புதன், 19 ஜூன், 2019

புதன் 190619 :: பேயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?


சென்ற வாரத்தில் நேர மேலாண்மையில் ஒரு துளி பார்த்தோம். 



இந்த வாரம் நாம் காண இருப்பது RCA. அப்படி என்றால் என்ன?

பதிவின் பிற்பகுதியில் பார்ப்போம். 



கீதா சாம்பசிவம் : 


1. பேயை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

# பேய் - நான் பார்த்ததில்லை. நீங்களும் பார்த்திருக்க முடியாது.

& ஆம். பார்த்திருக்கிறேன். 
ஜனவரி 1972 முதன் முதலாகப் பார்த்தேன். 
ரொம்ப சந்தோஷமாக இருந்தது. 
ஏன் என்றால் ....... 

     
அதுதான் என்னுடைய வாழ்க்கையில் நான் முதலாக 

   
வாங்கிய Pay. 


2. கோயில் திருவிழாக்கள், அம்மன் திருவிழாக்களில் உம்மாச்சி வந்துடுச்சுனு சொல்லி ஆடுபவர்கள் பெரும்பாலும் பெண்களாகவே இருக்கக் காரணம் என்ன?
                 

# பேய் "பிடிப்பது" மனவலிவு குன்றியவர்களை மட்டுமே. எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடிய பெண்கள் சில ஆழமான காரணங்களால் மன வலிவை இழக்கக் கூடும்.
      

& பெண் என்றால் பேயும் இறங்கும். அதாகப்பட்டது, பேயும் அவர்கள் மீது இறங்கி அவர்களை ஆட்டுவிக்கும்!

     

3. அப்படி ஒரு ஆணை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? உம்மாச்சி வந்துடுச்சுனு சொல்லி ஆடும் பூசாரி சொல்வது/சொன்னது எல்லாம் பலிச்சிருக்குனு/ பலிக்கும்னு நம்புவீர்களா/நம்புகிறீர்களா?
           

# பூசாரிகளின் சாமி ஆட்டங்கள் மக்கள் எளிதாக எதையும் நம்பிவிடும் பலவீனத்தை அடிப்படையாகக் கொண்டது.
     

பொதுவான பலன்களைச் சொன்னால் ஐந்தில் இரண்டு பலிக்கும். அதற்குத் தரப்படும் முக்கியத்துவம் அதன் பெருமையை வளர்க்கிறது.
      

& எங்கள் அலுவலகத்தில் நாகையா என்று ஒரு துப்புரவுப் பணியாளர் . ஆயுத பூஜையின் போது கொஞ்சம் ஆடத் துவங்கினார். அது பூஜைக்கு எம் டி வருகை தருகின்ற நேரம் என்பதால், டிபார்ட்மெண்ட் தலைவர் கொஞ்சம் முகம் சுளித்தார். அவ்வளவுதான். நாகையாவை சூழ்ந்த சில நண்பர்கள், அவரை நல்ல வார்த்தை சொல்லி வெளியே அழைத்துச் (இழுத்துச்) சென்றுவிட்டார்கள். நான் பார்த்த ஒரே ஆண் சாமியாடி அவர்தான். 



4. அது என்ன, பெண் பேய் மட்டும் எப்போதுமே மல்லிகைப்பூவும் கொலுசும் போட்டுக்கொண்டு வருது? அது இல்லாமல் வராதா?

& அதற்கென்ன? அடுத்தமுறை வரும்போது ஜீன்ஸ் & ஹை ஹீல்ஸ் போட்டு வரச் சொல்லிவிடுவோம்! 



5. இப்போ நானே இருக்கேன் இல்ல? எனக்குக் கொலுசே பிடிக்காது? அப்போ நான் பேயாக ஆனால் எப்படி கொலுசுவெல்லாம் போட்டுப்பேன்? மாட்டேன்னு சொல்லி இருப்பேன் இல்லையா?

# ஆமாம்.

& கொலுசு எல்லாம் பேய்கள் விரும்பிப் போட்டுக்கொள்வதில்லை. காருக்கு ஹார்ன் போல பேய்க்கு கொலுசு. ஆவியுலக சட்டம் சொல்வது என்ன என்றால், ' பேய்கள் இரவு நேரங்களில் மட்டும்தான் நடமாட்டம் வைத்துக்கொள்ள வேண்டும். அப்படி இரவு நேரங்களில் செல்லும்போது கட்டாயம் சலங்கை அணிந்து ஜல் ஜல் ஓசையோடு செல்லவேண்டும். இந்த விதியை மீறுகின்ற பேய்கள் இரத்தக்காட்டேரி ஆக்கப்படுவார்கள்!

ஜல், ஜல், ஜல் என்னும் சலங்கை ஒலி, 
சல சல சல என இரவினிலே 
செல் செல் செல்லுங்கள்  பேய்களே, 
திரும்பிட வேண்டும் இருட்டினிலே! 



6. இறந்தவர்களிடம் பேசுகிறேன் என்று சொல்லி ப்ளாஞ்செட் மூலம் பேசியவர்களைப் பார்த்திருக்கிறீர்களா? உங்களுக்குப் பேசிய அனுபவம் உண்டா? அல்லது மீடியமாக இருந்திருக்கீங்களா?

# பேசியவர்களைப் பேசியபின் பார்த்திருக்கிறேன்.  எனக்கு அனுபவமில்லை.

& சின்ன வயதில் என்னை ப்ளாஞ்செட் பலகை பரிசோதனைக்கு என்னுடைய அப்பா உட்காரச் சொன்னது உண்டு. ஆனால் என் மீது இரக்கப்பட்டு எந்த ஆவியும் என் மூலமாக ஒன்றும் பேசவில்லை. மற்ற (பக்கத்து வீட்டு) பையன்கள், என் சகோதரி ஒருவர் எல்லாம் மீடியம் ஆக உட்கார்ந்தபோது சில பதில்கள் கிடைத்தன. 

சிற்சிலக் கேள்விகளுக்குக் கிடைத்த பதில்கள் : 

"S" 
" OK"
" UM"
" NO "
" PASS "
" GOD " 

என்னுடைய அக்காவின் கணவர் (ஆம், அவர்தான்) ஒருமுறை ப்ளாஞ்செட் பலகை பரிசோதனை செய்தபோது, வீம்புக்காக தன் உபவீதத்தைக் கழற்றி வைத்துவிட்டு உட்கார்ந்ததாகவும், அப்போ பலகையில், ' ni paappaanaa ' என்று வந்ததாகவும் அவரே குறிப்பிட்டு ஒரு கடிதம் எழுதியிருந்தார், என் தந்தைக்கு. 


7. அறுபதுகளின் ஆரம்பத்தில்? ஸ்டவ் ஜோசியம் பிரபலமாக இருந்தது! தெரியுமா? உங்க வீட்டு ஸ்டவ் ஜோசியம் சொன்னதா? சொன்னால் என்ன சொல்லி இருக்கும்?

& 'ஸ்டவ்வைப் பேச வைப்பதில், தான் ஒரு நிபுணி' என்று சொல்லிக்கொண்ட என் ஒன்று விட்ட மூத்த சகோதரி நாகையில் எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். 

எங்களுக்கும் ஸ்டவ் பேச்சுக் கேட்க ஆசை வந்தது. அவர் சொன்ன எல்லா விதிமுறைகளையும் பக்தியோடு செய்தோம். 

ஸ்டவ்வுக்கு ஸ்நானம் செய்வித்து, அதற்குப் பொட்டிட்டு, கோலத்துக்கு நடுவே வைத்தோம். சுற்றி எல்லோரும் ஆவலோடு உட்கார்ந்தோம். யாரும் பேசக் கூடாது என்று அவர் சொன்னதால், சத்தமில்லாமல் கண்களில் மிரட்சியுடன் ஸ்டவ்வையே பார்த்துக்கொண்டு காத்திருந்தோம். 

முன்னோர்களை அதில் வரச்சொல்லி, வந்ததற்கு அடையாளமாக ஒரு காலைத் தட்டவேண்டும் என்று அவர் திரும்பத் திரும்ப மெல்லிய குரலில் சொல்லச் சொல்ல, ரொம்ப நேரம் பக்தியோடு காத்திருந்தோம். 

எங்கும் அமைதி. 

அமைதி.

அமைதி. 

அப்போ .... 
    
' டமால் ' என்று ஒரு சத்தம். தொடர்ந்து 'டக டக'வென உருளும் சத்தம். 

வேறொன்றுமில்லை - பக்கத்து வீட்டுத் தென்னைமரத்திலிருந்து ஒரு காய், எங்கள் வீட்டு ஓட்டின்  மீது விழுந்து, உருண்டு வந்து முற்றத்தில் விழுந்தது. 

அப்போ ரொம்பச் சின்னப் பையனாக இருந்த நான், பயந்து போய்,  'வீல்' என்று சத்தம் போட்டேன். என் அம்மா, 'போதும் இந்த விபரீத சோதனை' என்று சொல்லி, ஸ்டவ்வை எனக்குக் கொழுமோர் காய்ச்சுவதற்காக, சமையலறைக்கு எடுத்துச் சென்றுவிட்டார். 
                    


8. பிள்ளையார் பால் குடித்தார் என்பதை நீங்கள் நம்பினீர்களா? உண்மையாவே பால் குடிச்சாரா என்ன?

# ஸ்டவ் ஜோசியம், பிள்ளையார் பால் எல்லாமே மனிதரின் எளிதில் ஏமாறும்/ஏங்கும் இயல்பை அடிப்படையாகக் கொண்ட புரட்டுக்கள். 

& அந்தப் புரளி வந்த காலத்திலேயே, டி வி யில் surface tension இயல்பு பற்றி ஒருவர் விலாவாரியாக சொன்னார். புரிந்துகொண்டேன். 



9. இது வரைக்கும் நீங்க பார்த்த பேய்களிலேயே உங்களுக்குப் பிடித்த பேய் எது? பேய்ப்படத்தில் இருந்து கூட சொல்லிக்கலாம். அல்லது பேயின் படத்தையே கூடப் போடலாம்! எதுவானாலும் சரி!






10. எந்தப் பேய்ப்படத்தையாவது பார்த்துட்டு பயந்திருக்கீங்களா?

& 'யார் நீ' படம் பார்த்தபோது (அந்த வயதில்) கொஞ்சம் பயம் இருந்தது.  

11. நீங்க காஃபியோடு வறுத்த அதிலும் நெய் விட்டு வறுத்த முந்திரிப்பருப்பும் வேணும்னு கனவு கண்டு கொண்டு இருக்கும்போது ஒரு கை மட்டும் வந்து அவற்றை உங்களிடம் ஒவ்வொன்றாக நீட்டினால் என்ன செய்வீர்கள்?
(நான் சாவகாசமா முந்திரிப்பருப்பை ரசித்துச் சாப்பிட்டுவிட்டுக் காஃபியைக் குடிச்சுடுவேன்.)

&கனவு கண்டு கொண்டு இருக்கும்போது.....', 'ஒரு கை மட்டும் வந்து அவற்றை ஒவ்வொன்றாக நீட்டினால் ..... ' " 

கனவுதானே! கொண்டு வந்து தரும் அந்தக் கையிடம், 'காஃபியில் இன்னும் 'ஒரு கை' சர்க்கரைப் போட்டுக் கொண்டு வா' என்று திருப்பி அனுப்புவேன். நான் வெயிட் பண்ணும் நேரத்தில் கொறிப்பதற்கு 'ஒரு கை' முந்திரியை என் கையில் போட்டுவிட்டுப் போ என்று அதிகாரம் செய்வேன். 

நானும் கனவில் (மட்டும்) உங்களைப் போல (அல்லது ஆப்கானிஸ்தானை எதிர்த்து கிரிக்கட் ஆடும் இங்கிலாந்து அணி போல) அடித்து ஆடுவேன்!
    

12. சில வருஷங்கள் முன்னே நீங்க பாக்கெட் பால் கொடுப்பவரிடம் பால் வாங்கிக் காஃபிக்குப் பால் காய்ச்சும்போது நடந்த அமானுஷ்யங்கள் இப்போவும் நடக்குதா? அதே பால் காரர் தானா இப்போவும் பால் கொடுக்கிறார்? வேறே ஆளா? இவருக்கானும் கால்கள் இருக்கா?
     

& இப்போ பால் கொண்டு வந்து போடுபவருக்குக் கால் இருக்கா / இல்லையா என்று பார்க்கமுடிவதில்லை. Doodhwala app ல் ஆர்டர் பிளான் கொடுத்துள்ளதால், கொண்டு வந்து போடுவது பேயா அல்லது மனிதனா, எப்போ கொண்டு வந்து வாசல் கதவில் மாட்டியுள்ள பச்சைப்பேய் ....  சீச்சீ ... பச்சைப்பையில் போட்டுச் செல்கிறார் என்றே தெரியாது. 


        
13. அது ஏன் பேய்க்குக் கால்கள் கிடையாதுனு ஒரு நம்பிக்கை! கால் இருக்கும் பேயே இல்லையா? கால் இருந்தால் என்ன ஆகும்? அது நடந்து வரும் சப்தம் கேட்டு உஷாராயிடுவோமா?
         

# பேய்க்குக் கால்கள் கிடையாது என்றால் பேய்களுக்கு யாரும் கால் செய்ய மாட்டார்கள் என்று பொருள்.
        

& கால்களே இல்லை என்றால், கொலுசு மட்டும் எப்படி அணிய முடியும்? கால் இல்லை என்றால், அது நடந்து வராது; மிதந்துதான் வரும் என்று அர்த்தம்.
         

'உருவாய் அருவாய் உளதாய் இலதாய் வரும் / வராத' பேய்களுக்கு இந்த புதன் கேள்வி பதில் பதிவு சமர்ப்பணம்! 


=====================================

RCA  பற்றிக் கூறுவதற்கு முன்னால், ஒரு சிறிய எளிய பயிற்சி மேற்கொள்ளுங்கள். 

உங்கள் கால்குலேட்டரில் அல்லது மொபைல் கால்குலேட்டர் ஆப் எடுத்து அதில் உங்களுக்குத் தெரிந்த மிகப்பெரிய எண்ணை திரையில் தட்டுங்கள். 

உதாரணம் : 9999999999

பிறகு அதன் square root கண்டுபிடியுங்கள்.    (1)
99999.999995

பிறகு இதன் square root.    (2)
316.227766009

பிறகு இதன் square root.   (3)
17.7827941002

பிறகு இதன் square root.   (4)
4.21696503426

பிறகு இதன் square root.   (5)
2.05352502645

பிறகு இதன் square root.  (6)
1.43301257023

பிறகு இதன் square root.  (7)
1.19708503049

பிறகு இதன் square root.  (8) 
1.09411381058

எந்த மிகப்பெரிய எண்ணாக இருந்தாலும் எட்டு முறை root தட்டினால் 
ஒன்று என்ற (rounded off to 1) எண் வந்துவிடும். 

இப்போ நான் சொல்வதை கவனத்தில் கொள்ளுங்கள். 

RCA = Root Cause Analysis  = மூலக் காரண பகுப்பாய்வு. 

எம்ஜியார் படப் பாடல் ஒன்று உண்டு. 

" ஏன் என்ற கேள்வி, இன்று கேட்காமல் வாழ்க்கை இல்லை..... "  

அவர் பாடியதின் உட்பொருள், பிரச்னை தீர்க்கும் கருவியில் ஒன்றாகிய 'ஏன், ஏன்,  பகுப்பாய்வு  ' என்று நான் நினைக்கிறேன். ( Why, why analysis) 

மனிதர்கள் சம்பந்தப்பட்ட எந்தப் பிரச்னையுமே அதிகபட்சம் ஐந்து முறைகள்  'ஏன்' கேள்வி கேட்கப்பட்டால், பிரச்னையின் மூலக் காரணத்தை அறிய இயலும். 

எப்படி? 

உதாரணங்களுடன் அடுத்த வாரம் பார்ப்போம். 

=============================================

மீண்டும் சந்திப்போம். 

=============================================


106 கருத்துகள்:

  1. அன்பின் KGG, ஸ்ரீராம்,
    கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் அன்பின் நல்வரவு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்களுக்கும் இனி வரப்போகும் மற்றும் நம் நட்புறவுகள் அனைவருக்கும் நல்வரவும் வணக்கமும் துரை செல்வராஜூ ஸார்.

      நீக்கு
    2. அனைவருக்கும் கிலிவரவு!

      நீக்கு
    3. ஐயோ இதுவும் இங்கே வந்துடுச்சா! ஏய்! பகல் நேரத்தில் இங்கே எல்லாம் உலாத்தாதே!

      நீக்கு
    4. கேஜிஜி சார்... அதை விரட்டாதீர்கள். அதன் நண்பி, நண்பர்களைப் பார்க்க வந்திருக்கலாம். நீங்க, அது யார் யாருன்னு மட்டும் கண்டுபிடிங்க.

      நீக்கு
    5. நீங்கதானா அது நெ.த? பயந்து போயிட்டேன்.

      நீக்கு
    6. பேய் கொடுத்த கிலிவரவைப் பார்த்துட்டு ஶ்ரீராம் பயந்து இந்தப் பக்கமே எட்டிப் பார்க்கலை போல! :)))))

      நீக்கு
    7. நன்றி துரை! வரவேற்ற உங்களுக்கும் வருகை புரிந்த அருமைப் பேய்க்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி. நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்! பேய்க்குப் பிரார்த்தனை எல்லாம் பிடிக்கும் தானே!

      நீக்கு
    8. இன்று இரவு அது மீண்டும் வந்து பதில் சொல்லும் என்று நினைக்கிறேன்!

      நீக்கு
  2. "ஒய்ஜா போர்டு" முறையில் ஆவிகளுடன் பேசியுள்ளேன். 'மீடியம்' பவர் இருப்பவர்களுடன்தான் ஆவிகள் பேசுமாம். என் அப்பாவின் தங்கைக்கு பவர் உண்டு என்றார்கள். விருப்பமில்லாத நேரங்களில் அழைத்தால் அடம் பிடிக்கும் ஆவிகளும் உண்டு.அந்நேரங்களில் அதிருப்தியைக் காட்ட பொய்கூட சொல்லுமாம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள் தலைவரே! காபி சாப்பிடும் நேரத்தில் எல்லாம் என் சகோதர ஆவிகளைக் கூப்பிட்டால் - ஆவி பறக்க காபி உங்களுக்குக் கிடைக்காது, ஆறிப்போன காபிதான் கிடைக்கும்!

      நீக்கு
    2. இந்தப் பேய் தான் கோவிச்சுண்டு காய் விட்டுட்டுப் போனதா? பெயர் என்ன? ஆவி அமுதானு ஒருத்தர் இருந்தார்! அவரைக் கேட்டால் சொல்லுவாரோ என்னமோ!

      நீக்கு
  3. ரசமான?....

    ரசனையான பதில்கள்...

    பேய்களுக்கு வாய்ப்பு இருந்து படிக்க நேர்ந்தால் மிக்க மகிழ்ச்சியடையும்...

    பதிலளிநீக்கு
  4. >>> நாகையா என்று ஒரு துப்புரவுப் பணியாளர் . ஆயுத பூஜையின் போது கொஞ்சம் ஆடத் துவங்கினார். அது பூஜைக்கு எம் டி வருகை தருகின்ற நேரம் என்பதால், டிபார்ட்மெண்ட் தலைவர் கொஞ்சம் முகம் சுளித்தார்...<<<

    வேறுவித பணியாளராக இருந்தால் என்னவாகியிருக்கும்!?...

    பதிலளிநீக்கு
  5. ஒய்ஜா போர்டு முறையில் ஒரே ஒருமுறை ஆவியுடன் பேசியிருக்கிறேன். 'மீடியம்' பவர் இருப்பவர்களுடன்தான் ஆவிகள் பேசும்..

    விருப்பமில்லாத நேரங்களில் அழைத்தால் தெய்வங்கள் கூட தயங்கித் தான் வரும்...
    அந்நேரங்களில் மழுப்பலான பதில்கள் தான் கிடைக்கும்...

    மந்திர யந்திரங்களைப் பிழைப்புக்காக வைத்திருப்பவர்களை நம்ப வேண்டாம்...

    உபாசனையால் சில விஷயங்களை உணரப் பெற்றோரை அறிந்து அவர்கள் மூலமாக நன்மைகளை நாடுக...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சரியாகச் சொன்னீர்கள். முற்றிலும் உண்மை.

      நீக்கு
    2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
      இந்த நாள் நல்லதாக இருக்கட்டும்.
      அடடா பேய்க்கேள்விகளுக்கு இத்தனை நகைச்சுவையாகப் பதில் சொல்லி இருக்கிறீர்கள்.

      ஹிஸ்டீரியா இருக்கும் பெண்களுக்கு
      இது போல வருவதுண்டு என்று கேள்வி.
      இங்கேயும் மீடியம் இருக்கிறார்கள்.
      பக்கம் கூடப் போகக் கூடாது.

      ஆனால் எனக்கு அந்த நம்பிக்கை உண்டு. நானும் ஸ்டவ்
      நகருவதைப் பார்த்திருக்கிறேன்.
      எங்கேயும் எப்போதும் படம் பார்த்திருக்கிறீர்களா.
      கொல்லப்பட்ட பெண் அழகாகப் பழி வாங்குவாள்.

      நீக்கு
    3. ஒய்ஜா போர்டு மட்டும் பார்த்தது உண்டு. ஆங்கில அறிவு இல்லாத (அந்தக் காலத்தில் ஐந்தாம் வகுப்பிலிருந்துதான் ஆங்கிலம்.) மூன்றாம் கிளாஸ் நான்காம் கிளாஸ் படிக்கும் சிறுவர்கள் பாட்டில் மூடியைத் தொட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும்போது, ஆங்கில எழுத்துக்களை நோக்கி வேக வேகமாக நகர்ந்ததைப் பார்த்திருக்கிறேன்.

      நீக்கு
    4. @ வல்லிசிம்ஹன்...

      /// ஹிஸ்டோரியா இருக்கும் பெண்களுக்கு...///

      அம்மா.... சபரிமலைக்கு முடிகட்டும் இடங்களில் நிறைவாக மகா ஆரத்தி செய்யும் முன் கருப்பசாமி அல்லது மாடசாமி அழைத்துப் பாடும்போது ஆண்கள் தான் வீராவேசம் கொண்டு ஆடுவர்...

      ஆனால் அங்கே சபரிமலையில் சாமியாட்டம் ஆவேசம் எதுவும் வராது!...

      நீக்கு
    5. சபரிமலையில் சபரி பீடத்துக்கு முன்பாக பேய் பிசாசு, பூதப் பிரேதங்களுக்கு பொரி மற்றும் மாவு உருண்டைகள் போடுவது உண்டு...

      அந்த மலைச் சரிவிலேயே விற்பார்கள்..

      நான் ஊரிலிருந்தே வாங்கிச் சென்று போட்டிருக்கிறேன்...

      நீக்கு
    6. உண்மைதான் அன்பு துரை.
      சாமி பக்தியில் ஆடுவது மனத்தில் பயம் கொடுக்காது.
      சில சினிமாக்களில் அதை அதீதமாகக் காட்டுவதுதான் அருவருப்பு.

      நானும் கிராமங்களில் இருந்திருக்கிறேன்.
      எங்கள் வீட்டுக்குப் பின்னால்
      பத்துப் பனிரண்டு அடி சுற்றுச்சுவர் இருக்கும். அதற்கு அந்தப்பக்கம் உடுக்கை சத்த்தம் இரவு வேளைகளில் கேட்க்கும். முக்கியமாக அமாவாசை நாட்களில்.
      ஐய்யனார் கோவில்.
      அப்போது மக்கள் எல்லோரும் பயபக்தியுடன்
      இருந்தார்கள்.
      நமக்குப் பயமே தோன்றாது.
      நம் வீட்டுக்கும் வந்து திரு நீறு கொடுத்துப்
      போவார் அந்தப் பூசாரி.

      நீக்கு
  6. அனைவருக்கும் காலை வணக்கம்.

    பதிலளிநீக்கு
  7. அனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
  8. அதுதான் என்னுடைய வாழ்க்கையில் நான் முதலாக


    வாங்கிய Pay. //

    ரசித்தேன்.

    //ஜல், ஜல், ஜல் என்னும் சலங்கை ஒலி,
    சல சல சல என இரவினிலே
    செல் செல் செல்லுங்கள் பேய்களே,
    திரும்பிட வேண்டும் இருட்டினிலே! //

    ஏனக்கு பிடித்த பாடல் , அதை இனி கேட்கும் போது பேய் பாடல் நினைவு வருவது போல் மாற்றி விட்டீர்களே!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா ! (பேய்ச் சிரிப்பு)

      நீக்கு
    2. ஹிஹி.. ஹிஹி... ஹீய்ய்!...
      என்று சிரிக்க வேண்டும்....

      டைரக்டர் ஒன்றும் சொல்லிக் கொடுக்க வில்லையா?....

      நீக்கு
    3. பெண் பேய் எல்லாம் ஹி ஹி என்று சிரிக்கக்கூடாது; ஷி ஷி ஷி என்றுதான் சிரிக்கவேண்டும்!

      நீக்கு
    4. பெண்ணாக இருக்கும்வரை தான் சிரிக்கக் கூடாது...

      பேயாகப் போன பின்னும் சிரிக்கக் கூடாது என்றால் ரொம்பவும் அநியாயம்.... அக்கிரமம்!...

      நீக்கு
    5. சிரிக்கக்கூடாது என்று சொல்லவில்லை ! ஷி ஷி என்று ஷிரிக்கவேண்டும் என்று சொல்கிறேன்!

      நீக்கு
    6. பெண்களுக்கு கட்டுப்பாடுகள் கூடாது என்று கிளம்பி விட்டார்கள்..

      அப்படியிருக்க
      பேயாகிய பெண்ணுக்கு எதுக்குக் கட்டுப்பாடுகள்!?...

      நீக்கு
    7. துரை சார்... என்ன சொல்றீங்கன்னு எனக்குப் புரியலை.

      பெண்ணாகிய பேயா

      இல்லை

      பேயாகிய பெண்ணா?

      எது? சரியாச் சொல்லுங்க

      நீக்கு
    8. அதுதாண்னே.. இது?...
      இதுதாண்னே.. அது!...

      நீக்கு
    9. அதாகப்பட்டது, நெ த வும், துரை செல்வராஜூ சாரும், பெண்ணும் பேயும் ஒன்றுதான் என்று சொல்கிறார்கள். பா வெ மேடம் இங்கே வந்து, இவர்களைக் கொஞ்சம் விசாரியுங்க!

      நீக்கு
    10. பெ - க்கு அடுத்தது பே - தானே!.

      !?....

      இரண்டும் சேர்ந்தால் -

      பெப்பே!.. - ஆகி விடுகிறது...

      நீக்கு
    11. இப்படி எல்லாம் சொல்லி சமாளிக்க முடியாது. அவங்க வந்து விசாரிக்கட்டும்!

      நீக்கு
    12. கடேசி வரைக்கும் பா.வெ. அம்மா வந்து விசாரிக்கவே இல்லியே கௌதமன் சார்!

      நீக்கு
  9. //வேறொன்றுமில்லை - பக்கத்து வீட்டுத் தென்னைமரத்திலிருந்து ஒரு காய், எங்கள் வீட்டு ஓட்டின் மீது விழுந்து, உருண்டு வந்து முற்றத்தில் விழுந்தது.

    அப்போ ரொம்பச் சின்னப் பையனாக இருந்த நான், பயந்து போய், 'வீல்' என்று சத்தம் போட்டேன். என் அம்மா, 'போதும் இந்த விபரீத சோதனை' என்று சொல்லி, ஸ்டவ்வை எனக்குக் கொழுமோர் காய்ச்சுவதற்காக, சமையலறைக்கு எடுத்துச் சென்றுவிட்டார்.//

    மலரும் நினைவு அருமை.

    பதிலளிநீக்கு
  10. //அது என்ன, பெண் பேய் மட்டும் எப்போதுமே மல்லிகைப்பூவும் கொலுசும் போட்டுக்கொண்டு வருது ? அது இல்லாமல் வராதா ?//

    அதற்கென்ன ? அடுத்தமுறை வரும்போது ஜீன்ஸ் & ஹை ஹீல்ஸ் போட்டு வரச் சொல்லிவிடுவோம்//

    சீரியலில் பாருங்கள் இந்தக் கொடுமை எல்லாமே இருக்கிறது. கண்டிப்பாக லிப்ஸ்டிக் போடாமல் வருவதில்லை.

    எஸ். ஜானகியின் அற்புதமான பாடலை இவ்வளவு கீழே தள்ளி விட்டீர்களே ஜி ?

    அனைத்தும் ரசனையான பதில்கள்.

    பதிலளிநீக்கு
  11. இரசிப்புக்கு நன்றி கில்லர்ஜி !

    பதிலளிநீக்கு
  12. பேய்ப் படம் பார்க்கிற போது எனக்கு சில சந்தேகம் வரும். பேய்கள் பழிவாங்கி செத்துப் போகிற மனுஷங்க அவங்க பேயாகி அவங்க திருப்பிப் பழிவாங்க மாட்டாங்களா.. அவங்களுக்கு பவர் கிடையாதா..... அதெல்லாம் ஒண்ணும் புரிய மாட்டேங்குது....

    சுவாரசியமான பதிவு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒருத்தர் இன்னொருவருக்கு கெடுதல் செய்கிறார். அந்த இன்னொருவர் அப்பாவி. அப்போ அந்த அப்பாவி மனசால சாபம் கொடுத்தா, நிச்சயம் அது பலித்து, கெடுதல் செய்தவருக்கு துன்பம் விளைவிக்கும். தனக்குத் துன்பம் விளைவிக்குப்பவனை, அதற்குக் காரணமானவனை அவன் திரும்ப சாபம் கொடுக்க முடியாது. ஏனென்றால் இந்தத் துன்பம், தான் செய்த செயலின் விளைவு.

      அவ்ளோதான் மேட்டர் மிகிமா.

      அதெல்லாம் எனக்கு எப்படித் தெரியும்னு கேட்கக்கூடாது... நான் பேய்களோடு பழகுபவன் அல்ல. எபி நண்பர்களோடு மட்டும்தான் பழகுபவன்.

      நீக்கு
    2. // நான் பேய்களோடு பழகுபவன் அல்ல. எபி நண்பர்களோடு மட்டும்தான் பழகுபவன்.// ஏதேனும் உள்குத்து இருக்குமோ?

      நீக்கு
    3. ///எபி நண்பர்களோடு..///

      இங்கே மட்டும் என்ன வாழுது?...

      எபி நண்பர்களில்!?..
      மற்றவர்களைப் பற்றிச் சொல்வதை விட...

      அரபு நாட்டுப் பேய்கள் உறங்கும் நேரத்தில் நான் விழித்துக் கொண்டு பதிவுகளைப் புரட்டிக் கொண்டிருப்பேன்...

      இங்கேயே ஒரு ஆத்மா வந்து போய்க் கொண்டிருக்கிறது...

      ரொம்பவும் சொன்னால் டமாரம் என்பார்கள்..

      நீக்கு
    4. ஒரு செவ்வாய்க் கதை ரெடியாகிறதோ? காத்திருக்கிறோம் !!

      நீக்கு
    5. அதெல்லாம் முன்பே தயாராகி விட்டது ஷாமியோவ்!..

      நீக்கு
  13. ஏன் கீதா சாம்பசிவம் மேடம் பேயைப் பற்றியே கேள்விகள் கேட்கறாங்க?

    ஐயையோ...இது அடுத்த புதனுக்கான கேள்வி இல்லை. கீசா மேடம் இன்னைக்கு பதில் சொல்லவேண்டிய கேள்வி...ஹாஹா

    பதிலளிநீக்கு
  14. கேள்வி பதில்கள் அருமை.

    பால் போடுபவர் எடுக்கும் செல்ஃபியா இல்லை......

    பதிலளிநீக்கு
  15. காலங்கார்த்தால பேயா? என்ன அமங்கலம்? என்று நகர்ந்து சென்று விட்டேன். இப்போது உள்ளே நுழையும் பொழுதுதான் தெரிகிறது அத்தனையும் சிரிப்பு பேய். ஹாஹா ஹாஹா(ROFL)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பானுமதி, பேயெல்லாம் சிரிக்கும் விஷயம் இல்லையோ? நானெல்லாம் பேய், பிசாசுன்னா முதல்லே படிச்சுடுவேன், படங்கள்னா முதல்லே பார்ப்பேன். ஆனால் இந்த சினிமாப் பேய்களெல்லாம் பார்த்தால் பயம்மாவே வரதில்லை! சிப்புச் சிப்பா வருது!

      நீக்கு
  16. சாமி வந்து ஆடுவது மனோ தத்துவம் சம்பந்தப்பட்டது. அட்டென்ஷன் சீக்கிங் டிஸார்டர் என்று கூறலாம். வாழ்க்கையில் நசுக்கப்படுகிறவர்கள், புறக்கணிக்கப்படுகிறவர்கள் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள கையாளும் உத்தி. புகுந்த வீட்டில் கொடுமைக்கு உள்ளாகும் பெண்கள், வாழ்க்கையின் அடிமட்டத்தில் இருக்கும் ஆண்கள் போன்றவர்களுக்குத்தான் சாமி வருகிறது. மாமியாரோ, கணவனோ, உயரதிகாரியோ அவர்கள் காலில் விழும் பொழுது, அவர்கள் ஈகோ திருப்தி அடைகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மைதான். புரசைவாக்கத்தில் பக்கத்துப் போர்ஷனில் குடியிருந்தவர்கள் வீட்டுப் பெண் பரிட்சையில் குறைந்த மார்க் எடுத்தபொழுது, அப்பா திட்டத் தொடங்கியதும், சாமி வந்து ஆட ஆரம்பித்தாள். திட்டுகள் நின்று, பெற்றோர்கள் பரிவுடன் பேச ஆரம்பித்ததும், சகஜ நிலைக்கு வந்தாள்.

      நீக்கு
    2. இது அந்த மீரா ஜாஸ்மின் போல இருக்குதே!?....

      நீக்கு
    3. ஆமாம், ஆமாம்! அந்தப் படத்தில் அவர் நடிப்பு பிரமாதமாக இருக்கும்.

      நீக்கு
    4. எந்த படத்தில்தான் அவர் நன்றாக நடிக்கவில்லை?

      நீக்கு
  17. எங்கள் ஊர் அம்மனுக்கு காப்பு காட்டும் விழாக்களிலும், மஸ்கட்டில் அய்யப்பன் பூஜையின் பொழுதும், ஆண்கள் சாமியாடி பார்த்திருக்கிறேன்.
    மஸ்கட்டில் ஒருவருக்கு சாமி வரும் அதை யாருமே நம்ப மாட்டார்கள். ஏனென்றால் அவர் சாமி வருவதற்கு முன்பாக உஷாராக செயின், வாட்ச் எல்லாவற்றையும் கழற்றி, இடுப்பில் பெல்டை இறுக்கிக் கொண்டு, பாடப்படும் பாட்டிற்கு ஏற்ற தாளத்தில் சாமியாடுவார்.

    பதிலளிநீக்கு
  18. ஒரு முறை ஆவிகளோடு பேசக்கூடிய தன் நண்பரை எங்கள் மாமா அழைத்து வந்தார். ஏ.பி,சி,டி, எழுதப்பட்ட ஒரு பலகையை ஒரு பலகையில் வைத்து அதன் மீது ஒரு டம்பளரை கவிழ்த்து வைத்து அதன் மீது என் அண்ணா கை வைத்துக் கொள்ள, அவர் கையை அந்த நண்பர் பிடித்துக் கொள்ள, சரசரவென்று டம்பளர் நகர, என்ன எழுத்துக்கள் என்பதை அவர் சொல்லிக் கொண்டே வர, என் ஒரு அக்கா ஒரு நோட்டில் எழுதிக் கொண்டே வந்தார்.

    ஐந்து வயதில் இறந்து போன எங்களின் மூத்த சகோதரியின் ஆவி வந்ததாம். விஷப்பூச்சி எதுவோ கடித்து இறந்து போன என் அக்கா, இறப்பதற்கு முன் காபி கேட்டாளாம், காபி வருவதற்குள் உயிர் பிரிந்து விட்டதாம். ஆவியாக வந்ததும், "நான் காபி கேட்டேனே, அப்போது குடிக்க முடியவில்லை, இப்போது கொடேன்" என்றாள். இந்த விஷயம் என் மாமவின் நண்பருக்குத் தெரியாது. இதிலெல்லாம் நம்பிக்கை இல்லாத எங்கள் அப்பாவை அழைத்தும் வர மறுத்து விட்டார்.

    என் மூன்றாவது அக்காவிற்கு விபத்து நடக்க வாய்ப்பு இருக்கிறது, எனவே ஜாக்கிரதையாக இருக்கச் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறாள். அந்த குறிப்பிட்ட தேதியில் என் முன்றாவது அக்காவிற்கு எந்த விபத்தும் நேரவில்லை, ஆனால் என் பெரிய அக்கா, அண்ணா, பாட்டி கீழே விழுந்து சிறுகாயங்களோடு தப்பினார்கள். ஒருவருக்கு பெரிதாக நடக்க இருந்ததை மூவருக்கு பிரித்து கொடுத்து விட்டார் சுவாமி என்று அந்த அம்மா கூறினாள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நானும் இந்தப் பலகை (அதானே ப்ளாஞ்செட்?) ஜோசியம் பார்ப்பதை/கேட்பதைப் பார்த்திருக்கேன். :))) அப்புறமா வரேன், மிச்சத்துக்கு! இப்போச் சாப்பிடப் போகணும்.

      நீக்கு
    2. சுவையான தகவல்களுக்கு நன்றி, பா வெ மேடம்!

      நீக்கு
    3. என் தாத்தா (அம்மாவோட அப்பா) வீட்டில் மாமாக்கள் எல்லாரும் சேர்ந்து ஒரு சின்னப் பையரை மீடியமாக வைச்சுட்டு இந்தப் பலகையை வைத்துக் கேள்வி எல்லாம் கேட்டாங்க! அதுவும் இஷ்டத்துக்குக்கையை நகர்த்தி நகர்த்தி பதில் சொன்னது(மரியாதையாச் சொல்லணுமோ?) சொன்னாங்க! என் ஒரு மாமா தனக்கு எப்போ வேலை கிடைக்கும்னு கேட்டார்! அவர் ஏற்கெனவே 3 வருஷமா வேலை பார்த்துட்டுத் தான் இருந்தார்! ஆனால் அந்தப் பேய் மாமாவுக்கு வேலையே கிடைக்காமல் திண்டாடுவார்னு பதில் சொன்னது! இப்படிச் சில கோணாமாணா பதில்கள்! எங்க பாட்டியை (ஐந்து வயசில் கல்யாணம் ஆனவர்) எம்பிபிஎஸ் படிப்பாங்கனு சொன்னது! பாட்டி எம்பி எம்பிப் படிச்சாலும் பிஎஸ்க்கு எங்கே போறது? உங்க தாத்தா தான் அந்த பிஎஸ் என்றார்! அதைத் தான் சொல்லி இருக்கு என்று சிரித்தார். தாத்தா பெயர் பி.சுப்ரமணியன். பி.எஸ். என நண்பர்கள் அழைப்பார்கள். அதுக்கப்புறமும் ஸ்டவ் ஜோசியமும் விடலை! சாய்பாபா படத்திலிருந்து விபூதி கொட்டுதுனு கூட்டம் கூடும்! அதையும் முயன்று பார்த்தாங்க! ம்ஹூம்! அதுக்கெல்லாம் நம்ம பேய் அசைஞ்சே கொடுக்கலை!

      நீக்கு
    4. ஆஹா பேயைப் பகைத்துக்கொள்ளாதீர்கள். அவ்வளவுதான் சொல்லுவேன்.

      நீக்கு
  19. அட! இன்னிக்குப் பேய்க்கிழமைனு மறந்து போச்சு! சே! புதன்கிழமைனு மறந்துட்டேன். வெள்ளிக்கிழமைங்கற நினைப்பிலேயே இருக்கேன். இஃகி,இஃகி! ராகுகால விளக்கேத்தப் போனாத் தான் நினைப்பு வந்தது இன்னிக்குப் பேய்களுக்கான கேள்வி-பதில் சொல்லும் நாள் என! :)))))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேள்வி கேட்டவரே மறக்கலாமா? பேய் உங்க பேச்சு காய் விட்டுட்டுப் போயிடுச்சு!

      நீக்கு
    2. அடடா! பேய் கோவிச்சுக்கும்னு தெரிஞ்சா காலம்பரயே வந்து எட்டியானும் பார்த்திருப்பேன்! இனிமே எப்போ வருமோ?

      நீக்கு
    3. அந்தி மங்கியதும் வரும் என்று நினைக்கிறேன்.

      நீக்கு
  20. போன வெள்ளியன்று படுத்தேனா! அதுக்கப்புறமா நேத்தி வரைக்கும் ஏதோ வந்து போயிட்டு இருந்தேன்! கிழமை எல்லாம் ஒண்ணும் நினைவில் வரலை. இன்னிக்குக் கொஞ்சம் பரவாயில்லைனு எழுந்து வேலை செய்ய ஆரம்பிச்சா அந்த விட்டுப் போன வெள்ளிக்கிழமை நினைப்பே மாறலை! :))))))

    பதிலளிநீக்கு
  21. பேயைப் பற்றி எழுதியதில், ஒய்(why) யைப் பற்றி சொல்ல மறந்து விட்டேன். Super!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவை சரியாகப் படியுங்கள். ரூட் காஸ் அனாலிசிஸ் பற்றி எழுதியிருப்பதில் ஏன்? என்று கேட்பதில் முக்கியத்துவம் பற்றி எழுதியிருக்கிறாரே?

      நீக்கு
    2. அட! பானுமதி! நீங்க "பேய்" பத்தி எழுதுவதைத் தான் 'ஒய்'னு கேட்கிறீங்கனு நினைச்சால்! க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் கணக்குப் பாடம் எடுக்கறீங்க! நான் பேயைப் பார்ப்பேனா! இந்த ஆர்சிஏவைப் படிப்பேனா! பேய் அப்புறமாக் கோவிச்சுக்காதா? ஏற்கெனவே காய் விட்டிருக்கு! சமாதானம் பண்ணணும்! :)

      நீக்கு
  22. அடுத்த புதனுக்கான கேள்வி, பேய்க்காற்று, பேய் மழை என்கிறோம் ஆனால் பேய் வெய்யில் என்று ஏன் சொல்வதில்லை?

    பதிலளிநீக்கு
  23. ஆள் விரட்டும் பேய் ஒன்று
    வழி மறந்து நின்றது..
    பசி தாகம் தாங்காமல்
    எபி தனக்குள் புகுந்தது..
    கூடி நின்று குதுகலிக்க
    கூட்டம் ஒன்று இங்கிருக்க
    தன் குணத்தைத் தான் மறந்து
    தானும் ஆடி நின்றது...
    புகைச் சுவையில் கூத்தாடும்
    பேய் அதுவும் மனம் மாறி
    நகைச் சுவையில் நலங்கொண்டு
    நன்மக்காள் வாழ்க என்று
    நலம் பாடி நலம் பாடி
    தானும் தன் உலகுக்குத்
    தானாகச் சென்றது!....

    (ஆள உட்டாப் போதும் சாமியோ!..)

    பதிலளிநீக்கு
  24. கொஞ்சம் சீரியசா! மூலக்காரணத்தைப் பகுப்பாய்ந்து கண்டு பிடிச்சாலும் மனதில் கசப்பு/வெறுப்பு/வருத்தமே மிஞ்சும் என்பது என் தனிப்பட்ட கருத்து! சமயங்களில் அதிலிருந்து மீள முடிவதில்லை! மனக்கட்டுப்பாடு வேணும். ஆனால் நீங்க எந்த மாதிரி அலசப்போறீங்கனு பார்க்க அடுத்த வாரம் வரை காத்திருக்கணும். நான் சொல்லி இருப்பது உணர்வு பூர்வமாக! நீங்க லாஜிகலாச் சொல்லப்போறீங்கனு நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எந்தப் பிரச்னையையுமே உணர்வுபூர்வமாக அணுகக்கூடாது.

      நீக்கு
    2. அந்த அளவுக்கு மனப்பக்குவம் வேணுமே! :(

      நீக்கு
  25. அதே போல நான் நேரில் பார்த்த இரு நிகழ்வுகள்! மெலட்டூர் பாகவத மேளாவில் ஒரு முறை நரசிம்மராக வந்தவருக்கு உண்மையாகவே உக்கிரமான கோபம் வந்து பின்னர் அதைத் தணிவிக்கப் படாத பாடு பட்டார்கள். அதே போல் இன்னொரு நிகழ்வும் நேரில் பார்த்தேன். ஆதி சங்கரர் நாடகத்தில் ஆதி சங்கரராக நடித்தவர் சிறு வயதில் திரைப்படங்களில் குழந்தை நடிகர். பெயர் மறந்துட்டேன். நரசிம்மகராவலம்ப ஸ்தோத்திரம் சொல்லும் இடத்தில் உண்மையாகவே உக்கிரம் வந்து விட்டது. அம்பத்தூரில் எண்பதுகளில் இந்த நாடகத்தைப் பார்த்தபோது நேரில் பார்த்த நிகழ்ச்சி இது! எங்க குழந்தைங்களை அழைச்சுட்டுப் போயிருந்தோம்! குழந்தைங்க உண்மையாவே பயந்தாங்க! இந்த நரசிம்ம வேஷம் போடுபவர்கள் அதற்காக விரதம் இருக்கும்போதே உடம்பில் அருள் வந்துவிடும் என்கின்றனர்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆம்... நானும் அந்த செய்தியை கேள்விப்பட்டிருக்கிறேன்...

      நீக்கு
    2. ஆம். நானும் கேள்விப்பட்டிருக்கின்றேன். நாகப்பட்டினத்தில் ஒரு குடும்பம், நரசிம்ம ஜெயந்தி நாளில் இரவு முழுவதும், பிரஹலாத சரித்திரம் நாடகம் போடுவார்கள். வசனங்கள் பெரும்பாலும் தெலுங்கில்தான். நரசிம்ம அவதாரம் வேடம் போடுபவர் சில வாரங்களுக்குக் கடுமையான விரதம் மேற்கொள்வார் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஹிரண்யன் வேடம் ஏற்றவர், நரசிம்மருக்கு முன்பாக விஷ்ணு நிந்தை செய்யும் வசனங்கள் சொல்லும்போதெல்லாம், நரசிம்மர் வேடம் போட்டவர் ஆவேசமாக கூச்சல் போடுவது காண்போரை மெய் சிலிர்க்க வைக்கும். நரசிம்மர் வேடம் போடுபவரை ஒவ்வொரு பக்கத்திற்கும் இரண்டு மூன்று பேர் பிடித்து, கட்டுப்பாடில் வைத்திருப்பார்கள். நாகையில் இருந்த காலங்களில் நானும் என் சகோதரர்களும் தேசிய உயர்நிலைப்பள்ளியில் ஒவ்வொரு வருடமும் இந்த நாடகம் காணச் சென்றிருக்கிறோம்.

      நீக்கு
  26. எல்லாக் கேள்விகளுக்கும் # மற்றும் & நல்லா பதில் சொல்லி இருக்கீங்க! பாவம் $ பேய் பத்தின கேள்வின்னதும் இந்தப் பக்கம் எட்டியே பார்க்கலை! ஐந்தாவது கேள்விக்கு # "ஆமாம்"னு பதில் சொல்லி இருக்காரே! அது எப்படி? நான் வேணும்னு சொல்லி இருந்தால்? நான் ஆமாம்னு தான் பதில் சொல்லி இருப்பேன்னு அவருக்கு எப்படித் தெரியும்?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. 'கொலுசு வேண்டும் என்றுதான் நான் நினைத்திருப்பேன்' என்று நீங்கள் சொல்லியிருந்தாலும், அவரின் 'ஆமாம்' பதில், சர்வார்த்த சாதகமாகப் பொருந்துகிறதே!

      நீக்கு
    2. ஆஹா! சவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாலே, சமாளி! தம்பியுடையார் படைக்கு சே, இங்கே பொருந்தாது, கேள்விக்கு அஞ்சார்! :)))))))

      நீக்கு
  27. அடுத்த வாரம் ஆர்சிஏ பத்திய விளக்கம் என்பதால் கேள்வி பதிலுக்கு விடுமுறையா?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. கேள்வி பதில்தான் மெயின் சமாச்சாரம். மற்றவை எல்லாம் அதற்கு அப்புறம்தான்.

      நீக்கு
  28. எல்லோரும் கருத்து சொல்லி பேயாச்சா..... டிரிம் .... போயாச்சா? (டிரிம் என்றால் எங்க பாஷைல சாரின்னு அர்த்தம்)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹை, ரொம்பச் சமர்த்தாகவும் அதே சமயம் நேரக் கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்கும் பேய் போல! அது என்ன பேயே! டிரிம் போயாச்சா என்று கேட்டுட்டுப் பின்னாடியே "சாரி"னு சொல்லி இருக்கீங்களே! அதுக்கு என்ன அர்த்தம்? சாரி போயாச்சா?வா? ம்ஹூம் பொருந்தலை, பேய் சார்/மேடம்/குழந்தை! பேயிலே ஆண், பெண் வித்தியாசம் கண்டு பிடிக்கத் தானே கொலுசுவும், மல்லிகைப் பூவும்! இங்கே இரண்டுமே இல்லையே! அதனால் நீங்க ஆண் பேயோ?

      நீக்கு
    2. பேயாச்சா ....... சாரி ...... போயாச்சா.

      நீக்கு
    3. க்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் இன்னும் போகலை/பேகலை! நீங்க ஆணா, பெண்ணா, குழந்தையானு தெரியவே இல்லை! அதைச் சொல்ல வேண்டாமோ!

      நீக்கு
    4. பேய்க்கு ஏது பாலினம்? யாவும் இங்கே ஓரினம்!
      பேய்க்கு ஏது வயது?
      என்றும் பார்ப்பவர் வயதுதான் அதற்கு!

      நீக்கு
  29. என்ன இன்று ஒரே பேய்க் கேள்விகளாக இருக்கிறது?

    நான் வேறு நட்ட நடு ராத்திரியில் வாசித்துக் கொண்டிருக்கிறேன் மொபைலில்.

    நல்ல காலம் பதில்கள் எல்லாம் சுவாரஸியமாக மிகவும் நன்றாக இருக்கின்றன! பயமுறுத்தாமல். (எனக்குப் பேய் நம்பிக்கை எல்லாம் கிடையாது.)

    ரசித்தேன்

    துளசிதரன்

    பதிலளிநீக்கு
  30. ஆஹா இப்பத்தான் தெரியுது எங்கிட்டுருந்து பேய் உலவல் தொடங்கியிருக்குன்னு...ஹா ஹா

    கீதாக்காவின் கேள்விகள் அனைத்துமே பேயாக !!! பதில்கள் அட்டகாசம்...பல சிரிக்கவும் வைத்தன. செமை...ச்சே அன்று பதிவு பார்க்க முடியாமல் மிஸ்ட் இட்...நு தோணுது.

    எனக்கும் பேய் நம்பிக்கை கிடையாது. அது போல இந்த சாமியாடல்களிலும்.

    எங்கள் ஊரில் ஒருவர் அவருக்கு ஸாஸ்த்தா பூஜையின் போது அந்தக் கொட்டுச் சத்தம் கேட்கத் தொடங்கியதும் அல்லது பூஜைக்கு ஆரம்பித்ததும் கடைசியில்தான் அவருக்கு சாமி வரும். உடனே அவர் கற்பூரத்தை உள்ளங்கையில் கொளுத்தச் சொல்லுவார். சாமி மலையேறுது என்று சொல்வார்கள். உடனே அவர் அப்படியே மயங்கிச் சரிவார். அப்புறம் நார்மலாக உலா வருவார். சாமி வரும் நேரத்தில் அவர் அதைக் கொண்டா இதைக் கொண்டா என்று சொல்லுவார். ஊர் பற்றி ஏதேனும் சொல்லுவார். எல்லோரும் நம்புவார்கள்.

    ஆனால் அது ஒரு ந்யூரோ ப்ராப்ளம். சிலருக்குக் கொட்டுச் சத்தம் அவர்களை என்னவோ செய்யும்...அதனால் விளைவது.

    நாங்களும் சின்ன வயதில் ஒய்ஜா போர்ட் வைத்து விளையாடியிருக்கிறோம். நான் தான் காசை நகர்த்துவேன் என் கசின்கள் கேள்விகள் கேட்பார்கள். காசு யெஸ் அல்லது நோ நோக்கு என் விரல் நகர்த்தியதாகச் சொல்லுவார்கள். அப்போது அட என்று நம்பினேன் ஆனால் விவரம் வந்த போது நம்பிக்கை இல்லை.

    ஆனால் நாம் ஆழ்ந்து பிரார்த்தனை செய்யும் போது அல்லது ஒரு விஷ்யாம் குறித்த சிந்தனையில் அதீத ஈடுபாட்டுடன் இருக்கும் போது நம் உள் மனதில் டக்கென்று அல்லது தொடர்ந்து தோன்றும் விஷயங்கள் நடப்பதுண்டு இது அனுபவ ரீதியில்...

    இதைத்தான் விரிவுபடுத்தினால் விஜயலஷ்மி பந்தையனின் ஆல்ஃபா மைன்ட் பவர் வரை சொல்லலாம்....

    கீதா

    பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!