வியாழன், 31 மே, 2018

விம் பார் போட்ட சட்னி


​"
இந்தா இதை எல்லாம் அரைத்து.."  என்று ரவி ஆரம்பித்ததும் 

"ஏங்க கை வேலையாக இருக்கேன் என்று தெரிந்த பின்னும் என்ன அவசரம் உங்களுக்கு?  இன்றைக்கு சனிக்கிழமை தானே.."

"ஆமாம் கௌரி.  ஆனால் கொஞ்சம் வெயிலுக்கு முன்னாடியே பண்ணிக்கொடுத்துட்டேன்னா நல்ல இருக்கும்"

பேப்பரை வாங்கிப் படித்த கௌரி தேள் கொட்டியவளாய் "என்னங்க இது அந்த ஸ்ரீராமோட ரெசிப்பி...  புதுசா ட்ரை பண்ணறேன்னுட்டு இப்படி எல்லாமா பண்ணுவாங்க?  போகாத ஊருக்கு வழி..."

"10 ..15 பல பூண்டு சரி
10 பச்சை மிளகாய்
​​
10  அ 15 பட்டை மிளகாய்

ஏங்க உங்க ஸ்நேகிதருக்கு வெயில் அதிகம் ஆன உடனே ஏதாவது..."  என்று ஆரம்பித்தவளை ரவி கை அமர்த்தி 

"அதிலிருக்கும் எல்லாமே நம் வீட்டில் இருக்கிறதுதானே..  எதுவும் வாங்கி வரணுமா?" என்றான் ரவி.

"எல்லாம் இருக்கு.  வேண்டியது இருக்கு.."  என்று சொல்லிக் கொண்டே கௌரி சீட்டைத் தொடர்ந்து படித்தாள்.

2 அங்குல துண்டு இஞ்சி

1 ஸ்பூன் மிளகு, சிறிது லவங்கப்பட்டை, 10 கிராம்பு 2, வெங்காயம்
வேண்டுமானால் ஒரு சிறிய தக்காளி, 2 ஸ்பூன் எண்ணெய்...
எந்த எண்ணெயானாலும் பரவாயில்லை..  தேங்காய் எண்ணெய் கடலை எண்ணெய் சூரியகாந்தி எதுவானாலும்..

2 ஸ்பூன் vim இல்லையானால் hand wash.."

கடைசி அயிட்டத்தைப் படித்ததும் கௌரி மீண்டும் "அவர் பாட்டுக்க வாட்ஸாப்பில அனுப்பிட்டார்.  நீங்களும் என் கிட்ட எழுதிக் கொடுத்திட்டீங்க.  இன்னொரு தடவை ஃபோன் பண்ணி கேட்டுருங்க சோப் எல்லாம் யாராவது சட்னியில் போடுவங்களான்னு..  பைத்தியம் தான் பிடித்திருக்கணும் அந்த மனுஷனுக்கு..." என்று பேசிக்கொண்டே போன கௌரியைப் பார்த்து "பைத்தியம் அவருக்கில்லை உனக்குத்தான்" என்று சிரித்தான் ரவி

"பின்னே?" 

"செம்பருத்தி செடியில் வெள்ளைப்பூச்சி நிறைய இருக்கே என்ன செய்யலாம் என்று கேட்டதற்கு அவர் மாமாவைக் கேட்டு சொல்லியிருக்கிறார் செய்து பார்ப்போமே..
அரைத்து மிக்ஸி ஜார் கழுவிய நீருடன் ஒரு பாட்டிலில் போட்டு 2 நாள் வைத்திருந்து spray பண்ணணுமாம்.."  என்றான் ரவி.










====================================================================================================

படித்ததில் சேகரித்த துணுக்குகள் :




  • இந்தியாவின் மூவர்ணக்கொடிக்கு மூலம் மேடம் காமா 1907 இல் ஜெர்மனியில் ஸ்டட்கார்ட்டில் ஒரு பொதுக் கூட்டத்தில் ஏற்றியது.



  • ஸி ஆர் தாஸுக்கு தேசபந்து என்கிற பட்டத்தை வழங்கியது அரவிந்த கோஷ். 



  • இங்கிலாந்தில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, பின்னர் ஐ ஸி எஸ் பரீட்சையும் பாஸ் செய்தாலும் ஆங்கிலேய அரசாங்கம் அவருக்கு அந்தப் பட்டத்தை வழங்காததற்குக் காரணம் அரவிந்தருக்கு அப்போது அந்தப் பதவிக்கு முக்கியமான தகுதியாகக் கருதப்பட்ட குதிரையேற்றம் தெரியாதது!

  • டிசம்பர் 6 1907 ;  அப்போதே இந்தத் தேதிக்கு முக்கியத்துவம் உண்டு.  வங்காளத்துக்கான  ஆங்கிலேய லெப்டினன்ட் கவர்னரான ஃபிரேசர் என்பவரைக் கொல்வதற்காக இந்திய சுதந்திர புரட்சிப்படையினர் இவர் சென்ற ரயிலைக் கவிழ்த்தார்கள்.  (அவர் தப்பிவிட்டார்)


  • கோஹினூர் வைரம் பஞ்சாப் மஹாராஜா ரஞ்சித்சிங் வசம் இருந்தபோது அந்த வைரத்தின் விலையைப் பற்றி ஒருவர் மஹாராஜாவிடம் கேட்டார்.  மஹாராஜா சொன்ன பதில் "இந்த வைரக்கல்லின் விலை ஐந்து செருப்புகள்!"  இதற்கு என்ன அர்த்தம் என்றால் எவன் ரஞ்சித்சிங்கைப் போரில் வென்று அவருடைய மாளிகையையும் தலைநகரையும் அழிக்க வல்லானோ, அவன்தான் அந்த வைரத்தை அடைய முடியும் என்பதாம்.  உண்மையில் இன்று வரை கோஹினூர் வைரத்தின் உண்மையான விலையை அறிந்தவர் இல்லையாம்.


==========================================================================================================


கடைசி தேதி ஜூன் 15.  கேட்டு வாங்கிப் போடும் கதைக்கு சிறுகதை அனுப்பும் நண்பர்கள் யாவரும் இதில் கலந்து கொள்ளலாமே....





===================================================================================================

105 கருத்துகள்:

  1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை அண்ணா, கீதக்கா, எல்லோருக்கும்…

    கீதா

    பதிலளிநீக்கு
  2. அன்பின் ஸ்ரீராம் , கீதா/கீதா மற்றும் அனைவருக்கும் வணக்கம்...

    பதிலளிநீக்கு
  3. ஹை! போட்டியில் பார்ப்போம்...கலந்து கொள்ள முடியுதானு...முதல்ல பக்கம் குறைச்சு எழுத நான் கத்துக்கணுமே ஸ்ரீராம்....ஹா ஹா ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  4. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தி/கீதா! மாபெரும் சதி! பின்னணீயில் யார்? விசாரணைக் கமிஷன் தேவை

    பதிலளிநீக்கு
  5. கீதாக்கா இந்த கருடி கீதா இன்று ஃபர்ஸ்டூஊஊஊஊஊஊஊஊஊஊஊ...கருடி!!! கருடன் மேல் நு நேத்து அதிரா சொன்னதால்.... கருடி ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  6. அங்கே கேளுங்க...
    கீழே குதிச்ச வேகத்துக்கு ஹப்பா..ந்னு ஒரு சத்தம்...

    அதுவும் இங்கிலீசு...ல!...

    பதிலளிநீக்கு
  7. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் தி/கீதா! மாபெரும் சதி! பின்னணீயில் யார்? விசாரணைக் கமிஷன் தேவை//

    ஹா ஹா ஹா ஹா ஹா கீதாக்கா "கமிஷன்" வைச்சுட்டா போச்சு!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  8. துரை அண்ணா கீதாக்கா ஸ்டைலா பாரசூட்ல வந்து இறங்கிருக்காங்கோ!!!! அதான்...

    கீதா

    பதிலளிநீக்கு
  9. இந்தப் போட்டிக்கெல்லாம் நான் வரலை. எனக்குக் கதை எழுதத் தெரியாது!

    பதிலளிநீக்கு
  10. @ துரை செல்வராஜு! @ தி/கீதா, க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

    பதிலளிநீக்கு
  11. உண்மையில நான் தான் ஏணியத் தூக்கிக்கிட்டு வர்றேன்....

    கோழி கூவுறதுக்கு முன்னால முழிக்க வேண்டியது...

    காஃபியோ கஞ்சியோ - அவசரத்துல ஆத்திக் குடிக்க வேண்டியது...

    Blogger - ஐ Block பண்ண வேண்டியது...

    இங்கே நாலு சுவரு தாண்டணும்...
    நல்வாழ்த்து சொல்றதுக்கு!...

    என்னமோ போங்க...

    ஆனா,
    சட்டப்படி, நியாயப்படி, தர்மப்படி இன்னும் அந்தப்படி, இந்தப்படி, வாசப்படி எல்லாம் வச்சிப் பாத்தா -

    அந்த வெஞ்சனக் கிண்ணம் எனக்குத்தான்...

    ம்.... காஃபி குடிச்சிட்டு வாரேன்!...

    பதிலளிநீக்கு
  12. கொசுவை அடிக்க குண்டாந்தடியா!...

    சனிக்கிழமை அதுவுமா சின்னஞ்சிறுசுங்க ஜாலியா இருக்கட்டும்..ந்னு விடாம -

    விம் பார் சட்னி ரெசிப்பி கொடுக்கிறதா...

    வேண்டும்.. வேண்டும்... கமிசன் வேண்டும்...

    (யோவ்.... விசாரணை கமிசன்...ந்னு சொல்லுய்யா... வேறெதும் நெனைக்கப் போறாங்க!...)

    ஏங்க..இதுக்கு சரியா நீங்க ஒன்னு எழுதுங்களேன்...

    எழுதிட்டாப் போகுது!...

    பதிலளிநீக்கு
  13. இனிய காலை வணக்கம் கீதா ரெங்கன்.

    பதிலளிநீக்கு
  14. இனிய காலை வணக்கம் கீதா அக்கா...

    பதிலளிநீக்கு
  15. இனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்..

    பதிலளிநீக்கு
  16. இனிய காலை வணக்கம் பானு அக்கா.

    பதிலளிநீக்கு
  17. அதிகாலையில் குருதி சிந்தி சோதனை! எனவே தாமதம்!!!!

    பதிலளிநீக்கு
  18. அரவிந்த் கோஷ் ஐ.சி.எஸ். தேர்வில் தேர்ச்சி பெற்று விட்டால் பிரிட்டிஷ்காரனுக்கு கீழே பணி புரிய வேண்டுமே,அதை தவிர்க்கவே அவர் வேண்டுமென்றே குதிரையேற்றத்தில் தேரர்ச்சி பெறவில்லை.

    பதிலளிநீக்கு
  19. கல்கி சிறுகதைப்போட்டி உட்பட நறுக்கான செய்திகள். அருமை.

    பதிலளிநீக்கு
  20. அன்பின் ஸ்ரீராம்...

    /// அதிகாலையில்...///

    ஒன்றும் பிரச்னை இல்லையே...

    பதிலளிநீக்கு
  21. கோஹினூர் வைரத்தின் விலை மேட்டர் ஸூப்பர்

    நானும் கதை எழுதலாம் போலயே...

    பதிலளிநீக்கு
  22. தாமதமாக வந்து காலை வணக்கம் சொல்கிறேன் நண்பர்களே.
    விம் பார் சட்டினி கதை சூப்பர்.
    மற்றதெல்லாம் நாளைக்கு. தூங்கும் நேரம் வந்து விட்டது.

    பதிலளிநீக்கு
  23. சட்டப்படி, நியாயப்படி, தர்மப்படி இன்னும் அந்தப்படி, இந்தப்படி, வாசப்படி எல்லாம் வச்சிப் பாத்தா -

    அந்த வெஞ்சனக் கிண்ணம் எனக்குத்தான்...//

    துரை அண்ணா உங்களுக்கேதான்...ஆனா பாருங்க போட்டிக்கு ஒரு பூஸார் ஜல் ஜல்னு வந்து குதிப்பாங்க....நீதி நியாயம் நேர்மை எருமை அப்படினு....ஒரு பஞ்சாயத்து போட்டுறலாம்...!!

    கீதா

    பதிலளிநீக்கு
  24. ஸ்ரீராம் என்ன ஆச்சு??!!! குருதி அதிகாலையில்!!! ப்ளீஸ் சொல்லுங்க....

    கோஹினூர் வைரத்தின் உண்மையான விலையை அறிய படை எடுத்துப் போயிட்டீங்களோ?!!!!!

    பூஸாரை போகச் சொல்லலாம் தக்னிக்கி வைச்சுருப்பாங்க அப்படியே லபக்கி உங்க வீட்டு மொட்டை மாடில கொண்டு வைச்சுருவாங்க....ஒர் வேளை அதைத்தான் நேத்து மொட்டைமாடி சுவர்ல மதில் மேல் பூனையா இருந்தாரோ...!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  25. சர்க்கரைக்கான பரிசோதனை? @ஸ்ரீராம்!

    பதிலளிநீக்கு
  26. இந்தப் போட்டிக்கெல்லாம் நான் வரலை. எனக்குக் கதை எழுதத் தெரியாது!//

    ஹலோ கீதாக்கா உங்களுக்குக் கதை எழுதத் தெரியாதா??!!!!...ஹை உடான்ஸ்!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  27. மூவர்ணக் கொடி தகவல் தவிர மத்ததெல்லாம் இப்பத்தான் அறிகிறேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  28. பூந்தோட்டம் செமைஅய இருக்கு ...

    அது சரி உங்க ரெசிப்பி வொர்க் அவுட் ஆகுமா...முதல்ல நானும் கொயம்பிப் போனேன்...இது திங்க பதிவுக்கில்லையோனு...

    அப்புறம்தாம் விம் சேர்க்கச் சொன்னதும் செடிக்குனு.....இது வொர்கவுட் ஆகுமா ஸ்ரீராம். நான் செடிக்கு அடிக்கலாமேனுதான்....ட்ரையல் அண்ட் எரர்..

    கீதா

    பதிலளிநீக்கு
  29. சர்க்கரைக்கான பரிசோதனை? @ஸ்ரீராம்!//

    ஓ ரத்தப் பரிசோதனையா...!!! ஹப்பா அப்படினா நிம்மதி....இப்பத்தான் ஏஞ்சல் அடிபட்டு குணமாகி வராங்க...குருதின உடனே கொஞ்சம் வருத்தமாகிடுச்சு

    கீதா

    பதிலளிநீக்கு
  30. காலை வணக்கம் 🙏. ஃபர்ஸ்ட்ட்ட்ட்ட்ட்ட்ட்ட் போட்டி இன்னும் தொடர்கிறது..... மகிழ்ச்சி.

    விம் போட்ட சட்னி - ஹாஹா. சமையல் குறிப்பை விட ஸ்வாரஸ்யம்.

    கதை போட்டி - இரும்படிக்கிற இடத்தில் ஈக்கு என்ன வேலை - நான் என்னைச் சொன்னேன்!

    பதிலளிநீக்கு
  31. ஸ்ரீராம் கதம்பம் ஏனோ என்னமோ மிஸ்ஸிங்க்....உங்கள் கவிதை, செல்லங்கள், அனுக்கா தமனா உங்க கமென்டுகள் இல்லாமல் ஸ்வாரஸ்யம் மிஸ்ஸிங்க்...ஸ்பைஸியா இல்லை கதம்பம்...ஓ வெயில்னு ஸ்பைஸ் வேண்டாம்னு விட்டுட்டீங்களோ?!!! ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  32. விம் போட்ட சட்னி தலைப்பு கவர்ச்சி!!!!

    அத்தனையும் க்ரேவிக்கான குறிப்புகள் போல போட்டுட்டு கடைசில விம்...புழுக்கள் சட்னிய ரசிச்சு சாப்பிட்டு சட்னி ருசில அங்கேயே இருந்துராம இருக்கணும் ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  33. அதிகாலையில் குருதி சிந்தி சோதனை! எனவே தாமதம்!!!!//

    என்னாச்சு? பயபடுத்துகிறீர்கள்.


    பகிர்ந்த விஷயங்கள் நன்றாக இருக்கிறது.
    வெள்ளைப்பூச்சிக்கு என்று தயார் செய்த சட்னி தோட்டம் வைத்து இருப்பவர்களுக்கு ஏற்ற நல்ல செய்தி. எனக்கு

    மாயவரத்தில் இருந்த போது உதவி இருக்கும். இப்போது தெரிந்தவர், சுற்றம், மற்றும் நட்புகளுக்கு சொல்லலாம்.




    பதிலளிநீக்கு
  34. சட்னி வெள்ளையாக, தக தகவென இருக்கு உபயோகியுங்கள் விம் பார்! விம் பார் போடவும் அப்படினு காமெடியா இருக்குமோனும் நினைச்சேன் ஸ்ரீராம்...

    சரிதான் வெள்ளைப் புழுக்கள்!! அதான் விம்பார் !! ??

    கீதா

    பதிலளிநீக்கு
  35. எனக்கு இல்லை எனக்கு இல்லை
    பரிசு தோகை எவ்வளவு? பத்ஆயிரமா? எனகில்லை எனகில்லை.
    சிறப்பாய் கதை எழுதி பரிசு பெறுபவர்களுக்கு இப்போதே வாழ்த்து சொல்கிறேன்.

    பதிலளிநீக்கு
  36. இத்தனை அழகா மாடியில் தோட்டம் போட்டவர்களுக்கு விம் பார் சட்னிஒரு வேலையா பதிவின் பல பகுதிகள் ரசிக்கும் படி இருக்கிறது

    பதிலளிநீக்கு
  37. கல்கி படித்து நாளாகி விட்டது அவர்கள் ரசனை தெரியாது

    பதிலளிநீக்கு
  38. ///" இந்தா இதை எல்லாம் அரைத்து.." என்று ரவி ஆரம்பித்ததும்

    "ஏங்க கை வேலையாக இருக்கேன் என்று தெரிந்த பின்னும் என்ன அவசரம் உங்களுக்கு? இன்றைக்கு சனிக்கிழமை தானே.."//

    ம்ஹூம்ம் ஆரம்பமே ஒரு விதமா இருக்கே ஜாமீஈஈஈஈ.. சோப் வோட்டர் அடிப்பதுண்டு இதென்ன பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:).. அது ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடியோ? ஸ்ரெயிட்டா ஹெலியில வந்து லாண்ட் பண்ணலாம்போல இருகே..

    அந்த பிங்கி/ஒரேஞ் பிளவர் குளிர் நாட்டில்தானே அதிகம் பூக்கும்.. இங்கும் வீட்டுக்கு வீடு உண்டு.

    பதிலளிநீக்கு
  39. ///Geetha Sambasivam said...
    ஃஃபர்ஷ்டு யாரு///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)) உங்களுக்கு 750 ரூபா குடுத்து கொம்பியூட்டர் திருத்தித் தந்ததெல்லாம் வேஸ்ட்டூஊஊஊஊஊஊஊ:)) மாமாட காசை அநியாயமாக்குறீங்க:)).. இதில கிளவி வேற.. ஹையோ கேள்வி வேற, ஆரு 1ஸ்ட்டாஆஆஆம் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))..

    பதிலளிநீக்கு
  40. ////ஸ்ரீராம். said...
    அதிகாலையில் குருதி சிந்தி சோதனை! எனவே தாமதம்!!!!//

    ஆஆஆஆஆஆஆஆ அஞ்சு ஓடிக்கமோன்ன்.. நீங்க ஜொன்ன அதே எலி ஸ்ரீராமைக் கடிச்சுப் போட்டுதூஊஊஊஊஊ:)).....
    ----------

    என்னாச்சு? நகம் வெட்டுறேன் எனக் கையைக் கட்டிங் ஆ?:)

    பதிலளிநீக்கு
  41. இருப்பினும் இன்று போஸ்ட்.. எம்மை எல்லாம் பேய்க்காட்டிப்போட்டார் ஸ்ரீராம்..

    என்னதான் நடக்கும் நடக்கட்டுமே...
    இருட்டினில் யாவும் மறையட்டுமே..
    தன்னாலே வெளிவரும் தயங்காதே..
    ஒரு தலைவன் இருக்கிறான் கலங்காதே....:))..

    ஊசிக்குறிப்பு:
    நாங்களெல்லாம் இனி மேனகா மாமி கட்சிக்குத்தான் சப்போர்ட்:))

    பதிலளிநீக்கு
  42. ///கோமதி அரசு said...
    எனக்கு இல்லை எனக்கு இல்லை///

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:) கோமதி அக்கா.. நீங்க முயற்சியுங்கோ நான் வைரவருக்கு நேர்த்தி வைக்கிறேன்.. எப்படியும் ஆறுதல் பரிசாவது கிடைக்கும்.. கமோன்ன்ன்ன்..

    பதிலளிநீக்கு
  43. ///துரை அண்ணா உங்களுக்கேதான்...ஆனா பாருங்க போட்டிக்கு ஒரு பூஸார் ஜல் ஜல்னு வந்து குதிப்பாங்க....நீதி நியாயம் நேர்மை எருமை அப்படினு....ஒரு பஞ்சாயத்து போட்டுறலாம்...!!

    கீதா///

    பஞ்சாயத்து என்ன பஞ்சாயத்து டீக்குளிப்போம் தேம்ஸ் கரையில என மிரட்டியே அலுவலை முடிச்சிடலாம்ம்:))

    பதிலளிநீக்கு
  44. வணக்கம் சகோதரரே

    காலை ஏன் குருதி சிந்தி போராட்டம் ? ஏதாவது செடி கொடிகள் சீரமைக்கும் போது கவனக்குறைவா? உடல் நலம் பேணவும்..

    விம் கலந்த சட்னி..படித்து வரும் போதே நானும் ஒரு விநாடி பதறி விட்டேன். பிறகு தெரிந்தது அது செடிகளுக்கு காலை டிபனுக்கு தேவையான சட்னி என்று... நல்ல விஷயம் பகிர்ந்தமைக்கு..

    மாடித்தோட்டம் கண்ணுக்கு குளிர்ச்சியை தந்தது. அனைத்துச் செடிகளும் தாங்கள் பேணி வளர்ந்து வருபவையா? பாராட்டுக்கள்..

    எல்லா துணுக்குகளும் நன்றாகவிருந்தன.
    படித்ததில்லை. அறிய வைத்தமைக்கு மிக்க நன்றி.

    கல்கிக்கு சிறுகதை எழுதும் அளவுக்கு எனக்கு இன்னமும் பக்குவம் வளரவில்லை என நினைக்கிறேன்.
    இரண்டாவதாக, சகோதரி கீதா ரெங்கன் கூறுவது போல் இத்தனை பக்கங்களுக்கு மிகாமல் எழுதவும் வராது. நானெல்லாம் நீரில் போட்ட வெண்டைக்காய்..

    எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதலாம் என்று யாராவது விதிமுறை தளர்த்தினால், எழுதலாம். ஹா ஹா ஹா ஹா.

    அனைத்தும் அருமை..பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  45. இன்றைய கதம்பத்தின் ஆரம்பமே நல்லாருந்தது. அதையே ஒருபக்க கதையாக்கியிருக்கலாம்

    மற்ற துணுக்குகளும் எனக்குப் புதுசு

    பதிலளிநீக்கு
  46. நம் வாய்க்குள் தள்ளிக்கொண்டிருப்பதைப்பற்றியே எப்போதும் யோசித்திராமல், செடிகளைப் பூச்சிகள் விழுங்கிவிடாது காப்பாற்ற நினைத்த உங்கள் மனம் பொன் மனம், அதாவது எம்ஜிஆருக்கு அடுத்த மனம்..

    காலை எழுந்தவுடன் குருதி?
    நேற்றே செய்யாதது உங்கள் மறதி!

    பதிலளிநீக்கு
  47. டீக்குளிப்போம்//

    அதிரா அம்புட்டு டீ க்கு எங்க போறதாம்!!!?? ஹா ஹா ஹா ஹா...

    என்ன அதிரா கெளவியே கேக்காம போய்ட்டீங்க.ஹூம் நேத்துதான் கௌ அண்ணா "அவர்" ஜிந்திக்கறத படம் எடுத்துப் போட்டார்...வெயில் இங்க ரொம்ப ஜாஸ்தியா இருக்கு அதான் "அவரின்" கிட்னியும் மயங்கிப் போய்க் கிடக்குது போல...சரி அதுதான் போட்டும்...பூக்களைப் போட்டதோடு.. கூலாக .பூவையரையும் போட்டுருக்கலாம்.அதுவும் கூல் க்ளாஸோடு!!!!!

    என்ன சொல்றீங்க அதிரா...

    அப்புறம் ஸ்ரீராமுக்கு ஒன்றுமில்லை!!! ஜஸ்ட் கீதாக்கா மேலே சொன்னதுதான்!!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  48. இன்றைய கதம்பத்தின் ஆரம்பமே நல்லாருந்தது. அதையே ஒருபக்க கதையாக்கியிருக்கலாம்//
    நெல்லை நான் அதை வாசித்து வரும் போது கதைனும் நினைச்சேன்....அப்புறம் தான் இல்லைனும் தெரிஞ்சுச்சு....அப்புறம் திங்க ஏன் இங்க வந்துச்சுன்னும் நினைச்சேன்...

    கீதா

    பதிலளிநீக்கு
  49. எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதலாம் என்று யாராவது விதிமுறை தளர்த்தினால், எழுதலாம். ஹா ஹா ஹா ஹா. //

    கமலா சகோ!! ஹைஃபைவ்!!! ஹா ஹா ஹா ஹாஹா...ஆனா சுருக்கமா எழுதறதும் நல்ல ஆர்ட்....திறமை இல்லையா சகோ. எனக்கும் கற்க வேண்டும் என்று நினைக்கிறேன் ம்ஹூம் வர மாட்டேங்குது...ஹா ஹா ஹா ஹா

    கீதா

    பதிலளிநீக்கு
  50. கோமதிக்கா அதே அதே அதே....

    எனக்கு இல்லை எனக்கு இல்லை....பரிசெல்லாம் வேண்டாம்....செலக்ட் ஆனா கூடப் போடுவாங்களாமே...அதுவும் எனக்கில்லை எனக்கில்லைதான்....ஹா ஹா ஹா ஹா

    பங்கு பெறுபவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்!!!!! இங்கு நிறையப்பேர் திறமைசாலிகள் இருக்காங்க. அனைவரும் முயற்சி செய்யலாம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  51. விம்பார் சட்னி என்பதைப் பார்த்ததும் கொஞ்சம் ஜெர்க் ஆனேன். அப்புறம் சட்னியை கிண்ணத்தில் எடுத்து வைக்கும் போது தெரியாமல் அதில் விம் லிக்விட் அல்லது சோப் நீர் இருப்பதைக் கவனிக்காமல் என்று இருக்குமோ என்று நினைத்து வாசித்தால் பூச்சி மருந்து. இது நிஜமாகவே மருந்துதானா அல்லது காமெடியா? ஸ்ரீராம் ஜி?

    துணுக்குகள் எல்லாம் இப்போதுதான் முதல் முறையாகத் தெரிந்து கொள்கிறேன்.

    கதைப் போட்டியில் கலந்து கொள்பவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள். இங்கு கேட்டு வாங்கிப் போடும் கதையில் பங்கு பெறுபவர்கள் அனைவரும் திறமைஉள்ளவர்கள். அவர்களுக்குக் கிடைத்தால் அது நம் எல்லோருக்குமே பெருமதான் மகிழ்ச்சிதான். வாழ்த்துகள்.

    மாடித்தோட்டம் அழகாக இருக்கிறது.

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  52. ஆனால் கோமதிக்கா நீங்க எழுதிப் போடுங்க போட்டிக்கு. கீதாக்காவுக்கும், துரை அண்ணாவுக்கும், பானுக்காவுக்கும், கமலா சகோவுக்கும், நெல்லை, ஏகாந்தன் அண்ணா, அதிரா, ஏஞ்சல், கில்லர்ஜி, ஜிஎம்பி ஸார், ஸ்ரீராம் எல்லோருமே எழுதலாம். எல்லோருமே இங்கு கே வா போ வுக்கு அருமையான கதைகள் எழுதியவர்கள்!

    கீதா

    பதிலளிநீக்கு
  53. நான் 5 வருடங்களாக செம்பருத்தி செடியை தொட்டியில் வளர்த்து வருகிறேன், வெள்ளை பூச்சிகள் நீங்கள்குறிப்பிட்ட கரைசலை தெளித்தாலும் சில நாட்கள் கழித்து அவைகள் வந்துவிடும் பூக்கள் மொட்டுக்களை தின்றுவிடும். காம்புகளில் அப்படியே ஒட்டிக்கொண்டு விடும். நான் மூன்று மாதத்திற்கொரு முறை முறை முற்றி போன இலைகளையும், பூச்சி பிடித்த இலை காம்புகளையும் வெட்டி எரிந்து விடுவேன். அவ்வப்போது கவனித்து டூத் பிரஷ் கொண்டு அந்த பூச்சிகளை அப்புறப்படுத்திக்கொண்டே இருப்பேன். மேலும் பெட் வ்வாட்டர் பாட்டிலில் நீர் நிரப்பி ஒரு சிறு ஓட்டை போட்டு செடியின் அடியில் வைத்துவிட்டால் நிதானமாக தண்ணீர் போய்க்கொண்டிருக்கும்.இப்படி கவனித்து வந்தால் பூக்கள் நன்றாக பூக்கும். ஆனால் தரையில் வைக்கும் செடியில்தான் கூடை கூடையாக பூக்கள் வரும்.

    பதிலளிநீக்கு
  54. ///ஏகாந்தன் Aekaanthan ! said...
    நம் வாய்க்குள் தள்ளிக்கொண்டிருப்பதைப்பற்றியே எப்போதும் யோசித்திராமல், செடிகளைப் பூச்சிகள் விழுங்கிவிடாது காப்பாற்ற நினைத்த உங்கள் மனம் பொன் மனம், அதாவது எம்ஜிஆருக்கு அடுத்த மனம்..////

    கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் * 675823490

    அவர் அப்பாவி உயிர்களைக் கொல்லுறதுக்கு ஐடியாக் குடுக்கிறார்:) இதுக்குப் போய் பட்டம் சூட்டி விழா எடுக்கிறார் ஏகாந்தன் அண்ணன்.. முதல்ல ஏகாந்தன் அண்ணனை நாடு கடத்தோணும் கையிலிருக்கும் அந்த ரிமூட்டோடு....:))

    பதிலளிநீக்கு
  55. கறிமஞ்சளை[ரேமரிக் பவுடர்] கொஞ்சம் திக்காக கரைத்து செடிகளில் ஊத்தி விட்டாலும் பூச்சிகள் வராது.

    பதிலளிநீக்கு
  56. //என்ன சொல்றீங்க அதிரா...
    ///
    இல்லை கீதா என் வோட்டூஊஊஊஊஊஉ மேனகா மாமிக்கே:))

    ///
    அப்புறம் ஸ்ரீராமுக்கு ஒன்றுமில்லை!!! ஜஸ்ட் கீதாக்கா மேலே சொன்னதுதான்!!!!

    கீதா//

    ஓ அப்போ அவரும் இப்போ இனிப்பானவராக மாறிட்டாரோ ஹா ஹா ஹா அதுதான் லேடி நுளம்பூஸ் கடிக்குதோ:))

    பதிலளிநீக்கு
  57. //எல்லோருமே இங்கு கே வா போ வுக்கு அருமையான கதைகள் எழுதியவர்கள்!

    கீதா//
    கீதா.. நான் எழுதிய “பொன்னான” கதைகளில் ஒன்றைப் போட்டிக்கு அனுப்பி:) பரிசை வாங்கி என் பெயருக்கு என் செக்:) இடம் அனுப்பச் சொல்லுங்கோ கீதா:)) ஸ்ரீராமிடம்..:)

    பதிலளிநீக்கு
  58. செம்பருத்திச் செடிக்குப் பூண்டு இஞ்சியா. நல்ல மருந்துதான். கோக் ,பெப்சி தெளித்தால் கூட வருவதில்லை என்று நிரூபித்திருக்கிறார்கள்.

    துணுக்கு செய்திகள் சுவை.

    கல்கி நினைவூட்டலுக்கு நன்றி. நமக்கும் சிறு கதைக்கும்
    மிக தூரம். பூக்களின் செடிகளின் பளாபளா படங்கள்
    மிக அழகு. உங்கள் வீட்டு மாடியா. கண்ணுக்கு மிக இனிமை. ஸ்ரீராம்.

    பதிலளிநீக்கு
  59. ஹாஹா விம் பார் சட்னி ரசித்தேன் ..கோக் குடிக்க கொடுத்தாலும் வெள்ளை பூச்சிங்க போயிடுவாங்க :)
    நான் ஒருமுறை ரோஸ் செடிக்கு வேப்பெண்ணை ட்ரீட்மெண்ட் கொடுக்க ரெண்டு நாளுக்கு இலைகள் துக்கத்தில் இருந்தாங்க பார்க்க கஷ்டமாகிடுச்சி .காரமெல்லாம் தாங்குமா பச்சை உடம்பு :)
    காதி சோப் கரைசலும் போட்டு குளிப்பாட்டலாம் .காக்காங்க இல்ல குருவிகளும் தோட்டத்துக்கு வந்தா இந்த பூச்சிகளை சாப்பிடுவாங்க .ஹோஸ் பைப் வச்சி தண்ணி அடிச்சாலும் எபெக்ட் உண்டு .

    பதிலளிநீக்கு
  60. @ அதிரா: .. முதல்ல ஏகாந்தன் அண்ணனை நாடு கடத்தோணும்//

    நாடு கடத்தினா என்ன, வீடு கடத்தினா என்ன, மூடு அவுட்டாகாது எங்களுக்கு..சொல்ல நெனச்சத சொல்லிருவோமுல்ல!

    பதிலளிநீக்கு
  61. சட்னிக்கு மட்டும்தான் விம் பார் யூஸ் ஆகுமா?! தலைக்கு தேய்ச்சும் குளிக்கலாமா?!

    பதிலளிநீக்கு
  62. தெற்கு டெல்லியில் Bhikhaji Cama Place வழியாகத்தான் என் தம்பி வீட்டுக்கு ஆட்டோவில் பறப்பது வழக்கம். அந்த இடத்தைக் கடக்கும்போதெல்லாம் இது என்ன பெயரோ என யோசித்ததுண்டு. கண்டுபிடிக்க முயன்றதில்லை. எபி மூலமாத்தான் சந்தேகம் தீரணும்னு இருந்திருக்கிறது போலும்! எல்லாவற்றிற்கும் ஒரு நேரம்..

    பதிலளிநீக்கு
  63. அனைத்து பதிவுகளும் நன்று பாராட்டுகள்

    பதிலளிநீக்கு
  64. படங்களுடன் அருமையான எண்ணப் பதிவுகள்
    சிந்திப்போம்

    பதிலளிநீக்கு
  65. மேலதிகத் தகவல்களுக்கு நன்றி பானு அக்கா...

    பதிலளிநீக்கு
  66. துரை செல்வராஜூ ஸார்.. பிரச்னை ஒன்றும் இல்லை. ஜஸ்ட் பிளட் டெஸ்ட். அவ்வளவுதான். ரிசல்டிலும் பெரிதாக ஒன்றுமில்லை!

    பதிலளிநீக்கு
  67. வாங்க கில்லர்ஜி.. நீங்களும் கட்டாயம் கதை எழுதி அனுப்புங்கள். நம் நண்பர்கள் அனைவரும் முயற்சிக்க வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்.

    பதிலளிநீக்கு
  68. வாங்க கீதா அக்கா.. . சர்க்கரைக்கான சோதனை மட்டுமல்ல, கொழுப்புக்கும் கூட!!! நீங்களும் பொறுமையாய் எழுதி ஒரு கதையாவது அனுப்புங்களேன்.

    பதிலளிநீக்கு
  69. கீதா ரெங்கன்.. இந்த ரெஸிப்பியை முயற்சித்துப் பார்க்கலாம் என்று இதை எழுதிய ஆசிரியர் சொல்கிறார்!

    பதிலளிநீக்கு
  70. வாங்க வெங்கட்.. காலை வணக்கம்.

    நீங்கள் இன்னும் கே வா போ க்கு கதை ட்யூ வெங்கட்!

    பதிலளிநீக்கு
  71. //ஸ்ரீராம் கதம்பம் ஏனோ என்னமோ மிஸ்ஸிங்க்....உங்கள் கவிதை, செல்லங்கள், அனுக்கா //

    வாங்க கீதா... நன்றி. நெல்லை மாறுபட்ட கருத்து சொல்லி இருந்தார். நண்பர்களையும் இது சம்பந்தமாக கருத்து ஏற்கெனவே கேட்டிருந்தேன்.

    பதிலளிநீக்கு
  72. நன்றி நண்பர் நாகேந்திர பாரதி.

    பதிலளிநீக்கு
  73. நன்றி கோமதி அக்கா.. இது எங்கள் ஆசிரியர்களில் ஒருவர் அனுபவம். அவர் வீட்டுத் தோட்டம். ஞாயிறு புகைப்படங்களுக்குச் சொந்தக்காரர்!

    பதிலளிநீக்கு
  74. //எனக்கு இல்லை எனக்கு இல்லை பரிசு தோகை எவ்வளவு? பத்ஆயிரமா? எனகில்லை எனகில்லை.//

    ஹா... ஹா... ஹா... கோமதி அக்கா ரொம்ப ரசித்தேன். ஆனால் கதை வெளியானால் ஒரு சந்தோஷம்தானே? முயற்சியுங்களேன்.

    பதிலளிநீக்கு
  75. வாங்க ஜி எம் பி ஸார்... ரசித்ததற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  76. வாங்க அதிரா..

    // அது ஸ்ரீராம் வீட்டு மொட்டை மாடியோ?//

    இல்லை...

    //உங்களுக்கு 750 ரூபா குடுத்து கொம்பியூட்டர் திருத்தித் தந்ததெல்லாம் வேஸ்ட்டூஊஊஊஊஊஊஊ:)) மாமாட காசை அநியாயமாக்குறீங்க:)//


    ஹா... ஹா... ஹா... அக்காவை அப்படியெல்லாம் சொல்லக் கூடாது அதிரா.. பாவம் அவங்க...

    பதிலளிநீக்கு
  77. அதிரா...

    // நீங்க ஜொன்ன அதே எலி ஸ்ரீராமைக் கடிச்சுப் போட்டுதூஊஊஊஊஊ:))//

    இல்லையே.. இது வேற ஆச்சே....

    பதிலளிநீக்கு
  78. // நாங்களெல்லாம் இனி மேனகா மாமி கட்சிக்குத்தான் சப்போர்ட்:))//

    அடடா அதிரா... ... உசுப்பேத்துறீங்களே....

    பதிலளிநீக்கு
  79. //நீங்க முயற்சியுங்கோ நான் வைரவருக்கு நேர்த்தி வைக்கிறேன்..//

    கோமதி அக்காவை நல்லா ஊக்கு விக்கறீங்க... ஆனால் நீங்களும் எழுதுங்களேன் அதிரா...

    பதிலளிநீக்கு
  80. // பஞ்சாயத்து என்ன பஞ்சாயத்து டீக்குளிப்போம் தேம்ஸ் கரையில //

    டீ குடித்துக் கொண்டே, இல்லை இல்லை காபி குடித்துக்கொண்டே படித்தேன்!

    // அப்போ அவரும் இப்போ இனிப்பானவராக மாறிட்டாரோ //

    இல்லை...இல்லை அதிரா... கொஞ்சம் தப்பித்திருக்கிறேன்!

    பதிலளிநீக்கு
  81. அதிரா...

    // நான் எழுதிய “பொன்னான” கதைகளில் ஒன்றைப் போட்டிக்கு அனுப்பி:)//

    புதுசாத்தான் எழுதணுமாம்..

    பதிலளிநீக்கு
  82. வாங்க சகோதரி கமலா ஹரிஹரன்.... நன்றி. ப்ளட்டெஸ்ட் செய்தேன். அவ்வளவுதான். அன்பான விசாரிப்புக்கு நன்றி.

    // மாடித்தோட்டம் கண்ணுக்கு குளிர்ச்சியை தந்தது. அனைத்துச் செடிகளும் தாங்கள் பேணி வளர்ந்து வருபவையா? பாராட்டுக்கள்..
    //

    பாராட்டுக்கள் உரியவருக்குப் போய்ச் சேரட்டும்!

    பதிலளிநீக்கு
  83. // எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதலாம் என்று யாராவது விதிமுறை தளர்த்தினால்,//

    எழுதி விட்டு இரண்டுமூன்று படித்து நீங்களே எடிட் செய்யலாம் சகோதரி கமலா ஹரிஹரன்... அளவு சற்றுக் கூடக் குறைய இருந்தாலும் பரவாயில்லை. படைப்பு நன்றாக இருந்தால் போட்டு விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
  84. வாங்க ஏகாந்தன் ஸார்..

    பொன் மனத்துக்குச் சொந்தக்காரன் நான் இல்லை!!!

    பதிலளிநீக்கு
  85. ஏகாந்தன் ஸார்...

    // காலை எழுந்தவுடன் குருதி?
    நேற்றே செய்யாதது உங்கள் மறதி!//

    யதேச்சையாகச் சொன்னாலும் அதில் கொஞ்சம் உண்மை இருக்கிறியாது. ஆனால் மறதி அல்ல.

    முதல் நாளே ஒரு சோதனைக்கூடத்தை அணுகி வரச் ;சப்;இ இருந்தோம். அவர் 30/6 என்று மெசேஜ் அனுப்பியதைக் கேட்டால் "அது சின்னத் தவறு... வந்து விடுவார்கள்" என்று சொல்லி வரவில்லை. கடுப்படித்துவிட்டு, இன்று வேறொரு இடத்தில் சொல்லி வரவழைத்து செய்யப்பட சோதனை! சோதனை மேல் சோதனை!

    பதிலளிநீக்கு




  86. கீதா... கதை வரவேண்டிய பக்க அளவு பற்றி சகோதரி கமலா ஹரிகரன் அவர்களுக்குச் சொன்னதை நீங்களும் படித்திருப்பீர்கள்.

    பதிலளிநீக்கு
  87. வாங்க துளஸிஜி... இதை எழுதிய பதிவாசிரியர் இது காமெடி இல்லை என்கிறார். முயற்சித்துப் பார்க்கலாம் என்கிறார்.

    துணுக்குகளை பாராட்டியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  88. நன்றி பட்டாபிராமன் ஸார்... உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.

    பதிலளிநீக்கு
  89. வாங்க வல்லிம்மா... பெப்சி, கோலா வைத்தியம் நானும் கேள்விப்பட்டிருக்கிறேன்.

    //உங்கள் வீட்டு மாடியா. //

    இல்லை வல்லிம்மா...

    பதிலளிநீக்கு
  90. வாங்க ஏஞ்சல்... பூச்சிகளுக்கும் இரங்கும் மனம் படைத்தவர் நீங்கள்.

    //ஹோஸ் பைப் வச்சி தண்ணி அடிச்சாலும் எபெக்ட் உண்டு .//

    சென்னைல அவ்வளவு தண்ணீர் கிடையாதுங்க...!!

    பதிலளிநீக்கு
  91. நன்றி ராஜி... உங்கள் கேள்வியை கௌ அங்கிள் புதன் கேள்விக்கு எடுத்துப்பாரா? இல்லை, விம் சட்னி எழுதிய ஆசிரியர் பதில் சொல்வாரா.... தெரியாது!!!

    பதிலளிநீக்கு
  92. ஏகாந்தன் ஸார்...

    //எபி மூலமாத்தான் சந்தேகம் தீரணும்னு இருந்திருக்கிறது போலும்! எல்லாவற்றிற்கும் ஒரு நேரம்.//

    அடடே.....!

    பதிலளிநீக்கு
  93. நன்றி அசோகன் குப்புசாமி ஸார்.

    பதிலளிநீக்கு
  94. அதிரா, கீதா, ஶ்ரீராம் மூவருக்கும் நன்றி.
    கதை எழுத சொல்லியதற்கு.
    என் பின்னூட்டத்தை ரசித்தமைக்கைம் நன்றி ஶ்ரீராம்.

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!