படித்துக் கொண்டிருக்கும் புத்தகத்திலிருந்து....
சங்கமக்ராம மாதவனை சர்வதேச தரத்திலேயே எல்லோரும் அங்கீகரித்துள்ளார்கள். கால்குலஸை நியூட்டனுக்கு 200 வருடங்களுக்கு முன்பே மாதவனுடைய கேரளா ஸ்கூல் கண்டுபிடித்துவிட்டது.
**********************************
.............................. ..............
ஆனால் நீலாண்டன் -
"வியாஸேவா ரிதினிஹதே
ரூபஹ்ருதேவ்யாஸ ஸாகரா பிஹதே -
ஸ்த்ரீஸராதி விஷமஸங்க்யா
பக்தம்ருணம் ஸ்வம் ப்ருதக்ரமால் குர்யால்."
என்று சொல்லி நிறுத்தியதும் இட்டிக்கோரா கொஞ்சம் ஆலோசித்தவாறு இருந்துவிட்டான். ஆனால் நிமிடத்துக்குள் விஷயம் பிடிபட்டபோது மகிழ்ச்சியைப் பொறுக்க முடியாமல் எழுந்தவன் நீலாண்டனை இரண்டு கைகளாலும் கட்டியணைத்துத் தழுவிக் கொண்டான்.
"நம்பூரி, நீ சாதாரணமானவன் இல்ல. ஹைபேஷ்யாவோட மூணாம் வரிசையில சொன்னதுதான் இது. விட்டத்த சமுத்திரத்தால் பெருக்கி ரூபத்தால் வகுத்து, பின் விட்டத்த சாகரத்தால பெருக்கியதை த்ரீ, சரம் முதலான வரைமுறையற்ற எண்களால் வகுத்தும், கழித்தும் கூட்டிக்கொண்டும் இருங்கள் என்பது ஒரு மொற. அலெக்ஸாண்டிரியாவிலேயே நான் இதப்பத்தி கத்துக்கிட்டேன்தா. ஆனா, இத எப்படி நான் தெளிவிப்பது?"
"தெளிவிக்கணும்னு யாரு சொன்னாங்க?"
"அதா, உங்களோட கேள்வி நம்பூரி. மேற்கத்திய நாடுங்கள்லவுள்ள மொறய ஒட்டி சும்மா ஒரு சித்தாந்தத்த சொன்னா மட்டும் போதாது. அத தெளிவுபடுத்தணும். இங்க அது வேணாம். எந்த சித்தாந்தத்தையும் தெளிவுபடுத்தினாதா அது சித்தாந்தமாயி கணக்காக்க முடியும்னு ஹைபேஷிய மொற சொல்றது... ஆமாம், இந்த ஹைபேஷியா யாருன்னு உங்களுக்குத் தெரியுமா நம்பூரி?"
"இல்லியே..."
"ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முன்னால அலெக்ஸாண்டிரியாவிலிருந்த ரொம்ப திறமைசாலியான ஒரு பொண்ணு அவ. உலகத்திலவுள்ள இன்றைய கணக்கோட அடிப்படை பூராவும் அந்தப் பொண்ணோட சித்தாந்தங்கதா. ஹைபேஷ்யாவின் மூணாம் வரிசைன்னு சொல்றதுதா இப்ப நீங்க சொன்னது நம்பூரி. நான் கற்றதயொட்டி அத இப்படித்தா எழுதமுடியும்...
"ஹைபேஷ்யாவின் சித்தாந்தங்கள் லத்தீனிலும் ஹீப்ருவிலும் அரபியிலுமெல்லாமாக உலகம் முழுவதும் பரவியிருக்கு "
"இத மூணாம் வரிசைன்னு சொன்னீங்களே.. அப்படின்னா ஒன்னாம் வரிசை எது?"
"அது ரொம்ப பிரபலமாச்சே... அதயொட்டிதானே கடவுளு இந்த ஒலகத்தையே படைச்சாராம். பார்ப்பதற்கு அழகான எந்தவொரு பொருள் எடுத்து நோக்கினாலும் அதுல இந்த வரிசையப் பார்க்கலாம். சூரியகாந்திப் பூவுக்குள் நடுவுலவுள்ள மகரந்தங்களை ஒருமுறை எண்ணிப் பாருங்க.. இல்லேன்னா அன்னாசிப்பழத்தப் பாருங்க. அதுக்கெல்லாம் ஒழுங்கு இல்லாமைக்கு ஒரு ஒழுங்குண்டு. அதா ஹைபேஷ்யாவின் ஒன்னாம் வரிசை. 0, 1, 1, 2, 3, 5, 8, 13, 21, 34, 55... ன்னு அப்படியே போவும். இந்த வரிசையிலவுள்ள ஒரு எண்ணோடு கூட முன்னாலுள்ள எண்ணக் கூட்டினா அடுத்த எண் கிடைக்கும். இதக் குறுக்கும் நெடுக்கும் இடும்போதுதான் சூரியகாந்தியிலவுள்ள வடிவம் உண்டாவும். இப்ப ரோம ராஜ்யத்துலவுள்ள சில ஆளுங்க நாங்கதான் இதயெல்லாம் கண்டுபிடிச்சோம்னு சொல்லித் துள்ளித் திரியறாங்க."
"இந்த ஹைபேஷ்யா அசாத்தியமான புத்திசாலிதா. நம்ம முன்னால கெடக்கற பொருளுங்கள இதுவா இப்படிப்பட்ட கனக்குக் கண்ணோட்டத்துல நோக்கத் தோணலயே...."
"அது மட்டுமல்ல. இந்த வரிசையிலவுள்ள அடுத்தடுத்த ரெண்டு எண்களுக்கு இடையில ஒரு அளவுண்டு. அதுக்கு புனித அளவுன்னுதான் சொல்லுவாங்க... 1.6180339887... அதான் கடவுளோட படைப்புங்களிலவுள்ள சௌந்தர்யத்தின் அளவு. ஹைபேஷ்யாவின் உடலிலுள்ள எல்லா உறுப்புகளும் துல்லியமான புனித அளவுலதா இருந்துதாம்.".....
"அதா சுவாரஸ்யம்.. ஆகாயத்தில நாம பாக்குற மின்னற வெள்ளை நட்சத்திரங்களைப் போல கருப்பு நட்சத்திரங்களும் இருக்காம். ஒரு வெள்ளை நட்சத்திரத்துக்கு பதினெட்டு கருப்பு நட்சத்திரம்னு வைச்சிகிட்டா, அப்போ வானம் முழுவதிலும் எத்தன நட்சத்திரம்னுதா கண்டங்கோரனோட கேள்வி"'
ஃபிரான்ஸிஸ் இட்டிக்கோரா - ட்டி.டி. ராமகிருஷ்ணன்.
தமிழில் குறிஞ்சிவேலன்.
உயிர்மைப் பதிப்பகம் - 275 ரூபாய். 352 பக்கங்கள்.
============================== ============================== ============================== =================
திருச்சி, ஸ்ரீரங்கத்தில் மழையும். கீதாக்கா, திருமதி வெங்கட் முகநூலில் சொல்லி இருக்கிறார்கள். சென்னை அனல் பறக்கிறது. போரில் தண்ணீர் வேறு குறைந்து கொண்டே வருகிறது.. 2013 இல் நான் வைத்த வேண்டுகோளை மறுபடி வைக்கிறேன்...!!
=============================================================================================================
ஏப்ரல் 26 ம் தேதி பதிவில் சுஜாதா ரசித்த கன்னியப்பன் எழுதிய பாரதி கவிதை உல்டா ஒன்று வெளியிட்டிருந்தேன். இது என் தந்தை பாஹே 2012 ஏப்ரல்ஆறாம் தேதி பகிர்ந்தது. இதுவும் கூட பாரதி கவிதை உல்டாதான்!
எனக்கும் கூட
காணி நிலம் வேண்டும் -
பால்கனியுடன் ஒரு மாடி அறை
அட்டாச்டு பாத்ரூமுடன்,
கீழே மெஸ் நடத்தும் மாமி -
இரு வேளை காபி, மதிய சாப்பாடு
இரவு டிபன், பால்
அப்பப்போ செகண்ட் டோஸ் காபி -
மாமி தந்து விட வேண்டும் (விலைக்குத்தான்)
பத்திரிகைக் கடை ஒன்று மஸ்ட்.
ஒரு நூலகம் கூட ரொம்ப ரொம்ப அவசியம். -
எல்லா லேட்டஸ்ட் வெளியீடுகளுடனும்.
மாமிக்கு ஒரு பள்ளிப் பையன்
சைக்கிளுடன் இருக்க வேண்டும்.
மருந்துக் கடை பத்திரிகைக் கடைகளுக்குப்
போய் வருபவனாக அவன் -
ஒரு கல்லூரி மாணவி
மாமிக்கு இருக்கட்டுமே -
மறந்து விட்ட ஒண்ணா
மாமி இரண்டாம் தாரமாக
இருந்தால் பெட்டர் -
குடியிருப்பு ஒழுங்கான வீதியாக
எல்லையில் ஓடும் ஆறு -
குளிக்க வசதியான படிக்கட்டுடன் -
ரொம்ப முக்கியம்
கரையில் ஒரு படர்ந்து விரிந்த ஆலமரம்.
தலைவைத்துப் படுக்க வேர்கள் புடைத்து -
இந்த சொர்க்கம்
எங்கே கிடைக்கும் -
எனக்கு வேண்டுமே.......
வேண்டவே வேண்டாம்
எனக்கு எப்போதும் -
ஒரு கடப்பாடு போல
வேளா வேளைக்கு
கட்டாய உணவு.
பேசத் தெரியாத,
படித்ததைப் பகிரத் தெரியாத
நட்பு, உறவு.
விஜய்களும், தனுஷ்களும், ரஜினிகளும்
அழையா விருந்தாளிகளாய்
தினம் தினம் வந்துபோகும்
முட்டாள் பெட்டி
வார, மாத பருவ ஏடுகள்.
============================== ============================== ============================== ================
உறவில் ஒருவர் நைட்டிங்கேல் பற்றி கவிதை (மாதிரிதான்!!!) எழுதித் தரச் சொல்லிக் கேட்டிருந்தார். சுமாராய் ஒன்றை எழுதி, அவருக்கு வாட்ஸாப்பில் அனுப்பி ஒரு வாரமாகிறது. ப்ளூ டிக்கும் விழுந்திருக்கிறது. இன்னும் அபிப்ராயம் வரவில்லை! சோகம்!
நைட்டிங்கேல்..
சேவைகளின் மொத்த அகராதி
அன்பின் மிச்சம் ;
தியாகங்களின் உச்சம்
கைவிளக்கேந்திய காரிகை
தியாகத்துக்கெல்லாம் அவள் தூரிகை
சேவை அவளது உயிர்நாடி - அதனால்
பறந்தன நோய்கள் விரைந்தோடி.
நோயாளிகளுக்கு அவள் தாய் மாதிரி
அவர்களின்
நோய்களுக்குதான் அவள் எதிரி
அவள்
கடவுளின் செல்லப்பிள்ளை
என்றும்
பணத்தைப் பெரிதாய் மதித்ததில்லை
சேவைகளுக்குக் கொடுத்தாள் முதலிடம்
சொந்த சுகங்களுக்கு அவள் வாழ்வில் ஏது இடம்?
அன்பிற்கும் பண்பிற்கும் அவள் கண்ணாடி
செவிலியர்க்கெல்லாம் அவள் முன்னோடி
சேவையால் துஞ்சவில்லை அவள் கண்ணினம்
அவளால் பெருமை கொண்டது பெண்ணினம்
============================== ============================== ============================== =======================
சந்திரபாபுவின் திருமணத்தை நடத்தி வைத்தவர், ஆர்ச் பிஷப் அடைக்கலம்; அவரே, சந்திரபாபுவின் இறுதிச் சடங்கையும் செய்ய வேண்டியதாயிற்று. அப்போது, பிஷப் அழுததைப் பார்த்து பலரும் கண் கலங்கினர். கல்லறை தோட்டத்தில் தனக்காக ஒதுக்கி வைத்திருந்த இடத்தை சந்திரபாபுவுக்காக விட்டுக் கொடுத்தார், பிஷப்.
சந்திரபாபு அடிக்கடி சொல்வது இதுதான்...
'என்னை, முற்றிலும் புரிந்து கொண்டவர்கள் யாரும் இல்லை; ஏன், என் பெற்றோர் கூட என்னை சரியாக புரிந்து கொள்ளவில்லை. ஆகவே, மற்றவர்கள் யாராவது என்னை புரிந்துகொண்டதாக சொன்னால், நம்புவதற்கு கடினமாகவும், அதேசமயம் சிரிப்பும் வரும்...' என்பார்.
தினமலரிலிருந்து.... (அவர்கள் முகில் சிவா நூலிலிருந்து எடுத்துப் போட்டிருந்தார்கள்)
============================== ============================== ============================== ==========
"இப்போ அவ்வளவுதான்... சரி.. அடுத்த வாரம் பார்ப்போமா...?"
இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, பானுக்கா எல்லோருக்கும்…
பதிலளிநீக்குகீதா
ஹை ஹை ஹை ஹை...ஹப்பாடா சுவர் ஏறிக் குதிக்க வேண்டியிருக்கவில்லை....ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட
பதிலளிநீக்குகீதா
ஆஹா எனக்குப் போட்டி யாருமில்லை போல !! புஸ்.....குலாப்ஜாமூன் விளம்பரம் போல ஆகிவிட்டதோ?!!!!
பதிலளிநீக்குகீதா
கடைசி படம் சிவாஜி தானே??!! வித்தியாசமாய்...இருக்குதே..விவரங்கள் எதுவுமே தரலியே ஸ்ரீராம்...ஏதேனும் படத்தில் இப்படியான வேஷமோ?
பதிலளிநீக்குகீதா
இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன். அது என்ன குலாப்ஜாமூன் விளம்பரம்? ஆம் அது சிவாஜிதான். விவரம் தெரியவில்லை. சும்மா கிடைத்தது, எடுத்துக் போட்டேன்.
பதிலளிநீக்குஸ்ரீராம் என்னாச்சு? உங்களுக்கு? இன்னும் சுவர் ஏறிக்கிட்டு இருக்கீங்களா? உள்ள வர முடியலையா? என்னாச்சு? உங்களையும் காணவில்லை...வேறு யாரையும் காணலை.துரை அண்ணா கீதாக்கா பானுக்கா யாரும் காணலை..போர்...போர் ஹும்
பதிலளிநீக்குகீதா
பதில் சொல்லி இருக்கேனே கீதா.. மற்றவர்களால் சுவர் ஏற முடியவில்லை போல.. எந்நாலும் ஏணி வைத்து உதவ முடியாத நிலை!
பதிலளிநீக்குஹப்பா வந்திட்டீங்களா ஒரு வழியா ஏறிக் குதிச்சு....குலாப்ஜாமூன் விளம்பரத்தில் ஒரு குட்டிப் பையன் 2 வதாக ஓட்டப் பந்தயத்தில் வந்தேன் என்று அம்மா அப்பாவிடம் சொல்லுவான். அம்மாவும் அபாவும் பாராட்டி அம்மா குலாப்ஜாமூன் கொடுப்பார்....ரெண்டேபேர்தான் ஓடினோம் என்று சொல்லி குலாப்ஜாமூண்டை எடுத்துக் கொண்டு ஓடுவான்...அது போல நான் மட்டும் தான் இன்று எபி யைத் தட்டினேன் போல ...
பதிலளிநீக்குகீதா
// ரெண்டேபேர்தான் ஓடினோம் என்று சொல்லி குலாப்ஜாமூண்டை எடுத்துக் கொண்டு ஓடுவான்..//
பதிலளிநீக்குஓ... ஹா.. ஹா... ஹா.. பார்த்ததில்லை!
ம்ம்ம்ம் அதான் யாரும் உள்ள வர முடியலை போல...வேறு எப்படி உதவ முடியும்...அதிசயமாக எனக்கு கதவு திறந்து விட்டுவிட்டதே!!
பதிலளிநீக்குமற்றவற்றையும் என் பெண்ணுடன் லாங்க் வாக்கிங்க் போய் வேலை முடித்துவிட்டு வந்து பார்க்கிறேன்
கீதா
குலாப்ஜாமூனை என்று வந்திருக்க வேண்டும் ஸ்பீட் டைப்பிங்க்....ஜாமூண்டை என்று வந்துவிட்டது நல்ல வேர்ட் இல்லை அது..இனி கவனமாக அடிக்க வேண்டும்...கீ போர்ட் கீஸ் வேறு சரியில்லை...கவனமாக இருக்க வேண்டும்..
பதிலளிநீக்குகீதா
அன்பின் வணக்கம் அனைவருக்கும்...
பதிலளிநீக்குஇன்று காஃபி ஆத்த நேரமாச்சு..
காலை வணக்கம்
பதிலளிநீக்குவணக்கம் துரை செல்வராஜூ ஸார். உங்களுக்கும் எபி திறக்க சிரமம் கொடுக்கிறதா?
பதிலளிநீக்குகாலை வணக்கம் பானு அக்கா.
பதிலளிநீக்குயார் சொன்னது? நான் 5:55க்கே கணினியை திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன், எ.பி. திறக்கவேயில்லை. திடீரென்று திறக்கிறது, பார்த்தால்.. 12 கமெண்ட்!! கிர்ர்ர்.. என்ன நடக்கிறது இங்கே?
பதிலளிநீக்குமுதல் பாரா புரியவில்லை. கணக்கு கஷ்டம்.
பதிலளிநீக்குஅப்பா கவிதை மஹா சூப்பர்.
உங்கள் கவிதைப் பிரகாரம் மழை பொழியட்டும்.
வேறிடத்தில்
அறிவாளி, பெண்களை அதுவும் பத்தினிப் பெண்களை எழுந்து நிற்கச் சொன்னாராம். நீங்கள் சொன்னால் மழை பெய்கிறதா என்று பார்க்கலாம்னு சிரித்தாராம். தலைலெழுத்து.
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
//0, 1, 1, 2, 3, 5, 8, 13, 34, 55.// 13 க்கும் 34க்கும் நடுவில் 21 விட்டுப் போயிருக்கு! ஹிஹிஹி! இன்னிக்கு எழுந்தது லேட்டோ லேட்டு! ஐந்தரைக்குத் தான் எழுந்தேன். அதான் வரலை!
பதிலளிநீக்குஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
பதிலளிநீக்குபாவம் சந்திரபாபு. மிகவும் பிடிக்கும் அவரை.
பதிலளிநீக்குஇறப்பிலாவது அமைதி கண்டாரோ.
சிவாஜி படம் சூப்பர். கூகிளில் பார்த்திருகிறேன். மிடுக்கு.
இன்னிக்குப் பகிர்ந்திருக்கும் பாரதி கவிதையோட உல்டா எழுதினது யாராக்கும்? ஏப்ரல் 26 ஆம் தேதி கவிதையையும் போய்ப் பார்த்துட்டு வரணும்.
பதிலளிநீக்குசந்திரபாபு பத்திப் படிச்சிருக்கேன். ஆனால் நடிகை சாவித்திரிக்கு அவர் தான் குடிப்பழக்கத்தை ஏற்படுத்தினார் என்பது தெரிந்ததும் கொஞ்சம் வருத்தமாப் போச்சு!
பதிலளிநீக்குஅது சரி, உங்க ஜிவாஜி இந்த கெட்டப்பிலே எந்தப் படத்திலே நடிச்சார்?
கீதா, நான் போட்ட ஒரு புதன் புதிருக்கு யாரும் விடை சொல்லாமல் தெறித்து ஓடி விட, நீங்கள் மட்டும்தான் விடை சொன்னீர்கள். அப்போதும் நான் இதே எம்.டி.ஆர். குலாப் ஜாமூன் விளம்பரத்தை குறிப்பிட்டிருந்தேன்.
பதிலளிநீக்கு// யார் சொன்னது? நான் 5:55க்கே கணினியை திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன், எ.பி. திறக்கவேயில்லை//
பதிலளிநீக்குஆ... பானு அக்கா.. எபிக்கு வந்த சோதனை!
// 13 க்கும் 34க்கும் நடுவில் 21 விட்டுப் போயிருக்கு! //
பதிலளிநீக்குகீதா அக்கா... நன்றி... திருத்தி விட்டேன்!
கீதா அக்கா..
பதிலளிநீக்கு//அந்த நாவல் வாங்கினதா? //
ஆமாம்.. அதைத் தெரிவிப்பதற்காக அட்டையில் ஸ்ரீ என்று எழுதி இருக்கேன் பாருங்க!
// உங்க கவிதைகள் இரண்டுமே அபாரம்.//
நன்றி.. நன்றி..
கீதாக்கா...
பதிலளிநீக்கு// பாரதியின் உல்டா பிடிக்கலை! வசன கவிதை போல இருக்கு! //
அப்படியா சொல்றீங்க! அது பாஹே எழுதியது.. சொல்லி இருக்கேனே... வல்லிம்மா பாராட்டி இருக்காங்க பாருங்க...!!
கீதா அக்கா...
பதிலளிநீக்கு// நடிகை சாவித்திரிக்கு அவர் தான் குடிப்பழக்கத்தை ஏற்படுத்தினார் என்பது தெரிந்ததும் //
ஆ... அப்படியா... நான் அறியாத செய்தி.
கீதா அக்கா
பதிலளிநீக்கு// உங்க ஜிவாஜி இந்த கெட்டப்பிலே எந்தப் படத்திலே நடிச்சார்? //
கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... அது என்ன உங்க ஜிவாஜி?!!!!!!
வாங்க வல்லிம்மா.. நான் படித்துக் கொண்டிருக்கும் இந்தப் புத்தகம் நிறைய நிஜங்களை கற்பனைகளையும் கலந்து குழப்பி நல்லா எழுதி இருக்கார். ஓரிகாமி என்பதிலிருந்து மோரிகாமி என்று பெயர் உருவாக்கி, ஹிபேஷாவை ஹைபேஷியா .ஆக்கி. அதுபோல இன்னும் சொல்லலாம். கவிதை பாராட்டுக்கு நன்றி. அப்பா கவிதையைப் பாராட்டியதற்கும் நன்றி.
பதிலளிநீக்கு// வேறிடத்தில்
அறிவாளி, பெண்களை அதுவும் பத்தினிப் பெண்களை எழுந்து நிற்கச் சொன்னாராம்//
அது யாரும்மா அது? ஏதோ ஒரு படத்தில் பத்தினிப் பெண்கள் பற்றி பாக்யராஜ் சொல்லும் வசனம் நினைவுக்கு வருகிறது.
அந்த நாவல் வாங்கினதா? படிச்சுட்டு எனக்கு அனுப்பி வைங்க! உங்க கவிதைகள் இரண்டுமே அபாரம். நல்ல எழுத்துத் திறன்
பதிலளிநீக்கு// வேறிடத்தில்
பதிலளிநீக்குஅறிவாளி, பெண்களை அதுவும் பத்தினிப் பெண்களை எழுந்து நிற்கச் சொன்னாராம்// நீங்க தமிழரே இல்லை! :)))))
கணக்குகள் பிரமிப்பாக இருக்கிறதே... சிவாஜி கணேசன் படம் முதன்முறையாக காண்கிறேன் ஜி
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஅருமை.. மழை கவிதை அபாரம். வார்த்தைகளே ஒரு ம்ழையாக வந்து விழுந்திருக்கிறது. மிகவும் ரசித்தேன். தங்கள் வேண்டுகோளுக்கு இணங்க மழை தப்பாமல் பொழிந்து எங்கும் வளமிக்க செய்ய வேண்டும்.
தங்கள் அப்பா எழுதிய கவிதை சூப்பர். ஒவ்வொரு வரிகளும் மனதை ஈர்த்தன. மிகவும் ரசித்துப் படித்தேன்.
தாங்கள் எழுதிய நைட்டிங்கேல் கவிதை அமர்க்களமாக இருக்கிறது. தங்களின் வளமான கற்பனை மிகுந்த நல்லதொரு ஆழமான எழுத்துக்களை மிக மிக ரசித்தேன். அருமையாக இருந்தது.
சந்திரபாபு பற்றி அறிந்து கொண்டேன். நல்ல அறிவாளி என்றும் கூறுவர். அவரது நடிப்பு நன்றாக இருக்கும்.
சிவாஜியின் கெட்டப் சூப்பர். முதலில் அடையாளம் தெரியவில்லை. அதைப்பற்றிய செய்தி ஒன்றையும் காணவில்லையே.. என தேடிக்கொண்டிருந்தேன். அப்பறம் புரிந்தது
சூப்பர். பகிர்வுக்கு நன்றி.
படித்ததை பற்றி படித்த பின் பகருகிறேன்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
யார் சொன்னது? நான் 5:55க்கே கணினியை திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருக்கிறேன், எ.பி. திறக்கவேயில்லை. திடீரென்று திறக்கிறது, பார்த்தால்.. 12 கமெண்ட்!! கிர்ர்ர்.. என்ன நடக்கிறது இங்கே?/
பதிலளிநீக்குபானுக்கா அதெல்லாம் தக்கினிக்கு!!!
ஓ எந்த புதிர் பானுக்கா...ஹையோ நான் மட்டும் தான் பதில் சொல்லியிருந்தேனா?!! ஆஹா ஆஹா...அந்த பொன்னான தருணம் என்னவோ?!! ..ஹையோ இந்த மெமரி ரொம்ப மோசமாகுது...அது என்னனு அப்புறமா சொல்லுங்கக்கா
கீதா
காலை வணக்கம் 🙏.
பதிலளிநீக்குசந்திரபாபு அவர்கள் தன்னைப் பற்றியே புரிந்து கொள்ளவில்லை...(!)
பதிலளிநீக்கு@ ஸ்ரீராம். said...
பதிலளிநீக்கு>>> வணக்கம் துரை செல்வராஜூ ஸார். உங்களுக்கும் எபி திறக்க சிரமம் கொடுக்கிறதா?..<<<
இல்லையில்லை..
அந்த ஆறு மணிக்கு முரண்டு பிடிக்கும்... மற்றபடி எபி சாது தான்...
வேலைத் தளத்தை விட்டு வர இயலவில்லை..
வங்கதேஷிகள் படுத்தும் பாடு.. சொல்லுவதற்கில்லை...
மற்றபடி பதிவு எப்போதும் போல அருமை..
நடிகர் திலகத்தின் இந்தத் தோற்றம் குங்குமம் எனும் திரைப்படத்தில்..
அந்தக் காலத்தில் தஞ்சாவூரில் மனோகரா நாடகம் நடந்தபோது
சிவாஜி அவர்கள் - பத்மாவதி என்னும் பாத்திரம் ஏற்று நடித்ததாக என் தந்தை சொல்வார்..
இன்னொரு கேவலமான படத்திலும் இவரும் மேஜர் சுந்தரராசனும் பெண் வேடமிட்டு (!?) இருப்பார்கள்..
ஸ்ரீராம் முதல் பகுதி மீ க்கு கொஞ்சம் கொஞ்சம் தான் புரிந்தது.....கணக்கு ரொம்ம்ம்ம்ம்ம்ப வீக்கோ வீக்கு!!! மீக்கு....ஆனால் இப்படியான புகழ்வாய்ந்தவர்கள் நம்மூரில் இருந்திருக்கிறார்கள் பல கண்டுபிடிப்புகள் இங்கிருந்துதான் என்பது பெருமைக்குரிய விஷயம்..
பதிலளிநீக்குகீதா
ஹைபேஷியா தகவல் ஸ்வாரஸ்யம். கவிதைகள் அருமை. சந்திரபாபுவும், சிவாஜியும் இதில் ஒட்டாமல் தனித்து நிற்கிறார்கள்.
பதிலளிநீக்கு@ கீதா: ..கீ போர்ட் கீஸ் வேறு சரியில்லை...கவனமாக இருக்க வேண்டும்..//
பதிலளிநீக்குஅதுதான் ‘லூஸ்’ என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்களே!
@திண்டுக்கல் தனபாலன் : ...சந்திரபாபு அவர்கள் தன்னைப் பற்றியே புரிந்து கொள்ளவில்லை...(!)//
பதிலளிநீக்கு‘உன்னையறிந்தால்..நீ உன்னையறிந்தால் .. உலகத்தில் போராடலாம்!’ என்று பாடியவருண்டு. தன்னையறிந்தவர் எனத் திரையுலகில் யாருமில்லை! பாவம், சந்திரபாபுவைச் சொல்லி என்ன பயன்?
@ ஸ்ரீராம்:
பதிலளிநீக்கு..மருந்துக் கடை.. ... க்குப்
போய் வருபவனாக அவன் -//
ஏன், மாமியின் சமையலில் நம்பிக்கை இல்லையோ?
..ஒரு கல்லூரி மாணவி மாமிக்கு இருக்கட்டுமே..//
ஆஹா! அப்படியே ஆகட்டும்.. அப்பதான் நமக்கும் நன்னா பொழுது போகும். பத்திரிக்கையையும், புஸ்தகத்தையும் எவ்வளவுதான் படிப்பது?
.. எல்லையில் ஓடும் ஆறு :
ஏற்கனவே மத்திய, மாநிலப் பிரச்சனைகள். எல்லையிலேயும் தீராத தொல்லை. இப்படி இருக்க, எல்லையிலேவேறு ஆறு, ஏழு எல்லாம் எதற்கு ?
மழை கவிதை அருமை...ஸ்ரீராம். வரிகள் எல்லாம் ரொம்ப ரசித்தேன்...வரிகளை கோட் செய்ய முடியலை...ரைமிங்க் வேர்ட்ஸ் அருமை!!! ஸ்ரீராம்....நாம் செய்யும் தவறுகளையும் மன்னித்து வரும்படி அழைத்துள்ளீர்கள். கருணை உள்ளம் கொண்ட மழை வரட்டும்...நம்மை உய்விக்கட்டும்.
பதிலளிநீக்குஉன் அன்னை பூமியின்
குருதி உறிஞ்சப்படுவது
உன் கண்ணில்படவில்லையா
இல்லை அதை
உறிஞ்சும் எங்களைத்
தண்டிக்க முடிவு செய்தாயோ?
வேண்டாம் தண்டனை
வேண்டும் உன் கருணை
பொழிவாய் உன் அருளை!
கீதா
அதுதான் ‘லூஸ்’ என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறீர்களே!//
பதிலளிநீக்குஹா ஹா ஹா ஹா ஹா ஹா...ஹையோ சிரித்து முடியலை!! ஏகாந்தன் அண்ணா
கீதா
ஸ்ரீராம் நைட்டிங்கேல் உங்கள் வரிகளில் "நைட்டிங்கேலாய்" உயர்ந்து பறக்கிறார்!!
பதிலளிநீக்குஅன்பிற்கும் பண்பிற்கும் அவள் கண்ணாடி
செவிலியர்க்கெல்லாம் அவள் முன்னோடி
சேவையால் துஞ்சவில்லை அவள் கண்ணினம்
அவளால் பெருமை கொண்டது பெண்ணினம்
அன்பிற்கும் பண்பிற்கும் அவள் கண்ணாடி
செவிலியர்க்கெல்லாம் அவள் முன்னோடி
சேவையால் துஞ்சவில்லை அவள் கண்ணினம்
அவளால் பெருமை கொண்டது பெண்ணினம் //
வாவ்!!! செம. டி ஆர் ஸ்டைலில் முடிவு வார்த்தைகள் ரைமிங்காய்!!! ரசித்தேன் ரசித்தேன்....
கீதா
மனம் வறண்ட...
பதிலளிநீக்குஅதனால்தான் காடு வறண்டு, மேகம் வறண்டு, மழை வறண்டு, மண் வறண்டு, விவசாயம் வறண்டு, மனிதநேயம், நேர்மை வறண்டு அல்லல்பட்டுக்கிட்டிருக்கோம்.
ஆஆஆஆ இண்டைக்கு சைவப் பதிவோஓஓ?:)....
பதிலளிநீக்குவிசாளக்கிழமைகளில் “அசைவப் பதிவா” வரும்... ஏனைய நாட்கள் ஞானியாகலாம் என துரை அண்ணனும் ஏகாந்தன் அண்ணனும் சொல்லிச்சினமே:)... ஸ்ரீராம் ஏமாத்திப் போட்டார்ர்ர்ர்ர்ர்ர் கர்ர்ர்ர்ர்:)
பாஹே அப்பாவின் கவிதை பல உணர்வுகளை, ரசனைகளைக் கலந்து கட்டி அழகாய்!!! ஆதங்கம், இயற்கை ரசிப்பு, கல்லூரிப் பெண் இருந்தால் நல்லது என்றிருபது, அந்த வயதிலும் என்ன ரசனை என்று தோன்றியது. அது போல கடைசி வரிகள் தனுழ் ரஜனி....அருமை....மிகவும் ரசித்தேன்
பதிலளிநீக்குகீதா
அப்பா கவிதை அருமை.. மகன் கவிதை குட்:). பாவம் சந்திரபாபு அவர்கள். நமக்கு நாமே மனதில் ஒரு விம்பத்தை உருவாக்கி விட்டால் பின்பு ஆர் என்ன சொன்னாலும் மனம் ஒத்துக்கவே மாட்டுது.. அப்படித்தான்போலும் அவரும் தன்னை ஆரும் புரிந்துகொள்ளவில்லை என மனதில் எழுதிட்டார் அதனால உண்மையாகப் புரிந்து நடப்போரைக்கூட மனம் நோக வைத்திருப்பார்.. சிரிப்பு வருது எனச் சொல்லி.
பதிலளிநீக்குசிவாஜி அங்கிள் பார்க்கச் சகிக்கவில்லை... அவருக்குக் கம்பீரமான தோற்றங்களே பொருந்தும்... பெண்மை-மென்மை பொருந்தாது போலும்:))
பதிலளிநீக்குஇன்றைய பதிவில் எனக்கு மிகவும் பிடித்தது உங்கள் அப்பாவின் கவிதைதான். அவர் கேட்டதுபோல் எனக்கும் ஆசைதான். என்ன ஒன்று, ஆற்றைவிட ஒரு கோவில் இருந்தால் எனக்குப் போதும். அவர் மறக்காமல், 'மருந்து' வாங்கவும் ஆள் வேண்டும், மாமி சிறியவராக இருக்கணும் (இரண்டாம் தாரம்) என்றும் கேட்டிருக்கிறார். நல்ல முன்யோசனைதான்.
பதிலளிநீக்குகண்டங்கோரனோட கேள்வி"'//
பதிலளிநீக்குநல்லா இருக்கிறது.
மழைக் கவிதை அருமை. கண்டிப்பாய் மழை பெய்யும்.
அப்பா கவிதைகள் மிக அருமை.
சந்திர பாபு நல்ல மனிதர்.
கடைசி படம் குங்குமம் படத்தில் பெண் வேடம் போட்ட சிவாஜி.
நைட்டிங்கேல் கவிதை மிக அருமை.
பதிலளிநீக்கு//அறிவாளி, பெண்களை அதுவும் பத்தினிப் பெண்களை எழுந்து நிற்கச் சொன்னாராம்//
பதிலளிநீக்குநீங்க தமிழரே இல்லை! //
ஓ... உலக்கை நாயகரோ!
நன்றி கில்லர்ஜி. நானும் குங்குமம் படம் எல்லாம் பார்த்ததில்லை என்பதால் முதன்முறையாகத்தான் பார்த்தேன்!
பதிலளிநீக்குநன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
பதிலளிநீக்குவணக்கம் கமலா ஹரிஹரன் சகோதரி.. பாராட்டுக்களுக்கு நன்றி.
பதிலளிநீக்கு//படித்ததை பற்றி படித்த பின் பகருகிறேன். //
நல்லாச் சொல்லி இருக்கீங்க. ஆனால் எப்போது பகருவீர்கள் என்று காத்திருக்கிறேன்!
:)))
பிற்பகல் வணக்கம் வெங்கட்!
பதிலளிநீக்குநீங்கள் எழுதிய கவிதை என நினைத்தே முதல் கவிதையை பின்னூட்டத்தில் சீண்டினேன். ஓ, உங்கள் அப்பா 2012-ல் எழுதியதா?
பதிலளிநீக்குசரி, ரெண்டாவதைப் பார்ப்போம்:
..கைவிளக்கேந்திய காரிகை //
வேறுவழி? அப்போது எல் இ டி-யெல்லாம் வந்திருக்கவில்லை!
..பணத்தைப் பெரிதாய் மதித்ததில்லை //
இதற்கான நிரூபணம் இல்லை. யாரும் பணத்தை அவரிடம் காட்டியதேயில்லையே!
..நோய்களுக்குதான் அவள் எதிரி //
எடிரி என்றிருந்தாலாவது பாராட்டியிருக்கலாம் என்று பார்த்தால்...
நன்றி டிடி..
பதிலளிநீக்குசாவித்ரிக்கு அவர்தான் குடிக்கக் கற்றுக் கொடுத்தார் என்று கீதாக்கா சொல்லியிருப்பதே அதிர்ச்சி எனக்கு. நான் எங்கும் அப்படிப் படித்ததில்லை.
வாங்க துரை செல்வராஜூ ஸார்.. என்ன சொல்கிறார்கள் வங்கதேஷிகள்?
பதிலளிநீக்கு//இன்னொரு கேவலமான படத்திலும் இவரும் மேஜர் சுந்தரராசனும்//
அது என்ன படம்?
// இப்படியான புகழ்வாய்ந்தவர்கள் நம்மூரில் இருந்திருக்கிறார்கள்//
பதிலளிநீக்குகீதா.. நியூட்டனுக்கு முன் நம்மவர்கள் கண்டுபிடித்தார்கள் என்கிற தகவல் உண்மையா என்று தெரியவில்லை. கூகிளை வைத்து நம்பவும் முடியாது! இங்கும் யாரும் அதைப்பற்றி பேசவில்லை! மாதவன், அப்பாதுரை போன்றோரை மிஸ் செய்கிறேன்!
வாங்க பானு அக்கா... அந்தத் தகவல்களுக்கு நடுவில் இவை வேறு மாதிரி தோன்றுகின்றனவா? கதம்பம் மாதிரி சேர்த்தேன்.
பதிலளிநீக்குவாங்க ஏகாந்தன் ஸார்... நீங்கள் சிலாகித்திருக்கும் கவிதை என் அப்பா எழுதியது. எனவே நான் சொல்ல ஒன்றுமில்லை. அநேகமாக அவரும் சுஜாதாவின் அந்தப் பகிர்வைப் படித்த பாதிப்பில் எழுதி இருக்கலாம்!
பதிலளிநீக்குமழைக்கவிதைப் பாராட்டுக்கு நன்றி கீதா... மழைதான் வருமா என்று தெரியவில்லை. உங்கள் வரிகளையும் ரசித்தேன்.
பதிலளிநீக்குகீதா... நைட்டிங்கேல் கவிதை - கேட்டவர் சபை முன் சொல்லவேண்டி கேட்டது. வைரமுத்து ஸ்டைலில் படிக்கவும் படித்து வாய்ஸ் மெசேஜ் அனுப்பி இருந்தேன். வி.இ.நீ.
பதிலளிநீக்குவாங்க ராஜி.. ஆமாம் உண்மைதான். எங்கே உங்கள் பதிவுகளைக் கொஞ்ச நாட்களாய்க் காணோம்?
பதிலளிநீக்குவாங்க அதிரா... அசைவப்பி பதிவு என்று இதைச் சொல்கிறீர்கள் என்று எனக்கு சட்டன நினைவுக்கு வரவில்லை. மன்னிக்கவும்!!!
பதிலளிநீக்குஅதிரா...
பதிலளிநீக்குசந்திரபாபு அவரைப் புரிந்து நடப்போரைக் கூட மனம் நோக வைத்திருப்பார் என்று சொல்கிறீர்கள். ரைட். அது நீங்கள் அவரைப் பற்றிப் படித்ததினால் அப்படிச் சொல்கிறீர்களா?
சிவாஜி தாத்தா (உங்களுக்குத்தான் அங்கிள்!) நாடகக் காலங்களில் பெண் வேடம்தான் அதிகம் போட்டவராம். படித்திருக்கிறேன்.
வாங்க நெல்லைத்தமிழன். அப்பாவின் கவிதையை ரசித்ததற்கு நன்றி. அவர் கொஞ்சம் குறும்புக்காரர்!
பதிலளிநீக்குவாங்க கோமதி அக்கா... கண்டங்கோரனோட கேள்விக்கு இதுவரை யாரும் பதில் சொல்லவில்லை! யாரும் கண்டுக்கவே இல்லை!!!!
பதிலளிநீக்குநான் நிறைய படங்கள் பார்த்ததில்லை. அதில் குங்குமமும் அடக்கம். ஆனால் நிறைய பாடல்கள் தப்பாது கேட்பேன்!
நைட்டிங்கேல் கவிதை பாராட்டுக்கு நன்றி.
@ அதிரா:
பதிலளிநீக்கு..ஆஆஆஆ இண்டைக்கு சைவப் பதிவோஓஓ?:)....//
அப்படியா? நான் வைணவப் பதிவு என்றல்லவா நினைத்திருந்தேன், நீங்கள் கால் பதிக்கும்வரை..
ஏகாந்தன் ஸார்...
பதிலளிநீக்கு//கைவிளக்கேந்திய காரிகை // வேறுவழி? அப்போது எல் இ டி-யெல்லாம் வந்திருக்கவில்லை!//
ஹா... ஹா... ஹா... கண்ணு தெரியாம தடுக்கி விழுந்திடாமல் இருக்கத்தானே!
//இதற்கான நிரூபணம் இல்லை. யாரும் பணத்தை அவரிடம் காட்டியதேயில்லையே!//
அவர் பெரிய செல்வந்தர் குடும்பத்தில் பிறந்தவர் என்பதால் அப்படி எழுதினேன்! (ரொம்ப சீரியஸா பதில் சொல்றேனோ!!!)
//அப்படியா? நான் வைணவப் பதிவு என்றல்லவா நினைத்திருந்தேன், நீங்கள் கால் பதிக்கும்வரை.. //
பதிலளிநீக்குஇதுவும் எனக்குப் புரியவில்லை!!
:)))
// நீங்க தமிழரே இல்லை! //
பதிலளிநீக்குஓ... உலக்கை நாயகரோ!//
உலக்கை நாயகர் இல்லை. அப்புறமாச் சந்திரபாபு பத்தி தினமலரில் படித்த செய்தியைச் சொன்னேன். ஆனால் இன்னிக்கு திவாகர் சாவித்திரி நடிகை பத்தி எடுத்திருக்கும் பட விமரிசனத்தில் அவருக்குக் குடிப்பழக்கத்தை ஜெமினியே ஏற்படுத்தியதாகச் சொல்லி இருக்கார். : எதுவானால் என்ன! வேதனை தான்!
சந்திரபாபு பற்றி சமீபத்தில் எங்கோ வாசித்த நினைவு. அவர் எப்படி இறுதிக்காலத்தில் வறுமையில் வாடினார் என்று. அவருக்குத்தான் நம் மெல்லிசை மன்னர் எம் எஸ் வி தங்க இடம் கொடுத்து காத்தவர் என்றும் அவரது இறுதிச் சடங்குகள் கூட எம் எஸ் வி தான் நடத்தினார் என்றும் வாசித்த நினைவு. அவர் தன் இரு நண்பர்களான கண்ணதாசன் அவர்களையும், சந்திரபாபு அவர்களையும் இப்படிக் குறிப்பிடுவாராம். ஒருவர் சூரிய அஸ்தமனத்தைப் பார்த்ததில்லை மற்றொருவர் சூரிய உதயத்தைப் பார்த்ததில்லை என்று முதலாமவர் கண்ணதாசன், இரண்டாமவர் சந்திரபாபு.
பதிலளிநீக்குஎன்றும் வாசித்த நினவு...
பொதுவாகச் சொல்லப்படுவது நகைச்சுவை நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சோகமானது என்று
கீதா
ஸ்ரீராம் சரியான ரியூஊஊஊஊஊஊஊஊப் லைட்டூஊஊஊஊஊஉ:)..
பதிலளிநீக்குஅனுக்கா.. தமனா வந்தால் தான் அது அசைவப்பதிவாகும்... :).. ஏகாந்தன் அண்ணன்.. கிரிக்கெட் மச்சை கொஞ்சம் ஓஃப் பண்ணிட்டு.. அந்தக் காப்பியை அப்படியே கீழே போட்டுவிட்டு வெரி சோரி வைத்துவிட்டு.. கொஞ்சம் இக்கரைச்சூஊஊஊஊடு:)).. சமய சர்ஜ்ஜையை உண்டாக்கி அதிராவை ட்றம்ப் அங்கிளின் செக்கரட்டரி போஸ்ட் ல இருந்து தூகப் பண்ணிடுவார்போல இருக்கே வைரவா:)).. கொஞ்ச நாளைக்கு உசாரத்தான் இருக்கோணும்.. 7.5 வேறு நடக்குது கவனமா இரு பிள்ளை என அம்மம்மா அடிக்கடி சொல்லிக் கொண்டிருக்கிறா:).
ஸ்ரீராம் இன்று தொடர்ந்து கமென்ட்ஸ் போட முடியாமல் கணினி செம படுத்தல். ரொமப் ஸ்லோ கோச்சாக அடம் பிடித்து ஒரு கமென்ட் போடவே 15 நிமிடம் 20 நிமிடம் எடுத்துக் கொண்டது அப்புறம் ஒரே அடியாக மூடிக் கொண்டுவிட்டது...ஹா ஹா ஹா அப்புறம் மீண்டும் இயக்கி இப்ப வந்தேன்...
பதிலளிநீக்கு//கீதா.. நியூட்டனுக்கு முன் நம்மவர்கள் கண்டுபிடித்தார்கள் என்கிற தகவல் உண்மையா என்று தெரியவில்லை. கூகிளை வைத்து நம்பவும் முடியாது! இங்கும் யாரும் அதைப்பற்றி பேசவில்லை! மாதவன், அப்பாதுரை போன்றோரை மிஸ் செய்கிறேன்!//
புரிந்தது ஸ்ரீராம்....இங்கிருந்து கடத்திக் கொண்டு போய்விட்டார்கள் என்றும் சொல்லுது அது...ம்ம்ம் நீங்கள் சொல்லுவது போல் விக்கியை நம்ப முடியாதுதான்...
கீதா
ஸ்ரீராம் அதிரா அசைவப் பதிவு என்று சொல்லுவது புரிந்திருக்குமே!! ஹிஹிஹிஹி
பதிலளிநீக்குஅனுஷ், தமன் படம் எதுவும் இல்லாமல் வந்ததால் சொல்லிருக்கார்...அப்படியான செய்திகள் உங்கள் கமென்ட்கள் இல்லாமல் வந்ததால் ஹா ஹா ஹா
இன்றைய மூன்று கவிதைகளும் அசத்தல் அப்பா மகன் என்று........புலிக்குப் பிறந்தது பூனையாகுமா!!!!
கீதா
///புலிக்குப் பிறந்தது பூனையாகுமா!!!!
பதிலளிநீக்குகீதா///
அப்போ ஸ்ரீராம் புலிக்குட்டியா?:), அனுமார் என கெள அண்ணன் ஜொன்னாரே நேற்று:)).. ஹையோ எனக்கு டவுட்டு டவுட்டா வருதேஏஏஏஏஏஏஏ.. நேற்றுச் சொன்ன வார்த்தைகள் காற்றோடு போச்சுதா?:)) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)... எனக்கு 7.5 நடக்குதூஊஊஊஊஊஊ:).
7.5 வேறு நடக்குது கவனமா இரு பிள்ளை //
பதிலளிநீக்குஹா ஹ் ஆ ஹாஹா...ஹையோ அப்போ டங்க் ஸ்லிப் ஆகக் கூடாஆஆஆஆஆஆஆஆதே அதிரா!!!! ஹா ஹா ஹா..
கீதா
அதிரா ஸ்ரீராம் பல அவதாரம் எடுப்பார்!!!
பதிலளிநீக்குசரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்ஸ்:)... எனக்கு 7.5 நடக்குதூஊஊஊஊஊஊ:)// அப்ப அது!!! ஹா ஹாஹாஹாஹா
கீதா
ஸ்ரீராம் சரியான ரியூஊஊஊஊஊஊஊஊப் லைட்டூஊஊஊஊஊஉ:)..//
பதிலளிநீக்குஇல்லை அதிரா அவருக்கு நன்றாகவே புரிந்திருக்கும்...அதிராவின் கமென்ட் புரியாமல் போகுமா என்னா....அது சும்மா!! தெரியாத போல அப்படிக் காட்டிக் கொண்டு....கமுக்கம்...ஹா ஹா ஹா
கீதா
// சந்திரபாபு பற்றி சமீபத்தில் எங்கோ வாசித்த நினைவு. //
பதிலளிநீக்குஅது நிறைய வாசித்திருக்கிறோமே கீதா..
// பொதுவாகச் சொல்லப்படுவது நகைச்சுவை நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை மிகவும் சோகமானது என்று//
அப்படிப் பொதுவாகச் சொல்லி விட முடியுமா தெரியவில்லை. ஆனால் உண்மையும் இருக்கிறது! உங்கள் கணினி படுத்தல்சா இன்று... ஆகாகா....!
ஓ அசைவப்பதிவு என்றால் அதுவா? நான் இது என்று நினைத்து விட்டேன்!!!
// அவருக்கு நன்றாகவே புரிந்திருக்கும்...//
நிசம்மா புரியலை கீதா... ங்கொப்புராண சத்தியமா! :)))
// அவருக்குக் குடிப்பழக்கத்தை ஜெமினியே ஏற்படுத்தியதாகச் சொல்லி இருக்கார். : //
பதிலளிநீக்குஅப்படி இருக்காது கீதாக்கா... தான் ஏற்படுத்திக் கொள்ளும் இந்தக் கெட்டபழக்கத்துக்கும் இன்னொருத்தரை எப்படிக் காரணமாக்க முடியும்? ஜெமினி கொடுத்த ஏமாற்றத்தினாலோ? இப்போது சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமாக வந்திருக்கிறதுதான்.
திரா..
பதிலளிநீக்கு// ஏகாந்தன் அண்ணன்.. கிரிக்கெட் மச்சை கொஞ்சம் ஓஃப் பண்ணிட்டு.. அந்தக் காப்பியை அப்படியே கீழே போட்டுவிட்டு //
ஆமாம்.. கிரிக்கெட் மேட்ச் ரொம்ப போராகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. அதுதான் ஏகாந்தன் ஸார் அப்பப்போ இங்கே வந்து ரிலாக்ஸ் ஆகிறார்!
// அப்போ ஸ்ரீராம் புலிக்குட்டியா?:), அனுமார் என கெள அண்ணன் ஜொன்னாரே நேற்று:)).//
ஆ... எனக்குள்ள தூங்கிகிட்டுருக்கற மிருகத்தைத் தட்டி எழுப்பாம விடமாட்டாங்க போலிருக்கே! எல்லோருமே மாயன்தானா???
@வல்லிம்மா - பாவம் சந்திரபாபு. - தூத்துக்குடிக் காரர்தான். ஆனால் கண்ணதாசன், சிவாஜியை விட்டுவிட்டு, இவரைக் கதாநாயகனாகப் போட்டு மிகவும் கஷ்டப்பட்டதாகவும், ஒரு தடவை அவரது வீட்டுக்குப் போனபோது (படப்பிடிப்புக்கு டிமிக்கி கொடுத்ததால்), வீட்டில் இருந்துகொண்டே இல்லை என்று சொல்லச்சொல்லிவிட்டு, வேறு வாசல் வழியாகப் போனாரென்றும், அப்போதுதான் தான் கண்ணீர் விட்டு அழுததாகவும் எழுதியிருக்கிறார்.
பதிலளிநீக்குஆச்சர்யமாக எம்.எஸ்.வி அவர்களுக்கு கண்ணதாசன், சந்திரபாபு இருவரும் நண்பர்கள்.
@ஸ்ரீராம் - ஜெமினி கொடுத்த ஏமாற்றத்தினாலோ? - கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். ஜெமினி திருமணமானவர். நடு இரவில் சாவித்திரி பெட்டியைத் தூக்கிக்கொண்டு அவர் வீட்டுக்கு வந்துவிட்டார். ஜெமினிக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருக்கு. திரையுலகில் வாழும் பெண்கள், கனவுலகில் வாழ்பவர்கள், பிடிமானத்துக்கு ஏங்குபவர்கள்.
பதிலளிநீக்குஜெமினியின் அறிவுரையைக் கேட்காமல், திரைப்படங்களைத் தயாரித்து இயக்கிய சாவித்திரி, சிவாஜி கணேசனைப் போட்டு, ப்ராப்தம் என்ற படத்தைத் தயாரித்து இயக்கினார். பாசமலரில் அண்ணன் தங்கையாக நடித்தவர்களை காதலர்களாகப் பார்க்க மக்கள் விரும்பாததால் படம் படுதோல்வி. பணம் இழந்து, ஜெமினி அன்பை இழந்து, சொத்துக்கள் வருமான வரிக்காக ஜப்தி செய்யப்பட்டு மன உளைச்சலில் மதுவை நாடி அதிலேயே தன்னை இழந்தார் சாவித்திரி.
ஜெமினி கணேசன், நிறைய நண்பர்களை உடையவர். பலரின் அறிமுகம் உடையவர். எல்லோருக்கும் உதவுபவர். ஆனால் அவர்கிட்ட இருந்த ஒரு குணம், சல்லிக்காசு செலவழிக்க மாட்டார், பிறருக்கு ஈயமாட்டார். அதனால்தான், தான் சொன்னதைக் கேட்காமல் நஷ்டப்பட்டு பணமில்லாமல் வாடிய சாவித்திரியை அவர் கண்டுகொள்ளவில்லை.
பதிலளிநீக்குஸ்ரீராம் சந்திரபாபுவைக் காட்டினால் அது சாவித்திரியை அலசி, கீர்த்தி சுரேஷ்வரைகூடப் போய்விடும் போலிருக்கிறதே! சாவித்திரியின் இன்னுமொரு biography இங்கிருந்து புறப்பட வாய்ப்புள்ளது! நமது ஆட்கள் சினிமா நியூஸ் விஷயத்தில் கில்லாடிகள் என்பதில் சந்தேகமில்லை.
பதிலளிநீக்குசாவித்திரியின் கதை இப்படி சோகத்தில் முடிந்ததில் வருத்தம்தான்.
’ஒரு இலக்கியவாதியின் கலை உலக அனுபவங்கள்’ எனும் புத்தகத்தில் ஜெயகாந்தன் சந்திரபாபுவுடனான பழக்கம்பற்றி சொல்லியிருக்கிறார். தன்னை ’ஜேகே’ என்று முதலில் அழைத்தவ்ர் சந்திரபாபுதான் என்று அதில் குறிப்பிட்டுள்ளார். சந்திரபாபுவின் ஓவர்-ஆடம்பர லைஃப்ஸ்டைல் பற்றி, இறுதியில் அவர் முடிந்தவிதம்பற்றி அதில் இப்படிச் சொல்கிறார்: ’புகழின் உச்சியில் உள்ள ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு சந்திரபாபு ஒரு உதாரணம்’.
உங்கள் அப்பாவின் கவிதை, உங்களின் கவிதை எல்லாம் மிகவும் நன்றாக இருக்கிறது. ஆக கவிதை உங்களுக்குத் தன்னிச்சையாகப் புனைய முடிகிறது. மண் குளிர்ந்தால் மனமும் குளிரும். நைட்டிங்கேல் பற்றிய கவிதையும் அருமை. நிறைய பாராட்டி எழுதலாம். நானும் ஆஜர் பட்டியலில். அன்புடன்
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குபகருதல் என்பதற்கு ப(ந)கருதல் என்று வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் முதலில் வந்த செய்தியே என்று படித்தால் (எனக்கு) ஒன்றும் புரியவில்லை. ஆதியோடந்தமாக அவசரமில்லாமல் படித்தால்தான் என் ம.மண்டைக்குள் ஏறும். அதன் பின் வரிசையாக கவிதைகள், செய்திகள் வா. வா வென்றழைக்கவே, அப்போதைய தப்பித்தலுக்கு தயாராகி விட்டேன்.
இப்போது நிதானமாக படித்ததை படித்தேன். மலையாள மொழி பெயர்ப்பென்றாலும், படித்த வரை புரிகிறது. கணிதத்தின் விளக்கம் விண்மீன்கள் அலசல்கள் பேச்சுக்கள் அதன் விளக்கங்கள் அனைத்தும் சுவாரஸ்யமாக இருந்தது.
புத்தகங்கள் படிக்க நேரமே கிடைப்பதில்லை. இந்த மாதிரி புத்தகங்கள் கிடைத்தால், நேரமும் ஒத்து வந்தால் நேரம் போவது கூட தெரியாமல் படிக்கலாம். முழுவதையும் படித்து விட்டு சுருக்கமாக விவரியுங்கள்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நெல்லைத்தமிழன்.. நீங்கள் சொல்லி இருக்கும் கண்ணதாசன் - சந்திரபாபு சம்பவம் நானும் படித்திருக்கிறேன். சந்திரபாபுவின் கஷ்டங்களுக்கு அவர் வாயே காரணமாய் இருந்திருக்கும்!!
பதிலளிநீக்குஜெமினி ஏதோ பெண்கள் மேல் விருப்பமே இல்லாதவர் போல சொல்லி இருக்கிறீர்கள். ஆனாலும் நீங்கள் சொல்லி இருக்கும் தகவல்களில் உண்மை இருக்கிறது.
ஏகாந்தன் ஸார்... கீர்த்தி சுரேஷ் பற்றிச் சொல்லி நீங்கள் அப் டு டேட்டாக இருப்பதைக் காட்டி இருக்கிறீர்கள்! ஆச்சர்யப்படுத்துகிறீர்கள்.
பதிலளிநீக்குகாமாட்சி அம்மா... உங்கள் பாராட்டுகளுக்கு நன்றி. உங்கள் கமெண்ட் வந்தாலே மனதில் மகிழ்ச்சி உண்டாகிறது. நன்றிம்மா.
பதிலளிநீக்குபகருதல் -நகருதல் ... ஹா... ஹா.... ஹா....
பதிலளிநீக்குநன்றாகப் பகர்ந்திருக்கிறீர்கள் கமலா ஹரிஹரன் சகோதரி. நன்றி.
முதலில் நைட்டிங்கேல் கவிதைக்கு வரேன் :)
பதிலளிநீக்குஉங்களை எழுத சொல்லிக்கேட்டவர் எதற்காக கேட்டார் னு தெரில ஆனா ஒரு ஒற்றுமை பாருங்க இந்த வார முழுசும் இங்கே யூ கே முழுக்க உலக செவிலியர் தினம் மற்றும் நைட்டிங்கேலின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைபெறுகிறது .
hypatia பற்றி மது பதிவில் வாசித்த நினைவு .
பதிலளிநீக்குFibonacci சீக்வன்ஸ்லாம் நினைவுக்கு வருது :)
அப்பாவின் கவிதை சூப்பர்ப் உங்களின் கவிதைக்கு ஒரு பொற் கிழி அதிரா அனுப்பிவைப்பார் :)
மழை ??? எங்கூர்லருந்து அனுப்பட்டா ??
வாங்க ஏஞ்சல்... கோவில் கட்டியாச்சா?
பதிலளிநீக்கு//உங்களை எழுத சொல்லிக்கேட்டவர் எதற்காக கேட்டார் னு தெரில //
என்னைக்கேட்டவரும் அதே காரணத்துக்காகத்தான் கேட்டார். அவர் விருது வாங்குவதாகவும் அந்நாளில் அவர் பற்றி ஏதாவது சொல்லவேண்டும் என்றும் கேட்டார்!
//உங்களின் கவிதைக்கு ஒரு பொற் கிழி அதிரா அனுப்பிவைப்பார் ://
நன்றி. மொட்டை மாடியில் போடச்சொல்லுங்க..
சிவாஜி அழகே அழகு. பொதுவாக முகத்தில் பெண் சாயல் கொண்டவர்கள்தான் நடிப்பில் பிராகாசிப்பார்கள் என்று சொல்வார்கள். அந்த வகையில் நடிகர் பிரசாந்த் ஒருவர் பாராட்டுகள்
பதிலளிநீக்கு