எம் ஏ காஜா இயக்கத்தில், கங்கை அமரன் இசையில் வெளிவந்த இந்தப் படத்தில் எனக்கு இரண்டு பாடல்கள் பிடிக்கும். ரொம்பவே பிடிக்கும்.
கணவனுக்குத் தெரியாமல் அவன் நண்பனுடன் கள்ள உறவு வைத்திருக்கும் மனைவியை அவனுடனேயே வாழ அனுப்பி விடும் கணவன். பல வருடங்களுக்குப் பின் சந்திக்கும் நிகழ்வில் அவர்கள் இருவரும் கஷ்டப்படுகிறார்கள் என்று தெரிகிறது. அவர்களுக்கு உதவுகிறான் 'கணவன்'.
அவர்களுக்குப் பிறந்திருக்கும் குழந்தைக்குப் பாடும் தாலாட்டாக இந்தப் பாடல்.
அவரவர் நிலையை அவரவர் சொல்லிப் பாடுவது போல இடம்பெறும் பாடல். பல்லவியில் தொடங்கி முதல் சரணம் வரை கணவன் தன் மனநிலையை ஆற்றாமையுடன் பாடுகிறான். எஸ் பி பி தன் குரலிலேயே அந்த உணர்வுகளைக் கொண்டு வந்திருப்பது சிறப்பு. யார் என்று நீ கேளடா வரிகளில் ஒரு மெல்லிய விரக்தி கலந்த சிரிப்பு, மாலை இளங்காற்றே வரிகளில் இழைந்து வரும் குழைவும் பாவமும்....
இரண்டாவது சரணத்தில் முறை தவறிய மனைவி தவறை உணர்ந்தாலும் திரும்ப முடியாத இடத்திலிருந்து பாடுகிறாள். தவறை தேவனின் பேரில் போட்டுக் குற்ற உணர்விலிருந்து தப்பிக்கப் பார்க்கிறாள்.
மூன்றாவது சரணத்தில் துரோகம் செய்த நண்பன் மன்னிப்பு கேட்டு முடிக்கிறான். எஸ் பி பாலசுப்ரமணியம், எஸ் ஜானகியுடன் அசோக் என்கிற பாடகர் மூன்றாவது சரணத்தைப் பாடுகிறார்.
குழந்தைக்குப் பாடுவது போல தங்கள் உணர்வுகளைப் பரிமாறிக்கொள்ளும் பாடல்.
பாடல் வாலியாயிருக்கலாம். அல்லது கங்கை அமரன்!
எனக்கு எஸ் பி பி பாடும் இடம் பிடிக்கும். மனதில் நின்ற டியூன். கங்கை அமரன் நிறையவே நல்ல பாடல்களைக் கொடுத்திருக்கிறார். இதுவும் ஒன்று.
விடுகதை ஒன்று தொடர்கதை ஒன்று
யார் கதை எதுதான் என்று நீதான் அறிவாயோ.. என் கண்ணே
ஆரம்பம் முடிவும் எங்கே அறிந்தால் சொல்வாயோ...
மகன் போல உன்னை மடியேந்தும் என்னை
யார் என்று நீ கேளடா அன்னையை
அவள் சொல்லுவாள் உன்னிடம் உண்மையை
மாலை இளங் காற்றே மடல்வாழைக் கீற்றே
காலம் முழுதும் நலம் பெற கண்ணே வாழ்க...
நாள்தோறும் எந்தன் நலம் நாடும் தெய்வம்
தாலாட்டவே வந்தது உன்னையே
நீ சொல்லடா அன்னையின் நன்றியை
ஒரு மனதில் பாசம் ஒரு மனதில் பாவம்
தேவன் எழுதும் கதை இது கண்ணே காண்க
விதியோடு வாழ்க்கை விளையாடும் வேளை
விதியல்லவோ என்றுமே வெல்வது
இதுவல்லவோ இன்று நான் கண்டது
காலொடிந்த கிள்ளை நடமாடவில்லை
தேவையறிந்து துணை வரும் நெஞ்சே வாழ்க
வாழ்க...
பதிலளிநீக்குஎங்கள் ப்ளாக் நண்பர்களே உங்கள் பதிவுகளை நான் போன் மூலம் படித்து இருக்கிறேன். ஆனால், போன் மூலம் டைப் பண்ணி கருத்து சொல்வது கடினம். அதனால் இது வரை செய்தது இல்லை. இப்போது நான் ஒரு புதிய லேப் டாப் வாங்கி இருக்கிறேன் அதன் மூலம் என் உயிர் தமிழா https://enuyirthamizha.blogspot.com/ என்ற வலைத்தளத்தை ஆரம்பித்து இருக்கிறேன். என்னையும் உங்களில் ஒருவனாக நினைத்து ஆதரவு தாருங்கள், நன்றி
நீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் பானு அக்கா.
நீக்குஇப்படி ஒரு படம் வந்தது தெரியும்...
பதிலளிநீக்குஅதன் கதைச் சுருக்கத்தை இன்று தான் அறிகிறேன்...
இன்னொரு இனிய பாடல் உண்டு இதில் துரை ஸார்... இன்னொரு வாரம் பகிர்கிறேன்! நானும் படம் பார்த்ததில்லை. அவ்வப்போது தொலைக்காட்சியில் ஓரிரு காட்சிகள் பார்த்ததுதான்...
நீக்குஇன்று பிளாக்கர் டாட்காமிலிருந்து ஒரு மெயில். உங்கள் தளத்துக்கு உங்கள் மெயில் பாக்ஸுக்கு மெயில் வருவதை தொடர விரும்புகிறீர்களா என்று கேட்டு. நம்ம ஏரியா, எங்கள் பிளாக் இறந்த தளங்களுக்கும் வந்திருந்தது. தொடர விரும்புகிறேன் என்று பதில் க்ளிக் செய்தேன். டிக் போடாமலேயே மெயில் பாக்ஸுக்கு பின்னூட்டங்கள் வர ஆரம்பித்து விட்டன.
பதிலளிநீக்குஇப்பாடலைக் கேட்டு ரசித்திருக்கிறேன்
பதிலளிநீக்குஆனால் இப்பாடலுக்குப் பின்னே ஒளிந்திருக்கும் கதையினை இன்றுதான் அறிந்தேன்
நன்றி நண்பரே
நன்றி நண்பர் கரந்தை ஜெயக்குமார்.
நீக்குகேட்காத பாடல் போல் தோன்றுகிறது. கேட்டுப் பார்க்கிறேன்.
பதிலளிநீக்குகேட்டாச்சா?!
நீக்குநல்ல பாடல் எம்.ஏ.காஜா நல்ல இயக்குனர் இளவயதிலேயே இறந்து விட்டார். விஜயன் உயர்வுக்கு முக்கியமானவர்.
பதிலளிநீக்குஆமாம். நன்றி கில்லர்ஜி.
நீக்குகாலை வணக்கம் அனைவருக்கும்
பதிலளிநீக்குஇப்படத்தை கண்டு இருக்கிறேன். பாடல் உருக்கமாக இருக்கும் கேட்டு இருக்கிறேன்.
நன்றி சகோதரி உமையாள் காயத்ரி.
நீக்குகாலை வணக்கம் 🙏
பதிலளிநீக்குபாடல் கேட்டது இல்லை.
இப்போது கேட்டீர்களா வெங்கட்? ரசிக்க முடிந்ததா?
நீக்குபின்னூட்டம் - எனக்கு மின்னஞ்சல் இதுவரை வரவில்லை.
பதிலளிநீக்குஇன்று நாளை வந்துவிடும்!!!!
நீக்கு:))
நல்ல பாடல்...
பதிலளிநீக்குமெயில் : உங்களுக்கு வந்தது போல் அனைவருக்கும் வரலாம்...
நன்றி DD.
நீக்குமுன்பு இந்த பாடல் பகிர்ந்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
பதிலளிநீக்குகங்கை அமரன் நிகழ்ச்சியில் இந்த பாடல் வைத்தார்கள்.
அவர் இயற்றிய பாடல்.
நன்றாக இருக்கும் பாடல். மீண்டும் கேட்டேன்.
அப்படியா? எனக்கு நினைவில்லை கோமதி அக்கா.
நீக்குஅக்காலகட்டத்தில் ரசிக்கப்பட்ட படங்களில் ஒன்று. தெரிந்தெடுத்து பகிர்வு செய்யும் விதம் அருமை.
பதிலளிநீக்குநன்றி முனைவர் ஜம்புலிங்கம் ஸார்.
நீக்குபாடலைக்கேட்டிருக்கிறேன் ஆனால் கேட்ட படலை இப்படி டிஸ்ஸெக்ஷன் செய்ததில்லை பாராட்டுகள்
பதிலளிநீக்குநன்றி ஜி எம் பி ஸார்.
நீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குஇந்தப் பாடலை இதுவரை கேட்டதாக நினைவில்லை. இப்போது கேட்டேன் நன்றாக உள்ளது. படத்தின் கதையும் உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.
பாக்கியராஜ் படமொன்றின் கதையும் இதே போல் வரும். ராஜேஷ் அதில் இந்த மாதிரி சேர்த்து வைக்க முன் வருவார்.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
வாங்க கமலா சிஸ்டர்.. நீங்கள் சொல்வது அந்த 7 நாட்கள். அது வித்தியாசமான கதை! நன்றி.
நீக்குஇந்த பாட்டு புதுசா இருக்கே! இப்படி ஒரு படம் வந்திருக்கா என்ன?!
பதிலளிநீக்குவந்திருக்கே... இரண்டு நல்ல பாட்டும் இருக்கே... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி ராஜி.
நீக்குகதையைப் பார்த்துட்டு/படிச்சுட்டு பாலச்சந்தரோனு நினைச்சேன். எம்.ஏ.காஜா இயக்கம்னு சொல்லி இருக்கீங்க. தெரியாது அப்படி ஒரு இயக்குநர் இருந்ததே! :))))))
பதிலளிநீக்குநான் சொல்லி இருப்பது முழு கதை இல்லை கீதாக்கா.. பாடல் காட்சிக்கான பகுதி! ஆமாம்.. கொஞ்சம் கேபி வாசனை அடிக்கிறது இல்லை..?!!
நீக்குவெகு. இனிமையான பாடல் . கதையும். வேறுவிதமாக இருக்கிறது..நன்றியும். வாழ்த்துகளும்!
நீக்குநன்றி வல்லிம்மா.
நீக்குபாவம் குழ்ந்தை
பதிலளிநீக்குவிடுகதை பாடல் இனிமை பாராட்டுகள் பாடல் கேட்டு குழந்தை தூங்கியதா ?
பதிலளிநீக்கு