சில
நிறுவனங்கள் இந்தத் தடைக்கு நீதிமன்றத்தை அணுகித் தடை பெற்றிருப்பதாய்ச்
சொல்லப்படுகிறது. அவர்கள் நஷ்டம் அவர்களுக்கு! இதுவரை தயாரித்து
வைத்திருக்கும், சேமிப்பில் இருக்கும் மருந்துகளை என்ன செய்வார்கள்?
மருந்து விற்பனை என்பது மிக அதிகமான லாபம் வைத்து விற்கும் வியாபாரமாகவே
பார்க்கப் படுகிறது. இந்த நஷ்டம் கூட அவர்களின் லாபத்தில் நஷ்டமாகவே
இருக்கலாம்.
ஒவ்வொரு பெரிய புகழ் பெற்ற
நிறுவனத்தின் மருந்துகளின் பெயரிலேயே, அதே நிறத்தில் உள்ளூர்த்
தயாரிப்புகள் சாதாரணமாகக் கிடைக்கும் என்பார்கள். அவற்றை வாங்கி 'கவுண்டர்
சேல்ஸ்' எனப்படும் விற்பனையில் பெரிய நிறுவனங்கள் விற்கும் விலையிலேயே
விற்பார்கள் என்றும் சொல்வாகள். இதை எல்லாம் நிரூபித்துக் கொண்டிருக்க
முடியாது. அவை வேறு தளம். இங்கு அதைப் பற்றி வேண்டாம்.
தடை
செய்யப் பட்டிருக்கும் இந்த மருந்துகளின் தயாரிப்பை நிறுத்தச் சொல்லி
முதலில் தயாரிப்பாளர்களுக்குச் சொல்லி விட்டு, ஏற்கெனவே சந்தையில்
இருக்கும் மருந்துகளை விற்பனை செய்ய நேரம் கொடுத்திருக்க வேண்டும் என்பது
மருந்துத் தயாரிப்பாளர்களின் கருத்தாயிருக்கக் கூடும். சரி என்றுதான்
படுகிறது.
பெரு
முதலாளிகளுக்குச் சாதகமாய் எடுக்கப்பட்டிருக்கும் முடிவு இது என்று
சொல்பவர்கள் முன்வைக்கும் வாதம், 'இத்தனை நாளாய் உபயோகித்துக் கொண்டு வந்த
மருந்துகள்தானே? திடீரென்று நிறுத்தச் சொன்னால் மக்களுக்கு இத்தனை நாளாய்
நாம் சாப்பிட்டு வந்த மருந்துகளின் மீது நம்பிக்கையின்மை தோன்றாதா? அது
தவறான மருந்தை நமக்கு பரிந்துரைத்திருக்கிறார்கள் என்று மருத்துவர்கள்
மீதும் அவநம்பிக்கைத் தோன்றுமே.. மேலும், இந்த மருந்துகளை மருத்துவர்கள்
ஏற்கெனவே பரிந்துரைத்திருக்கும் அடிப்படையில் தயார் செய்யப் பட்டவைதானே?
இது போன்ற கூட்டு மருந்துகளை சிறு நிறுவனங்களே தயாரிக்கின்றன. அதுவும்
இந்திய தயாரிப்புகள். இனி ஒவ்வொன்றையும்தனித் தனியாகப்
பரிந்துரைக்கப்பட்டு, அவற்றைத் தனித் தனியாக வாங்க வேண்டும் என்றால்
செலவும் அதிகமாகும். எப்படி, எப்போது, எதைச் சாப்பிடவேண்டும் என்பதில் நோயாளிகளுக்குக் குழப்பமும் ஏற்படும்' என்கிறார்கள்.
இந்தக்
கூட்டு மருந்துகளில் நிறைய பாதக அம்சங்கள் உண்டு. சில மருந்துகளில்
நமக்குத் தேவை இல்லாத ஒரு மருந்து இணைந்திருக்கும். குறிப்பாக வலி
நிவாரணிகளிலும், இருமல் மருந்துகளிலும்.
இந்த
மருந்துகள் விற்கப் படுகின்றனவா என்று பார்ப்பதில் மருந்துக் கட்டுப்பாட்டு
நிறுவன அதிகாரிகளுக்கு பெரிய கஷ்டமாக இருக்கும். (லாபமாகவும்
இருக்கலாம்!!!)
இன்னொரு
வகைக் குழப்பம் அதே மெட்ஃபார்மின் உடன் சிடாகிலெப்டின், வில்டாகிலெப்டின்,
அகர்போஸ் போன்ற மருந்துகளின் சேர்க்கை. இதில் எப்படிக் குழப்பம் வரும்
என்றால் ஒரு சர்க்கரை நோயாளிக்கு சிட்டாகிலெப்டின் ஒரு நாளைக்கு 100 மி கி
சேர வேண்டியதாய் இருக்கும். அதே சமயம் மெட்ஃபார்மின் 1000 மி கி அல்லது
1500 மி கி சேர வேண்டியதாய் இருக்கும். கடைகளில் கிடைப்பது 50/1000 என்றோ
100/1000 என்றோ இருக்கும். இதிலும் சாப்பாட்டுடன், சாப்பாட்டுக்குப் பின்
பிரச்னைகள் ஒருபுறம் என்றால் மறுபுறம் இந்த 50 மிகி, 100 மி கி
குழப்பங்கள்.
தனியார் மருத்துவமனைகளில், சிறப்பு
மருத்துவர்களைப் பார்த்து, இந்த மருந்துகளை வாங்கும் நடுத்தர, மேல்தட்டு
மக்களுக்கே இந்தப் பிரச்னை என்றால், அரசாங்கப் பொது மருத்துவமனையில்
சிகிச்சை எடுக்கும் கீழ்த் தட்டு மக்களுக்கு தாங்கள் என்ன சாப்பிடுகிறோம்,
எதற்குச் சாப்பிடுகிறோம் என்றே அறியாமல், கொடுத்ததைச் சாப்பிடும் கலவர
நிலவரம் ஒரு புறம்.
இந்த அரசாங்க மருத்துவமனைகளில் என்ன கிடைக்க வேண்டும் என்பதை அரசாங்கத்தின் அதிகாரிகளும், அவர்களுக்கு நன்மை புரியும் மருந்து நிறுவனப் பிரநிதிகளும் முடிவு செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலே சொன்னபடி ஒவ்வொரு மருத்துவமனைகளுக்கும் நிதி ஒதுக்கீடு கிடைத்த உடன், அவர்கள் மருந்துகளை மொத்தமாக வாங்க ஒரு டெப்போ உள்ளது. அங்கு சென்று வாங்க வேண்டும். கிடைப்பதைத்தானே வாங்க முடியும்? ஒன்றும் இல்லாததற்கு இதாவது கிடைத்ததே என்று அதை வாங்கி நோயாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலைமை.
இந்த அரசாங்க மருத்துவமனைகளில் என்ன கிடைக்க வேண்டும் என்பதை அரசாங்கத்தின் அதிகாரிகளும், அவர்களுக்கு நன்மை புரியும் மருந்து நிறுவனப் பிரநிதிகளும் முடிவு செய்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலே சொன்னபடி ஒவ்வொரு மருத்துவமனைகளுக்கும் நிதி ஒதுக்கீடு கிடைத்த உடன், அவர்கள் மருந்துகளை மொத்தமாக வாங்க ஒரு டெப்போ உள்ளது. அங்கு சென்று வாங்க வேண்டும். கிடைப்பதைத்தானே வாங்க முடியும்? ஒன்றும் இல்லாததற்கு இதாவது கிடைத்ததே என்று அதை வாங்கி நோயாளிகளுக்கு வழங்க வேண்டிய நிலைமை.
நன்றி : படங்கள் இணையத்திலிருந்து...
அருமையான கட்டுரை. மருந்துகளைப் பற்றி விவரங்கள் தெரிந்திருப்பதால் சொல்லாமல் கொள்ளாமல் சிறப்பும் கூடியிருக்கிறது. சரி விஷயத்திற்கு வருவோம்.
பதிலளிநீக்குநல்ல காரணங்களுக்காக இந்த மருந்துத் தடை இருநிருந்தால் அதை இரகரம் நீட்டி வரவேற்க வேண்டும்.
நீங்கள் குறிப்பிட்டிருக்கும் சுகான்ரில் பல பெயர்களில் பல ஜென்மங்கள் எடுத்திருப்பது இதெல்லாம் பற்றி அதிக அறிவில்லாத எனக்கேத் தெரியும். அந்த வலி நிவாரண மாத்திரை எனக்குத் தெரிந்து இர்க்காபெயின், டான்ரில், சுகன்ரில் என்று மாறி மாறி விற்பனைக்கு வந்திருக்கின்றன.
அந்தக் காலத்தில் எம்.ஆர். இராதா அவர்கள் நாடகங்களுக்குத் தடை போட்டால், அதே நாடகத்தை வேறு பெயரில் அட்ட்காசமாக அடுத்த நாளே மேடையேற்றுவார் அவர். அந்த மாதிரி மருந்துகளும் வேறு பெயரில் புழக்கத்துக்கு வரும் சாத்தியப்பாடுகள் இருப்பது மாதிரி தெரிகிறது. அல்லது தயாரிப்பு கம்பெனிகளுக்கு ஏற்ப ஒரே மருந்து வெவ்வேறு பெயர்களில் புழக்கத்துக்கு வருமொ, தெரியவில்லை.
இன்றைய காலகட்டத்தில் மருந்து சமாசாரம் மஹா பிஸினஸ். ஆயுர்வேத, சித்தா மருந்துகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக மாறி அலோபதி மருந்து உபயோகங்களைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என்ற எண்ணம் இருப்பினும் உடனடி நோய்த் தீர்வுக்கு இல்லாவிட்டாலும், உடனடி நிவாரணத்திற்கு அலோபதி விட்டால் வேறு வழியில்லை என்கிற எண்ணம் வேறு. பின் விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் அலோபதி பக்கம் துறத்துகிறது.
அமெரிக்காவில் மருந்து உபயோகக் கட்டுபாடுகளைப் பற்றி தனியாகவே ஒரு கட்டுரரை எழுத வேண்டும்.
0ver the counter மருந்துகளைத் தவிர மற்ற மருந்துகளை எவ்வளவு அதிஜாக்கிரதையாக அவர்கள் புழங்குகிறார்கள் என்பதும், அங்குள்ள மருந்துக்கடைகள் ஏற்றுக்கொண்டிருக்கும் பொறுப்புகளும் இங்கெல்லாம் நாம் நினைத்தே பார்க்க முடியாது.
மருந்துல்கம் பற்றி வெகுவாகத் தெரிந்த பதிவுலக ஜாம்பவான் ஒருத்தர் இருக்கிறார். அவர் பெயர் சூரி (சார்). சுப்புத்தாத்தா என்றும் அழைக்கப்படுவார். அவர் வந்தால் இந்தப் பதிவு விவரணைகளோடு களைகட்டும்.
நல்ல தொரு விழிப்புணரவு பதிவுக்கு நன்றி. (இந்த கடைசி வரி திருப்பித் திருப்பித் தொடராதிருக்க கடவதாக.)
தடை பண்ணாலும் குழப்பம். அனுமதி குடுத்தாலும் குழப்பம்.
பதிலளிநீக்குபேசாம, சித்தா, ஆயுர்வேத மருந்து சாப்பிடுங்க
http://concurrentmusingsofahumanbeing.blogspot.com/2016/03/33.html
இதுவும் ,நூடுல்ஸ் கதை போல் ஆகக்கூடும் ,கவனிக்க வேண்டியவர்களை கவனித்து மொய் வைத்த பின் மீண்டும் விற்பனைக் கொடிகட்டி பறக்கும் :)
பதிலளிநீக்குவிளக்கமான விரிவான பதிவு ..ஒருபக்கம் தடை என்றதும் உடனே அதற்கு எதிர்ப்பு தயாரிப்பு நிருவன்கங்களிடமிருந்து .. நாமாவது பேப்பர் நியூஸ் சமூக வலைத்தளங்களில் இவற்றின் தீமைகளை அறிந்து கொள்றோம் ..பாவம்ஏழை ஜனம் என்ன செய்யும் ..
பதிலளிநீக்கு//இந்த மருந்துகளுக்கு நிறைய மக்கள் அடிமைகள்!// ஹ்ம்ம் உண்மைதான் :(..
நிறைய தகவல்கள் தந்திருக்கிங்க .. ..இருமல் மருந்தெல்லாம் விலை மலிவா இருப்பதால்தான் மேலும் பெட்டிகடைகளிலும் கிடைப்பதால்தான் மிஸ்யூஸ் செய்றாங்க ... இங்கே இருமல் மருந்து டேஸ்டி இல்லை :) முந்தி பெனட்ரில் வருமே அதுடேஸ்ட்டி :) இங்கிருக்கும் இருமல் மருந்து ரொம்ப strong ..ஆகவே ...சுக்கு காபி /சுலைமானி தேநீர் தான் எங்கள் சாய்ஸ் ...மருந்துகள் மருத்துவரால் பரிந்துரைக்கபடுனும் ஆனா நம்ம நாட்டில் விளையாட்டு வீரர்களும் நடிகர்களும்தானேvicks action 500 ai ப்ரொமோட் செய்றாங்க !..
எனது கேள்வி ..இத்தனை இல்லாம இப்போ திடீர் தடை எதற்கு ??
//
பதிலளிநீக்குமருந்துல்கம் பற்றி வெகுவாகத் தெரிந்த பதிவுலக ஜாம்பவான் ஒருத்தர் இருக்கிறார். அவர் பெயர் சூரி (சார்). சுப்புத்தாத்தா என்றும் அழைக்கப்படுவார். அவர் வந்தால் இந்தப் பதிவு விவரணைகளோடு களைகட்டும்.//
இதை படிக்காமலே இருந்துவிட்டேன்.
அதே போலத்தான் பலரும், டாக்டர் சீட்டை எடுத்துக்கொண்டு போய் மருந்து கடையில் கொடுத்து, அவங்க இதுவும் அதுவும் ஒன்று தான் என்று சொல்ல வாங்கிச் செல்லும் கொடுமையை எல்லோரும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
பொத்தாம் போக்கில் அரசாங்கம் தடை செய்தது தவறு என்று சொல்ல முடியாது எனவே நினைக்கிறேன்.
சில காம்பிநேசன்ஸ் அபத்தம் .
உதாரணமாக,
பாரசெடமால் உடன் நிமுசுலிட் . இரண்டுமே ஆண்டி பைரெடிக் . ஆனால் வெவ்வேறு விதமாக ஆக்ட் செய்யக்கூடியவை. இரண்டையும் ஒன்றே கலப்பது லீவரை பாதிக்கும். மேலும் நிமுசுலிட் எப்போதோ தடை செய்யப்பட்டு இருக்கிறது.
இரண்டு.
இருமலைக் கட்டுபடுத்த இரண்டு வழிகள்.
ஒன்று கோடின் . இரண்டு காக்சபைன்.
இரண்டும் வெவ்வேறு வழிகளில் செயல்படுகின்றன.
ஒன்று காற்றின் வழிப் பாதைகளை குறுக்குகிறது.
அடுத்தது இந்தப் பாதைகளை அகலப்படுத்தி, கபத்தை வெளிக்கொணரச் செய்கிறது.
இரண்டையும் ஒன்றாக கலந்து கொடுப்பது அபத்தம்.
மூன்றாவது.
ஜெனேறிக் அண்டிபைஒடிக் உதாரணமாக டாக்சி சைக்ளின் 10 மாத்திரை ரூபாய் 7.
ப்ரோ பயோடிக் ஒன்று தனியாக, ரூபாய் 17 முதல் 20 வரை.
இந்த இரண்டையும் கலந்து 85 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
கூசாமல், மெடிகல் ஷாப்பில் இந்த ஜெனேறிக் இல்லை என்கிறார்கள்.
மருத்துவர்களும் ஜெனேறிக் எழுதாமல், ப்ராண்ட் பெயர் எழுதுவதால் குழப்பம் அதிகரிக்கிறது.
இது போன்று ஐம்பது உதாரணம் சொல்ல முடியும்.
நம்ம நாட்டில் நடப்பது மெடிகல் ஹிபோகரசி.
தேவை இல்லாத பல மருந்துகள் , பல வைட்டமின்கள், கலந்தவை, தரப்படுகின்றன.
உங்கள் செல் நம்பர் தாருங்கள். அல்லது எனக்கு இந்த இ மெயிலில் உங்கள் இ மெயில் தாருங்கள். மேலும் பேசலாம்.
எனது மருத்துவ வலைப் ப்ளாக் இதுவாகும்.
www.Sury-healthiswealth.blogspot.com
U get a lot of information there.about drugs,procedures etc.
சுப்பு தாத்தா.
meenasury@gmail.com
சுதா வந்ததும் களை கட்டிவிட்டது, பாருங்கள்.
பதிலளிநீக்குஒரு தகவல் சொல்ல மறந்து போனேன்.
பதிலளிநீக்குஅசிக்லோபானாக் டைக்லோபானக் க்ரூப் டிராக். இதை பாரசடமாலுடன் கலப்பதே தவறு. இரண்டுமே வலி நிவாரணி. எந்த அளவுக்கு இவை இரண்டும் ப்ரோடீன் பாண்டேஜ் என்பதிலும், எந்த வழியாக இவை மேடபோலைஸ் செய்யபடுகின்றன என்று பார்த்தல் நல்லது. அப்படியே இரண்டுமே தேவை தான் என்றாலும் ஒன்று கொடுத்து நாலு அல்லது ஆறு மணி நேரத்திற்குப்பின்பு தான் கொடுக்கப்படவேண்டும்.
முக்கியமானது, ரேபிப்ரசோல் , பாண்டபரசொல் ஓமப்ரசொல் போன்ற இன்ஹிபிடர் களை உணவுக்கு முன்பு மட்டுமே தரவேண்டும். இந்த வலி நிவாரணி அசிக்ளோபெனாக், டைக்ளொபனக் போன்றவற்றை உணவுக்குப்பின் தான் தரவேண்டும்.
இவ்விரண்டையும் கலப்பது எதிகல் இன்ஜச்டிஸ் .
சுப்பு தாத்தா.
நண்பர் பகவான்ஜி அவர்களின் கருத்தே என்னுடையதும் இதுதான் உண்மை.
பதிலளிநீக்கு//எதிகல் இன்ஜச்டிஸ் .//
பதிலளிநீக்குஹா.. என்ன வார்த்தை உபயோகிப்பு ஐயா!
பல ஆண்டுகளுக்கு முன் திருச்சி செங்குளம் காலனியில் ஒரு டாக்டரிடம் போக நேரிட்டது. நோயாளிகள் அமரும் இடத்தில் ஒரு பெரிய போர்டில் கீழ்க்கணட வாசகம் காணப்பட்டது:
இன்று ரொக்கம்; நாளை கடன்
இந்தப் பட்டியலில் நாம் அதிகம் பயன்படுத்தும் பாராசிடமால் கலந்துள்ள மாத்திரைகள் உள்ளது அச்சத்தை உண்டாக்குகிறது.
பதிலளிநீக்குparacetamol is basically antipyrtetic and a pain reliever. It gets metobolised through liver. Paracetamol does not cure the basic cause of any fever or pain but only relieves the symptoms for about 4 to 5 hours.
பதிலளிநீக்குIf one continues to have fever, it is advised to get the opinion of the doctor and get into the root cause of fever or pain.
Over usage of paracetamol may result in cirhosis.
நாம் அதிகம் பயன்படுத்தும் பாராசிடமால் கலந்துள்ள மாத்திரைகள் உள்ளது அச்சத்தை உண்டாக்குகிறது.//
Paracetamol is a good servant but in long time a bad master.
subbu thatha.
www.Sury-healthiswealth.blogspot.com
கீழ்த் தட்டு மக்களுக்கு தாங்கள் என்ன சாப்பிடுகிறோம், எதற்குச் சாப்பிடுகிறோம் என்றே அறியாமல், கொடுத்ததைச் சாப்பிடும் கலவர நிலவரம் ஒரு புறம்.//
பதிலளிநீக்குகவலை அளிக்கும் விஷயம்.
நல்ல விழிப்புணர்வு பதிவு.
தேவையான பதிவு தான். நான் இத்தனை நாட்களாகச் சாப்பிட்டு வந்த கோரெக்ஸ் இப்போது தடைசெய்யப்பட்டிருக்கும் மருந்து. ஆனால் இங்கே உள்ள மருத்துவர் தடை உத்தரவு வரும் முன்னரே என்னை அதைச் சாப்பிட வேண்டாம் என்று சொல்லி விட்டார்! :) அதே போல் ஒரு சில பிபி, மாத்திரைகளும். :) ஒவ்வொரு மருத்துவர் ஒவ்வொன்றைச் சொல்வதால் கொஞ்சம் குழப்பம் தான். ஆயுர்வேதம், சித்தாவில் இந்தக் குழப்பம் இல்லை. :)))) உடனடி நிவாரணத்துக்கு மட்டும் ஆங்கில மருத்துவம் என வைத்துக் கொள்ள வேண்டும். நீண்ட காலப் பயன்பாட்டுக்கு ஆயுர்வேதமோ, சித்தாவோ தான் சிறப்பு.
பதிலளிநீக்குநீண்ட காலப் பயன்பாட்டுக்கு ஆயுர்வேதமோ, சித்தாவோ தான் சிறப்பு.////
பதிலளிநீக்குஅது என்ன நீ..........ண் .................ட காலம் ?? !!!
ஆயிரம் வருஷம் இருக்குமா? அய்யய்யோ ? இதுவே போதும்டா சாமி என்று இருக்கிறது.
ஒரு ரகசியம் சொல்லட்டுமா?
உங்க (எங்க ஏன் ? எல்லோருடைய) அப்பா, தாத்தா, வயசைக் கூட்டுங்க.
இரண்டாட்டை வகுங்க.
ஒரு பத்து பர்சென்ட் கூட்டிக்கங்க .(இன்னி தேதிலே இருக்கிற மருத்துவ வசதி, நம் உடல் நலத்தைப் பற்றிய நமது புரிதல், உடனடி மருத்துவம் போகவேண்டும் என்ற உந்துதல் இவற்றிக்காக)
டென்சன் பேர்வழியா நீங்க ?
ஒரு அஞ்சு பர்சென்ட் கழிச்சுக்கங்க..
இது தான் நம்ம ப்ராபபிள் லாஞ்சவெடி.
இதுக்கு மேல இருக்கணும் அப்படின்னு ஆசைப்பட்டா,
மார்க்கண்டேய ஸ்தோத்ரம் படிச்சு
பலன் கிடைச்சா ஓகே.
இன்னொரு விஷயம்.
மருந்து கொடுப்பது மருத்துவன் கடமை.
ஆரோக்கியம் கொடுப்பது ஆண்டவன் அருள்.
நம்மிடையே பலர் வியாதியால் அவதிப்படுவது ஆச்சரியமே இல்லை.
இத்தனை குப்பை கூளம் வைரஸ் இடையே ஆரோக்கியமாவும் இருக்கோமே அதுதான் ஆச்சரியம்.
சுப்பு தாத்தா.
நீ ஓடுற மாதிரி...ஓடு.... நா... பிடிக்கிற மாதிரி ஓடியாறேன் என்ற கதைதான்.. ( ஓட்டுப் பெட்டியை காணவில்லையே.....)
பதிலளிநீக்குஜெனரிக் மருந்துகளை வேறு வேறு கம்பனிகள் வேறு வேறு பெயரில் தயாரிக்கின்றன, இவையெல்லாம் ஒரே பலனைத் தருமா/
பதிலளிநீக்குநோயே ஒரு குழப்பம். இதில் ஒரு மருத்துவர் சொன்னதை இன்னோரு மருத்துகவர் மறுதளிப்பார். என்னுடைய ஜனுவியா 100 எம் ஜி. சென்ற வருடம் தரப்பட்டது.
பதிலளிநீக்குவிலை காது கொடுத்துகேட்கமுடியாது.
முன்பிருந்த நல்ல வைத்தியர் கொடுத்ததெல்லாம் வேண்டாம் என்று இந்த மருத்துவ மனை சொல்லிவிட்டது.
அவர் இறந்துவிட்டதால் புது இடம் வரவேண்டியதாக இருந்தது.
நோயே வரக்கூடாது.
நோயே வரக்கூடாது.//
பதிலளிநீக்குAadhyAthmikam , Aadhibhoudhikam and Aadhidhaivikam .
நோய் வரக்கூடாதா !!
அப்பறம் யம தர்ம ராஜாவுக்கு வேலை போயிடுமே !!
ஆத்யாத்மிகம், ஆதி பௌதீகம், ஆதி தைவீகம்.
மூன்று காரணங்கள் நம்ம உபாதைகளுக்கு எல்லாம் காரணமாக சொல்லப்பட்டு இருக்கு.
ஆத்யாத்மிகம்: நம்ம செயல்களினாலே ஏற்படுபவை.
ஆதி பௌதீகம் : இது ஜீனி சம்பந்தப்பட்டது. பிதுர் ராஜ்ய சொத்து.
அப்பா, தாத்தா வுக்கு சொத்து ஏதும் கொடுக்க முடியாட்டியும், இதெல்லாம் கொடுத்துட்டு
போயிடறா. ரத்த அழுத்தம், ருமாடிசம், அதிகத்துக்கு யூரிக் ஆசிட் ரத்தத்துலே காரணமில்லாமல்,
கௌட் , டயாபெடிஸ், இதெல்லாம் நம்ம கையிலே இல்ல. இதெல்லாம் சமாளிக்கத்த்தான் பிதுர் ராஜ்ய சொத்து.
ஆதி தைவீகம்.: கான்றவர்சியல் சப்ஜெக்ட். முன் வினைப்ப்பயனாலே வரது. செஞ்ச பாபம் .பிரதிபலிக்கிறது
இந்த ஜன்மத்திலே. ஒன்னும் செய்யமுடியாது. லேர்ன் டு லீவ் வித் இட் . லூகொடேர்மா , ஆஸ்துமா, சில
கார்சினோமா இவைகள்
நோய் என்பதை ஒரு வரம் என்று நினைத்து பாருங்கள்.
இந்த சரீரத்தை விட்டுட்டு ஆன்மா விடுதலை ஆகிப்போறதுக்கு ஒரு டூல் .
த்ர்யம்பகன் அப்படிங்க ஒருவன் இருக்கான். அவனை ஜெபிக்க,
இந்த உடலை விட்டு உயிர் சட்டுன்னு வெள்ளரிக்காய் முத்திப்போய், ஓட்டை விட்டு விலகிப்போராப்பொல,
கிளம்பனும்.
இருக்கற வரைக்கும் யாருக்கும் ஒரு தொந்தரவு கொடுக்காம இருக்கணும்.
போற டயம் வந்தாச்சுன்ன டக் அப்படின்னு போயிடனும்.
அடியே !! சீக்கிரம் ஒரு வாய் சூடா காபி கொண்டா.
சுப்பு தாத்தா.
//நோய் என்பதை ஒரு வரம் என்று நினைத்து பாருங்கள். //
பதிலளிநீக்குஹப்பா.. கட்டக் கடைசீலே இந்த முடிவுக்கு வந்தாச்சா?.. இதுக்குத் தான் இத்தனை அலப்பறையா?
//ஆதி தைவீகம்.://
பதிலளிநீக்குஇதைப் பேச வேற எடத்துக்குப் போகணும்.. எப்போ வைச்சுக்கலாம்?.. சொல்லுங்கோ. .
சுதா சார்! ஒரு டவுட் கேக்கணும். இவங்களானும் தடை செஞ்சிருக்காங்க.. இதுக்கு முந்தி ஒரு தபா டிரக் கன்ட்ரோல் சமாசசாரத்தையே இழுத்து மூடி பூட்டுப் போட முயற்சித்த மாதிரி தேசலா ஒரு நினைவு எனக்கு ஆம் ஐ கரெக்ட்?...
விஷயத்தைக் கடை பரப்பிட்டு மாத்திரை மாத்திரையா நெறைய படம்லாம் போட்டுட்டு இந்த ஸ்ரீராம் எங்கே போனார்ன்னு தெரீயலையே!
நன்றி ஜீவி ஸார்...
பதிலளிநீக்கு//நல்ல காரணங்களுக்காக இந்த மருந்துத் தடை இருநிருந்தால் அதை இரகரம் நீட்டி வரவேற்க வேண்டும்.//
காரணம் என்ன என்றுதான் சொல்ல மாட்டேன் என்கிறார்களே.. மருந்துகளின் டிரேட் நேம் மாறலாம். மூலப்பொருள் ஒன்றுதானே? உதாரணமாக பாரசிட்டமாலையே எடுத்துக் கொள்வோம்! மெட்டாசின், கால்பால், டோலாபர், என்று ஆளாளுக்கு ஒரு பெயரில் தந்தாலும் அது பாராசிடமால்தான்.
இந்தக் காலத்தில் மருந்து சமாச்சாரமும் ஒரு மகா பிஸினஸ். அவ்வளவுதான். சித்தா, ஆயுர்வேதம், என்று எவ்வளவு வகை இருக்கிறதோ, அவ்வளவு வகையிலும் மக்கள் கூட்டம் அலைமோதுவது ஒரு விந்தை! எல்லோருக்கும் தனக்கு ஒரு நோய் இருப்பதாக நம்புவது ஒரு நாகரீகமாகி வருகிறதோ! அலோபதி உடனடித் தீர்வு மாதிரிதான். ஹோமியோபதி போன்ற மருந்துகள் நோய்முதல் நாடி சரி செய்கிறதா என்று யோசிக்க வேண்டும். எல்லாமே ஜவ்வரிசி ஜவ்வரிசியாக மாத்திரைகள்! அல்கஹால் ஸ்மெல் அடிக்கும்! ஆம்லெட்டில் பேப்பர் தூவித் தருவது போல ஜவ்வரிசி மாத்திரைகளில் சில சொட்டுகள் மூலமந்திர நீர் தெளித்து தருகிறார்கள்.
சித்தா, ஆயுர்வேதம் பற்றி எல்லாம் அவ்வளவாத் தெரியாது iK Way அபான வாயு, கரியமில வாயு என்றெல்லாம் சொல்கிறார்கள்!!!
பதிலளிநீக்குஅந்தச் சந்தேகம் எனக்கும் இருக்கிறது பகவான்ஜி. இதற்கு முன்னும் சில அத்தியாவசிய மருந்துகளின் விலைகளை ஏற்றி இறக்கி செய்து கொண்டிருந்தது அரசு.
பதிலளிநீக்குநன்றி ஏஞ்சலின். 90% சதவிகித மக்கள் செய்வது என்ன தெரியுமா? ஏற்கெனவே தாங்கள் ஏதாவது ஒரு நோய்க்கு வாங்கிய மருந்துகளின் அட்டைகளை, அல்லது சீட்டை வித்துக் கொண்டே ஆண்டுக் கணக்கில் அதே மாத்திரைகளை வாங்கிச் சாப்பிடுவார்கள். அதே போல தனக்குத் தெரிந்தவர்களுக்கு ஏதாவது ஒரு மருந்து வேலை செய்து சரியாகி இருந்தால், தங்களுக்கும் அதே போல பிரச்னை இருந்தால் அதே மாத்திரையை மருத்துவரைக் கேளாமலேயே வாங்கி சாப்பிட்டு விடுவார்கள். அதன் பக்க விளைவுகள் பற்றி அறியாமல், அல்லது கவலைப்படாமல்!
பதிலளிநீக்குவாங்க சுப்பு தாத்தா.. இப்போதைய மருந்துகளில் ஆண்டிபயாடிக் மாத்திரைகளுக்குத்தான் விலை அதிகம். மேலும் மக்கள் அறியாமல் ஆண்டிபயாடிக் மாத்திரைகளை சரியாக உபயோகிக்கத் தெரியாமல் - அதாவது ஐந்து நாட்கள் சாப்பிட வேண்டுமென்றால் இவர்களே தங்களுக்குத் தாங்களே நீதிபதியாய் 'சரியாகி விட்டது, போதும்' என்று இரண்டு அல்லது மூன்று நாட்களிலேயே நிறுத்தி விடுவது, எதற்கெடுத்தாலும் அதையே வாங்கி வாங்கிச் சாப்பிடுவது - உபயோகிப்பதில் அந்த மாத்திரையின் வீரியம் அவர்கள் உடம்பைப் பொறுத்தவரைப் பயனற்றுப் போகிறது. மேலும் சமீபத்துச் செய்திகளின்படி, இப்போதைய ஆண்டிபயாடிக் மாத்திரைகள் அத்தனைக்கும் எதிர்ப்பு சக்தி தெரிந்து வைத்திருக்கிறதாம் நோய்க்கிருமிகள்.
பதிலளிநீக்குபாரசிடமால், அதனுடன் அசிக்லோ அல்லது டைக்லோஃபெனாக் மாத்திரைகள் கலந்து நிறைய வருகிறதே.. அது மட்டுமா வலி நிவாரணி? இன்னும் மயோரில், லோர்நாக்சிகாம் போன்ற மருந்துகளும் உண்டு. டைக்லோஃபெனாக்குடன் மயோரில் கலந்தும் தருவது உண்டு. ஆனால் இவற்றுடன் ஓமி,ராபி, பான்டா ப்ரசொல்கள் கலந்து வருவதில்லை. அவற்றைத் தனியாக உணவுக்குமுன் எடுத்துக் கொண்டு இவற்றை உணவுக்குப் பின் எடுத்துக் கொள்ளலாம்.
பதிலளிநீக்குஉணவுக்குமுன் எடுத்துக் கொள்ளும் வலி நிவாரணிகள், வீக்க நிவாரணிகளும் உண்டு. ட்ரிப்சின் கீமோட்ரிப்சின், செரடோமா போன்றவை என்சைம் வகையறாவைச் சேர்ந்தது என்பதால் சாப்பிடுமுன் சாப்பிட்டால் நன்கு வேலை செய்யும். ஆனால் கூட இந்த ரானிடிடின், ஓமி,ரேபி,பான்டா ப்ரசொல் வகியரா சேர்த்துச் சாப்பிட்டு விடுவது நல்லது!
பதிலளிநீக்குநன்றி கில்லர்ஜி. பகவான்ஜிக்கு அளித்த பதிலே உங்களுக்கும்!!!!
பதிலளிநீக்கு:))))
இன்று ரொக்கம் நாளை கடன் என்பது பதிவு சொல்லும் விஷயத்துக்கு அஒப்பார்பட்டது என்றாலும் ஜீவி ஸார், இந்த வாசகங்கள் பெரும்பாலான வியாபார ஸ்தலங்களில் (கவனிக்கவும், வியாபார ஸ்தலங்களில்!!) காணப்படுவதுதான்!
பதிலளிநீக்குவெறும் பாரசிடமால் மாத்திரை மட்டும் ஆபத்தில்லாதது என்றுதான் சொல்லி வந்தார்கள் டி என் முரளிதரன்.. ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு அல்லவா... அதுவும் நிறைய சாப்பிட்டால் கிட்னியைப் பாதிக்கும் என்கிறார்கள். சில பேர் தங்கள் பையில் எப்போதும் இந்த மாத்திரையை ஆபத்பாந்தவன் போல வைத்திருப்பார்கள். ஆனால் சாரிடான் போன்ற மாத்திரைகளுக்கு இது தேவலாம். மக்கள் பையில் எப்போதும் வைத்திருக்கும் மாத்திரைப் பட்டியலில் இன்னொன்றும் உண்டு. ஜெலுசில்!!!!
பதிலளிநீக்குநன்றி கோமதி அரசு மேடம்.
பதிலளிநீக்குநன்றி கீதா மேடம். ஹோமியோபதியை விட்டு விட்டீர்களே...
பதிலளிநீக்கு:)))
சுப்பு தாத்தா.. ஜீவி ஸார் சொன்ன மாதிரி சும்மா புகுந்து விளையாடுகிறீர்கள். ப்ராபபிள் லாஞ்சவெடி தத்துவம் அருமை.
பதிலளிநீக்குநன்றி நண்பர் வலிப்போக்கன்.
பதிலளிநீக்குநன்றி ஜி எம் பி ஸார். ஏற்கெனவே சொன்னது போல மூலப்பொருள் ஒன்றுதான். அதை வெவ்வேறு நிறுவனங்கள் வெவ்வேறு பெயரில் தயாரிக்கின்றன. அவ்வளவுதான். எல்லாம் ஒன்றுதான். டோலோ 650 போன்ற மாத்திரைகள் அதிகப் புழக்கத்துக்கு வருவது அநியாயம். எப்போதாவது உபயோகிக்கலாம். 500 மி கி போதும். அதுவும் தேவைப்படும்போது மட்டும். சுப்பு தாத்தா சொல்லி இருப்பது போல தலைவலி, ஜுரம் போன்றவை நம் உடலில் ஏதோ ஒரு சரியில்லாத தன்மை இருக்கிறது என்பதைக் காட்டத்தான். அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து அதைக் களைவதுதானே நல்லது!
பதிலளிநீக்குநோய் வராமலிருக்க என்ன வழி! சுப்பு தாத்தா சொல்வது போல போரடித்து விடும் வல்லிமா! சர்க்கரை நோய்க்கு இப்போதெல்லாம் இந்த கிலெப்டின் வகை மருந்துகள் அதிகம் வரத் தொடங்கி விட்டன. ஜானுவியா என்பது சிடாகிலெப்டின். இன்னும் சாக்ஸாகிலெப்டின் (ஆன்கிளைசா), வில்டாகிலெப்டின் (கால்வஸ்)போன்றவையும் உண்டு!
பதிலளிநீக்குமறதி என்பது ஒரு வரம் போல நோயும் வரமா சுப்பு தாத்தா? எனக்கு உடன்பாடில்லை.
பதிலளிநீக்குசு.தா. நீண்ட காலப் பயன்பாடு என்றால் என்னை மாதிரி ஜன்மம் முழுசும் மருந்து சாப்பிடறவங்க! :)))) ஆயுர்வேத மருந்துகளில் பக்கவிளைவுகள் இல்லை. நான் வயிற்றுத் தொந்திரவுக்கு இங்கே ஒரு பெண் மருத்துவர் (ஆயுர்வேதம்) கொடுத்த கஷாயத்தைச் சாப்பிட்டதில் பிரமாதமான முன்னேற்றம் தெரிந்தது. தொடர இருந்தேன். ஆனால் அந்த மருத்துவரே அப்புறமா அங்கே வரவில்லை. கணவனும் ஆயுர்வேத மருத்துவர் என்பதால் அவர் தான் வர ஆரம்பித்தார். பெண் மருத்துவருக்கு வீட்டருகேயே கன்சல்டிங் ரூம் போட்டுட்டாங்களாம். கணவனின் மருத்துவ முறை எனக்கு ஒத்துவரலை! நம்ம நேரம்! :)
பதிலளிநீக்குஶ்ரீராம், ஹோமியோபதியை மறக்கலை. அதுவும் வெளிநாட்டு மருத்துவ முறை என்பதால் சொல்லலை. நம் நாட்டு மருத்துவ முறைகளான சித்தா, ஆயுர்வேதம் தான் சிறப்பு. முக்கியமா வயிற்றுக்கோளாறுகளுக்கு, சிறுநீரகக் கல், நீரிழிவு, ரத்த அழுத்தம் போன்றவற்றிற்கு. அரவங்காட்டில் நாங்க இருந்த குடியிருப்பில் ரத்த அழுத்தத்துக்கான மூலிகைச் செடி புதர் போல் வளர்ந்திருந்தது. பறிச்சுட்டுப் போவாங்க. நல்ல பலன் இருப்பதாகவும் சொல்வாங்க. அப்போல்லாம் எனக்கு ரத்த அழுத்தம் இல்லை! :) இப்போ ஆங்கில மருத்துவம் தான் ரத்த அழுத்தத்துக்கு! :( அது என்னனு மறந்து போச்சு! சிறியாநங்கைச் செடியின் இலைகளைக்கஷாயம் போட்டுச் சாப்பிட்டால் ரத்த அழுத்தம், நீரிழிவு இரண்டுக்கும் நல்லது என்பார்கள். இங்கே கிடைக்கிறதில்ல. அம்பத்தூர் வீட்டில் சிறியாநங்கைச் செடிகள் நிறையவே உண்டு. சுப்புக்குட்டிங்க வராமல் இருப்பதற்காகப் பயிராக்கினோம். அப்படியும் அவை வந்தன என்பது வேறே விஷயம். :)
பதிலளிநீக்குநல்ல பதிவு. நிறைய தகவல்களுடனான கருத்துப் பரிமாற்றங்கள்!
பதிலளிநீக்குநாங்க நாகர்கோயில் போகையில் கூடப் பயணித்த ஒரு பிரயாணி மூட்டு வலிக்குக் கடந்த மூன்று வருடங்களாக ஆயுர்வேத மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக் கொள்வதாகவும் நல்ல பலன் இருப்பதாகவும் சொன்னார். நானும் அங்கே போனப்போ ஆயுர்வேத மருத்துவரைப் போய்ப் பார்க்க எண்ணினேன். போகவே முடியலை! :(
பதிலளிநீக்குடாக்டர் சீட்டை எடுத்துக்கொண்டு போய் மருந்துக் கடையில் கொடுத்தால்,
பதிலளிநீக்குமருந்துக் கடையில் தகுதியானவர் இருந்தால் தானே
இதுவும் அதுவும் ஒன்று என்று
மக்களை ஏமாற்றாமல் இருப்பாங்க...
டாக்டர் சீட்டையில் உள்ள மருந்தை வழங்காத
மருந்துக் கடைகளை அரசு மூடவேண்டும்.
இது பற்றிச் சுகாதாரப் பிரிவினர்
கவனம் எடுக்க வேண்டும்!
மக்கள் விழிப்புணர்வைத் தந்த
அருமையான பதிவு!
நல்ல விளக்கமான பகிர்வு அண்ணா...
பதிலளிநீக்குவிழிப்புணர்வு பகிர்வும் கூட...
இக்காலத்தில் காய்கறிகள் சாப்பிட ஒரு முறையும், கோழி சாப்பிட மேலும் ஒரு முறையும், மாத்திரைகள் சாப்பிட பலமுறைகளும் யோசிக்க வேண்டி இருக்கிறது. எனக்கு பொதுவாகவே மாத்திரைகள் மீது ஒரு சந்தேகம். தப்பித்தவறி கூட பெய்ன் கில்லர்ஸ் எடுத்துக் கொள்ள மாட்டேன்.இனி அவ்வளவு தான்!
பதிலளிநீக்குஇக்காலத்தில் காய்கறிகள் சாப்பிட ஒரு முறையும், கோழி சாப்பிட மேலும் ஒரு முறையும், மாத்திரைகள் சாப்பிட பலமுறைகளும் யோசிக்க வேண்டி இருக்கிறது. எனக்கு பொதுவாகவே மாத்திரைகள் மீது ஒரு சந்தேகம். தப்பித்தவறி கூட பெய்ன் கில்லர்ஸ் எடுத்துக் கொள்ள மாட்டேன்.இனி அவ்வளவு தான்!
பதிலளிநீக்குஸ்ரீராம் செம பதிவு!! நல்ல விளக்கமான பதிவு!
பதிலளிநீக்கு//தனியார் மருத்துவமனைகளில், சிறப்பு மருத்துவர்களைப் பார்த்து, இந்த மருந்துகளை வாங்கும் நடுத்தர, மேல்தட்டு மக்களுக்கே இந்தப் பிரச்னை என்றால், அரசாங்கப் பொது மருத்துவமனையில் சிகிச்சை எடுக்கும் கீழ்த் தட்டு மக்களுக்கு தாங்கள் என்ன சாப்பிடுகிறோம், எதற்குச் சாப்பிடுகிறோம் என்றே அறியாமல், கொடுத்ததைச் சாப்பிடும் கலவர நிலவரம் ஒரு புறம். // 100% அக்மார்க் உண்மை. பல மாத்திரைகள் தடுக்கப்பட்டும் உலாவந்துகொண்டிருக்கின்றனதான்...எனக்கு மகன் சொல்லிவிடுவதால் அவன் ஜெனெரிக் பார்த்து வாங்கிடச் சொல்லுவதால் பிரச்சனை இல்லை ஆனால் பாமர மக்கள் மிகவும் வேதனை..அதிலும் அரசு மருத்துவமனை மருந்தகங்களில்....வேண்டாம் சொன்னால் பெரிதாகும். இது அரசு கால்நடை மருத்துவமனை உட்பட...பாவம் அதுங்க...நாம் பேசிடறோம்...அதுங்களால பேசக் கூட முடியாது...
நானும் என் கசின் மெடிக்கல் ரெப் லைனில் தமிழ்நாடு முழுவதற்கான பொறுப்பில் இருப்பதால் நிறைய தெரிய வருகிறது. அவனும் என்னிடம் குறிப்புகள் கொடுத்தான். அதன் பின் பிசியாகிவிட்டான் அவனால் தொடர இயலவில்லை. அவன் சொல்லி முடித்ததும் சிறு தொடராக எழுதாலாம் என்று இருக்கிறேன் எப்போது என்று தெரியவில்லை...நானும் அவ்வப்போது பிசியாகிவிடுவதால்...
கீதா
தடை போட்டா, தானா தேடி வருவீங்க, ஆதான்
பதிலளிநீக்குஜெனரிக் மருந்துகள் நமக்குக்கிடைத்த வரமே! அனைவரும் இதை பயன்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம். ஜெனரிக் மருந்துகள் பற்றிய இன்னும் பல அவசியமான தகவல்களை goo.gl/oz1y8v ஐ கிளிக் செய்தும் நாம் தெரிந்து கொள்ள முடியும்!
பதிலளிநீக்கு