வியாழன், 11 பிப்ரவரி, 2016

அன்றாட வாழ்க்கையும் ஆண்ட்ராய்ட் போனும்!

  

                           Image result for android phone images Image result for android phone images
 
 
ஆண்டிராய்ட் ஃபோன் வந்தாலும் வந்தது.  அதில் இருக்கும் ஏகப்பட்ட 'ஆப்'ஸ் நம்மைத் தீயாய் அணைத்துக் கொண்டது.  லேண்ட்லைன் மட்டும் இருந்த, அல்லது அதுவும் இல்லாதிருந்த காலத்தை எண்ணி ஏங்குகிறது மனம்.
                       Image result for landline phone images   Image result for landline phone images Image result for landline phone images
 
தொலைத் தொடர்புக்கு என்று உண்டான சாதனம்!   இன்றோ?   அதன் சின்னத் திரையில் உலகமே அடங்கி விடுகிறது.

ஒரு வீட்டுக்குள் நுழைந்து பாருங்களேன்..  எல்லோரும் ஆளுக்கொரு அலைபேசியின் திரையில் ஆழ்ந்து போயிருப்பார்கள்.  நிமிர்ந்து நம்மைப் பார்ப்பது சில நொடிகள்தான்.  பின்னர் மீண்டும் தலை கவிழ்ந்து அலைபேசித் திரையில் மூழ்கி விடுவார்கள். 

நிமிர்ந்து பார்க்காமல்தான், அல்லது நிமிர்வதும், குனிவதுமாகத்தான் நலம் விசாரிப்பு,  பேச்சு எல்லாம்.  வீட்டுக்கு வந்திருப்பவரும் கூட, கொஞ்ச நேரத்தில் அந்த வீட்டில் வைஃபை இருக்குமாயின் அவரின் அலைபேசியை எடுத்துத் திறந்து அவரும் அதில் மூழ்கி விடுவார்.
 
 வீட்டுக்குள்ளேயே ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதே மிக மிக மிக அபூர்வமாகி விட்டது.  இளைஞர்களின் இரு கை விரல்களும் அலைபேசியின் 'கீ பேட்'களில் விளையாடும் வேகம் இருக்கிறதே..  அப்படி என்னதான், யாரிடம்தான் 'உரை'யாடுவார்களோ!

அவர்கள் படிப்பையும் கெடுத்து, உறவின் மேன்மையையும் உணரவைக்காமல் கெடுத்து, நேரத்தையும் வீணாக்கி...  படுத்துக் கொண்ட பின்னும் கைகளில் அலைபேசி.  திரையில் கண்கள்.  விரல்களில் 'கீ பேட்'கள்.  தூங்குவதோ நள்ளிரவு தாண்டி..
இப்போதெல்லாம் அதிகாலைத் துயிலெழுவோர் மிகச் சொற்பம்தான்.  அதுவும் வார இறுதி நாட்களாக இருந்து விட்டால்...  ஐயோடா!  படுக்கையிலிருந்து எழும் போதே கைக்குழந்தையைத் தேடுவது போல ஃபோனைத் தேடிக் கைகள் துழாவும்!

முன்பெல்லாம் தொலைக் காட்சித் தொடர்கள் பற்றி புலம்பாதோர் இருக்க மாட்டார்கள்.  அதையெல்லாம் தூக்கிச் சாப்பிட்டு விட்டது இன்றைய ஆண்ட்ராய்ட் அடிமைத்தனம்.  வீட்டுக்கு வந்திருக்கும் விருந்தாளி சீரியல் பார்க்க மாட்டார்.  அதைத் துறந்துதானே இங்கு இவர்களைப் பார்க்க வந்திருக்கிறார்?  ஆனால் இப்போது என்னடாவென்றால் இவரும் ஆண்ட்ராய்டில் ஆழ்ந்து விடுவார்.  சீரியல்களை விட தீதான மோகம்!  தொலைகாட்சி இடியட் பாக்ஸ் என்றால் ஆண்ட்ராய்ட் ஃபோனை என்னவென்று அழைக்கலாம்?

                               Image result for subway surf images    Image result for temple run  images Image result for angry birds images 
 
கேம்ஸ் முதல்பட்சமாக அடிமை கொள்ளும்.  ஸப் வே ஸர்ஃப், ஆங்க்ரி பர்ட்ஸ், டெம்பிள் ரன் என்ற கேம்ஸ் மக்களை ஆட்டி வைக்கும்.  அதில் தற்போது பிரபலம் கிளாஷ் ஆஃப் கிளான்ஸ்.  இந்த ஆட்டத்தில் கூடுதல் கஷ்டம், இதை ஆன்லைனில்தான் விளையாட முடியும்.  
                                                                   Image result for clash of clans images
 
சாதாரணமாகவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் ஃபிராடு அடிப்பவை.  என்னுடைய 5 ஜி பி இலவச நேரம் ஐந்தாம் தேதிக்குள் முடிந்து விட்டது என்று அறிவிப்பு வரும்.  "காசு கூட கட்டறியா?  இல்லை, குறைந்த வேகத்தில் இணைப்பைப் பெற, மோடம் ரீஸ்டார்ட் செய்யறியா?"  என்று கேட்கும்!  இது மாதிரி ஆன்லைனில் விளையாடும் விளையாட்டுகள் இந்த இலவச நேரத்துக்கான முதல் எமன்.
 
ஆண்ட்டிராய்டுகளில் உள்ள 'ப்ளே ஸ்டோர்' மூலம் எத்தனை செயலிகளை நிறுவ முடியுமோ அத்தனையையும் முயற்சி செய்து பார்த்து, அலைபேசியின் இடத்தையும், நம் நேரத்தையும் வீணடிப்போம்.  இதில் காட்டும் ரத்த அழுத்தத்தையும், நாடித்துடிப்பையும், ஜோசியங்களையும் நம்புவதற்கும் ஆள் இருக்கிறது!
 
அதற்காக உபயோகமே இல்லை என்று சொல்ல முடியாது.  ஏகப்பட்ட உபயோகங்கள் இருக்கின்றன.  எதையும் நாம் உபயோகிக்கும் விதத்தில்தானே இருக்கிறது!

               Image result for whatsapp imagesImage result for whatsapp images
 
ஆண்ட்ராய்டின் அடுத்த வசதியான 'வாட்ஸப்' நமக்கு அறிமுகமாகும்போது ஒரு பரபரப்புத் தோன்றும்.  நம்மிடம் இருக்கும் தொடர்பு எண்களில் யார் யாரிடம் வாட்சப் இருக்கிறது என்று பார்ப்பதில் தொடங்கும்.  அவர்களுக்கு அவசரம் அவசரமாக ஒரு ஸ்மைலியோ, 'Hi' யோ அனுப்புவோம்.
 
அப்புறம் Forward வெள்ளம்தான்.   நமக்கு அலுத்துப் போகும் நேரம் யாராவது ஒரு புதிய நண்பர் 'வாட்சப்'புக்கு வந்து நம்மை அகழ்ந்து எடுத்திருப்பார்.   இதுவரை நாம் பார்த்த, அனுப்பிய Forwards எல்லாம் அவருக்குப் புதிதாகத் தெரிவதால் அவை மீண்டும் நம்மிடையே படை எடுக்கும். இந்த வாட்சப் வசதியில் க்ரூப் அமைப்பது பற்றித் தனிப்பதிவு கட்டாயம் உண்டு!
 
இது போல வரும் Forward களில் வரும் வீடியோக்கள் அலைபேசியின் நினைவகத்தை அடைத்துப் பிரச்னையை உண்டாக்கும்போதுதான் அடுத்த கட்டம் தோன்றும்.

                                        Image result for memory card images    Image result for memory card images
 
 
மெமரி கார்ட்.  இது ஒரு அரக்கன்.  ஒரு காலத்தில் கணினிக்கான 5 MB நினைவகத்தைக் கப்பலில் கொண்டு வந்தார்களாம்.    இப்போதோ 64 GB, 128 GB எல்லாம் மிகச் சிறிய 'சிப்'களில் அடக்கம்.  அலைபேசியின் உள் நினைவகமே 16, 32 ஜி பிக்கள் இருப்பவை கிடைக்கின்றன. 
உள்ளங்கையில் உலகம்.  அதன் ஆச்சர்யங்களும் பிரமிப்புகளும் நம்மை அடிமை கொண்டு சீரழிக்கத் தொடங்குகின்றன.
 
அதை உபயோகமான வழியில் பயன்படுத்தினாலாவது தேவலாம்.  பொழுது போக்கு, பொழுது போக்கு, பொழுது போக்குதான்!

எவ்வளவு லேட்டஸ்ட்டான அலைபேசி வாங்கினாலும் அதன் வாழ்வு ஓரிரு வருடங்கள்தான். அதற்குள் இந்த அலைபேசியை பழையதாக்கு, மேம்பட்ட வசதிகளுடன் புதிய அலைபேசிகள் வந்து நம் கையை அரிக்க வைக்கும், கடிக்க வைக்கும்!
 
சாலையில், ஹோட்டலில், பஸ்ஸில், எலெக்ட்ரிக், மெட்ரோ டிரெயின்களில் பாருங்கள்..  எல்லோரும் - அல்மோஸ்ட் எல்லோரும் - காதில் ஒரு இயர் ஃபோனுடன் தனி உலகத்தில் ஆழ்ந்திருப்பார்கள்.  பாட்டுக் கேட்பவர்கள் பாதி.  ப்ளூ டூத்தில் பேசிக் கொண்டிருப்பவர்கள் மீதி!
 
ரோபோக்கள் உலகை ஆள்வது போலப் படம் எடுத்திருக்கிறார்கள்.  இப்போது இந்தச் சிறிய சாதனங்கள் மனிதனை அடிமை கொள்வதை என்னவென்று சொல்ல..
 
 
 
 
பின்குறிப்பு :  கீதா சாம்பசிவம் மேடம்...  "என்னிடம் ஆண்டிராய்ட் ஃபோன் இல்லை.. சாதாரண ஃபோன்தான்" என்கிற வரியைப் பின்னூட்டத்தில் தவிர்க்கவும்!! 


                                                                         Image result for tongue smileys images

62 கருத்துகள்:

  1. Smartphone takes the smartness out of people :-) பல நேரங்களில் என்று வேண்டுமானால் சொல்லலாம்.
    உங்கள் கருத்து ஒவ்வொன்றோடும் எனக்கு உடன்பாடே சகோ.. இன்னும் என்னவெல்லாம் ஆக இருக்கிறதோ..

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு. காலை 6 மணிக்கு வேலைக்குப் போகும் பெண்கள் செல்போனை காதில் வைத்துக்கொண்டேதான் போகின்றன. அந்நேரத்தில் யாருடன் பேசுவார்களோ?

    பதிலளிநீக்கு
  3. நான் வைத்திருப்பது ஐபோன் 6 ஆனால் நீங்கள் சொன்னபடி எல்லாம் நான் உபயோகிப்பதில்லை. எனது ப்ளான் அன்லிமிட் டேட்டா & கால். ஆனால் மாதம் நான் மொத்தமாக கால் செய்யும் நேரம்மட்டும் 15 லிருந்து 30 நிமிடங்கள் மட்டுமே நான் ஐபோனை அதிகம் பயன்படுத்துவது புதிய இடங்களுக்கு செல்லும் போது GPS க்காக மட்டுமே...

    பதிலளிநீக்கு
  4. வாட்ஸ் அப் குடும்ப செய்திகளை மட்டுமே பறிமாறிக் கொள்ள வேறு எந்த செய்திகளையும் எனக்கு கண்டிப்பாக பார்வோட் செய்யக்கூடாது என்று சொல்லி இருப்பதால் அநாவசிய மெஜேஜ் வருவதில்லை

    பதிலளிநீக்கு
  5. ஆஹா..எனக்கும் அந்த பயம் வந்துவிட்டது....படிக்கவேண்டிய புத்தகங்கள் நிறைந்து விட்டது... இனி அலைபேசி நேரங்களை குறைத்துவிட உத்தேசம்...நல்ல பதிவு...

    பதிலளிநீக்கு
  6. மிகச்சரியான அலசல். தொலைக்காட்சிப் பெட்டிகளை விடவும் ஆபத்தானவை இந்த அலைபேசிகள். விருந்தோம்பல் மட்டுமல்ல... ஒரு குடும்பத்தில் ஒருவருக்கொருவர் அனுசரணையான உரையாடல் கூட இப்போது காணாமல் போய்விட்டது. வருத்தம் தரும் தகவல்கள்.

    பதிலளிநீக்கு
  7. நான் android போனை உபயோகிக்கக் கற்றுக்கொண்டதே என்னுடைய பேரன் (வயது 9) மூலம் தான். என்னுடைய மனைவிக்கு அது கூடத் தெரியாது. தற்போதும் landline போன் போல் நம்பர் அழுத்தி கூப்பிட மட்டும் தெரியும். அவனுக்கு பள்ளியில் இருந்து வந்ததும் முதல் வேலை போன் எடுத்து விளையாடுவது தான்.
    walkman Rubik cube Mp3 player Ipod வரிசையில் தற்போது android போன். அடுத்து என்னவோ?
    --
    Jayakumar

    பதிலளிநீக்கு
  8. வணக்கம் நண்பரே அற்புதமான விடயத்தை சொன்ன நல்ல பதிவு இன்று சொந்த பந்தங்களுடன் பேசி மகிழ்வது மிகவும் குறைந்து விட்டது இனி போகும் காலங்களில் செல்லில் பேசுவதே உயர்வு என்ற நிலை வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை.

    சாலையில் நடந்து செல்லும் பொழுதே இன்றைய இளைஞர்களின் விரல்கள் வீணை மீட்டுவதுபோல் செல்லை தீண்டிக்கொண்டே நடக்கின்றார்கள் இது எதில் போய் முடியப்போகுதோ.....

    பதிலளிநீக்கு
  9. தெளிவான அலசல். அத்தியாவசியத்துக்கு என்பது போய் நம்மை ஆளுகிறது ஆன்ட்ராய்ட் :(.

    பதிலளிநீக்கு
  10. இந்த ஆண்ட்ராய்ட் ஃபோன் ஒரு BOON ஆ BANE ஆ. நல்ல அலசல்

    பதிலளிநீக்கு
  11. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  12. //பின்குறிப்பு : கீதா சாம்பசிவம் மேடம்... "என்னிடம் ஆண்டிராய்ட் ஃபோன் இல்லை.. சாதாரண ஃபோன்தான்" என்கிற வரியைப் பின்னூட்டத்தில் தவிர்க்கவும்!! //

    க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர், நிஜம்மாவே எங்களிடம் இந்தத் தொல்லைபேசிகள் எல்லாம் இல்லை. வாட்ஸ் அப்னு கேட்டால் மேலே கூரைனு பதில் அளிப்போம்! இந்த அலைபேசியே பழைய ஜென் அலைபேசிக்குக் கொஞ்சம் உடம்பு சரியில்லைனு அதே ஜென் புதிய மாடலைச் சில மாதங்கள் முன்னர் வாங்கினோம். விலை ஆயிரத்துக்குள் தான். காமிரா வசதி இருப்பதால் அதைத் தேர்வு செய்தோம். பிரச்னை என்னன்னா அதிலே இருந்து எஸ் எம்எஸ் பண்ணவே முடியலை! சரி நாமதான் க.கை.நா. அப்படினு நினைச்சு வெங்கட் நாகராஜ் வந்தப்போ அவரிடம் கேட்டால் ஹிஹிஹிஹிஹி, அவருக்கும் வரலை! இப்போ அந்தப் புது அலைபேசி தூங்குது! பழைய அலைபேசியில் அழைப்பவர்கள் அது எப்போப் பார்த்தாலும் ஸ்விட்ச் ஆஃப்னு வருது எனப் புகார் சொல்றாங்க! ஆனாலும் அதைத் தான் வைச்சிட்டிருக்கேன். ஹைதரை விடப் பழைய கால அலைபேசி! :)))))

    பதிலளிநீக்கு
  13. எனது போனில் அனைத்தும் இருந்தாலும் அவசியம் கருதி மட்டுமே பயன் படுத்துவேன்!வாட்சப்,வைபர் உட்பட இலவச தொடர்பாடல் என்பதால் அவசியத்துக்கு மட்டும் தான் அவைகளை பயன் படுத்துவதே,

    சிந்திக்க வேண்டிய விடயத்தினை பகிர்ந்தமைக்காக நன்றி ஐயா!

    பதிலளிநீக்கு
  14. வாசிப்பிற்கு இடையே இடையே முறுவலிக்காமலிருக்க முடியவில்லை. அனுபவித்து எழுதியிருக்கிறீர்கள். அனுபவித்து அறியாததும் உண்டு. (உம்.. படுக்கையிலிருந்து எழும் போதே கைக்குழந்தையைத் தேடுவது போல...)

    லேண்ட் லைன் டயல் போன் படம் ஒன்று போட்டிருக்கிறீர்களே, அதற்கும் முன்னால் டயல் வட்டம் இல்லாமலேயே அந்தப் பகுதியே மழமழவென்று ஒரு இன்ஸ்ட்ரூமெண்ட் (ஃபோன்) இருந்தது. அது நம்பர் ப்ளீஸ் காலம். டெலிபோனின் ரிஸீவரை எடுத்து காதில் வைத்துக் கொண்டால், தொலைபேசி இணைப்பகத்திலிருந்து "நம்பர் ப்ளீஸ்.." என்று ஆப்பரேட்டரின் குரல் கேட்கும். உடனே நமக்கு வேண்டிய நம்பரைச் சொன்னால் அந்த நம்பருக்கான இணைப்பைக் கொடுப்பார்கள்.

    இது போதும். தொலைபேசியின் இன்றைய வளர்ச்சி வரை ஒரு பதிவு போடலாம் என்றிருக்கிறேன். மற்ற விவரங்கள் அந்த பகுதிக்காக ரிஸர்வ்டு.

    பதிலளிநீக்கு
  15. என்னிடம் ஆண்டிராய்ட் ஃபோன் இல்லை.. சாதாரண ஃபோன்தான்!!

    (கீதா மேடத்துக்குத்தானே தடா, எனக்கு சொல்லலியே நீங்க.... :-))) )

    பதிலளிநீக்கு
  16. 1
    உண்மையைக்கூறும் உயர்வான பதிவு. ஆங்காங்கே சிரிப்புத்தான் வருகிறது.

    >>>>>

    பதிலளிநீக்கு
  17. 2
    //ஒரு வீட்டுக்குள் நுழைந்து பாருங்களேன்.. எல்லோரும் ஆளுக்கொரு அலைபேசியின் திரையில் ஆழ்ந்து போயிருப்பார்கள். நிமிர்ந்து நம்மைப் பார்ப்பது சில நொடிகள்தான். பின்னர் மீண்டும் தலை கவிழ்ந்து அலைபேசித் திரையில் மூழ்கி விடுவார்கள். //

    மிகச்சரியாகவே சொல்லியுள்ளீர்கள். ரஸித்தேன், சிரித்தேன்.

    //வீட்டுக்கு வந்திருப்பவரும் கூட, கொஞ்ச நேரத்தில் அந்த வீட்டில் வைஃபை இருக்குமாயின் அவரின் அலைபேசியை எடுத்துத் திறந்து அவரும் அதில் மூழ்கி விடுவார்.//

    ஆஹா, மிகவும் கரெக்ட் ! :)

    >>>>>

    பதிலளிநீக்கு
  18. 3
    //படுக்கையிலிருந்து எழும் போதே கைக்குழந்தையைத் தேடுவது போல ஃபோனைத் தேடிக் கைகள் துழாவும்!//

    வாஸ்தவம் தான்.

    அதைவிட வேடிக்கை என்னவென்றால், சமையல் செய்யும் பெண்கள் சமையல் அறையிலேயே இதையும் ஒரு கையில் பிடித்துக்கொண்டே சமையல் செய்கிறார்கள் என என்னால் நன்கு அறிய முடிகிறது.

    வாட்ஸ்-அப் பில் எந்த மெஸ்ஸேஜ் அவளுக்கு நான் கொடுத்தாலும் உடனடியாக அது டபுள் டிக் ஆகிவிடும்.

    ஒரு நாள் அவளிடம் இதுபற்றி உரிமையுடன் கேட்டே விட்டேன். அதற்கு அவள் சொன்ன பதிலை நினைத்து இப்போதும் சிரிப்புத்தான் எனக்கு வருகிறது.

    ”ஆமாம், மாமா, அது கைக்குழந்தைபோல எப்போதும் என் கை விரல்களிலேயேதான் இருக்கும். அடிக்கடி கைக்குழந்தைக்குக் கட்டிவிடும் பேம்பரில் ஈரமாகியிருக்கிறதா எனப் பார்ப்பதுபோல, இந்த மொபைல் ஃபோனில் ஏதேனும் புதிய செய்திகள் வந்திருக்கிறதா எனப் பார்ப்பதுதான் என் மிக முக்கியமான வேலையாக உள்ளது” என்றாள். :)

    >>>>>

    பதிலளிநீக்கு
  19. 4

    http://gopu1949.blogspot.in/2012/04/2-of-2.html

    1970க்கு முன்பு திருச்சி மாநகரிலேயே லேண்ட்லைன் போன்களில் டயலிங் வசதி ஏதும் கிடையாது. அந்த இடம் சப்பையாக மட்டுமே இருக்கும். அதைப் பற்றிய சுவாரஸ்யமான செய்திகளை என் மேற்கண்ட பதிவின் இடைய சிகப்புக்கலர் எழுத்துக்களில் ஹை-லைட் செய்து காட்டியுள்ளேன்.

    >>>>>

    பதிலளிநீக்கு
  20. 5
    'அன்றாட வாழ்க்கையும் ஆண்ட்ராய்ட் போனும்!' என்ற தலைப்பினில், இன்றைய யதார்த்தமான நம் வாழ்க்கை முறையை, மிக அருமையாகக் கொடுத்து அசத்தியுள்ளீர்கள்.

    மனம் நிறைந்த பாராட்டுகள் + நல்வாழ்த்துகள், பகிர்வுக்கு நன்றிகள் ..... ஸ்ரீராம் ஜயராம் ஜய ஜய ராம்.

    அன்புடன் VGK

    பதிலளிநீக்கு
  21. உள்ளங்கையில் உலகம். அதன் ஆச்சர்யங்களும் பிரமிப்புகளும் நம்மை அடிமை கொண்டு சீரழிக்கத் தொடங்குகின்றன.--அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது..நண்பரே..

    பதிலளிநீக்கு
  22. உள்ளங்கையில் உலகம். அதன் ஆச்சர்யங்களும் பிரமிப்புகளும் நம்மை அடிமை கொண்டு சீரழிக்கத் தொடங்குகின்றன.--அதுதான் நடந்து கொண்டு இருக்கிறது..நண்பரே..

    பதிலளிநீக்கு
  23. சொன்ன விஷயம் நியாயம்தான். இவ்வளவு பேசுவதற்கு என்ன இருக்கிறது? இத்தனை பாட்டு கேட்பது தேவையா? யாரைப்பார்த்தாலும் ஒரு ஹெட்போனுடன் பாடலில் அமிழ்ந்திருக்கிறார்கள். எல்லோரும் தனித்தீவாகிவிட்டார்கள். ஸ்மார்ட்போன் செய்திகளைப்பார்துச் சிரிக்கப் பழகிவிட்டார்கள். உறவினர்களுடன் பேசுவது குறைந்துவிட்டது. எல்லாம் உண்மைதான்.

    இது எல்லாம் தொலைக்காட்சிக்கும் பொருந்துமல்லவா? 80களில், ஞாயிறு 3 மணிக்குமேல் கடைகள் இருக்காது. எல்லோரும் தூர்தர்ஷனில், ஓசி படம் பார்க்கப்போய்விடுவார்கள். அதுபோல், செவ்வாய் நாடகமும், வெள்ளி(?) ஒளியும் ஒலியும். அப்புறம் எல்லாத் தொலைக்காட்சிகளிலும் படம், சீரியல் வந்ததும், உறவினர்கள் பேசினாலே அது தொந்தரவாக நினைக்கும் எண்ணம் தோன்றியது. மாலை 6-10 வரை, யார் வீட்டிலும் நிச்சயமாக உளமார்ந்த வரவேற்பு இருக்காது. அப்படியே வந்தாலும், சீரியல் கதைகளைப் பேசினால்தான் நல்லது. இந்தக்கூத்தை யார் சொல்வது? சில சமயம், அம்மாகூட, இப்போ சீரியல் பார்க்கிறேன்.. 1 மணி கழித்து போன் செய் என்று சொல்வது நடக்காத இடம் உண்டா?

    இருந்தபோதிலும், இந்தச் சாதனங்களும் விஞ்ஞான வளர்ச்சியும் இருக்காவிட்டால், ஸ்ரீராமோ, கீதா மாமியோ, கண்காணாத தேசத்தில் இருக்கும் மதுரைத்தமிழன்/துளசி டீச்சர், எங்கோ வட நாட்டில் இருக்கும் வெங்கட், தஞ்சை கரந்தையார், சதாபிஷேக கந்தசாமி ஐயா, வைகோ ஐயா போன்றவர்களின் எழுத்தைப் படிக்க வாய்ப்பிருந்திருக்குமா? (லிஸ்ட் ரொம்பப் பெரிது... சும்மா பேருக்கு சிலரைக் குறிப்பிட்டுள்ளேன்)

    பதிலளிநீக்கு
  24. ஆஹா உண்மை உண்மை,,

    என் செல் வாங்கிய சில நாட்களிலே தடுமாற்றம்,, டச் வாங்க யோசித்தேன்,,, இன்று டச் போன் தான் ,,,

    என் பிள்ளைகளிடம் அது படும் பாடு,,, வாய் இருந்தால் அழும்,,

    நல்ல பகிர்வு ஸ்ரீ,,

    தொடருங்கள்,,

    பதிலளிநீக்கு
  25. என் பசங்களுக்கு ,ஆண்டிராய்ட் ஃபோன் வாங்கிக் கொடுத்து விட்டேன் ,அதனால் ,சிஸ்டத்தில் நான் நிம்மதியாக 'ஜோக்காளி'யில் தினசரி மொக்கை போட முடிகிறது :)

    பதிலளிநீக்கு
  26. இதை விட முக்கியமான விஷயம் சென்னை மழையின் போது இதன் உதவியால் பல இன்னல்கள் நீங்கின

    பதிலளிநீக்கு
  27. அருமை அருமை அருமை இதைப் பற்றி எழுத நினைத்திருந்தோம். அதாவது சீரியலையும் பின்தள்ளிவிட்டது ஸ்மார்ட் ஃபோன் அதான் ஸ்மார்ட்??? என்கின்றார்களோ என்று சொல்லி....துளசி பாதி அவரது மாணவர்கள் குறித்தும் எழுதியிருந்தார். கீதா எழுதத் தொடங்கி பாதியில் முடிக்காமல் நிற்கிறது. முடிக்காததால் அப்படியே....எழுத நினைத்த கருத்துகள் அனைத்தும். ஆனால் எங்களால் இவ்வளவு அழகாகச் சொல்லியிருக்க முடியுமா? இவ்வளவு அழகாக இருந்திருக்காது. உங்கள் கருத்துகள் முழுவதுடனும் உடன்பாடு.

    கீதா சாம்பசிவம் சகோவுக்கு பின் குறிப்பு கொடுத்து ...ஹும் ஒன்றுமில்லை நாங்களும் சாதாரண ஃபோன்தான் உபயோகிக்கின்றோம் என்று.....

    பதிலளிநீக்கு
  28. விஞ்ஞான வளர்ச்சியை நாம் சரியாக உபயோகிக்கத் தெரிந்து கொண்டுவிட்டால் நல்லதே. கத்தி போலத்தான்...ஆனால் விஞ்ஞான வளர்ச்சியை பெரும்பான்மையோர் எந்தத் துறையிலும் சரியாக நல்ல வழியில் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  29. நன்றி கிரேஸ். குழந்தைகளை பெரியவர்களால் கண்ட்ரோல் செய்யமுடியவில்லை என்பதே உண்மை.

    பதிலளிநீக்கு
  30. நன்றி பழனி கந்த சாமி ஸார். எங்கள் அலுவலகப் பெண் ஊழியர் ஒருவர் பல சமயங்களில் ஃபோனை எடுத்துக் காதில் வைத்துப் பேசுவது போல, விரும்பாதவர்களை தவிர்க்க வேண்டி உபயோகபடுத்திக் கொள்வார் என்று சொல்லியிருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  31. நன்றி மதுரைத் தமிழன். இவ்வளவு கட்டுப்பாடுடன் இங்கு நிறைய பேர்கள் இருப்பதில்லை. அது மட்டுமில்லை. அலைபேசியில் இணையக் கட்டணம் கன்னாபின்னா என்று உயர்ந்த வண்ணம் உள்ளது. அதிலும் ஒவ்வொரு நிறுவனத்துக்குமிடையே மலைக்கும் அம்டுவுக்கும் போல ஏகப்பட்ட வித்தியாசங்கள்.

    பதிலளிநீக்கு
  32. நன்றி கீதமஞ்சரி. இயந்திரங்களோடு சேர்ந்து மனிதனும் இயந்திரமாகிறான்!

    பதிலளிநீக்கு
  33. நன்றி ஜேகே ஸார். மூத்த தலைமுறையில் மிகச் சிலரே இந்த மாதிரி காட்ஜெட்களின் வளர்ச்சியோடு நட்பாகி, தாங்களே இயக்குமளவு தேர்ச்சி பெறுகிறார்கள்!

    பதிலளிநீக்கு
  34. நன்றி நண்பர் கில்லர்ஜி. இன்றைய இளைய தலைமுறை செல்லைப் பிரிவதே இல்லை என்பது வேதனையான உண்மை.

    பதிலளிநீக்கு
  35. நன்றி கீதா மேடம். நீங்கள் அடிக்கடி இதை ஃபேஸ்புக்கில் குறிப்பிடுவது வழக்கம். ஆதலால்தான் அப்படிச் சொன்னேன்! :)))

    பதிலளிநீக்கு
  36. நன்றி நிஷா. கட்டுப்பாடாய் இருக்கிறீர்கள் போல! பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  37. நன்றி ஜீவி ஸார். நீங்கள் சொல்லியிருக்கும் "நம்பர் ப்ளீஸ்" ஃபோன் பற்றித்தான் நான் "அந்த மாலை"யில் எழுதி, நீங்களும் பின்னூட்டம் போட்டிருக்கிறீர்களே!

    :)))

    பதிலளிநீக்கு
  38. நன்றி ஹுசைனம்மா. இன்னும் சில நல்லபல கருத்துகளைச் சொல்லும் வாய்ப்புகளை விட்டு விட்டீர்களே...!

    பதிலளிநீக்கு
  39. நன்றி வைகோ ஸார்.. ஒன்று இரண்டு என்று பின்னூட்டங்களை வரிசைப்படுத்தி வழங்கியிருப்பதற்கும் நன்றிகள்!

    பதிலளிநீக்கு
  40. நன்றி நண்பர் நெல்லைத்தமிழன். தொலைகாட்சி சீரியல்களின் தீவிரத்தை இவை முந்தி விட்டதாகவே கருதுகிறேன்! இவற்றில் நன்மை உண்டு என்பதை நானும் மறுக்கவில்லை. நாம் எப்படி இவற்றை உபயோகப் படுத்துகிறோம் என்பதில்தானே இருக்கிறது!

    பதிலளிநீக்கு
  41. நன்றி பேராரியை மகேஸ்வரி பாலச்சந்திரன். எனக்கும் முதலில் 'டச் ஃபோன்' வாங்கத் தயக்கமாகத்தான் இருந்தது. அப்புறம் பழகி விட்டது!

    பதிலளிநீக்கு
  42. நன்றி பகவான்ஜி. இந்த டெக்னிக் இங்கும் நடைமுறைப்படுத்தப் படுகிறது!

    பதிலளிநீக்கு
  43. நன்றி விஸ்வா. நீங்கள் சொல்வது உண்மை. அப்படி உபயோகப்படுத்துவதே சிறந்தது. ஸ்மார்ட்ஃபோனை மணிக்கணக்கில் கையில் எடுக்காமல் டேபிளில் வைத்திருக்கவும் ஒரு மன உறுதி வேண்டும்!

    பதிலளிநீக்கு
  44. நன்றி துளசிஜி / கீதா. கீதா சாம்பசிவம் மேடம் பெயரோடு உங்கள் பெயரையும் சேர்க்கவே எண்ணியிருந்தேன். பதிவிட்டபின் நினைவுக்கு வந்தது. அப்புறம் எடிட் செய்யாமல் விட்டு விட்டேன்!

    ஆம்! விஞ்ஞான வளர்ச்சியை நாம் சரியான முறையில் மட்டுமே உபயோகிக்கப் பழக வேண்டும்.

    பதிலளிநீக்கு
  45. ஹா ஹா :) எங்க மனசில் இருப்பதையெல்லாம் கொட்டிட்டீங்க ..

    கணவரின் தம்பி குடும்பத்தாரை கிறிஸ்துமஸ் நேரம் சந்திக்க போனோம்.அவங்க மகன் ஹால் லைட் டிம்மா இருக்கு அப்படியும் tablet கையில் வச்சிக்கிட்டு டபடபன்னு தட்டிடிருந்தான் ..எங்களை கவனிக்கவேயில்லை ..அவன் உடல் பொருள் ஆவி எல்லாம் போன்ல தான் ! சர்ச்சுக்கு வரும் எல்லா பிள்ளை கைலயும் பெரிய பெரிய போன்ஸ் சைலண்ட் மோடில் போட்டு போனையே பார்த்து சிரிக்குதுங்க :(
    என்கிட்டயும் ஸ்மார்ட்போன் தான் ..நான் துவக்கத்திலேயே யோசித்து வாட்ஸ் அப் வைபர் என்று எதையும் போன்ல சேர்த்துக்கலை :) நல்லவேளை தப்பித்தேன் ..
    முந்தி fb பார்ப்பேன் ரிமூவ் செய்தாச்சு :) மெசெஞ்சர் மட்டும் அது கூட அவசரத்துக்கு .
    கண்ட்ரோலுடன் உபயோகிக்க பழகிட்டேன்

    பதிலளிநீக்கு
  46. அருமையான சிந்தனைப்பகிர்வு ஆனால் என்னிடம் ஆண்டிராய்ட் ஃபோன் இல்லை.. ஐபோன் தான்[[[[

    பதிலளிநீக்கு
  47. ஆம் இவைகள் நேர விழுங்கிகள் எனத்
    தெரிந்தாலும் தவிர்க்க முடியாமல்தான் தவிக்கிறோம்
    கொஞ்சம் கொஞ்சமாய் மீளவேண்டும்
    பயனுள்ள பகிர்வு
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  48. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  49. ஸ்ரீராம் சார்! இன்று காலை தமிழ்மணத்தில் நுழைந்தவுடன் ஒரு நல்ல கட்டுரையைப் படித்த திருப்தி. நல்ல அலசல். வந்த பின்னூட்டங்களும் சுவையாக இருந்தன.
    ஒருகாலத்தில் டீ.வி வீட்டை அடைத்துக் கொண்டது; இப்போது ஆண்ட்ராய்ட் ஆக்கிரமித்துள்ளது. உள்ளங்கையில் உலகம் சிறுத்துக் கொண்டே வருவது போல் உள்ளங்களும் சிறுத்து விட்டன. வாழ்க்கையே use and throw வாக மாறி விட்டது.

    பதிலளிநீக்கு
  50. படுக்கையிலிருந்து எழும் போதே கைக்குழந்தையைத் தேடுவது போல ஃபோனைத் தேடிக் கைகள் துழாவும்

    உண்மைதான் நண்பரே
    தம +1

    பதிலளிநீக்கு
  51. மிக அருமையான பதிவு! இன்றைய நிலையை அப்படியே தந்து விட்டீர்கள். அதிலும் குழந்தைகள் கையில் இதைக் கொடுக்கும் போது அத்தனை கோபம் வரும். அதன் கதிர்வீச்சு, கண்ணின் நரம்புகளை அது எப்படி பாதிக்கிறது? அந்த பிஞ்சு மூளை எப்படி பாதிக்கப்படுகிறது என்ற எந்த விவரமும் தெரியாமல் சிறு குழந்தைகளிடம் அதை கொடுத்து விடுகிறார்கள். இதைப் பற்றி ஒரு பதிவு எழுத உள்ளேன். 8 வயது வரை மொபைலை குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாது என்று மருத்துவம் சொல்கிறது. அட்லீஸ்ட் அதை ஒரு 5 வயதுக்காகவாவது கடைப் பிடிக்கலாமே..! ஆனால், பிறந்த குழந்தைகளுக்கே இங்கு எல்லோரும் மொபைலை கொடுத்து பெருமை பட்டுக்கொள்கிறார்கள். என்ன சொல்வது?
    இதைப் பற்றி எழுதியிருக்கிறேன். விரைவில் பதிவிடுகிறேன்.
    த ம 13

    பதிலளிநீக்கு
  52. நீண்ட நாட்கள் ஆன்ராய்டு வாங்காமல் தள்ளிப் போட்டு வந்தேன். பழைய LG மொபைலின் பேட்டரி கிடைக்கததால் ஆன்ராய்டு வாங்க வேண்டியதாகி விட்டது. வாட்சப்பை அதிகம் பயன்படுத்துவதில்லை. என்றாலும் ஏரளமாக குவிந்துவிட்ட செய்திகளை டெலிட் செய்ய வேண்டும்.

    பதிலளிநீக்கு
  53. நல்ல இடுகை......
    இந்த பின்னூட்டம் ஆண்ட்ராய்ட் மொபைல் ஃபோனில் இருந்து தான் இடுகிறேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்........;-)

    http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/

    பதிலளிநீக்கு
  54. ஹூஊஊஊஊம். என் பேரனைப் பார்த்தால் தெரியும். இப்போதான் பெண்
    அவனை நிஜமா நாங்க உலாவிண்டு இருக்கும் போது நீ ஏண்டா காதில மாட்டிக் கொண்டு
    முகனூலைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் என்று அலுத்துக் கொண்டிருந்தாள். தம்ப், தேஞ்சுதான் போகப் போகிறது. அடுத்தாப்பில என்னை அழைப்பதற்கு முன் நான் கணினியை மூடுகிறேன்.
    அருமையான பதிவு ஸ்ரீராம். அத்தனையும் உண்மை. எனக்கு வாட்ஸாப்பில் குடும்பம் மட்டுமே. சில தோழிகள்.நல்ல வேளை ஃபார்வர்ட் வருவதில்லை.

    பதிலளிநீக்கு
  55. நல்ல பகிர்வு அண்ணா...
    நான் பெரும்பாலும் அலைபேசியில் இருப்பதில்லை... பேச மட்டுமே...
    கணிப்பொறிதான் எப்பவும்...

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!