நாங்க பனீர் கிரேவியை இதுவரை...
(சிங்கம் பட டயலாக் ராகமும், அதே ராகத்தில் இப்போது வரும் அல்ப தேர்தல் விளம்பரங்களும் நினைவுக்கு வருகிறதா)
முதல்
முறை இப்படி மிக எளிமையாகச் செய்து விட்டாலும், எடுத்து வைத்திருக்கும்
குறிப்புகளை வைத்து ஒவ்வொரு முறையாக இனி முயற்சிக்க வேண்டும்!
வாங்கி
வந்திருந்த பனீரைத் துண்டுகள் போட்டுக் கொண்டோம். வாணலியில் கொஞ்சம் வெண்ணெய்
வைத்து அதில் பனீரைப் போட்டுத் திருப்பி எடுத்து வைத்துக் கொண்டோம்.
கால்கிலோ பனீருக்கு 2 அல்லது இரண்டரை ஸ்பூன் காரப்பொடி போதும்.
கால்கிலோ பனீருக்கு 2 அல்லது இரண்டரை ஸ்பூன் காரப்பொடி போதும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, பட்டை, லவங்கம் தாளித்துக் கொண்டு, அரைத்து வைத்திருந்த பொருட்களை ஒவ்வொன்றாக முறையே இஞ்சி,
வெங்காயம்,
தக்காளி
ஆகியவற்றைப் போட்டு, காரம், உப்பு தேவையான அளவு சேர்த்துக் கொண்டு, புரட்டி நன்றாக எண்ணெய் / வெண்ணெய் பிரியுமளவு கொதிக்க வைத்துக் கொண்டு, ஒரு கப் தண்ணீர் ஊற்றி, பனீரை அதில் போட்டு, ஒரு கொதி வந்தவுடன்,
ஃபிரெஷ் க்ரீம்
அதில் சேர்த்து, மீண்டும் ஒரு கொதி வந்ததும்
இறக்கிச்...
இறக்கிச்...
சப்பாத்தியுடன் சாப்பிட்டு விட்டோம்!
(இறக்கும்போது இதில் கஸூரி மேதி போடுவார்களாம். எங்களிடம் அது இல்லை. எனவே போடவில்லை!)
படங்கள் முன்னே பின்னே மாறியிருப்பதற்கு மன்னித்துக் கொள்ளவும்!
மகாமக எழுத்து, வாசிப்பு, பயணங்களால் வலைப்பூ பதிவுகளைக் காண தாமதம், பொறுத்துக்கொள்க. ரசித்தேன், ருசித்தேன். நன்றி.
பதிலளிநீக்குஅருமை. ஏறத்தாழ இதே முறைதான் நான் செய்வதும். மாறிய படங்களை வரிசைப்படுத்துவது அத்தனை சிரமமா என்ன :)?
பதிலளிநீக்கு
பதிலளிநீக்குபதிவின் ஆரம்பம் மிக நகைச்சுவையாக வந்து இருக்கிறது .....பனீர் கிரேவி செய்முறை மிக தெளிவாகவும் படங்ளுடன் மிக அருமையாகவும் வந்து இருக்கிறது
இந்த பனீர் ,நல்ல கொழுப்பு வகையை சேர்ந்தவை தானா,அனைவரும் சாப்பிடலாமா ?
பதிலளிநீக்குரசித்தேன்.....
பதிலளிநீக்குகடைசியில் கசூரி மேத்தி கிடைக்காவிட்டால் மல்லித்தழை கூட தூவலாம்!நானும் இதே முறையில் தான் பனீர் கிரேவிவைப்பேன், ஆனால் கிரிம் சேர்ப்பதில்லை!அடுத்த தடவை கிரிம் விட்டு செய்து பார்க்கின்றேன்!
பதிலளிநீக்குபனீர் க்ரேவி இவ்வளவு எளிதா? செய்துபார்க்கிறேன். நன்றி ஶ்ரீராம்.
பதிலளிநீக்குபடங்களே அழகாக இருக்கின்றது நண்பரே.
பதிலளிநீக்குநீங்கள் போராமைப்படவைக்கின்றிர்கள் ...அருமை
பதிலளிநீக்குவாசனை இங்கே அடிக்குது.... super
பதிலளிநீக்குஏனோ தெரியாது இது எனக்கு பிடிக்காத ஒன்று!
பதிலளிநீக்குபனீர் மேலே அவ்வளவு பிடித்தம் இல்லை. பெண்ணுக்குச் சொல்கிறேன்.
பதிலளிநீக்குஅருமையான படங்கள். சுவையாகவும் இருந்திருக்கும்.
ஆஹா அருமை ஐயா.
பதிலளிநீக்கு"செய்து சாப்பிட்டு விட்டோம்... செய்து சாப்பிட்டு விட்டோம்...செய்து சாப்பிட்டு விட்டோம்." என்று எழுதியிருப்பதைப் பார்த்தால், ரொம்பக் கஷ்டப்பட்டு சாப்பிட்ட த்வனி வருகிறதே.... செய்முறை ரொம்ப சுலபமாகத்தான் இருக்கு. எப்போதும் கீதா அவர்களின் விளக்கமான பின்னூட்டத்தையும் சேர்த்தே படிப்பேன்... இன்னைக்கு அதைக் காணலை. அவர் வீட்டு கணிணி சதி செய்கிறதோ என்னவோ....
பதிலளிநீக்குஆஹா !சூப்பரா இருக்கே ..சமீபத்தில்தான் பனீர் சாப்பிட ஆரம்பிச்சேன் .வெறுமனே சீஸ் மாதிரி சாப்பிட்டதில் பிடிக்கலை..தோசையில் கூட இதை துருவி போடறாங்க சிலர் ..குஜராதிஸ் ஸ்ப்ரிங் ரோல் செய்றாங்க இதில் ஆனா காரசாரமா நம்ம ஸ்டைலில் .நேற்று பாலக் பனீர் செய்தேன்
பதிலளிநீக்குஇன்னிக்கு இந்த ரெசிப்பி செய்ய ஐடியாவுக்கு நன்றி
செய்வது அத்தனை கஷ்டமில்லை! சுலபம் தான். அரைக்கும்போது சில முந்திரிப் பருப்புகளையும் சேர்த்துக் கொள்ளலாம்! கசூரி மேத்தி கிடைக்கவில்லையெனில் பரவாயில்லை - தனியா இலைகளை பொடிப்பொடியாக நறுக்கி மேலே தூவலாம்!
பதிலளிநீக்குஎன்னையும் இப்பதிவில் குறிப்பிட்டதற்கு நன்றி!
ஐயோ... பிடிக்காது...
பதிலளிநீக்குஎங்களது விருப்பமான உணவு ....நானும் முந்திரி சிறிது அரைத்து சேர்ப்பேன் ...
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஐயா...
பதிலளிநீக்குமாறிய படங்களை அடுக்க சற்றே சிரமமாகத்தான் இருந்தது! நன்றி ராமலக்ஷ்மி.
பதிலளிநீக்குரசித்ததற்கு நன்றி மதுரைத் தமிழன்!
பதிலளிநீக்குதினமுமா சாப்பிடப் போகிறோம்? எப்பவாவதுதானே? சாப்பிடலாம் பகவான்ஜி!
பதிலளிநீக்குநன்றி நிஷா. நீங்களே இப்படித்தான் செய்வீர்கள் என்பது கேட்க உற்சாகமாக இருக்கிறது.
பதிலளிநீக்குநன்றி கீத மஞ்சரி.
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி.
பதிலளிநீக்குநன்றி மீரா செல்வக்குமார்.
பதிலளிநீக்குநன்றி ஹேமா (HVL).
பதிலளிநீக்குநன்றி புலவர் ஐயா.
பதிலளிநீக்குநன்றி வல்லிமா.
பதிலளிநீக்குநன்றி வைசாலி செல்வம்.
பதிலளிநீக்குநன்றி நெல்லைத் தமிழன். கஷ்டப்பட்டு எல்லாம் சாப்பிடவில்லை. மிகவும் இஷ்டப்பட்டே சாப்பிட்டோம். :))))
பதிலளிநீக்குநன்றி ஏஞ்சலின். கடைகளில் இதில் காரம் சற்று கம்மியாகவே போடுகிறார்கள் என்று நாங்கள் சற்றே தூக்கலாகக் காரம் சேர்த்தோம்.
பதிலளிநீக்குநன்றி வெங்கட். முந்திரி அரைத்து விடலாம் என்று சொன்னார்கள். அன்று அதுவும் கைவசம் இல்லை.. அடுத்த முறை முயற்சி செய்ய வேண்டும்.. மேலதிக டிப்ஸ்களுக்கு நன்றி வெங்கட்.
பதிலளிநீக்குஏன் டிடி? நல்லா இருக்கே... ஏன் பிடிக்காது?
பதிலளிநீக்குநன்றி அனுராதா பிரேம்.
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குநான் பனீர் ஒரு கிலோவுக்கு ஒருகிலோ வெங்காயம்,ஒருகிலோதக்காளி என தான் சேர்ப்பேன்! முதலில் வெங்காயத்தையும்,தக்காளியையும் சின்னதாய் கட் செய்து தனித்தனியே சிறிது எண்ணெயில் வதக்கி ஆறவைத்து தான் மிக்சியில் கூளாக்கி எடுப்பேன்,மீதியெல்லாம் நீங்க சொன்ன படிதான்!
பதிலளிநீக்குபக்குவமும்,காரமும் சரியாக இல்லாவிட்டால் இந்த பன்னீர் கிரேவி சுவையாக இருக்காது,சுள்ளென சற்று காரமாயிருந்தால் பூரி,சப்பாத்திக்கு மட்டுமல்ல சோற்றுக்கும் சேர்த்து சாப்பிட சுவையாக இருக்கும்,
//5 பெரிய வெங்காயம், நாலு தக்காளி, ஒரு பூண்டுக் கொத்து, // எத்தனை பேருக்கு? மசாலா அதிகம் இல்லையோ! :)
பதிலளிநீக்குசிங்கம் பட டயலாக் ராகமும், அதே ராகத்தில் இப்போது வரும் அல்ப தேர்தல் விளம்பரங்களும் நினைவுக்கு வருகிறதா)// ஹஹஹஹஹ்ஹ் பன்னீர் க்ரேவிக்கு எப்படியொரு ஆரம்பம்!!! ரசித்தோம்!!!
பதிலளிநீக்குதுளசி : எங்கள் வீட்டிலெல்லாம் பனீர் செய்வதில்லை. ஒன்லி கேரள வகையறாக்கள். கீதா எங்கள் வீட்டிற்கு வந்தாலும் சரி, நாங்கள் அவர் வீட்டிற்குப் போனாலும் சரி கிடைக்கும்
கீதா: அதெப்படி இவ்வளவு நாள் நீங்கள் பன்னீர் சாப்பிடாமல் இருந்தீர்கள் வீட்டில் செய்யாமல் ஆச்சரியம்தான்..
அரைக்கும் போது முந்திரிப்பருப்பு அரைத்தால் க்ரேவி ரிச்..பட்டையும் சோம்பு சிறிதும் வறுத்துப் பொடி செய்து வதக்கும் போது போட்டு வதக்கினால் அதுதான் பட்டர் மசாலாவின் மசாலா டேஸ்ட். ஹோட்டல் ரெசிப்பி போல இருக்கும். தக்காளி வெங்காயம் பச்சையாக அரைப்பதை விட கொஞ்சம் வதக்கி அரைத்தால் சுவைகூடும். கசூரி மேத்தியும் பனீர் பட்டர் மசாலாவின் ஸ்பெஷாலிட்டி. கொத்தமல்லி மேலே தூவலாம். வீட்டில் மாதத்தில் பனீர் பட்டர் மசாலா...இல்லை என்றால் வேறு ரெசிப்பிஸ் பனீர் கொண்டு என்று ஒரு முறையாவது இருக்கும்.
சூப்பர் :)
பதிலளிநீக்கு