வெள்ளி, 28 ஜூன், 2019

வெள்ளி வீடியோ : எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கனம் என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம்


எனக்காகக் காத்திரு.  நிவாஸ் இயக்கத்தில் 1981 இல் வெளிவந்த படம்.சுமன்-சுமலதா நடிப்பில் இளையராஜா இசை.  நான்கு பாடல்களில் இந்தப் பாடலையும் சேர்த்து மூன்று பாடல்கள் கங்கை அமரன் எழுதியது.  ஒன்று வைரமுத்து.திருச்சி லோகநாதன் பாடல் கேட்ட பானு அக்காவுக்கு, அவர் மகன் பாடிய பாடல் பரிசு!


தீபன் சக்கரவர்த்தியின் குரலில் இனிமையான ஒருபாடல்.உடன் பாடுவது எஸ் ஜானகி.  உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும், தீபன் சக்கரவர்த்தி திருச்சி லோகநாதனின் இளையபுதல்வர்.  மூத்தவர் டி எல் மகராஜன்.  தீபன் சக்கரவர்த்தி தமிழில் முதலில் பாடிய பாடல் இது.  ஆனால் இரண்டாவதாகப் பாடிய "பூங்கதவே தாழ் திறவாய்" பாடல் முதலாவதாக வெளிவந்தது.  அதுவும் கங்கை அமரன் எழுதி இளையராஜா இசைதான்.பூங்கதவே தாழ் திறவாய் புகழ் பெற்ற அளவு இந்தப் பாடல் புகழ்பெறவில்லை.  ஆனால் இரண்டு பாடல்களில் எனக்கு இதுதான் ரொம்பப் பிடிக்கும்.மலேஷியா வாசுதேவனுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்து நிறைய நல்ல பாடல்களை பாடவைத்த இளையராஜா தீபன் சக்கரவர்த்திக்கும் அதேபோல வாய்ப்புகள் கொடுத்திருக்கலாம். தீபன் கதாநாயகனாக ராணித்தேனீ, மாறுபட்ட கோணங்கள்  எனும் திரைப்படங்களிலும்  நடித்திருக்கிறார்.  அரசாங்கம் எனும் திரைப்படத்தில் விஜயகாந்துடன் நடித்திருக்கிறாராம்.  

இந்தப் பாடலில் இளையராஜாவின் இசை மிக ரசனை.  எடுத்த உடனேயே பாடலின் வரிகள் தொடங்க, தொடரும் வயலின் இசை உயரமாய் எழுகிறது. 

சுமனின் கூடையைக் கவிழ்த்த மாதிரியான சிகையலங்காரம் புன்னகைக்க வைக்கிறது.  நீச்சல்குளம் எனும் படத்தில் தமிழில் முதலில் நடித்த சுமன் ஆங்கிலப்படத்தில் கூட நடித்திருக்கிறாராம்!  சுமலதா தற்போதைய மாண்டியா தொகுதி எம் பி! அப்போதைய பரபரப்பான நடிகை.  
ஓ நெஞ்சமே இது உன் ராகமே 
கோடைக் காற்றில் கூடும் கூட்டில் 
கொண்டாடிடும் இன்பம் கண்டு ஆடும் பாடும் 

எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே 
என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே 
எண்ணங்களின் வண்ணங்களில் உன் தோற்றமே 
என் நெஞ்சிலும் நான் காண்கிறேன் ஓர் மாற்றமே 
யாரோடு யாரை கைசேர்ப்பதென்று 
யார் சொல்லக்கூடும் நம்மோடு இன்று 
சேரவேண்டும் ஒன்று சேர்ந்து வாழவேண்டும் 

எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கனம் 
என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம் 
எங்கெங்கிலும் இன்பங்களின் ஆலிங்கனம் 
என் உள்ளமும் உன்னோடுதான் சேரும் தினம் 
என் ஆசை  யாவும்  உன்னோடு பின்னும் 
என் தேவை யாவும் நீ தந்த பின்னும் 
ஏங்கி வாடும் இந்த நேரம் தாங்கவேண்டும் இந்தப் பாடல் கேட்டுக்கொண்டிருக்கும்போது என் இளையவன் ஒரு ஹிந்திப்பாடலை நினைவு கூர்ந்தான்.  இந்தப் பாடல் கேட்டால் அந்த ஹிந்திப் பாடல் நினைவுக்கு வருகிறது என்றான். அடிக்கடி இதுமாதிரி கண்டுபிடிப்பதில் அவன் ஜித்தன்.  அவன் சொன்ன பிறகு எனக்கும் அது கொஞ்சம் சரி என்றே தோன்றியது.  அந்த ஹிந்திப் பாடல் எனக்கு மிகவும் பிடித்த கிஷோர் குமார் பாடல்.   நீங்களும் கேட்டுச் சொல்லுங்களேன்.

இது தமிழ் ஞான ஒளியின் ஹிந்தி வடிவம். தமிழிலிருந்து ஹிந்தியில் எடுக்கப்பட்ட படம்.  இசை ஆர் டி பர்மன்.  பிடித்த இசை அமைப்பாளர், பிடித்த பாடகர். இதன் சரணம் குறிப்பாக கிஷோர் பாடும் சரணம் எனக்கு மிகவும் பிடிக்கும்.

131 கருத்துகள்:

 1. இனிய காலை வணக்கம் ஸ்ரீராம் மற்றும் தொடரும் எல்லோருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
 2. அன்பின் ஸ்ரீராம்..
  கீதாக்கா/ கீதா மற்றும் அனைவருக்கும் நல்வரவு....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. உங்களுக்கும் இனி வரப்போகும் நட்புறவுகளனைவருக்கும் நல்வரவும் வணக்கமும் துரை செல்வராஜூ ஸார்.

   நீக்கு
 3. மலேஷியா வாசுதேவனுக்கு நிறைய வாய்ப்புகள் கொடுத்து நிறைய நல்ல பாடல்களை பாடவைத்த இளையராஜா தீபன் சக்கரவர்த்திக்கும் அதேபோல வாய்ப்புகள் கொடுத்திருக்கலாம். //

  ஆமாம் ஸ்ரீராம். எனக்கும் இப்படித் தோன்றியதுண்டு. இன்னும் நிறையப் பாடகர்கள் பாடகிகள்...

  அதில் ஏஆர் ஆர் அவரை பாராட்டியே தீர வேண்டும். புதிய புதிய பாடகர்களை அறிமுகப் படுத்துவதிலும் சரி நிறைய வாய்ப்புகள் கொடுப்பதிலும் சரி.

  தீபன் சக்கரவர்த்தி நடித்தும் இருப்பது புதிய தகவல்.

  அவர் வாய்ஸ் நல்ல வாய்ஸ்.

  இது என்ன பாட்டு என்று யோசித்துக் கொண்டே கேட்கப் போகிறேன் கேட்டுவிட்டு வஏன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இவரும் புதிய பாடகர்களுக்கு வாய்ப்பு கொடுத்திருக்கிறார் கீதா. தீபன் சக்கரவர்த்தி நடித்திருப்பது எனக்குமே புதிய தகவல்தான்!

   நீக்கு
  2. என்ன இப்படி இருந்திருக்கிறீர்கள்!?..

   வட்டாரத்திலேயே நல்ல பிள்ளை போலிருக்கிறது!...

   நீக்கு
  3. ஸ்ரீராம் கொடுத்திருக்கிறார் இல்லை என்று சொல்ல முடியாதுதான். ஆனால் அதன் பின் ஏனோ ஒரு சிலரின் வாய்ஸ் மட்டுமே அதிகம் பயன்படுத்தியிருக்கிறார் என்று தோன்றும். ஒரு சிலர் வெளிவராததன் காரணம் என்ன என்று தெரியவில்லை. ஒரு வேளை எனக்குப் புள்ளிவிவரம் தெரியவில்லையோ!! அதிகம் கேட்காததன் காரணத்தினால்...ஹிஹிஹி

   கீதா

   நீக்கு
  4. இருக்கலாம். அதனாலேயே பல பாடல்கள் இன்றும் மனதில் நிற்கிறதோ என்னவோ!

   நீக்கு
 4. ஜனனி ஜனனி பாடலில் தீபனின் குரலும் இணையாக ஒலிக்கும்....

  தீபனுக்கு இளைய ராஜா பாடல் வழங்காதது குறித்து நாம் என்ன சொல்ல முடியும்...

  அவரவரும் ஒரு நியாயம் வைத்திருக்கிறார்கள்...

  சீர்காழியாரை விமர்சனம் செய்து அதற்கு ஒரு காரணம் சொல்லியிருந்தார் இளைய ராஜா...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இன்னும் சில பாடல்களும் உண்டு துரை செல்வராஜூ ஸார்... காதல் ஓவியம் படத்தில் துணைக்குரலாகவும் தனிக்குரலாகவும் பாடல்கள் உண்டு.

   நீக்கு
 5. எனக்காகக் காத்திரு என்ற படமா ஆஆஆஅ கேள்விப்பட்டதே இல்லை 81 என்றால் அப்போது நான் கல்லூரி முதல் வருடம்...அப்படியும் தெரியவில்லையே...

  சுமலதா, சுமன் தெரியும்...ஹிஹிஹி

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பாடல் கேட்டபின் பலபுதிர்கள் அவிழ்ந்துவிடும்!

   நீக்கு
 6. ஸ்ரீராம் அந்தப் பாட்டு நிறையக் கேட்டிருக்கிறேன். நல்ல மெட்டு. எனக்குப் பொதுவாக என்னை ஹம் பண்ண வைத்து பாட வைத்தால் அந்தப் பாட்டு பிடித்துவிடும்ஆனால் விவரங்கள் எல்லாம் உங்க பதிவின் மூலம் தான் ஹிஹிஹி...

  ஸ்ரீராம் அதே பாட்டின் மெட்டில் வேறொரு பாட்டும் இருக்கிறது அது இளையராஜாவா என்று தெரியவில்லை. இருங்க கொஞ்சம் கிட்னியை குடைந்துவிட்டு வருகிறேன்...

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வேறொரு பாட்டு என்ன சொல்கிறீர்கள் என்று அறியக் காத்திருக்கிறேன் அது என்ன சொல்வீர்கள் அதற்கு? மெட்லி... அதுதானே?

   நீக்கு
  2. கீதாவின் இந்தபின்னூட்டத்தை மிகவு எதிர்பார்த்தேன்

   நீக்கு
  3. அவர் இன்னும் சொல்லவில்லை ஜி எம் பி ஸார். எனக்கும் ஒரு பாடலைக் கேட்கும்போது வேறு சில பாடல்களும் நினைவுக்கு வரும். என் இளையவன் அதில் கில்லாடி!

   நீக்கு
 7. நல்ல பாடல் ஜி பலமுறை கேட்டதுண்டு.

  அன்று சுமலதா மட்டுமா பிரபலம்... சுமன்-சுமலதா ஜோடியே பிராபலம்தானே... (புரிந்திருக்கும்)

  அவளெல்லாம் இன்று மக்களவை உருப்பினர் காலக்கொடுமையடி கருமாரி.

  டி.எல். மகாராஜன், தீபன் சக்கரவர்த்தி ஓரங்கட்டப்பட்டதற்கு அடிப்படை காரணம் அவர்கள் சுத்தத்தமிழர்கள்.

  மகாவின் நான் போட்ட சவால் அற்புதமான பாடல்
  "எங்கே என் ஆசை என்ன...
  நான் நினைத்தால் ஆகாததென்ன..."

  இந்தப்பரதேசிப்பயல் (இசைஞானிதான்) நிறைய தமிழர்கள் வாழ்வை ஒழிச்சுட்டான். இவனுடைய கர்வம்தான் இப்ப கக்கூஸுக்குள் ட்யூன் போட வச்சுருச்சு.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நான் சொல்ல நினைத்தேன்...

   கில்லர்ஜி சவுக்கை எடுத்துக் கொண்டு வருவார் - என....

   வந்தே விட்டார்...

   அக்காலத்து மேதைகளை
   ராஜாவுக்குத் தூக்குங்க கூஜா
   என்று மறைமுகமாகத் தாக்கியவர்..

   நீக்கு
  2. வாங்க கில்லர்ஜி...

   புரிந்தது... அதிசமயாக சற்றே நீளமான கமெண்ட்! வந்துகொண்டிருந்த தூறல் நின்று விட்டது சென்னையில்!

   நெஞ்சே உன் ஆசை என்ன...
   நீ நினைத்தால் ஆகாகாத தென்ன..
   இந்த பூமி அந்த வானம்
   இடிமின்னலைத் தாங்குவதென்ன...

   இதுதான் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் பாடல்.

   நீக்கு
  3. இளையராஜா திறமையில் மலை.... அப்படிப்பட்டவங்க ரொம்ப நல்லவங்களா புனிதமா இருக்கணும்னு நாம எதிர்பார்க்கிறோம். அது நம்ம தப்புதானே.

   சுமன்தான் உள்ளே வைத்து நொங்கெடுக்கப்பட்டவர்னு ஞாபகம்.

   நீக்கு
  4. //இளையராஜா திறமையில் மலை....//

   அது ஒன்றுதான் நான் பார்க்கிறேன். என்ன செய்வது? அவர் பாடல்கள் பல காதில் ரீங்காரமிட்டுக் கொண்டே இருக்கிறதே...

   நீக்கு
  5. நெ.த. நண்பருக்கு சமீபத்தில் சுமன் ஹைதராபாத்தில் பல ஏக்கர் சொந்த நிலத்தை கல்லூரி கட்டுவதற்கு இலவசமாக கொடுத்ததாக கட்-செவி செய்திகள் வந்தன உண்மையா... பொய்யா... அறியவில்லை.

   உண்மையெனில் அவர் நீடூழி வாழ்க வளமுடன்.

   நீக்கு
 8. சுமலதா அப்போது பலர் நெஞ்சங்களைக் கொள்ளையடித்திருந்தார்... (இஃகி..இஃகி..)

  திசை மாறிய பறவைகள் எனும் படத்தில்
  அழகுப் பதுமையாக வந்து ஏதோ காரணத்தால் மதம் மாறிப் போய் விடுவார்... மெல்லிசை மன்னர் இசையில் பாடல்கள் மிக அருமையாக இருக்கும்...

  உள்ளம் உருகாதா.. எந்தன் ஊனும் உருகாதா... என்றொரு பாடல்..

  வாணி ஜெயராம் கேட்பவர் மனங்களைக் கரைத்து விடுவார்...

  பாடல் கேட்பதற்கு சரி... காட்சி அமைப்பு மகா சோகமாக இருக்கும்...

  ஆனாலும் உயிர்கள் அப்படித் தானே தவிக்கின்றன...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. திசை மாறிய பறவைகள் படத்தில் டி எம் எஸ் பாடிய "கிழக்குப்பறவை மேற்கில் பறக்குது... அது கிழக்கு வானை மறக்கப் பார்க்குது" பாடல் பேமஸ்.. அதைத்தவிர ஜெயச்சந்திரன் ஜானகியம்மா பாடிய "ராஜா வாடா சிங்கக்குட்டிப்பாடல் நன்றாய் இருக்கும்.அது மதமாற்றத்தை மறைமுகமாக ஆதரித்த படம்.

   நீக்கு
  2. மோகன் லாசரஸ்.. ந்னு ஒரு ஆள் மத மாற்றத்தைப் பற்றிப் பேசிய பேச்சு வெளியாகி இருக்கு...

   கிறிஸ்தவனாக மாறு...
   இந்துப் பெயரை வைத்துக் கொள்..
   என்று பேச்சு வருகிறது...

   அந்தப் பேச்சைக் கேட்டு விட்டு வெளியே வருபவர்கள் என்ன மாதிரியான உணர்வுகளுடன் வருவார்கள்?...

   நீக்கு
 9. ஆ.. என்னாச்சு... கேட்டு ரசித்த பாடல்... நல்லா இருக்கு.

  சுமன் பற்றிய கதையை யாராவது சொல்லட்டும்.

  காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தக் குப்பையை ஏங்க காலையிலே தோண்டி எடுக்குறீங்க!?...

   கொலை பண்றவனுங்களையே அப்பாவிகள் சொல்ற சமுதாயமாப் போச்சு...

   நீக்கு
  2. ஆ...

   சென்னையில் லேஸாய் மழை பெய்த விளைவோ...!

   நீக்கு
  3. பாட்டைப் போட்டா பாட்டை ரசிக்கணும்!!!! அதை விட்டுப்போட்டு என்னென்னவோ சொல்லிக்கிட்டு...

   அது சரி...


   குப்பையா..

   அது என்னவாக இருக்கும்?

   நீக்கு
  4. அப்போ அது உங்களுக்குத் தெரியாதா?...

   நீக்கு
  5. தெரியாதே...

   ஒருவேளை 'அது'வோ....

   நீக்கு
  6. /// பாட்டைப் போட்டா பாட்டை மட்டும் ரசிக்கணும்!... ///

   அது தான் நம்ம ஜாதகத்திலேயே கெடையாதே!...

   நீக்கு
 10. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இனிய காலை வணக்கம் பானு அக்கா.

   நீக்கு
  2. அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
   இது அந்தக்கால கிசுகிசு. எங்க எதிராஜ் ப்ரின்சிபால் சுஷீல் ச்ச்ந்தர் மகன் இந்த சுமன்.
   ஆறேழு வயதில் பார்த்திருக்கிறேன்.

   சுமன் சுமலதா படம் ஆராதனையில்
   இளம் பனித்துளி விழும் நேரம்
   இலைகளில் மகரந்தக் கோலம்
   பாடல் நன்றாக இருக்கும்.
   அது பேய்ப்படம்.
   பேயார் வந்து பார்த்தால் சொல்வார்,.

   இந்தப் பாடலைக் கண்ணை மூடி ரசிக்கலாம்.

   நீக்கு
  3. இனிய காலை வணக்கம் வல்லிம்மா...

   ஓ.. சுமனை இந்த வகையில் அறிவீர்களா?

   ஆராதனையில் இன்னொரு தெரிந்த பாடலுண்டு என்று நினைவு. பார்க்கிறேன்.

   நீக்கு
 11. திசை மாறிய பறவைகள் படத்தில்
  ஸ்ரீ பாலமுரளி கிருஷ்ணா அவர்கள் பாடிய
  வள்ளலார் ஸ்வாமிகளின்

  அருட்ஜோதி தெய்வம் எனை
  ஆண்டு கொண்ட தெய்வம்.. - என்ற பாடல் நினைவில் இருக்கிறதா.. ஸ்ரீராம்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நன்றாக...

   நன்றாக நினைவில் இருக்கிறது..

   அருமையான பாடல். குறிப்பிட மறந்து விட்டேன்.

   நீக்கு
  2. மிக மிகப் பிடித்த பாடல் அன்பு துரை.

   நீக்கு
 12. அனைவருக்கும் வணக்கம், வாழ்க வளமுடன்.

  பதிலளிநீக்கு
 13. ஸ்ரீராம் ஆமா அந்த வயலின் கூடவே கிட்டாரும் பேக்க்ரவுண்டில் ஒலிக்கிறதோ வேறொரு கருவியும் ஊடே வருவது தெரிகிறது. அருமையா இருக்கு

  எந்தக் கருவியின் இல்லாமல் ஜானகியின் வாய்ஸ் ஆரம்பம் அழகு.

  இன்டெர்லூட் அருமை...ஆனால் கொஞ்சம் டிவியேட்டட்...ஆரம்பம் ராகம் வேறு இடையில் மற்றும் சரணம் வேறு ராகத்தில் பயணிக்கிறது...கீ போர்ட் தானே இஷ்டத்திற்கு விளையாடலாம்!!!!

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுசரி, கீதா... என்ன ராகம் என்று சொல்லவில்லையே...!

   நீக்கு
  2. ஸ்ரீராம் சொல்ல வந்து அதற்குள் வாக்கிங்க் டைம்....ஃபோன் கால்ஸ் எல்லாம்..

   மோகனம் அடிப்படை....

   கீதா

   நீக்கு
 14. நல்ல பாடல்... இதே போல் :-

  https://youtu.be/vVauHu94jjE

  சகோதரி கீதா சொல்ல வந்தது இதுவாக இருக்குமோ...?


  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க திண்டுக்கல் தனபாலன்.. இது இல்லை என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  2. இல்லை டிடி நீங்கள் சொல்லியிருக்கும் பாடல் இல்லை.

   ஸ்ரீராம் பகிர்ந்திருக்கும் பாடலின் அதே மெட்டில்...எனக்குத்தான் எப்போதுமே வரிகள் சட்டென்று பிடிபடாதே...யோசித்துச் சொல்லுகிறேன்...

   வேலைக்குச் சென்றுவிட்டு அப்புறம் மதியம் 2 மணிக்கு மேல் சென்ற ஞாயிறு அன்று திருமணம் ஆன மைத்துனர் பெண் எல்லோரும் இங்கு மாமியார் மாமனார் வீட்டில் இருப்பதால் அங்கு செல்ல வேண்டும். எனவே ராத்திரிதான் இனி வலைப்பக்கம்..அவங்க அப்புறம் அமெரிக்கா போய்டுவாங்க என்பதால்...

   கீதா

   நீக்கு
 15. இரண்டு பாடல்களும் இனிமை.
  கேட்டு ரசித்தேன்.நன்றி.
  தீபன் சக்கரவர்த்தி குரல் மிக இனிமையாக இருக்கும்.

  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
 16. சுரேந்தர் படம் ஏன் போட்டு இருக்கிறீர்கள்?
  தீபன் சக்கரவர்த்தி என்று நினைத்து போட்டு விட்டீர்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம் எனக்கும் சந்தேகம் இருந்தது. ஆனால் தீபன் சக்கரவர்த்தி என்றுதான் கொடுத்திருந்தார்கள்!

   நீக்கு
  2. இப்போது பாருங்கள். சந்தேகத்துக்கு இடமில்லாமல்....

   நீக்கு
  3. ஆமாம், இவர் தான் தீபன் சக்கரவர்த்தி.

   நீக்கு
  4. காலையில் நானும் சுரேந்தர் படத்தைப் பார்த்துவிட்டு, "இதுவா தீபன் சக்கரவர்த்தி?" என்று நினைத்துக் கொண்டேன். மாறிப் போட்டிருப்பதை இப்போதே அறிந்தேன். சுரேந்தரும் நல்ல பாடகர். முக்கியமாய் நடிகர் மோகனுக்குக் குரல் கொடுப்பார். சினிமா அரசியலால் பாவம், கஷ்டத்தில் ஆழ்ந்துவிட்டார்! :(

   நீக்கு
  5. ஆமாம். சுரேந்தர் நடிகர் விஜய்யின் தாய் மாமா. (ரொம்ப முக்கியம்!)

   நீக்கு
  6. மிச்சத்தை விட்டுட்டீங்க! :)

   நீக்கு
  7. எனக்கும் அந்தச் சந்தேகம் இருந்தது. இது தீபன் சக்கரவர்த்தி போல இல்லையே இது சுரேந்தர் போல இருக்கேனு தோன்றியது. ஆனால் ஸ்ரீராமைப் போல எனக்கும் அந்த ஜந்தேகம் இருந்ததால் அதுவும் நெட்டில் உடனே தேடிக் கண்டுபிடித்த்ருக்கலாம் ஆனால் நேரம் டைட் நேற்று எனவே போயிட்டேன்...ராத்திரி வீடு வரும் போது 8.30 மணி ..அப்புறம் விட்டப் பதிவுகள் பார்த்துவிட்டு இங்கு வந்து கமென்ட்ஸ் பார்க்கணும் என்றும் நினைத்து முடியாமல் உறங்கிவிட்டேன்.!!!!!!

   சுரேந்தர் நடிகர் விஜயின் தாய்மாமா.

   கோமதிக்கா சொல்லிட்டாங்க......

   கீதா

   நீக்கு
 17. திண்டுக்கல் தனபாலன் சொல்லிய பாடலும் இனிமையாக இருக்கும்.

  பதிலளிநீக்கு
 18. நானெல்லாம் ஏதாவது பாடல் நின்சைவுக்கு வந்தால்தேடுவது வழக்கம் ஸ்ரீராம் அப்ப்டியில்லை என்ரு நினைக்கிறேன் ஆனால்பாடல்களே புதிர்போல போடுகிறார் எனக்கு தீபன் சக்கர வர்த்தியின் குரல் பிடிக்கும் அதிலும் பூங்கதவே தாழ்திறவாய் மிஅவும்பிடிக்கும்

  பதிலளிநீக்கு
 19. நிறையவே எழுத்துப் பிழைகள் பொறுத்துக்கொள்ளவும்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. எழுத்துப் பிழைகள் பரவாயில்லை ஜி எம் பி ஸார்.. நீங்கள் பாடல் ஏதாவது நினைவுக்கு வந்து தேடுவீர்களா? ஆச்சர்யம்! பாடல்கள் அதிகம் கேட்க மாட்டீர்கள் என்று நினைத்தேன்.

   நீக்கு
 20. சென்ற வெள்ளிக்கு முதல் வெள்ளி- கார்த்திக் நடித்த படப் பாடலின் கீழே நான் கேட்டிருந்த கேள்வி படிக்கப் படாமலேயே போனது.

  அதேபோலவே இன்றும் பாடலின் கீழே நான் பகிர்ந்திருக்கும் விஷயம் ஒன்று கவனிக்கப் படாமலேயே இருக்கிறது.

  ஏன்?

  பதிலளிநீக்கு
 21. வெள்ளி இன்னிசை இனிக்கிறது.

  பதிலளிநீக்கு
 22. இந்தப் படம், பாடல் எதுவுமே பார்த்த/கேட்ட நினைவு இல்லை. ஆனால் தீபன் சக்கரவர்த்தி, டி.எல்.மகாராஜன் ஆகியோரின் பாடல்களை முன்னெல்லாம் பொதிகை நேரடியாக ஒளிபரப்பிக் கேட்டிருக்கேன். நல்ல குரல்வளம் உள்ள பாடகர்கள்.சீர்காழியை வேண்டாம்னு இளையராஜா சொன்னால் நஷ்டம் சீர்காழிக்கு அல்ல!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. குரல் வளம் சரி... இன்ன பாடல்களை இன்னார் பாடினால் நன்றாயிருக்கும் என்றும் சொல்வார்கள்! சிலருக்கு சில பாடல்கள் பொருந்தாது!

   நீக்கு
  2. ஒவ்வொருத்தர் குரலிலும் ஒவ்வொரு கவர்ச்சி இருக்கிறது அல்லவா? ஆகவே பாடல் பாடும் பாணியும் மாறத்தான் மாறும். அதனால் பொருந்தாது என்றெல்லாம் சொல்ல முடியாது! :)))))

   நீக்கு
 23. சுமன், சுமலதா நடிச்சுப் படங்கள் நிறையப்பார்த்திருக்கேன். சுமன் பிரச்னைகளிலிருந்து விடுபட்டதும் ஏதோ ஒரு படத்தில் வில்லனாக அமர்க்களப்படுத்தி இருந்தார். எந்தப் படம் என்பது நினைவில் இல்லை. சுமலதா, "குடும்பம் ஒரு கதம்பம்" படத்தில் கூட நடித்திருந்த நினைவு. பெரும்பாலும் அநேகப் படங்களில் கிறிஸ்துவ கன்யாஸ்த்ரீயாக வருவார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ரஜினியின் சிவாஜி படத்தில்தான் சுமன் வில்லன். முற்றிய முகம்!

   நீக்கு
  2. OHO! அம்பேரிக்காத் தியேட்டரில் பார்த்த படம்! அது சுமனா? இருக்கும், இருக்கும்!

   நீக்கு
 24. நேத்திக்கு நான் பேசி இருந்ததைக் கேட்ட "நட்பேய்" பயந்துடுத்தோ? இன்னிக்குக் காணோமே!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அதுபாட்டுக்கு வந்து ஜோக் பண்ணிக்கிட்டு இருந்தது..

   காலை ஒடிப்பேன்...ன்னு அதுக்கிட்ட சொன்னா
   வருத்தப்படாதா மனசு...

   பெண்ணுக்கு இரங்கும் பேய்க்கு
   நாம இரங்க வேணாமா!?...

   நீக்கு
  2. வாராந்திர பேய் ரெவியூ மீட்டிங்குக்கு போயிருக்கும். வருத்தப்படாதீங்க... வந்துடும்!

   நீக்கு
  3. //காலை ஒடிப்பேன்...ன்னு அதுக்கிட்ட சொன்னா
   வருத்தப்படாதா மனசு...//
   அடப் பாவமே! ஒரு நாள் கொஞ்சம் லேட்டா வந்தால் இப்படியா நம்ம "நட்பேயை" பயமுறுத்தறது! பாவம், அது மனசு நொந்து போய் எங்கே எந்த முருங்கை மரத்தில்/வேப்பமரத்தில்/புளியமரத்தில் தலைகீழாத் தொங்குதோ!

   நீக்கு
  4. நைமிசாரண்யத்தில் இல்லையாம். பாலாஜியை விசாரிச்சுட்டேன்!

   நீக்கு
  5. எதுக்கும் உங்க வீட்டு முருங்கமரத்தைச் சோதிச்சுப் பார்த்துடுங்க! இலைகளையோ, காய்களையோ கொஞ்ச நாட்கள் பறிக்காதீங்க! பாவம் அது எங்கே போகும் அப்புறமா!

   நீக்கு
  6. அது சரி.. எங்க வீட்டு முருங்கை மரத்தில் ​காய் என்ன, இலையே இல்லை! வெயில்!

   நீக்கு
  7. வாராந்திர மீட்டிங் எல்லாம் இல்லை

   அமாவாசைக்கு அமாவாசை தான்...

   நீக்கு
  8. அப்போ செவ்வாய்க்கிழமை வரை காத்திருக்கணுமா? "நட்பேய்!" எங்கே சென்றாய் நீ?

   நீக்கு
 25. வரிகளை மட்டும் படித்த பொழுது எந்த பாடல் என்று தெரியவில்லை. கேட்டதும்தான் பல முறை கேட்ட பாடல் என்பது தெரிந்தது. அப்போதெல்லாம் பேருந்துகளில் அடிக்கடி ஒலிக்கச் செய்வார்கள். தீபன் சக்கரவர்த்திக்கு இனிமையான குரல். ஜானகியின் கீச்சைதான் ரசிக முடியவில்லை.ஹிந்தி பாடல் இனிமை.

  சினிமாவில் நடித்துக் கொண்டிருந்த தீபனை நிப்பாட்டியது இளையராஜாதானாம். "உனக்கு எதற்கு நடிப்பு? பனிவிழும் மலர்வனம் பாடலை உனக்குத்தான் கொடுப்பதாக இருந்தேன். நீ நடிப்பில் பிசியாக இருந்ததால் எஸ்.பி.பி.க்கு கொடுத்தேன். சூப் ஹிட்!" என்றாராம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆம்.. சில சமயங்களில் பாடல்களில் பெண்குரல் என்ன வரிகள் பாடுகின்றனர் என்பதே புரியாமல் போகும் அளவு கீச்சுவார்கள்!

   பனிவிழும் மலர்வனம் தீபனை வைத்து? நினைத்தே பார்க்க முடியவில்லை. ஸாரி...

   நீக்கு
  2. பனிவிழும் மலர்வனம் அது எஸ்பிபி தவிர வேறு யாரையும் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஹையோ அதில் வரும் அந்த உணர்வுகள் பாடும் ஸ்டைல் வாவ்!! இப்போது கேட்டாலும் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கலாம் அந்த அளவிற்கு!! மாடுலேஷன் எல்லாம் செம ! அதான் ஹிட்!!

   கீதா

   நீக்கு
 26. //திருச்சி லோகநாதன் பாடல் கேட்ட பானு அக்காவுக்கு, அவர் மகன் பாடிய பாடல் பரிசு!//
  யாருக்கோ அனுப்ப வேண்டிய பரிசை எங்கு அளித்து விட்டீர்கள். நான் கேட்ட பி.பி.எஸ்.பாடலை அடுத்த வாரம் பகிர்ந்து விடுங்கள். முடிந்தால் ' தோல்வி நிலையென நினைத்து மனிதன் வாழ்வை இழக்கலாமா?' என்னும் ஊமை விழிகளில் வரும் ஆபாவாணன் பாடலை பகிருங்கள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓகே.. ஆனால் பிபிஎஸ் பாடல்களில் பழைய பாடல் தெரிவு இல்லையா?

   நீக்கு
  2. //பிபிஎஸ் பாடல்களில் பழைய பாடல் தெரிவு இல்லையா?// உண்டு. ஆனால் அவையெல்லாமே
   பலரும் அறிந்த, பிரபலமான பாடல்கள். நான் குறிப்பிட்டிருக்கும் பாடல் நிறைய பேருக்கு தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன்.

   நீக்கு
  3. //நான் குறிப்பிட்டிருக்கும் பாடல் நிறைய பேருக்கு தெரிந்திருக்காது என்று நினைக்கிறேன்.//

   இப்படி நினைத்துதானே நானும் பாடல்கள் பகிர்ந்து நெல்லையிடம் திட்டு வாங்கி கொண்டிருக்கிறேன்!

   நீக்கு
  4. // தோல்வி நிலையென நினைத்து மனிதன் வாழ்வை இழக்கலாமா?// - சரியான வரிகள்,

   தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா?
   வாழ்வைச் சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா?

   இந்தப் படத்தை அசோக்நகர் உதயம் தியேட்டரில் 86-87களில் பார்த்தேன்.

   நீக்கு
  5. தோல்வி நிலையென நினைத்து மனிதன்.....இந்தப் பாடல் செம பாடல் வரிகளும் பி பி எஸ்ஸின் வாய்ஸும். எனக்கு மிகவும் பிடித்த பாடல். ரொம்ப அழகான பாடல் ம்யூஸிக் ஆபாவணன், மனோக்யான் என்று அறிந்த நினைவு. இவர்களைப் பற்றி அதிகம் தெரியாது. ஆனால் இந்தப் பாடல் அருமையான பாடல்

   கீதா

   நீக்கு
 27. எம்.ஜி.ஆரின் கோபத்திற்கு ஆளானதால் புனையப்பட்ட ஒரு கேசில் கைதானார் சுமன். விடுதலையானதும் ஆந்திராவிற்கு சென்று விட்டார்.
  இதில் ஒரு சுவாரஸ்யம் என்னவென்றால் அவரோடு கைதான அவரின் நண்பரின் தந்தை ஒரு பிரபலமான நியூமராலஜிஸ்ட் . கிரிஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தை ஸ்ரீக்காந்த் என்று எழுதச் சொன்னார். அதை கடைபிடித்து தனக்கு பலன் இருந்தது என்று ஸ்ரீக்காந்த் சொல்லி வாயை மூடவில்லை, நியூமராலஜிஸ்ட்டின் மகன் கைதானார். மகன் பெயரை மாற்றவில்லையா என்றனர்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சுவாரஸ்யமான தகவல்கள். எங்கிருந்து கிடைக்கிறது உங்களுக்கு?

   நீக்கு
  2. இதெல்லாம் ஓபன் சீக்ரெட் வகை! :))))))

   நீக்கு
  3. என் கண்ணில் சாதாரணமாக இது மாதிரி விஷயங்கல்பட்டுவிடும். ஆனால் எனக்கு இவை புதிதாய் இருக்கின்றன.

   நீக்கு
  4. @ பானுமதி வெங்கடேஸ்வரன்: எம் ஜி ஆர், சுமன், ஸ்ரீக்காந்த் ! எப்படியெல்லாம் கனெக்ட் ஆகிறது சில விஷயங்கள். முதன்முதலாக இதைக் கேள்விப்படுகிறேன். போனவாரம் ஸ்ரீக்காந்த், வெங்க்சர்க்கார் என்று நீங்கள் எழுதியதும் திடுக்கிடவைத்தது! கிரிக்கெட் வீரர்களை சீரியஸாக கவனித்திருக்கிறீர்கள்..

   எம்ஜிஆரினால் நிறையப்பேருக்கு இடைஞ்சல் வந்திருக்கிறது போலிருக்கிறதே. இவரையா பொன்மனச் செம்மல் என்றார்கள்? ம்.. தமிழர்கள் யாரையும் எப்படியும் அழைப்பார்கள்.. பொழுதுபோனால் சரி..

   நீக்கு
  5. வாங்க ஏகாந்தன் ஸார்..

   பானு அக்கா நிறைய விவரங்கள் விரல் நுனியில் வைத்திருக்கிறார்.

   எம் ஜி ஆரைப் பற்றி இரண்டு விதமாகவும் சொல்லலாம்!

   நீக்கு
  6. //இவரையா பொன்மனச் செம்மல் என்றார்கள்?// @ஏகாந்தன் சார் - எம்ஜிஆர், பொன்மனச் செம்மல்தான். மிக மிக நல்லவர்தான். அதில் எந்தச் சந்தேகமும் எனக்குக் கிடையாது. ஆனால் அவர் 'புத்தர்' கிடையாது. தவறு செய்பவர்களுக்கு தண்டனை கொடுத்துவிட்டு, பிறகு ஆதரவும் அளிப்பவர் அவர்.

   அரசு பதவியில் இருப்பவர் ஒருவருக்கு இன்னொருவர் மேல் கோபம் வந்தால், அவரா நேரடியாக தலையிடமுடியும்? நியூஸ் போலீசுக்கு அவர் ஆட்களால் போனால், போலீஸ் அவர்கள் வழியில்தான் நடவடிக்கை எடுப்பார்கள், கஞ்சா வைத்திருந்தான், இந்தத் தொழில் செய்தான் என்றெல்லாம். இதற்கு எத்தனையோ உதாரணங்கள் உண்டே.

   நீக்கு
 28. உள்ளேன் ஐயா :)

  இந்த பாட்டெல்லாம் கேட்டதில்லை .பார்த்துமில்லை படம் .ஆனா அந்த ஆன்ட்டி அழகா இருக்காங்க கொஞ்சமே கொஞ்சம் ஸ்ரீராமின் ட்ரீம் கேர்ள் ஹேமா ஆன்டி மாதிரி இருக்காங்க .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடே... ஏஞ்சல்.. வாங்க வாங்க.. உடல் நிலை தேவலாமா? லீவா? வெளியூர்ப் பயணமா? உங்களையும் காணோம்... அதிராவையும் காணோம்!

   நீக்கு
  2. //கொஞ்சமே கொஞ்சம் ஸ்ரீராமின் ட்ரீம் கேர்ள் ஹேமா ஆன்டி மாதிரி இருக்காங்க .//

   grrrrrr... ஹேமா இன்னும் அழகா இருப்பாங்க...

   நீக்கு
  3. இஃகி,இஃகி,இஃகி,இஃகி, ஹேமமாலினியை நேரில் பார்த்திருக்கீங்களா? அல்லது திரையில் அதுவும் ஆரம்பக் காலப் படங்களில்?அவர் நடிக்க வரும்முன்னர் ஶ்ரீதர் அவரை எடுத்த படங்களை? இஃகி,இஃகி,இஃகி!

   நீக்கு
  4. ஹிந்தி நடிகைகளில் வஹீதா ரஹ்மான் அழகு! உண்மையில் அழகு! அதன் பின்னர் ஶ்ரீதேவியும் ஜெயப்ரதாவும் போட்டி போட்டார்கள்! ஶ்ரீதேவியை க்ளாமர் எனவும் ஜெயப்ரதாவை க்ளாசிக் எனவும் சொல்லுவார்கள்.

   நீக்கு
  5. //கொஞ்சமே கொஞ்சம் ஸ்ரீராமின் ட்ரீம் கேர்ள் ஹேமா ஆன்டி மாதிரி இருக்காங்க .//
   சே! சே! ஹேமா எங்கே? சுமா எங்கே? ஒரு முறை ஒளிப்பதிவாளர் பாபு, எந்தெந்த கோணங்களில் எந்தெந்த நடிகை அழகாக இருப்பார் என்று கூறிய பொழுது, சுமலதாவின் முகம் காமிராமேன்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டிய முகம். கரணம் தப்பினால் மரணம், கொஞ்சம் அஜாக்கிரதையாக இருந்து விட்டால், கிழவியின் முகம் போல தெரிந்து விடும் என்றார்.
   எல்லா கோணங்களிலும் அழகாக இருக்கும் நடிகைகள் அந்த காலத்தில் பத்மினி(கீதா அக்கா உங்களுக்கு பிடிக்காவிட்டாலும் நிபுணர்கள் சொல்வதை ஒப்புக்கொள்ளத்தானே வேண்டும்?),பின்னர் சரோஜா தேவி, இப்போது(அதாவது 80களில்)அம்பிகா என்றார்.

   எல்லா கோணங்களிலும் அழகாக இருக்கும் நடிகை என்று பி.சி.ஸ்ரீராம் குறிப்பிட்டது நதியாவை.

   ஐஸ்வர்யா ராயைப் பற்றி எழுத்தாளர் சுஜாதாவின் மனைவி,"ஐஸ்வர்யா சினிமாவில் அழகா தெரிகிறார் தவிர, நேரில் சாதாரணமாகத்தான் இருக்கிறார்" என்றார். நடிகைகளை பொறுத்த வரை திரையில் அழகாக தெரிந்தால் போதாதா? அந்த வகையில் ஹேமா அழகுதான். அவருக்கு வயதே ஆகாத என்று ஆச்சர்யமாக இருக்கும். இப்போதுதான் கொஞ்சம் வயது தெரிகிறது.


   நீக்கு
  6. வஹிதா ரெஹ்மான் அழகுதான். விஸ்வரூபம் II வில் கமலின் அம்மாவாக வருவார். வயதாகி விட்டாலும் அழகாகவே இருக்கிறார்.

   நீக்கு
  7. பானுமதி, ஐஸ்வர்யா ராயை அழகுனு நானும் ஒத்துக்க மாட்டேன். சில கோணங்களில் ஶ்ரீதேவியும் அசிங்கமாகத் தெரிவார். ஆனால் பத்மினியை விட லலிதாவும், ராகினியும் அழகு! அம்பிகாவை விட ராதா அழகு எனப் பெயர் பெற்றவர். ஆனால் இப்போப் பார்த்தால் அம்பிகா அழகாய்த் தான் தெரிகிறார். ராதா கோரம்! நதியா எந்தக்காலத்திலும் இளமை! 40க்கு மேல் வயதாகியும் அந்தக் கண்களின் குறும்புச்சிரிப்பு இன்னமும் மனதைக் கவர்கிறது. அவர் சிரிக்கும்போது கண்களும் கூத்தாடும்! ஹேமமாலினி விடாமல் நாட்டியப் பயிற்சி மேற்கொள்வதால் உடம்பில் வயதானது தெரியவில்லை, அந்த வகையில் வைஜயந்திமாலாவும் எண்பதுகளில் இருந்தாலும் நன்றாகவே ஆடுகிறார். பத்மா சுப்ரமணியமும் சேர்த்து!

   நீக்கு
  8. லிஸ்ட்ல பழைய ஹிந்தி நடிகை மும்தாஜை சேர்க்க மாட்டீங்களா? பானு அக்கா புதுசு புதுசா பழைய விஷயங்கள் எல்லாம் நிறையச் சொல்கிறார்!

   நீக்கு
  9. அப்புறம் ஏன் அடையாரில் இப்போ கடும் மழை பெய்யாது? பெண்கள்லாம் போட்டி போட்டுக்கொண்டு மற்ற பெண்கள் அழகுன்னு சொல்றாங்களே... இது உலக அதிசயம் அல்லவா?

   எனக்குத் தெரிஞ்சு நீங்க சொல்ற யாருமே அழகு கிடையாது. பெண்களுக்கு அழகுக்கான இலக்கணம், சிற்பங்களிலும் சிலைகளிலும் இருக்கு. அப்படி இருக்கறவங்க யாராவது இருக்காங்களான்னு கண்டுபிடிச்சுட்டு வந்து சொல்லுங்க.

   /ராதா கோரம்! // - ஹலோ கீசா மேடம்...ஆண் 24ல சுமாரா இருப்பான். வருஷம் கூடக் கூட அவன் அழகு கூடிக்கிட்டே போகும். பெண்கள் எப்படின்னு நான் சொல்லி, உங்க எல்லாரிடமும் உள்ள நட்பைக் கெடுத்துக்க விரும்பலை... பெண்களை, அதிலும் நடிகைகளை ரசிக்கணும்னா, அவங்க நடிக்க வந்து மூன்றாம் வருடத்திலிருந்து 4 வருடங்கள் ரசிக்கலாம். அதுக்கு மேலயும் மார்க் போட நினைக்கறீங்களே.. ஒவ்வொரு நடிகைக்கும் ஒரு காலம் உண்டு. ராதா 81-85 என்பது போல. அதுக்கு அப்புறம் அவங்களை எடைபோடலாமா?

   நீக்கு
  10. ஹையோ, மும்தாஜின் மூக்கே அவர் அழகைக் கெடுத்துடுமே!

   நீக்கு
  11. //அழகுக்கான இலக்கணம், சிற்பங்களிலும் சிலைகளிலும் இருக்கு. அப்படி இருக்கறவங்க யாராவது இருக்காங்களான்னு கண்டுபிடிச்சுட்டு வந்து சொல்லுங்க.//

   நெல்லை.. அப்படிப் பார்த்தா செயற்கையா இருக்கும். கொஞ்சம் குறைகளும் இருக்கணும்.

   நீக்கு
  12. அழகு என்பது ஒவ்வொருத்தர் பார்வையிலும் வித்தியாசப்படும். எனக்கு அழகென்று தோன்றுவது மற்றவருக்குத் தோன்றாது. கோயில் சிலை மாதிரி இருக்கிறாள் எனப் பேச்சுக்குச் சொல்லலாம். அம்மாதிரிப் பெண்கள் கிடைப்பது கடினம். கனவில் வேண்டுமானால் கிடைக்கலாம். எளிதில் கிட்டாத சௌந்தரியத்தைத் தான் கற்சிலைகளில் வடித்துப் பார்த்தான் மனிதன். உண்மையில் அந்தக் காலத்து அரசகுமாரிகளின் ஓவியங்களைப் பார்க்க நேர்ந்தால் இது அழகா எனத் தோன்றலாம். நல்லவேளையா நம்மிடம் அப்படி ஏதும் இல்லை! மனிதன் தன் கனவை, கற்பனையை ஓவியங்களிலும், சிற்பங்களிலும் வடித்துப் பார்த்தான்/பார்க்கிறான்.

   நீக்கு
 29. work busy .still ill because of pollen allergy . athira is enjoying her holidays .scots finish school term by end of june and we brits start our holidays from end of july .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஓ ஏஞ்சல் உடல்நலன் பார்த்துக்கோங்க...

   ஓ பூஸார் ஹாலிடேஸ்லியா...

   அப்புறம் உங்களுக்கும் ஹாலிடேய்ஸ் தொடங்கிடுமே...

   டேக் கேர் ஏஞ்சல்

   கீதா

   நீக்கு
 30. வணக்கம் சகோதரரே

  காலையில் என் பதிவுக்கு வந்து காலை வணக்கம் சொன்ன தங்களுக்கு இப்போது மாலை வணக்கம் சொல்கிறேன். அதற்கே முதலில் வருந்தி மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். நேரம், சில வேலைகள் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டது.

  இவ்வார வெள்ளி பாடல் அதிகம் கேட்டதில்லையென்றாலும், சில தடவைகள் கேட்டு ரசித்துள்ளேன். இப்போது தங்கள் பதிவில் படத்தைப் பற்றிய அனேக விபரங்களுடன், பாடல் வரிகளுடன் கேட்டு ரசித்தேன். சுமனைப்பற்றி, சுமலதாவை பற்றி எத்தனை விஷயங்கள் அனைவரும் தெரிந்து வைத்துள்ளார்கள். இதிலெல்லாம் நான் கொஞ்சம் 0 தான். தெரிந்து கொள்ளும் ஆர்வமில்லையோ என தோன்றுகிறது. இதன் படமே நீங்கள் சொல்லிதான் அறிந்து கொண்டேன்.

  திருச்சி லோகநாதன் பாடல்கள் முன்பு கேட்டு ரசித்துள்ளேன். அவர் மகன் மூத்தவர் டி. எல்.மகராஜன் சற்றே அப்பாவின் குரலோடு ஒத்துப் போவார். அவர் பாடல்கள் என்று குறிப்பிடும் வகையில் நினைவில்லை என்றாலும், அப்போது கேட்கும் போது ரசித்துள்ளேன். தீபன் சக்கரவர்த்தி பாடிய "பூங்கதவே தாழ் திறவாய்" நிறைய தடவை கேட்டிருக்கிறேன். இந்த பாடல் அவ்வளவாக கேட்டதில்லை. தாங்கள்தான் எத்தனை பாடல்கள், படங்கள், இசைத்தவர்கள் என்ற விபரங்கள், அவர்களைப் பற்றிய விபரங்கள், செய்திகள் என எல்லாம் நுனி விரலில் வைத்துள்ளீர்கள்.ஆச்சரியமாக உள்ளது. தங்களது நினைவாற்றலுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்.

  இதற்கேற்ப ஹிந்தி பாடலும் பொருத்தமாக இருந்தது. ஒற்றுமை பாடலை கண்டு பிடித்த தங்கள் ஜித்தனுக்கு வாழ்த்துக்கள்.

  இப்போது தங்கள் வெள்ளி பதிவின் மூலம், மறந்து போன பழைய பாடல்கள், படங்கள் என (எனக்கு) அறிமுகப்படுத்துவதற்கு மிக்க நன்றிகள்.

  நன்றியுடன்
  கமலா ஹரிஹரன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. வாங்க கமலா அக்கா..

   என்னது.. மாலை வணக்கம் சொல்லிட்டு அதற்கு இந்த வருந்து வருந்துகிறீர்கள்? பாடல்களை ஆரம்பம் முதலே ரசிக்கிறேன். அதற்கான விவரங்களை சொல்லும்போது தேடியும்கொடுக்கிறேன். நினைவிலிருந்தும் கொடுக்கிறேன்.

   இணைத்துள்ள ஹிந்தி பாடல் பற்றி முதல் ஆளாக பின்னூட்டம் இட்டதற்கு நன்றி.

   நீக்கு
 31. ஹிந்தி பாடல் இனிமை என்று நான் குறிப்பிட்டதை நீங்கள் கவனிக்கவில்லையா?கிர்ர்ர்ர்ர்ர்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஆமாம்..! சகோதரி பானுமதி அவர்களும் ஹிந்தி பாடல் அருமை என குறிப்பிட்டிருக்கிறார். சகோதரி கோமதி அரசு அவர்களும், இரண்டு பாடல்களும் அருமை என குறிப்பிட்டுள்ளார். இப்போதுதான் அனைத்துப் பின்னூட்டங்களையும் படிக்க நேரம் கிடைத்தது நான் எப்போதுமே கருத்துக்களை மிகவும் ரசித்துப் படிப்பேன். அருமையான கருத்துக்களை வழங்கிய அனைவருக்கும் என் நன்றிகள்.

   நீக்கு
  2. அப்படியா? உண்மையிலேயே கவனிக்கவில்லைதான்.. ஆனால் நல்லாயிருக்கா என்பதல்ல பிரச்னை! இரண்டும் கொஞ்சம் ஒத்துப் போகிறதா டியூனில் என்பதுதான் கேள்வி!

   நீக்கு
 32. ஸ்ரீராம் ஹிந்தி வெர்ஷன் இப்பத்தான் கேட்கிறேன். உங்க மகன் சொன்னது சரிதான். நல்ல ஞானம் இருக்கிறது ஸ்ரீராம். நல்ல மெட்லி செய்வார் போல இருக்கே!!!

  ஹையோ இதே போல வேறொரு பாடலும் உண்டு ஸ்ரீராம்...எனக்கு நினைவில் வரவே மாட்டேங்குது...நான் என் கஸினைத் தொடர்பு கொண்டு சொல்லப் பார்க்கிறேன். அவளுக்கு எல்லாப் பாடல்களும் நினைவில் இருக்கும்

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அந்தப் பாடலையும் நீங்கள் சொல்லும் நேரத்துக்காகக் காத்திருக்கிறேன்.

   நீக்கு
 33. ஸ்ரீராம் கோகுலுக்கு என் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் சொல்லிடுங்க.

  சூப்பரா கண்டு பிடிக்கிறார். நல்ல இசை அறிவு. கேள்விஞானம்!! அப்பாவைப் போலப் பிள்ளை!!!!!!!!!!!!!!!!!!!

  ஹிந்திப் பாடலும் சூப்பரா இருக்கு ஸ்ரீராம் நல்ல மெலடி....

  கீதா

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. ஹா... ஹா...ஹா... கீதா... பெயரை ஞாபகம் வச்சிருக்கீங்க... சொல்லிடறேன்! எனக்கு மிகவும் பிடித்த கிஷோர் பாடல்களில் ஒன்று.

   நீக்கு
 34. இந்தப் பதிவில் வெளியிட்ட தீபன் சக்ரவர்த்தி பாடல் கேட்டு ரசித்ததுண்டு. ஹிந்திப் பாடலும் நல்ல பாடல்.

  எத்தனை தகவல்கள் இன்றைக்கு!

  பதினொன்றாம் ஆண்டில் எங்கள் பிளாக் - மனம் நிறைந்த வாழ்த்துகள் அனைவருக்கும்.

  பதிலளிநீக்கு

இந்தப் பதிவு பற்றிய உங்கள் கருத்து எங்களுக்கு முக்கியம். எதுவானாலும் தயங்காம எழுதுங்க!