கேள்வி பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கேள்வி பதில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18.12.19

புதன் 191218 :: ரி ட ஸ் ஹி


பானுமதி வெங்கடேஸ்வரன்.

ஹிஸ்டரி ரிபீட்ஸ் இட்செல்ஃப் என்பார்களே, அதன்படி நாடகம் மீண்டும் உன்னதம் அடையுமா?


30.1.19

புதன் 190130 : மாற்றி யோசி(த்தது உண்டா?)

                  
சென்ற வாரப் பதிவில் எல்லோரும் மாமியார் மருமகள் சண்டை போட்டதில், எங்களைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் போய்விட்டது! 
அதனால, வாட்ஸ் அப் கேள்விகளை வேண்டி விரும்பிப் பெற்றோம்.  

ஆகவே, இது ........  

9.8.18

9.8.18 கேள்விகள் & பதில்கள் !




கீதா சாம்பசிவம் : 

?காந்தி பத்தி உங்க கருத்து என்ன? (ஹையா, மாட்டிக்கொண்டாரே, மாட்டிக் கொண்டாரே)

16.5.18

கேளுங்க ! சொல்றோம் ! புதன் 180516



இந்த வாரம் நகத்தைக் கடித்துக் கொண்டிருக்கும் ஆண் : திரு எடியூரப்பா ! 
(படம் கிடைக்கவில்லை! ) 


28.4.11

ஒரு மின்னல் வேகப் போட்டி!

            
இந்தியர்களுக்கு மட்டும். வெளிநாடு வாழ் இந்தியர்களும் (ஞாபக சக்தி அதிகம் இருந்தால்) பங்கு பெறலாம். இந்தப் போட்டியில் பங்கு கொள்பவர்கள், தங்களுடைய பர்ஸ், பணப்பெட்டி, பணம் எதையும் கமெண்ட் பதிவு செய்து முடிக்கும் முன்பு, பார்க்கக் கூடாது. இது மிகவும் முக்கியமான கண்டிஷன். கமெண்ட் செய்து முடித்த பின், விடையை சரி பார்த்து, புதிய கமெண்ட் கூடாது!
  
இப்போ போட்டிக்குச் செல்வோமா?


   
இந்திய பணம் - பத்து ரூபாய் நோட்டில் - இரண்டு பக்கங்களிலும் சேர்த்து, மொத்தம் எவ்வளவு மிருகங்களின் படங்கள் உள்ளன? அவை யாவை?
          
அல்லது - பத்து ரூபாய் நோட்டில் மிருகப் படங்களே கிடையாதா? (௦0?)
                    
பின் குறிப்பு: உதாரணமாக - இரண்டு கரடி படங்கள் இருந்தால், அவைகளை இரண்டு என்றுதான் பதிய வேண்டும்.

பின் பின் குறிப்பு. கருத்துரைகள் - உடனே வெளியிடப்படாது. பதில் அல்லாத, 'இடக்கு மடக்கு' கமெண்டுகளை, உடனே வெளியிட முயற்சிக்கின்றோம்!
 
(ஹி ஹி - இந்தப் பதிவில், பத்து ரூபாய்ப் படம் இல்லைங்க! ஆனால் இங்கு உள்ள படங்கள் என்னென்ன என்பது பற்றியும் பின்னூட்டம் பதியலாம்!).    
                              
ஆரம்பியுங்க, உங்க அட்டகாச கமெண்டுகளை!
               

12.7.09

அன்புள்ள அனானிக்கு... 01

அன்புள்ள அனானி!

உங்கள் கேள்விகளில், முதலாவதாக நான் எடுத்துக் கொண்டிருப்பது:

கே: ஆசிரியர் குழு - அறிமுகம் தேவை.

பதில்:

1) ஆசி (Rear) : மற்ற மூவருக்கும் ஆசி வழங்க வேண்டியவர்; தன் 'பங்கு' க்கு மிகவும் நன்றாக எழுதுபவர். எங்கள் வெற்றிக்குப் பின்னே (rear) இவர் உண்டு.

2) ஆ (சிரி) யார் ? : சிரித்துக் கொண்டே ஆய்பவர்; எழுதுபவர் - எப்பொருள் யார் யார் வாய்க் கேட்பினும் ......

3) ஆ (ஸ்ரீ யார்) : ஸ்ரீ என்பதை தமிழில் "திரு" என்பார்கள்; நெட்டிலே திருடி - நேர்மையாய் ஒத்துக் கொள்பவர் - ஆனால் சுவையான சுடல்கள்!

4) ஆ (சிறியர்) : பட்டணம் 'பொடி' அய்யர். தானும் தும்மி மற்றவர்களையும் தும்ம வைக்க முயற்சிப்பவர்!