1) ... ஒருநிமிடம்கூட நேரத்தைக் கடத்தாமல் அதே காரில் அவரைப் பின்பக்கம் அமரவைத்துக்கொண்டு, தானே நகரத்தின் ஜூபிடர் மருத்துவமனைக்கு விரைந்து சென்றார்..... ஒரு உயிரைக் காப்பாற்றுவதும் தனது கடமையென செயல்பட்ட முண்டே எனும் காவலரின் செயல்.
2) ‘அரசையும், அதிகாரிகளையும் நம்பி பயனில்லை’ என முடிவெடுத்த இளைஞர்கள் தங்களுக்குள்ளேயே சுமார் 20 ஆயிரம் ரூபாய் வரை வசூலித்து பாலம் கட்டும் பணியை தொடங்கி ஒரே நாளில் முடித்து விட்டனர்......
3) ஆனால், அரசு செய்யாவிட் டால் என்ன, அதை நாங்கள் செய்கிறோம் என்று களம் இறங்கியுள்ளனர் இந்த ‘திருநகர் பக்கம்’ இளைஞர்கள். இவர்கள் ஒன்றிணைந்து ‘பசுமை காவலர்கள்’ குழுவை அமைத்து பெரிய மரங்களை வேரோடு அகற்றி, அவற்றை வேறு இடத்தில் நடுகின்றனர். அதாவது சாகக்கிடந்தவரை ஐசியூவில் வைத்து காப்பாற்றி தேற்றி உயிர் பிழைக்கச் செய்வதைப் போன்றது இவர்களது முயற்சி. இவ்வாறு நடுவதற்கான பிரத்யேகப் பயிற்சியையும் அவர்கள் பெற்றுள்ளனர்.....
வாழ்க வளமுடன்..
பதிலளிநீக்குஅன்பின் ஸ்ரீராம், கீதா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம் துரை செல்வராஜூ ஸார்.
நீக்குமுத்துக்கள் மூன்று என
பதிலளிநீக்குதொகுக்கப்பட்ட செய்திகள் அருமை...
நலமும் வளமும் பெருகட்டும்...
அவ்வளவுதான் கிடைத்தது! "எங்கள் கண்ணில் பட்ட வரை...!!"
நீக்கு:)))
/// சாகக் கிடந்தவரை ஐசியூவில் வைத்துக் காப்பாற்றி தேற்றி....///
பதிலளிநீக்குதொடர்ந்து வேற மாதிரியும் எழுதலாம் போல இருக்கே!....
நமக்கெதுக்கு ஊரு வம்பு எல்லாம்!?...
புரியுது... ரைமிங்கா..! ஹா... ஹா... ஹா...
நீக்குஎல்லாத்தையும் ஒரு பார்வை பார்த்துட்டேன். எல்லாம் புதிய செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குமூன்றுமே அருமையான செய்திகள். பாராட்டத்தக்கப்படவேண்டியவர்களைப் பற்றிய பகிர்வுக்கு நன்றி.
பதிலளிநீக்குகாலை வணக்கம் 🙏. வேலை முடிந்த பிறகு வருகிறேன்.
பதிலளிநீக்குஎல்லாமே படிக்காத புதுச் செய்திகள். அனைவருக்கும் வாழ்த்துகள்.
பதிலளிநீக்குபாராட்டுக்குறியவர்கள் வாழ்க வளமுடன்.
பதிலளிநீக்குபாசிட்டிவ் செய்திகள் மூன்றும் சிறப்பு. மாணவர்களுக்காக ஆற்றின் நடுவில் பாலம் கட்டித்தந்த இளைஞர்களும், மரங்களை காப்பாற்றும் இயற்கை ஆர்வலர்களும் மகிழ்ச்சியளிக்கிறார்கள்.
பதிலளிநீக்குஅனைவரும் பாராட்டுக்குரியவர்கள்! நிச்சயம் இந்த மாதிரி இளைஞர்கள் எதிர்கால இந்தியாவை வலிமைப்படுத்துவார்கள்!!
பதிலளிநீக்குஅனைத்தும் நல்ல செய்திகள்.
பதிலளிநீக்குபசுமை காவலர்களை மிகவும் பாராட்ட வேண்டும்.
அனைவருக்கும பாராட்டுக்கள், வாழ்த்துக்கள்.
Excellent service.
பதிலளிநீக்குவணக்கம் சகோதரரே
பதிலளிநீக்குநல்ல பாஸிடிவ் செய்திகள். உயிரின் மதிப்பு தெரிந்த மனிதாபிமானம் மிக்க அந்த காவலரை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக பாலம் ஏற்படுத்தி கொடுத்த இளைஞர்களுக்கும. மரங்களை பேணி காப்பாற்றி, அதற்கு மறு வாழ்வு தரும் பசுமை காவலர்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அனைவரும் பாராட்டப்படக் கூடியவர்கள். பகிர்வுக்கு தங்களுக்கும் மிக்க நன்றி
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
இதுபோல் இளைஞர்கள் தான் நாட்டிற்கு அதிகம் தேவை...
பதிலளிநீக்குவேரூன்றி வளருமென்று நடுகிறார்கள் இங்கும் பெங்களூரிலும் அதைச்செய்கிறார்கள் பத்துக்குஇரண்டாவது பிழைத்துக்கொள்ளும் மனம்தளராமைஅவசியம்
பதிலளிநீக்குதலைப்பு கொஞ்சம் மிஸ் லீடிங் ஆக இருக்கு. என்னவோ ஏதோ என்று பார்வையாளர்கள் வரவு அதிகரிக்கும். ஆனால் அரசியல் வாசனை வருது. காலையிலேயே சொல்லணும்னு நினைச்சேன்.
பதிலளிநீக்குஅனைவரும் பாராட்டுக்குரியவர்கள். வாழ்த்துகள்.
பதிலளிநீக்குஎல்லாரும் பாராட்டுக்குரியவங்கதான். எல்லாத்துக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்கக்கூடாதுதான். அதுக்காக பாலம் கட்டுற வேலை, ஏரி தூர் வாருற வேலைலாம் நாம செய்யக்கூடாது. ஆனா சுத்தமா வச்சுக்கனும்.
பதிலளிநீக்குபோற்றுதலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள்
பதிலளிநீக்குபோற்றுவோம்
நல்ல மனம் படைத்த இளைஞர்களை போற்றுவோம் பாராட்டுகள்
பதிலளிநீக்குகுடி செய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
பதிலளிநீக்குமடி தற்றுத் தான் முந்துறும் - திருக்குறள்
‘என்னால் இதை வெற்றிகரமாக செய்ய இயலும் என்ற முனைப்பும், வேகமும் கொண்டு நீ செயலில் இறங்கி விட்டால் ஆடையை நன்றாக இறுக்கிக் கட்டிக் கொண்டு ஆண்டவனே உனக்குத் துணை நிற்பான்’
அனைத்துச் செய்திகளும் அருமை. காப்பாற்றிய காவலருக்கு மனம் நிறை வாழ்த்துகள். பாலம் கட்டிய இளைஞர்களை எத்தனை பாராட்டினாலும் தகும். கல்வியை வாழ வைத்தார்கள். அதே போல மரம் நடும் வாலிபர்களுக்கும் எதிர்காலம் கடமைப் பட்டிருக்கிறது.
பதிலளிநீக்குமூன்று நற்செய்திகளுக்கும் நன்றி ஸ்ரீராம்.
பாராட்டுக்குரியவர்கள்.
பதிலளிநீக்கு