தேவையான பொருட்கள்:
கொழுந்தாக உள்ள நாரத்தை இலைகள் : இரண்டு கைப்பிடி அளவு. (பெரிய கை உள்ளவர்கள் ஒன்றரைப் பிடி அளவு எடுத்துக் கொள்ளலாம்.)
பெருங்காயம் : ஒரு பட்டாணி அளவு.
புளி : நெல்லிக்காய் அளவு.
மிளகாய் வற்றல் : பெரிதாக இருந்தால் நான்கு, சிறிதாக இருந்தால் ஐந்து. கடைகளில் சேலம் மிளகாய் என்று சொல்லி வாங்குங்கள். (மிளகாய் வற்றலில் காரமே இல்லாத வகை பயடகே (byadagi) பயங்கர காரம் உள்ள மிளகாய் மங்கட்டி. (mangatti) )
பயாடிகே மிளகாய்.
சேலம் மிளகாய்.
மங்கட்டி மிளகாய்.
உப்பு : தேவையான அளவு.
செய்முறை:
நார்த்தைக் கொழுந்து இலைகளை, சுத்தமான நீரில் நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவேண்டும். இலைகளில் உள்ள நரம்புகளை, கத்திரிக்கோல் கொண்டோ அல்லது விரல் நகங்களை உபயோகித்தோ கீசி வீசிட வேண்டும்.
மிளகாய் வற்றல் மற்றும் பெருங்காயம் இவற்றை சிறிதாக எண்ணெய் வாணலியில் விட்டு, லேசாக வாட்டிக்கொள்ளவும்.
நாரத்தை இலைகள் (நீரை வடித்து, வெறும் இலைகளை எடுத்துக்கொள்ளவேண்டும்), மிளகாய் வற்றல், பெருங்காயம், புளி, உப்பு இவைகள் எல்லாவற்றையும் மிக்சியில் இட்டு அரைக்கவேண்டும்.
அவ்வளவுதான்!
நார்த்தைப் பொடி தயார்.
இதற்கு வேப்பிலைகட்டி என்ற செல்லப் பெயரும் உண்டு. சிலர் இதை சாதத்தில் பிசைந்துகொண்டு சாப்பிடுவது உண்டு.
ஆனால் நாங்க இதை "தயிர்சாதம்" சாப்பிடும்பொழுது தொட்டுக்கொள்ள மிகவும் விரும்புவோம்.
வேண்டாத சோத்துக்கு வேப்பிலைக்கட்டி என்று ஒரு சொலவடை உண்டு.
சிலர் நாரத்தை இலைக்கு பதிலாக எலுமிச்சை இலைகளைப் பயன்படுத்துவார்கள். சில எலுமிச்சை இலைகளுக்குக் கசப்புச் சுவை உண்டு என்பதால், இந்த ரிஸ்க் எடுக்காமல் இருப்பது நல்லது.
நார்த்தை இலை கிடைக்கும்போது இங்கு வந்து பார்த்து செய்யவேண்டுமென மனதில் குறித்துக் கொண்டேன். :)
பதிலளிநீக்குநார்த்தைப் பொடி புதிதாக உள்ளது... நன்றி
பதிலளிநீக்குபொதுவாய் நான் சமையல் குறிப்புகளை படிப்பதில்லை ...ஆனால் இது மிக எளிமையாக இருக்கிறது..அருமை..நன்றி
பதிலளிநீக்கும்ம்..சரிதான்...
பதிலளிநீக்குநாங்கள் இந்தியாவிற்கு வரும் பொழுது வாங்கி வருவோம் அல்லது மிக தெரிந்தவர்கள் யாராவது வரும் போது இந்த வேப்பிலைக்கட்டியை வாங்கி வர சொல்லி ப்ரிஜில் பல மாதங்கள் வைத்து என் மனைவி சாப்பிடுவாங்க
பதிலளிநீக்குஅம்பத்தூர் வீட்டில் நாரத்தை மரமே இருந்தது. நல்லாக் காய்ச்சுட்டு இருந்தப்போ வெட்டியாச்சு! :( அதன் இலைகளுக்குத் தெருவில் பயங்கரப் போட்டி! :( நாரத்தங்காயும் காய்ந்த நாரத்தங்காய் போட்டுப் பல வருடங்கள் வைத்திருந்தேன். இப்போத் தான் தீர்ந்தது! :) அந்த நாரத்தங்காயில் சாதம், ஜூஸ் போன்றவை செய்தால் மணம் ஊரைத் தூக்கும்! இங்கே திருச்சியில் நாரத்தங்காய் நல்லா இல்லை! ஆனால் எல்லா ஹோட்டல்களிலும் சாப்பாட்டுக்கு ஊறுகாய் சொல்லி வைச்சாப்போல் நாரத்தங்காயில் மி.பொடி சேர்த்து அல்லது மாங்கா இஞ்சித் தொக்குத் தான் போடறாங்க! எல்லோரும் கூடிப் பேசிப்பாங்க போல! :)
பதிலளிநீக்குஅது என்ன 160222? அத்தனை "திங்க"ற பதிவு போட்டிருக்கீங்களா என்ன? :)
பதிலளிநீக்குOk..ok
பதிலளிநீக்குOk..ok
பதிலளிநீக்குதஞ்சையில் எங்கள் வீட்டில் நார்த்தமரம் இன்னமும் காய்த்துக் கொண்டு இருக்கிறது. சென்ற மாதம் தஞ்சை சென்று பார்த்தோம்.
பதிலளிநீக்குநாரத்தை இலையுடன் இரண்டு மூன்று எலுமிச்சை இல்லை , இரண்டு மூன்று கருகப்பிலை இலை களையும் கலந்து செய்து பாருங்கள்.
மிகவும் ருசியாக இருக்கும். அப்படியே சுடுகின்ற சாதத்தில் பிசைந்து சாப்பிடலாம்.
நாங்கள் இருக்கும் இடத்தில் ஆழ்வார்திருநகர் மெயின் ரோடில் நாரத்தை கூறு ஒன்று 10 கொண்டது. 100 ரூபாயாம். அத்தனை கொட்டிக் கிடந்தது அங்கே.எடுத்துக்கொள்ளாமல் வந்து விட்டோமே என்று வருந்தினேன்.
நாரத்தை இல்லை கட்டி யை இகரு வலிக்கும் பயன்படுத்தலாம். மிக்க பலன் அளிக்கும்.
சுப்பு தாத்தா.
www.subbuthatha72.blogspot.com
புதிய ஐயிட்டமாக இருக்கிறதே...
பதிலளிநீக்குநார்த்தை இலைக் கட்டி ...வயசு ஏகத்துக்கு இருக்கும். பாட்டி ,மதுரையிலிருந்து வாங்கி வரும்
பதிலளிநீக்குநார்த்தங்காயை உப்பு ஊறுகாய் போட்டு வைத்துக் கொள்வோம்.
வேப்பிலைக் கட்டி என்று சொல்லப் படும் நாரத்தை இலை பாட்டி வீட்டுத் தோட்டத்தில் இருந்தது. இடிக்கும் போதே வாசனைப் பசியைக் கிள்ளும். நல்லதொரு செய்முறை கொடுத்திருக்கிறீர்கள்.
நார்த்தை இலை இங்கு கிடைப்பதில்லை. கிடைத்தால் செய்து பார்க்கலாம்.
பதிலளிநீக்குத ம தகராறு செய்கிறது. வாக்களிக்க முடியவில்லை.
கீதா சாம்பசிவம் மேடம்,
பதிலளிநீக்கு160222 இன்றைய தேதியைத்தான் உல்டாவாக போட்டிருக்கிறார்கள். அதாவது வருடம் மாதம் நாள் என்று. மற்றபடி அத்தனையாவது பதிவு இல்லை. சரியா ஸ்ரீராம்!
நன்றி கிரேஸ். இந்தக் குறிப்புகளை உங்கள் ட்ராஃப்டில் குறித்து வைத்துக் கொள்ளுங்களேன். எப்போது இலை கிடைக்கிறதோ அப்போது செய்து பார்க்கலாம்! நான் மற்றவர்களின் குறிப்புகளை அப்படித்தான் செய்கிறேன்!
பதிலளிநீக்குநன்றி தனபாலன்.
பதிலளிநீக்குநன்றி மீரா செல்வக்குமார். உடல்நத்துக்கு மிகவும் நல்லது. சுவையானதும் கூட!
பதிலளிநீக்குநன்றி நண்பர் வலிப்போக்கன்.
பதிலளிநீக்குநண்பர் மீரா செல்வக்குமாருக்கு நன்றி தெரிவிக்கும் பின்னூட்டத்தில் உடல் நலத்தில் ல விட்டுப் போனதற்கு வருந்துகிறேன்! :))))
நன்றி மதுரைத் தமிழன். கடைகளில் செய்து தருவது (குறிப்பாக அம்பிகா) பெரும்பாலான கடைகளில் உப்போ, காரமோ தூக்கலாகவே செய்து தருகிறாகள். நாமே செய்தால் இந்தக் கஷ்டம் இருக்காது!
பதிலளிநீக்குநன்றி கீதா சாம்பசிவம் மேடம். நாரத்தை இலை இப்படி உபயோகப்பட்டால் நாரத்தங்காய் உபயோகம் டாப். எத்தனை நாட்களுக்கு கெடாமல் வைத்துக் கொள்ள முடிகிறது? வாந்தியை நிறுத்தி, பசியைத் தூண்டி... பல்வேறு பயன்கள்
பதிலளிநீக்குகீதா சாம்பசிவம் மேடம்... உங்கள் கேள்விக்கு கீழே எஸ் பி எஸ் பதில் சொல்லி விட்டார் பாருங்க!
பதிலளிநீக்குநன்றி ஹேமா (HVL)
பதிலளிநீக்குதஞ்சையில் உங்கள் வீடு எந்த இடத்தில் என்று அறிய ஆவல் சுப்பு தாத்தா. எங்களுக்குத் தற்சமயம் தஞ்சையில் உறவுகள், வீடு எதுவும் இல்லை என்றாலும் பல வருடங்கள் அங்கே இருந்த பழக்கத்தால் தெரிந்து கொள்ள ஆவல் வருகிறது! நன்றி சுப்பு தாத்தா.
பதிலளிநீக்குநன்றி நண்பர் கில்லர்ஜி. ரொம்பப் பழைய ஐட்டம்! பாரம்பர்யமானது!
பதிலளிநீக்குநன்றி வல்லிமா. என் அம்மா நாரத்தை இலைப்பொடி வீட்டிலேயே செய்வார்கள். காரமும்,பெருங்காய மணமும் சற்றே தூக்கலாக. சிறு உரலில் இட்டு 'லொட்டு லொட்டு' என்று இடிப்பது சில சமயம் என் வேலை!
பதிலளிநீக்குநன்றி எஸ் பி செந்தில் குமார். தம இன்று எனக்கு என்னவோ மற்ற நண்பர்கள் எல்லோர் தளங்களிலுமே சட்சட்டென போடா முடிந்தது. சில சமயம் கணினி படுத்தும்.
பதிலளிநீக்குநீங்கள் சொல்லியிருக்கும் விடைதான் நண்பர் எஸ் பி செந்தில் குமார். தேதிதான் அது!
பதிலளிநீக்குமறுபடியும் ஒரு திருத்தம். எஸ் பி எஸ்க்கான பதிலில் போடா முடிந்தது என்று வந்திருப்பது 'போட முடிந்தது' என்று இருக்க வேண்டும்! மன்னிக்கவும்!
பதிலளிநீக்கு:))
நல்ல தகவல்..
பதிலளிநீக்குநன்றி அனுராதா ப்ரேம்.
நீக்குநாங்கள் கூட இது என்ன நார்த்தை இலையில் செய்துவிட்டு இதை வேப்பிலைக்கட்டி என்று சொல்லுகின்றீர்கள் என்று எங்கள் பாட்டியிடம் வம்பு செய்வதுண்டு. நாரத்தை இலைப் பொடி/வேப்பிலைக்கட்டி அடிக்கடிச் செய்வதுண்டு. நல்ல இளம் இலைகள் கிடைத்தால். எலுமிச்சை இலையிலும் செய்வதுண்டு..நீங்கள் சொல்லுவது போல் கசக்கும் சிறிது. இதே ரெசிப்பிதான் ஆனால் ஓமம் (சிறிது வறுத்து) சேர்த்துச் செய்வதுண்டு.
பதிலளிநீக்குகீதா
கேள்விப்பாடத புதிய பொடி...
பதிலளிநீக்குநல்லதொரு தகவல்.
சட் என இதை எப்படி மிஸ் செய்தேன், பார்த்தமாதிரி தோணலையே என்று பார்த்தேன். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்குப்பிறகு "30 நாட்களில் அதிகம் பேர் படித்த" இடுகையாக மாறிவிட்டது. ஆச்சர்யம்.
பதிலளிநீக்குசுவையான குறிப்பு.