பாஸிட்டிவ் செய்திகள் கடந்த வாரம்
2) படிக்கும் குழந்தைகளுக்குப் புத்தகங்களும், பொருட்களும் வழங்கி உதவிக் கொண்டிருந்த கிம்ஜிபாய் பிரஜாபதி, இந்த முறை ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு தங்கம் வழங்கி உதவி இருக்கிறார். கிம்ஜிபாய் எப்படி சம்பாதிக்கிறார் தெரியுமோ?
3) தனது வேலையை கடமைக்குச் செய்யாமல் அனுபவித்துச் செய்தால் இப்படி அனைவரின் அன்புக்கும் பாத்திரமாகலாம். ஷிஜு போல!
4) அர்ஜுனோட அம்மா யாரு? அவங்களைப் பாராட்டணும். அவங்களோட கவலைதானே இப்படி ஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்த உதவியிருக்கிறது. அர்ஜுன் சென்னைப் பையன்!
5)
நடைமுறைக்குச் சாத்தியமானால் இதைவிட மகிழ்ச்சிக்கு அளவேது?
செம்பரம்பக்காம் ஏரி நிரம்பினால் எவ்வளவு சந்தோஷம் வரும்?!! தண்ணீர் மூலம்
டூ வீலரை இயக்கும் முறையை கண்டுபிடித்து உள்ள ராஜபாளையம்
முகில்வண்ணம்பிள்ளை
தெருவை சேர்ந்த முரளிராஜா மகன் ராம் கிஷோர்.
6) அன்னலட்சுமி உணவகம். மதுரையில் இருந்து சென்று சிங்கப்பூரில் வேலை செய்யும் சிங்கப்பூர் மோகன்ராஜ் சொல்லும் புதிய தகவல். அவரே ஒரு பாஸிட்டிவ் மனிதராகவும் இருக்கிறார்.
7) விஞ்ஞான விவசாயி. விதைப்பு முதல் அறுவடை வரை நவீன தொழில்நுட்பங்களை பயன் படுத்தி, சூரிய ஒளி
மின்சாரத்தில் ஏக்கருக்கு 4,500 கிலோ நெல் உற்பத்தி செய்து சாதித்துள்ளார்
மதுரையைச் சேர்ந்த முன்னோடி விவசாயி கிருஷ்ணன்.
8) ரவிச்சந்திரன் என்னும் மனித நேய (சென்னை - ராமாபுரம்) ஆட்டோ ஓட்டுனர்.
9) ஆரஞ்சு விற்று ஆரம்பப்பள்ளி கட்டியவர். ஹஜ(ப்)பா.
10) நந்து. (நன்றி காகிதப்பூக்கள் ஏஞ்சலின்)
11) அவசியமான பணி. பாராட்டப்பட வேண்டிய செயல்.
போற்றுதலுக்கு உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
நன்றி
தம+1
பாராட்டுக்குரிய மனிதர்கள், இளைஞர்கள். அறிமுகத்திற்கு நன்றி.
பதிலளிநீக்குசாதனையாளர்களையும், நல்ல உள்ளங்களையும் போற்றுவோம்
பதிலளிநீக்குஇணைப்புகளுக்கு நன்றி.எல்லா செய்திகளையும் படித்தேன். 'என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்?". இங்கு எல்லாமே வியாபர நோக்கமாக இருப்பதால், இந்த புதியவர்களுக்கு உரிய மரியாதையும் ஊக்கமும் கொடுக்கப் படுவதில்லை.
பதிலளிநீக்குதகவல்களுக்கு நன்றி!
பதிலளிநீக்குஅனைவரும் பாராட்டுக்கு உரியவர்கள்.
பதிலளிநீக்குவாழ்த்துவோம்... பாராட்டுவோம்....
tha.ma.7
பதிலளிநீக்குஇம்மாதிரியான செய்திகளைப் படிக்கும் போது நாமும் இருக்கிறோமே வெட்டியாக என்னும் நினைப்பு வருவதைத் தடுக்க முடியவில்லை. கண்டெடுத்து வழங்கியதற்கு வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குஅனைத்துமே போற்றுதலுக்கும் பாராட்டுக்கும் உரிய தகவல்கள் .மன திடமும் ஆர்வமுமிருந்தா கல்வி கற்க வயது ஒரு தடையில்லை என்பதற்கு நௌரோதிதேவி சாட்சி .ஆஹா !மனித உருவில் இறைவன் !கிம்ஜி பாய் பணம் இருப்போர்கூட மனமில்லாதவர்களாக இருக்கும் காலத்தில் கிம்சி பாய் க்கு சிரம் தாழ்த்திய வணக்கங்கள். நகைகளுக்கு டிஸ்கவுன்ட் அளித்த தீபக்கும் பாராட்டுக்குரியவரே .ஷிஜு போன்ற கண்டக்டர்கள் நம் நாட்டுக்கு தேவை .அர்ஜுனுக்கும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் .தண்ணீரில் ஓடும் வாகனங்கள் சாத்தியமானால் மகிழிச்சியே !..அன்னலட்சுமி உணவகம் என் நண்பர் ஒருவர் சொன்னாங்க விரிவா இங்குதான் வாசிக்கிறேன் ரவிச்சந்திரன் ஆபத்தில் உதவி செய்த நல்ல சமாரியன் தான் ! நந்து பற்றி பாஸிடிவ் செய்திகளில் கூறியதற்கும் நன்றிகள் .நம் தமிழ்நாட்டிலும் நிறைய நந்துக்கள் உருவாக வேண்டும் என்பதே எனது ஆசை .மின்னணு பொருட்கள் மறுசுழற்சி தேவையான ஒன்று நம்நாட்டுக்கு .வணக்கங்கள் ஹஜப்பாவுக்கு .வாழ்த்துக்கள் சூரியஒளி விஞ்ஞான விவசாயிக்கும் .
பதிலளிநீக்குவாராவாரம் தவறாது
பதிலளிநீக்குநம்பிக்கையும் தெம்பும் ஊட்டிப் போவதற்கு
மனமார்ந்த நன்றி
மிக நன்றி எங்கள் ப்ளாக். படிக்கப் படிக்க பாசிடிவ் உணர்ச்சி மேலிடுகிறது. அனைத்து விஷயங்களும் சூப்பர். அர்ஜுன் அண்ட் படிக்காத மேதை அம்மா டாப் க்ளாஸ்.
பதிலளிநீக்குசிறப்பான மனிதர்கள்...... உங்கள் மூலம் பல நல்ல மனிதர்களைத் தெரிந்து கொள்ள முடிவதில் மகிழ்ச்சி....
பதிலளிநீக்குதொடரட்டும் பாசிட்டிவ் செய்திகள்.
நல்ல உள்ளங்கள்.நல்ல சாதனையாளர்கள். நல்ல செய்திகள் ஆட்டோக்காரர் ரவிசந்திரனின் உதவி யாராலும் நினைத்துக் கூட பார்க்க முடியாதது.
பதிலளிநீக்குஇதில் உள்ள பாஸிடிவ் செய்திகள் பலவும் ஆங்கிலத்தில் இருப்பதால் படித்து, புரிந்துகொள்ள தாமதம் ஆகிவிட்டது. அனைத்தும் அருமை. 2, 5 மற்றும் 6 மிகவும் பிடித்துள்ளன. பாராட்டுகள். பகிர்வுக்கு நன்றிகள்.
பதிலளிநீக்குஅர்ஜுன் சின்ன வயதிலும் , படிக்காத மேதை நௌரோதி தேவி எழுபது வயதிலும் அசத்துகிறார்கள் !அனைவரின் சேவை பாராட்டுக்குரியது !
பதிலளிநீக்குஎல்லாமே நல்ல பாஸிடிவ் செய்திகள். சிங்கப்பூரில் அன்னலட்சுமி உண்மையாகவே நாம் கொடுக்கும் பணத்தைத்தான் பெற்றுக்கொள்கிறார்கள். (சமயத்தில் சங்கடமாக இருக்கும் உணர்வைத் தவிர்க்கமுடியாது). அங்கு பணிபுரிபவர்களும் வாலன்டியர்கள்தான் என்று நினைக்கிறேன். (இது வெகுகாலத்துக்கு முன்பு நான் பார்த்த அன்னலட்சுமி). சென்னையிலும் அன்னலட்சுமி உண்டு. தமிழர்களின் (இந்தியாவில் இருக்கும்போது) குணம் தெரிந்ததால், அங்கு பணம் நன்'கொடையாகப் பெற்றுக்கொள்கிறார்கள் (சாப்பிட்ட சாப்பாட்டுக்கு). ஒரு மீல்ஸ் 450 என்று ஞாபகம். இங்கு பணிபுரிபவர்களும், சமைப்பவர்களும் வாலன்டியர்கள்தான். இது சிகப்பி ஆச்சி பில்டிங்கில் (தாஜ் பக்கம்) இருக்கிறது.
பதிலளிநீக்குகல்விக்குத் தடையில்லை வயதில்லை....கல்வி மட்டுமல்ல கற்பதற்கும்...நொரோதி தேவி!!!
பதிலளிநீக்குஹஜ்ஜப்பா பற்றி எங்கள் தளத்திலும் முன்பு எழுயிருக்கிறோம்....இங்கும் வந்த நினைவு...
தண்ணீரில் வண்டிகள் ஓடுவது பற்றி முன்னரேயே வந்தது...ஆனால் அது பின்னர் சாத்தியப்படவில்லை...சாத்தியமானால் நன்மையே...
கீதா: அன்னலட்சுமி இங்கும் இருக்கின்றதே..சிவானந்தா சுவாமிகள் தொடங்கியது...அதில் செர்வ் செய்பவர்கள் எல்லோரும் நல்ல வேலையில் இருப்பவர்களே. இங்கு சாப்பிட்டிருக்கின்றேன். உறவினர்களின் தயவால். 5 பேர் சப்பிட்டதற்கு (பஃபே) மூவாயிரத்துச் சொச்சம்....இப்போது அன்ன லட்சுமி மாறியிருக்கின்றது. ஆனால் சாப்பிட்டுவிட்டு நாம் கொடுப்பதைக் கொடுக்கலாம் என்றுதான் முதலில் இருந்ததாகக் கேள்வி ஆனால் மெனு கார்டில் ரேட் போடப்பட்டுள்ளது இப்போது. அந்த ரேட் தான் கொடுக்க வேண்டும். இது புதிய தகவல் ..