சென்ற வாரம் நான் கேள்வி கேட்க நினைத்து, பதிவை தொடர்ச்சியாக எழுதி, ஒருங்கிணைத்து, படம் எல்லாம் சேர்த்து, பதிவின் கடைசியில் வந்தபோது கேட்க நினைத்திருந்த கேள்வி மறந்துபோய்விட்டது. அதனால குழப்பமா ஒரு கேள்வி கேட்டு எஸ்கேப் ஆனேன்.
சென்ற வாரக் கருத்துரைகளில் அதிகம் இடம் பெற்ற ஒரு தலைப்பு சைக்கிள் ஓட்டும் அனுபவம்தான். பாராட்டிய எல்லோருக்கும் நன்றி.
சிரிப்பு சிறந்த மருந்துதான். சிரிங்க, சிரிக்க வைங்க.
ஆனால் என்ன ஆச்சு ரொம்பப் பேருங்க கேள்வி கேட்கத் திரும்பவும் மறந்துட்டீங்க!
தவறிப்போய் வந்து விழுந்த சில கேள்விகளுக்கு பதில் சொல்லிவிடுவோம் முதலில்!
பானுமதி வெங்கடேஸ்வரன் :
அடுத்த வாரம் நீங்கள் எந்த நடிகையின் புகைப்படத்தை பகிரப் போகிறீர்கள் என்று தெரியும். ரிக்ஷாக்காரனோடு உலகம் சுற்றியவர்தானே?
& உண்மையில் நான் எந்த நடிகை படத்தையும் பர்சில் வைத்துக்கொண்டது கிடையாது. சும்மா இப்படி ஒரு கேள்வி கேட்டால் யார் யார் என்னென்ன கற்பனை செய்கிறீர்கள் என்று பார்க்கத்தான் அப்படி ஒரு கேள்வி கேட்டேன்.
ஆனாலும் கீதா சாம்பசிவம் பயங்கரக் கற்பனை செய்து என்னை ஓடவிட்டுவிட்டார்கள்!
//அப்படி வந்த அந்த நடிகையின் படம் எது? அடுத்த வாரம் அந்தப் படத்தைப் போடுகிறேன்.// வசுந்தராவோ, டி.ஆர்.ராஜகுமாரியோ, பி. கண்ணாம்பாவோ இருக்கும். :P
(நல்லவேளை கே பி சுந்தராம்பாள், பண்டரிபாய், சுந்தரிபாய் மற்றும் அஸ்வத்தம்மா என்றெல்லாம் சொல்லாமல் விட்டார்கள்! )
நம்மைப் பற்றிய நம்முடைய கணிப்பும், நம்மைப் பற்றி மற்றவர்கள் கணிப்பும் ஒன்றாக இருந்தால் நாம் நல்லவர்கள் எனலாமா?
# நான் நல்லவன்(ள்) இல்லை என்று எண்ணிக் கொள்வது சாத்தியமா ? ஆம் எனில் அதுமாதிரியான கணிப்பு பிறரோடு ஒத்துப்போகும்போது ஏற்றுக்கொள்ளத் தக்கதாக இருக்கும்.
நான் நல்ல நபர் என்று அடுத்தவரை நம்ப வைப்பது கடினமல்ல. நம்மை நாம் நம்ப வைப்பதுதான் இயலாத செயல்.
நெல்லைத்தமிழன் சொன்ன பதில் :
ஒருவேளை, நாம் 'மோசமானவன்' என்று நம்மைப் பற்றி நம் உள்மனசுக்குத் தெரிந்து, அதுவே மற்றவர்களின் கணிப்பாகவும் இருந்தால், 'நாம் எப்படி நல்லவர்' என்று சொல்வது?
& இந்தக் கேள்வி ஜோஹரி சன்னல் (Johari Window) என்னும் தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டது. இதில் நாம் நம்மைப்பற்றி நினைப்பதையே மற்றவர்களும் நினைப்பதால் நாம் நல்லவர் என்றெல்லாம் பகுக்க இயலாது.
ஜீவி :
( நீங்கள் சைக்கிள் ஓடியிருக்கிறீர்களா?) தலைப்புக்கு என்ன அர்த்தம்?
வேறு யாரோ சைக்கிள் ஓட்ட, அதன் பின்னால் நீங்கள் ஓடியிருக்கிறீர்களா? என்பதா கேள்வி?
# சைக்கிள் பின் ஓடாதார் மிகச் சிலராகத்தான் இருக்க முடியும். நான் அதில் இல்லை.
& அதிரா கேட்டது அந்த அர்த்தத்தில் இல்லை என்றாலும், எங்கள் பதில்கள் நகைச்சுவைக்காக அப்படி எடுத்துக்கொண்டு பதில் சொன்னோம்!
வாட்ஸ் அப் கேள்விகள் :
பானுமதி வெங்கடேஸ்வரன் :
கணையாழியில் வெளியாகும் கதைகளை புரிந்து கொள்ள முயற்சித்தது உண்டா?
# கணையாழி நான் பார்த்து ரொம்ப நாள் ஆயிற்று.
& அந்தக் காலத்தில் ரொம்ப முயற்சித்தது உண்டு. ஒன்னும் புரியாம முடியைப் பிச்சிக்கொண்டது அதிகம். சில பகுதிகள் மட்டும் புரியும்; அதோடு சந்தோஷப்பட்டு விட்டுவிடுவேன்.
துரை செல்வராஜ் சாரின் கதையில் குறிப்பிட்டிருந்த வகுப்பு ஆசிரியராக நீங்கள் இருந்தால்..? அந்த ஊரில் ஆண்கள் பள்ளி இல்லாததால் முரளி, ஶ்ரீராம்,டி.டி., கில்லர்ஜி(நீங்கள் ஆசிரியராக இருந்தாலும் அவரை ஜி போட்டு மரியாதையாகத்தான் அழைக்க வேண்டும்) போன்ற மாணாக்கர்களும் அங்குதான் படிக்கிறார்களாம்.
# சந்தோஷம்தான்.
& ஆசிரியர்களுக்கு, அவரவர்களின் குழந்தைகளைவிட அன்பு காட்டுபவர்கள், மரியாதை காட்டுபவர்கள் ஆசிரியர்களின் மாணவர்களே என்ற கரு அமைந்த நல்ல கதை. இந்த ஆசிரியர் நிலை ஆண்(ஆசிரியர்)களுக்கு வருவதற்கு வாய்ப்பு இல்லை என்று நினைக்கிறேன்.
அவர் சொல்லியிருப்பதில் மறைந்திருக்கும் பொருள் ஒன்றும் இருக்கிறது. அது என்ன என்றால், பெண்கள் தத்தம் ஆசிரியைகளிடம் கொள்ளும் பிரியம் அளவு கடந்தது என்பது.
பையன்கள் பெரும்பாலும் ஆசிரியர் (*ஆண்)களிடம் அப்படி எல்லாம் பயங்கர பிரேமை கொள்வதில்லை! (ஆனால், ஆசிரி'யை'யிடம் பிரேமை கொண்ட சில கிறுக்கு மாணவர்களைப் பார்த்திருக்கிறேன்!)
நான் ஐந்தாம் வகுப்புப் படித்தபோது ஓர் ஆசிரியர் உடல் நலம் குன்றி விடுப்பில் இருந்தார். அவருக்கு பதில் ஆக்டிங் ஆசிரியை ஒருவர் வந்தார். ஒரு மாதமோ இரண்டு மாதமோ அவர்கள் பாடம் நடத்தி, பிறகு உரியவர் வேலைக்கு மீண்டும் வரப்போகிறார் என்று சொல்லி, 'நான் மறுநாள் முதல் வேலைக்கு வரமாட்டேன்' என்று சொன்னார். அவ்வளவுதான்! வகுப்பில் இருந்த பொண்ணுங்க எல்லாம் கதறி அழுது, கண்கள் வீங்கி, மூக்கைச் சிந்தி, எதிர் வரிசையில் உட்கார்ந்திருந்த பையன்கள் மீது உதறி, பயங்கர ஸீன் போட்டாங்க!
ஆனால், எப்பேர்ப்பட்ட ஆசிரியர், ஆசிரியையாக இருந்தாலும், அவரிடம் பயின்ற மாணவர் / மாணவி வீட்டிற்குப் போய், அவர்களின் குடும்பத்தோடு இறுதி நாட்களைக் கழிப்பார்கள் என்பது இனிமையான கற்பனை. நடைமுறையில், அந்த மாணவனின் மனைவியோ அல்லது மாணவியின் புகுந்த வீட்டாரோ இதற்கெல்லாம் ஒப்புக்கொள்ளமாட்டார்கள் என்பதே நிதரிசனமான உண்மை.
பெண்ணோடு தோன்றி , பெண்ணோடு வாழ்ந்தும் பெண் மனது என்னவென்று தெரியவில்லையே என்று சிலர் திகைக்க, சில கயவர்கள் எப்படி பெண்களை மயக்குகிறார்கள்?
# இதற்கு பெண்களின் தெளிவின்மைதான் காரணம். இவ்வளவு எளிதாக ஏமாறுவதை வேறு எப்படிச் சொல்வது ?
& பெண்கள் வெளுத்ததெல்லாம் டினோபால் என்று சுலபமாக நம்பிவிடுவதுதான் காரணம்!
==========================================
இந்த வாரம் கேள்வி எதையும் கேட்டு உங்களைத் தொந்தரவு செய்யாமல், சில நல்ல விஷயங்களை பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.
இலக்கு நிர்ணயம் செய்தல் என்று ஒரு சமாச்சாரம். Goal setting அல்லது Target setting என்று அறியப்படும் விஷயம்.
இதில் முக்கியமான அம்சம் என்ன என்றால், நீங்கள் அமைக்கும் இலக்கு எண்ணிக்கையில் சொல்லக்கூடியதாக இருக்க வேண்டும்.
அப்படி என்றால் என்ன?
சரியில்லாத இலக்கு :
அடுத்த மாதம் முதல் நான் இன்னும் அதிகமாக சேமிப்பேன்.
சரியான இலக்கு :
அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் குறைந்தது ஆயிரம் ரூபாய் சேமிப்பேன்.
சரியில்லாதது:
நாளை முதல் இன்னும் சீக்கிரம் தூக்கத்திலிருந்து எழுந்துகொள்வேன்.
சரியானது :
நாளை முதல் காலை ஐந்து மணிக்கு தூக்கத்திலிருந்து எழுந்துகொள்வேன்.
உங்கள் இலக்குகளை - எண்ணிக்கை அடிப்படையில் மாற்றி அமைத்துக்கொள்ளுங்கள்.
Anything which is not countable can not be controlled.
================================================
நன்றி, மீண்டும் சந்திப்போம்.
================================================
இனிய காலை வணக்கம் கௌ அண்ணா அண்ட் ஸ்ரீராம், மற்றும் அனைவருக்கும்
பதிலளிநீக்குஈத் பெருநாள் வாழ்த்துகள்!
கீதா
இனிய காலை வணக்கம்
நீக்குவாழ்க வையகம்...
பதிலளிநீக்குஅன்பின் KGG அவர்களுக்கு வணக்கம்... ஸ்ரீராம், கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு...
பதிலளிநீக்குவந்திருக்கும் நண்பர்களுக்கும், வரவேற்ற துரைக்கும், இனி வரப்போகும் அனைவருக்கும் வணக்கம், நல்வரவு, வாழ்த்துகள்.
நீக்குஇனிய காலை வணக்கம் து செ , கீ சா !
நீக்குகடைசியில் சொல்லப்பட்டிருக்கும் கோல் செட்டிங்க் விஷயம் மிக மிக நல்ல விஷயம்.
பதிலளிநீக்குஇந்த கோல் செட்டிங்க் தானே நாக்கை ரொம்பவே படுத்துகிறது சில சமயம்..
நாளை முதல் நான் ஸ்வீட்டே தொட மாட்டேன்....
ஆனால் ஸ்வீட்டைப் பார்த்துவிட்டால்!!!! ஹிஹிஹி இதுக்கு மட்டும் எண்ணிக்கை எதுவும் கிடையாதாக்கும்!!!!
சரி அண்ணா இந்த நாளை என்பதே குழப்பமாச்சே எந்த நாளிய? அதுக்கும் டேட் ஃபிக்ஸ் செய்து கொள்ள வேண்டுமே!!
கீதா
இந்த நாளை என்பதற்கு ஒரு ஜோக் கூட உண்டு..கடன் கொடுத்தவர், வாங்கியவரிடம் கேட்க வந்தால், கடன் வாங்கியவர் தன் வீட்டிலோ/கடையிலோ நாளை தருகிறேன் என்று ஒரு போர்டை எழுதிவைத்து...
நீக்குநாளை என்பதே ஒரு நம்பிக்கையில்தானே!!
ஹிஹிஹி கௌ அண்ணா நீங்க எந்த நாளை "நாளை" என்று சொல்லுறீங்க?
கீதா
நாளை என்பது near future என்பதின் குறியீடு. நாளை நமதே என்பது போல. அது அடுத்த நொடியாகக் கூட இருக்கலாம்!
நீக்குTomorrow is another day! ஒரு பிரபலமான ஆங்கில நாவலில் அடிக்கடி வரும்/கடைசி அத்தியாயத்தில் முடியும் வாக்கியம் இது!
நீக்கு//..Tomorrow is another day! ஒரு பிரபலமான ஆங்கில..//
நீக்குஜி.நாகராஜனின் தமிழ் நாவல், முக்கியமான இலக்கிய படைப்புகளில் ஒன்றெனக் கருதப்படுவது - ‘நாளை மற்றுமொரு நாளே’.காலச்சுவடு வெளியீடு. ஞாபகம் வருகிறதே...
Gone with the Wind! Scarlette O'Hara! ஏகாந்தன், நீங்க சொல்லுவீங்கனு நினைச்சேன். படமாக் கூட வந்திருக்கு இல்லையா? கதாநாயகி அடிக்கடி சொல்லும் வாக்கியம் இது!
நீக்குஅந்தக் கதையினை அலசியதற்கு மகிழ்ச்சி.. நன்றி....
பதிலளிநீக்குநன்றிக்கு நன்றி!
நீக்குபானு அக்காவின் முதல் கேள்விக்கு இரு பதில்களுமே ஓவ்வொரு வகையில் சூப்பர்.
பதிலளிநீக்குகீதா
நன்றி.
நீக்குஹிஹிஹி தெரியாமல்/கவனக் குறைவில் பானுக்காவின் முதல் கேள்வி என்று நடிகை கேள்வி பற்றி சொல்லிவிட்டேன்....இது கலாய்த்தல் கேள்வி!!!!!!!!!!!!!!!!!!!!!
நீக்குஅக்காவின் கேள்வி நம்மைப் பற்றிய கணிப்பு அதற்கான இரு பதில்களும் சூப்பர் ரசித்தேன்...
கீதா
நல்லதொரு புள்ளியில் இந்த நாளை நிறுத்தியிருக்கின்றீர்கள்....
பதிலளிநீக்குமிக்க நன்றி!
நீக்குஇன்னிக்கு உறவினர்கள் வரப்போவதால் மத்தியானம் வரமுடியுமா தெரியலை. அதோடு மின்சாரம் வேறே நேத்திக்குப் போகலை! இன்னிக்கு ஒரு வேளை போகுமோ என்னமோ தெரியலை! நேற்று எல்லாம் தயாராக இருந்தேன். மின்சாரம் போகாமல் காலை வாரி விட்டது! இஃகி,இஃகி,இஃகி
பதிலளிநீக்குதெரியலை, போகலை, தெரியலை! எவ்வளவு நெகடிவ் வார்த்தைகள்! ஒரு ஆச்சரியமான விஷயம் சொல்கிறேன் கேளுங்கள். தெய்வத்தின் குரல் ஐந்து பாகங்கள் புத்தகம் என்று ஞாபகம். அதில் random ஆக ஏதாவது ஒரு பக்கத்தைப் பிரித்து, கண்ணில் படுகின்ற ஒரு வாக்கியத்தைப் படியுங்கள். ஒவ்வொரு வாக்கியமும் பாசிடிவ் மட்டுமே இருக்கும். புத்தகம் இல்லாதவர்கள் என் மின்னஞ்சல் / வாட்ஸ் அப் எண்ணில் தொடர்புகொண்டால், PDF கோப்பு அனுப்புகின்றேன்.
நீக்குஆஹா! இப்படியும் ஒரு கோணம் இருக்கா? என்னிடம் தெய்வத்தின் குரல் ஏழு பாகங்களும் புத்தக வடிவில் உள்ளன. ஆனாலும் ஏன் இப்படி எழுதினீங்கனு நீங்க கேட்டால் காரணம்? யோசிக்கணும்! :))))))
நீக்குசில சமயங்களில் ஏதேனும் பிரச்னையில் மனசு மாட்டிக்கொள்ளும்போது, அல்லது முடிவெடுக்க திணறும்போது, தெ கு புத்தகத்தில் ஏதேனும் ஒரு பக்கத்தைப் பிரித்து, ஏதேனும் ஒரு முழு வாக்கியம் படிப்பேன். அந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு அந்த வாக்கியத்தில் கிடைக்கும்!
நீக்குநான் அநேகமா பாரதியாரின் கவிதைத் தொகுப்பை எடுப்பேன். இல்லைனா தேவாரத்தில் ஞானசம்பந்தரின் பதிகம் ஏதேனும்!
நீக்கு// ஏதேனும் ஒரு முழு வாக்கியம் படிப்பேன். அந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு அந்த வாக்கியத்தில் கிடைக்கும்!// இதை கவனித்தீர்களா?
நீக்குகௌ அண்ணா கவனித்தேன். என்னிடமும் பிடிஎஃப் கோப்பு இருக்கிறது. இனி இப்படிச் செய்து பார்க்கிறேன்...மிக்க நன்றி கௌ அண்ணா
நீக்குகீதா
நன்று, நன்றி.
நீக்குகவனிச்சேன் கௌதமன் சார்! பெரும்பாலும் நான் தீர்வு வேண்டும் என யோசிக்கையில் எடுப்பது சுந்தரகாண்டம்! அதில் எனக்குத் தேவையான பதில் கிடைக்கும்.
நீக்குதிருவாளர்கள் கௌதமன், கீதா சாம்பசிவம், கீதா ஆகியோருடன் இங்கு இணைகிறேன்.
நீக்குநான் இப்படி.. அல்லது எப்படியோ இருக்கையில், ஜே கிருஷ்ணமூர்த்தியின் புத்தகம் ஒன்றின் ஏதோ ஒரு பக்கத்தைத் திறந்து படிக்க ஆரம்பிப்பேன். தீர்வைத் தேடியல்ல. சும்மா..படிக்கத்தோன்றுகிறது என. அந்தப்பக்கத்தில் அவரது வார்த்தைகள், வேறொரு காட்சியை முன் வைக்கும். வேறொரு தளத்தில் கொண்டுபோய்விடும். கொஞ்ச நிமிடங்கள் அப்படியே லயிப்பது அல்லது நினைத்திருப்பது வழக்கம். இது எப்போது ஆரம்பித்தது என நினைவில் இல்லை. இதற்காகவே ஒரு ஜே.கே. டெல்லியிலும், ஒன்று பெங்களூரிலும் வைத்திருக்கிறேன்.
நல்ல யோசனை. JK யின் ஒரு ஆங்கில வாக்கியத்தைப் படித்தாலே அதன் பொருளை அறிய எனக்கு ஒன்பது நிமிடங்கள் ஆகும். பக்கத்தில் dictionary அல்லது கைப்பேசியில் Wordweb எல்லாம் இருந்தால்தான் அப்படி. இல்லை என்றால் இன்னும் கஷ்டம்.
நீக்குதுரையின் கதையின் முடிவில் காணப்பட்ட செய்தியை என்னாலும் ஏற்கமுடியவில்லை.துரைக்கு எப்போதும், எல்லோரும், எல்லாமும் நன்றாக முடியணும் என்பது தான் ஆசை. அவர் ஆசைக்கு ஏற்பக் கதையை முடித்திருந்தார். நடைமுறையில் இது சாத்தியம் இல்லை எனினும் எல்லாப் பெண்களுமாகச் சேர்ந்து பணம் போட்டு அந்த ஆசிரியையைத் தனியாக எங்கானும் குடி அமர்த்தி மாற்றி மாற்றிப் போய் முடிந்த போதெல்லாம் பார்த்துக் கொள்ளலாம். வீட்டுக்கெல்லாம் அழைத்துச் செல்ல முடியாது.
பதிலளிநீக்குநானும் அதைத்தான் நினைத்தேன்.
நீக்குகீதா அம்மா அவர்களுக்கு :-
நீக்குபொறையொருங்கு மேல்வருங்கால் தாங்கி இறைவற்கு
இறையொருங்கு நேர்வது நாடு
வந்தாரை வாழ வைக்கும் (வைத்த...?) தமிழ்நாடு... மேலும் விளக்கத்தை தாங்களே அறிந்தால் நன்று...
வீடும் இவ்வாறு இருந்ததினால், நாடும் அவ்வாறு இருந்திருக்கும்...!
துரை அண்ணா சொல்லியிருப்பது மிக மிக பாசிட்டிவ் செய்தி. நடைமுறையில் அது சாத்தியமா என்றால் கொஞ்சம் கஷ்டம்தான். மனைவியின் பெற்றோரை, அல்லது கணவனின் பெற்றோரையே பார்த்துக் கொள்ள மனம் இல்லாதவர்கள் பலர் இருக்க....
நீக்குஆனால் எனக்குத் தெரிந்து ஆண் ஆசிரியர் ஒருவர், பெண் ஆசிரியர் ஒருவரை முதலாமவருக்கு மனைவி இறந்துவிட்டார், இரண்டாமவருக்கு கணவர் இறந்துவிட்டார்...வெவ்வேறு ஊர். ஒருவருக்கு தங்கள் வீட்டருகில் சின்னதாக ஒரு ரூம் ஒன்று கொடுத்து மாணவர் குடும்பத்தார் கவனித்துக் கொண்டார்கள். இதுவும் சிறு கிராமம்.
அது போல ஆசிரியைக்கும் ஊரே கவனித்துக் கொண்டது. அதெல்லாம் சின்ன சின்ன கிராமங்கள். என் கசின் வழி கிடைத்த செய்திகள்.
கீதா
நன்றி டிடி. மேலோட்டமாகப் பொருள் தெரிந்தாலும் மறுபடி போய்ப் பார்த்துக் கொள்கிறேன்.
நீக்குஎங்க ஆசிரியை ஒருவர் இப்படித் தனியாக இருந்தப்போ நாங்க சில மாணவிகள் ஆளுக்கு ஒரு நாள் அவங்க அவங்க அம்மா சமையலைக் கேட்டு வாங்கிப் போய்க் கொடுத்துவிட்டு வருவோம். எங்க பெண் படிக்கையில் கூட ஒரு ஆசிரியைக்கு இப்படி எங்க வீட்டு சமையலைச் சில நாட்கள் கொடுத்திருக்கோம்.
பதிலளிநீக்குநல்ல செயல். வாழ்த்துகள்.
நீக்குஇலக்கு நிர்ணயம் செய்யும் விதி தெரியாமலேயே நான் இப்படித் தான் இருந்து வந்திருக்கேன். காலம்பர சீக்கிரம் எழுந்துக்கணும்னா நாலரை அல்லது நாலு மணினு நினைச்சுட்டுப் படுப்பேன். சரியா அந்த நேரம் மூளையில் அலார்ம் அடிக்கும். எழுந்துப்பேன்.அதே போல் வெளியே கிளம்புவது என்றாலும் மூன்றரைக்கு மதியம் கிளம்பணும்னா சரியா மூன்றேகாலுக்கு எல்லா வேலையும் முடித்துக் கொண்டு தயாராகிடுவேன். இது இப்படி என நினைச்சுக்காமல் என்னையும் அறியாமல் செய்து வரும் ஒன்று..
பதிலளிநீக்குபெணகளில் சரியான நேரத்துக்கு கிளம்பவும் ஆட்கள் இருக்காங்களா? எனக்கு எந்த பிரயாணத்துக்கும் அரை மணி முன்னாலயே இரயில்வே, பஸ் ஸ்டேஷன்ல இருக்கணும். இதுவரை என்னை டென்ஷன் படுத்தாமல் இருந்ததில்லை இந்தப் பெண்கள். ஹாஹா
நீக்குகீ சா - வெரி குட்.
நீக்குநெ த - ஹா ஹா ஹா !
என்னைப் பொறுத்தவரை எங்கே கிளம்பணும்னாலும் அதற்கு அரை மணி முன்னதாகவே தயாராகி மற்றவர்களுக்குக் காத்திருப்பது தான் வழக்கம். அதே போல் துணி வாங்கச் சென்றாலும் அரை மணிக்குள் தேர்வை முடித்துக் கொண்டு துணிகளை வாங்கிக் கொண்டு விடுவோம். மேற்கொண்டு உட்கார்ந்திருந்தால் அது அந்தக் கடைக்காரரிடம் பேட்டி எடுப்பதற்காகவே!
நீக்குநெல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
நீக்குநானும் கீதாக்கா சொல்லியிருப்பது போலத்தான். குறித்த நேரத்திற்கு அரை மணி நேரம் முன்னரே கிளம்பி ரெடியாகிவிடுவேன். இது டென்ஷன், பதற்றம் என்று பலவும் இல்லாமல் இருக்க உதவும். அது போல மறக்காமல் சாமான்களை எடுத்து வைக்கவும், கடைசி நேரத்தில் ஒரு செக் செய்து கொள்ளவும் உதவும். எங்கள் வீட்டில் உள்ளவர்களும் ரயில் நிலையத்திற்கு ஒரு மணி நேரம் முன்னாடியே போக வேண்டும் என்று நினைப்பவர்கள் என்பதால்...எனவே 3.30க்கு கிளம்பணும் என்றால் நான் என் மனதில் 3 என்று குறித்துக் கொண்டுவிடுவேன்.
அது போலத்தான் காலை தினமும் எழுவதும். பயோ க்ளாக் எழுப்பிவிட்டுடும். ரொம்ப களைப்பாக இருந்தால் மட்டுமே என்னை அறியாமல் தூங்கிவிடுவதுண்டு...
கீதா
எல்லோருமே எழுந்துவிடுவதில் நல்ல, workable பிளான் கொண்டுள்ளீர்கள். வாழ்த்துகள்.
நீக்குகேள்வி, பதில்கள் அதிகம் இல்லாமல் கொஞ்சம் சுவாரசியம் குறைவாகத் தான் இருக்கு. இன்னிக்கு ஏதானும் கேள்வி கேட்க முடியுமா யோசிக்கிறேன். அதுக்குள்ளே, "கேள்வியின் நாயகி" வந்தாலும் வருவாங்க. அவங்க புதன்கிழமையை விட மாட்டாங்களே! :)))))))
பதிலளிநீக்குகாத்திருக்கிறோம்!
நீக்குஅனைவருக்கும் காலை வணக்கம். கேஜிஜி சார் சுறுசுறுப்பு என்பதை மறந்துவிட்டேன். அதற்குள் நிறைய கருத்துகள்.
பதிலளிநீக்குஇதோ நானும் இடுகையை படிக்கச் செல்கிறேன்
வாங்க, வாங்க, படிங்க, சொல்லுங்க!
நீக்குகேள்வி பதில்கள் அருமை...
பதிலளிநீக்குநன்றி, தி த !
நீக்குசகோதர சகோதரிகள்
பதிலளிநீக்குஅனைவருக்கும் காலை வணக்கம்.
கேள்வி பதில்கள் எப்போதும் போல் அருமை. ரசித்தேன்.
நாளை என்பதை வைத்துக்கொண்டு சனீஸ்வரரை ஏழரை ஆண்டுகள் காலம் திசை திருப்பிய விநாயக பெருமானின் கதை கேட்ட நினைவு வருகிறது.
நாளை என்பதற்கு அடுத்த நொடியையும் கணக்கில் கொள்ளலாம் என்ற தங்களின் பதில் பிடித்திருந்தது.
அந்த அடுத்த நொடியின் நிகழ்வு நம் கையில் இல்லை என்றிருக்கும் போது, வரும் அந்த நொடி அனைவரையும் மகிழ்வோடு இருக்க வைக்க பிராத்திக்கலாம். பகிர்வுக்கு மிக்க நன்றி.
நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.
நன்றி, நன்றி!
நீக்குஅனைவருக்கும் வணக்கம் வாழ்க வளமுடன்
பதிலளிநீக்குவணக்கம், வாழ்க வளமுடன்!
நீக்குஅனைவருக்கும் இனிய காலை வணக்கம். படித்துப் பின்னூட்டம் இடுகிறேன்.
பதிலளிநீக்குஇனிய காலை வணக்கம். படித்துப் பின்னூட்டம் இடுங்க!
நீக்குகேள்விகளும் பதில்களும் அருமை.
பதிலளிநீக்குநான் எப்போது அதிகாலை 4 மணிக்கு எழுந்து கொள்வேன்.
இப்போது மூன்று மணிக்கே எழுப்பிவிட்டுவிடுகிறது சில நேரங்களில்.
நல்ல முன்னேற்றம்தான் !
நீக்குதுரை அண்ணாவின் கதை பற்றிய பானுக்காவின் கேள்விக்கு பதில்கள் அருமை.
பதிலளிநீக்குகௌ அண்ணாவின் பதில் மிக மிக யதார்த்தம் ரசித்தேன்.
கீதா
நன்றி!
நீக்குகௌ அண்ணா சமீபத்திய கீ சு வைப் பார்க்கலியோ?!!!!!!!!!!!!!!!!!!! அதான் படமில்லை போல!!!!!!!!!!!!!!!ஒரு சில படங்களுக்காக ரொம்பவே வொர்க் அவுட் செய்து மெலிந்து வாழைத்தண்டு போல, இஞ்சி இடுப்பழகியாக ஆகியிருக்காராமே!!!!!!!!!!!!! அந்தப் படம் போடுவீங்கனு நினைச்சேன்!!ஹிஹிஹி
பதிலளிநீக்குகீதா
இது ஜொள்ளா லொள்ளா!
நீக்குஹா ஹா ஹா கௌ அண்ணா லொள்ளுதேன்!!!!
நீக்குகீதா
kee su. Yaaruppaa. I am way behind in all these.😂😂😂😂😂😂😂
நீக்குகீர்த்தி சுரேஷ்.
நீக்குபாம்பின் கால் பாம்பறியும் என்று சொல்லப்பட்டாலும் பெண்களாலேயே பெண்களின் மனதைப் புரிந்து கொள்வது என்பது இருந்திருந்தால் மாமியார் மருமகள் நாத்தனார் பிரச்சனைகள் எழாமல் இருக்குமன்றோ?!
பதிலளிநீக்குசகோதரிகளுக்குள்ளேயேயும், அம்மா பெண்ணிற்கும் இடையே கூட பிரச்சனைகள் வந்து முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு பேசாமல் இருப்பதும் நடக்கிறதே...இதற்குக் காரணம் என்னவாக இருக்கும்? உங்கள் பதில்கள். (பலரது பதில்களும் பின்னூட்டத்தில் இதில் எதிர்பார்க்கிறேன்)
கௌ அண்ணா இது புதன் கேள்வி. (பானுக்கா நன்றி அவங்க கேள்வியிலிருந்து பிறந்த கேள்வி ஹிஹிஹி)
கீதா
பதில் சொல்வோம்.
நீக்குஇந்தக் கேள்வியை வேறு விதமாக நான் முன்னர் ஓர் புதன் கேள்விக்குக் கேட்டிருக்கிறேன் தி/கீதா! என்னைப் பொறுத்தவரை முக்கியக் காரணம் பொறாமையும், possessiveness எனப்படும் தனக்கு மட்டுமே சொந்தம் என்னும் எண்ணமுமே முக்கியக்காரணம். அதாவது நான் பார்த்தவரையிலும். அண்ணனுக்குத் திருமணம் ஆகி 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆனாலும் அண்ணன் மனைவியை லட்சியம் செய்யாமல் அண்ணனுக்குத் தான் தான் எல்லாம் செய்வேன், இதில் அண்ணன் மனைவி குறுக்கிடக் கூடாது என்னும் நாத்தனார்கள் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இது பிடிக்காது உங்க அண்ணனுக்கு என்று அண்ணன் மனைவி சொன்னாலும், "உனக்கு ரொம்பத் தெரியுமோ? அவர் என் அண்ணன்!" என்று திமிராகப் பதில் சொல்லும் பெண்கள் இன்றும்/அன்றும்/என்றும் உண்டு.
நீக்குஓ கீதாக்கா கேட்டுவிட்டீங்களா...சரி சரி பரவால்ல....எக்ஸாம்ல ஒரே கேள்வி ஒவ்வொரு வருஷமும் மாத்தி மாத்தி அதாவது ட்விஸ்ட் பண்ணி பண்ணி கேட்கறாங்களே அப்படினு வைச்சுக்குவோம்...ஹா ஹா ஹா
நீக்குகீதா
கேளுங்க, கேளுங்க!
நீக்குவழக்கம்போல் கேள்வி பதில்கள் ரசிக்க வைத்தன...
பதிலளிநீக்குநன்றி!
நீக்கு@ பானுமதி வெங்கடேச்வரன் மேடம் - //நாம் நம்மைப்பற்றி நினைப்பதையே மற்றவர்களும் நினைப்பதால் // - அப்படி நம்மால் சரியாக நம்மைப்பற்றி கணிக்க முடிந்தால், நாம் சரியாக யாரைப்பற்றியும் ஓரளவு கணிப்பதில் வல்லவர் என்று பெருமைப்பட்டுக்கொள்ளலாம். எனக்கு ரத்தக்கண்ணீர் பாடலான,
பதிலளிநீக்குதன்னையறிந்து ஒழுகுவோர் தன்னை மறைப்பார்
தன்னை அறியாதவரே தன்னைக் காட்டுவார்
என்ற பாடல் நினைவுக்கு வந்தது.
என்னைப் பொறுத்தவரை நான் என்னைப்பற்றிப் பெரிசா நினைக்க எதுவும் இல்லை என்ற உண்மை எனக்கு மட்டுமே தெரியும்! ஆகவே மற்றவர்கள் என்னைப் பற்றிப் பெரிசா, "எல்லாம் தெரிஞ்சவங்க! புத்திசாலி!" என நினைக்கையில் உள்ளூரச் சிரிப்பு வரும். நம்ம லட்சணம் நமக்குத் தானே தெரியும்!
நீக்குஆமாம், ஆமாம், நானும் அப்படித்தான்!
நீக்குகீசா மேடம்.... உண்மையிலேயே எல்லோரும் யோசித்தாம், நம் அளவுல நாம வெகு சாதாரணம் என்பது புரியும். இது சச்சினாகட்டும் வேறு எவராகட்டும். ஏதோ ஒரு சக்தி, நமக்குத் திறமை கொடுத்து நம்மை முன்னேற்றுகிறது என்பதை உணரமுடியும். நான் இதனை நன்கு உணர்ந்திருக்கேன்.
நீக்குஅர்ஜுனனுக்கு ஏற்பட்டதுபோல, அவங்க அவங்க ரோல் முடிந்த உடனே புகழ் வெளிச்சத்திலிருந்து கொஞ்ச கொஞ்சமா மறைந்துவிடுவார்கள்.
"பதவி பூர்வ புண்யானாம்" என்பதுபோல நம் வாழ்க்கையே நாம் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்து நம்மை மீறிய சக்தியால் நடத்தப்படுவது. அவ்ளோதான்.
கீதாக்கா ஹைஃபைவ்!!! மீக்கும் அதே அதே சிப்பு சிப்பா வரும்..! ஹையோ பாவம் என்னைப் பத்தி இம்பூட்டு நினைக்கிறாங்களே அப்ப அதுக்காகவேனும் நாம் நம்மள நல்லாக்கிக்கணும்னும் என்னை உத்வேகப் படுத்திக்குவேன்...இது நம்மை நாமே செம்மைப் படுத்திக்க ஒரு வழினு. நம்மைப் பற்றி நமக்குத் தெரியும் நாம் அப்படி ஒன்னும் அறிவாளி இல்லைனு தோணினாலும் நம்மைச் சுற்றி உள்ளவர் நம்மை முட்டாள்னு திட்டினாலோ, அறிவு கெட்ட முண்டம்னு திட்டினாலும் இன்னும் சில கெட்ட வார்த்தைகள்னு வைச்சுக்கங்க... நம்மகுக் கொஞ்சம் நம்மை சிறுமைப்படுத்துவது போலத் தோன்றும் இலையோ? (எனக்கு அப்ப்டித் தோன்றும். நான் அறிவாளி இல்லை ஆனால் பிறர் அதுவும் எல்லார் முன்னும் சொன்னால் கொஞ்சம் அப்படித் தோன்றியதுண்டு. நான் அந்த இடத்தை விட்டு விலகிவிடுவேன்..) அது நமக்கு ஒரு நெகட்டிவிட்டியைத் தரும் என்றே எனக்குத் தோன்றும். ஆனால் கொஞ்சம் நல்லது சொன்னால் ..முதலில் சொன்னதாக என்னை மேம்படுத்த உத்வேகமாக எடுத்துக் கொள்வது வழக்கம்.
நீக்குகீதா
இது ஆஞ்சு கதையை நினைவு படுத்தியது நெல்லை அண்ட் கீதாக்கா. இலங்கைக்குத் தூது போக ஆஞ்சுவை ஜாம்பவான் உத்வேகப்படுத்தி உன்னால் முடியாதது எதுவுமில்லை என்று அவரை உசுப்பேத்தி விட்டதாகக் கதை உண்டுல்லியா...அந்தக் கதை. என் தாத்தா எனக்கு இந்தக் கதையைச் சொல்லி ஆஞ்சநேயரை வழிபடும் போது, ஆஞ்சநேயா அதைத் தா இதைத் தா என்று கேட்காதே. அவரைப் போற்றிச் சொன்னாலே போதும் என்று. இது ஆழமாகப் பதிந்த ஒன்று என் மனதில். அதே போல, நான் பள்ளியில் படித்த போது ரொம்பவே கஷ்டப்பட்டேன். கணக்குப்பாடத்தில். ஃபிசிக்ஸ் பாடத்தில் எல்லாம். என் வீட்டில் எல்லாரும் ரேங்க் ஹோல்டர்ஸ் என்னைத் தவிர. ஸோ வீட்டில் ரொம்பவே சுட்டிக் காட்டுவதுண்டு. அதுவும் ஜாயின்ட் ஃபேமிலி. எனக்கு தாழ்வுமனப்பான்மை வரத் தொடங்கியது என் ஆசிரியை மேரிலீலா அவர்களிடம் சொல்லி அழுவேன். அப்ப டீச்சர் என்னை மிகவும் என்கரேஜ் செய்து...என்னிடம் இருக்கும் திறமைகளை, பாட்டு, கட்டுரை, பேச்சுப் போட்டி, கதை எழுதுவது, கேம்ஸில் இருக்கும் திறமை, டிராமா என்று சொல்லி உத்வேகப்படுத்துவார். அப்போது சொன்னது, நாம் நம்மைப் பற்றி பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டாம். அது தலைக்கனம் ஏற்படுத்தும். அப்படிப் பெருமைப்பட்டுக் கொண்டால் சந்தோஷப்பட்டு உன்னை நீ தட்டிக் கொடுத்துக் கொள் உன்னை உத்வேகப்படுத்திக் கொள்ள மட்டுமே அதைப் பயன்படுத்திக்கணும். நம்மைவிட உயர்ந்தவர்கள் இவ்வுலகில் நிறைய இருக்காங்க. நாம் கற்றது கைமண் அளவே. நாம் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. ஒரு சின்ன சட்டில் லைன் தான் அது. ஆனால் அதே சமயம் உன்னை எங்கும் சிறுமைப்படுத்திக் கொள்ளவும் கூடாது. தாழ்வாக நினைக்கவும் வேண்டாம் என்று. இது மனதில் ஆழப் பதிந்த ஒன்று.
நீக்குகீதா
நல்ல புத்திமதி. ஆம். நன்று. நன்றி.
நீக்கு//நாம் நம்மைப்பற்றி நினைப்பதையே மற்றவர்களும் நினைப்பதால் // நல்ல அறிவுரைக்க்கா. பின்பற்றுகிறேன்க்கா (ஹா ஹா ஹா)
நீக்கு// நம் வாழ்க்கையே நாம் வாங்கி வந்த வரத்தைப் பொறுத்து நம்மை மீறிய சக்தியால் நடத்தப்படுவது. அவ்ளோதான்// சரியாகச் சொன்னீர்கள் நெ த
நீக்குஹிஹிஹி, தி/கீதா, ஃபிசிக்ஸ்னா என்ன?????????????????? :))))
நீக்குகேள்வி பதில் நன்றாக இருந்தது. ஞாயிறு அன்று நீங்கள் ரிமைண்டர் கொடுத்துவிடலாம்.
பதிலளிநீக்குபடம் போட வாய்ப்பு இருந்தும் நீங்க படம் போடலை. கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
அந்த ஸ்கூல் கேர்ள் தமன்னாதான் ! நல்லாப் பாருங்க!
நீக்குநீங்க கொடுத்த மறுமொழியைப் படிச்சுட்டு அந்தப் பெண்ணே தலையில் அடித்துக்கொள்கிறாரே... நீங்கள் அதைக் கவனித்தீர்களோ கேஜிஜி சார்?
நீக்குஹா ஹா ஹா ஹா சிரிச்சு முடில...கௌ அண்ணா அண்ட் நெல்லை உங்க ரெண்டு பேர் பதிலும் பார்த்து!
நீக்குகீதா
தமன்னா தலையில் அடித்துக்கொள்வது, 'என்னடா இது! அகில உலக த ர மன்றத் தலைவருக்கே என்னை அடையாளம் தெரியவில்லையே ' என்றுதான்!
நீக்கு//
நீக்குகௌதமன்5 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 9:31
அந்த ஸ்கூல் கேர்ள் தமன்னாதான் ! நல்லாப் பாருங்க!//
ஹா ஹா ஹா அப்பூடி நினைச்சுத்தான் மீயும் உத்தோ உத்தென உத்துப் பார்த்தேன் ஆனா எங்களை விட டமனாக்காவின் விரல் நுனியை வச்சே கண்டு பிடிச்சிடுவார் நெ.டமிலன்:)) அதனால அவர் சொன்னால் அது சரியாத்தான் இருக்கும்:)) ஹையோ ஏன் இப்போ நெ தமிழன் ஓடுறார்ர் ஹா ஹா ஹா:)).
ஓடினது பூதக் கண்ணாடி எடுத்துட்டு வந்து திரும்பவும் படத்தை ஆராய்ச்சி பண்ணத்தான். ஹாஹா
நீக்குசமீபகாலமாக சிலர் அடிக்கடி சொல்லுவது எதுவுமே சரி, தப்பு என்றில்லை. அவரவர் பார்வையில், எண்ணங்களில் செய்வது, முடிவெடுப்பது. அதற்குரிய ரிசல்டை ஃபேஸ் செய்யணும் அவ்வளவே என்று. இந்த எண்ணம் எவ்வளவு தூரம் சரி? (பின் விளைவுகளை நாம் ஃபேஸ் பண்ணித்தான் ஆக வேண்டும் என்பதை ஏற்கிறேன் ஆனால் தவறு என்பதே இல்லை என்பதுதான்)
பதிலளிநீக்குஅப்படி என்றால் நம் முன்னோர்கள், பெரியவர்கள், நீதி நூல்கள் இது தவறு, சரியல்ல என்று சொல்லுவதின் மதிப்பு என்ன?
கீதா
இது அடுத்த வாரத்துக்கான கேள்வியா?
நீக்குகௌ அண்ணா ஆமாம் அண்ணா..
நீக்குகீதா
//
நீக்குகௌதமன்5 ஜூன், 2019 ’அன்று’ முற்பகல் 10:57
இது அடுத்த வாரத்துக்கான கேள்வியா?//
ஹா ஹா ஹா ஹையோ என்னால முடியல்ல:) நான் சொன்னனே கெள அண்ணனே கொன்பியூஸ் ஆகும் ரேஞ்சில இருக்கு கீதாவின் கிளவிகள் சே..சே கேள்விகள்..:) விடாதீங்கோ கீதா இப்பூடித்தான் கீப் இட் மேலே...
ஆரம்பிச்சாச்சா குழப்ப? நடத்துங்க, நடத்துங்க ! அதிரா! உங்க ராஜ்ஜியம்!
நீக்குஹா ஹா ஹா நாரதர் கலகம் நன்மையில்தானே முடியும் கெள அண்ணன்:))
நீக்குஓ! அப்படியும் சொல்லலாம்!
நீக்குகணவன் மனைவிக்கு இடையில் ஒத்து வரவில்லை. மனைவி தன் மன உணர்வுகளைச் சொல்கிறாள். சில நியாயங்கள் கேட்கிறாள். கணவன் அதைக் கேட்டாலும், கடைசியில் சொல்வது...ஓகே உனக்கு ஒத்து வரலைனா பிரிஞ்சிரலாம். உனக்கு என்ன வேணுமோ அதைப் பேசித் தீர்த்து செட்டில் செய்கிறேன் என்பதை பதிலாகச் சொல்லுவது சமீபகாலங்களில் நான் கேட்டு வருவது. அதாவது இதற்குப் பெயர் ஸ்மூத்தாகப் பிரிதல். மனைவி பணத்தைப் பற்றியோ செட்டில்மெண்டைப் பற்றியோ எதிர்பார்க்காமல் அதைப் பற்றிக் கவலைப் படாமல் ஜஸ்ட் தனக்கான, கணவனுடன் வாழ்ந்த வருடத்திற்கான நியாயத்தைத் தன் உணர்வுகளைச் சொல்லிக் கேள்வி கேட்பது தவறா?
பதிலளிநீக்குகீதா
கீதா ரங்கன் - "உனக்கு என்ன வேணுமோ அதைப் பேசித் தீர்த்து" - இப்படிச் சொல்பவர்களே மிகவும் குறைவல்லவா? அதுவே அவங்க நியாயவான் என்பதைக் காட்டுகிறதல்லவா?
நீக்குஇடையில் ஒத்து வரவில்லை என்பது பெரிய வார்த்தை. கருத்து மாறுபாடைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். ஒத்து வரலை என்று சொன்னாலே, "நான் பிரிய ஆசைப்படுகிறேன்" என்று சொல்லாமல் சொல்வது போல்தானே
இந்தப் பேசித் தீர்த்து என்பது பணம் செட்டில்மென்ட் நெல்லை...கருத்து வேறுபாடில்லை...
நீக்குகீதா
தன் உணர்வுகளை மனைவி சொல்லும் போது அதைப் பேசித் தீர்க்கப் பிரியப்படாமல் ஒத்து வரலைனா உனக்குத் தேவையானதைப் பேசித் தீர்த்து என்பது இங்கு பணம் செட்டில்மென்ட். அதைத்தான் சொல்லியிருக்கேன் நெல்லை. அப்ப அங்கு பெண்ணின் நியாயமான உணர்வுகளுக்கு (இங்கு நான் சொல்வது நியாயமான...) மதிப்பில்லை என்பது போலத்தானே ஆகுது..
நீக்குகீதா
இது ஈகோ தானே இல்லையா?
நீக்குகீதா
//இது ஈகோ தானே இல்லையா?//
நீக்குகடவுளே கடவுளே கேள்விக்குறி போட்டிட்டீங்க கீதா.. ஹா ஹா ஹா:)) இதுவும் புதன் சிம்மாசனத்தில அமரப்போகுதூஊஊஊ:)))
//ஓகே உனக்கு ஒத்து வரலைனா பிரிஞ்சிரலாம். உனக்கு என்ன வேணுமோ அதைப் பேசித் தீர்த்து செட்டில் செய்கிறேன் என்பதை பதிலாகச் சொல்லுவது சமீபகாலங்களில் நான் கேட்டு வருவது.//
நீக்குஇந்தப் பதில் திடீரென வராது கீதா.. அது இதுக்கு முன் எவ்ளோ விட்டுக்குடுப்புக்கள் பேச்சு வார்த்தைகள் என நிகழ்த்தி அலுத்துப் போகும் கட்டத்திலதான் இப்படி வார்த்தை வரும்.. இனியும் எதுக்கு இழுத்தடிச்சு இருவர் வாழ்வையும் வீணடிக்கோணும்...
“பிரிவதெனத் தீர்மானித்தபின்,
உனக்கும் எனக்குமிடையே
பகை எதுக்கு?:))”.. இப்பூடி இருக்குமோ?:) ஹா ஹா ஹா
//இடையில் ஒத்து வரவில்லை என்பது பெரிய வார்த்தை. கருத்து மாறுபாடைப் பேசித் தீர்த்துக்கொள்ளலாம். ஒத்து வரலை என்று சொன்னாலே, "நான் பிரிய ஆசைப்படுகிறேன்" என்று சொல்லாமல் சொல்வது போல்தானே//
நீக்குஐ ரோட்டலி புரூட்டலி அக்றீ வித் நெல்லைத்தமிழன்:)) ஹா ஹா ஹா நாங்க ஒரு நீதிமன்றம் ஆரம்பிக்கலாம்போல இருக்கே எங்கள்புளொக்கில்:))
வழக்காடு மன்றம் ஆரம்பிக்கவேண்டியதுதான்!
நீக்குகதை என்றாலே கற்பனை தானே? நாம் கூட பேச்சுவாக்கில் யாரேனும் உடான்ஸ் விட்டால் ஏய் சும்மா கதை விடாத என்றுதான் சொல்லுகிறோம் இல்லையா? அப்படியிருக்க ஏன் கதைகளில் யதார்த்தம் தேடுகிறோம்?
பதிலளிநீக்குகௌ அண்ணா இதுவும் புதன் கேள்வி
கீதா
//கௌ அண்ணா இதுவும் புதன் கேள்வி//
நீக்குஹா ஹா ஹா ஜொன்னாத்தான் தெரியுது:)) ஹையோ ஹையோ ஹா ஹா ஹா..
//இலக்கை நிர்ணயிக்க முக்கியமானது எத
பதிலளிநீக்குஆஆஆஆஆஆ இலக்குத்தான் வேறை என்ன?:) ஹா ஹா ஹா.. விழுவதை எல்லாம் இம்முறை ஒழுங்காப் பெறுக்கிப்போட்டிட்டார் கெள அண்ணன்:)) நல்ல வேளையா நான் எதையும் விழுத்தேல்லை ஜாமீஈஈஈஈ:)
இது என்ன விழுப்புரம் பாஷையோ எனக்கு விளங்கவில்லை!
நீக்குஅதிராவுக்கான டிக்ஷனறி நெல்லைத்தமிழனிடம் இருக்கு:)) ஒரு நாள் மட்டும் கடனாக் கேட்டுப்பாருங்கோ கெள ஆண்ணன்:))
நீக்குஅதிராவுக்கான டிக்ஷனரி எனக்கு எதற்கு! அதை அவர் அதிராவுக்கே அனுப்பட்டும்!
நீக்குகெள அண்ணன் உங்களுக்கு ரெம்ம்ம்பப் பொறாமை:)).. அந்த ஆரோ ஊர் பேர் தெரியாத அக்கா தலையில கை வைச்சுக்கொண்டு ஓசிக்கிறாவே:) அதுக்குப் பதில் ஒரு அனுக்கா.. டமனா:)) படம் போட்டு இங்கின சிலரை கிளுகிளுப்பாக்கியிருக்கலாமெல்லோ :)) காசா பணமா?:)) ஹா ஹா ஹா..
பதிலளிநீக்குநெசம்மாவே அது தமன்னாதான்! சின்ன வயசுல எடுத்த போட்டோவாம்!
நீக்குஅதிராவோட அட்வைஸெல்லாம் அடுத்தவங்களுக்குத்தான் போலிருக்கு.......
நீக்குகேஜிஜி சார்...அநியாயமா தெரிந்தே பொய் சொல்லலாமா?
:))
நீக்குஏங்க? அநதப் பொண்ணு பேரு தமன்னா என்று இருக்கக்கூடாதா! முழுப் பெயர் தமன்னா லூட்டியா என்று வைத்துக்கொள்வோம்!
நீக்குதமன்னா லூட்டியா?.. பாட்டியா?...
நீக்குபாட்டியா அல்லது லூட்டியா !
நீக்கு//சில கயவர்கள் எப்படி பெண்களை மயக்குகிறார்கள்?
பதிலளிநீக்கு# இதற்கு பெண்களின் தெளிவின்மைதான் காரணம். இவ்வளவு எளிதாக ஏமாறுவதை வேறு எப்படிச் சொல்வது ?
& பெண்கள் வெளுத்ததெல்லாம் டினோபால் என்று சுலபமாக நம்பிவிடுவதுதான் காரணம்! //
100 வீதம் உண்மை.. பெண்களை ஏமாத்துவது மிக மிக சுலபம்.. இதில் குழந்தை முதல் பாட்டி வரை யாரும் விதிவிலக்கல்ல...
இதிலிருந்து புரிஞ்சுக்கோங்க:)).. பெண்கள் மனம் மென்மையானது:)) ஈசியா இளகிவிடக்கூடியது:)).. ஆனா அதேபோல ஒரு பெண் ஒருவரை மனதார வெறுக்க தொடங்கினாலும் பின்பு அப்பெண்ணை மாற்றிப் பழைய நிலைக்குக் கொண்டுவருவது மிகவும் கஸ்டம்... அன்பைக் கொடுப்பதிலும் சரி, எதிர்ப்பதிலும் சரி எக்ஸ்...ரீம் லெவலுக்குப் போகக்கூடியவர்கள் பெண்கள்:))
பயமா இருக்கு!
நீக்குஹா ஹா ஹா
நீக்கு//நெல்லைத்தமிழன் சொன்ன பதில் :
பதிலளிநீக்குஒருவேளை, நாம் 'மோசமானவன்' என்று நம்மைப் பற்றி நம் உள்மனசுக்குத் தெரிந்து, அதுவே மற்றவர்களின் கணிப்பாகவும் இருந்தால், 'நாம் எப்படி நல்லவர்' என்று சொல்வது? //
நம்மை நாமே.. கெட்டவர் என எப்பவும் எண்ணிடக்கூடாது.. அது கெட்ட செயல்கள் செய்திருந்தால்கூட..
நான் நல்லபிள்ளை என உள்மனம் சொல்லச் சொல்ல.. நம்மை அறியாமலேயே நல்லவர்களாக மாறிவிடுவோம் என்பதுதான் உண்மை... பின்ன
“எங்களை நாங்களேதான் புகளோணுமாக்கும்:)) அடுத்தவர்களோ வந்து புகழப்போகினம்:))” ஹா ஹா ஹா..
நல்ல டெக்னிக்!
நீக்குஅதே அதே :) இது ஒருவகை பாசிட்டிவிட்டி .இப்படி அடிக்கடி நானும் என்னை புகழ்ந்துப்பேன் :)
நீக்குமனதுக்குள்ளா அல்லது வாய்விட்டு வெளியே கேட்கும்படியா?
நீக்குஹாஹாஹா :) நல்லா சத்தமா /வெல்டன் ஏஞ்சல் யூ rock கீப் இட் அப் இப்படி அடிக்கடி கத்தி கத்தி சொல்லுவேன்
நீக்கு///Angel5 ஜூன், 2019 ’அன்று’ பிற்பகல் 6:28
நீக்குஹாஹாஹா :) நல்லா சத்தமா /வெல்டன் ஏஞ்சல் யூ rock கீப் இட் அப் இப்படி அடிக்கடி கத்தி கத்தி சொல்லுவேன்//
அச்சச்சோ அஞ்சுப்பிள்ளைக்கு என்னமோ ஆகிடுச்சூஊஊஊஊ.. நெல்லைத்தமிழன் அந்த தாயத்தை எடுத்துக்கொண்டு ஓடிக் கமோன்ன்ன்:)) அதுவரை அஞ்சுவுக்கு கதை குடுத்தபடி தேம்ஸ் கரையில வச்சிருக்கிறேன் ஆளை:)) ஹா ஹா ஹா.
:))
நீக்குநீங்கள் இதுவரை ஏறாத வாகனம்/சவாரி எது? ஏற விரும்புவது என ஏதும் உண்டோ?
பதிலளிநீக்குநான் என்னைச் சொன்னால் ஹெலிகொப்டர்தான் இன்னும் ஏறவில்லை நான்.. மற்றும்படி.. கப்பல், படகு, ஃபெரி, கார், பஸ், லொறி,வான், ட்றக், சின்ன கொண்டெயினர் ட்றக், ட்ரக்டர், ஜீப், சைக்கிள், மோட்டார் சைக்கிள், மாட்டு வண்டில், குதிரை வண்டிலில் ஏறியது போலவும் இருக்கு சரியா நினைவிலில்லை[மொன்றியல் போனபோது].., பிளேன்..இதிலெல்லாம் ஏறிவிட்டேன். யானை குதிரைச் சவாரி செய்ததில்லை.. கடசிவரைக்கும் 1000 கோடி தந்தாலும் செய்ய மாட்டேன்:))..
கப்பல்னா சின்னக் கப்பல் ஏறி இருக்கேன். ஃபெரி கோவாவில்! கார், பேருந்து, லாரி, ட்ரக்(அதிகம் ஆர்மி ட்ரக்)ட்ராக்டர், ஜீப், சைகிள், மோட்டார் சைகிள், மாட்டுவண்டி, குதிரை வண்டி, விமானம் எல்லாம் ஏறினதோடு அல்லாமல் கயிலை யாத்திரையில் குதிரைச் சவாரியும் பண்ணியாச்சு! ஆனைச் சவாரி தான் பண்ணலை! ம்ஹூம்! வாய்ப்பே இல்லை!
நீக்குஆஹா... இங்குள்ளவர்களில் யானை சவாரி செய்தது நான் ஒருத்தன் மட்டும்தானா? இந்தோநேஷியாவில் யானைச் சவாரி செய்திருக்கேன்.
நீக்குநானும் யானை குதிரை இந்த குழந்தைங்க மேலே ஏறியதில்லை .ஹெலிகொப்டரிலும் ஏறினதில்லை
நீக்குநானும் யானை,குதிரை இரண்டிலும் ஏறி இருக்கிறேன்.
நீக்குஎன் பத்துவயதில்.
சிறு வயதில் யானை மீது தைரியமாக ஏறி உட்கார்ந்திருக்கிறேன். என் வயதே ஆன எங்கள் எதிர் வீட்டு பையன் கதற, நான் சிரித்துக்கொண்டே ஃபோட்டோவிற்கு போஸ் கொடுத்தேன்.
நீக்குசிம்லா போயிருந்த பொழுது குதிரை சவாரி செய்திருக்கிறேன்.
மஸ்கட்டில் டெஸர்ட் சஃபாரியின் பொழுது ஒட்டகத்தை கட்டிக்கோ என்றார்கள். ஆளை விடுங்கள் என்று சொல்லி விட்டேன்.
ஹா ஹா ஹா இங்கின ஆனை குதிரையில ஏறியோர்தான் அதிகம் போல இருக்கே:)).. பானுமதி அக்கா.. ஒட்டகத்தைக் கட்டியபடி ஒரு செல்பி எடுத்திருக்கலாமெல்லோ ஹா ஹா ஹா:).
நீக்குஆஆஆஆஆஆஆஆஅ மீதான் 100 ஊஊஊஊஊஊஊஊஉ
பதிலளிநீக்குhttps://newtamilstatus.in/wp-content/uploads/2019/01/memes25.jpg
அட! ஆமாம்ல!
நீக்குகுட் ஈவினிங் ஃப்ரண்ட்ஸ். இன்றைய கேள்வியின் நாயகியாகியாகிய என்னை மறந்து விட்டு எல்லோரும் கும்மி அடிக்கிறீர்கள்...ம்..ம்..ம்..
பதிலளிநீக்குஹா ஹா ! அதானே!
நீக்குபானு மா.
பதிலளிநீக்குபாதி படிக்கும்போதே எனக்கு கிர்ரென்று தலை சுத்தியது. அறிவாளிகள்
நடுவில் நீட்டோலை வாசியாமல் பின் வாங்கி விட்டேன். டாபிக்ஸ் ஆர் சோ வாஸ்ட்.
வாழ்த்துகள் கௌதமன் ஜி, நெல்லை, கீதா சாம்பசிவம்,கீதா ரங்கன், துரை செல்வராஜு
அதிரா,ஏஞ்சல் என்று நல்ல கருத்துகள்.
பாசிடிவ் எண்ணங்கள் வர எத்தனையோ பாடல்களே எனக்குத் துணை.
அடுத்து ஆஞ்சனேய புராணம் படிக்கும் போது
மனம் பலம் பெறும்.
அதுவும் சுந்தரகாண்டம் என்னைப் பல வருடங்கள் காத்தது.
அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.
நீக்குபெண்கள் ஏமாற்றப்படுவது குறித்து கேள்வி கேட்டு அனுப்பிய பின்னர் தான் நல்ல மனிதன் பெண்ணை புரிந்து கொண்டு அவளை சந்தோஷப்படுத்த வேண்டும் என்று நினைக்கிறான். ஆனால் அயோக்கியனோ அவளுடைய பலவீனத்தை மட்டும் தெரிந்து கொண்டு அவளை கவுக்கிறான். சரியா?
பதிலளிநீக்குஇது கேள்வியா இல்லை பதிலா ?
நீக்கு1,தனிமையில் இருத்தல் தனியாக இருத்தல் வேறுபாடு என்ன ?
பதிலளிநீக்கு2,கவலையை இன்ஸ்டன்ட்டா மறக்க 5 யோசனை ??
3, mnemonic எனும் ஞாபத்தில் வைக்க உதவும் நினைவுக்குறி சொற்கள் ஆங்கிலத்தில் இருப்பது போல் தமிழில் அதிகம் இருக்கா ?
4,loreal lipstick நெயில் பாலிஷ் வெளிநாட்டு ஸ்ப்ரே வெளிநாட்டு கார் இன்னபிற வெளிநாட்டு சங்கதிகளை அன்றாடம் பயன்படுத்திட்டு சினிமாவில் மட்டும் தாய் நாடு தாய்மண் காந்தீயம் , நீதி நேர்மை நியாயம் மண் ,பச்சை மஞ்சள் என கலர்கலராய் ரீல் விடும் நாயகிகளும் இப்போதெல்லாம் எரிச்சலூட்டுகிறார்களே ?? இப்படி தோணுவது எனக்கு மட்டுமா ?
5, காதில் ear bud போட்டு சுகமா கிளறி வெளியே எடுத்து பார்க்கும்போது பஞ்சு முனை bud இல் இல்லைன்னா எப்படி உணர்வீர்கள் ?
காலி முனையை பார்த்து அலறிய அனுபவங்கள் இருக்கா ??
6, ஒருவருக்கு மின்மடல் அனுப்பி 2 வாரங்கள் ஆகியும் பதில் வரலைன்னா என்ன செய்வீர்கள் ?
7, சமீபத்தில் அச்சு பிச்சு தத்துபித்து வேலை செய்து தடுமாறிய அசடுவழிந்த சம்பவம் ஏதேனும் இரண்டு ??
8, ஒருவர் உள்ளத்தால் மனமார புன்னகைப்பது சிரிப்பது என்பதை எப்படி கண்டுபிடிக்க இயலும் ?
9, ஆன்மீகத்துக்கும் மத கொள்கைகள் நம்பிக்கைக்கும் வேறுபாடு என்ன ?
10, உங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கிறது அதன்படி ஒரு சட்டம் உருவாக்கலாம் அல்லது மாற்றி அமைக்கலாம் என்றால் என்ன செய்வீர்கள் ? எதை உருவாக்குவீர்கள் அல்லது மாற்றி அமைப்பீர்கள் ?
ஒரே ஒன்றுக்கு மட்டும் தான் அனுமதி .
ஆஆஆஆஆஆஆஆஆ ஆரம்பிச்சுட்டாய்யா ஆரம்பிச்சுட்டாஆஆஆஆஆஆ:)) அஞ்சூ இந்தாங்கோ சுடச்சுட மங்கோ லஸி:) குடிச்சிட்டுக் கொண்டினியூ யா:))
நீக்குhttp://www.roflphotos.com/tamilcomedymemes/images/roflphotos-dot-com-photo-comments-20190417112150.jpg
கேள்விகளுக்கு நன்றி. பதில் அளிப்போம்.
நீக்குdanks :)))
நீக்கு11,இளையராஜா அங்கிள் சிவகுமார் அங்கிள் . இந்த இவர்களின் சமீப கால செயல்பாடுகள் பற்றி என்ன நினைக்கின்றீர்கள் ?
நீக்குஎன்னுடைய கருத்தை அடுத்த வாரம் சொல்வேன்
பதில் அளிப்போம்
நீக்கு@ athiraaav
பதிலளிநீக்குhttp://www.roflphotos.com/tamilcomedymemes/images/roflphotos-dot-com-photo-comments-20180710175524.jpg
கேள்விபதிலுடன் தாகத்துக்கு லசியும்:)கலக்குங்க..
பதிலளிநீக்குநன்றி.
நீக்கு