சனி, 9 பிப்ரவரி, 2019

"பெண்ணாக மாறிவிட்டாலும், ஒருபோதும் என்னால் தாயாக முடியாது...."


1) போலீஸ்காரர் முகத்தில், 'பெப்பர் ஸ்பிரே' அடித்து தப்பிய கார்திருடனை கைது செய்ய உதவிய, ஆட்டோ ஓட்டுனருக்கு, போலீஸ் கமிஷனர் பாராட்டு தெரிவித்தார்.   






2)  "பெண்ணாக மாறிவிட்டாலும், ஒருபோதும் என்னால் தாயாக முடியாது. ஆனால், இன்று பல பேர் என்னை, 'அம்மா' என, மனதார அழைக்கின்றனர். இதில் கிடைக்கும் நிறைவு தான், என்னை தொடர்ந்து இயங்க வைக்கிறது. என் அம்மா மட்டும், அன்று என்னை புரிந்து கொள்ளாமல் இருந்திருந்தால், உயிருடனேயே இருந்திருக்க மாட்டேன்....."

சேலத்தில், 'தாய்மடி' இல்லத்தை நடத்தி வரும், திருநங்கை தேவி.





3)  இதய நோய் அறுவை சிகிச்சை நிபுணர் மனோஜ் துரைராஜ் இதய நோய்க்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதோடு, 350 அறுவை சிகிச்சைகள் இலவசமாகவும் செய்திருக்கிறாராம்.  பெயரைப் பார்த்தால் தமிழ் வாசனை அடிக்கவில்லை?!!



24 கருத்துகள்:

  1. இனிய மகிழ்வான காலை வணக்கம்! ஸ்ரீராம், துரை அண்ணா, அக்காஸ், அண்ணாஸ், தம்பிஸ், தங்கைஸ், நட்பூஸ் தொடரும் அனைவருக்கும்..
    வல்லிமாவுக்கு குட் ஈவினிங்க்!!!
    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வந்திருக்கும் இனி வரப்போகும் அனைவருக்கும் நல்வரவு. வாழ்த்துகள்.

      நீக்கு
  2. திருநங்கை தேவி வாழ்க!!!! மிக மிக உயர்ந்து நிற்கிறார்!

    அவர் அம்மாவுக்குப் பாராட்டுகள்! எத்தனை பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை (திருநங்கை) அணைத்துக் கொள்கிறார்கள்? பொதுவாக விரட்டிதான் விடுகின்றனர். அதற்காகவே தேவியின் தாய்க்குப் பாராட்டுகள்.

    தேவிக்கு அவர் தாய் மடி கிடைத்தது போல தேவி பலருக்கும் தாய்மடி என்று சேவை செய்வது மிக மிக பாராட்டிற்குரிய விஷயம். திருநங்கைகளும் இந்தச் சமுதாயத்தில் தங்கள் சுய மரியாதையைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்று நிரூபித்து வருகின்றனர். மிக மிக நல்ல விஷயம். இது குறித்து நான் பதிவு ஒன்று போட்டிருந்த நினைவு...நான் சந்தித்த திருநங்கைகள் பற்றி.. என் சிறு வயதிலேயே எங்கள் ஊரில் ஒருவர் உண்டு....அதை வைத்து ஒன்று எழுதி ட்ராஃப்டில் தூங்கிக் கொண்டிருக்கு...

    என் பணிகள் சில முடிந்ததும் தூங்குபவற்றை முடிக்கும் எண்ணம் உள்ளது...பார்ப்போம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. I have never had to turn any patient away for the lack of money or resources to facilitate the treatment,” //

    மனதை நெகிழ்த்திய வரி!!

    இப்படியான மருத்துவர்களின் சேவை நம் நாட்டிற்கு மிகவும் தேவை. வாழ்க வளர்க அவர் பணி. பாராட்டுகளும்.
    //“I grew up seeing my father dedicate his time, money and medical expertise to treat the people who are far from quality healthcare due to monetary reasons and geographical distance. That inspired me to not just take up the profession that had the potential to make a substantial difference to people’s lives, but also continue his work of taking quality healthcare to those who need it the most.”//

    தந்தை அவருக்கு நல்ல வழி காட்டியுள்ளார் தன் செயல்களினால். (அறிவுத்தல்களினால் இல்லாமல் செயல்வடிவம்!!!!) இப்படியான பெற்றோர்கள் அமையும் போது குழந்தைகளும் நல் வழியில் வருவார்கள் என்பது உறுதியாகிறது. அவர் தந்தைக்கும் வணக்கங்கள்.

    நல்ல மனம் படைத்தவர்களும் உதவுகிறார்கள்....நாம் நல்லது நினைத்தால் தானாகவே நல்லது நடக்கும் என்பதற்கு நல்ல உதாரணம். அவரது முதல் வரி!

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரைப் பார்த்தால் தமிழ் வாசனை அடிக்கவில்லை?!!//

      ஆமாம் ஆமாம் ஆமாம்!!!!! பெருமைக்குரிய விஷயம் இல்லையா?!!!

      கீதா

      நீக்கு
  4. ஆட்டோ ஓட்டுநருக்கு வாழ்த்துகள் பாராட்டுகள்! தகுந்த நேரத்தில் உதவி!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. உள்ளத்தாலும் உயர்ந்த மனிதர்கள் பற்றிய பதிவுக்குப் பாராட்டுகள். அனைத்துமே புதிய செய்திகள்.

    பதிலளிநீக்கு
  6. அனைத்து நல்ல உள்ளங்களையும் பாராட்டி மகிழ்கிறேன்.

    பதிலளிநீக்கு
  7. நல்ல செய்திகள்..... தாய்மடி பற்றி படித்த நினைவு.

    பதிலளிநீக்கு
  8. நல்ல நல்ல செய்திகளுடன் பதிவு....
    இங்கே காலையில் இருந்து மழை தூறிக்கொண்டு இருக்கிறது.. இப்போது மணி 7:30..

    பதிவின் செய்திகள் இளந்தென்றலாக இருக்கின்றது...

    பதிலளிநீக்கு
  9. நல்ல செய்திகள்! தமிழ் மணக்கும் பெயர் கொண்ட மருத்துவர் செய்யும் சேவை மகத்தானது.
    திருநங்கை அந்த பட்டத்தை நியாயப்படுத்தியிருக்கிறார். அவருடைய தாய் அவருக்கு தந்த ஆதரவு ஒரு சிறப்பான செயல். பெற்றோர்கள் ஆதரவு இருந்தால் திருநங்கைகள் வாழ்வு மேம்படும்.

    பதிலளிநீக்கு
  10. அம்மா, தாயின் மடி, மறக்கக் கூடியவையா என்ன? தாயாக முடியாவிட்டாலும் அம்மா என்றழைக்கப் படுவதிலேயே மனநிறைவுகொள்ளும் அந்த நல்ல உள்ளம் வாழ்க!

    பதிலளிநீக்கு
  11. இந்த ஸ்ப்ரே பெண்களுக்கு எதிராககடத்தவும் உபயோகமாகலாம் இதுஒரு டபிள் எட்ஜ்ட் கத்தி

    பதிலளிநீக்கு
  12. ஆட்டோ ஓட்டுடனர் வாழ்க!

    //என் அம்மா மட்டும், அன்று என்னை புரிந்து கொள்ளாமல் இருந்திருந்தால், உயிருடனேயே இருந்திருக்க மாட்டேன்.....//"
    தாய்மடி திருநங்கை தேவிக்கு கிடைத்ததால் தாய்மடி இல்லம் நடந்த முடிந்தது.
    தாய், அக்கா திருநங்கை தேவி வாழ்க. அவரின் செயல் நல்ல செயல். இப்படி எல்லா பெற்றோர்களும் இந்த மாதிரி திருநங்கைகளை ஆதரித்தால் அவர்கள் கஷ்டபடமாட்டார்கள்.

    மருத்துவர் சேவை வாழ்க!
    மூன்றும் நல்ல செய்திகள் .

    பதிலளிநீக்கு
  13. மூவரும் போற்றுதலுக்குரியவர்கள்.

    பதிலளிநீக்கு
  14. ஆட்டோ ஓட்டுநருக்குப் பாராட்டுகள். நல்ல உதவி.

    இப்படியான சப்போர்ட் அளிக்கும் தாய் தேவிக்குக் கிடைத்ததால் அவரால் தாய்மடி எனும் இல்லம் நடத்த முடிகிறது. அருமை. தேவிக்கு வாழ்த்துகள் பாராட்டுகள். அவரக்கு ஆதரவு அளீத்து அரவணைத்த அவரது அன்னைக்கும் பாராட்டுகள்.

    மருத்துவர் மனோஜ்துரை அவர்களின் சேவை மிகவும் போற்றுதற்குரியது.

    அனைத்தும் அருமையான செய்திகள்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  15. ஆட்டோவில் துரத்திப் பிடித்த நல்லவருக்கு வாழ்த்துகள்.
    டாக்டர் மனோஜ் ,என் அம்மாவுக்கும் வைத்தியம் செய்தார். என் தம்பிக்கும் பார்த்தார். பழக இனிமையானவர். என்றும் நலமுடன் இருக்கணும்.

    பதிலளிநீக்கு
  16. வணக்கம் சகோதரரே

    மூன்று செய்திகளும் அருமை. அனைவரின் சேவைகளும் பாராட்டுக்குரியவைகள். இதுபோல் செய்திகளை தரும் தங்கள் பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
  17. நல்ல செய்திகள். ஆட்டோ ஓட்டுனருக்கு பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  18. போற்றுதலுக்கு உரியவர்கள்
    போற்றுவோம்

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!