந்திருக்கக்கூடும். 

 அற்புதமான இந்தப் படைப்பாளியைப் பாராட்டுவோம்! 

                

11 கருத்துகள்:

  1. அட இலைகளும் பூக்களுமாக மிக அழகு !

    பதிலளிநீக்கு
  2. நேர்த்தி . .அழகு.

    இலாவகமாக வரையப்பட்டிருக்கிறது.

    பதிலளிநீக்கு
  3. அந்த படைப்பாளியைப் பாராட்டுவோம்

    பதிலளிநீக்கு
  4. முகம் தெரியாத அந்தப்படைப்பாளியை உங்களைப்போலவே நானும் பாராட்டுகிறேன்!

    பதிலளிநீக்கு
  5. அடுக்குமாடிக் குடியிருப்புகளில் முடக்கப்பட்ட மாக்கோலக்கலை இங்கே மண் கோலக்கலையாக கலைநயம் காட்டியிருக்கிறது. படைப்பாளிக்குப் பாராட்டுகள். கோலத்தைப் படம்பிடித்து படைப்பாளிக்கு பெருமை சேர்த்த உங்களுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  6. வணக்கம் சகோதரரே.

    அழகான கோலம்.கோடுகளில் ஒரு சிறு பிசிறு இல்லாமல் தங்கு தடையின்றி இருந்த இழைகள் கண்ணுக்கு தெளிவாகவும் பார்வையாவும் இருக்கிறது.கோலத்தை சிறப்பாக படம் எடுத்த தங்களுக்கும், அதை வரைந்தவருக்கும் பாராட்டுக்களுடன் வாழ்த்துக்கள். நன்றி.

    நன்றியுடன்,
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  7. சூப்பர் ! முகம் தெரியாத அந்தக் குழந்தைக்குப் பாராட்டுகள்!

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!