வியாழன், 27 ஜூன், 2019

பல்லிக்கு ஒரு கவிதை! - கோமதி ஆற்றில் ஒரு குளியல்


முன்குறிப்பு : படங்கள் நிறைய இருப்பதால் சில படங்கள் அதற்குத் தேவையான குறிப்புடன் கிடைக்கும் இடங்களில் வெளியிட்டிருக்கிறேன்.  சில படங்களே பொருத்தமான இடங்களில் இருக்கும்.  அசௌகர்யத்துக்கு மன்னிக்கவும்.

*********

ஆண்களும் பெண்களுமாய் அல்ப சங்கைகளுக்காக பரந்த வயல்வெளிகளில், கையில் வினோத வடிவ குடுவைகளில் தண்ணீருடன் அலைந்து கொண்டிருந்த நேரம் அலகாபாத்திலிருந்து நைமிசாரண்யம் பயணம்.  நிறைய மாந்தோப்புகள் கண்ணில் பட்டன.  ஆங்காங்கே வெவ்வேறு சைஸ், நிறக் குதிரைகள் கட்டப்பட்டும் மேய்ந்து கொண்டும் இருந்தன. 

நைமிசாரண்யத்தில் எங்கள் பஸ் நின்ற இடத்தில கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் அல்லது புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் கோவில் 


அங்கு இறங்கி நடந்தபோது எதிரே வந்த ஒரு காளையை பயத்துடன் படம் எடுக்க முயன்றபோது....


அது என்னைக்கண்டு பயத்துடன் அல்லது பெருந்தன்மையுடன் விலகி நடந்தது!  துஷ்டனைக் கண்டால்...!


வழியில் வெட்ட வெளியில் ஒரு கூரை போட்ட இடம்.  அதில் இரண்டு கதவு.  ஒன்றில் ஆண் படம்.  இன்னொன்றில் பெண் படம்.  அந்தப்பக்கம் இரண்டுமே வெட்ட வெளிக்குதான் லீட் செய்கின்றன.  நடுவில் தடுப்பும் கிடையாது!

புனருத்தாரணம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் கோவில்.  நாங்கள் இறங்கிய இடத்துக்கு நேரே...


எல்லோர் வாயிலும் பான், எல்லாக் கடையிலும் ஜிலேபி.

அந்தக் கோவில் வாசலில் தயாராகிக் கொண்டிருக்கும் ஒன்று...


லக்னோ தாண்டும் முன்பாக எங்களுடன் வந்து கொண்டிருந்த அமைப்பாளர் ராமுவின் தாயார் தவறி விட்டதாக தகவல் வர, அவர் எங்களிடம் விஷயத்தைச் சொல்லாமல் விடைபெற்றார்.  வேறொருவர் இரண்டு நாட்களுக்குள் எங்களுடன் இணைவார் என்றார்கள்.

கோமுகி அல்லது கோமதி ஆறு 


ஏதோ ஒரு ரயில்வே ஸ்டேஷன் கூரை ஸோலார் பேனலால் நிறைந்திருந்தது. அலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததால் தெளிவு குறைவாய் ஒரு அவசரப்படம் கூட எடுக்க நேரமில்லை!!நைமிசாரண்யத்தை அடையும்போது மதியம் இரண்டுக்கு மேல் ஆகிவிட்டது.  லக்னோ தாண்டி சீதாப்பூர் அருகில் என்று நினைக்கிறேன்.  ஒரு சிறு பாதையில் பஸ் திரும்பி நைமிசாரண்யத்தை அடைந்தோம்.  குறுகலான ஒரு இடத்தில் பஸ்ஸை நிறுத்திவிட்டு இதற்குமேல் பஸ் கிடையாது என்று அறிவித்தார்கள்.  எதிரே ஒரு கோவில் புனருத்தாரணம் செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. 


அங்கே நிறுத்திய பின் வழக்கம்போல ஒரு வண்டி ஏற்பாடு செய்துகொடுக்கிறேன் என்றும், அதில் சென்று கோமதி நதியில் நீராடிவிட்டு வரச் சொன்னார்கள்.  வண்டிக்கு நாங்கள் தனியாக காசு செலவு செய்யவேண்டும்.

காத்திருந்த வண்டிகளில் இப்படி ஒரு 'ஸ்டைலான'வண்டியில் ஏறலாம் என்றால், மற்றவர்கள் முந்திக்கொள்ள, எங்களுக்கு கிடைத்தது பழைய நொந்துபோன டாட்டா சுமோ டைப் வண்டி..  அதிலும் ஒரு கதவை கயிறு வைத்துக் கட்டும் டைப்!!!  ராசி...

அங்கேயே இருந்த ஒரு கொட்டகை போட்ட இடத்தில் சாப்பாட்டை முடித்துக்கொண்டால் அதே வண்டியில் ஐந்து கோவில்களைப் பார்த்து வரலாம் என்று சொன்னார் பாலாஜி.நைமிசாரண்யம் என்பது 108 வைணவத் திருத்தலங்களில் ஒன்று. இங்கிருக்கும் தேவ்ராஜ் மந்திரால்தான் அப்படிச் சொல்ல வேண்டும்.  இந்தக் கோவில்  67 வது திவ்யதேசமாம்.  வியாசர் மகாபாரதம் உள்ளிட்ட புராணங்களை எழுதிய இடம் இங்குதான்.  ராமாயணத்தில் ராமன் லவ குசர்களோடு அஸ்வமேதயாகம் செய்தது இங்குதானாம்.  பதினாறாம் நூற்றாண்டில் அக்பரின் அயினி அக்பரி புத்தகத்திலும் இந்த இடம் பற்றிய குறிப்புகள் காணப்படுகிறதாம்.  88000  ரிஷிகள் இங்கு சேர்ந்து தவம், யாகம் செய்திருக்கிறார்களாம். கிருஷ்ணனின் சகோதரர் பலராமர் இங்கு வந்து யாகம் செய்திருப்பதாயும் புராணம்.  கயாசுரன் நாராயணனை வரம் வேண்டி தவம் செய்த இடமும் நைமிசாரண்யம்தான். 

பாவங்களை மட்டுமல்ல, தாகங்களையும் தீர்ப்பாள் அன்னை கோமதி.


12 ஆண்டுகள் செய்யவேண்டிய சத்திர வேள்வியைச் செய்ய முனிவர்கள் விரும்பியபோது, ஒரு தர்ப்பைப்புல்லை வளைத்துப்போட்டு அது விழும் இடத்தில் வேள்வி செய்ய சிபாரிசு செய்தாராம் ப்ரம்மா.  அந்த இடம்தான் கோமதி ஆற்றங்கரையில் உள்ள நைமிசாரண்யம்.   முனிவர்களின் விருப்பப்படி வேள்வியின் முழுப்பலனையும் திருமால் வேள்வி குண்டத்திலேயே தோன்றி அவிர்பாகம் ஏற்று அருள் புரிந்தாய் சொல்கிறார்கள்.  நேமியென்றால் சக்கரமென்றும், ஆரண்யம் என்றால் காடு என்றும் பொருள்.  இங்கு மக்கள் கடவுளை ஆரண்ய வடிவமாய் வணங்குகின்றனர்.

உணவு உண்ண ஏற்பாடு செய்யப்பட்ட இடம்.


இத்தலத்தில் இறைவன் கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தேவராஜன் (ஶ்ரீஹரி)என்ற பெயரில் காட்சி தருகிறார். இறைவியின் பெயர் ஶ்ரீஹரிலட்சுமி என்பதாகும். இத்தலத்தின் தீர்த்தம் சக்கர தீர்த்தம் மற்றும் கோமுகி நதி. விமானம் ஸ்ரீஹரி விமானம் என்ற அமைப்பினைச் சேர்ந்தது.  

அருகில் ஆன்மீக பாடசாலை.  அங்கு பயிலும் மாணவன் கிரிக்கெட் ஆட்டத்துக்கு நடுவே இடுக்கு வழியினுள்ளே நுழைந்து தாகம் தீர்த்துக்கொள்ளும் காட்சி!


பாண்டவர்களின் வனவாசத்தில் இங்குதான் அதர்வண வேத காலத்தைச் சேர்ந்த சௌனக முனிவர் அறம் முதலியவற்றை எடுத்துரைத்து பாண்டவர்களைத் தேற்றினாராம்.

புனருத்தாரணம் நடைபெறும் அதே கோவில் - பக்கவாட்டிலிருந்து 


வியாசர் இயற்றிய மகாபாரதத்தை அர்ஜுனனின் கொள்ளு பேரன் ஜனமேஜயனுக்கு வைசம்பாயனர் சொல்லும்போது கேட்டுக்கொண்டிருந்த உக்கிரசிரவஸ் அதைக்கேட்டு பின்னர் பல இடங்களில் அதை நூற்றுக்கணக்கான முனிவர்களுக்குச் சொன்னாராம்.(நன்றி விக்கி) 

(நாங்கள் பஸ்ஸிலிருந்து இறங்கிய இடத்துக்கு அருகில் இரண்டு ரௌடி வாத்துகள்.  படம் எடுத்துக் கொண்டிருக்கும்போதே அதில் ஒரு வாத்து கோபம் கொண்டு துரத்தத் தொடங்கியது..  ஓடிட்டோம்ல....)


வழக்கம்போல ஒரு வண்டியைப் பிடித்துக்கொண்டு நாங்கள் எட்டு பேர்கள் கோமதி ஆற்றை அடைந்தோம்.  எங்கள் ஓட்டுநர் பெயர் நைமிஷ் குமார்.  அவர் எங்களை இறக்கி விட்ட இடத்தில் உயரமான படிக்கட்டுகள்.  அவற்றில் ஏறி அந்தப் பக்கம் இறங்கினால் சற்று தூரத்தில் கோமதி ஆறு. வழக்கம்போல இங்கும் சில பெண்கள் குழந்தைகளுடன் செருப்பைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பேற்கக் காத்திருந்தார்கள்.

ஜிப்பா அணிந்த இளம் பண்டிட் ஒருவர் கண்ணில் பட்டார். சங்கல்பம் செய்து வைக்கிறேன்.  இஷ்டப்பட்டதைக் கொடுங்கள் என்றார்.  'இப்படிச் செய்யாமல் உங்கள் முன்னோர்கள் எப்படி முக்தி பெறுவார்கள்' என்று சாந்தமாகக்கேட்டார்.  

சிலர் அவரிடம் சென்று 'முன்னோர்களுக்கு முக்தி அளிக்க'த் தலைப்பட்டனர்.

ஒரு மாட்டை வைத்துக்கொண்டு சில சடங்குகள் செய்தார் அந்த இளம் பண்டிட்..  இதற்காகவே 'தலப்பா'க்கட்டிய மாடு இன்னொன்று ஓரத்தில் காத்திருந்தது.ஆற்றில் இறங்கிய பின்னர் ஏறி வரவே மனசில்லைதான்!  இதற்குள் ஆற்றில் குளிக்கப் பழகி விட்டேன்.  குளித்துவிட்டு மறுபடி பஸ்ஸில் இறங்கிய இடம் சென்றோம்.

மதிய உணவு காத்திருந்தது.  சாம்பார்சாதம், ரசம் சாதம், தித்திப்பாய் ஒருகூட்டு, கேரட் பொரியல் மோர் சாதம்.  சாப்பிட்டு முடித்த உடன் மறுபடி அதே வண்டியில் ஏறி, செல்லவேண்டிய கோவில்களுக்குச் சென்றோம்.  பாலாஜி, பிரசாந்த் முதலானோர் யாரும் வரவில்லை. நாங்களாகப் பார்த்துக் கொள்ள வேண்டியதுதான். 

முதலில் சென்ற இடம் மாதா லலிதா தேவி சக்திபீடம்.  தட்ச யாகத்துக்குப் பிறகு சதிதேவி தன்னைத்தானே யாகத்தீயில் எரித்துக்கொள்ள, தேவியைத் தோளில் தாங்கி சிவன் ருத்ரதாண்டவம் ஆட, உலகம் பாதிக்கப்படும் என்று விஷ்ணுதேவியை 108 கூறுகளாக்கி எறிய, அதில் தேவியின் இதயப்பகுதி இங்கு இருப்பதாக ஐதீகம்.  எங்களிடம் அங்கு இருந்தவர்கள் தேவியின் நகம் உதிர்ந்த இடம் என்றார்கள்.  கோவில் முழுக்க ஈ மற்றும் தேனீக்கள் மொய்த்தன.  சுற்றி நடந்து வந்தோம்.  இளம் சிறுமியர் சில சிறுவர்கள் பிச்சை கேட்டுத் தொல்லை புரிந்தனர். கோவிலைச் சுற்றி ஏகப்பட்டசிவப்பு வண்ணக் கடைகள்.

நன்றி இணையம்.

லலிதா தேவி அசுரர்களை வதம் செய்ய இங்கு அவதரித்ததாகவும் சொல்வார்கள்.  நான் இங்கு எடுத்த சில படங்களை இப்போது காணவில்லை.  இணையத்திலிருந்து படம்.

அதன்பின்னர் சென்றது சக்கர தீர்த்தம்.  பழைய பல கோவில்களால் சூழப்பட்ட புனிதக்குளம் இங்கு உள்ளது.  இதில் குளிக்கவில்லை.  இரண்டு கைகளால் எடுத்து தலையில் தெளித்துக்கொண்டோம்.  அந்தக் குளத்தின் கீழே சுற்றும் அமைப்புஏதாவதுஉள்ளதா தெரியவில்லை தண்ணீர் சுற்றிக்கொண்டே இருந்தது. 


ப்ரம்மா அனுப்பிய சக்கரம் இங்கு சென்று பூமியைத்துளைக்க, இங்கிருந்து நிற்காமல் வந்த நீரைக் கட்டுப்படுத்த லலிதா தேவியை வேண்டினராம்.  அவர் அந்த சக்கரத்தை நிலைநிறுத்தி நீரைக் கட்டுக்குள் கொண்டு வந்தாராம்.  பிரதட்சணமாகச் சுற்றி வரும்போது சுற்றியிருக்கும் ஒவ்வொரு சந்நிதானத்திலிருந்தும் எங்களை அழைத்துக்கொண்டு இருந்தனர்.   வருமானம்!  நாங்கள் வெளிச்சுற்றாகவே சுற்றி விட்டு வண்டிக்கு வந்தோம்.  நான் எல்லா சன்னதிகளிலும் பத்து ரூபாய் போட்டேன்.  பத்திரிநாதர் அருளாய் பிரம்படியும் வாங்கிக்கொண்டேன்! வாங்கிக்கொண்டோம்! இங்கு தீர்த்தமாடிய பின்தான் லலிதா தேவியைத் தரிசிக்கச் செல்லவேண்டுமாம்.

அடுத்ததாய் வியாஸ்கட்.  சில படிகள் ஏறிச் சென்றால் ஒரு சமதளம்.  அங்கிருந்த ஆலமரம் பல்லாயிரம் ஆண்டுப் பழமையானது என்றனர்.  படம் எடுக்க விடவில்லை.  முறைத்தனர்.  மீறி எடுத்த சில படங்கள்...  மேலே இன்னும் சில படிகள் ஏறிச் சென்றால் இரண்டு சன்னதிகள்.  கீழே ஏறுவதற்கு முன்னரே வியாசர், கஸ்யபர், பிள்ளையார் உருவங்கள் இருந்தன.  இங்கு அமர்ந்துதான் வியாசர் தவம் செய்தார், எழுதினார் என்கிறார்கள்.  போட்டோ எடுக்கக் கூடாது என்று கண்டித்தார்கள்.  நம் பெருமையை நாம்தான் காப்பாற்றவேண்டும் என்றார்கள்.  மேலே 100 ரூபாய் கொடுத்து ரசீது வாங்கிக்கொண்டேன். (அபராதமாக அல்ல)

அருகே இருந்த நீரில்லாக குளத்தின் நடுவே சிவபார்வதி...


அங்கிருந்து சென்று இடம் நின்றகோல ஸ்வயம்பு ஆஞ்சநேயர் கோவில்.  தோளில் ராம லக்ஷ்மணர்களுடன் ப்ரம்மாண்டமாய்க் காட்சி அளிக்கிறார்.  தெற்குமுகமாய் பார்த்திருப்பதால் அவர் தட்சிணேஸ்வரர் என்றும் அறியப்படுகிறார்.  நான் இங்கும் போட்டோ எடுக்கவில்லை - மிரட்டலுக்கு பயந்து!  கீதா அக்கா கூட போட்டோ எடுத்திருக்கிறார்.


நாம் கொடுத்த கொண்டைக்கடலை சாப்பிடுகிறது...


கீழே சில குரங்குகளைக் கட்டி வைத்திருந்தார்கள்.  அவற்றுக்குக் கொடுக்க கொண்டைக்கடலை பாக்கெட் ஐந்து ரூபாய் பத்து ரூபாய் பாக்கெட் விற்றுக்கொண்டிருந்தனர்.  

ஹனுமான் கோவில் அருகே ஒரு இளம் வியாபாரி...


அதற்கு முந்தைய இடத்தில இருந்த   மூடிக்கிடந்த கட்டிடம்.  இங்குதான் பழைய ஆஞ்சநேயர் கோவில் இருந்ததோ?  புரியாத போர்ட் ஒன்று!
திரும்பும் வழியில் நிறைவாக தேவராஜ் மந்திர்.  சற்றே தெற்கு வாசனையுடன் இருக்கும் கோவில்.  67 வது திவ்யதேசம்.  8 ஸ்வயம் வியக்த க்ஷேத்ரங்களில் ஒன்று. பெருமாள் இங்கு ஆரண்ய வடிவில் இருப்பதால் ஸ்தலவிருக்ஷம் (தபோவனம்) மொத்தக் காடும்!  ஸ்ரீஹரி என்று அறியப்படும் தேவராஜா பெருமாள் கிழக்குமுகமாய் நின்று அருள் பாலிக்கிறார்.  திருமங்கை ஆழ்வார் இங்கு மங்களாசாசனம் செய்திருக்கிறார்.  

நன்றி இணையம்.

மீண்டும் புறப்பட்ட இடத்துக்கு வந்தோம்.  நைமிஷ் குமாரிடம் சொல்லி அங்கிருந்த எளிமையான தேநீர்க்கடையில் ஒரு டீ குடித்தோம்.
 வண்டிக்கு ஆளுக்கு 80 ரூபாய் பங்கு.  ப்ளஸ் டிப்ஸ் ஆளுக்கு 20 ரூபாய்.

உடனே கிளம்ப முடியாமல் எங்கள் குழுவில் இருந்த இருவர் தூரத்தில் இருந்த ஒரு கோவிலுக்குச் சென்றிருந்தார்கள்.  முடிந்தால் கிளம்பிப் பாருங்கள் என்று சவால் விட்டுக் கிளம்பிச் சென்றிருந்தார்கள்.  பாலாஜி சவாலை ஏற்காமல் காத்திருந்தார்.

தூரத்தில் தெரிந்த மஹால்.  அந்தக் காலத்தில் யாரோ பெரிய மனிதர்கள் எல்லாம் ஏதோ ஓய்வெடுக்கும் கோட்டையாம்.


உடனே கிளம்ப முடியவில்லை.  இரவு உணவுக்கு பூரி தயார் செய்து கொண்டிருந்தனர். அவர்கள்தான் சொன்னார்கள் அவை பூரி என்று.  ஒரு டீ போட்டுக் கொடுத்தார்கள். ஒரு வழியாய் மாலை ஆறரை மணிக்கு அங்கிருந்து கிளம்பி அயோத்யா நோக்கிச் சென்றோம்.  வழியில் ஒரு உணவகத்தில் வழக்கம்போல நிறுத்தி "பூரி"களைச் சாப்பிட்டுப் பயணத்தைத் தொடர்ந்தோம்.  இரவு பன்னிரெண்டு மணி சுமாருக்கு அடையவேண்டிய அயோத்தியை இரவு ஒன்றேகால் மணிக்கு அடைந்தோம்.


=================================================================================================== 

இவ்வளவும் படித்த பிறகு இன்னும் கதம்பம் வேறு வேண்டும் என்று கேட்கும் நண்பர்களுக்காக...

இதோ..   சென்னை அனல் இப்படித்தான் இப்பவும் இருக்கிறது!  இதை முன்னரே எழுதி சேமித்திருந்தேன்.  நேற்றைய நிலை குளுகுளு!  மழை நல்ல மழை!=========================================================================================

பல்லிக்கு ஒரு கவிதை!    வேறு யாரும் பல்லிக்கு ஒரு கவிதை எழுதியிருப்பார்களா என்று தெரியவில்லை!!!=================================================================================================

சென்ற வாரம் கூரியரில் திடீரென அபிராமி அந்தாதி புத்தகம் வந்து சேர்ந்தது.  அனுப்புநர் முகவரியாய் பதிப்பகம் பெயர் மட்டும்.  கவரைக் கிழித்து உள்ளே கடிதம் எதிர்பார்த்து ஏமாந்தேன்.  முதல் பக்கத்தில் "அன்புடன்" என்று யாரும் கையழுத்திட்டிருக்கிறார்களா என்றும் பார்த்து ஏமாந்தேன்.  அப்புறம் நடுவில் ஒரு பக்கத்திலிருந்து இந்த ப்ரிண்டட் பேப்பர் கீழே விழுந்தது.  அப்புறம்தான் புரிந்தது.  இப்படிக்கூட அனுப்புவார்களா?  ஆச்சர்யம்.

நன்றி வர்த்தமானன் பதிப்பகம்.

=======================================================================================================

176 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், நட்பேய்....மற்றும் அனைவருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
 2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

  பதிலளிநீக்கு
 3. கோமதி என்ற பெயர் மட்டும் முதலில் கண்ணில் பட ஆஹா நம்ம கோமதி அக்கா பயண்த்தில் எங்கு வந்தாங்கனு யோசிச்சா கோமதி ஆறு...

  அந்தக் கோயில் கோபுரம் நம்மூர் ஸ்டைலில் இருப்பது போல இருக்கிறதே!

  கீதா

  பதிலளிநீக்கு
 4. ஆன்மீகம் உலக லாபத்திற்கானது...

  அதிலே ஆழ்ந்த நெஞ்சங்களுக்கு
  அடுத்தவர் ம்கிழ்ச்சியே லட்சியமாகும்...

  அதைத்தான் அந்த பதிப்பகத்தார் செய்திருக்கின்றனர்...

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உண்மையிலேயே உயர்ந்த குணம்தான்! அனுப்பாமல் இருந்திருந்தால் எனக்கு தெரிந்திருக்கவா போகிறது!

   நீக்கு
  2. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம், துரை, கீதா அனைவருக்கும்.
   இன்னும் வரப்போகும் அனைவருக்கும்.

   வர்த்தமானன் பதிப்பகம் வாழ்க.மகிழ்ச்சியான செய்தி.

   படங்களும் விளக்கங்களும் அருமை. ஏன் இப்படிப் படுத்துகிறார்கள் இந்த
   ட்ராவல்சில். சாப்பாடு சரியில்லாமல் பலருக்கு வயிறு நொந்திருக்கும்.
   நைமிசாரண்யம் எத்தனை புனிதமான இடம்.

   என் சின்ன மாமியார் எண்பது வயதில் போய் வந்தார்.
   ஆரண்யம்னால் காட்டையே காணோமே..

   தண்ணீர் அருந்தும் மாடும்,
   விளையாட்டுக்கு நடுவில் ஓடி வந்த பையனும் இனிமை.
   கோமதி ஆறு பார்க்க அழகாக இருக்கிறது.

   மிக மிக நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
  3. வாங்க வல்லிம்மா...

   இனிய காலை வணக்கம்.

   நைமிசாரண்யக கட்டுரை நீங்கள் எல்லாம் எதிர்பார்த்த மாதிரி இல்லை என்று நினைக்கிறேன். குறைகளை நிறைய எழுதிட்டேனோ.... ஆனால் ஒன்று.. சாப்பாடு சரியில்லை என்று யாருக்கும் வயிறு கெடவில்லை!

   நன்றிம்மா.

   நீக்கு
 5. ஆண்களும் பெண்களுமாய் அல்ப சங்கைகளுக்கு வயல்வெளிகளில்...//

  வயலில் போகக் கூடாது இல்லையோ...ஆனால் பல கிராமங்களில் கழிவறைகளே இல்லாத போது என்ன செய்வார்கள்? வயலைத் தவிர்க்கலாம்...தோப்புகளைத் தவிர்க்கலாம்...

  ஸ்ரீராம் எங்கள் ஊரிலும் முன்பு அதாவது நான் இருந்த போது....அப்படித்தான் இருந்தது. நான் பலரிடமும் குறிப்பாகக் குழந்தைகளை விரட்டிவிடுவேன் வயலில் போகக் கூடாது என்று. அது போன்று வெளியிலும் போகக் கூடாது என்றும் வாய்க்காலில் கழுவிக் கொள்வதோ உச்சா அடிப்பதோ கூடாது என்றும் சொல்லுவேன். பானுக்காவும் இதை எனக்கு இதைச் சொன்னார். அவரிடம் பேசிய போது.

  ஆனால் எங்கள் ஊரில் அப்போது பல வீடுகளில் கழிவறையே கிடையாதே...அப்புறம் ரோட்டோரங்களில் போகத் தொடங்கினார்கள். அதுவும் எங்கள் மாமா கட்டிய வீட்டை ஓட்டி. இப்போது எப்படி இருக்கிறதோ தெரியவில்லை.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வயல் என்றால் அங்கு பயிர்கள் செழித்து வளர்ந்திருந்தன என்று நம் மனம் கற்பனை செய்துகொள்கிறது இல்லை?!! அப்படியெல்லாம் இல்லை!

   நீக்கு
  2. பயிர் செய்யும் வயலில் யாரும் போக மாட்டார்கள். ஆனால் சும்மாக் கிடக்கும் நிலத்தையும் நாம் வயல் என்று சொல்லிப் பழகிட்டோம்.

   நீக்கு
  3. யார் சொன்னார்கள்?.. இயற்கை உரத்திற்கு உரமுமாச்சு!..

   நீக்கு
  4. எனக்குத் தெரிந்து வயலை பூமித்தாயாகவே கருதுவார்கள். கலப்பை போடுமுன் பூஜை எல்லாம் உண்டு. ஆகவே வரப்பு தாண்டி வயலில் யாரும் அல்ப சங்கைக்குப் போக மாட்டார்கள்! இயற்கை உரமெல்லாம் எருக்குழியில் தான் கொண்டு கொட்டுவார்கள். அதிலிருந்து வயலுக்குப் போகும்போது உரமாக மாறி இருக்கும். கருவிலியில் மாமனார் வீட்டில் பார்த்திருக்கேன். செருப்புக் கூடப் போட்டுக் கொண்டு வயலில் இறங்க மாட்டார்கள்! இதை மதுரைப்பக்கம் எங்க ஊர் மேல்மங்கலம், சித்தி ஊர் சின்னமனூர் ஆகிய ஊர்களிலும் பார்த்திருக்கேன். அதுவே தோட்டம், தோப்பு எனில் செருப்போடு போவார்கள். அங்கே இருக்கும் குளியலறை, கழிவறை பயன்படுத்துவார்கள். குளிப்பார்கள். கட்டில் போட்டுப் படுப்பார்கள்! வயலில்! ம்ஹூம்! யாரும் அப்படி எல்லாம் நடந்து பார்த்ததே இல்லை!

   நீக்கு
 6. நைமிசாரண்யம் பற்றிய தகவல்கள் அருமை.. படங்கள் அழகு..

  வாழ்க நலம்...

  பதிலளிநீக்கு
 7. நீங்க ஃபோட்டோ பிடிப்பதைப் பார்த்து காளை பயந்துவிட்டதோ...

  தன்னை ஃபோட்டோ எடுத்து வெளியிட விரும்பாதவர் என்னை மட்டும் ஃபோட்டோ எடுக்கிறாரே என்று....ஹா ஹா ஹா விரைவாகச் செல்ல யத்தனிப்பது போல் (ஆஹா பூஸாருக்கு ஒரு பிட் கிடைச்சிருச்சோ!!??)

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. காளைக்கு தன் அழகை, கம்பீரத்தை விளம்பரப்படுத்துவது பிடிக்கவில்லை போல.... பூஸாரா? அவரை இந்தப் பக்கமே காணோம்!

   நீக்கு
 8. இப்பத்தான் அடுத்த காளை படத்தைப் பார்த்து கேப்ஷன் பார்ட்தேன்...//துஷ்டனைக் கண்டால் //அப்ஜெக்ஷன் யுவர் ஆனர்...இந்தக் கேப்ஷனுக்கு!!

  கீதா


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹிஹிஹி... அது அப்படிதானே நினைத்திருக்கும்!"நாமொரு மோது மோதினா தாங்குவானா இந்தப் பொடியன்....?" என்று கூட நினைத்திருக்கும்!

   நீக்கு
 9. மேச் த ஃபாலோயிங்க் டெஸ்ட் ஸ்ரீராம்!!!! ஹா ஹா ஹா ஹா...மூளைக்கு நல்ல வேலை...படத்தையும் அதற்கான விவரங்களையும் சரியாக மேச் செய்து வாசித்துக் கொண்டிருக்கிறேன்...

  வரேன் அப்புறம் இன்னும் கொஞ்சம் சமையல் வேலைகள்....கண்ணழகி அவளது அல்ப சங்கைகளுக்கு வெயிட்டிங்க்!! ஹா ஹா

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. படிக்கும்போதே அது நினைவுக்கு வரும் வகையில்தான் குறிப்புகள் கொடுத்திருப்பதாய் நினைத்துக் கொண்டிருக்கிறேன்!

   //கண்ணழகி அவளது அல்ப சங்கைகளுக்கு வெயிட்டிங்க்!! //

   ஹா..ஹா.. ஹா.. பாவம்... அதைக் கொண்டுபோய் விடுங்கமுதலில்...

   நீக்கு
 10. யார் சொன்னது.. பல்லிகள் தரையில் ஓடுவதில்லையென்று..?? இந்த வீட்டில் சைஸ் வாரியாக நமக்கு முன்னோ, பின்னோ ஓடி 'பீதி'யைக் கிளப்புகின்றன.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதே, அதே, பாரதி, இங்கே நம்ம வீட்டில் கிட்டத்தட்டக் கையைப் பிடிச்சுக்காத குறை தான்! கூடவே ஓடி வரும்! எங்கேயானும் மிதிச்சுடப் போறேனேனு பயந்துண்டே நடக்கணும்.

   நீக்கு
  2. தரையில் எப்போதாவது ஓடும். பெரும்பாலும் அதன் வாசம் சுவர்கள்தானே? அது சரி.. பயணக்கட்டுரை பிடிக்கவில்லையா?

   நீக்கு
  3. ஒவ்வொருவாரமும் காத்திருந்து பயணக்கட்டுரை படிக்கிறேன். இந்த வாரம் பல்லி சிறப்புக் கவிதை பெற்றதால் அது குறித்து குறிப்பிட்டேன்.

   நீக்கு
 11. வந்திருக்கும் நண்பர்களுக்கும், இனி வரப்போகும் நண்பர்களுக்கும் வராமல் ஒளிந்திருக்கும், அல்லது வந்துட்டுத் தலையைக் காட்டாமல் இருக்கும் "நட்பேய்" அவர்களுக்கும் நல்வரவு, வணக்கம், வாழ்த்துகள், பிரார்த்தனைகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கீதாக்கா, வணக்கமும், நல்வரவும். காசிப்பயணம் என்பதாலிங்கே பேய் தலைகாட்டாது. பயம்!

   நீக்கு
 12. வயலில் போக மாட்டார்கள். பக்கத்தில் ஒதுங்குமிடம் எங்காவது இருந்திருக்கும். அல்லது அது வயலாக இருந்திருக்காது. பொதுவாக வயலில் செருப்பு அணிந்து கொண்டோ, இம்மாதிரிக் கழிவுகளைக் கொண்டு சேர்ப்பதோ யாரும் செய்து பார்க்கவில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இருக்கலாம். பஸ்ஸில் தாண்டும்போது பார்த்த காட்சிகள்... அவர்கள் எங்கே அமர்கிறார்கள் என்று பார்க்க நேரமில்லை!!!!!!!!

   நீக்கு
 13. உங்களுக்கு வர்த்தமானன் பதிப்பகம் அனுப்பினாப்போல் சுமார் 40 வருடங்கள் முன்னர் லிஃப்கோ பதிப்பகம் எனக்கும் சில புத்தகங்களை அனுப்பி வைத்திருந்தது. அதில் அபிராமி அந்தாதி கி.வா.ஜ.வின் உரையுடன் கூடிய புத்தகமும் ஒன்று.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஒரு வேளை...

   இது ஒரு விளம்பர யுத்தியோ...

   நீக்கு
  2. யுக்தியோ... முக்தியோ...

   உறுத்தும் அளவுக்கு மனசாட்சி உறங்காமல் இருக்கின்றதே...

   நீக்கு
  3. நான் சொல்ல வந்தது அபிராமி அந்தாதி புத்தகம் வந்திருப்பதால் நன்மை தான் என்று சொல்ல நினைத்தேன். அப்போப் பார்த்து இரண்டாம் காஃபிக்கு விண்ணப்பம் வர எழுந்துட்டேன். :) சொல்ல விட்டுப் போச்சு!

   நீக்கு
  4. நன்றி.

   அபிராமி வாக்கால் நல்லது நடந்தாலும் சரி, இல்லை அக்காக்கள் ஆசீர்வாதங்களால் நல்லது நடந்தாலும் சரி... காத்திருக்கிறேன்.

   நீக்கு
  5. மதுரையின் ஆன்மீகச் சொற்பொழிவாளர் சொ.சொ.மீ. சுந்தரம் அபிராமி அந்தாதியின் எந்தப் பாடலை எந்த பலன் பெற பாராயணம் செய்யவேண்டுமென புத்தகம் போட்டிருக்கிறார். திருமணத் தடை நீங்க.. கடன் தொல்லையிலிருத்து விடுபட... பயம் நீங்க...குறிப்பிட்ட பாடலைப் பாராயணம் செய்யச் சொல்கிறார்.

   நீக்கு
 14. பூரிக்குத் தொட்டுக்க என்ன கொடுத்தாங்கனு சொல்லலையே! அநேகமாத் தக்காளித் தொக்கு? அவங்க எங்கே பூரி, கிழங்கெல்லாம் பண்ணி இருக்கப் போறாங்க! :( அயோத்தி அனுபவங்களுக்குக் காத்திருக்கேன். நைமிசாரணிய அனுபவங்கள் நல்லா இருக்கு. ஆங்காங்கே தங்கி இருக்கும் நேரங்களில் அடுப்பு மூட்டிச் சமைக்கிறாங்களா? நைமிசாரணியத்திலே இருந்து அயோத்தி வரை பேருந்துப் பயணமா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தக்காளித்தொக்குதான் என்று ஞாபகம்.

   //நைமிசாரணிய அனுபவங்கள் நல்லா இருக்கு.//

   நன்றி... சென்ற வாரம் எப்படி எழுதறார்னு பார்க்கிறேன் என்று சொல்லி இருந்தீர்கள். சற்றே நகம் கடித்துக் காத்திருந்தேன்.

   //ஆங்காங்கே தங்கி இருக்கும் நேரங்களில் அடுப்பு மூட்டிச் சமைக்கிறாங்களா? //

   ஆமாம். இங்கும் அங்கே படத்தில் காட்டி இருக்கும் கொட்டகையில்தான் சமையல். நாங்கள் குளிக்கப் போகும் சமயம் சாப்பாடு தயார் செய்தார்கள். கோவில்கள் சென்ற நேரம் இரவு உணவு தயார் செய்து கொண்டார்கள்!

   //நைமிசாரணியத்திலே இருந்து அயோத்தி வரை பேருந்துப் பயணமா?//

   அலஹாபாத்திலிருந்து கயா, காசி வரை அதே பேருந்துதான். அதே ஸீட்தான்! நடுநடுவே எங்களைத் தனியே கழற்றிவிட்டு வண்டியில் எங்கள் செல்வதில் அனுப்புவார்கள்.

   நீக்கு
  2. /தக்காளித்தொக்குதான்// - தக்காளி கிலோ 1 ரூபாய் இருந்தபோது, 500 கிலோ வாங்கி தக்காளி தொக்கு பண்ணிவைத்திருப்பார்களோ? எதுக்கும் தொட்டுக்க தக்காளித் தொக்குன்னு சொல்றீங்க. ஹா ஹா.

   நாங்க போகும் டூர்ல, 1 வாரத்துக்குள்ள பயணம்னா, முதல்ல பணம் கட்டறவங்க வரிசைப்படி சீட். அதற்கு மேல்னா, ஒவ்வொரு நாளும் ரொடேஷன்ல.

   நீக்கு
  3. இங்குதான் எந்த முறையுமில்லையே....!!!!!

   ஹா..ஹா.. ஹா...

   நீக்கு
  4. காலை மேலோட்டமாகப் படித்ததில் நைமிசாரணியம் பரவாயில்லை ரகம்னு நினைச்சேன். ஆனால் நான்கே மணி நேரத்தில் எதைப் பார்த்திருப்பீர்கள்? :( என்னவோ போங்க! சும்மா ஊரைக் காட்டிட்டுச் சுத்திப் பார்த்தாச்சுனு பெயர் பண்ணச் சொல்லிட்டாங்க! அயோத்தி அனுபவம் எப்படியோ?

   நீக்கு
  5. எல்லா இடமும் அப்படிதான் கீதா அக்கா... அதை விடுங்கள்.. நான் எழுதி இருப்பது போர் அடிக்காமல் சுவாரஸ்யமாய் இருக்கிறதா? அதுதான் கேள்வி!

   நீக்கு
 15. அனைவருக்கும் வணக்கம் , வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 16. நைமிசாரண்யத்தைப்பற்றி என் அப்பா, வேறுசில மாமாக்களுடன் ஒரு சமயத்தில் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டிருக்கிறேன். இந்தப் பெயரே கொஞ்சம் விசித்திரமாக, கவர்ச்சியாகக் காதில் விழுந்தது அப்போது! அதனைப்பற்றி, கோமுகி ஆறைப்பற்றி உங்கள் எழுத்திலிருந்து அறிந்துகொண்டேன்.

  வழக்கம்போல் நமது நாட்டினர் புனித இடங்களை சரியாக வைத்துக்கொள்வதில்லை. சுற்றி இருக்கும் சில மரங்களிலும் சோகமே ததும்புகிறது. மாடு, உங்களைப் பார்த்தால் தூர விலகுகிறது. வாத்து விரட்டுகிறது! நாய்கள், குரங்குகளிடம் மட்டும் கொஞ்சம் அமைதி! சுண்டலே காரணமா? நாராயணா..

  இனி தமிழ்நாட்டில் புத்தகம் வாங்குவதெனில், வர்த்தமானனிடம் வாங்குவதாக எண்ணம். நல்லவர்களோடு பழகுவதே நல்லது..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க ஏகாந்தன் ஸார்..

   அவர்கள் வைத்துக்கொண்டிருக்கும் அளவு கூட தமிழ்நாட்டில் வைத்துக்கொள்வதில்லை என்று தோன்றுகிறது .

   நீக்கு
 17. பயண விவரங்கள், படங்கள், வரலாறுகள் எல்லாம் அருமை.

  //சற்றே தெற்கு வாசனையுடன் இருக்கும் கோவில்//

  நம் ஊர் கோவில் கோபுரம் இருக்கும் என்று பார்த்து ஏமாந்தேன்.

  சக்கரத் தீர்த்தம் படம் அழகு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. கோபுரம் இல்லை. உள்ளே கொஞ்சம் தெற்கு வாசனை.

   சக்கரதீர்த்தம் படம்தான் அழகு!

   நீக்கு
 18. சென்னையில் நல்ல மழை பெய்து இருப்பது மகிழ்ச்சி.
  ஏஸி பஸ்ஸில் ஏறி போக போகிறதோ மேய்ச்சல் இடம் நோக்கி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. மாடு ஏஸி பஸ்ஸை நாடும் காலம் வந்ததே என்று நேற்று ஓரளவுக்கு நல்ல மழை பெய்தது!

   நீக்கு
 19. பல்லி கவிதை சொல்லி இருப்பது போல் இல்லை ஸ்ரீராம்.
  பல்லி தரையில் நடக்கும், அடுத்த அறைக்கு கடந்து போகும்.
  மாயவரத்தில் பல்லிகள் சத்தம் கொடுத்துக் கொண்டே இருக்கும். இங்கு சத்தமே இல்லை அமைதி காக்கிறது.
  மெளன விரதம் இருக்கிறது போல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பல்லி தரையில் நடக்காது என்று சொல்லவில்லையே கோமதி அக்கா... அதிகம் நடப்பதில்லை. ​மிகச்சில சமயங்களில் இரவுகளில் எங்கள் மீது விழுந்தும் இருக்கிறது.அது வாடிக்கையல்ல என்று சொல்ல வந்திருக்கிறேன். அதன் வாசம் சுவர்களில்.எப்போதும் தரையிலோ, தெருவிலோ அலைவது இல்லை இல்லையா? எங்கள் வீட்டு பள்ளிகளும் அமிக்கைதியாக நாங்கள் பேசுவதை, பாடுவதை, டீவி சத்தத்தை, நாங்கள் போடும் பாடல்களைக் கேட்டுக் கொண்டிருக்கும். சத்தம் வருவதில்லை!

   நீக்கு
  2. நல்ல பல்லி உங்களை தொந்திரவு செய்யாமல் (னாம் தெரியாமல் மிதித்து விட வாய்ப்பு இருக்கே) இருக்கிறது.
   நம்மை கவினித்துக் கொண்டு அமைதி காப்பது நல்லது தான்.

   நீக்கு
  3. // எங்கள் வீட்டு பள்ளிகளும் அமிக்கைதியாக //

   திருத்தம் :

   எங்கள் வீட்டு பல்லிகளும் அமைதியாக ....

   !!!

   நீக்கு
 20. படித்தேன். நைமிசாரண்யம்... பயணம் திருப்தி இல்லை. அவங்க ஒண்ணுமே காட்டலை, கூட்டிச் செல்லலை என்பது ஆச்சர்யம். நிறைய இடங்களை தவறவிட்டுவிட்டீர்கள் என்பது ஒருபுறம் இருக்க, அப்போ டூரிஸ்ட் ஆட்களின் வேலை என்ன? அந்த அந்த ஊருக்குக் கூட்டிக்கிட்டு போய் சாதாரண சமையல் செய்வது மட்டுமா?

  நானும் மனைவியும் வேறு இடத்தைப் பார்க்கச் சென்றதால் ஒரு முக்கியமான இடத்துக்கு குழுவுடன் பயணம் செய்யவில்லை. மற்றபடி எல்லா கோவில்கள், இடங்களையும் தரிசித்தோம்.

  அஹோபிலம் மடம், அங்குள்ள பிருந்தாவனம் தரிசித்த மாதிரி தெரியலை. நீங்கள் படங்கள் மிஸ் பண்ணிட்டீங்கன்னு சொன்னா நான் எடுத்த படங்கள் அனுப்பியிருப்பேனே. இடுகை நிறைவாய் இருந்திருக்குமே.

  பாலாஜி கோவிலுக்குப் போனதை எழுதலையே. ஆனால் நீங்கள் போட்டிருந்த படம், கோப்ப் படும் அன்னம் பாலாஜி மந்திரைச் சேர்ந்தது அல்லவா? அது தெலுங்கு தேசத்தவர்கள் கட்டிப் பராமரிக்கும் கோவில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பயணம் திருப்தி இல்லை என்று முழுவதும் சொல்லிவிட முடியாது நெல்லை.. நான் பார்க்காத இடங்களையும் பார்த்திருக்கிறேன். சில இடங்களைத்தான் தவற விட்டிருக்கிறேன்.

   //அஹோபிலம் மடம், அங்குள்ள பிருந்தாவனம் தரிசித்த மாதிரி தெரியலை. நீங்கள் படங்கள் மிஸ் பண்ணிட்டீங்கன்னு சொன்னா நான் எடுத்த படங்கள் அனுப்பியிருப்பேனே. இடுகை நிறைவாய் இருந்திருக்குமே.//

   இருக்கலாம். ஆனால் நான் சென்ற இடங்களைக் குறிப்பிடுவதுதானே நியாயம்?

   //அன்னம் பாலாஜி மந்திரைச் சேர்ந்தது அல்லவா?//

   எங்கள் பாலாஜி அதைப்பற்றி ஒன்றும் சொல்லவில்லை. வேலை நடந்து கொண்டிருக்கும் கோவிலுக்குள் செல்ல முடியவில்லை.

   நீக்கு
 21. வர்த்தமானன் பதிப்பகம் செயல் நல்ல செயல்.
  அபிராமி தேடி வந்து விட்டாள். இனி நல்ல நேரம் தான் ஸ்ரீராமுக்கு.

  பதிலளிநீக்கு
 22. வணக்கம் சகோதரரே

  எங்களுக்காக மேலும் சில தகவல்கள் படங்கள், பல்லி கவிதை என இணைத்ததற்கு முதலில் நன்றிகள். நைமிசாரண்ய படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கின்றன. சென்று பார்த்த இடங்கள், கோவில்கள் என விரிவாக படிக்க ஸ்வாரஸ்யமாக இருக்கிறது. அந்த வித்தியாசமான வண்டிக்கு முன்னுரிமையாக இடம் பிடிக்க மக்கள் காத்திருக்கிறார்கள் போலும். கோமுகி ஆறும் கண்ணை கவர்கிறது. இன்னமும் படித்து விட்டு வருகிறேன்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா...

   படிச்சு விட்டு கருத்துச்சொல்லுங்க...

   நீக்கு
 23. //லக்னோ தாண்டும் முன்பாக எங்களுடன் வந்து கொண்டிருந்த அமைப்பாளர் ராமுவின் தாயார் தவறி விட்டதாக தகவல் வர, அவர் எங்களிடம் விஷயத்தைச் சொல்லாமல் விடைபெற்றார். வேறொருவர் இரண்டு நாட்களுக்குள் எங்களுடன் இணைவார் என்றார்கள்.//

  ராமு அவர்களின் மனநிலை மிகவும் கஷ்டமானது, பொறுப்பிலிருந்து பிரிந்து போவது ஒரு பக்கம், தாயை இழந்த சோகம் ஒரு பக்கம் .
  எப்படி எல்லாம் இடையூறுகள் வருகிறது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கிருந்து அவர் விமான நிலையம் போக நீண்ட தூரம் செல்ல வேண்டும் என்று சொன்னார்கள். அப்புறம் அவர் நேரத்துக்கு ஊர் சென்று விட்டாரென்று பாலாஜி மூலம் தெரிந்து கொண்டோம்.

   நீக்கு
 24. படங்களோடு தகுந்த விளக்கம் நன்று.
  வாத்துக்கு பயந்து ஓடலாமா ஜி ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கில்லர்ஜி..

   என்ன இப்படிக்கேட்டுட்டீங்க...

   நீக்கு
  2. பல்லியா.சாமி. டைனோசார் சைசில் இருபது ஆண்டுகளுக்கு முன் எங்கள்
   வீட்டில் இருந்தது.
   நல்லா நடந்து போகும்.
   நம்மைப் பார்த்து உருட்டி விழிக்கும்.
   சத்தம் போடும்.எங்கள் பெண் பல்லி இருக்கும் அறைக்குள்ளேயே போகமாட்டாள் அவ்வளவு பயம்..
   most ugly creatures.
   உங்கள் கவிதை ஜோர்.

   நீக்கு
  3. நிறைய பேர்களுக்கு பல்லி பயம்தான் அம்மா. பயம் என்பதைவிட அருவெறுப்பு!

   கவிதை பாராட்டுக்கு நன்றி அம்மா.

   நீக்கு
 25. //சங்கல்பம் செய்து வைக்கிறேன்// - ஆற்றுக் குளியல்களுக்கு முன்னால் சங்கல்பம் செய்துகொள்வது என்பது ஒரு பழக்கம் (நான் இதனைக் கடைபிடித்ததில்லை. புஷ்கரத்துக்குச் சென்றபோதுதான் இதனைத் தெரிந்துகொண்டேன். இதுதான் என்று தெரியாமலேயே தினமும் சங்கல்பம் செய்வதையும் அறிந்துகொண்டேன்)

  நைமிஷ் குமார் - இந்தப் பையனைத்தானா நானும் சந்தித்தேன்? படங்களைப் பார்க்கணும்.

  //அவர்கள்தான் சொன்னார்கள் பூரி என்று// - ஹா ஹா..அப்போ தி.பதிவுக்கு பூரி ரெசிப்பி அனுப்பவேண்டியதுதான்.

  வர்த்தமானன் பதிப்பகம் - முன்வெளியீட்டுத் திட்டத்துல நிறைய புத்தகங்களை வெளியிடறாங்க. நல்ல புத்தகங்களை வெளியிடுபவர்களை ஆதரிப்பதில் தவறில்லை. 'அபிராமி அந்தாதி' தேங்கியிருக்கும். மார்க்கெட்டிங் செய்திருப்பார்கள். தவறில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //நைமிஷ் குமார் - இந்தப் பையனைத்தானா நானும் சந்தித்தேன்? படங்களைப் பார்க்கணும்.//

   அப்படியா? நைமிஷ்குமார் வேண்டுமென்றே தன் பெயரை அப்படிச் சொன்னாரென்று எனக்குத் தோன்றியது. அவர் பெயர் வேறாக இருக்கும் என்று தோன்றியது.

   பூரி எப்படி இருக்கும் என்று எனக்குத்தெரியும். அவர்களுக்குத்தான் தெரியவில்லை!

   நீக்கு
  2. //அவர்களுக்குத்தான் தெரியவில்லை!// - ஆமாம். அவர்களையும் எபி வாசகர்களாக ஆக்க நினைப்பது டப்பா?

   நான் பஹ்ரைனில் இருந்தபோது அங்கிருக்கும் ஹோட்டலில் ஒரு ரெட்டியார் கிச்சனில் வேலைபார்த்துக்கொண்டிருந்தார் (50+ இருக்கும். அவர் ஹோட்டல் இண்டஸ்டிரியில் பெரிய ஆள்). அவர் சொன்னார், தான் பண்ணும் பூரியின் ரசிகர்கள் இங்கு உண்டு. சில நாள் நான் பூரி செய்யாமல் மற்றவர்கள் செய்தால், அதனைக் கண்டுபிடித்துக் கேட்பார்கள் என்றார். அந்த ஹோட்டலில் பூரி நல்லா இருக்கும். அதுவே ஒரு கலை என்று நினைக்கிறேன்.

   நீக்கு
 26. ஆஹா ! பல படங்களில் பெரிய பெரிய மரங்கள் உள்ளனவே! புளிய மரங்கள் நிறைய இருக்கின்றனவா? இருந்தால் இப்பவே அங்கே போய் தலைகீழாகத் தொங்குவேனே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பேயே..பேயே..
   அப்பாவிப் பேயே..

   உன்னத் தான் இந்தப் பக்கம் வரக்கூடாதுன்னு சொல்லி இருக்காங்களே!?....

   கால் பத்திரம்!...

   நீக்கு
  2. ஹ. ஹ. ஹ. ஹ.. நல்ல ஜோக்.! ஒரு வேளை"முக்கால"மும் துறந்த பிறவியாக ஆக ஆசைப்பட்டு நடுவில் இப்படி இந்தப் பிறவிப்பயன் காரணமாக சுற்றி வருகிறாரோ என்னவோ? எப்படியோ காசிக்குப் போகவும் இந்த பேயாரும் ஆசைப்படுகிறார். நைமிசாரண்யத்தில் சென்று அவருக்கு புண்ணியங்கள் கிடைத்தால் சரிதான்.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன். !

   நீக்கு
  3. எங்கேயோ "நட்பேயை"ப்பார்த்தோமேனு நினைச்சேன். தலைகீழாத் தொங்கப் போயாச்சா? பேயாரே! இப்போப் பகல்லேயே எதுக்கு?
   ஜிலு ஜிலூசி, ஜில்சி பல்சி, கல்சி! கில்மா, பல்மா, ஜொல்மா!

   நீக்கு
  4. // ஜிலு ஜிலூசி, ஜில்சி பல்சி, கல்சி! கில்மா, பல்மா, ஜொல்மா// அப்படி என்றால் என்ன? ஜெலுசில் மாத்திரையை பல்லால கடிச்சி பலமா மென்று தின்ன வேண்டும் பேய் என்று அர்த்தமா! பேய் ஓடியே போயிடுச்சு போலிருக்கு! சத்தத்தையே காணோம்!

   நீக்கு
  5. குட்டு, ஜிட்டு, ஜில்மா, ஜில்லாளி, ப்ளாப்ளா, நட்பேய், அம்பிளீசி! பம்ப்ளீசி!

   நீக்கு
 27. ஜிலேபிலாம் நான் பார்க்கலையே..... அதேபோல் நீங்க வேணி மாதவன் கோவில் (ப்ரயாக்ராஜ்) போற வழில சப்பாத்தி மாதிரி மைதாவை இட்டு மடித்து பொரித்து அதை ஜீனிப்பாகில் வைத்திருப்பாங்களே...அந்த ஸ்வீட்டையும் ஃபேமஸ் லஸ்ஸியையும் பார்க்கலை..ஹாஹா

  இந்த முறை பார்த்துச் சுவைத்துவிடுவேன் என நினைக்கிறேன் (மனைவி அனுமதித்தால்)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்புறம் பாஸுடன் போகும்போது பார்க்க மிச்சம் வைத்துக் கொள்ள வேண்டாமா? அதுதான்!

   நீக்கு
  2. சர்க்கரைப்பாகில் மிதந்து கொண்டிருந்த இனிப்பு வகைன்னா நெல்லைத் தமிழர் மால்புவாவைச் சொல்றாரோ? அது மைதாமாவில் பண்ணியது அல்ல. மாவாவில் கொஞ்சம் போல் மைதா (சிலர் சேர்ப்பார்கள்) சேர்த்து நெய்யில் பொரித்து சர்க்கரைப் பாகில் ஊற வைப்பது. இதை இங்கே உத்திரப் பிரதேசத்தில் சாப்பிடுவதை விட ராஜஸ்தான் புஷ்கர் நகரில் சாப்பிட்டால் ஆஹா, ஓஹோ! தான்!

   நீக்கு
  3. இல்லை கீசா மேடம்... பெயர் சட்டுனு ஞாபகம் வரலை. சப்பாத்தி மாதிரி வட்டமா பண்ணி, பாதியா மடித்து திரும்ப காலா மடித்து அதில் கொஞ்சம் சிவப்பு கலர்ல சர்க்கரைப் பாகு விட்டதுபோல இருக்கும்.

   மால்புவாலாம் எனக்குப் பிடிப்பதில்லை. அதுக்கு பால் போளி ஆஹா ஓஹோ தான் (உடனே யாரும் பண்ணிடாதீங்க. அடுத்து எ.பிக்கு செய்து அனுப்பப்போறேன்)

   நீக்கு
  4. என் மனைவி, அதெல்லாம் வாங்கக்கூடாது, என்ன போட்டிருக்கானோ என்று சொல்லிட்டா. ஆனால் அங்க நாங்க ருசித்த லஸ்ஸி (மண் குடுவையில் கொடுப்பது) இன்னும் நினைத்தால் ஆசையைத் தூண்டுது (இறைவன், இதெல்லாம் சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பதுபோல் வைத்திருக்க மாட்டானோ? ம்ஹும்)

   நீக்கு
  5. வடமாநிலங்களில் பெரும்பாலான மிட்டாய்க்கடைகளில் கண்டிப்பாக சைவம் மட்டுமே இருக்கும். பயமில்லாமல் வாங்கலாம். போட்டால் பால் சம்பந்தப்பட்ட பொருட்கள் தான் சேர்ப்பார்கள்.

   நீக்கு
 28. படங்களும் தகவல்களும் அறியாத ஒரு கோவில் பற்றி அறியத்தந்தது அண்ணா...
  இந்தக் காலத்திலும் நேர்மையாய் புத்தகம் அனுப்பிய வர்த்தமானன் பதிப்பகத்தார் போற்றுதலுக்குரியவர்கள்.

  பதிலளிநீக்கு
 29. பயண விவரங்கள் அருமை... இத்தனையும் ஞாபகம் வைத்து பகிர்ந்து கொண்டதற்கு பாராட்டுகள்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டைரியில் குறித்து வைத்திருக்கிறேன்- சிறு குறிப்புகளாக... மேலும் படங்கள் பார்த்தாலும் நினைவுக்கு வருமே..

   நன்றி DD.

   நீக்கு
 30. வர்த்தமானன் பதிப்பகம் ..நல்ல செயல்

  நைமிசாரண்யம் பற்றிய தகவல்கள் அருமை..துளசி தளத்தில் படித்து ரசித்த இடத்தில் இதுவும் ஒன்று ...

  மாடு பயப்படுது ..வாத்து விரட்டுது என்னே முரண் ...

  சின்ன சின்ன தகவல்களையும் சுவாரஸ்யமா சொல்றீங்க ..வாழ்த்துக்கள் ..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //மாடு பயப்படுது ..வாத்து விரட்டுது என்னே முரண் ...
   //

   ஹா...ஹா...ஹா...

   அது பயமில்லை. கருணை!

   நன்றி அனுபிரேம்.

   நீக்கு
 31. உங்களுக்கே நிறைகளாக எழுத வில்லையே என்னும் ஆதங்கம் நானு அதைக் கூட்ட விரும்பவில்லை சென்னையில் என் பேரனுக்கு சோறு ஊட்ட இந்த பல்லிகளே உதவும் பல்லிகள் பெரிய கரப்பான் பூச்சிகளைப் பிடித்து உண்ணும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நிறைகள் எவ்வளவு இருந்தாலும் மனம் திருப்தி படுவதில்லை ஜி எம் பி ஸார். ஒரு குறை இருந்தாலும் மனம் அதிலேயே தடுக்கித்தடுக்கி விழும்! வெள்ளைத்தாளில் கரும்புள்ளி போல!

   அது போலதான் நான் குறைகளை அடுக்கி விட்டேன் போல!

   நன்றி ஜி எம் பி ஸார்.

   நீக்கு
  2. // வெள்ளைத்தாளில் கரும்புள்ளி போல! //

   எனது பழைய இரு பதிவுகள் ஞாபகம் வந்தன... (அதில் ஒன்றில் உங்களின் கருத்துரையும்...)

   நீக்கு
 32. நைமிசாரண்யம் தரிசித்தோம். கோமதி நதி கண்டுகொண்டோம்.

  பதிலளிநீக்கு
 33. நட்சத்திர வாக்கியங்களுக்கிடையே புராண கதைகளை விவரித்த பாங்கு ஜோர்!

  படங்களையும் எழுத்துக்களையும் பின்னிப் பின்னி கட்டுரைகள் எழுதுவதில் ஒரு புது மாதிரியைப் படைத்திருக்கும் திறமைக்கு வாழ்த்துக்கள்..

  நைமிசாரண்யம்.... பெயரே அழகாயில்லை?..

  வார்த்தைகளை வைத்துப் பின்னத் தெரிந்தவர்களை எனக்கு விசேஷமாக பிடிக்கும். அந்தப் பல்லிக் கவிதை ஒரு உதாரணம்:

  பிடிப்பதுமில்லை; பிடிப்பதேயில்லை!
  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ​நன்றி ஜீவி ஸார்.

   படங்கள் அதிகமாக இருந்ததால் வேறு வழி தெரியவில்லை. படங்களையும் பகிரவேண்டும். சென்ற இடங்கள் பற்றி எழுதவும் வேண்டும். அதுதான்!

   பல்லிக் கவிதையை ரசித்ததற்கு நன்றி.

   நீக்கு
 34. மத்தியானம் இரண்டு மணிக்கு மேல் நைமிசாரணியத்தை அடைந்து ஆறரைக்குள் அயோத்தி கிளம்பியாச்சு???? அப்போ நைமிசாரணியத்தில் என்னதான் பார்த்தீங்க! ஒண்ணுமே புரியலை! :( நாங்க காலை ஆறு மணிக்கே லக்னோவில் இருந்து கிளம்பிச் சென்றோம். வரும்போது மாலை ஏழு மணி ஆகிவிட்டது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுதான் சொல்லியிருக்கிறேனே கீதா அக்கா... ஓடி ஓடி இந்த இடங்கள்தான் எங்கள் சொந்த முயற்சியில் பார்த்தோம்!

   நீக்கு
  2. சித்ரகூடத்தில் 1008 படி உள்ள அனுமன் கோயிலுக்கு எங்களை அழைத்துப் போக யாரும் தயாராக இல்லை. எல்லோரும் நீங்க ஏறாதீங்கனு சொல்லிட்டாங்க.எங்களுக்கும் இங்கே உ.பி. கோயில் அனுபவத்திலிருந்து கொஞ்சம் யோசனை தான்! ஆனால் அதுவே இன்னமும் உறுத்தலாக இருக்கு! :( நீங்க இத்தனை இடங்களை விட்டுட்டீங்க! என்னவோ போங்க! இந்த ட்ராவல்ஸ்காரங்களோடு போகாதது எவ்வளவு நல்லதுனு இப்போத் தான் புரியுது!

   நீக்கு
  3. இதை வேற விட்டுட்டோமா? சரிதான்!

   நீக்கு
  4. அமைதி! அமைதி! நல்லாப் படிங்க! நான் சொன்னது சித்ரகூடத்தில்! நீங்க அங்கே போகலை, போகலை, போகலை! ஆகவே ஆறுதல் அடைக! நான் என்னோட மனசிலே வந்ததை எழுதிட்டேன். நீங்க நைமிசாரணியத்திலேனு நினைச்சுட்டீங்க! :)))))

   நீக்கு
  5. ஓ... நல்லவேளை... நான் அதற்குள் அமைப்பாளர்கள் மேல் பேயை ஏவிவிடலாமான்னு பார்த்தேன்,

   நீக்கு
  6. ஹாஹாஹா, அவங்க இதுக்கெல்லாம் பயப்பட மாட்டாங்க! இந்தத் தொழிலில் எத்தனை வருஷம் பழகி இருக்காங்க! அவங்களுக்குத் தெரியாததா? எல்லோரும் வாசாலகமாகப் பேசுவார்கள்! தேன் சொட்டும்!

   நீக்கு
  7. அதுவும் உண்மைதான்.ஆனால் குடும்பத்தை விட்டு இதே தொழிலாய் இங்கேயே சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்!

   நீக்கு
  8. //இந்த ட்ராவல்ஸ்காரங்களோடு போகாதது எவ்வளவு நல்லதுனு // - கீசா மேடம்... டிராவல்ஸ்காரங்களோட (நல்ல) போனால், எல்லா இடங்களுக்கும் ஓரளவு கூட்டிக்கிட்டுப் போயிடுவாங்க. அவங்க கவர் பண்ணாத இடங்களும் இருக்கும். உதாரணமா நான் சோழ நாட்டு திருப்பதிகள்னு ஆகஸ்டுல போகப்போறேன். கும்பகோணத்துல திவ்யதேசங்கள் கவர் பண்ணுவாங்க. கும்பேஸ்வரர், திருவிடைமருதூர் என்று பல சிவ ஸ்தலங்களை கவர் பண்ண மாட்டாங்க. கோவிந்தபுரம் கூட்டிக்கிட்டுப் போக மாட்டாங்க. அதுக்கெல்லாம் போகணும்னா, நாமேதான் தனியா பயணம் போகணும். யாத்திரைக்குக் கூட்டிக்கிட்டுப் போறவங்க முக்கியமான எதையும் விட்டுட மாட்டாங்க.

   சித்தகூட்ல 1008 படியா? ஐயோ..எப்படி ஏறப்போறேனோ இல்லை அவங்க கூட்டிக்கிட்டுப் போகலயோ தெரியலையே.

   நீக்கு
  9. அந்த மலையில் தான் துளசிதாசர் ராம்சரித்ர மானஸ் எழுதினாராம்! எங்களுக்குப் போக ஆசைதான்! ஆனால் வலுக்கட்டாயமாகத் திருப்பி விட்டார்கள்! நம்ம வேளுக்குடி அழைத்துச் சென்ற குழுவில் எல்லோரும் போனப்போ எடுத்த வீடியோவைப் பார்த்ததில் இருந்து ஆசை அங்கே போக!நடக்கவில்லை!

   நீக்கு
 35. அதோடு இல்லாமல் குளிப்பதற்கு சங்கல்பம் செய்துக்கறது என்னமோ கொஞ்சமானும் பரவாயில்லை. ஆனால் முன்னோர்களுக்கு முக்தி கொடுக்க இரண்டு மணிக்கப்புறமெல்லாம் போகவே கூடாது! பொதுவாக ச்ராத்தம் மாத்யானிஹ ச்ராத்தம் எனப் பதினோரு மணிக்கு மேல் ஆரம்பித்து இரண்டு மணிக்குள் முடிக்கணும்னு சொல்லுவாங்க. அமாவாசை/மாதப்பிறப்பு தர்ப்பணங்கள் கூட மாத்யானிஹ காலத்தில் தான் செய்யணும்னு உண்டு. இப்போல்லாம் காலம்பர சூரிய உதயத்திற்குள்ளாக எல்லாத்தையும் முடிச்சுக்கறாங்க. வேறே வழி இல்லை. செய்யறாங்களேனு சந்தோஷப்பட்டுக்கணும்! ஆனால் இரண்டு மணிக்கு மேல் பித்ரு காரியம் செய்வது உகந்தது அல்ல! செய்யக் கூடாது! அங்கே வற்புறுத்துவாங்க தான்! ஆனால் நாங்க சொல்லிடுவோம், இந்த நேரம் நாங்க செய்ய மாட்டோம்னு! எங்க பழக்கம் வேறே! அப்படினு சொல்லிடுவோம். காலை வேளையில் போனதால் எங்களுக்கு இதெல்லாம் செய்ய சௌகரியமாக இருந்தது. கூட சுற்றுலா ஒருங்கிணைப்பாளர் வரணும். அவர் இம்மாதிரியான காரியங்களுக்கு முன்கூட்டியே ஆட்கள் ஏற்பாடு செய்து குறைந்தது 5 பேர் ஏற்பாடு செய்து குழுக்குழுவாகப் பிரித்துக் காரியம் செய்துவிட்டு வர ஏற்பாடு செய்து கொடுக்கணும்! இவங்க கூட்டிப் போறாங்கனு பேர்! ஆனால் எல்லாம் நீங்களே உங்க செலவில் பார்த்துக்கொண்டிருக்கீங்க! பித்ருகாரியத்திற்கான தக்ஷிணைச் செலவைச் சொல்லவில்லை. அது நம்மைச் சேர்ந்தது. ஆனால் கூட்டிப் போகும் செலவெல்லாம் அவங்களைச் சேர்ந்தது இல்லையோ! எல்லாம் கணக்குப் பண்ணி முன் கூட்டியே சொல்லணும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அங்கே பெரிசாய் யாரும் பித்ரு காரியம் செய்யவில்லை. நதியில் இறங்கும் முன் சங்கல்பம். மேலும் நம் வழக்கங்கள் யாவற்றையும் அவர்கள் மறுக்கிறார்கள். அங்கே வழக்கமே தனி, இங்கு உங்கள் வழக்கம் வராது என்கிறார்கள்!!!​

   நீக்கு
  2. வட இந்தியப் பண்டிட்கள் இப்படித் தான்! அதனாலேயே நாங்கள் காசியிலேயே வருடக்கணக்காக, சுமார் நூறு வருடங்களுக்கும் மேல் தங்கிக் குடித்தனம் செய்பவர்கள் மூலம் போனோம். அவர்களே நமக்கு வேண்டிய புரோகிதரை கோத்திரம், வேதம் கேட்டுக் கொண்டு ஏற்பாடு செய்து கொடுப்பார்கள். நாங்கள் சாமவேதிகள் என்பதால் வயதான பாலக்காட்டுப் புரோகிதர் ஒருத்தரும் கர்நாடகாப் புரோகிதர் ஒருத்தரும் மாறி மாறி வந்து செய்து வைத்தனர். இவர்களிடம் எல்லாவிதமான வேதங்களுக்கும் எல்லாவிதமான பழக்க வழக்கங்களுக்கும் ஏற்ப ஆட்கள் இருக்கின்றனர். சொந்தப் படகுகள். ஸ்டீமர் உள்பட! பிரயாகை போக டாட்டா சுமோவில் (ஏசி) ஏற்பாடு செய்து அனுப்பினார். கயாவுக்கு நான் ரயிலில் தான் போகணும்னு ஆசைப்பட்டதால் (சோன் நதிப்பாலம் பார்க்கணும்னு) கயாவுக்கு ரயிலில் போனோம். அதுக்குச் சாப்பாடு கட்டிக் கொடுத்துட்டார். திரும்பும்போதும் ரயிலில் வந்தோம். கயாச் செலவெல்லாம் நாங்கள் கொடுத்த மொத்தப் பணத்தில் இருந்து! அங்கே சமைக்க எங்களுக்கு எனத் தனியாக ஒரு நபரை எங்களோடு அனுப்பி வைத்தார். அவர் ச்ராத்தம் அன்று கயாவாலி ப்ராமணன் சாப்பாடும், பிண்டங்களும் தயாரித்துக் கொடுத்தார். இவற்றுக்கு எல்லாம் நம் உழைப்பு என்பது ஏதும் இல்லை. போய்க் குளித்துவிட்டு மடி உடுத்திக்கொண்டு புரோகிதர் சொன்னதைச் செய்ய வேண்டியது தான். எல்லாம் கரெக்டாகக் கொண்டு வந்து வைத்து விடுவார்கள். வட இந்தியர்களிடம் குறிப்பாக பண்டாக்கள், பண்டிட்களிடம் பேச்சே இல்லை.

   நீக்கு
 36. நாங்க ஸ்வாமிமலை கிருஷ்ணமூர்த்தி கனபாடிகளிடம் ஏற்பாடு செய்திருந்தோம். போன அன்னிக்கே அவர் சின்ன ஸ்பூனில் காஃபி கொடுத்துட்டு இங்கே இதான் கொடுப்போம். நீங்க வேண்டும்னா தனியா ஏற்பாடு பண்ணிக்கோங்கனு சொல்லிட்டார். சாப்பாடும் தனினு சொல்லிட்டார். பித்ரு காரியங்களுக்கு மொத்தமாகப் பேசிக் கொண்டார். அதில் பிரயாகையில் நாங்க செய்யவேண்டிய வேணிதானம், ச்ராத்தம், தக்ஷிணை உட்பட, அதே போல் கயாவில் நாங்க செய்யவேண்டியவைக்கும் சேர்த்து வாங்கிக் கொண்டார். ஆனால் பிரயாகை செல்ல வண்டிக்கும், கயா செல்லும் வண்டிக்கும் , கங்கையில் படகில் சென்று செய்ய வேண்டிய காரியங்களுக்குப் படகுச் செலவும் தனியாகக் கொடுக்கணும்னு சொன்னார். மற்றபடி இந்தக் காரியங்கள் செய்யும் அன்று போடும் சாப்பாடுக்குப் பணம் வாங்கவில்லை. பிண்டம் வைக்க அரிசி முதற்கொண்டு அவங்க கொடுத்துடுவாங்க. தம்பதி பூஜைக்குத் தனியாக நாங்களே எல்லாம் வாங்கிப் போயிருந்தோம். ஆகையால் அன்றும் சாப்பாடுக்குக் காசு வாங்கலை! ஆனால் திரும்பிச் செல்லும் அன்று ரயிலுக்கு எங்களுக்குக் கட்டிக் கொடுத்த சாப்பாடுக்குக் காசு தனியாக வாங்கினார். இட்லி, மிளகாய்ப் பொடி, சப்பாத்தி, தக்காளித்தொக்கு, புளியஞ்சாதம், தயிர்சாதம்!ரயிலில் போனோம். 3 ஆவது நாள் தான் சென்னை திரும்ப முடியும் என்பதால் சாப்பாடு நிறையக் கொடுத்திருந்தார். கயா சென்ற அன்றும் இரவுச் சாப்பாடு அவரே ஏற்பாடு பண்ணிக் கொடுத்து விட்டார். கயாவில் இரவுக்கு அதைச் சாப்பிட்டுவிட்டோம். மறுநாள் ச்ராத்தம் என்பதால் மொத்தச்செலவில் அடங்கியது!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இது மாதிரி எந்த ஏற்பாடும் இல்லை. நைமிசாரண்யத்தில் நாங்கள் எந்த பித்ரு காரியமும் செய்யவில்லை. சுற்றிப்பார்த்ததோடு சரி... அதிலேயே சில இடங்கள் பார்க்கவில்லை என்று இப்போது தெரிகிறது. சுற்றிப்பார்க்கும் இடங்களுக்கும் எங்களுக்கு விவரம் சொல்ல அவர்கள் யாரும் வரவில்லை.

   நீக்கு
  2. அனுமான் GHகடி பார்க்கவில்லை போல! :( ஆஞ்சி நல்லா இருப்பார்.

   நீக்கு
  3. பார்த்தோமே... படம் எடுக்கவில்லை என்று சொல்லியிருக்கிறேன்....

   நீக்கு
  4. ஆமாம், இப்போத் தான் பார்த்தேன், நீங்க சொன்னப்புறம். காலம்பர சரியாக் கவனிக்கலை!

   நீக்கு
  5. நைமிசாரண்யத்தில் எந்த பித்ரு காரியங்களும் கிடையாது. பொதுவா நதியில் நீராடுமுன் சங்கல்பம் செய்யணும். அதைத்தான் அந்த பண்டிட் சொல்லி, அதற்கு காசு கிடைக்குமா என்று பார்த்திருக்கிறார்.

   நீக்கு
 37. இப்போவும் காசியில் சங்கரமடத்தில் அதிகம் பணம் வாங்குவது இல்லை. மொத்தச் செலவு பித்ரு காரியங்களுக்கு மட்டும் 25,000/- 30,000/-. இதில் பிரயாணச் செலவும் அன்றன்று சாப்பிடும் சாதாரணச் சாப்பாடுச் செலவும் தனி! ஒரு சாப்பாடு 100 ரூபாயாம். காலை டிஃபன் எனில் 50 ரூ. காஃபி கிடையாது. நாமே பார்த்துக்கணும்! பிரயாகை, கயா போவதற்கு வண்டி ஏற்பாடு செய்து அழைத்துச் செல்கின்றனர். அதற்குத் தனி வண்டி நமக்கு வேண்டும்னா 2000 ரூபாய் வரை ஆகுமாம். பகிர்ந்து கொள்வது என்றால் குறைச்சு ஆகும்! இது சமீபத்தில் என் மைத்துனர்/நாத்தனார் போயிட்டு வந்து சொன்னது. சமீபத்தில் என்றால் ஶ்ரீராம் போன அதே சமீபத்தில்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓஹோ... இது செமி ஆன்மீக செமி சுற்றுலா! எனவே இதில் இப்படித்தான் இருக்கும் போல! அப்படி அமைந்து விட்டது.

   நீக்கு
 38. எல்லார் வாயிலும் பான் எலல கடையிலும் ஜிலேபி//

  ஹா ஹா ஹா வட பகுதிகளின் அம்சங்கள் இவை. இங்கு பங்களூரிலும் கூட ஜிலேபி...நிறைய கடைகளில்...நன்றாகவும் இருக்கிறது. (வட இந்திய ஜிலேபி..நம்மூர் ஜாங்கிரியை விட.அதுதான் எனக்கு மிகவும் பிடிக்கும் சாப்பிட முடியாது என்றாலும் கூட...கொஞ்சம் சுவைத்துவிடுவேன்!!!!!!)

  அந்தக் கோயிலின் அருகில் கஜேந்திர மோக்ஷம் அழகாக இருக்கிறது இன்னும் மேம்படுத்தும் நிலையில் இருக்கிறது போலும். தண்ணீர்க் குளமாகவே கட்டுகிறார்கள் என்றும் தெரிகிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இந்த இடம் முன்னாலேயே இருந்திருக்கிறது என்கிறார் நெல்லை. அதுதான் பாலாஜி மந்திர் என்கிறார்.

   நீக்கு
  2. கீதா ரங்கன்...அந்தக் கோவில் பாலாஜி மந்திர். அங்கு 4-5 தங்கும் இடங்களும் சைடுல (வளாகத்துலயே) இருக்கு. குளிக்க ஓரளவு வசதியும் இருக்கு. அதைப் பார்த்துக்கொள்ள அர்ச்சகரும், சில ஆட்களும் இருக்காங்க. அதன் வாசலில் இரண்டு சிலைகள் இருக்கு (ஒன்று கஜேந்திர மோக்‌ஷம், இன்னொன்று விஷ்ணு ஆதிசேஷன் சயனம்). அங்குள்ள மரங்களில் மாலையில் மயில்கள் வரும். திருப்பதி பெருமாள் மூலவர்.

   ஸ்ரீராம் படங்களைப் பார்த்து, இப்போ 4-5 நிலை கோபுரம் கட்டறாங்கன்னு தெரியுது.

   நீக்கு
  3. ஆம், அங்குதான் நாங்கள் சாப்பிட்டோம். எங்கள் பஸ் நின்ற இடம் அதுதான்.

   நீக்கு
  4. ஓஹோ!! அப்புறம் ஏன் அந்த கஜேந்திர மோக்ஷம் இப்படி இருக்கிறது ஏதோ இப்போதுதான் வடிவமைப்பது போல?!!!

   கீதா

   நீக்கு
 39. பல்லிக்கும் கவிதை எழுதியிருக்கும் உங்கள் பெரிய மனதை பாராட்டுகிறேன். ஆனால் அந்த பல்லிக்கு அதை படிக்கத் தெரியாதே என்றுதான் வருத்தமாக இருக்கிறது. ஆயிரம் பொற்காசுகளை தவற விட்டு விட்டீர்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா... ஹா... ஆயிரம் பொற்காசுகளா? ஆயிரம் பூச்சிகளா?

   நீக்கு
 40. அமைப்பாளர் பாவம் மனம் தவித்து ஓடியிருப்பார்...

  புதியவர் வந்து சேர்ந்தாரா?

  அம்மாடியோவ் அந்தப் படிக்கட்டுகள்தான் கோமுகு ஆறுக்கு இறங்கும் படிக்கட்டுகளோ..

  ஆறு அழகாக இருக்கிறது...

  ஸ்டைல் வண்டி சூப்பர் ஆனால் நீங்க மிஸ் பண்ணிட்டீங்களே. ராசி நல்ல ராசிதான்!!!!!!!!!!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அமைப்பாளர் பாவம். நாங்களும் பாவம் (என்று இப்போது தெரிகிறது!)

   நீக்கு
  2. இம்மாதிரிச் சுற்றுலாக்களில் எவரேனும் ஒருத்தருக்கு இப்படி நேர்ந்து விடுகிறது! :(

   நீக்கு
  3. எங்க டூரின்போது, கடைசியில் இரயிலில் திரும்பிவந்துகொண்டிருந்தபோது, நமக்கு உதவியாக வந்தவர்களுக்கு ஆளுக்கு 200-300 தரச்சொன்னார்கள். அதில் பணம் வாங்கிய ஒருத்தர் (6000ம் என்று ஞாபகம்) பணத்தை மடியில் கட்டிக்கொண்டு பாத்ரூம் போயிருக்கார். பணம் வெளியே விழுந்துவிட்டது (இரயில்வே டிராக்கில்). அவருக்கு டூர் சம்பாத்யம் போன வருத்தம். அப்புறம் ஆளுக்கு கொஞ்சம் பணம் அவருக்குக் கொடுத்து அதை ஈடு செய்தோம்.

   நீக்கு
  4. அடப்பாவமே... அவர் "அப்படி"ச் சொல்லியிருப்பாரோ!

   எங்களிடமும் வேலை செய்த ஆட்களுக்கு பணம் கலெக்ட் செய்தார்கள்.

   நீக்கு
  5. ஆ! அப்ப அப்புறம் அவருக்குப் பதில் யாருமெ வரலியோ...உங்கள் பதில் அப்படித்தான் சொல்லுது!!

   கீதா

   நீக்கு
 41. தாகம் தீர்க்கும் கோமுகி அந்த மாடு அழகு!

  எத்தனை அழகாக இறங்கி வந்து குடிக்குது பாருங்க..

  ஆ! வண்டிக்கான தொகை உங்கள் டூரில் சேர்க்கை இல்லையா? இது என்ன இது? எல்லாம் சேர்த்துத்தானே அழைத்துப் போகணும்? இது கொஞ்சம் ஓவராக இருக்கிறதே...

  கீதா

  பதிலளிநீக்கு
 42. ஹை சூப்பர் ஸ்ரீராம்....ஆற்றில் குளிக்கப் பழகியது!! குட் குட்!!! இனிமே எங்கே ஆறு கண்டாலும் இறங்கிடுங்க இறங்கி ஒரு முக்கு போட்டுரணும். அல்லது விளையாடிவிட்டாவது வரணும். அதன் சுகமே தனிதான் ஸ்ரீராம். ஆற்றில் இருந்து வர மனமில்லாமல் ஏறியது// ஆமாம் ஏறி வரவே மனம் இருக்காது. நான் எத்தனை அனுபவித்திருக்கிறேன்...கிராமத்தில் இருந்தவரை. அப்புறம் சில ஊர்கள் சென்ற போதும்..

  எஞ்சாய் ஸ்ரீராம் இனி எங்கு சென்றாலும்...அருவியிலும் இனி பழகிடுங்க வாய்ப்புக் கிடைத்தால். அதெல்லாம் ஒரு தனி சுகம்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆனால் கீதா...இதைக் குளிப்பது என்றே சொல்லக் கூடாது! முங்கு போடுகிறோம். அவ்வளவே... சோப் கீப்பு எதுவுமிருக்கக்கூடாது! (...)

   நீக்கு
  2. ஆமாம் ஸ்ரீராம். அதேதான் இங்கு மட்டுமில்லை எந்த ஆற்றிலுமே, அருவியுலுமே சோப்பு எதுவும் பயன்படுத்த மாட்டோம்.

   ஆனால் அஆற்றில் நீந்தி விளையாடுவோம்...நிறைய நேரம்....அதனால்தான் அப்படிச் சொன்னேன்..

   கீதா

   நீக்கு
  3. // அருவியிலும் இனி பழகிடுங்க// ஸ்ரீராமை குற்றாலம் அருவியில் குளிக்கவேண்டும் என்று சொல்கிறாரோ? நாராயண, நாராயண!

   நீக்கு
 43. நீங்கள்பாட்டுக்கு ரௌடி வாத்து என்று கூறி விட்டீர்கள். எனக்கென்னவோ அது ஏதாவது மாறு வேடத்தில் இருக்கும் முனிபுங்கவர்களாக இருக்குமோ என்று தோன்றுகிறது. அவர்களின் தனிமையை கெடுத்த கோபமாக இருக்கலாம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //அது ஏதாவது மாறு வேடத்தில் இருக்கும் முனிபுங்கவர்களாக இருக்குமோ என்று தோன்றுகிறது. //

   ஐயோ சாமீ... இது வேறயா? சும்மா பயமுறுத்தாதீங்க... ஏற்கெனவே நொந்து போயிருக்கேன்!

   நீக்கு
  2. சொன்னா நம்பமாட்டீங்க பா.வெ.மேடம். நான் பாலாஜி மந்திர் படிகளில் அமர்ந்திருந்தபோது அங்குள்ள வாத்துகளில் (அன்னம்?..பெரிய சைஸ்) ஒன்று உஸ் என்று மூச்சு விட்டுக்கொண்டே கோபமாக என்னிடம் வந்தது. நான்கூட ஏன் அப்படி கோபமாக வந்தது என்று யோசித்தேன்.

   முனிபுங்கவர் பிஸினெஸ்லாம் இருக்காது. நம்ம பூங்கால ஆணும் பெண்ணும் கடலை போடும்போது நாம குறுக்க நெடுக்க போனா அவங்க கடுப்பாவாங்க தானே. அதுபோலத்தான் இருக்கணும்...

   நீக்கு
  3. இதே வாத்துகள்தான் அப்பவுமா?

   ஆண் வாத்துகள்தான் கோபமாக இருக்குமோ?

   நீக்கு
 44. பல்லிகள் இரவில் தான் எங்க வீட்டில் அதிகம் தரையில் நடமாடுது! ராத்திரி எழுந்து வரச்சே பயம்மா இருக்கும் மிதிச்சுடுவோமோனு! பல்லிகளுக்கும் கவிதை எழுதி பல்லிகளின் எண்ணத்தைப் பதிவு செய்த ஶ்ரீராமுக்குப் பாராட்டுகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அப்போ எனக்கு வேற வழியில்லை போலிருக்கு. சரி... கரப்பான்பூச்சி, தேள், வெட்டுக்கிளி கவிதைகளையும் அவர் எழுதும்போது படிக்கத்தான் வேண்டும்... வேற என்ன பண்ண...

   நீக்கு
  2. //பல்லிகள் இரவில் தான் எங்க வீட்டில் அதிகம் தரையில் நடமாடுது!//

   பூச்சிகள் அதிகம் என்று தெரிகிறது. கரப்பான்! அவற்றைப் பிடிக்கத்தான் பல்லி தரைக்கு வரும்!

   நீக்கு
  3. ஆமாம் ஸ்ரீராம்....பூச்சிகள் எறும்புகள் இருந்தால் இரவில் பல்லிகள் நடமாட்டம் தரையில் இருக்கும்...

   கீதா

   நீக்கு
 45. வணக்கம் சகோதரரே

  நைமிசாரண்யத்தில் எடுத்த எல்லா படங்களும் மிக அழகு. கஜேந்திர மோட்ச சிலை ,காளை மாடு, கோவில்கள், கோமுகி ஆற்றங்ககரைபடங்கள். படிகள், வாத்து, தலைப்பாகை கட்டியபடி கடமையாற்ற காத்துக்கொண்டிருக்கும் மாடு என அத்தனையும் நன்றாக அமைந்துள்ளது.

  கோமுகி ஆற்றங்கரை படம் எனக்கு படித்துறைப் பெரியவரை மறுபடியும் ஞாபகப்படுத்தியது.

  வாத்து சாதுவான பிராணி என நினைத்திருந்தேன்,அப்படி இல்லையென இன்று புரிந்து கொண்டேன்.

  ஒவ்வொரு ஊரின் பழக்க வழக்கங்கள் அந்தந்த ஊருக்கு நிலையானதாக இருந்து விடுகிறது இல்லையா? (பான். ஜிலேபி)

  ஏ. சி பஸ்ஸில் மாடுகளும் பிரயாணிக்க துவங்கி விட்டனவா? நமக்கு இடம் கிடைப்பது கூட இனி கஸ்டமாகி விடும்.

  பல்லி கவிதை அருமை. மிகவும் ரசித்தேன்.

  பதிப்பகத்தின் நேர்மை வியக்க வைக்கிறது. இன்னமும் இந்த மாதிரி நேர்மை வாதிகள் இருப்பதினால்தான் சென்னையில் நேற்று மழை பெய்ததோ?

  கருத்துரைகள் அனைத்தும் மிகவும் சுவையாக இருந்தன. பகிர்வுக்கு மிக்க நன்றி.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. @Kamala Hariharan நான் சொல்ல நினைத்ததை எல்லாம் நீங்கள் சொல்லிவிட்டீர்கள் கமலா.
   எத்தனை அழகாப் பின்னூட்டம் இடுகிறீர்கள். வாழ்த்துகள்.

   நீக்கு
  2. வணக்கம் சகோதரி

   அதேதான் சகோதரி.. நான் சொல்ல வந்ததையெல்லாம் இங்கு வந்த சகோதர, சகோதரிகள் மிக அழகாக, விளக்கமாக கூறி விட்டார்கள். ஆனாலும் உங்களனைவரையும் போல் எனக்கு விவரமாகச் சொல்லத் தெரியாது. ஏதோ உங்களிடமிருந்து கற்ற வித்தையை நானும் சிறிது பிரயோகிக்கிறேன். அவ்வளவுதான்.! என்னை பாராட்டியதில் தங்களின் சிறப்பான பெருந்தன்மை நிறைந்த குணம் வெளிப்படுகிறது.
   தங்கள் வாழ்த்துகளுக்கும், பாராட்டுகளுக்கும் என்மனம் நிறைந்த நன்றிகள் சகோதரி.

   நன்றியுடன்
   கமலா ஹரிஹரன்.

   நீக்கு
 46. ரௌடி வாத்துகள் அழகோ அழகு! நாம் அருகில் போனால் அவை நம்முடன் தான் வரும்....நம் பின்னாடியும் வரும்...நாம் ஏதேனும் வைத்திருக்கிறோமா என்று பார்த்து.....அழகு....

  ஆனால் வாத்துகள் கொஞ்சம் சென்சிட்டிவ்தான்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாத்துகளை அவ்வளவு அருகில் அன்றுதான் பார்த்தேன் தெரியுமோ?!!!

   நீக்கு
 47. நைமிச்சாரண்யம், விவரங்கள் எல்லாம் அறிந்து கொண்டேன்.

  அந்த வட்டக் குளம் செம அழகா இருக்கு ஸ்ரீராம்.

  சுயம்பு ஆஞ்சு கோயிலில் நீங்கள் ஃபோட்டோ எடுக்காட்டா என்ன அதான் நிறையப்பேரராக அங்கு காட்சிதந்துவிட்டாரே! என்ன அழகு செல்லங்கள். பைரவர்களும், ஆஞ்சுக்களும் என்ன அழகு!!

  ஏன் கட்டிப் போட்டுருக்காங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

  கீதா

  பதிலளிநீக்கு
 48. அதிகப் படங்களும், பகிர்வும்
  பயண விவரங்களும் அருமை

  பதிலளிநீக்கு
 49. பெரியவர்கள் தங்கும் அந்தப் பெரிய மஹால் அழகாக இருக்கிறது ஸ்ரீராம்....

  சென்னையில் நேற்று மழை சூப்பர்!!! ஹப்பாடா ஒரு வழியாக சென்னையின் பூமி நனைந்ததே! எல்லாம் இந்த கீதா வந்து போன நேரமாக்கும்!! ஹிஹிஹிஹி...

  ஹா ஹா அந்த ஏசி பஸ்ஸில் மாடு ஏறப் பார்க்கிறது செம க்யூட்!! பாவம் அதற்கும் வெப்பம் தாங்க முடியாமல் ம்ம்ம் ஏசி தேவையாய் இருக்கிறது பாருங்க.

  எங்க வீட்டுக் கண்ணழகி சென்னையில் இருந்தப்பா இப்படித்தான் கோடையில் தவிப்பாள்.

  இங்கு நல்லகாலம் அதற்கு தேவையில்லாமல் போய்விட்டது.

  கீதா

  பதிலளிநீக்கு
 50. பல்லிக்குக் கவிதை ஆஹா!! அருமையா இருக்கு ஸ்ரீராம்...ரொம்ப அழகா எழுதியிருக்கீங்க..

  நானும் பல்லியும் மிகவும் ஃப்ரெண்டாக்கும்!! நான் எழுதிய ஒரு கதையில் கூட பல்லி பேசுமே மனதிற்குள்!!! ஹா ஹா ஹா...

  உங்கள் கவிதையை மிகவும் ரசித்தேன் ஸ்ரீராம். பல்லி சுவர் வாசி என்றாலும் கூட தரையிலும் ஓடும். எங்கள் வீட்டில் தரையிலும் க்ராஸ் செய்யும். இங்கு இப்போது ஒன்று புதிதாக வந்திருக்கிறது.

  கீதா

  பதிலளிநீக்கு
 51. ஸ்ரீராம் அபிராமி உங்கள் வீடு தேடி வந்திருக்கிறாள் பாருங்கள்!!! சூப்பர்!

  அப்போ நல்லதே நடந்திடும் என்ற சமிக்ஞை!!! கண்டிப்பாக ஸ்ரீராம் பாருங்கள் எல்லாம் நல்லபடியாக நடக்கும்! ஒரு பாசிட்டிவ் எனர்ஜி உங்களை வந்தடைந்திருக்கிறது.

  தனம் தரும் கல்வி தரும் ....இந்தப் பாடலையும், ஆத்தாளை எங்கள் அபிராமவல்லியை ..இந்த இரண்டும் மட்டும் மனப்பாடம்...

  கீதா

  பதிலளிநீக்கு
 52. பயணக் காட்சிகளும் அனுபவங்களும் தகவல்களும் சுவாரஸ்யம். கொம்பில் தலைப்பா அணிந்த மாடு!!

  பல்லியைப் பற்றிய வரிகள் யதார்த்தம். பெரும்பாலோருக்கு பல்லி என்றால் அலர்ஜிதான்.

  வர்த்தமானன் பதிப்பகத்தாரின் செயல் பாராட்டுக்குரியது.

  பதிலளிநீக்கு
 53. வட்டக் குளம், நதி என்று படங்கள் அனைத்தும் அழகாக இருக்கின்றன.

  மாடும் உங்களுடன் பேருந்தில் ஏறியதா?

  பல்லியைப் பற்றியும் கவிதை வியக்க வைத்தது! மிகவும் நன்றாக எழுதியிருக்கிறீர்க்ல் ஸ்ரீராம்ஜி. உங்கள் கற்பனை அபாரம்.

  சென்னையில் மழை கொஞ்சமாகப் பெய்ததை அறிந்தேன். இப்போது உங்களின் மூலம் நன்றாகவே பெய்திருக்கிறது என்று தெரிகிறது. நல்ல விஷயம். கண்டிப்பாக மிக மிக அவசியம்.

  அனைத்தும் ரசித்தேன் ஸ்ரீராம்ஜி.

  துளசிதரன்

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!