Saturday, February 27, 2016

பாஸிட்டிவ் செய்திகள் - கடந்த வாரம்.1)  சுரேஷ்சந்திர பாண்டே.  "எனக்கு 5 குழந்தைகள்.  அதில் மூன்று பெண்கள்.  நாளை அவர்கள் இப்படி ஒரு முடிவு எடுத்தால், அவர்களை யாரும் காப்பாற்றா விட்டால் எப்படி இருக்கும்?"
 


2) உபயோகமான சேவை. சென்னை ட்ரெக்கிங் கிளப் உறுப்பினர்கள்.
 

3)  பாராட்டுகள் வினோதன்.  (நன்றி மாணிக்கம் சட்டநாதன்)
 


4)  டாக்டர் பக்தி யாதவ்.
 


 
6)  "சென்னையை பொறுத்தவரை, உலகத்தரமான நகரமாக்கும் நோக்கில், அனுபவம் மிக்க சர்வதேச நகரமைப்பு வடிவமைப்பு நிபுணர்களை அமர்த்துவது மிகவும் கட்டாயம். சென்னையின் நீர்நிலைகளே சென்னையின் சொத்து. அதன் அடிப்படையில் சென்னையின் நகரமைப்பு பெருந்திட்டத்தினை, உடனடியாக சர்வதேச நிபுணத்துவம் மூலம் மறு ஆய்வு செய்ய வேண்டும். சிறிய, தெருச்சாலைகளில் கூட, சாலையோர வடிகால்கள் அமைக்கப்படவேண்டும். நீர்நிலைகளில் கட்டடமோ, சாலைகளோ கட்டுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.தற்போதைய சென்னை யில், பல இடங்களில், கழிவுநீர் கால்வாய்கள் இல்லை. மழைநீர் வடிகால்கள் முறையாக இல்லை. சென்னையின் வெளிவட்ட சாலையின் ஓரங்களில், தற்போது, மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய்கள் அமைத்தால் தான், அதனைச் சுற்றி உருவாகும் கட்டுமானங்கள், எதிர்காலத்தில் பாதிக்கப்படாமல் இருக்கும்."  -  அறம் முருகேசன், சிங்கப்பூரில் கட்டட வடிவமைப்பாளராக பணியாற்றியவர்.
 


7)  அவினாஷ் தனது மனைவிக்குச் செய்யும் அஞ்சலி வித்தியாசமானது.  ஊருக்கே உபயோகமானது.
 8) இது ஏற்க்கெனவே வந்த செய்தி. அப்போது அந்த ஆடோ டிரைவர் படம் கிடைக்கவில்லைஎன்று ஞாபகம்.  இப்போது படத்துடன் செய்தி.
 


"ஆமாம் சொந்த ஆட்டோவை அடமானம் வைச்சு இவரை காப்பாத்த துடிக்கிறீங்களே?  இவரு யாரு உங்களுக்கு தெரிஞ்சவங்களா?" என டாக்டர்கள் கேட்க, இவரு "யாரு எதுன்னுல்லாம் தெரியாது, என் ஆட்டோவுல வந்த பயணி, என்னை காப்பத்துன்னு கேட்டு தோள்ல சாஞ்சா சக மனுஷன் அவ்வளவுதான்", என்றதும் டாக்டர்கள் வியந்து போய் பேஸ் மேக்கருக்கு மிச்சம் தேவைப்பட்ட பணத்தை அவர்களே தங்களுக்குள் பங்கிட்டு கட்டி பேஸ்மேக்கரை வாங்கிவந்து மருத்துவர் ரவிசங்கர் தலைமையில் வெற்றிகரமாக ஆபரேஷனை முடித்தனர்."


18 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

நல்ல மனம் படைத்தவர்கள் பலரை தங்களின் பதிவில் கண்டேன்
வாழட்டும் இவர்கள்
இவர்களால் மேலும் பலர் வாழட்டும்
போற்றுதலுக்கு உரியவர்கள்
தம 1

Imayavaramban said...

நல்ல மனம் படைத்தோரின் எண்ணிக்கை பெருகட்டும்! நல்ல செய்திகளும் வரட்டும்!

வலிப்போக்கன் - said...

நல்ல மனம் வாழ்க!

KILLERGEE Devakottai said...

அனைவரும் பாராட்டுக்குறியவர்கள்
மூன்றாவது சுட்டி வினோதன் இல்லை கவனிக்க...
சென்னை ட்ரெக்கிங் கிளப் உறுப்பினர்கள். மிகவும் போற்றதலுக்குறியவர்களே....

ஸ்ரீராம். said...

நன்றி கில்லர்ஜி.விநோதனுக்கு அந்த புகைப்படச் செய்தி மட்டுமே. சுட்டி இல்லை!

திண்டுக்கல் தனபாலன் said...

ஊருக்கே உபயோகமானதும் மிகவும் பிடித்திருந்தது...

‘தளிர்’ சுரேஷ் said...

நல்ல மனிதர்களை அறிமுகம் செய்யும் இந்த செய்திகள் தான் உங்கள் ப்ளாக்கை எங்கள் ப்ளாக் ஆக்கி அழகு செய்கிறது! அருமையான மனிதர்கள்! வாழ்த்துக்கள்!

Angelin said...

அனைத்துமே அருமையான செய்திகள் ..அந்த சர்தார் குமித் சிங்குக்கு ஸ்பெஷல் பாராட்டுக்கள் !இவரை போன்றோர் இங்கும் இருக்காங்க எங்க ஆலயத்தில் பெரிய கம்யூனிட்டி கிச்சன் இருக்கு அதில் தினமும் 200 பேருக்கு சமைத்து எங்க ஏரியாவில் இருந்து 100 மைல்கல் தொலைவுக்கு எடுத்து போவார் சர்தார்ஜிகள்

Pandiaraj Jebarathinam said...

நல்ல மனிதர்களின் செய்திகள்.

சென்னையி ல் கட்டிடம் கட்டுவதை நவீன நகரமயமாக்கலை நிறுத்திவிட்டு பன்னாட்டு அடிமைகளை உருவாக்கும் பல்கலைகளையும் கல்லூரிகளையும் அப்புறப் படுத்தினாலே நீர் நிலைகளை மீட்டுவிடலாம். ஆனால் செய்வார்களா. விவசாயம் செழிக்க வழி செய்வார்களா.

ஜீவி said...

தளிர் சுரேஷ் அருமையாகச் சொல்லியிருக்கிறார். இது நம்ம வூடு என்பதினால் நம்ம பிலாக்கும் கூடத்தான்!

நம்மையும் சேர்த்து வழிநடத்தும் செய்திகள் என்றைக்குமே மனசை விட்டு நீங்காதவை.. தங்கள் பெருமைக்குரிய பணி தொடரட்டும்!

புலவர் இராமாநுசம் said...

வாழ்க அனைவரும்! பல் சுவைப் பதிவு!

Jeevalingam Yarlpavanan Kasirajalingam said...

அருமையான தகவல்

ரூபன் said...

வணக்கம்
ஐயா
பதிவில் சொல்லி அத்தனை விடயங்களும் சிறப்பு இப்படியான நல்ல மனங்கள் வாழட்டும் த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

தனிமரம் said...

நல்லமனம் வாழட்டும்.

Ramani S said...

தொடர்ந்து பாஸிடிவ் செய்திகளைப்
பதிவிட்டு எங்கள் மன ஈரம் காயாது
காக்கும் உங்களுக்கும் எங்கள்
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

பரிவை சே.குமார் said...

நல்ல செய்திகள்...
அனைவருக்கும் வாழ்த்துக்கள்.

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்துச் செய்திகளையும் வாசித்துவிட்டோம். அனைத்தும் அருமை. நல்ல மனம் பற்றி வெங்கட்ஜி பதிவில் வாசித்தோம்.
அவினாஷை மிகவும் பாராட்ட வேண்டும்.

Thulasidharan V Thillaiakathu said...

வினோதன் சுட்டி இல்லையே என்று நினைத்துக் கேட்க வந்தால் கில்லர்ஜியின் பதிலில் கண்டோம்..

Post a Comment

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!